Friday, 18 November 2011

தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு பதில்...: விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களின் அன்றாட செலவினங்களான பால் மற்றும் பஸ் கட்டண உயர்வை அ.தி.மு.க. அரசு வரலாறு காணாத வகையில் உயர்த்தி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


அ.தி.மு.க. அரசை தலைமை தாங்கும் முதலமைச்சரும் ஒரு பெண், அவர் தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு பதில், பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூபாய் 6.25 காசு உயர்த்தி, ஒரு லிட்டர் பாலின் விலை ரூபாய் 17.75 காசில் இருந்து, ரூபாய் 24ஆக உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது.


பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை கொடுப்பதை தே.மு.தி.க. ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி கொடுத்து விட்டு, மக்களிடம் இருந்து ரூபாய் 6.25 காசு வசூலித்துக் கொள்வது என்ன நியாயம்?. பால் கொள்முதலுக்கு உயர்த்தி வழங்கக்கூடிய 2 ரூபாயை அரசு மானியமாக வழங்கலாம்.


நடுத்தர மற்றும் ஏழை, எளிய, பாமர மக்கள் போக்குவரத்திற்கு அரசு பேருந்துகளைதான் நம்பியிருக்கிறார்கள். சுமார் 75 சதவீதம் கட்டண உயர்வை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியது ஆகும்.


மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் எல்லாம் முடங்கிக்கிடக்கின்ற வேளையில் மின்சார ஆணையத்திற்கு மின் கட்டணத்தை உயர்த்த அரசு பரிந்துரைத்து இருப்பதும் கண்டிக்கத்தக்கது.


மக்கள் ஆட்சி மாற்றம் கொண்டு வந்ததே தங்களின் துயரை துடைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிந்த கையோடு, மக்கள் விருப்பத்திற்கு மாறாக இந்த அரசு செயல்படுகிறது. இது மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது. எனவே உயர்த்தப்பட்ட பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

'சோலே' ரீமேக்கில் இணையும் தல-தளபதி?


இந்தியில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் ரசிக்க வைக்கும் படம் 'சோலே'. 1975ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பும், தர்மேந்திராவும் நடித்திருந்தனர். தற்போது அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும், இளைய தளபதி விஜய்யும், அல்டிமேட் ஸ்டார் அஜீத்தையும் வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சுமார் 16 வருடங்களுக்கு முன் அஜீத்-விஜய்யும் 'ராஜாவின் பார்வையிலே' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அதற்கு பிறகு, மீண்டும் இவர்கள் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தை யார் இயக்கப் போகிறார்கள், அஜீத்தும்-விஜய்யும் இணைவார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அப்படி இருவரும் இணைந்தால்தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளியாக இந்த படம் அமையும் என்பதில் ஆச்சிரியமில்லை.

அசினுக்கு தினமும் முத்தம் கொடுத்து தொந்தரவு செய்யும் நடிகர்


அசினுக்கு தினமும் இந்தி நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்து தொல்லை தருகிறார். பாலிவுட் டாப் ஹீரோக்கள் ஆமிர்கான், சல்மான்கான் போன்றவர்களை கவர்ந்த அசின் இளம் நடிகர்களின் கனவு கன்னியாகவும் மாறி இருக்கிறார். இவருக்கு நடிகர் கமால் ஆர் கான் என்பவர் தினமும் முத்தம் கொடுத்து தொல்லை தருகிறார். இந்த முத்தத்தை தனது வெப்சைட் மூலமாகத் தருவதால் அவருக்கு பதிலடி தர முடியாமல் தவிக்கிறார் அசின். தேச துரோகி’, ‘சிட்டம்உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் கமால் ஆர் கான். இவர் படங்கள் தயாரித்து இயக்கியும் இருக்கிறார்.

அசினின் அழகில் மயங்கிய அவர் தனது மைக்ரோ பிளாக்கிங் வெப்சைட்டில் காலை எழுந்தவுடன் அசின் புராணம் பாடத் தொடங்கிவிடுகிறார். நீங்க ரொம்ப செக்ஸியா, அழகா இருக்கீங்க. உங்களுக்கு எனது முத்தங்கள்என குறிப்பிடுவதுடன் குட்மார்னிங்கில் தொடங்கி குட் நைட் சொல்வதுவரை இடைவிடாமல் தொல்லை தருகிறாராம்.

அசின் தனக்கென மைக்ரோ பிளாக் எதுவும் வைத்திருக்கவில்லை. எனவே இதுகுறித்து அவரது தோழிகள் அசினிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் அடைந்தார். கமால் ஆர் கான் தரும் தொல்லையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். அவரைப்பற்றி புகார் தரும்படி தோழிகள் ஐடியா கொடுத்துள்ளனர். ஆனால், ‘அவரையும் ஒரு ரசிகராகவே பார்க்கிறேன். புகாருக்கு அவசியமில்லைஎன்று அசின் தனது தோழிகளிடம் சொன்னதாக தகவல்.

பஸ் கட்டண உயர்வை திசை திருப்ப ஜெயலலிதா திட்டம்

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா 17.11.2011 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசினார்.

அதில், போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரையில், டீசல், உதிரி பாகங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, போக்குவரத்துக் கழங்கள் செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அரசு போக்குவரத்துக் கழகங்களை செயல்பட வைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் கருத்தில்கொண்டு, பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன என்றும், இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த திடீர் அறிவிப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. பொதுமக்கள் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.


வெள்ளிக்கிழமை காலை, பத்திரிகைகளில் பேருந்து கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வு பற்றிய செய்தி மக்கள் மனதில் பதியும்படி வெளிவரும் என்பதால், தமிழக அரசு இந்த விஷயத்தை திசை திருப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


வெள்ளிக்கிழமை அன்று காலை முதலே போக்குவரத்துத்துறையில் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை அவர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வீடுகளிலும் சோதனை நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்த செய்திகள் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள், ரேடியோக்களில் வெளியானால், பேருந்து கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வு போன்றவை பெரிய விஷயமாக எடுபடாது என்ற நம்பிக்கையில் உள்ளது ஆளும் அதிமுக தரப்பு.


விஜய் படத்துக்கு ஹீரோயினை மாற்றினார் முருகதாஸ்!


சூர்யா நடித்த 7ஆம் அறிவு' படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்துக்கு மாலை நேரத்து மழைத்துளி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் படமான இதில் கதாநாயகியாக நடிக்க ஏஞ்செலினா ஜான்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருடன் விஜய் இணைந்து போஸ் கொடுத்த போட்டோகளும் எடுக்கப்பட்டது. ஆனால், ஷூட்டிங்கிற்காக முருகதாஸ் கேட்ட தேதிகளை ஏஞ¢செலினாவால் தர முயடிவில்லை. இதையடுத்து அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் ஹீரோயின் சோனம் கபூர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. இதற்கிடையே காஜல் அகர்வால்தான் ஹீரோயினாக நடிக்கிறார் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.

வைரமுத்து மீது வாள் வீசிய விஜய்!


பிரபல மலையாள இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில், ப்ருத்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து சிலமாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் வெளிவந்த படம் உருமி. 15ம் நூற்றாண்டை மையப்படுத்தி, சரித்திர படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் சந்தோஷ் சிவன். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாகியுள்ள இப்படம் தமிழிழும் அதே பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது.

இந்தவிழாவில் நடிகர் விஜய், டைரக்டர்கள் மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். படத்தின் ஆடியோ சி.டி.யை நடிகர் ‌விஜய் வெளியிட அதை வைரமுத்து பெற்றுக்கொண்டார். விழாவில் நடிகர் விஜய்க்கு அன்பளிப்பாக, சுருள் வாளை டைரக்டர் சந்தோஷ் சிவன் பரிசளித்தார். வாளை கையில் எடுத்த அடுத்த நிமிடமே எம்.ஜி.ஆர்., ஸ்டைலில் ஒரு சுழற்று சுழற்றினார் விஜய். அது எதிர்பாரா விதமாக அருகில் நின்றிருந்த வைரமுத்து மீது பட சற்றென்று பயந்து விலகினார்.

வைரமுத்து மீது அப்படி என்ன கோபமோ நடிகர் விஜய்க்கு! அது அவருக்கே வெளிச்சம்!!

நடிகரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து!


குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகர் நிகிலின் டிரைவிங் லைசென்சை ஓராண்டுக்கு ரத்து செய்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.  ஹேப்பி டேஸ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நிகில். கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில் தனது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட அவர், நள்ளிரவில் வீடு திரும்பினார். பஞ்சரா ஹில்ஸ் அருகே போக்குவரத்து போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

நிகில் போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து நிகில் கூறுகையில், சக நண்பர்களின் வற்புறுத்தலால் மது குடித்தேன். போதையில் வாகனம் ஓட்டியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என கூறினார். 
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, ஐதராபாத் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கவேண்டிய நடிகர்களே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களது ரசிகர்களும் இதையேதான் பின்பற்றுவர்கள். நிகிலுக்கு ரூ.2,600 அபராதம் விதிக்கப்படுகிறது. அவரது லைசென்ஸ் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என தீர்ப்பளித்தார்.