Thursday, 7 July 2011

தயாநிதி மாறன் வீட்டைச் சுற்றி ரகசிய கேபிள்கள்

முறைகேடான வகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டைச் சுற்றி ஆப்டிகல் பைபர் கேபிள்கள் போடப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி வந்த ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தயாநிதி மாறன் வீட்டிலிருந்து ரகசிய கேபிள்கள் செல்வதாக டைம்ஸ் நௌ டிவியில் வெளியான செய்தியைப் பார்த்தேன். சென்னைக்கு திரும்பியவுடன் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மாறன், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தனது வீட்டில் பி.எஸ்.என்.எல் இணைப்புகளை பெருமளவில் முறைகேடாக பயன்படுத்தி வந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு ரகசிய எக்ஸ்சேஞ்ச் ஆக அது பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நூற்றுக்கணக்கான இணைப்புகளை வாங்கி அதை தனது சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டிவி சானல்களுக்கு முறைகேடாக பயன்படுத்தினார் தயாநிதி மாறன் என்பது குற்றச்சாட்டாகும். இதுகுறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகம் வரை ரகசிய கேபிள்கள் புதைக்கப்பட்டது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தயாநிதி மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகம் வரை கிட்டத்தட்ட6.4 கிமீ அளவுக்கு இந்த கேபிள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதை தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவியின் சேனல்களுக்காக தயாநிதி மாறன் பயன்படுத்தியுள்ளார் என்று டைம்ஸ் நெளவ் செய்தி கூறுகிறது.

தயாநிதி மாறனின் வீட்டிலிருந்து சன் டி்வியின் அலுவலகம் வரை இந்த கேபிள்கள் செல்வது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. கேபிள் பதிக்கும் பணிக்கான அனுமதியை கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் சென்னை மாநகராட்சி சன் டிவிக்குக் கொடுத்துள்ளது. தனது வீட்டில் ரகசிய எக்ஸ்சேஞ்ச் செயல்படவில்லை என்று தயாநிதி மாறன் கூறி வருகிறார். ஆனால், இந்த கேபிள் கட்டமைப்பு ஏன் என்பதை அவர் இதுவரை விளக்கவில்லை என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.


தயாநிதி மாறனை நீக்க நேற்றே ஓ.கே. சொன்ன கருணாநிதி

!

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறனை நீக்க நேற்றே திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம். இதையடுத்தே இன்று பதவி விலகியுள்ளார் தயாநிதி மாறன்.

தயாநிதி மாறன் விவகாரத்தில் திமுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை என்பதை கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளன.

தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம் சாட்டி கோர்ட்டில் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது தயாநிதி மாறனை பதவி விலக கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது. 

அதன் பின்னர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பிரதமரும், சோனியாவும் பேசியுள்ளனர். அப்போது கருணாநிதியின் சம்மதம் மற்றும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு கருணாநிதி, தயாநிதி மாறனை நீக்குவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியதாக தெரிகிறது. 

அதன் பின்னர் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சதிதம்பரம் ஆகியோருடன் விவாதித்தார் பிரதமர். அடுத்து, அட்வகேட் ஜெனரல் வாஹன்வதியுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். 

அதன் பின்னரே தயாநிதி மாறனிடம் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தும் முடிவுக்கு பிரதமர் வந்துள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது பாதியிலேயே கிளம்பிய தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்தபோது பதவி விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து தனது வீட்டுக்குத் திரும்பிய மாறன் அங்கு ராஜினாமா கடிதத்தை டைப் செய்து எடுத்துக் கொண்டு மீண்டும் பிரதமரைச் சந்தித்து தனது விலகல் கடிதத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.

மொத்தத்தில், ராசா, கனிமொழி விவகாரத்தில் நடந்து கொ்ண்டதைப் போல் இல்லாமல், காங்கிரஸுக்கு பெரும் சங்கடத்தைக் கொடுக்காமல் தயாநிதி மாறன் விவகாரத்தில் திமுக தலைமை படு துரிதமாகநடந்து கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது.


தனுஷ், சூர்யா, யார் ஒஸ்தி? எடை போட்ட இயக்குனர்!

 யார் ஒஸ்தி என்பதில் எப்பவுமே ரசிகர்களுக்கு இடையில் போட்டி இருக்கும். அபிப்ராயங்கள் இருக்கும். ஆனால் இரு நடிகர்களை வைத்து படம் இயக்கிய ஒரு இயக்குனர், அவர்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை சொல்லியிருப்பது ஒரு நடிகருக்கு உற்சாகத்தையும் மற்றொரு நடிகருக்கு ஆத்திரத்தையும் கிளப்பியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு வேங்கை படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. ஒரு கட்டத்தில் இது தனுஷ் படத்தின் பிரஸ்மீட்டா, சூர்யா படத்தின் பிரஸ்மீட்டா என்ற நிருபர்கள் குழம்புகிற அளவுக்கு சூர்யாவை புகழ ஆரம்பித்தார் ஹரி. சூர்யா அப்படி இப்படி என்று புகழ்ந்தவர், சண்டை காட்சிகளில் டூப்பே போட மாட்டார் அவர் என்றார். எவ்வளவு ரிஸ்க் ஆன காட்சியாக இருந்தாலும் அவர் துணிந்து செய்வார் என்று கூற, நிருபர்களுக்கு கொண்டாட்டம். ஏனென்றால் அடுத்த கேள்வியை கேட்டு சிண்டு முடிவது சுலபமாச்சே?

வேங்கை பட ஹீரோ தனுஷ் எப்படி என்றார்கள். அவரா? நிறைய காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால் டூப்பை பயன்படுத்தினோம் என்றார் ஹரி. இந்த நேரத்தில் நாம் சொல்லியே ஆக வேண்டிய ஒரு விஷயம். ஹரியின் அடுத்த படத்தின் ஹீரோ சூர்யாவேதான்!

தயாநிதி மாறனை 'கை' கழுவிய திமுக?

 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் லேட்டஸ்டாக சிக்கி, ராஜினாமா செய்துள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குறித்து திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்த சத்தமும் இல்லை. இந்த விவகாரத்திலிருந்து விலகியிருக்க திமுக தலைவர் கருணாநிதி விரும்புவதாகத் தெரிகிறது.

எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் உள்ளது திமுக வட்டாரம். உண்மையைச் சொல்வதாக இருந்தால் தயாநிதி மாறன் சிக்கியிருப்பது திமுக முன்னணியினருக்கு உள்ளூர மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கிறதாம்.

காரணம், இன்று கனிமொழி, ராசா உள்ளிட்டோர் சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்கும், திமுகவின் பெயர் கெட்டு நாறிப் போய்க் கிடப்பதற்கும், சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்தித்து முடங்கிப் போய்க் கிடப்பதற்கும் தயாநிதிதான் மூல காரணம் என்பது திமுக முன்னணித் தலைவர்களின் ஒருமித்த கருத்தாகும். இதை திமுக தலைவர் கருணாநிதியிடமே அக்கட்சித் தலைவர்கள் பலர் நேரிலேயே சொல்லியுள்ளனர்.

இதை கருணாநிதியும் உணர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் சமீப காலமாக, குறிப்பாக கனிமொழி கைதான பின்னர், தயாநிதியை அவர் ஓரம் கட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சிபிஐ வாயால் தயாநிதி மாறனின் குட்டு அம்பலமாகியுள்ளது. இதனால் அவர் ராஜினாமாவும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

விரைவில் 2ஜி விவகாரத்தில் அவரும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் விசாரிக்கப்படுவார்கள் என்ற தகவலும் உலா வர ஆரம்பித்துள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் திமுக தலைமையிடம் எந்தவித சலனத்தையும் காணவில்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்து தங்களை அணுகினால் சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று திமுக தலைமை கூறலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. அதை விட முக்கியம், தயாநிதி மாறனை இப்போது யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்து விட்டது.

சிபிஐயே தயாநிதி மாறன் தவறு செய்துள்ளார் என்று கூறி விட்டதால், தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர தற்போது பிரதமர் அனுமதி தந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிரதமர் இந்த விஷயத்தில் மேலும் மேலும் கால தாமதம் செய்ய முடியாத நிலை. ஏற்கனவே ராசா விவகாரத்தால் கடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கி செயலிழந்து போனது நினைவிருக்கலாம். தயாநிதியை வைத்து அப்படி ஒரு நிலை மீண்டும் வருவதை அரசு விரும்பாது என்று தெரிகிறது.

ஏற்கனவே, தயாநிதி மாறனுக்கு வந்த பிரச்சினையை அவரே சமாளித்துக் கொள்வார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.


நயன்‌தா‌ரா‌வி‌ன்‌ கடை‌சி‌நா‌ள்‌ ஷு‌ட்‌டி‌ங் -ஒரு நெ‌கி‌ழ்‌ச்‌சி‌யா‌ன வீடியோ



 

Post a Comment



புலிகள் உங்களை கொலைசெய்யலாம்: இலங்கை ஜெயலலிதாவுடன் பேசவுள்ளது !

இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலிதா தன்னைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என அதிர்வு இணையம் அறிகிறது. இதேவேளை பிரசாத் காரியவசம் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலிருந்து, இந்தியா திரும்பியதாகவும் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்திய இலங்கை உறவு தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.

இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக இந்தியப் பிரதமர் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது இலங்கைத் தூதுவர் அவரைச் சென்று சந்தித்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் என்ன உறவு இருக்கிறது என்று விளங்கப்படுத்தவில்லை. ஆனால் செல்வி ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு ஏன் விளங்கப்படுத்த முனைகிறது ? கருணாநிதி போலிவேஷம் ஏற்கனவே இலங்கைக்குத் தெரிந்த விடையம் ஆனால் செல்வி ஜெயலலிதா இலங்கையோடு முரன்பட்டால் அது ஆபத்து என இலங்கை அரசு நன்கு அறிந்துவைத்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் செல்வி ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கள் தம்மைப் பாதிக்காது என்றும் தாம் மாநில அரசுகளோடு பேசுவது இல்லை மத்திய அரசோடு மட்டுமே பேசுவோம் என இறுமாப்பாக பதில் சொன்ன இலங்கை, இன்று ஏன் செல்வி ஜெயலலிதாவோடு பேசவேண்டும். திரும்பவும் புலிகள் உங்களை கொல்ல நினைக்கிறார்கள் என்று ஒரு புரளியைக் கிளப்பிவிடவா ? அதனூடாக செல்வி ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் ஆதரவு நிலையை மாற்ற இலங்கை அரசு தற்போது பகிரங்க பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. செல்வி ஜெயலலிதாவை மாற்ற முடியும் என இலங்கை ஒரு பகல்கனவு காண்கிறது.

இருப்பினும் கடந்த காலங்களில் இலங்கை செல்வி ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளை எவ்வாறு உதாசீனம் செய்தது என்பதனை அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கவேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

மைக்கேல் பெர்னாண்டஸ் மற்றும் செரில் ஹோல்டன் என்ற தம்பதிகள் இருவரும் பள்ளிப் பருவத்தில் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதில் விசேட அம்சம் என்னவெனில் மைக்கலுக்கு வயது 13, செரிலுக்கு வயது 15 ஆகும். இவர்கள் இருவரும் 13 மற்றும் 15 வயதில் திருமண வாழ்க்யைத் ஆரம்பித்துள்ளனர்.

நாம் இருவரும் இணைந்து வாழ முடியும் என்பதை அனைவருக்கும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். தற்போது 22 வயதாகும் மைக்கலுக்கு 9 வயதில் மகனுண்டு. இந்தப் பையன் மட்டுமல்ல இவர்களுக்கு குழந்தை.

மேலும் இரண்டு பையன்கள் உள்ளார்கள். மைக்கல் தெரிவிக்கையில், “ எனக்கு 13 வயதாக இருக்கும்போது அயல்வீட்டில் இருந்த செரில் 15 வயதில் கர்ப்பமைடைந்தார்” என்கிறார். முதல் குழந்தை லியாம் பிறந்த பின் பெற்றோர்களான இவர்களுக்கு 14 மற்றும் அவரது மனைவிக்கு 16 வயதாகும்.

தற்போது இவர்களுக்கு மேலும் இரண்டு பையன்கள். பிரியானுக்கு 3 வயது, ஆர்சிக்கு 11 மாதங்கள் ஆகும்.

ஆனாலும் இந்த இளம் வயது தந்தை தனது கல்வியை தொடர்ந்து கொண்டே குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தொழில்களையும் செய்கிறார்.



கடன்பட்டு வாழ்வதைவிட தனது சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றுவதில் பெருமையடைகிறார்.

இளம் தம்பதிகள் வாடகைக்கு வீடு எடுத்து தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். “பெருமளவான இளசுகள் தமது இளம் வயதில் பெற்றோர்களாக விரும்புவதில்லை.

ஆனால் நான் ஒரு அதிஷ்டசாலி. மைக்கல் ஒரு போதும் குடிப்பதற்காக தெருவில் சுற்றித்திரிவதில்லை. அவர் ஒரு நல்ல தந்தையாகவே இருக்க விரும்புகிறார் என்று செரில் தெரிவித்துள்ளார்.

எத்தியோபியா பெண்களின் நாகரிகம் (படங்கள் இணைப்பு)

எத்தியோபியாவில் உள்ள பழங்குடி மக்களின் வினோதமான வழக்கம். இந்த பழங்குடி பெண்கள் அவர்களின் கீழ் உதட்டில் ஒரு பெரிய சுற்று வட்டத்தகட்டை வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதற்கு வாயில் கீழ் உதட்டு பகுதியில் உள்ள பற்களையும் எடுத்துள்ளனர். இந்த பழங்குடி இனத்தை சேர்ந்த அனைத்து பெண்களும் இப்படி அணியவேண்டியது கட்டாயமாம்.









எத்தியோபியா பெண்களின் நாகரிகம் (படங்கள் இணைப்பு)

 
எத்தியோபியாவில் உள்ள பழங்குடி மக்களின் வினோதமான வழக்கம். இந்த பழங்குடி பெண்கள் அவர்களின் கீழ் உதட்டில் ஒரு பெரிய சுற்று வட்டத்தகட்டை வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதற்கு வாயில் கீழ் உதட்டு பகுதியில் உள்ள பற்களையும் எடுத்துள்ளனர். இந்த பழங்குடி இனத்தை சேர்ந்த அனைத்து பெண்களும் இப்படி அணியவேண்டியது கட்டாயமாம்.









வேடிக்கையான சண்டைகள் (வீடியோ இணைப்பு)


 
கோபம் வந்தால் மனிதர்கள் இடம், பொருள், அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். அப்படி அனைத்தையும் மறந்து இவர்கள் போடும் சண்டையைத் தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.







ATM சென்டரில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் (வீடியோ இணைப்பு)


ATM சென்டரில் பணம் எடுக்கப்போவதை அறிந்து பின் தொடர்ந்து வரும் கொள்ளையர்கள் உள்ள வந்து மிரட்டி பணத்தை பறித்து செல்வதை நீங்களே பாருங்கள்.



சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் போதை போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யபட்டார்


சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யபட்டார். திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சுகுமாறன் (வயது 40).

குடிப்பழக்கம் உடையவர். நேற்று அளவுக்கு அதிகமாக மது பானம் அருந்திவிட்டு போதையில் ரோட்டோரத்தில் மயங்கி கிடந்தார்.

அப்போது எழுப்ப சென்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உலகநாதனின் சட்டையை பிடித்து கொண்டு முகத்தில் கும்மாங்குத்து விட்டார். அடி தாங்க முடியாத அவர், சுகுமாறனின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் விரட்டி, விரட்டி உலகநாதனை, சுகுமாறன் தாக்கினார்.

இவர்கள் சண்டையை தனிப்பிரிவு ஏட்டு ஜோசப் தடுத்து ஸ்டேஷனுக்கு அழைத்துவந்தார். மேலும் பொது இடத்தில் ஏட்டு, எஸ்.ஐ., மோதல் சம்பவம் குறித்து டி.ஐ.ஜி., சஞ்சய்மாத்தூர், சந்திரசேகரன் எஸ்.பி., ஆகியோர் விசாரணை நடத்தினர். போதை ஏட்டுவிடம் அடிவாங்கிய எஸ்.ஐ., உலகநாதன், தனிப்பிரிவு ஏட்டு ஜோசப் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தனர்.

இந்நிலையில், சுகுமாறன் மனைவி ராஜேஸ்வரி(36) தினமும் குடித்து விட்டு வந்து தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துவதாக திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஏட்டு சுகுமாறன் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் ஜே.எம்.-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதைதொடர்ந்து குடிபோதையில் சப்- இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த ஏட்டு சுகுமாறனை சஸ்பெண்ட் செய்து சந்திரசேகரன் எஸ்.பி., உத்தரவிட்டார்.