Thursday, 4 August 2011

விஜயைத் துரத்தும் சனியன் !

கட்சிக்கும் ரசிகர் மன்றத்துக்கும் இருக்கிற வித்தியாசம் கொடி, கொள்கைகள் மட்டுமல்ல, தலைவர் சொல் கேட்டு அடங்கி நடக்கிற விஷயத்திலும்தான். ஆனால்,விஜய் கலந்து கொண்ட படப்பிடிப்பில் அவருடைய சொல்லை கேட்காமல் உள்ளே புகுந்த ரசிகர்கள் நிஜமாகவே ரசிகர்கள்தானா? அல்லது வேறொரு தலைவரை வணங்கும் தொண்டர்களா? என்ற சந்தேகம் வந்திருக்கிறதாம். கடந்த சில தினங்களுக்கு சென்னை புறநகரில் ஒரு இடத்தில் நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பொதுவாகவே விஜய் கலந்து கொள்கிற படப்பிடிப்புக்கு வருகிற ரசிகர்கள், அவரை பார்க்கும் ஆசையில் திரண்டு நிற்பார்கள். ஆனால், அவரை நெருங்க முடியாதபடி காவல்காத்துநிற்பார்கள் அவரது பாடிகார்டுகளும், படப்பிடிப்புக் குழுவினரும்.

அப்படிதான் இருந்தார்கள் சம்பவ தினத்தன்றும். ஆனாலும், திமுதிமுவென்று பாதுகாப்பாளர்களை தள்ளிவிட்டு விட்டு உள்ளே புகுந்தது ஒரு கும்பல். வந்தவர்கள் லொகேஷனில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் வந்தவர்கள் ரசிகர்கள்தானா அல்லது ரசிகர் என்ற போர்வையில் வந்த குண்டர்களா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க இவரின் வேலாயுதம் திரைப்படம் வெளிவரத்தயாராக இருக்கிற நேரத்தில

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையொப்பம் வேண்டுவதாகவும் அதற்க்கு விஜய் மறுத்துவிட்டதாகவும் செய்திகளை பரப்பி புலம் பெயர் தமிழர்களின் கோபத்தை இவர் மேல் திருப்புவதற்கும் முனைகின்றனர். எல்லாவற்றுக்கும் பின்னணியில் சூரியக் குடும்பம்தான் இருப்பதாகவும் கோடம்பக்க வட்டாரங்களில் முனுமுனுக்கிறார்கள்.

கையொப்பம் வேண்டச் சென்றவர்கள் திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களாம். அத்தொண்டர்களுக்கு தெரியாத ஈழத்தில் இனப்படுகொலையை ராஜபக்ஷ யாருடன் கூட்டு சேர்ந்து மேற்கொண்டார் எண்டு அப்பொழுது தங்களின் தலைவன் யாருடன் இருந்தாரெண்டு. இக்காரணத்துக்காகவே கடந்த தேர்தலில் படுதோல்வியை தளுவிக்கொண்டோமெண்டு இப்பொழுது எங்கிருந்து வந்தது ஈழ பாசம், ராஜபக்ஷவுடன் கைகுலுக்கி விருந்துண்டபொழுது அவன் குற்றவாளி எண்டு தெரியவில்லையா? கடந்த தேர்தலில் ஈழத்துக்கு ஆதரவாக நிண்ட அரசியல் தலைவர்களோடு சேர்ந்து அதிமுக கூட்டணியை ஆதரித்தவரிடம் எதிர் கூட்டணியில் இருந்தவாறு கையொப்பம் வேண்ட சென்றார்களாம். எப்படியாவது ஒரு சூழ்ச்சிவலையில் விஜயை தள்ளுவதற்கு பாரிய முயற்சி. ரசிகர்கள் என்ற போர்வையில் ஒரு கும்பல் அரசியல் கட்சி தொண்டர்கள் என்ற போர்வையில் ஒரு கும்பல் இவர்களின் திருவிளையாடல்களை புரியாதவர்களா மக்கள்.

ஒன்றுமட்டும் புரிகிறது விஜயை விடாமல் திரத்தும் மஞ்சள் துண்டுபோட்ட சனியன் யாரென்று?

தன்நம்பிக்கையுடன் வாழும் சிறுவன் (படங்கள் இணைப்பு)

பிறக்கும் போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த இந்த சிறுவன் செயற்கை கால்களில் நடந்து வருகிறான். இருந்தும் நம்பிக்கையுடன் அனைத்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்த சிறுவனை நீங்களும் பாருங்கள்.











80 வயது முதியவரை மணம் செய்ய தயாராக இருக்கும் 39 வயதுப் பெண்!


மகளுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை அமைத்துக் tகொடுக்கின்றமைக்காக 80 வயது முதியவர் ஒருவரைக்கூட மறுமணம் செய்கின்றமைக்கு தயாராக உள்ளார் என்று அறிவித்து உள்ளார் இலங்கையரான நடுத்தர வயதுப் பெண் ஒருவர். இவரின் பெயர் ரில்வி ரொமெய்ன் ( வயது - 39 ). பறங்கியர். கிறிஸ்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம், டச்சு போன்ற மொழிகளைப் பேசக் கூடியவர்.

கம்பஹா மாவட்டத்தில் வெயாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரது கணவன் கடந்த பெப்ரவரி மாதம் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்து விட்டார். இவருக்கு 14 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். சர்வதேச பாடசாலை ஒன்றில் பயில்கின்றார்.

ரொமெய்னின் குடும்பத்தினர் ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்தவர்கள். விதி வசத்தால் வறுமை நிலையை அடைந்து இருக்கின்றார்கள். இருப்பினும் மகளுக்கு நல்ல கல்வியை போதிக்க வேண்டும் என்பதில் ரொமெய்ன் பற்றுறுதியாக இருந்து வருகின்றார்.

கணவன் உயிரோடு இருக்கின்றவரை மகளின் கல்வி நடவடிக்கைகளில் சோர்வு ஏற்பட்டு இருக்கவில்லை என்றும் தற்போது வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கின்ற நிலையில் மகளின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியன கேள்விக்குறியாகி விட்டன என்றும் கவலையுடன் கூறுகின்றார் ரொமெய்ன்.

இந்நிலையில் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமானம் உடைய ஒருவரை மறுமணம் செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து இருக்கின்றார்.

80 வயது கிழவரோ, நோயாளியோ, ஊனமுற்றவரோ என்றால்கூட பரவாயில்லை மகளை சொந்தப் பிள்ளையைப் போல் பார்க்க கூடிய ஒருவரை திருமணம் செய்ய தயார் என்று ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.

வெளிநாட்டவர்கள் அல்லது புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களின் விண்ணப்பங்களைப் பெரிதும் பரிசீலனைக்கு கொள்வார் என்று கூறி உள்ளார்.

பெற்றோர்களின் தோல்வி! தவறாக நடத்தப்படும் குழந்தைகள் (படங்கள் இணைப்பு)


துப்பாக்கி சுடும் போது, சாண்ட்விச்சில், சுவரில் டேப் மூலம் ஒட்டியபடி, கொடிய விசப்பாம்புடன் இப்படியான இடங்களில் எல்லாம் குழந்தை இருக்கும் என்பது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்று...

ஆனால் நம்ப முடியாத அளவுக்கு இருக்கின்றன இவை... தமது அன்புக் குழந்தைகளை பெற்றோர்கள் இப்படியாக நடத்துவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இப்படியான விடயங்களை வெளியில் கொண்டு வருவதற்காக சமூக நல ஆர்வலர்கள் ParentFails.com என்ற இணையத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த இணையத்தில் குழந்தைகளின் வேடிக்கை தருணங்கள், பெற்றோர்களால் தவறாக நடத்தப்படும் சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.



























பழனியில் 1008 ரஜினி ரசிகர்கள் மொட்டை போட்டனர் (படங்கள் இணைப்பு)


நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் திரும்பியதால், மகிழ்ச்சி அடைந்த அவருடைய ரசிகர்க்ள 1008 பேர் பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் தொழிலாளர் சங்க உறுப்பினர்களான இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்தி பழனி சண்முக நதியில் நீராடினர். பின்னர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கோயிலுக்கு பாதையாத்திரை மேற்கொண்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர்கள் இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் ஒருவர், எங்கள் அன்புத் தலைவர் ரஜினி அவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப வேண்டும் என்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தோம். ரஜினி நலமுடன் திரும்பியதையடுத்து திருப்பூரில் இருந்து பழனி வந்த 1008 ரசிகர்களும் சண்முக நதியில் நீராடி முடி காணிக்கை செலுத்தி எங்களது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறோம் என்றார்.




இந்த போராளிகளை அடையாளம் காண உதவுங்கள் .. (வீடியோ இணைப்பு)


சிங்கள படைகளினால் கைது செய்ய பட்டு பின்னர் கொலை செய்ய பட்டுள்ள ஆண் பெண் போராளிகள் அடங்கிய காணொளி காட்சியே இது .

குறித்த விடியோ பலருக்கு பலவிதமான முறையில் விலை பேசி விற்க பட்டுள்ளது. இதனை தடுக்கும் முகமாகவே இதனை தற்போது இங்கே பிரசுரிக்கின்றோம் .

குறித்த விடியோவில் உள்ள போராளிகள் யாரையாவது அடையாளம் கண்டால் அதனை எமக்கு தெரிவிக்கும் படி வேண்டி கொள்கின்றோம் .

ஆடைகள் அற்ற நிலையில் உள்ள நபர் அரசியல் பொறுப்பாளர் நடேசனாக இருக்கலாமோ என அஞ்ச படுகின்றது ஆனால் உறுதி படுத்த முடிய வில்லை.

அவ்வாறு இருந்தால் எமக்கு தெரிவிக்கும் படி வேண்டி கொள்கின்றோம் ..!

யார் இந்த முதல்வர் திலகம் ? (படங்கள் இணைப்பு)


மக்கள் திலகம் என்கிற சொல்லைக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். நவ யுக கர்ணன் எம்.ஜி.ஆருக்கு மக்கள் விரும்பி வழங்கி இருந்த பட்டம் இது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்த இமயம் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்று பட்டம் சூட்டி மக்கள் மகிழ்ந்தார்கள். தமிழ் திரை உலகில் நவரச திலகம், இளைய திலகம் .... என்று எல்லாம் எத்தனையோ திலகங்களை கேள்விப் பட்டு இருக்கின்றோம்.

ஆனால் யார் இந்த முதல்வர் திலகம்? இந்தப் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது? நல்லூரில் சங்கிலி மன்னனுக்கு சொந்தச் செலவில் புதுச் சிலை அமைத்துக் கொடுத்து உள்ளார் கைலாசநாதர் பிள்ளையார் ஆலய குரு கே. குருசாமி சர்மா.

இதற்கான உதவி, ஒத்தாசைகளை யாழ். மாநகர முதல்வர் என்கிற வகையில் யோகேஸ்வரி பற்குணநாதன் செய்து கொடுத்தார்.

ஆனால் கல்வெட்டில் முதல்வர் திலகம் என்று அவருக்கு அவரே பட்டம் சூட்டி மகிழ்ந்து உள்ளார்.

முதல்வர் திலகம் .... யோகேஸ்வரி அம்மையாருக்கு பராக்.... பராக்.







தேர்தல் பித்தில் தமிழைக் கொன்ற நாமல்! (வீடியோ இணைப்பு)


நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பட்டாளமாகச் சென்று பல நிகழ்வுகளில் பங்கேற்று மேடைகளில் முழங்கினார். இதன் போது பலர் போட்டி போட்டுக் கொண்டு தமிழிலும் பேசினார். இவர்களை யாழ் மக்கள் ஏதோ தேர்தல் பித்துப் பிடித்தவர்களாகவே பார்த்தனர்.


யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நாமல் ராஜபக்ச தமிழனையும் தமிழையும் கொலை செய்த தந்தைக்கு போட்டியாக தமிழில் உரையாற்ற முனைந்து தமிழைக் கொலை செய்தார்.

யாழில் புற்று நோய் சிகிச்சை வைத்தியசாலை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் முகமாக தெய்வேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை முனை வரையும் இடம்பெற்ற நடை பயணத்தின் இறுதி நாள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, தமிழில் உரையாற்ற முனைந்த நாமல் ராஜபக்ச தமிழைக் கொலை செய்து உச்சரித்த வண்ணம் தமிழில் உரையாற்றினார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தால்ப்போல், அன்றைய முக்கிய நிகழ்வான ‘புற்றுநோய்’ மருத்துவமனை என்பதற்கு ‘பூத்து நோய்’ என உச்சரித்திருந்தார்

இவர்கள் என்ன தமிழில் பேசியும் வீதியில் குத்தாட்டம் போட்டும் கச்சேரி நடத்தியும் இலவசங்களை வாரி வழங்கியும் ஏன் அபிவிருத்தி எனும் மாயையை தோற்றுவித்தும் கூட இதற்கெல்லாம் அடிபணியும் அரசியல் தமிழர்களிடம் இல்லை என்பதையும் தமிழ் மக்களின் அரசியல் பல தியாகங்களின் மத்தியில் வளர்க்கப்பட்டது என்பதையும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்

அரச தொலைக்காட்சி ஊடகவியலாளரே போர்க்குற்ற காணொலிகளை இரகசியமாக விற்றாராம்

சிறிலங்கா அரசாங்கத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூலமே சனல்-4 தொலைக்காட்சிக்கு போர்க்குற்றக் காணொலிகள் கிடைத்துள்ளன. ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவலில் இருந்து இது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


2009 மே 17ம் நாள், போர் முடிவுக்கு வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, விடுதலைப் புலிகளால் மனிதக்கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டது குறித்த காணொலியை ரூபவாகினி மற்றும் ஐரிஎன், சுவர்ணவாகினி ஆகியவற்றில் ஒளிபரப்புமாறு உத்தரவிட்டதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபரப்பான இந்த காட்சிகள் அடங்கிய காணொலியில் நிச்சயமாக அந்த தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் ஜுலை 27ம் நாள் சனல் -4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொலியில் உள்ளூர் தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இருக்கவில்லை.
அதில் சனல்-4 தொலைக்காட்சியின் சின்னம் மட்டுமே இருந்தது.

இதிலிருந்து உள்ளூர் தொலைக்காட்சிகளுக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொலிகள் பிரதி எடுக்கப்பட்டு சனல்-4 தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தொலைக்காட்சி குழுவினரே போர்க்களக் காட்சிகளைப் படம்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தன் மீதும் உயிரை பணயம் வைத்து போர்க்களக் காட்சிகளை பதிவு செய்த ருபவாகினி ஊடகவியலாளரான சமன்குமார ராமவிக்கிரம மீதும் சிலர் சேறு பூச முனைவதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளின் மூலப்பிரதி சனல்- 4 தொலைக்காட்சிக்கு எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்- அந்தக் காட்சிகளைப் படம்பிடித்த அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ராமவிக்கிரமவே அவற்றை வெளிநாட்டு தொலைகாட்சிகளுக்கு விற்றிருப்பது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சமன்குமார ராமவிக்கிரம போர்முனையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது புலிகளின் பல மடிக்கணினிகளையும் இலத்திரனியல பொருட்களையும் தனது வாகனத்தில் திருடிக் கொண்டு சென்றபோது மதவாச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை அரசாங்க தகவல் திணைக்களப் பணிபாளர் லக்ஸ்மன் ஹுலுகல்லவே தலையிட்டு விடுவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த பேருந்து ஓட்டுனர் (வீடியோ இணைப்பு)


வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்துகளை எற்படுத்தும் சில ஓட்டுனர்களின் மத்தியில், போக்குவரத்து நெருக்கடியில் மிகவும் திறமையான பேருந்து ஓட்டு வாகனங்களை கடந்து சென்ற இந்த ஓட்டுனரின் திறமையை நீங்களும் பாருங்கள்.

வடிவம் மாறும் வினோதமான மோட்டார் சைக்கிள் (வீடியோ இணைப்பு)


BPG என்ற நிறுவனத்தால் UNO என்ற மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் இடநெருக்கடியை குறைக்க உதவும் சிறந்த வாகனம் ஆகும்.

மின்சாரத்தினால் இயங்கும் இந்த வாகனம் மிதமான வேகத்தில் செல்கிறது. மற்ற மோட்டார் சைக்கிள் வாகனம் போல் இல்லாமல் ஒரு சக்கரத்துடன் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறது.

நகைச்சுவையான வேடிக்கைகாட்சி (வீடியோ இணைப்பு)


மக்கள் அதிகம் நாடமாடும் பகுதிகளில் சித்திரிக்கபட்ட சில விடயங்களை கண்டு மனிதர்கள் செய்யும் வேடிக்கையான நிகழ்ச்சியை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.









இலக்கை கடக்கும் முன் வெற்றியை கொண்டாடியதால் ஏற்பட்ட விளைவு (வீடியோ இணைப்பு)


போட்டியின் பந்தய தூரத்தை கடக்கும் முன் அவர் வந்துவிட்டதாக நினைத்து வெற்றியை கொண்டாடிய வீரர்களை முந்திச் சென்று வெற்றி பெற்றவர் நிகழ்வைத்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.





டிரம் வாசிக்கும் தந்தையும் மகனும் (வீடியோ இணைப்பு)


சிகாகோ நகரத்தில் பிளாஸ்டிக் வாளியை வைத்து கொண்டு மிக அற்புதமாக டிரம் வாசிக்கும் சிறுவன். பிழைப்பிற்காக சாலையில் டிரம் வாசிக்கும் இந்த சிறுவனின் திறமை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.









சுவிஸ் முன்னணி தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களம்! (வீடியோ இணைப்பு)

அற்புதமாக ஸ்கேட்டிங் விளையாடும் வீரர் (வீடியோ இணைப்பு)


இரண்டு கால்கள் இல்லாத இந்த வீர்ர் மிகவும் தன்நம்பிக்கையுடன் மிக சிறப்பாக ஸ்கோட்டிங் விளையாடுகிறார். இந்த வீரர் செய்யும் சாகசத்தை நீங்களும் பாருங்கள்.