Saturday, 1 October 2011

சனல்-4 கொலைக்களம் நோர்வேயில் மீள் ஒளிபரப்பு! (சனல் 4 கொலைகளம் தமிழில் வீடியோ இணைப்பு )


சனல் 4 தொலைக்காட்சியின் சிங்கள அரசின் கொலைக்களக் காணொளியினை மீள ஒளிபரப்ப நோர்வே அரசு முடிவு.


சிங்கள அரசின் கொலைக்கள காணொளி இன்று நோர்வே நாட்டு அரச தொலைக்காட்சியில் இரவு 10.30 மணிக்கு ஒளி மற்றும் ஒளிபரப்பப்படவுள்ளது.

இலங்கையில் நோர்வேயின் அனுசரணைப்பணிகளை குழப்புவதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இலங்கைக்கு இலவச இராணுவ தளபாட உதவிகளை செய்திருந்தது.

பாகிஸ்தானினதும் சீனாவினதும் இராணுவ தளபாட உதவிகளால் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் போர்க்குற்ற நிகழ்வாக நோர்வேக்கும் அதன் சமாதான பணிக்கும் சவாலாக அரங்கேறியது.

கேள்விக்குறியாக இதனால் நோர்வேயின் சமாதான மதிப்பு உலகத்தில் கேள்விக்குறியாக மாறியது.

நோர்வே நாடு பாகிஸ்தான் நாட்டில் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் முதலிட்டுள்ள நாடு ஆகும். எனினும் 2010ம் ஆண்டு நோர்வே சமாதான பரிசை சீனாநாட்டவருக்கு வழங்கிய போது சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து அந்த நிகழ்வை புறக்கணித்திருந்தது.

அதனை தொடர்ந்து சீனா நோர்வேயுடனான உறவுகளை குறைத்துக்கொண்டு வந்தது.

இதன் எதிர் ஒலியாக கடந்த 17 வருடமாக ஆயுத விற்பனை மேற்கொள்ளாது சீனாவுடன் உறவை வளர்த்துக்கொண்டிருந்த அமெரிக்கா திடீர் என்று சீனாவிற்கு சவால் விடும் தாய்வானுக்கு ஆயுதத்தை ஏற்றுமதி செய்யப்போவதாக அறிவித்திருந்தது.

யோர்க் பக்ஷவை இந்த காலகட்டத்தில் ஐ.நா கூட்டத்தொடருக்கு கலந்துகொள்ள நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நோர்வே அரச தரப்பினர் சந்திக்க மறுப்பு தெரிவித்ததாக அறிய முடிகிறது.

நோர்வே அரசுடனான சந்திப்புக்கு இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலயம் மீண்டும் பயனற்று போன நிலையில் இவற்றுக்கெல்லாம் பதிலடியாக நோர்வே சனல் 4 ஒளி நாடாவை தனது அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இலங்கை அரசுக்கு பதில் கொடுக்கவுள்ளது.

70 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் 240 தொன் வெள்ளி (வீடியோ இணைப்பு)




சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய இங்கிலாந்து கப்பலில் 240 தொன் வெள்ளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது. கப்பலில் 240 தொன் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன.

கப்பல் 1941, பெப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது. அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம்.

அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது. இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 155 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டில் நம்மவர் இழப்பவை என்ன? (வீடியோ இணைப்பு)


 


வெளிநாட்டுக்கு செல்கின்றமையால் நாம் எவற்றை எல்லாம் இழக்கின்றோம்? நாம் பெற்றோர் எவற்றை எல்லாம் இழக்கின்றனர்?

இவ்வீடியோவை செவிமடுத்துப் பாருங்கள். உங்கள் மனம் நிச்சயம் வலிக்கத்தான் செய்யும்.

நீருக்கு அடியில் வேட்டையாடும் மனிதன் (வீடியோ இணைப்பு)




நீருக்கு அடியில் அல்லது ஆழ்கடலுக்குள் செல்கின்றமை என்பது பொதுவாக மனிதர்களால் முடியாத காரியம்.

ஆனால் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கடல் வேட்டைக்காரர் ஒருவரால் மூன்று நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்துக் கொண்டு 65 அடி ஆழம் உடைய கடலுக்குள் செல்ல முடிகின்றது.

அதுவும் மூச்சு விட உதவுகின்ற சாதனத்தை அணியாமலேயே. இவரால் ஆழ்கடலுக்குள்கூட ஐந்து நிமிடங்களுக்கு வேட்டையாட முடிகின்றது

நம்பகமான விசாரணை நடத்த சிறிலங்காவுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கிறது அமெரிக்கா


போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நம்பகத் தன்மைவாய்ந்த நடவடிக்கையில் சிறிலங்கா இறங்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

வொசிங்டனில் நேற்றுமுன்தினம் நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நம்பகமான விசாரணைகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜெனிவாவில் உள்ளமனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்துள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே மார்க் ரோனர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடற்புலிகளின் தளபதியின் வீடு என நினைத்து இரும்புக் குவியல்களை படம்பிடித்த சிங்களவர்கள்


கடற்புலிகளின் தளபதி சூசை வீடு என நினைத்து சூலை என்பவரின் வீட்டைத் தென்பகுதியிலிருந்து வந்தவர்கள் குதூகலத்துடன் புகைப்படம் எடுத்து ஏமாந்த சம்பவம் அண்மையில் புதுக்குடியிருப்பில் அரங்கேறியுள்ளது.

தென்பகுதியிலிருந்து மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக வந்த தென்பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வள்ளிபுனத்திலுள்ள கடையொன்றில் தமது வாகனத்தை நிறுத்திச் சூசையின் வீட்டுக்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளனர்.

கடையில் இருந்தவர்களுக்குச் சூசை என்பது சூலை எனக் கேட்டுள்ளது. இதனால் கோம்பாவில் பகுதியிலுள்ள சூலை என்பவரின் வீட்டுக்கு வழிகாட்டியுள்ளனர். தென்பகுதிச் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் சூலையின் வீட்டைச் சென்றடைந்தனர்.

அங்கே இரும்புக் குவியல்கள் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தன. அவர்கள் கடற்புலிகளின் தளபதி சூசையும் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாக எண்ணினார்களோ என்னவோ இரும்புக் குவியல்களை மளமள வெனப் புகைப்படம் பிடித்தார்கள்.

சூலையின் வீட்டிலுள்ள இரும்புக் குவியல்களைப் படம் பிடிப்பதில் அங்கு சென்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டனர். தென்பகுதிக்குச் சென்று புலிகளின் தளபதி சேகரித்து வைத்ததாக அந்த இரும்புக் குவியலைக் காட்டுவதில் அவர்கள் அக்கறையுடன் இருந்ததாகவே தெரிந்தது.

அப்போது அந்த வழியே வந்த உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் அங்கே குழுமி நின்று வேடிக்கை பார்த்தனர். சூலையின் வீட்டுக்கு இன்று என்ன நடந்தது? என்று கேள்வியும் எழுப்பினர். பாவம் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் சூசையின் வீடு என நினைத்துச் சூலையின் வீட்டைச் சல்லடை போட்டுக் கொண்டிருந்தனர்.இப்படியும் விநோதங்கள் வன்னிப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

போட்டோஷொப் சர்ச்சையில் கனேடிய தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசன்


இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபேசன், கனடாவில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகி சாதனை படைத்தவர். ஆண்களின் ஆதிக்கம் மிக்க அரசியல் கலாசாரத்தில் 29 வயதான ராதிகாவின் வெற்றி சிலாகித்து பேசப்பட்டது.


ஆனால், இப்போது அவரின் புகைப்படமொன்று போட்டோஷொப் முறையில் மாற்றியமைக்கப்பட்டதா என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் ராதிகா சிற்சபேசனின் புகைப்படமொன்றை தேடிய ஒருவர் ராதிகாவின் புகைப்படங்களில் ஒன்றை கண்டார். ஆனால் ராதிகாவின் உத்தியோகபூர்வ நாடாளுமன்ற விபரப்பக்கத்தில் அதே படம் மாற்றங்களுடன் காணப்பட்டது.

முந்தைய படத்தில் காணப்பட்ட மார்பகப்பகுதி உத்தியோபூர்வ விபரப்பக்கத்தில் போட்டோஷொப் முறை மூலம் மாற்றப்பட்டிருந்தது.

முதலாவது புகைப்படம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேலைத்தளத்திற்குப் பொருத்தமானதல்ல என கனடாவின் பழைமைவாத அரசியல்வாதிகள் கருதியதாக கூறப்படுகிறது.

ஆனால் இப்படி புகைப்படத்தில் மாற்றம் செய்தமை பெண்ணியலுக்கு எதிரானது எனவும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் அவரை குறைந்த பெண்தன்மையாக காட்டுகிறது எனவும் விமர்சகர்கள் சிலர் கூறியுள்ளனர்.

புகைப்படத்தில் மாற்றம் செய்யவேண்டுமென கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சி கோரியதா அல்லது ராதிகாவின் அலுவலகத்தினரோ, கனேடிய நாடாளுமன்ற இணையத்தள நிர்வாகிகளோ இதை செய்வதற்கு தீர்மானித்தார்களா என்பது தெரியவில்லை.

நிறம் மாறும் வினோத முதலை! (வீடியோ இணைப்பு)


ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது கீலாங். இப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பெரிய ஏரியில் ஸ்நாப்பி என்ற முதலை உள்ளது. இது 8 அடி நீளம் உடையது. முதலைக்குரிய அனைத்து குணங்களுடனும் பார்வையாளர்களை மிரட்டி வந்தது.


இதை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த முதலை திடீரென நிறம் மாற தொடங்கியது. தற்போது ஆரஞ்சு நிறத்துக்கு ஸ்நாப்பி முதலை மாறிவிட்டது. இந்த அதிசயத்தை காண பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து விட்டது.

முதலை நிறம் மாறியது வியப்பாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் முதலையின் நிறம் மாற்றத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் காதல் கணவருடன் செல்ல அனுமதி; ஐகோர்ட்டு உத்தரவு (படங்கள் இணைப்பு)


சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி. இவருக்கு வித்யாராணி, பிரபா ஆகிய 2 மகள் உள்ளனர். வித்யாராணி சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து வந்தார். பெரம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மரிய தீபக். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மரிய தீபக் தனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி சட்ட விரோத காவலில் தடுத்து வைத்திருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், நான் லயோலா கல்லூரியில் படித்த போது வித்யாராணியுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் 2 1/2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டோம். கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பதிவு செய்தோம். அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் எனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி மேட்டூர் மேச்சேரியில் உள்ள வீரப்பன் சமாதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றார். அதன் பிறகு வித்யாராணியை என்னுடன் அனுப்ப முத்துலட்சுமி மறுத்து விட்டார். நாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் எங்களை பிரிக்க முத்துலட்சுமி முயற்சி செய்கிறார்.

எனவே எனது மனைவியை மீட்டு தரும்படி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே முத்து லட்சுமியின் சட்ட விரோத காவலில் இருந்து வரும் என் மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைக்கும்படி செம்பியம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன், ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் வித்யாராணியை நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் வித்யாவை அழைத்து, நீ யாருடன் வாழ ஆசைப்படுகிறாய்? என்று கேட்டனர். அதற்கு வித்யா கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், வித்யாராணி மேஜரான பெண். அவர் சட்டப்படி தீபக்கை திருமணம் செய்துள்ளார். அவர் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே வித்யா கணவர் தீபக்குடன், சேர்ந்து வாழ அனுமதி அளிக்கிறோம் என்று உத்தர விட்டனர்.

இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த வித்யாவை தீபக் மகிழ்ச்சியுடன் வரவேற்று தன்னுடன் அழைத்துச் சென்றார்.



மன உளைச்சலாம்... வெளிநாட்டுக்கு பறக்கும் சோனா இதுதான்டா போலீஸ்!


பத்திரிகையாளர்கள் முன்பு வந்து சரண் என்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது நான் மூன்று கேள்விகள் கேட்பேன். அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். முதல் கேள்வி, என்னை நீ தொடக் கூடாத இடத்தில் தொட்டது உண்மையா? ரெண்டு நீ என் தொடை மேலே கையை வைக்க வந்தது உண்மையா? மூணாவது கேள்வி ஏய்... உன் ரேட் என்னடின்னு கேட்டது உண்மையா? இது மூணுக்கும் அவர் பதில் சொல்லிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்கணும். அப்புறம்தான் கேஸ் வாபஸ் வாங்கப்படும் என்றார்.

ஆனால் நேற்று மாலை ஆறு மணிக்கு தி.நகரிலிருக்கும் காவல் நிலையத்திற்கு சென்றார் சோனா. அங்கு என்ன அட்வைசிக்கப்பட்டாரோ? அன்றிரவே தான் சரணை மன்னித்துவிட்டதாக பத்திரிகையாளர்களுக்கு செய்தி கொடுத்துவிட்டார். கடிதம் மூலம் இந்த மன்னிப்பை கோரியிருக்கிறாராம் சரண்.

இன்று இரவு வெளிநாட்டுக்கு கிளம்புகிறார் சோனா. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். அதை தணிக்கும் பொருட்டுதான் இந்த பயணம். அப்படியே ஆந்திராவில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பதினைந்து நாட்கள் கழித்துதான் சென்னை திரும்புவேன் என்று நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.

'காயமே இது பொய்யடா' என்பதற்கு சோனா சொன்ன இன்னொரு பதில்தான் நல்ல எக்ஸாம்பிள். நானும் சரணும் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம். பழசையெல்லாம் மறந்துட்டோம்....

போன் கடையில் இளம்பெண் வடிவிலான பேய்! அதிர்ச்சிக் காட்சிகள் (வீடியோ இணைப்பு)




நன்கு பிரபலமான மொபைல் போன் கடையொன்றில் ரகசிய கமராவினால் (CCTV) எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அதிர்ச்சி தருபவையாக உள்ளன. ஒரு இளம்பெண் வடிவிலான பேய் ஒன்று நிற்பது போன்ற காட்சிகள் அதில் பதிவாகி உள்ளன.

பேய் வடிவிலான இளம்பெண் கடையின் பின் கதவுப் பக்கம் கடந்து போவது போல காட்சிகள் பதிவாகியுள்ளது. குறித்த உண்மையான காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து துறை சார் நிபுணர்களினால் ஆராயப்பட்டது.

ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இந்தக் காட்சிகளை youtube இல் பதிவு செய்த Andrew Dasilva கருத்து தெரிவிக்கையில், இந்தக் காட்சிகளை பார்த்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்து விட்டேன்.. என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை... எனக் குறிப்பிட்டிருந்தார்.

கொமன்வெல்த் நெருக்கடி வலுக்கிறது வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பீரிஸ் அவசர ஆலோசனை


அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்தமாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து- சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளில் குறிப்பிட்ட சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இம்மாதம் 28ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் நகரில் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.

கொமன்வெல்த் அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்த வேண்டும் என்று பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கையை கொமன்வெல்த் நாடுகள் முன்னெடுப்பதை தடுக்கும் முயற்சிகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக நேற்று கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தனவும், வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகமவும் பங்குபற்றியிருந்தனர்.

கொமன்வெல்த் அமைப்பில் சிறிலங்காவுக்கு எதிராக சில நாடுகள் செயற்படுவதாக இந்தச் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் மனிதஉரிமைகள், ஜனநாயகம், மற்றும் சட்டம் தொடர்பான கொமன்வெல்த் ஆணையாளர் பதவி ஒன்றை உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரீஸ் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளே இந்த ஆணையாளர் பதவியை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்தப் பதவி உருவாக்கப்படுவது தமக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதால், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிறிலங்கா தனக்கு ஆதரவான அணியொன்றைத் திரட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

கொமன்வெல்த் அமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் சிறிலங்காவின் நகர்வுகள் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

சிறிலங்காவுடன் போருக்கு தயாராகும் கனடா பேர்த்தில் மோதல் வெடிக்கும் என்கிறது றொய்ட்டர்


 
சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கனடா நேற்று பகிரங்கமாக விமர்சித்துள்ள நிலையில், அவுஸ்ரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாடு இருதரப்பு இராஜதந்திர மோதலுக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக றொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்கள் தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கனடாவின் கவலையை தான் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் நேற்று கூறியுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற பொதுச்சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதன்காரணமாக பிரித்தானியாவின் கொலனியாக இருந்த 54 நாடுகளின் கூட்டமைப்பான கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் கனடாவும், சிறிலங்காவும் இராஜதந்திர ரீதியாக நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக றொய்ட்டர் செய்தி கூறுகிறது.

உலகம் முழுவதிலும், குறிப்பாக சிறிலங்காவின் மனிதஉரிமைகளுக்காக கனடா தொடர்ந்து உரக்கக் குரல் எழுப்பும் என்றும் கனேடிய நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸ், அனைத்துலக நீதிமன்றங்களில் நீதி நிலைநாட்டப்படும் வரை சிறிலங்காவை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று கனேடியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், 2013 இல் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் கூறியிருந்தார் என்றும் றொய்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச அரங்கில் இலங்கையை அடியோடு கைகழுவியது இந்தியா


இறுதிப் போரின்போதும் அதன் பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கி வந்த இந்தியா இப்போது அந்தப் போக்கைக் கைவிட்டுள்ளது இலங்கையின் எந்தவொரு உள்விவகாரத்திலும் இனி இந்தியா தலையிடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்று அறிய வந்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையில் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை டாக்டர் மன்மோகன் சிங் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரியப்படுத்தினார் என அறியமுடிகிறது.

இலங்கைக்கு எதிராகச் சர்வதேச சமூகம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அழுத்தங்கள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த இந்தச் சந்திப்பில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதனை நன்கு கவனமாகச் செவிமடுத்த இந்தியப் பிரதமர் இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கும் அழுத்தங்கள் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கையே இனிமேல் வெளிப்படுத்தவேண்டுமெனவும், இலங்கை விவகாரத்தில் தலையிடாதிருக்க இந்தியா உத்தேசித்திருப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தினால் காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாட்டிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் அழுத்தங்கள் வருவதை விலாவாரியாக ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர், இனிமேல் இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று மேலும் தெரியவருகிறது.

சர்வதேச நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்தியா இவ்வாறு இலங்கையைக் கைவிட்டிருப்பது, கொழும்புக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகையில் இந்தியா இலங்கையைக் கைவிட்டிருப்பது மஹிந்த அரசுக்கு விழுந்த பேரிடி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய பாம்பு(வீடியோ இணைப்பு)


பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர். அதில் நம்மில் சிலருக்கு பாம்பு என்கின்ற பெயரை கேட்டாலே பயம் ஏற்படும். ஆனால் இந்த மெடுஸா மீட் என்ற பாம்பு தான் உலகின் மிகப்பெரிய பாம்பாக கருதப்படுகின்றது. இது 25 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட இந்த பாம்பு பெண் இனத்தை சேர்ந்தது. இதனை 15 பேர் சேர்ந்து தான் தூக்க முடியும். ஒரு வாரத்திற்கு 40 கிலோ எடையுள்ள விலங்கை உணவாக சாப்பிடுகின்றது. ஆனால் 100 கிலோ எடையுள்ள விலங்கை எளிதாக இதனால் உண்ண முடியும்.







இதன் பயிற்சியாளர் லாரி எல்கர் கூறுகையில் மெடுஸாவை நினைத்து அனைவரும் பயப்படுகின்றனர். அது நியாயம் தான் எனக்கும் அந்த பயம் உள்ளது. ஆனால் மெடுசாவில் 18 அடி நீளம் எப்பொழுதும் மயக்க நிலையில் இருக்குமாறு நான் பார்த்துக் கொள்கிறேன். ஆதனால் மெடுசாவை குறித்து பயபட வேண்டிய அவசியமில்லை. மெடுசா உகின் மிகப் பெரிய பாம்பாக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டி காத்திருக்கின்றேன்.

மகிந்தவின் அலரிமாளிகை நாடகம் - அனைத்துலக சமூகத்தை திசைதிருப்பும் முயற்சி


அதிகரித்து வரும் அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க முன்னாள் போராளிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அலரிமாளிகையில் வைத்து நேற்று 1800 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு, அனைத்துலக சமூகத்தின் ஆதரவை இலக்கு வைத்து நடத்தப்பட்டதே என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளையோ, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு உள்ளிட்ட அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளையோ பார்வையிட அனுமதிக்காத சிறிலங்கா அரசாங்கம், இப்போது வெளிநாட்டு இராஜதந்திரிகளின் முன்னிலையில் அவர்களை விடுதலை செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நேற்றைய நிகழ்வில் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றெனிஸ், மற்றும் பல்வேறு நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

புனர்வாழ்வின் போது தொழிற்பயிற்சிகளை நிறைவு முன்னாள் போராளிகளுக்கான சான்றிதழ்களையும் வெளிநாட்டு இராஜதந்திரிகளே வழங்கியுள்ளனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்திலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் நியுயோர்க்கில் நடத்திய சந்திப்புகளின் போதும், சிறிலங்கா அரசு கடும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

போர்க்குற்ற விசாரணைகள் குறித்த அனைத்துலக அழுத்தங்களை சமாளிப்பதற்கும், இந்தமாத இறுதியில் பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை தவிர்ப்பதற்குமே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பிய கையோடு அனைத்துலக இராஜதந்திரிகளின் முன்னிலையில் பெருமளவு முன்னாள் போராளிகளை விடுதலை செய்துள்ளதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கருத்து வெளியிட்டுள்ளன.

முடிந்தது வனவாசம் - மீண்டும் கேமிராமுன் வடிவேலு


மறுபடியும் அரசியல்? இப்படி ஒரு கேள்வியை வடிவேலுவிடம் கேட்டால் லைட்டை ஆஃப் பண்ணிட்டு அந்த கடையோட ஷட்டரையும் க்ளோஸ் பண்ணிட்டேன். இப்ப போய் இது என்ன தேவையில்லாத கேள்வி என்கிறார் உஷாராக. தன்னை அணுகி வரும் ஒரு சில அழைப்புகளுக்கான பதிலாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கிடையில் அவர் மீண்டும் கேமிராமுன் நிற்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தனது வனவாசத்தை முடித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு. டைரகட்ர் சுந்தர் சி இயக்கவிருக்கும் புதுப்படத்தில் நம்மையெல்லாம் சிரிக்க வைக்கப் போகிறவர் நம்ம வைகைப்புயல்தான்.

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், குடும்பத்தோடு பார்த்து ரசிக்கிற மாதிரி நடிக்கிற அற்புதமான நடிகர் வடிவேலு. வவ்வால் கூட்டில் வண்ணத்துப்பூச்சி ஒதுங்கிய மாதிரி ஆகிவிட்டது அவரது அரசியல் ஆசை. நல்லவேளையாக உஷாராகிவிட்ட அவர் இந்த முடிவை எடுத்திருப்பது மறுபடியும் கோடம்பாக்கத்தை சந்தோஷப்படுத்தியிருக்கிறது.

ஆனால் பத்து மணிக்கு ஷுட்டிங் வருவது, ஒன்றிலிருந்து மூன்று வரை மதிய வேளை ரெஸ்ட். மாலை ஐந்து மணிக்கு பேக்கப் என்கிற அவரது படப்பிடிப்பு கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மறுபடியும் கோடம்பாக்கத்திலிருந்து இவருக்கு கிடைக்கப் போவது மடி நிறைய சாபம்தான்...

சேச்சே... இன்னுமா அப்படியிருப்பாரு

சிறிலங்கா விமானப்படைக்கு புதிதாக 2 சீன விமானங்கள்


சீனாவில் இருந்து பெறப்பட்ட இரண்டு போக்குவரத்து விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கொழும்பில் உள்ள சீனத் தூதரக முதல்நிலைச் செயலர் வாங் ஜியான் பெங் இந்த இரு விமானங்களையும் சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்சல் ஹர்ச அபேவிக்கிரமவிடம் கையளித்தார்.



எம்.ஏ-60 ரகத்தைச் சேர்ந்த இந்தப் போக்குவரத்து விமானங்களில் 56 பயணிகளை ஏற்றி செல்வதற்கான வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு விமானங்களையும் சிறிலங்கா விமானப்படையின் வர்த்தக நிறுவனமான ஹெலி ருவர்ஸ் மூலம் உள்ளூர் பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிசில் திருமாவளவன் தீபன் செந்தமிழ்மாலை (வீடியோ இணைப்பு)


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சிவஞானம் சிறிதரன் மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல் திருமாவளவன்.கர்நாடக மாநில தமிழ் சங்க தலைவர் பக்தவக்சலம் மலேசியாவில் இருந்து தமிழறிஞர் பா கு சண்முகம் மேலும் பல தமிழ் உணர்வாளர்களுடன் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் தீபன் சக்ககரவர்த்தி ஆகியோரும் எதிர்வரும் 01-10-2011 சனிக்கிழமை காலை 10:00 மணிமுதல் .Gemeindezentrum Br�elmatt, Dorfstr 10, 8903 Birmensdorf. மண்டபத்தில் “செந்தமிழ் மாலை 2011“எனும் மாபெரும் முத்தமிழ் விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.


குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து இளவயது ஆன்மீக வாதியாக பணிசெய்து வந்த சீனித்தம்பி யோகீஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராகி முதன்முறையாக சுவிற்சர்லாந்தில் பொது நிகழ்வில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

தமிழ் காக்க தமிழால் இணைவோம்

நன்றி

செ.சிவராசசிங்கம்
அமைப்பாளர்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் - ஐரோப்பிய ஒன்றியம் - சுவிற்சர்லாந்து
தொடர்புகளுக்கு
சிவம் 062 929 05 78
சிவா 079 261 75 73
உதயன் 078 675 65 94
imtcswiss@yahoo.com

தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த பெண்


மும்பையில் 24 வயது பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தன்னைத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியாக சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிதி சிங் என்ற அவரது கணவர் சம்டாஷி பணிக்கு புறப்பட்டுச் சென்ற பின்னர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

செல்போன் கமராவை ஒன்செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அவர் தற்கொலை செய்யும் காட்சிகள் அந்த செல்போனில் பதிவாகி உள்ளன.

தற்கொலை செய்வதற்கான காரணங்கள் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும் தற்கொலை செய்துகொள்வதற்காக கணவரிடம் அவர் மன்னிப்பு கேட்டு குறிப்பு எழுதி வைத்துள்ளார். மேலும் அடுத்த பிறவியில் அவரது குடும்பத்துக்கும், கணவரின் குடும்பத்துக்கும் பொதுவானவராகப் பிறக்க வேண்டும் என்றும் அவர் கடிதமொன்றை எழுதிவைத்துள்ளதாக தெரிய வருகிறது.

அவர் பதிவுசெய்து வைத்துள்ள செல்போன் காட்சி சுமார் 1.33 நிமிடங்கள் உடையதாக இருக்கின்றது. காதல் திருமணம் செய்துகொண்ட மேற்படி இருவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இருவரும் 4 மாதங்களுக்கு முன்புதான் அங்கு வாடகைக்கு குடிவந்ததாக மும்பை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.