| சிறிலங்காவில் தமிழர்களுக்கு சமஉரிமையும், அதிகபட்ச சுயநிர்ணய உரிமையும் கொண்ட அரசியல் தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஸ் கரட், மத்திய குழு உறுப்பினர்கள் பிருந்தா கரட், வரதராஜன், தமிழ்நாடு மாநில பொதுச்செயலர் ராமகிருஸ்ணன், அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் பொதுச்செயலர் சுதா சுந்தர்ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா மற்றும் பெருமளவு பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தப் போராடத்தில் பங்கேற்க பெருமளவு இடதுசாரித் தொண்டர்கள் புதுடெல்லி வந்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரகாஸ் காரட், தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்றை வழங்குவதாக இந்திய மத்திய அரசுக்கு வழங்கிய வாக்குறுதியை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச காப்பாற்றத் தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாக தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசை இணங்க வைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருப்பதாகவும் அவர சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரசு தமிழ்மக்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்மக்கள் தமக்கு சமஉரிமை வழங்குமாறும், தமிழை அரசகருமமொழியாக அங்கீரிக்குமாறும் கோரிய போது தான் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசு போராளிகளுக்கு எதிராக தொடுத்த போர் தமிழ்மக்களுக்கு எதிரான போராகவே நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் மீதும், அதன் படைகள் மீதும் நடுநிலையான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிருந்தா கரட், சிறிலங்கா ஆயுதப்படைகளால் சிறிலங்காவில் தமிழ்ப் பெண்கள் மோசமான முறைகளில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். |
Friday, 9 September 2011
இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டார் சிறிலங்கா அதிபர் - பிரகாஸ் கரட் குற்றச்சாட்டு
கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல் - ஓடி ஒளிந்த சீனக்கப்பலை தேடி வந்தது?
![]() |
| இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் குதார்‘ கொழும்புத் துறைமுகத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 25 அதிகாரிகளும், 160 கடற்படையினரும் கொழும்பு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை வரை இந்தியப் போர்க்கப்பல் கொழும்பிலேயே தரித்து நிற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தமான் கடற்பகுதியில் வேவு பார்த்த சீன வேவுக் கப்பல் ஒன்றை, இந்தியக் கடற்படை துரத்திச் சென்ற போது கொழும்புத் துறைமுகத்தில் அடைக்கலம் தேடியதாக கடந்தவாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் வேவு பார்க்கும் சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட எந்தவொரு சீனக் கப்பலும் கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசிக்கவில்லை என்று சிறிலங்கா கடற்படை கூறியிருந்தது. இந்தநிலையிலேயே இந்திய கடற்படையின் போர்க்கப்பல் திடீரென கொழும்புக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
பிரிட்டனில் அதிக வருமானம் ஈட்டும் வீதியோர கமராக்கள் , ஒரு நாளில் £20,000 அறவீடு!
வீதி நடைமுறைகளை மீறுவோர்களை இனங்கான சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் இருந்து யாரும் அவ்வளவு சுலபமாக தப்ப முடியாது. ![]() அவ்வாறு மீறுபவர்களை கண்டறிந்து தண்டப்பணம் வசூலிக்கும் பணியை இவை செய்கின்றன. இதுபோன்றதொரு சம்பவம் பிரிட்டனில் நடைபெற்றது. பேருந்து மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்ட பாதையில் காரொன்று செல்லும் போது கமராவில் சிக்கிய படமே இது ... கடந்த ஒரு மாத காலத்தினுள் 10,000 வாகனங்களிடமிருந்து தண்டப்பணமாக £600,000. அறவிடப்பட்டுள்ளது |
அண்டார்டிக்காவில் பெருகிவரும் இராட்சத நண்டு இனம்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
| புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம். இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், அண்டார்டிகாவின் 'பார்மர் டீப்' எனப்படும் பகுதியில் 'கிங் கிரப்' எனப்படும் இராட்சத நண்டினம் பெருகி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள் வரை வளரக்கூடியன. இவ்வகை நண்டுகள் வெப்பமான நீர்ப் பகுதிகளிலேயே குறிப்பாக 1.4 பாகை செல்சியஸிற்கும் குறைவான வெப்பநிலைப் பகுதியிலேயே வாழும் .எனினும் அவை தற்போது அண்டார்டிக் பகுதியில் வாழ்ந்துவருகின்றமையானது அப்பகுதியில் வெப்பநிலை அதிகரித்துவருவதனைக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவை சுமார் 30 - 40 வரையான ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடல் வாழ் தாவரங்கள், ஜெலி மற்றும் நட்சத்திர மீன்கள் உட்பட கடல் வளங்களை உண்பதுடன் அவற்றை வேகமாக அழித்துவருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இவற்றின் பரம்பல் மேலும் அதிகரிப்பது அப்பகுதியில் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |
வயிற்றினுள் போதைப்பொருள் அடங்கிய பை வெடித்ததனால் உயிரிழந்த பெண்மணி: நியூசிலாந்தில் சம்பவம்
![]() |
| நியூசிலாந்து நாட்டிற்கு கொக்கெய்ன் போதைப்பொருளை சிறிய பைகளில் அடைத்து தனது வயிற்றினுள் வைத்து கடத்தி வந்த பெண்மணியொருவர் வயிற்றினுள் அப்பைகளில் ஒன்று வெடித்ததனால் உயிரிழந்துள்ளார். சோர்லிண்டா ஆரிட்சபால் வெகா என்ற அப்பெண்மணி கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவராவார். இவர் ஆர்ஜன்டீனாவின் புவனஸ் அயர்ஸிலிருந்து தனது குடும்பத்தாருடன் நியூசிலாந்து ஓக்லன்ட் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அடுத்த நாள் காலை இவர் அங்குள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் இவரது உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியபோது இவர் தனது வயிற்றினுள் போதைப்பொருள் அடைக்கப்பட்ட 26 சிறிய கெப்சுல்களை விழுங்கி கடத்தி வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒன்று வயிற்றினுள்ளே வெடித்துள்ளது. இதனாலேயே இவர் உயிரிழந்துள்ளமை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அச் சிறிய கெப்சுல் வடிவ பையொன்றின் நிறை 20 கிராம் எனவும் இவற்றின் மொத்த பெறுமதி 91,000 பவுண்ட்ஸ்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அந்நாட்டு குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் |
லிபியாவை விட்டு தப்பி ஓடவில்லை: அதிபர் கடாபி மறுப்பு
![]() |
| லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப்படையினர் தலைநகரம் திலிபோலியை கைப்பற்றினார்கள். இதையடுத்து கடாபி திரிபோலி நகரில் இருந்து தப்பி ஓடினார். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. கடாபியின் சொந்த ஊர் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அங்கு தான் கடாபி பதுங்கி இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பக்கத்து நாடான நைஜருக்கு லிபியாவில் இருந்து ஏராளமான வாகனங்கள் நள்ளிரவில் அணிவகுத்து சென்றன. இந்த வாகனம் ஒன்றில் கடாபியும் அவரது மகனும் நைஜருக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை நைஜர் நாட்டு வெளியுறவு மந்திரி முகமதுபசும் மறுத்தார். கடாபியோ அல்லது அவரது மகனோ எங்கள் நாட்டுக்குள் வரவில்லை. ஆனால் அதிகாரிகளும், அகதிகளும் வந்துள்ளனர் என்று கூறினார். நைஜர் வெளியுறவு மந்திரி தவறான தகவலை தெரிவிப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் கடாபியே நான் நைஜர் நாட்டுக்கு தப்பிச்செல்லவில்லை என்று கூறியிருக்கிறார். சிரியா நாட்டு டெலிவிஷன் நிலையத்துக்கு போனில் தொடர்பு கொண்ட கடாபி நான் இப்போதும் லிபியாவில் தான் இருக்கிறேன். எந்த நாட்டுக்கும் தப்பி ஓடும் எண்ணம் இல்லை என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது, நான் தற்போது பின்வாங்கி இருப்பது போர் தந்திரமாகும். நாங்கள் புரட்சிப்படை மட்டுமல்லாது, அமெரிக்க கூட்டுப் படையையும் தோற்கடிப்போம். லிபியாவை யாரும் கைப்பற்ற முடியாது என்றார். |
தங்கம் உருவான கதை
![]() |
| தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி. இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். |
விஜய் அழைப்பு.
![]() |
| சீமான், விஜய், இணைந்து படம் பண்ணும் தகவல்கள் பல மாதங்கள் முன்பே கசிந்தது. படத்தின் பெயர் பகலவன் என்றனர். ஆனால் கவுதம் மேனன் திடீரென குறுக்கிட்டு விஜய் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு செய்தார். சீமான் படம் அப்படியே நின்றது. நீண்ட இடைவெளிக்கு பின் சீமானை விஜய் திடீரென அழைத்து மூன்று மணி நேரம் பேசி உள்ளார். இதன் மூலம் அவர்கள் இணைவது உறுதி படுத்தப்பட்டு உள்ளது. |
நோர்வே தாக்குதலுக்கு புலிகள் தொடர்பாம் சிறிலங்கா தூதுவர் புதிய கண்டுபிடிப்பு!
![]() |
| அண்மையில் நோர்வேயில் தாக்குதல் நடத்திய நபருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் எனவே ஐரோப்பாவில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் இதுதொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு நோர்வேயில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரொட்னி பெரேரா நோர்வே வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சிறிலங்கா தூதுவரின் இந்த கோரிக்கையை நோர்வே தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல் பாணியிலேயே நோர்வே தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாகவும் எனவே விடுதலைப்புலிகளுக்கு இத்தாக்குதலுடன் தொடர்பு இருக்கலாம் என தான் நம்புவதாகவும் சிறிலங்கா தூதுவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தூதுவரின் இந்த கோரிக்கை நகைப்புக்கிடமானது என்றும் தமிழ் மக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் மற்றுமொரு தீய எண்ணம் என்றும் ஐரோப்பாவில் உள்ள தமிழர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. |
Subscribe to:
Comments (Atom)







