Monday, 14 November 2011

தலதான் என் ரோல்மாடல்! புதுமுக நடிகர் சிலிர்ப்பு!!


எனக்கு தல அஜித்தான் ரோல்மாடல் என்று புதுமுக நடிகர் ஜித்தேஷ் கூறி வருகிறார். ஏகன் பட சூட்டிங்கின்போது டைரக்டர் ராஜூ சுந்தரத்தின் நண்பரான ஜித்தேஷ் பணியாற்ற சென்றிருக்கிறார். அடிப்படையில் பைலட் படிப்பை முடித்திருக்கிறார் ஜித்தேஷ். படப்பிடிப்பில் தம்பி என்ன படிச்சுருக்கே? என்ற அஜீத் விசாரித்தபோது பைலட் படிப்பு என்று சொன்னதும் ஜித்தேஷின் நண்பராகிவிட்டார் அஜீத். நாளும் பொழுதுமாக ஹெலிகாப்டர், விமானம் என்று பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் இருவரும்.

அஜீத்தை பார்த்து அப்படியே மெல்ல மெல்ல நடிக்கிற ஆசையையும் வளர்த்துக் கொண்ட ஜித்தேஷ், இன்று ஒன்றல்ல, இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் அஜீத் போட்ட ஆர்வ சுழி! தலக்கோணம் என்ற படத்தில் இவருக்கு ஜோடி ரியா. மார்கழி திங்கள் என்ற படத்தில் இவருக்கு ஜோடி திஷா பாண்டே. இவ்விரு படங்களும் வேக வேகமாக வளர்ந்து வருகிறதாம். கூத்துப்பட்டறையின் முறையான நடிப்பு பயிற்சி பெற்று விட்டு நடிக்க வந்திருக்கும் ஜித்தேஷ், தல அஜித்தான் என் ரோல் மாடல் என்று பெருமிதமாக கூறி வருகிறார்.

காலையில் திருமணம் முடிந்த அஸ்வின் மாலையே கோல்கத்தா செல்கிறார்


இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடம் பெற்றார். தற்போது அவர் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக திகழ்கிறார். 

ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால் அவருக்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. 25 வயதான அஸ்வின் டெல்லியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் முத்திரை பதித்தார். தனது அறிமுக டெஸ்டிலேயே அவர் 9 விக்கெட் கைப்பற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

சென்னையை சேர்ந்த அஸ்வினுக்கும், அவருடன் பள்ளியில் படித்த தோழி பிரீத்திக்கும் கடந்த மே மாதம் ஐ.பி.எல். போட்டியின் போது திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அஸ்வின்-பிரீத்தி திருமணம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமணம் மண்டபத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடந்தது. வைதீக முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. மணமகனையும், மணமகளையும் தோளில் தூக்கி வைக்கும் திருமண சடங்கும் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் என்.சீனிவாசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது.

நேற்று இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் முக்கிய பிரமுகர்கள் அஸ்வின்-பிரீத்தியை வாழ்த்தினார்கள்.   இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக திருமணம் முடிந்த இன்றே அஸ்வின் கொல்கத்தா புறப்பட்டு செல்கிறார்.

ராகுல் காந்தி ஒரு முட்டாள்: சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு


காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை முட்டாள் என்று விமர்சித்துள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கேள்வி: ராகுல் காந்தியைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன்?

பதில்: அவர் ஒரு முட்டாள்.

கேள்வி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகத் தகுதியானவரா?

பதில்: 250 பேருக்கு பிரதமராகும் தகுதி இருந்தால் அது நம் ஜனநாயகத்திற்குத் தானே நல்லது. அது பற்றி முடிவு செய்ய நான் யார். தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைத் தெரியும். அவரை நான் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவருக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்று கூற நான் யார்.

கேள்வி: அன்னா ஹசாரே தனது போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உதவியை நாட தயங்குகிறாரே?

பதில்: 1962, 1965ம் ஆண்டுகளில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போர்களில் ஆர்.எஸ்.எஸ். ஆற்றிய பங்கை முன்னாள் பிரதமர்கள் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும் பாராட்டியுள்ளனர் என்றார்.

கடந்த 1975 ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரசர நிலைப் பிரகடனப்படுத்தியபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்த சுப்பிரமணிய சாமி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜி ஊழல் குறித்து சாமி முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரசவத்திற்கு முன்பு ஐஸ்வர்யாவின் ஆசை: அங்குமிங்கும் ஓடும் அபிஷேக்


நடிகை ஐஸ்வர்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பிரசவத்திற்கு முன்பு சில உணவுப் பொருட்கள் உண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளதாம்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம். அதற்காக அவர் மும்பையில் உள்ள செவன் ஹிலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மற்ற கர்ப்பிணிகளைப் போன்று சில உணவுப் பண்டங்கள் மீது ஆசை வந்துள்ளது.

புளி அச்சாறு, பீட்சா, டோக்லா, தயிர் வடை, பாவ் பாஜி, பரோட்டா என்று பல உணவுப் பொருட்கள் சாப்பிட ஆசையாக உள்ளதாம். மனைவியின் ஆசையை நிறைவேற்ற அபிஷேக் கடை, கடையாக அழைந்து அவர் கேட்கும் உணவுப் பண்டங்களை வாங்கி வந்து தருகிறார்.

என்றைக்கு ஐஸ்வர்யா கர்ப்பமாக உள்ளார் என்று அமிதாப் பச்சன் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்கள் அவர் பின்னால் தான் செல்கின்றன. குழந்தை பிறப்பது பற்றி ஐஸ் டென்ஷனா இருக்காரோ இல்லையோ மீடியாக்கள் படு டென்ஷனாக உள்ளன.

திட்டமிட்டு சிம்பு மீது வதந்தி பரப்புகின்றனர் : டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு!


நீலாங்கரையில் பப் ஒன்றில் இளம் பெண்ணை சிலர் கிண்டல் செய்ததாகவும், இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்று கூறுவது உண்மையல்ல. திட்டமிட்டு சிலர், சிம்பு மீது வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையை அடுத்துள்ள நீலாங்கரை கடற்கரை பகுதியில் ஏராளமான பப்கள் உள்ளன. கடந்த இருதினங்களுக்கு முன்னர் இங்குள்ள பப் ஒன்றில் இளம் பெண்ணை கிண்டல் செய்ததாகவும், அவரை வலுக்கட்டாயமாக ஆட சிலர் வற்புறுத்தியதாகவும், இதில் அந்த பெண்ணின் கணவர் தாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3பேரை ‌போலீசார் தேடி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்று செய்திகள் வெளியானது. இதனை நடிகர் சிம்புவின் தந்தையும், டைரக்டருமான டி.ராஜேந்தர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. சிம்பு நடிகர் என்பதால் செல்லும் இடங்களில் நிறைய பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு செல்லும்போது பலர் இதுபோல் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களையெல்லாம் நண்பர்கள் என்று சொல்ல முடியுமா? சிலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்றும் செய்தி வந்துள்ளது. சிம்பு என்னிடம் அப்படி நண்பர்கள் யாரும் கிடையாது என்றார். திட்டமிட்டு சிலர் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதன் மேல் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி குடும்பம் வறுமையில் வாடுகிறது


தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியான மறைந்த டி.பி.ராஜலட்சுமிக்கு நேற்று 100வது பிறந்த நாள். தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்தவர். ஆனால் இன்று அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது.


இது பற்றி அவரது மகள் கமலா மோனி,   ’’எனது தாயார் ராஜலட்சுமி, 1911ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தார். வறுமையில் வாடியே தனது 55 வயதில் அவர் இறந்தார்.

முதல் பெண் இயக்குனரான அவர், பாடல், கதை, படம் தயாரிப்பு, நடிப்பு என பல துறையில் சிறந்து விளங்கினார். முதல் பேசும் படமான காளிதாஸ்படத்தில் ஹீரோயினாக நடித்தார். மிஸ் மாலினி’, ‘மதுரை வீரன்படங்களில் அவரது திறமை பாராட்டப்பெற்றது.


தாத்தா திருவையாறு பஞ்சாபிகேச சாஸ்திரிகள் இறந்த பிறகு, குடும்பம் வறுமையில் வாடியது. குடும்பத்தை காப்பாற்ற நாடகத்தில் நடித்தார். இது அவரது கணவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகள்தான் அம்மாவை நாடக மேடை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.




தேச பக்தி பாடல்களை அம்மா மேடைகளில் பாடுவார். இதனால் அவரை வெள்ளையர்கள் சிறையில் அடைத்தனர்.

நாடக குழுவினர் தான் சிறையிலிருந்து மீட்டார்கள். இது அடிக்கடி நடக்கும். சம்பாதித்த பணம், சொத்து எல்லாவற்றையும் சினிமா தயாரிப்பிலும் தனது குடும்பத்தினருக்குமே செலவு செய்து இழந்தார்.

வறுமை வாட்டியபோது கலைமாமணிவிருது கிடைத்தது. அதை உருக்கி தனது பேரனுக்கு தங்க சங்கிலி அணிவித்தார். மனஅழுத்தம், சர்க்கரைநோயால் 52 வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.


1964ல் இறந்தார். இன்று அவரது குடும்பம் வறுமையில் இருக்கிறது. அவர் பிறந்த நூற்றாண்டு தினமான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.


அரசு அதிகாரிகள் சமீபத்தில் அவரைப்பற்றிய தகவல் மற்றும் போட்டோ சேகரித்து சென்றனர். அரசிடமிருந்து உதவி கிடைக்கும் என்ற எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.

நர்ஸ் - முன்னாள் மந்திரியின் செக்ஸ் வீடியோ' வெளியானது(வீடியோ)


நர்ஸ் பன்வாரிதேவி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக இருவரும், ராஜஸ்தான் முன்னாள் மந்திரி மஹிபால் மடெர்னாவும் செக்ஸில் ஈடுபடும் வீடியோ டேப்புகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் நர்ஸ் பன்வாரிதேவி. அரசு ஆஸ்பத்திரியில்  நர்சாக பணிபுரிந்து வந்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் மாயமாகி விட்டார். எங்கு தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து பன்வாரியின்  கணவர் அமர்சந்த்  செப்டம்பர் 6-ந்தேதி போலீசில் புகார் செய்தார். மந்திரி மகிபால் மடெர்னா தூண்டுதலின் பேரில் தனது  மனைவி கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என்று தனது புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். உள்ளூர் போலீசார் `பெண் மாயம்' என்ற வகையில் வழக்கு பதிந்து விசாரணையை தொடர்ந்தனர்.

இவ்வழக்கில்  மந்திரி மஹிபாலையும் சேர்க்க வேண்டும் என்று கோரி பன்வாரிதேவியின் கணவர் அமர்சந்த் உள்ளூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்று மாடர்னாவையும்  இவ்வழக்கில் சேர்க்குமாறு  கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் இவரும்  இவ்வழக்கில் சேர்க்கப்பட்டார்.  இதையடுத்து அக்டோபர் 16-ந்தேதி மந்திரி பதவியில் இருந்து மஹிபால் மாடெர்னா நீக்கப்பட்டார்.

நர்ஸ் மாயமான விவகாரத்தில் பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.  பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பன்வாரி பற்றி உருப்படியான எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கேயாவது தலைமறைவாக உள்ளாரா?அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று இன்னும் உறுதியாக தெரிய வில்லை. இதனால் இந்த விஷயத்தில் மர்மம் நீடித்து வருகிறது.

இதனிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்கான்சிங்கின் சகோதரி இந்திரா விஸ்னாய்வுடன் பன்வாரி உரையாடும் `ஆடியோ டேப்சமீபத்தில் வெளியானது. அதில்,   மஹிபால் மாடர்னா தனக்கு ரூ.7 கோடி தரவில்லை எனில் அவருக்கும், தனக்கும் உள்ள உறவை பகிரங்கப்படுத்துவேன் என்று அவரிடம் பன்வாரி மிரட்டும் தொனியில்  பேசுவது பதிவாகி இருந்தது.

இதையடுத்து  சி.பி.ஐ. அதிகாரிகள் மஹிபாலிடம் விசாரணை  நடத்தினார். ஆனால் தனக்கு  நர்ஸ் பன்வாரியை  தெரியாது. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மறுத்தார். சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சோகன்லால் விஸ்னாய், பல்தேவ்ஜட், ஷகாபுதீன் ஆகியோரிடம் இருந்தும் எந்த தகவலையும் பெற முடியவில்லை. சம்பவத்தை  அடுத்து மாயமாகி விட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்கான்சிங் விஸ்னாய் உள்ளூர் கோர்ட்டால் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நர்ஸ் பன்வாரிதேவியுடன் முன்னாள் மந்திரி மஹிபால் ஒன்றாக இருக்கும் செக்ஸ் வீடியோ டேப்புகள் நேற்று உள்ளூர் சேனல்களில் வெளியாகின. இந்த காட்சிகள் 48 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. ஓட்டல்கள்   அல்லது விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த செக்ஸ் வீடியோ டேப்புகள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட இந்த  காட்சிகளை மஹிபாலும்   பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதற்கு மேலும் மறைத்தால் அது தனக்குதான் கேடு  என்று உணர்ந்த அவர் நேற்று மாலை ஜோத்பூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். "நர்ஸ்  பன்வாரியை தனக்கு நன்கு தெரியும். பலமுறை அவரை சந்தித்து இருக்கிறேன்.

ஆனால் பன்வாரி மாயமானதற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது'' என்று கூறினார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் இந்த விசாரணை  நடந்தது. பன்வாரிதேவி மாயமானது பற்றிய கேள்விகள் அனைத்துக்கும் தெரியாது, தெரியாது என்றே கூறியுள்ளார். பின்னர் நாளைக்கு (இன்று) மீண்டும் விசாரணைக்கு வந்து ஆஜராக வேண்டும் என்று சொல்லி அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இன்றும் அவரிடம்  விசாரணை நடக்கிறது. செக்ஸ் உறவு வைத்துக் கொண்டு அதை காட்டி ரூ.7 கோடி கேட்டு மிரட்டியதால் நர்ஸ்  பன்வாரிதேவி கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  அவரது உடல் சிதைக்கப்பட்டு புதைக்கவோ  எரிக்கவோ அல்லது ஆற்றிலோ  வீசப்பட்டு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது.

இந்த சம்பவத்தின் பின்னணியில்  முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் என்றும்  சந்தேகப்படுகின்றனர். சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் இந்த வழக்கின் விசாரணையை சூடுபிடிக்க வைத்துள்ளது.





தி டர்ட்டி பிக்சரில் 'நாக்க முக்க ' பாடல்!


நகுல், சுனைனா நடிப்பில் வெளிவந்த படம் 'காதலில் விழுந்தேன்'. விஜய் ஆண்டனி இசையில் இப்படத்தில் இடம்பெற்ற 'நாக்க முக்க' என்ற பாடல் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெற்றது.

இளைஞர்கள், சிறு குழந்தைகள் மத்தியில் பாடலும் அப்பாடலின் நடனமும் வரவேற்பை பெற்றது. 2011 உலக கோப்பை துவக்க நாளிலும் இப்பாடலுக்கு நடனம ஆடினார்கள். அது போலவே சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் துவக்க விழாவில் ஷாருக்கான் இப்பாடலுக்கு நடனமாடினார். பல்வேறு விருதுகளும் இப்பாடலுக்கு கிடைத்து இருக்கிறது.

இந்தி திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே வெளிவர இருக்கும் படம் 'தி டர்ட்டி பிக்சர்'. வித்யா பாலன் சில்க் ஸ்மிதா இப்படத்தில் 'நாக்க முக்க' பாடல் இடம் பெற இருக்கிறது.

இது குறித்து படக்குழு கூறியிருப்பது " நாக்க முக்க பாடல் 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் பல்வேறு இடங்களில் இடம் பெற இருக்கிறது. பாடலில் எந்த மாற்றமும் செய்யவில்லை." என்று தெரிவித்துள்ளனர்.

படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலுக்கு நஷ்ருதீன் ஷா நடனமாடினார்.

'நாக்க முக்க' பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார் விஜய் ஆண்டனி.

போர்நிறுத்த உடன்பாட்டின் பின்னணியில் இருந்தது ‘றோ‘ சொல்ஹெய்ம்

2002இல் சிறிலங்காவில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகளை இரகசியமாக சந்தித்த விபரத்தை நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரும், அந்த நாட்டின் சுற்றாடல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் அம்பலப்படுத்தியுள்ளார்.ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்படுவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த விடயம் முதல்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் பற்றிய மிகப்பெரிய தகவல் களஞ்சியமான அறிக்கையை வெளியிட்ட பின்னர், தனது செயலகத்தில் பேசிய போதே எரிக் சொல்ஹெய்ம் போரநிறுத்த உடன்பாட்டில் இந்தியாவின் பங்கு பற்றிய பல இரகசியங்களை வெளியிட்டுள்ளார்.

2002 பெப்ரவரியில் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளை இந்திய அதிகாரிகள் இரகசியமாக சந்தித்துள்ளனர்.

ஆனால் இந்தச் சந்திப்பு எங்கே நடந்தது என்றோ இருதரப்பிலும் சந்திப்புகளில் பங்கு பற்றியவர்கள் யார் என்பது பற்றியோ தகவல்களை வெளியிட சொல்ஹெய்ம் மறுத்து விட்டார்.

இது உண்மையானால், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையின் பின்னர் 1992இல் விடுதலைப் புலிகளை புதுடெல்லி தடை செய்த பின்னர், இந்திய அதிகாரிகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பாக இருக்கும்.

நோர்வேயின் அனுசரணையுடனான போர்நிறுத்த உடன்பாட்டை வரைவதில் அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாக அரசாங்கம் பின்னணியில் முக்கிய பாத்திரம் வகித்ததாகவும் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

கொழும்பையும் விடுதலைப் புலிகளையும் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இணங்க வைப்பது குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்தியாவின் புலனாய்வு முகவர் அமைப்பான ‘றோ‘ அதிகாரிகளுடன் பலமுறை சந்தித்துப் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘றோ‘ அதிகாரிகளுடனான பல சந்திப்புகள் புதுடெல்லி விமான நிலையத்தில் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர்நிறுத்த உடன்பாட்டில் இந்தியாவின் பங்கை அவரது இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ‘வின் தலையீடு பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று கோரப்பட்டதால், இந்தப் போர்நிறுத்த உடன்பாடு நோர்வேயின் தனித்துவமான குழந்தை போலவே கருதப்பட்டது.

2001-2002 இல் சிறிலங்கா மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் போர்நிறுத்த உடன்பாடு குறித்து அமைதியாக கலந்துரையாடியதாக கூறியுள்ள எரிக் சொல்ஹெய்ம், ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் புதுடெல்லிக்கு அறியத் தரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்த உடன்பாடு குறித்து இந்தியா குரல் ஆலோசனைகளை வழங்கியதுடன், தொடர்ந்து நல்ல உள்ளடக்கங்களை புதுப்பித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“சமாதான முயற்சிகளில் ‘பிரதான அனைத்துலக சக்தி‘ தொடர்புபடுவதை இந்தியா விரும்பவில்லை, எந்தெந்த நாடுகள் சிறிலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவில் பங்கேற்க வேண்டும் என்று கூட இந்தியாவே பரிந்துரைத்தது.

இந்திய அதிகாரிகள் அதில் தெளிவாகவே இருந்தனர். சிறிலங்காவை பிளவுபடுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்த அவர்கள், தமிழீழத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.

2006இல் புற்றுநோயால் மரணமான விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம், பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருந்தார். இந்திய நலன்களுக்கு விரோதமாக எதையும் செய்ய முடியாது என்று அவர் கருதியிருந்தார்.

ஆனால் 2001 தொடக்கம் 10 தடவைகளுக்கு மேல் நான் சந்தித்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஒரு இராணுவ மேதையாக இருந்தாலும், அனைத்துலக அரசியல் விவகாரங்களில் முழுமையான அனுபவம் கொண்டவரல்ல.

ராஜிவ்காந்தி கொலையில் தமது குழுவுக்குத் தொடர்பில்லை என்று பிரபாகரனும், பொட்டுஅம்மானும் பலமாதங்களாக வலியுறுத்தியதாக அன்ரன் பாலசிங்கம் என்னிடம் முறையிட்டார்.

அவர்கள் தாம் அதைச் செய்யவில்லை என்று பாலசிங்கத்தை சமாதானப்படுத்த முயன்றனர்.

தான் அதை நம்பவில்லை என்றும், அதன் பின்னர் தன்னிடம் பொய் சொல்வதை அவர்கள் நிறுத்திக் கொண்டதாகவும் பாலசிங்கம் என்னிடம் கூறினார்“ என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

விபத்து நடக்கும் முன் எடுக்கப்பட்ட படங்கள்

விபத்து என்பது கண் இமைக்கும் நேரத்தில் தான் நடக்கும் என்ன நடக்கிறது என்பதை யோகிப்பதற்கு முன் எல்லாமே நடந்து முடிந்து விடும்.
அப்படியே விபத்து நடைபெற இருக்கும் முன் ஒரு சில விநாடி நாம் சுதாரித்து கொள்ள நேரம் கிடைத்தால் எப்படி இருக்கும் இந்த புகைப்படங்கள் கூட அதை தான் சொல்கிறது.
இந்த புகைப்படத் தருணங்கள் நினைத்து பார்க்கவே மனம் பதறுகிறது.

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.
20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.
பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.
உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 500,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை

காதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது? ஆய்வாளர்கள் கருத்து

காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக் கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள்.
காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில் எத்தனையோ சாகசங்களை செய்பவர்கள் ஏராளம். மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம்.
நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் ரொமான்டிக் செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறார்கள்.
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகி விடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும்.
நீங்களும் அப்படிப்பட்டவர் எனில் காதல் வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதனை மன்மதக்காதல் என்கின்றனர் ரொமான்டிக் ஆய்வாளர்கள். இந்த வகை காதலர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஆத்மார்த்தமான காதலர்களாக திகழ்வார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடனும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள். இந்த காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.
பொழுது போக்கு காதல்
காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை செய்து அவளை தன்வசமே வைத்திருக்கும் காதலர்கள் ஏராளமானோர் உண்டு. இத்தகைய காதல் கவன ஈர்ப்புக்காதல் என்கின்றனர்.
உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது எனவே இது முழுமையான காதல் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள் நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள்.
அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கின்றனர் அவர்கள்.
வாழ்க்கை முழுதும் தொடரும்
காதலியின் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவள் மீது உள்ள அக்கறையினால் எண்ணற்ற செயல்களை செய்து அவளின் நன்மதிப்பினை ஏராளமாக பெறும் ஆண்கள் உண்டு. கண்ணியமான பார்வையும் நேசத்தை வெளிப்படுத்த சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலை சேமிப்புக் காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும் என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள்.
இருவரும் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.
எல்லைமீறாத காதல்
இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருக்கிறது. இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டாலும் எல்லைமீறாமல் செல்கிறது உங்கள் காதல். ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை பட்டியலிட்டாலும் முட்டிக்கொள்வதில்லை. காமத்தைப் பற்றிப் பேசினாலும் விசரம் இல்லை எனில் உங்கள் காதல் திட்டமிட்டக் காதல்.
வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
விட்டுக்கொடுக்காத காதல்
ஒருவருக்கொருவர் சீண்டிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். எல்லை மீறல்கள் இருந்தாலும், அந்த சீண்டலை அனுமதிப்பர்.
உங்களுடைய காதல் இப்படிப்பட்டது என்றால் அதனை இனிப்பு காதல் என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும்.
அதிக உணர்ச்சியும் கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார்.
இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உயிர் தரும் காதல்
காதலிக்கோ, காதலருக்கோ ஏதாவது ஒன்று என்றால் உடனே அக்கறையுடன் கவனிக்க கிளம்பிவிடுவார்கள். விளையாட்டுக்கு அழைத்தால் கூட லீவ் போட்டுவிட்டு உடனே காதலிப்பவர்களை உடனே பார்க்க கிளம்பிவிடுபவர்களா நீங்கள். அப்படியானால் ஆத்மார்த்தமான இந்த காதலை வெற்றிக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.
என்ன காதலர்களே நீங்களும் உங்கள் காதல் எப்படிப்பட்டது என்றும் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்து கொள்ளுங்கள்.

பலவந்தமாக உணவூட்டியதில் குழந்தை மரணம்! அம்மாவுக்கு 3 வருட சிறை


பிரித்தானியாவைச் சேர்ந்த அம்மா ஒருவருக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைக்கு பலவந்தப்படுத்தி உணவு ஊட்டியதில் மேற்படி குழந்தை மரணத்தை தழுவியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Diamond என்ற 10 மாதங்களேயான பெண் குழந்தைக்கு உணவு ஊட்டியதில் ஏற்பட்ட சுவாசக் கோளாறில் தான் குழந்தை மரணமடைந்ததாக பிரித்தானியப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்
நுரையீரலுக்குள் உணவு சென்றதால் சுவாசக் கோளாறில் தான் குழந்தை மரணமடைந்ததாக மருத்துவமனையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைக்கு  உணவூட்டுவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.