ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது. இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், ம. நிதர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது ஏனைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான். அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்திய போதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளான போதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார். இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்' என கூறினான். இவ்வைபவத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர். ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். |
Thursday, 22 September 2011
இலங்கையில் கல்வி அமைச்சரின் காலில் வணங்க மறுத்த தமிழ் மாணவன்
உங்களிடம் ஒரு பொறுப்பை விட்டு செல்கிறேன்! எனக்கு என் மக்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது!- திலீபன்
இந்த உலகத்தில் அகிம்சை போரரட்டத்தின் வழிகாடி என்று கூறும் மகாத்மா காந்தி வாழ்ந்த இந்திய அரசிடம் அகிம்சை போராட்டத்தின் உண்மை வடிவத்தை எடுத்து காட்ட, தமிழர்களை பாதுகாக்க என்று வந்த இந்திய இராணுவத்திடம், அவர்கள் தமது செயல்பாடுகளில் வழிதவறி செல்லும் போது, தமிழர்களின் விடுதலை போராட்டத்தை வலியுறுத்த திலீபன் 15 செப்டம்பர் 1987யில் சாகும் வரை உண்ணா விரதத்தில் இறங்கினான்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த திலீபன் அன்று நல்லூர் கோவில் முன்றலில் மக்கள் வெள்ளத்திற்கு முன்னின்று மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்றான்,
இருபத்தி நான்கு வருடத்திற்கு பின் இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பின் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக தமிழ் மக்கள் இருக்கும் போது, புலம் பேர் தமிழ் இனமே பொங்கி எழவேண்டிய நேரத்தில் பிரான்சு நாட்டில் தீலிபனை நினைவு கொண்டு பிரான்சில் உள்ள மாநகர சபைகளில் செப்டம்பர் 15 முதல் உண்ணா நோன்பு போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஆறாவது நாளாகிய இன்று கிளிச்சி நகரசபை தின்றலில் கிளிச்சி, நன்தார் தமிழ் சங்கங்கள் உண்ணா நோன்பு போராட்டத்தை நடத்தினார்கள். காலை ஒன்பது மணிக்கு கிளிச்சி மாநகர உதவி நகரபிதாக்கள் உண்ணா நோன்பை தீலீபன் உருவப்படத்திட்கு விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
பல நூற்றுகணக்கான மக்கள் வந்து இந்த நினைவேந்தளில் கலந்து தமது ஆதரவையும் எமக்கு தந்தார்கள்.மாலை ஆறு மணிக்கு கிளிச்சி மாநகர சபை நகர பிதா திரு ஜில் கட்டுவார் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவும் உண்டு என்று கூறி இந்த உண்ணா நோன்பை முடித்து வைத்தார்.
செப்டம்பர் ௧௫ திகதி ஆரம்பித்த இந்த போராட்டம் ஆறாவது நாளை கடந்து தினமும் ஒரு மாநகர சபையாக தொடர்ந்து செப்டம்பர் 26ஆம் திகதி காலை ஒன்பது மணி முதல் பாரிசில் Ecole Militaire Metroக்கு அருகில் அமைதிக்கான சுவர் ( Mur de la Paix) முன்னாள் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.
- கிளிச்சி- நன்தாரர் தமிழ் சங்கம்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த திலீபன் அன்று நல்லூர் கோவில் முன்றலில் மக்கள் வெள்ளத்திற்கு முன்னின்று மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்றான்,
ஆறாவது நாளாகிய இன்று கிளிச்சி நகரசபை தின்றலில் கிளிச்சி, நன்தார் தமிழ் சங்கங்கள் உண்ணா நோன்பு போராட்டத்தை நடத்தினார்கள். காலை ஒன்பது மணிக்கு கிளிச்சி மாநகர உதவி நகரபிதாக்கள் உண்ணா நோன்பை தீலீபன் உருவப்படத்திட்கு விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
பல நூற்றுகணக்கான மக்கள் வந்து இந்த நினைவேந்தளில் கலந்து தமது ஆதரவையும் எமக்கு தந்தார்கள்.மாலை ஆறு மணிக்கு கிளிச்சி மாநகர சபை நகர பிதா திரு ஜில் கட்டுவார் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவும் உண்டு என்று கூறி இந்த உண்ணா நோன்பை முடித்து வைத்தார்.
செப்டம்பர் ௧௫ திகதி ஆரம்பித்த இந்த போராட்டம் ஆறாவது நாளை கடந்து தினமும் ஒரு மாநகர சபையாக தொடர்ந்து செப்டம்பர் 26ஆம் திகதி காலை ஒன்பது மணி முதல் பாரிசில் Ecole Militaire Metroக்கு அருகில் அமைதிக்கான சுவர் ( Mur de la Paix) முன்னாள் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.
- கிளிச்சி- நன்தாரர் தமிழ் சங்கம்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக ஒப்பமிட இந்தியா மறுப்பு
![]() |
| ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையை குறைந்தபட்சமாக ஒரு தகவல் ஆவணமாகக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரும் கடிதம் ஒன்றில் சிறிலங்கா சில நாடுகளிடம் இருந்த கையொப்பங்களைத் திரட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதம் ஐ.நா மனிதஉரமைகள் பேரவையின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர் குழுவின் அறிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தகவல் ஆவணமாகக் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தக் கடித்ததில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு ஆதரவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, பங்களாதேஸ், மாலைதீவு, கியூபா ஆகிய ஒன்பது நாடுகள் மட்டுமே ஒப்பமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளிடம் இருந்து இந்தக் கடிதத்தில் ஒப்பம் பெறுவதற்கு சிறிலங்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தியா, இந்த விடயத்தில் முன்கூட்டியே எதுவும் செய்ய முடியாது என்றும், அது பற்றிய விவாதம் ஒன்று வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. |
பான் கீ மூனை சனியன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் - மன்மோகனுடனும் பேச்சு
| நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அங்கு பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் அவர், நைஜீரிய அதிபர் குட்லக் எபெலே ஜொனாத்தனையும், கிர்கிஸ்தான் அதிபர் றோசா ஒட்டுன்பயேவா அம்மையாரையும், ஸ்லோவேனிய அதிபர் டானியோ டக்கையும், செனகல் அதிபர் அப்துலாவ் வாடேயையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்புகளின் போது இருதரப்பு வர்த்தக உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வது குறித்துக் கலந்துரையாடியுள்ள சிறிலங்கா அதிபர், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் செயலக செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. அதேவேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக்கையும் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை சிறிலங்கா அதிபருக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை பான் கி மூன் வெளியிட்ட பின்னர் முதல்முறையாக மகிந்த ராஜபக்ச அவரைச் சந்திக்கவுள்ளார். அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தவாரம் சந்திக்கவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடவுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்கள், மீள்குடியமர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மன்மோகன்சிங்கிற்கு மகிந்த ராஜபக்ச விளக்கமளிப்பார் என்றும் புதுடெல்லித் தகவல்கள் மேலும் கூறுகின்றன. ![]() ![]() ![]() ![]() ![]() |
நியுயோர்க்கிற்குள் முடக்கப்பட்டார் மகிந்த வெளியே செல்வதற்கு அமெரிக்க அதிகாரிகள் தடை
![]() |
| ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நியுயோர்க்கிற்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க இராஜதந்திரிகள் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நியுயோர்க்கிற்கு வெளியில் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதால், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக் கூடும் என்பதாலேயே சிறிலங்கா அதிபரை அங்கிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் இராஜதந்திரிகளுக்கு நியுயோர்க்கில் மட்டுமே இராஜதந்திர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது உறவினர்களை சந்திப்பதற்தும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையினால் அவரது திட்டங்கள் கைவிடப்பட்டு நியுயோர்க்கில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. |
நியுயோர்க் சென்றார் மகிந்த � அமெரிக்க அதிகாரிகள் வரவேற்கச் செல்லவில்லை
![]() |
| ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று நியுயோர்க் சென்றடைந்துள்ளார். அவரை நியுயோர்க் விமான நிலையத்தில் வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் எவரும் செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணமாக அவர் செல்லாததால், அமெரிக்க அதிகாரிகள் மகிந்த ராஜபக்சவை வரவேற்கச் செல்லவில்லை. சிறிலங்கன் விமானசேவை அதிகாரிகளும், நியுயோர்க்கில் உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா தூதரக அதிகாரிகளுமே சிறிலங்கா அதிபரை வரவேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ம் நாள்- வெள்ளிக்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளதாக சில கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இது சிறிலங்கா அதிபரின் உரை இடம்பெறும் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நா முன்றலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வை குழப்புகின்ற முயற்சியாகவே கருதப்படுகிறது. ஆனால் சிறிலங்கா அதிபர் இன்று ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நியுயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா பொதுச்சபையில் பொதுவிவாதம் நாளையே தொடங்கவுள்ளது. நாளை 21ம் நாள் தொடக்கம் 23ம் நாள் வரையும், எதிர்வரும் 26ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரையுமே பொதுவிவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை பொதுவிவாதத்தின் போது, “பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதில் நடுநிலைமையின் பங்கு“ என்ற தொனிப்பொருளில் அரச தலைவர்களின் உரைகள் இடம்பெறவுள்ளன. இந்த விவாதத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மூன்றாவது தரப்பின் தலையீடுகள் மற்றும் நடுநிலைமை முயற்சிகளைக் கடுமையாக எதிர்க்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. |
ஆஸ்திரேலியாவில் விநாயகரை கேலி செய்து நாடகம் : இந்து அமைப்புகள் கண்டனம்
![]() |
| ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வருகிற 29-ந்தேதி திருவிழா நடக்கிறது. இதை தொடர்ந்து அங்குள்ள ஒரு நிறுவனம் ஒரு காமெடி நாடகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதில், இந்து கடவுள் விநாயகரை கேலி கிண்டல் செய்து காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது விநாயகரை கைது செய்யும் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி உளவுத்துறை அவரிடம் விசாரணை நடத்தி துன்புறுத்துவது போன்ற கதை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரபரப்பு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த இந்து பிரமுகர் ராஜன்சேத் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். விநாயகர் உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் கடவுள். அவரை ஹிட்டலரின் நாஜி உளவுத்துறை விசாரணை நடத்துவது போன்று கற்பனை செய்து பார்ப்பது கற்பனைக்கும் எட்டாதது. விநாயகரை கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபட வேண்டுமே தவிர மேடையில் ஏற்றி கேலி செய்து சிரிக்ககூடாது. அவர் ஒரு கேலி பொருள் அல்ல. இந்துக்களால் வணங்கப்படும் கடவுள் என தெரிவித்துள்ளார். இது குறித்து நாடக தயாரிப்பாளர் ஆலிஷ் நாஷ் கூறும் போது, இந்துக்களை அவமதிப்பது எங்கள் நோக்கம் அல்ல. மக்களை மகிழ்விப்பதற்காக தான் இந்த நாடகத்தை நடத்துகிறோம். அந்த காட்சிகளை மிகவும் கவனத்துடன் கையாள இருக்கிறோம்” என்றார். ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள்களை அவமதிப்பது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் பெண் கடவுள் லட்சுமியின் படத்தை நீச்சல் உடையில் பொறித்து சிட்னியில் நடந்த பேஷன் ஷோவில் உலா விட்டனர். அதற்கு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய பின் மன்னிப்பு கேட்கப்பட்டது. |
குத்தாட்டம் போடும் 76 வயது பாட்டி (வீடியோ இணைப்பு)
| பிரித்தானியாவை சேர்ந்த மூதாட்டிகளில் ஒருவர் சாரா நெல் ஜோன்ஸ். இவருக்கு வயது 76. கின்னஸ் சாதனை ஒன்றுக்கு கடந்த வருடம் சொந்தக்காரி ஆனார். என்ன சாதனை தெரியுமா? உலகில் மிக வயது கூடிய சல்சா நடனக் கலைஞர் இவர்தான். |
நூறு வருட பேஷன்கள் 100 செக்கன்களில்(வீடியோ இணைப்பு)
மேற்கு லண்டனின் கடந்த நூறு வருடங்களாக பெறுமையுடன் நடைபோட்டு வந்த பேஷன்கள் அனைத்தையும் 100 செக்கன்களில் காட்டுகின்ற மிகவும் பிரமிக்க வைக்கும் வீடியோ இது. இந்த வீடியோ கடந்த நூறு ஆண்டுகளில் வெற்றி நடைபோட்ட உடைகளை நம் கண்முன் நிறுத்துகின்றது.![]() ![]() ![]() |
டொல்பின் மேல் வந்து காதலை வெளிப்படுத்திய சீன இளைஞர்(வீடியோ இணைப்பு)
| சீன இளைஞர் ஒருவர் டொல்பின் இனத்தை சேர்ந்த மீன் மீது ஏறிவந்து தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் காதலி அழுதேவிட்டார். இந்த உணர்ச்சிபூர்வமான சம்பவம் காண்போரை மிகவும் பூரிப்படையச்செய்தது. அவ்விடத்திலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ![]() |
மரணத்தின் பின்னர் உடலை தகனம் செய்யும் முறையில் புதிய பரிணாமம்!
| காலங்காலமாக இறந்த உடலை ஊர் முழுவதும் எடுத்துச்சென்று சுடலையில் அடக்கம் செய்வதுவந்தோம் . காலம் மாறிவிட்டது, தற்போது பரவலாக காணப்படும் மின்னடுப்பு மூலமான தகனம் போன்ற அமைப்பை உடைய ஆனால் தொழிற்பாட்டில் வேறுபட்ட முறையொன்று உருவாகியிருக்கிறது body liquefaction எனப்படும் உடலை நீர்மமாக்குதல் , சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இந்த முறை இலகுவானது , Glasgow-based company மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது , 180C வெப்பத்தில் உடல் மூன்று மணித்தியாலங்கள் வரை தகனம் செய்யப்படும் , பின்னர் நீரினால் நிரப்பப்பட்டு நீர் வெளியேற்றி மூலம் செறிவான திரவமாக மாற்றப்படும் , ![]() பச்சை மற்றும் கபில நிறமான இத்திரவத்தை நினைவுப்பூங்கா போன்ற இடங்களில் பசளையாகவும் பயன்படுத்தலாம் , அல்லது கழிவறை அமைப்பு மூலம் இலகுவாக அப்புறப்படுத்தலாம் இதன் ஆரம்பகட்டமாக சில இறந்த உடல்களை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ![]() |
ஐஐஎம் மாணவி பேஸ்புக் செய்தியால் தற்கொலை செய்து கொண்டார்
![]() |
| ஐஐஎம் மாணவி மாலினி முர்மு பேஸ் புக் சமூக நெட்வொர்க்கில் 727 நண்பர்களுடன், பெரும்பாலும் நிறுவன நண்பர்கள் மற்றும் கல்லூரியில் மாணவ ,மாணவியர்களுடன் இணைப்பில் இருந்தார் போல் தெரிகிறது . இதில் ,மாலினி தனது காதலன் அபிஷேக் தண் புண்படுத்தக்கூடிய செய்தியே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் அவர் தனது காதலி "டம்ப்" என்று தெரிவித்திருந்தார் . இதனை தொடர்ந்து மாலினி பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ. எம்) தனது விடுதி அறையில் அன்று மாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் . . அவர் இறப்பதற்கு முன் அவரது அறையில் வெள்ளை போர்டில் எழுதிஉள்ளார் அதில் "அவர் என்னை ஏமாற்றிவிட்டார் . இது நான் அவனை பழிவாங்க செய்வது." இந்நிலையில் ஐஐஎம் வெளியிட்ட அறிக்கை இன்று "பெங்களூர் போலீஸ் தற்கொலை வழக்கு செய்துள்ளனர் .செல்வி மாலினி முர்மு , 23, ஜாம்ஷெட்பூர் சேர்ந்தவர் . தனது பி டெக் முடிந்தவுடன் இன்போசிஸ் வேலை நிலையில், கடந்த ஜூன் ஐஐஎம்பி இருந்து வந்தவர் . நாங்கள் ஒரு இளம் பெண்ணின் பிரகாசமான வாழ்கையே இழந்துள்ளோம் . |
இந்தோனேசியாவில் பொலிஸ்காரர்கள் செய்யும் திருவிளையாடலைப் பாருங்கள். (வீடியோ இணைப்பு)
| இந்தோனேசியாவின் Sulawesi மாகாணத்தில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ்காரர்கள் செய்யும் திருவிளையாடலைப் பாருங்கள்... ஒரு பொலிஸ்காரர் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு இந்தியாவில் ஹிந்தியில் பிரபலமான "தக தெய்ய தெய்ய " பாடலைப் போட்டு விட்டு தானும் உரத்துப் பாடுகிறார். பக்கத்திலிருந்த பொலிஸ்காரர் மொபைல் போனை எடுத்து வைத்து நோண்டுகிறார். |
| 21 Sep 2011 |
பகிரங்க மன்னிப்பு கேட்டால சரண் மீதான வழக்கை வாபஸ் பெறத் தயார் -நடிகை சோனா
![]() |
| நடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் வற்புறுத்தப் படுகிறது. ஆனால் எஸ்.பி.பி. சரண் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில் சோனா மேல் குற்றச்சாட்டுக்கள் கூறியுள்ளதால் சமரசத்தில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார். சினிமாவில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு பணக்கஷ்டத்தில் உள்ளார். கடனும் இருக்கிறது. என் குடும்ப பின்னணியை மனதில் வைத்து என்னை கவர்ச்சியால் மயக்கி பணம் பறித்து கடன் பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டார். அவரை நான் எச்சரித்ததால் என் மேல் பொய் புகார் அளித் துள்ளார். என்றெல்லாம் ஜாமீன் மனுவில் சரண் குறிப்பிட்டு உள்ளார். இதனால் சோனா ஆத்திர மாகியுள்ளார். பகிரங்க மன்னிப்பு கேட்காமல் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என்றார். இது குறித்து சோனா கூறியதாவது:- மது விருந்தில் பலர் முன்னிலையில் எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்த எல்லோருக்குமே அது தெரியும். அவர்கள் சாட்சிகள் என்பதால் நடந்த உண்மைகளை வெளியிட வேண்டும். சரணுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தால் அவர்கள் மீது வழக்கு தொடருவேன். எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்காமல் எந்த சமரசத்துக்கும் நான் சம்மதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். சோனா தனது புகாரில் சரண் தகாத முறையில் நடந்ததை தனது டிரைவர் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் சரண் தரப்பில் சோனா டிரைவரின் சாட்சியம் செல்லாது என்று கூறப்படுகிறது. விருந்தில் பங்கேற் வர்கள் சரணுக்கு ஆதரவாக சாட்சியம் அளிப்பார்கள் என்று தெரிகிறது. இது குறித்து சோனா கூறும்போது, சாட்சியங்கள் தவிர என்னிடம் மேலும் பல ஆதாரங்கள் உள்ளன என்றார். |
காது கேட்காத, வாய் பேச முடியாதவர் சைகை மூலம் வரன்களை தேடினர்
![]() |
| சுயம்வரம் நிகழச்சி என்றாலே கலகலப்புக்கும், ஆரவாரமான பேச்சுகளுக்கும் பஞ்சமிருக்காது. சுயம்வரம் நடக்கும் இடம் முழுவதும் சத்தங்களின் சங்கமமாக இருக்கும். ஆனால் முற்றிலும் மாறுபட்டு எந்தவிதமான சத்தமும் இல்லாமல் ஒரு நவீன சுயம்வரம் இன்று சென்னை லிட்டில் பிளவர் பள்ளியில் நடந்தது. அரங்கத்தில் கூடியிருந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் சைகைகளால் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர். பார்வையாளர்களாக வந்தவர்களும் பத்திரிகையாளர்களும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள். என்பதை புரிய முடியாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். காது கேட்காத, வாய்பேச முடியாதவர்களுக்கான சுயம் வரத்தில்தான் இந்த காட்சிகள் அரங்கேறியது. சுமார் 100 ஆண்களும், பெண்களும் தங்களுக்கு ஏற்ற ஜோடியை தேர்வு செய்வதற்காக குழுமி இருந்தனர். மேடையில் நின்ற அறிவிப்பாளர் சைகை மூலமே பெயர், வயது, கல்வித் தகுதி, உள்ளிட்டவற்றை கூறியதும் மண மாலை சூட காத்திருந்த மணமகன்களும், மண மகள்களும் மேடையில் ஏறி தங்களுக்கு விருப்பமான ஜோடி எப்படி இருக்க வேண்டும் என்பதை சைகை மூலமே தெரிவித்தார்கள். இதில் பல ஆண், மற்றும் பெண்களின் பெற்றோர்கள் எந்த குறையும் இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர் காலம் அமைந்து விடாதா? என்ற ஆதங்கத்தில் காத்திருந்தனர். இன்று மதியம் வரை மணமகன் மணமகள் அறிமுகம் நடந்தது. மாலையில் இருவரையும் தனித்தனியாக அமர வைத்து அவர்களை பேசிக் கொள்ள வைக்கிறார்கள். பின்னர் பொருத்தமான ஜோடிகளை பெற்றோர்கள் தேர்வு செய்வார்கள். இவ்வாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வி.ஆர். வெங்கடேசன் கூறினார். ஜோடி தேடி வந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த 24 வயது சுகாசினி கூறியதாவது:- நான் பி.காம். படித்து உள்ளேன். தனியார் நிறு வனத்தில் வேலை பார்க்கிறேன். என்னை போல் படித்தவராக என்னை புரிந்து கொள்பவராக எனது கணவர் இருக்க வேண்டும். எனது அம்மாவை பிரிந்து என் தந்தை தனியாக வசிக்கிறார். ஆனாலும் என்னிடம் அவர் இன்றும் அளவு கடந்த பாசம் வைத் துள்ளார். எனவே எனக்கு வரக் கூடியவர் எனது குடும்ப நிலையை குறையாக நினைக்காமல் என்னுடன் கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அயனாவரத்தைச் சேர்ந்த 28 வயது நிர்மல் ஜோதி என்ற பெண் கூறும்போது, �என்னை போல் குறை உடையவர்களே எனக்கு கணவராக வர வேண்டும். எந்த குறையும் இல்லாமல் என்னை கவனித்து கொள் பவராக இருக்க வேண்டும் என்றார். நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் கூறியதாவது:- நான் ஐ.டி.ஐ. படித்துள்ளேன். சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை பார்க்கிறேன். எந்த குறையும் இல்லாத எனது உறவினர் பெண்களை மணமுடிக்க வற்புறுத்தினார்கள். 25 சவரன் நகையும் போடுவதாக கூறினார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கு மனைவியாக வருபவள் என்னை போல் காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாங்கள் இருவரும் மனம் ஒத்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ முடியும். இந்த சுயம்வரத்தில் அப்படி ஒரு பெண் கிடைப்பாள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். |
இந்தியக் கடற்படையின் முற்றுகையில் திருகோணமலைத் துறைமுகம் (படங்கள் இணைப்பு)
| சிறிலங்கா கடற்படையுடன் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வந்துள்ள இந்திய கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதிகளவிலான பாரிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. கடந்த 19ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தப் போர்க்கப்பல்கள், எதிர்வரும் 24ம் நாள் போர்ப்பயிற்சிகள் நிறைவடைந்த பின்னரே புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகளவிலான வெளிநாட்டுப் போர்க்ப்பல்கள் தரித்து நிற்பதை தொலைவில் இருந்தே பொதுமக்கள் பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ![]() ![]() ![]() |
Subscribe to:
Comments (Atom)





















