Saturday, 2 July 2011

கையடக்கத் தொலைபேசியை அதிகம் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்

பொதுவாக கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பதால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக அளவில் தொடர்ந்து கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்று நோய் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
எனவே கைத்தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயம் குறித்து குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கைத்தொலைபேசி எந்திரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சு புற்று நோய் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் அதை தடுத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.
சுவீடனை சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு மூளையின் நரம்பு திசுக்களில் கட்டி ஏற்படுகிறது. பிற்காலத்தில் அது மூளை புற்று நோயாக மாறும் வாய்ப்பு இருப்பதை கண்டறிந்தனர்.

விடுதலையாக வேண்டும் என்ற நோக்கில் அப்ரூவராக மாறுவாரா கனிமொழி

லஷ்கர் இ தொய்பாவால் தான் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல்: அமெரிக்கா

பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
தீவிரவாத அமைப்புகளும் அவற்றை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுதலும் என்ற நோக்கத்தில் "தேசிய தீவிரவாத ஒழிப்பு அமைப்பு" ஒன்றை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.
அந்த அமைப்பு தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக அறிக்கை தயாரித்துள்ளது. 19 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை வெள்ளை மாளிகை இப்போது முதன் முதலாக வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு தெற்கு ஆசிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அமைப்புதான் 2008ம் ஆண்டு மும்பையில் பெரும் தாக்குதலை நடத்தியது. அதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந்த அமைப்பை ஒடுக்க உலக நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் தெற்காசியா நாடுகளுக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பால்தான் அச்சுறுத்தல் உள்ளது.
இந்த அமைப்பை ஒடுக்க மற்ற நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தெற்கு ஆசிய நாடுகளின் பலம், உறுதித்தன்மையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதுபோல் ஐரோப்பா, ஐக்கிய அரபு நாடுகளின் பலத்தை அதிகரிக்கவும் உதவி வருகிறது.
மேலும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கவும் அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தீவிரவாதத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க முடியும்.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பு குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து அல்கொய்தா அமைப்பை ஒடுக்கிவிட்டாலும் அந்த அமைப்புடன் தொடர்புடைய சில தீவிரவாத அமைப்புகள் இன்னும் சில நாடுகளில் பரவியுள்ளன.
அந்த அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகள் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அது பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஐரோப்பாவை தகர்ப்போம்: கடாபி

லிபியாவில் வான்வழித் தாக்குதலை நிறுத்தா விட்டால் ஐரோப்பாவை தாக்குவோம் என லிபிய அதிபர் கடாபி எச்சரித்து உள்ளார்.
லிபியாவில் பொது மக்களை பாதுகாக்கவும் போராட்டக்காரர்களுக்கு உதவவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டுப் படையில் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நேட்டோ படைகள் லிபிய ராணுவ தளங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்துகின்றன.
இந்த நிலையில் கடாபியின் பல ஆயிரம் ஆதரவாளர்கள் தலைநகர் திரிபோலியின் கிறீன் சதுக்கத்தில் குவிந்தனர். அவர்கள் பச்சைக் கொடியை அசைத்தவாறு கடாபியை புகழ்ந்து கோஷம் போட்டனர்.
லிபிய தலைநகர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தொலைபேசி வழியாக பேசினார். நேட்டோ படையினர் தங்களது வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஐரோப்பாவில் உள்ள அலுவலகங்கள், குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவோம் என கடாபி எச்சரித்தார்.
நேட்டோ படைகள் உடனடியாக விலகுவது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் விபரீத விளைவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவ மையங்களை தகர்ப்பதற்காக லிபியாவில் வீடுகள், அப்பாவி பொது மக்கள் மீது நேட்டோ படைகள் தாக்கி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

இலங்கையிடம் இருந்து 80 தாக்குதல் படகுகளை வாங்கும் இந்தியா !


இந்தியக் கடற்பரப்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தவுள்ள இந்திய கடற்படையினர் அதற்காக இலங்கையிடமிருந்து அதிவேகப் படகுகளைக் கொள்வனவு செய்யவுள்ளனர். இலங்கையில் இயங்கிவரும் டுபாய் அடிப்படையான மல்ரிநஷனல் கம்பனியான கப்பல் உற்பத்தியாளர்களான சோலாஸ் மரைன் லங்கா பிரைவேற் லிமிற்றட்டிடமிருந்து 80 படகுகளை இந்தியா கொள்வனவு செய்கிறது. இதற்கான பேச்சுக்கள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இந்தப் படகுகள் 67 மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி படகுகள் மணிக்கு 45-50 மைல் வேகமுடையதாகக் கட்டப்படவுள்ளன. கரையோரப் பாதுகாப்புக் கடமைகளிலும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனவாம்.

திகார் ஒலிம்பிக் ” - களம் இறங்கும் முக்கிய கைதிகள்

புதுடில்லி: திகார் ஜெயிலில் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் கைதிகள் இடையிலான விளையாட்டு போட்டியில் ஜெயிலில் இருக்கும் முக்கிய உயர் அந்தஸ்தில் இருந்த கைதிகள் பலர் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்துடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை , காமன்வெல்த் ஊழலில் சிக்கி உள்ளே இருக்கும் கல்மாடி செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் இவர் வெளியே இருக்கும் நேரத்தில் இந்த ஜெயில் விளையாட்டு முகமைக்கு உதவி புரிய வேண்டும் என்று விரும்பினாராம்.

காமன்வெல்த் போட்டி நடத்தி இதில் பல கோடி ஊழல் புரிந்த குற்றத்திற்காக சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 2 மாதங்களாக ஜெயிலில் இருந்து வரும் அவர் எவ்வித சலனமுமின்றி சந்தோஷமாக இருப்பதாக ஜெயில் வட்டாரம் தெரிவிக்கிறது.

வரும் 2016 ல் ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்துவது எப்படி என்று சிந்தித்து கொண்டிருந்த நேரத்தில் அவர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் டில்லியில் எம்.பி.,யாக இருக்கும் இவருக்கு திகார் ஜெயிலில் தனி மரியாதை இருந்து வந்தது. ஜெயிலில் நடத்தப்படும் திகார் ஒலிம்பிக் போட்டிக்கு உரிய உதவிகள் செய்ய வேண்டும் என நினைத்திருந்தாராம். இதனை இவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து: ஜெயில் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் சுனில் குப்தா இது குறித்து கூறுகையில்; திகார் ஒலிம்பிக்ஸ் என்பது ஜெயிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. இது கடந்த 15 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நடக்கும் இந்த போட்டியில் ஒரே ஜெயிலுக்குள் உள்ள கைதிகள் , ஏனைய ஜெயில் கைதிகள் மோதிக்கொள்ளும் படி ஏற்பாடு செய்யப்படுகிறது. வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து, கோக்கோ, கபடி, செஸ், கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகள் நடத்தப்படுவதன்மூலம் கைதிகள் மிகுந்த உற்சாகம் அடைவர். வரும் திகார் ஒலிம்பக் போட்டியில் கல்மாடி பங்கேற்பாரா என்ற கேள்விக்கு குப்தா பதில் அளிக்கையில் “ அவர் விளையாட்டு உலகில் ஒரு பெரிய மனிதர், திகார் விளையாட்டு என்பது ஒரு சிறிய நிகழ்வு ” என்றார்.

வரவிருக்கும் இந்த விளையாட்டு போட்டியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிஜெயிலில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜா, அவரது உதவியாளர் சந்தோலியா, எம்.பி,. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத் சோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோரும் இந்த போட்டியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயில் அதிகாரிகளுடன் கல்மாடி அரட்டை: இந்நிலையில் திகார் ஜெயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பிரிஜேஸ் குமார் கார்க் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இவர் செல்லும் போது கல்மாடி ஜெயில் சூப்பிரண்டுடன் அவரது அறையில் டீ , பிஸ்கட் எடுத்துக்கொண்டபடி ஹாயாக சிரித்து

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

சட்டரீதியான ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டியுடன் 24x7 டெக்னிக்கல் சப்போர்ட்ட்டுன் இலவசம்

நண்பர்களே உங்கள் கணினிக்கு ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டி வேண்டுமா அதுவும் டெக்னிக்கல் சப்போர்ட்டுடன் 24x7 Technical support.  Firewall, Antivirus, Malware போன்றவற்றை நீக்க வேண்டுமா.  அத்துடன் $500க்கான இலவச காப்பீடு வேண்டுமா. விண்டோஸ் எக்ஸ்பி விண்டோஸ் 7 போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும்  ஆதரிக்கும் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் வேண்டுமா?ஆம் என்றால் இந்தாருங்கள். 



கொமோடோ இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 Comodo Internet Security Pro 2011 இப்பொழுது ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 மென்பொருளை இலவசமாக வழங்குகின்றனர். 

இந்த மென்பொருளில் உள்ள சிறப்பம்சங்கள் கீழே ( உடனே அனைவருக்கும் அறிய வேண்டுமென்பதால் தமிழுக்கு மொழிபெயர்க்கவில்லை மன்னிக்கவும் தோழர்களே)
Firewall
Comodo's Firewall consistently ranks among the highest in industry tests.
Defense+ Technology
Proactive protection to automatically isolate threats from suspicious files so they can't cause harm actually preventing infections not just detecting them. Cloud based whitelisting of trusted publisher easily identifies a safe file and vendor.
Auto Sandbox Technology™
To reduce interruption to the user, unknown files can only run in a secure virtual environment where they can't damage Windows, its registry, or important user data.
Minimal Interruptions
Comodo Internet Security Pro 2011 relieves you of the responsibility of deciding whether to block or allow untrusted files – it makes the decisions for you. Game Mode suppresses operations that could interfere with a user’s gaming experience such as alerts, virus database updates or scheduled scans.
Spyware Scanning
Spyware Scanner detects and cleans malware infections in PC registry and disks.
Cloud based Antivirus
Cloud based antivirus scanning detects malicious file even if a user does not have up-to-date virus definitions.
Unlimited GeekBuddy Support
Expert support offering 24/7 live chat service to assist with everything from setup to virus removal and Windows issues at no additional charge.
இந்த மென்பொருளை இயக்க 128எம்பி ராம் இருந்தால் போதும்

இந்த மென்பொருள் குறித்த வீடியோ கீழே

http://downloads.comodo.com/comodovision/G1/g1_iss.flv.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் எத்தனை நாளைக்கு இலவசம் என்று தெரியாது. உடனே தரவிறக்கி கொள்ளுங்கள் நண்பர்களே

தொடர்ந்து நல்ல பதிவுகள் எழுத உங்கள் ஊக்கமே என்னை இன்னும் பதிவுகள் எழுத தூண்டும் நண்பர்களே தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்


புதிய ஹாலிவுட் திரைப்படங்களின் வரிசையில் இப்பொழுது சக்கை போடு போடும் படம் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்  இந்த படத்தின் விண்டோஸ் 7 க்கான புதிய தீம் உங்களுக்காக 20+ HD Wallpapers உடன் தருகிறார்கள்.  இதனுடைய சில படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே






 
 
 

 
 
பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் தீம் தரவிறக்க சுட்டி

 

போட்டோ ரெகவரி மென்பொருள் மற்றும் பைரேட்ஸ் தீம்கள் வால்பேப்பர்கள்

நண்பர்களே உங்களிடம் இருக்கும் கைப்பேசிகள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது.  சில நேரங்களில் அந்த கைப்பேசிகளில் இருக்கும் மெமரி கார்டுகளில் தான் அனைத்து புகைப்படங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

சில நேரங்களில் நாம் கூட தவறுதலாக புகைப்படங்களை டெலிட் செய்ய நேரிடும். மெமரி கார்டுகளில் பைல் சிஸ்டம் கரப்ட் ஆகலாம். அந்த மெமரி கார்டுகள் சில நேரம் பழுது ஏற்பட்டு நீங்கள் எடுத்த புகைப்படங்கள் எதுவும் இல்லை என்று காட்டலாம்.  அல்லது அந்த கார்டினை பார்மெட் செய்ய வேண்டும் என்ற பிழைச் சொல் வரலாம்.

உதாரணத்திற்கு கீழ்க்கண்டவாறு பிழைச்சொற்கள் காட்டும்
Memory Card Error
Card not initialized
Media is not formatted. Would you like to format it now?
Read error
Memory card locked
Memory Card Corrupted

இது போன்ற பிழைச்சொற்கள் வரும் பொழுது என்ன செய்வது.

எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பீர்கள்.   ஆனால் இது போன்ற சமயத்தில் சில ரெகவரி மென்பொருட்கள் மூலம் எளிதாக மீட்டலாம்.

அது போன்ற ஒரு மென்பொருள்தான் போட்டோ ரெகவரி மென்பொருள்

இந்த மென்பொருளின் துணை கொண்டு மேற்கண்ட பிழைச்சொற்கள் போன்ற செய்திகள் வரும் பொழுது கூட உங்களுடைய போட்டோக்களை சுலபமாக மீட்டு எடுக்க முடியும்.

இந்த மென்பொருள் மூலம் ஹார்ட் டிஸ்க், அனைத்து வகையான மெமரி கார்டுகளில் இருந்து பழுதுபட்ட புகைப்படங்களை மீட்டு எடுக்க முடியும்.

இந்த மென்பொருள் நோக்கியா, சோனி, நிகான், கேனான் போன்ற புகைப்பட நிறுவனங்களின் கேமராவாக இருந்தாலும்  மீட்டு எடுக்க முடியும்.

புகைப்படங்கள் மட்டுமல்லாமல் ஆடியோ வீடியோ கோப்புகளையும் மீட்டு தருகிறது.

புகைப்படத்தை மீட்டு எடுக்கும் முன் ப்ரிவீயு பார்த்த பிறகு மீட்டு எடுக்கும் வசதி உள்ளது.

போட்டோ ரெகவரி மென்பொருளை தரவிறக்கச் சுட்டி

ஈழ மாணவர்களின் துயரத்தைக் கேட்டு கண் கலங்கிய சூர்யா! (வீடியோ இணைப்பு)


இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு அகரம் அறக்கட்டளை உதவி புரிந்து வருகின்றது.


குறித்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஈழ மாணவர்கள் தமது கஷ்டங்களை சொல்லும் போது அகரம் அறக்கட்டளை உரிமையாளர்களான சூரியா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

வினோதமான நடனம் (வீடியோ இணைப்பு)


மக்களை மகிழ்விக்கும் நடனக்கலையை கற்றுக்கொள்ள பல கடினமான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடினமான பயிற்சிக்கு பின் உருவாகும் வித்தியாசமான நடனத்தை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

01 Jul 2011

உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு (வீடியோ இணைப்பு)


சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் பாவனைக்கென இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப் பாலமானது இதுவரைகாலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும்.

வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது.

தினசரி 30 ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென

சிறுகோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு


பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.



இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பாரிய அழிவுகளைச் சந்திக்கலாமெனவும் அதன் மூலம் அந்நாடுகள் மீளமுடியாமல் போகுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தகைய சிறு கோள்களின் தாக்குதலுக்குள்ளானால் அங்கு பாரிய உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்தாக்குதலின் போது நாடுகளின் பொதுக்கீழ் கட்டுமான வசதிகளும் பாரிய அழிவிற்கு உள்ளாகுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதுண்டால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றாக அழிவடையுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றுமாக அழிந்தாகவும் அவர்களால் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:

1. சீனா.
2. இந்தோனேசியா.
3. ஜப்பான்.
4. இந்தியா.
5. பிலிப்பைன்ஸ்.
6. இத்தாலி.
7. பிரித்தானியா.
8. பிரேசில்.
9. நைஜீரியா.
10. அமெரிக்கா.
30 Jun 2011

உலகின் மிக மோசாமான உருவம் கொண்ட பூனை (வீடியோ இணைப்பு)


அழகான மனிதர்கள், அழகான விலங்குகள் என்று பட்டம் பெற்றதை பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் பார்க்க போகும் இந்த பூனை உலகின் மிக மோசமான உருவம் உள்ள பூனை என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.





உலகின் மிக உயரமான மரம் (வீடியோ இணைப்பு)


 
84 மீற்றர் உயரமுள்ள இந்த மரம் சுமார் 2300 முதல் 2700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஆகும். இந்த உயரமான மரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரத்தில் அமைந்துள்ள தேசிய பூங்காவில் உள்ளது.









30 Jun 2011

அசர வைக்கும் அற்புதமான ஓவியம் (படங்கள் இணைப்பு)


நிஜமாகவே ஒரு குழந்தை துன்பப்படுவதைப் போல் மிகவும் தத்ரூபமாக வரையப்பட்ட அற்புதமான ஓவியங்கள் இதோ உங்களுக்காக.















01 Jul 2011