Monday, 12 September 2011

ஒவ்வொரு நிமிடமும் 'திக் திக்'-9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா


9/11 தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த கொடூரத் தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு தான் அமெரிக்கர்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால் உலகத் தீவிரவாதிகளின் ஹிட் பட்டியலில் அமெரிக்காவே முதலிடத்தில் இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் பதட்டத்துடனேயே கழிக்க வேண்டியுள்ளது.

11-9-2001 அன்று அமெரிக்கா தன் கனவில் கூட நினைத்துப் பார்க்காதது நடந்தது. உலக வர்த்தக மையக் கட்டிடங்கள், , எறும்பு கூட எங்கள் அனுமதியின்றி நுழைய முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் பெருமைப்பட்ட பென்டகன் கட்டிடம் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். உலகில் உள்ள அத்தனை தொலைக்காட்சிகளிலும் நாள் முழுவதும் இந்த தாக்குதல் பற்றிய ஒளிபரப்பு தான்.



இதைப் பார்த்து உலகமே அதி்ர்ச்சி அடைந்தது. கட்டிடங்கள் தீப்பிடித்து எறிய மக்கள் பீதியில் அலறிக் கொண்டு இங்கும், அங்கும் ஓட என ஒரே பதட்டமாக இருந்தது. இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. 5, 000 ஆயிரம் உயிர்களை காவு வாங்கிய இந்த தாக்குதலை அமெரி்க்காவால் மறக்கவே முடியாது.

இந்த தாக்குதல் நடக்கும் வரை நாட்டின் பாதுகாப்பு பற்றி நம்பிக்கையாக இருந்த அமெரிக்கா தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கைகளை அவசர அவசரமாக மாற்றியது.

1979-ம் ஆண்டு முதலே செயல்பட்டு வந்தாலும் அல் கொய்தா 9/11 தாக்குதலால் ஒரே இரவில் உலகப் பிரபலம் ஆனது. அதுவரை யார் என்றே தெரியாமல் இருந்த ஒசாமா பின் லேடன் உலக போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளியானார். அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அமெரிக்கர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

முதலில் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க மறுத்தாலும் பின்பு ஒப்புக் கொண்டார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவுவவது தனக்கு சிறிதும் பிடிக்கவில்லை என்றும், ஆப்கானிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவில் அமெரிக்க வீரர்கள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒசாமா ஒரு ஒலிநாடாவை வெளியிட்டார்.

9/11 தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான காலித் ஷேக் முகமது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். கடந்த 2003-ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் தற்போது குவாண்டானாமோ பே சிறையில் உள்ளார்.

தீவிரவாதத்திற்கும் சரி, தீவிரவாதிகளுக்கும் சரி நாங்கள் ஒருநாளும் ஆதரவு அளித்ததும் இல்லை, அளிக்கப்போவதும் இல்லை என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பமான உறைவிடமாகத் தான் அந்நாடு இருந்து வருகிறது. பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தான் அதிபராக இருக்கையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்று விமர்சிக்கப்பட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு பேசிய முஷாரப் அமெரிக்க தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதத்தையும், சட்ட ஒழுங்கின்மையையும் எதிர்த்துப் போராடப்போவதாக தெரிவித்தார்.

9/ 11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவும், இங்கிலாந்தும் நேட்டோ மற்றும் நேட்டோ அமைப்பில் இல்லாத நாடுகளுடன் சேர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான போரைத் துவங்கியது. அதிலும் குறிப்பாக அல் கொய்தாவை வேட்டையாடத் துவங்கியது.

கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த அல் கொய்தாவும், பாகிஸ்தான் தாலிபான்களும் சேர்ந்து திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்கள் சதியை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்தனர். இந்த வழக்கில் பைசல் ஷாஷாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்கா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, தாக்குதல் நடத்தி அவர்கள் அழித்து வருகிறது.

9/11 தாக்குதலால் ஒரே இரவில் பிரபலமான ஒசாமா பின் லேடனை அமெரி்க்கப் படைகள் வலைவீசித் தேடி வந்தன. ஒசாமா தோரா, போரா மலையில் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. இறுதியில் பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத்தில் வைத்து ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த மே மாதம் 2-ம் தேதி சுட்டுக் கொன்றன.

ஒசாமாவுடன் அல் கொய்தா ஒன்றும் அழிந்துவிடவில்லை. மாறாக ஒசாமாவின் மரணத்திற்கு பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் ஒசாமா இறந்தததால் அமெரிக்கர்கள் சற்று நிம்மதியாக உள்ளனர். அதேசயம், உலகத் தீவிரவாதிகளின் ஒட்டுமொத்த ஒரே எதிரியாக அமெரிக்கா மாறிப் போயுள்ளதால் நித்திய கண்டனம் பூரணாயுசு கதையாகியுள்ளது அமெரிக்காவின் நிலை.

பரமக்குடியில்கலவரம்-போலீஸ் வாகனங்கள் எரிப்பு-துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி


பரமக்குடியில் இன்று நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியின்போது பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

போலீஸார் மீது கூட்டத்தினர் நடத்திய பெரும் தாக்குதலில், சென்னை துணை ஆணையர் செந்தில்வேலன் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர். 2 போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான் பாண்டியன் தூத்துக்குடியிலிருந்து கிளம்பினார். அப்போது வல்லநாடு பகுதியில் அவரை போலீஸார் தடுத்து தூத்துக்குடி கொண்டு சென்றனர். அவர் கைதும் செய்யப்பட்டார்.

இதையடுத்து பரமக்குடியில் கூடியிருந்த ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கினர். ஐந்து முக்கு சாலையில் சாலை மறியலில் குதித்த அவர்கள் போலீஸார் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பாட்டில்களையும், கற்களையும் வீசி போலீஸாரைத் தாக்கினர். மேலும், அந்தப் பகுதி வழியே வந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.2 போலீஸ் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினர்.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். அப்படியும் கூட்டத்தினர் கலையவில்லை. இதையடுத்து கண்ணீப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அப்படியும் கூட்டம் கலையாமல் தொடர்ந்து பெரும் தாக்குதலில் இறங்கியதால் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் கூட்டத்தினர் கலைய மறுத்து தொடர்ந்து தாக்குதலில் இறங்கியதால் போலீஸார் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால் பரமக்குடியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.

துணை ஆணையர் காயம்

முன்னதாக கூட்டத்தினர் நடத்திய தாக்குதலில் சென்னையிலிருந்து பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த துணை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி டிஎஸ்பி மற்றும் சில போலீஸார் படுகாயமடைந்தனர்.

மதுரையிலும் துப்பாக்கிச் சூடு-ஒருவர் காயம்

இதேபோல மதுரையிலும் கலவரம் வெடித்தது. அங்கும் போலீஸாருக்கு போராட்டக்காரர்கள் கட்டுப்பட மறுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார்.

தென் மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த சம்பவங்களைத் தொடர்நது தென் மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

நான் இறந்து விட்டால் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள்- இயக்குனர் மணிவண்ணன் உருக்கம்

இறந்தபின் தனது உடல்மீது புலிக்கொடி போர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் கோரியுள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது.
அதன் போது உரையாற்றிய இயக்குனர் மணிவண்ணன்,
இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்துவிடுங்கள். புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம்.
மூன்றுபேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றுப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் எல்லாம் துடித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நிமிடமும் உயிர் போகும் வலி. அந்த நேரம் பார்த்து, தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் எனக்கில்லை என முதல்வரும் சொல்லிவிட்டார்.
ஒரு பக்கம் சட்டப் போராட்டம் ஆரம்பித்து, நீதிமன்ற வளாகத்தில் அத்தனை பேரும் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தோம். நீதிபதி 8 வாரங்கள் தூக்கு தண்டனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட அடுத்த கணம், சட்டமன்றத்தில் தண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேற்றினார் போன உயிரை திரும்ப அவர் தந்தது போல உணர்ந்தோம்... இப்போது சொல்லுங்கள். இந்த அம்மாவுக்கு நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நன்றி சொல்வது?
முந்தைய தினம் சட்டமன்றத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற கூறிவிட்டாலும், தமிழ் மக்களின் உணர்வை மதித்த அம்மா, இரவெல்லாம் தூங்காமல், சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து, அடுத்த நாளே தண்டனையை நிறுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றினாரே... அந்த மனசு யாருக்கு வரும்? கருணாநிதியாக இருந்தால், தான் சொன்னதே சரி என்று பிடிவாதமாக இருந்து மூவரின் உயிரையும் போக வைத்திருப்பார்.
ஜெயலலிதாவின் இந்தத் தாயுள்ளம், பெரும் கருணைக்கு நாம் காலமெல்லாம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
இன்று தூக்கு தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் முழுமையாக நம்புவது நாம் தமிழர் கட்சியையும் தம்பி சீமானையும்தான்.
தான் இறந்த பிறகு தன் உடலை குடும்பத்திடம் ஒப்படைக்கச் சொன்னார் பேரறிவாளன். முருகனும் சாந்தனும் தங்கள் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு எழுதி வைத்துவிட்டனர்.
நண்பர்களே, நான் மிஞ்சிப் போனால் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். எனக்கு அரசியல், பதவி என எந்த ஆசையும் இல்லை. இந்தப் பிள்ளைகள் மூவரும் உயிரோடு திரும்ப வேண்டும்.
சீமானைப் போன்றவர்களால் இந்தத் தமிழினம் உயர்ந்த நிலையில் இருப்பதைப் பார்த்துவிட்டு இறந்து போக வேண்டும். நான் இறந்தால், என் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் உடம்பில் புலிக்கொடியைப் போர்த்தி எடுத்துச் செல்லுங்கள், அது போதும்,' என்றார்.
மணிவண்ணனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றுவிட்டனர். கீழே கூடியிருந்தவர்கள் உணர்ச்சி மிகுதியால் கண்கலங்கி நின்றனர்.
அதன்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் விடுதலைக்கு அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று; கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து அவர்களின் விடுதலைக்கு முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் அமைச்சரவையை கூட்டி விரைவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இலங்கையின் ஆணைக்குழு அறிக்கையை ஐ.நா. சபை கூட்டத்தில் சமர்ப்பிப்பதில் அமெரிக்கா கடும் ஆர்வம்!

ஜனாதிபதி நியமித்த நல்லிணக்கத்துக்கான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்து விவாதிப்பது குறித்து அமெரிக்கா அதிககரிசனை செலுத்தி வருகிறது.
அதற்கு இலங்கை அரசு இணங்கி வராவிட்டால், நாளை ஆரம்பமாகும் 18ஆவது கூட்டத் தொடரிலேயே இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து இலங்கை அரசுடன் பேச உள்ளார்.
பிளேக்கின் இலங்கைப் பயணத்தின் முக்கிய நோக்கம் அதுவே என்று வாஷிங்ரனில் வெள்ளியன்று இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை குறித்துப் பேசுவது பிளேக்கின் பயணத்தின் ஒரு பகுதி. அந்த அறிக்கையின் மூலம் நம்பிக்கைக்குரிய விதத்தில் முழுமையான பணியை அவர்கள் எப்படி ஆற்றமுடியும் என்பதை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கம்'' என்றார் நூலண்ட்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்து விவாதிப்பதற்கு ஏற்ற வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைத் தரும்படி அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்தது. ஆனால், உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த கொழும்பு, பின்னர் அறிக்கையின் சாராம்சத்தை மட்டும் தரமுடியும் என்று பின்னர் இறங்கி வந்தது.
எனினும், இலங்கையை முன்னோக்கி நகர்த்திச் செல்லக்கூடிய சிறந்த, உறுதியான, நம்பகத்தன்மை மிக்க அறிக்கை ஒன்று வருவதை உறுதிப்படுத்துவதே எமது முதல் இலக்கு என்று நூலண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாளை அமெரிக்காவில் இருந்து புறப்படும் பிளேக் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பை வந்தடைவார். உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசும் அவர், யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளார்.
இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக இந்தியா செல்லவுள்ளார் பிளேக். அங்கு அவர் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புதுடில்லி ஆளும் வர்க்கத்துடன் தீவிரமாக ஆராய்வார் என்று தெரிகிறது.

மனித, அரசியல் உரிமைகளில் முன்னேற்றம் ஏற்படாவிடில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை � கனடியப் பிரதமர் அதிரடி



இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது (வீடியோ இணைப்பு)