Friday, 2 September 2011

கடாபிக்கு சொந்தமான உல்லாச விமானம்! (படங்கள் இணைப்பு)


கடாபிக்கு சொந்தமான உல்லாச விமானம் கிளர்ச்சியாளர்களின் கையில் .மிகவும் பெறுமதி வாய்ந்த இந்த விமானம் கடாபியின் சொந்த பாவனைக்காக பயன்படுத்தப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.













காதலியை மணந்தார் யுவன் ஷங்கர் ராஜா! (படங்கள் இணைப்பு)


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் திருமணம் திருமலையில் நேற்று நடந்தது. இளையராஜாவின் மகனும், பிரபல இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவுக்கும் சுஜாயா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் முறைப்படி திருமணம் நடந்தது. அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜாவுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் மோகன் & மைதிலி தம்பதியின் மகள் ஷில்பாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் திருப்பதி திருமலையில் நேற்று காலை 9 மணிக்கு நடந்தது.

மணவிழாவில் இளையராஜா, அவருடைய மனைவி ஜீவா, மகள் பவதாரணி, மருமகன் சபரி, இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், தயாரிப்பாளர்கள் தியாகராஜன், விஷ்ணு வரதன், அனுவரதன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சுப்பு, கிருஷ்ணா, வாசுகி மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் அண்ணன் கார்த்திக் ராஜா, அவருடைய மனைவி ராஜி உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக இளையராஜா தனது குடும்பத்தினர் மற்றும் மணமக்களுடன் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். இன்று மாலை சென்னையில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 3 மகள்மாரையும் கௌரவ கொலை செய்த தந்தை

லிபிய மிஸ்ரடா நகரை கைப்பற்றும் நடவடிக்கையின்போது அந்நாட்டு தலைவர் கேணல் மும்மர் கடாபிக்கு விசுவாசமான படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தனது இளவயது மகள்மார் மூவரை தந்தையொருவர் கழுத்தை வெட்டி கௌரவக் கொலை செய்தமை தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புதன்கிழமை "த டெய்லி மெயில்' ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மிஸ்ரடா நகரில் கடாபியின் ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலின் போது, தொடர்ந்து இரு வார காலமாக அந்நகர் லிபியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இதன்போது கடாபியின் படையினர், நூற்றுக்கணக்கான மக்களை மனிதக் கவசங்களாக பயன்படுத்தியுள்ளனர்.

மிஸ்ரடா நகரின் புறநகரப் பகுதியிலுள்ள தொமினியா எனுமிடத்தில் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது, 17 வயது மற்றும் 18 வயதுடைய மூன்று சகோதரிகள் கடாபியின் ஆதரவுப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி சகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையை தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட பாரிய அவமானமாகக் கருதிய அவர்களது தந்தை, தனது கையாலேயே தனது மகள்மார் மூவரையும் கழுத்தை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சித் தகவல் மேற்படி நகரிலுள்ள முன்னணி மனித உரிமைக் குழு மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இரு சிறுவர்களை பீரங்கிகள் மீது பலவந்தமாக அமரச் செய்த கடாபியின் படையினர் அச்சிறுவர்களது குடும்பத்தினரிடம், "நீங்கள் அனைவரும் இங்கேயே இருங்கள். நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தினால், நீங்களும் இறப்பீர்கள்'' என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அத்துடன் கடாபியின் படையினர் ஆரம்பப் பாடசாலையொன்றை தடுப்பு நிலையமாக மாற்றி 14 வயது மதிக்கத்தக்கவர்கள் உள்ளடங்கலான சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடாபி பாலியல் வல்லுறவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் வகையில் தனது படையினருக்கு பாலியல் ஊக்க மாத்திரையான வயாகராவை விநியோகித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

அதே சமயம் கடாபி தனது படையினருக்கு மிஸ்ரடா நகரிலுள்ள பொதுமக்களை பட்டினியால் வாடச் செய்ய உத்தரவிட்டமை தொடர்பான ஆவணப் பிரதிகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பிராந்திய மனித உரிமை குழுவினர் அறிக்கையிட்டுள்ளனர்.

கடாபியின் படையினர் மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கச் சென்ற மருத்துவர்களை தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும் கடாபியின் படையினர் தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையிட்டுள்ளது.

சொனி அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட் (வீடியோ இணைப்பு)


சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது 'சொனி'.

சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது.

டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை பெயரிடப்பட்டுள்ளன.

இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான 'ஹனிகோம்' ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.

இதில் 'பி' இன் வடிவம் டெப்லட் சந்தைக்கு புதியது.

இது இரண்டு திரைகளைக் கொண்டுள்ளதுடன் மடித்து வைத்துக் கொள்ள முடிவதனால் எடுத்துச் செல்ல இலகுவாக இருக்குமென சொனி தெரிவிக்கின்றது.

இவற்றைப் பற்றிய மேலதிக விபரங்கள்

SONY TABLET S SPECS


Android 3.1 Honeycomb
9.4-inch screen
1280 x 800 resolution
512MB RAM
16GB memory
NVIDIA Tegra 2 processor
Front and rear cameras
WiFi and 3G compatible
Work as remote control on Sony products
Price - £399

செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளது

SONY TABLET P SPECS


Android 3.2 Honeycomb
Two 5.5-inch screens
Two 1024 x 480 pixel displays
RAM unknown
16GB memory
NVIDIA Tegra 2 processor
Book-style layout
WiFi and 3G compatible
Price - £479

நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

சந்தையில் முன்னணியில் இருக்கும் அப்பிள் டெப்லட்களுக்கு இவை தகுந்த போட்டியளிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அழுகையை நிறுத்துவதற்காக குழந்தையின் வாயில் சிகரட்டை வைத்த தாய் (வீடியோ இணைப்பு)




குழந்தைகளின் அழுகையை நிறுத்த பலவழிகள் இருந்தாலும் இந்த 21 வயதான தாய் சற்று வித்தியாசமான வழியை பின்பற்றியிருக்கிறார். அதுவும் எரியும் சிகரட்டை குழந்தை வாயில் வைத்து அமுக்கியிருக்கிறார்.

இவர் தற்பொழுது துஸ்பிரயோக வழக்கில் கைதாகி $2,700 பிணையில் வெளிவந்திருக்கிறார். பொலிசாரின் விசாரணையில் இவரது facebook பக்கத்தில் போதை போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படிருக்கிறது. இப்படியும் ஒரு தாய்.

சீனாவில் சீற்றம் விடுப்பு பார்த்தவர்களின் பரிதாப நிலை (வீடியோ இணைப்பு)


கடலை ரசிக்கசென்ற சுற்றுலாப்பயணிகள் சோகத்தை அனுபவித்த சோகம் சீனாவில் நடந்துள்ளது. யாரும் எதிர்பாராவண்ணம் பொங்கியெழுந்த கடலால் அங்கிருந்தவர்களை நிலைகுலையசெய்து விட்டது.

அதிலும் சில நல்ல மனம் படைத்தவர்கள். தங்கள் உயிரை மட்டுமல்லாது மற்றவர்கள் உயிரையும் காப்பாற்றியது நெஞ்சை நெகிழ வைக்கிறது.