![]() |
| ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நியுயோர்க்கிற்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க இராஜதந்திரிகள் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நியுயோர்க்கிற்கு வெளியில் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதால், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக் கூடும் என்பதாலேயே சிறிலங்கா அதிபரை அங்கிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் இராஜதந்திரிகளுக்கு நியுயோர்க்கில் மட்டுமே இராஜதந்திர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது உறவினர்களை சந்திப்பதற்தும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையினால் அவரது திட்டங்கள் கைவிடப்பட்டு நியுயோர்க்கில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. |
Thursday, 22 September 2011
நியுயோர்க்கிற்குள் முடக்கப்பட்டார் மகிந்த வெளியே செல்வதற்கு அமெரிக்க அதிகாரிகள் தடை
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment