Wednesday, 4 January 2012

ரஜினி படத்தை இயக்குகிறேனா? - பி வாசு விளக்கம்


சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து நான் படம் இயக்குவதாக வருகின்ற செய்திகள் தனக்கு மிகுந்த சங்கடத்தை உள்ளாக்கியிருப்பதாகவும், அப்படி ஒரு திட்டம் தன்னிடம் இல்லை என்றும் இயக்குநர் பி வாசு கூறியுள்ளார்.

கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் இளைய மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தை முடித்ததும், அடுத்து ராணாவில் நடிப்பார் ரஜினி என்று கூறப்பட்ட நிலையில், திடீர் திடீரென ரஜினி இந்தப் படத்தில் நடிக்கிறார், இன்னாருடன் இணைகிறார் என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

முதலில் ரஜினியும் - ஷங்கரும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். இது முதல்வனின் இரண்டாம் பாகம். இந்தப் படம் முடிந்ததும் ராணா என்று கூறப்பட்டது.

அடுத்த சில தினங்களில், சிவாஜி பிலிம்ஸுக்காக பி வாசு இயக்கத்தில் ஒரு குறுகிய கால படத்தில் ரஜினி நடிப்பார் என்று செய்தி வந்தது. கடந்த வாரம் முழுக்க இந்த செய்திதான் மீடியாவில் அதிக முக்கியம் பெற்றுவருகிறது.

இந்த நிலையில், ரஜினியுடன் இப்போதைக்கு தாம் இணைந்து படம் எதுவும் பண்ணவில்லை என்று இயக்குநர் பி வாசு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், "இது முழுக்க முழுக்க யூகத்தில் வெளியாகியுள்ள செய்திதான். நான் சமீபத்தில் ரஜினியிடம் படம் பண்ணுவது குறித்து பேசவே இல்லை. எனது அடுத்த கன்னடப் படம் 'ஆ ரக்ஷகா'வில் பிஸியாக இருக்கிறேன்," என்றார்.

தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!!


உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறது சுற்றியிருப்பவர்கள்.

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்!

3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது.

தனுஷ் ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

"ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமாஅல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா" என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ரஜினி. எப்பேர்பட்ட மனிதர் அவர்திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை. ஐஸ்வர்யா தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினைவிருக்கலாம்.

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த 3 படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனாராம் தனுஷ். இதைக் கேள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டாராம் ரஜினி. தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தனுஷ். கொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பையில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப்புடன் கூறுகின்றனர்.

யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்டலில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந்ததும் செய்தியாக ஏற்கெனவே வந்ததுதான். அப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த செய்தி உண்மைதானா?அல்லது '3' படத்தின் பப்ளிசிட்டியின் ஒரு அங்கமா என்றும் இன்னொரு தரப்பினர் பேசிக் கொள்கிறார்கள்.

தனுஷுடன் காதலா? - ஸ்ருதி ஹாஸன் விளக்கம்


தனுஷுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக வந்துள்ள செய்திகள் அடிப்படையில்லாதவை என்று கமல் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிவரும் '3' என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாஸன்.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தனுஷும் ஸ்ருதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும், இருவரும் பார்ட்டி, நிகழ்ச்சிகள் என ஒன்றாக சுற்றுவதாகவும், இது ரஜினி குடும்பத்தில் பெரும் புகைச்சலை உண்டாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தனுஷ் தொடர்பாக பல வதந்திகள் உள்ளதால், இந்த ஸ்ருதிஹாஸன் விவகாரத்தை வெறும் வதந்தியாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. ஸ்ருதிஹாஸனும் இப்போது மூன்றாவது முறையாக கிசுகிசுக்கப்படுகிறார்.

இந்த நிலையில், இப்போது தனுஷுடன் இணைத்து வெளியாகும் செய்திகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"இது கொஞ்சமும் அடிப்படையில்லாத செய்தி. புத்தாண்டு அன்று நான் என் அம்மா, தங்கையுடன் கோவாவில் பார்ட்டி கொண்டாடினேன். என்னுடன் நடித்தவர்களிலேயே ரொம்ப கன்வீனியன்டாக இருந்தவர் தனுஷ். அதனால் அவருடன் அதிக நட்புண்டு. ஆனால் எனக்கு நல்ல பிரெண்டான ஐஸ்வர்யாவின் கணவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தொழில் ரீதியாகத்தான் எனக்கும் தனுஷுக்கும் நட்பு உள்ளது. வேறு எதுவும் இல்லை," என்கிறார் ஸ்ருதி.

தனுஷ் தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

சைலன்டாக டைவர்ஸ் செய்த சரண்! சோனா பிரச்சனை காரணமா


பின்னணி பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சரண், அண்மையில் நடிகை சோனாவின் அதிரடி வாக்குமூலங்களால் அடிக்கடி பேசப்பட்டார். விமர்சனங்கள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் என சிக்கித் தவித்த சரண், தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சூறாவளியை மட்டும் கமுக்கமாகவே வைத்துவிட்டார்.

சரண் அவரது மனைவியை விவாகரத்து செய்து விட்டாராம். அதுவும் விவாகரத்து கிடைத்து ஒரு மாதம் முடிந்து விட்டதாம். சோனா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த கையோடு மனைவிக்கும் பைபை சொல்லி விட்டு அமெரிக்கா கிளம்பிய சரண் இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்புகிறாராம். அவர் இந்தியா திரும்பியதும் மறுமணம் செய்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அவரது பாடகர், நடிகர் தந்தை எஸ்.பி. பாலசுப்ரமணியம். பெரிய இடத்து மணப்பெண்ணை தேடி வருகின்றனராம்.!

இந்த விவாகரத்துக்கு சோனா பிரச்சனை காரணமாக இருக்குமோ என்ற கிசுகிசும் நிலவுகிறது.

விதார்த்துக்கு காதல் தூது விடும் மைனாக்கள்...!


மைனா படம் மூலம் பிரபலமான நடிகர் விதார்த்துக்கு, தினமும் இணையதளம் மூலமாக நிறைய மைனாக்கள் காதல் தூது விடுகின்றனராம். இதுபற்றி அவரிடம் கேட்டால், தினமும் நிறைய காதல் கடிதம் வருகிறது. அனால் அவையெல்லாத்தையும் என் கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். மற்றபடி காதல் செய்வதற்கு எல்லாம் நேரம் இல்லை. என்னுடைய காதல் எல்லாம் நடிப்பின் மீது மட்டும் தான். நடிப்புக்கு மட்டும்தான் தினமும் காதல் தீனி போட்டு வருகிறேன். இதைத்தவிர என்னுடைய கேர்ள் பிரண்ட் யாருன்னு யாராவது கேட்டால், சினிமா தான் சொல்வேன் என்கிறார். கூடவே காதல் கடிதம் வரும்போதெல்லாம் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்று உணர்வேன் மற்றபடி எதுவும் இல்லை என்கிறார்.

முல்லைப் பெரியாறு: கேரளாவின் அத்தனை புகார்கலுக்கும் ஆப்பு வைத்த ஐவர்குழு


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போதைய 136 அடி என்பதிலேயே நீடிக்கும். 120 அடியாக குறைக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு திட்டவட்டமாக கூறி விட்டது. மேலும், நிலநடுக்கத்தால் அணைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றம் அது கூறி விட்டது. இதனால் கேரளாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் வாதத்திற்கும் பெரும் பலம் கிடைத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் சமீபத்தில் நேரடியாக ஆய்வு நடத்திய தொழில்நுட்ப உறுப்பினர்கள் சி.டி.தத்தே, டி.கே.மேத்தா ஆகியோர் அடங்கிய குழு அளித்த ஆய்வறிக்கை நேற்று ஐவர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக, கேரள வக்கீல்களின் வாதங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதன் முடிவில் கேரள அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் அறிவித்தார்.

அப்போது நீதிபதி கூறுகையில், தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் சி.டி.தத்தே மற்றும் டி.கே. மேத்தா ஆகியோர் ஆராய்ந்து அளித்த அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், இடுக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அணைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

மேலும், முல்லைப் பெரியாறு, வைகை, சிறுதோணி உள்ளிட்ட அணைகள் சமீபத்திய நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டனவா என்று பார்த்த போது, எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. மேலும், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. இக்கருத்தை ஐவர் குழுவும் ஏற்கிறது.

தத்தேயும், மேத்தாவும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர் என்று கூறி, அவர்களை நீக்க வேண்டுமென்று கேரளா சார்பில் கூறிய புகாரில், உண்மையில்லை. எனவே இரு உறுப்பினர்களையும் குழுவிலிருந்து நீக்க முடியாது. கேரளாவின் புகார் நிராகரிக்கப்படுகிறது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போதைய 136 அடி என்பதிலேயே நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அணையின் நீர்மட்டத்தை குறைப்பதா, வேண்டாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பாக கேரள எம்.பிக்கள் பிரதமருக்கு அளித்த மனு விவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையில் உடைப்போ, விரிசலோ இல்லை என்று கேரள அரசின் வக்கீல்களே தெளிவாக கூறியுள்ளனர். எனவே இதையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் ஐவர் குழு தனது அறிக்கையை தாக்கல்செய்ய கால அவகாசம் கேட்கப் போவதில்லை. பிப்ரவரி 28ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை குழு தாக்கல் செய்யும். அடுத்த கூட்டம் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெறும். அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தமிழகத்திற்குப் பெரும் சாதகம்

ஐவர் குழுவின் இந்த முடிவு தமிழகத்திற்கு பெரும் சாதகமானதாக கருதப்படுகிறது. கேரளா கூறிய அனைத்துப் புகார்களும், குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்பது அம்பலமாகி விட்டதாலும், அதன் குற்றச்சாட்டுக்கள், கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டதாலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழகத்திற்குச் சாதகமாகவே தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.


பேய் வீடு இருட்டறை நிகழ்ச்சியில் பெண்களிடம் செக்ஸ் குறும்பு


சென்னை அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தில் பேய் வீடு இருட்டறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அமைந்தகரையில்  ஸ்கைவாக்' வணிக வளாகம் உள்ளது. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை கவரும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இங்குள்ள 3 வது மாடியில் நடத்தப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகளை கவரும் பேய் வீடு நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.


இருட்டு அறையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்கு அனுமதி கட்டணமாக ரூ.50 வசூலிக்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு 2 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களது கணவன்மார்கள் வெளியில் நின்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் இருவரிடமும், 2 வாலிபர்கள்  செக்ஸ்' குறும்பில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண்கள் இருவரும் சத்தம் போட்டபடி வெளியில் ஓடிவந்தனர். உடனே அந்த வாலிபர்கள் மீது தாக்குதல் நடந்துவிட்டது. பின்னர் இதுபற்றி அமைந்தகரை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.


இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகார் கூறப்பட்ட வாலிபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.


அவர்களில் ஒருவர் பெயர் சுரேந்திரன் (வயது 25). இன்னொருவர் ஹாரீஸ் (30). சுரேந்திரன் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவரும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்கள்.


இவர்களை மன்னித்துவிடும்படி, புகார் கொடுத்த பெண்மணிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் போலீசார்கோர்ட்டில் வேண்டுமானால் சமாதானமாக போங்கள், நாங்கள் எதுவும் செய்ய முடியாது' என்று கூறிவிட்டனர்.


முப்பொழுதும் உன் கற்பனைகள் - டிரெய்லர்

 

முப்பொழுதும் உன் கற்பனைகள். இப்படத்தில் மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். எல்ரெட் குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை விண்ணைத் தாண்டி வருவாயா, கோ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட்  நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.




ஜெ. அதிரடி :பன்னீர்செல்வம் உட்பட 14 தமிழக அமைச்சர்களுக்கு செக்


முதல்வர் ஜெயலலிதா அதிரடியாய் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

தமிழக அமைச்சர்கள் அனைவரின்  பாதுகாப்பு அதிகாரிகளையும் (பி. எஸ். ஓ)  அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்று தலைமைச்செயலக வட்டாரம் தெரிவிக்கிறது.

நிதி அமைச்சர் ஓ.பி. பன்னீர்செல்வம், கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட 14 அமைச்சர்களின் பி.எஸ். ஓக்களை மாற்றம் செய்துள்ளார்.  இந்த பி.எஸ்.ஓக்கள் அனைவரும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதுகாப்பு அதிகாரிகளை சசிகலா நியமித்தார் என்றும்அதனால் அவர்களை மாற்றம் செய்துள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

நான்கு ஹீரோயின்களுடன் ஜோடி போடும் கார்த்தி...!


சுராஜ் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்குடன் நான்கு ஹீ‌ரோயின்கள் நடிக்க உள்ளனர். சகுனி படத்தை தொடர்ந்து டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தபடத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில் அனுஷ்காவுடன் சேர்ந்து மேக்னா, சனுஷா மற்றும் நிகிதா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா தான் ஜோடியாம். அதேசமயம் மற்ற 3 ஹீரோயின்களின் ரோலும் ரொம்பவே முக்கியத்துவமும், தனித்துவம் வாய்ந்தது என்கிறார் படத்தின் டைரக்டர் சுராஜ்.

இதனிடையே ஆரம்பத்தில் நிகிதாவுக்கு பதில் லட்சுமிராயைத்தான் முதலில் தேர்வு செய்திருந்தார் சுராஜ். ஆனால் லட்சுமிராயின் கால்ஷீட் ஒத்துவராததால் நிகிதாவை தேர்வு செய்துவிட்டார்.

என் வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடிக்கிறேன்- கமலஹாசன்


கமல் 'விஸ்வரூபம்' படத்தில் நடிக்கிறார். அவரே இப்படத்தை இயக்குகிறார். ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. கதாநாயகியாக சோனாக்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இப்படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது. திடீரென்று அவர் நீக்கப்பட்டு கமலஹாசனே டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி கமல் அளித்த பேட்டி வருமாறு:-

விஸ்வரூபம் படம் தமிழ், இந்தியில் நேரடி படமாக தயாராகிறது. இப்படத்தில் நடிக்க நானும் சோனாக்சி சின்காவும் தேதி ஒதுக்கி இருந்தோம். ஆனால் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி துவக்கப்படாமல் எங்கள் கால்ஷீட் வீணானது. எனக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. அதனால்தான் பிறந்தநாளை கூட கொண்டாடுவது இல்லை. எனவேதான் நானே படத்தை இயக்குகிறேன்.

இந்தியா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. தசாவதாரம், ஹேராம் போன்ற எனது படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டன. ஆனால் இந்தி வசன உச்சரிப்புகள் அவற்றில் சரியாக பொருந்தவில்லை. எனவேதான் 'விஸ்வரூபம்' படத்தை இரு மொழிகளிலும் நேரடியாக எடுக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது. இன்னும் நடிப்பில் சலிப்பு வரவில்லையா? என்று கேட்கிறார்கள்.

பணம், புகழுக்காக நடிக்க வந்து இருந்தால் 25 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி இருப்பேன். கேமிரா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது. எனவேதான் தொடர்ந்து சினிமாவில் இருக்கிறேன். என் வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன்.

இவ்வாறு கமல் கூறினார்

2011-ல் பிரகாசித்த 'டாப் 10' நடிகர்கள்


தமிழ் திரையுலகில் 2011-ல் விக்ரம், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி உள்ளிட்டோரின் ஆதிக்கம் பலமாக இருந்தது. புதுமுக நடிகர்கள் படங்கள் கால் ஊன்றவில்லை. ரஜினிக்கும் கமலுக்கும் கடந்த வருடம் படங்கள் ரிலீசாகவில்லை. ஆனாலும் இருவர் மார்க்கெட்டும் உச்ச நிலையலேயே உள்ளது.

ரஜினிக்கு 'ராணா' படப்பிடிப்பில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். 'ராணா' படம் கைவிடப்பட்டு உள்ளது. சென்ற வருட இறுதியில் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. இவ்வருடம் இறுதி யில் அப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். கமலின் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பு வெளிநாடு களில் நடந்து வருகிறது. ரூ.120 கோடி மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது.

விக்ரமுக்கு தெய்வத்திருமகள், ராஜபாட்டை என இரு படங்கள் 2011-ல் வெளியாகின. தெய்வத் திருமகள் படத்தில் மனநிலை குன்றியவராக நடித்தார். இந்த வருடம் கரிகாலன், தாண்டவம் என இரு படங்கள் விக்ரம் நடிப்பில் வர உள்ளது.

அஜீத்துக்கு மங்காத்தா படம் கடந்த வருடம் வந்தது. அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. தற்போது அவர் நடித்து வரும் 'பில்லா 2' படம் இவ்வருடம் ரிலீசாகிறது.

விஜய் தனது மார்க்கெட்டை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறார். அவர் நடிப்பில் காவலன், வேலாயுதம் என இரு படங்கள் கடந்த வருடம் வந்தன. இரண்டுமே வசூல் ஈட்டியது. ரசிகர்களையும் கவர்ந்தன. அவரது நண்பன் படம் பொங்கலுக்கு வருகிறது.

துப்பாக்கி, யோஹன் என மேலும் இரண்டு படங்கள் இந்த ஆண்டு வருகின்றன.
சூர்யா 7 ஆம் அறிவு படம் மூலமும் கார்த்தி சிறுத்தை படம் மூலமும் சென்ற வருடம் முன்னணி வரிசையில் இருந்தனர். கார்த்திக்கு இவ்வருடம் சகுனி மற்றும் சூராஜ் இயக்கத்தில் ஒரு படம் என இரு படங்கள் வருகின்றன.

தனுசுக்கு 2011 மறக்க முடியாத வருடம் ஆகும். 'ஆடுகளம்' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. அவர் எழுதி பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. மயக்கம் என்ன படமும் சென்ற வருடம் வந்தது.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கும் '3' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. ஜீவா 'கோ' படம் ஹிட்டால் பேசப்பட்டார். 'ரௌத்திரம்', வந்தான் வென்றான் என மேலும் இரு படங்களும் அவர் நடிப்பில் வந்தன. ஜெய்க்கு எங்கேயும் எப்போதும் சிறந்த படமாக அமைந்தது.

விஷாலுக்கு அவன் இவன், வெடி, ஜெயம்ரவிக்கு எங்கேயும் காதல், பரத்துக்கு வானம், யுவன் யுவதி, சிம்புக்கு வானம், ஓஸ்தி, கரணுக்கு தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்கள் சென்ற வருடம் வந்தன.

தனுஷின் கொலைவெறிக்கு எதிராக ஒரு கொலைவெறி

இந்த பதிவு 'விழியே பேசு' வலைத்தளத்தின் மதிப்பிற்குரிய வாசகர் அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பணம் 




2012-ல் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் !


2011ம் ஆண்டு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளிவரவில்லை. ஆனால் 2012ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தயாரிப்புகள் வெளிவர இருக்கின்றன. அவ்வாறு வெளிவர இருக்கும் சில படங்கள் பற்றிய தகவல் துளிகள் :

ரஜினி : கோச்சடையான் 3D
கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் படம். போன ஆண்டு 'ராணா' படம் தொடங்கப்பட்ட போது ஏற்பட்ட உடல்நிலை கோளாறால் அப்படம் நிறுத்தப்ப்பட்டது.

ஆகையால் 'கோச்சடையான்' படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.  MOTION CAPTURE TECHNOLOGY மூலம் ரஜினியை நடிக்க வைக்க இருக்கிறார்கள். 3Dல் இப்படம் வெளிவர இருக்கிறது.

கமல் : விஸ்வரூபம்
கமல் இயக்கி நடித்து வரும் படம். செல்வராகவன் இயக்ககமல் நடிப்பதாக துவங்கப்பட்ட படம். செல்வராகவனால் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போக, தற்போது கமலே இயக்குனர் பொறுப்பேற்று இப்படத்தினை இயக்கி வருகிறார்.

கமல் இப்படத்தில் ஒரு தீவிரவாதியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல் ரசிகர்கள் அவரை வித்தியாசமான வேடத்தில் பார்க்க இருக்கிறார்கள்.

அஜீத் : பில்லா- 2
'மங்காத்தா' படத்தின் வரவேற்பிற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் 'பில்லா 2'. பில்லா படத்தின் SEQUEL-யாக இல்லாமல் PREQUEL- ஆக பில்லா 2 வெளிவர இருக்கிறது.

இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் அஜீத். உடம்பு இளைத்து, சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து இருக்கிறார்.

2011-ல் மங்காத்தா வசூலைத் 2012-ல் 'பில்லா 2' அமைய வேண்டும் என்ற உறுதியுடன் உழைத்து வருகிறார்கள்.







விஜய் :நண்பன் & துப்பாக்கி
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் 'நண்பன்'. 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக், ஷங்கர் இயக்கம் , விஜய் நடிப்பு, ஹாரிஸ் இசை என பல விஷயங்கள் இப்படத்தில் இணைந்து இருக்கின்றன.  2012ல் விஜய் ரசிகர்களுக்கு முதல் விருந்தாக ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்தினை பார்த்துவிட்டு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

'ஏழாம் அறிவு'க்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி' யில் இப்போது நடித்து வருகிறார் விஜய் . முதன் முறையாக விஜய் இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா : மாற்றான்

'அயன்' படக்குழு மீண்டும் இணைந்திருக்கும் படம் 'மாற்றான்'. சூர்யா இப்படத்தில் ஒர் உடல் இரு தலை உடையவராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.  கே.வி.ஆனந்த சூர்யா இப்படத்தில் ஐந்து வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து இருப்பதாக கூறியுள்ளார்.











சிம்பு : போடா போடி

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாராகி வரும் படம் 'போடா போடி'. விக்னேஷ் சிவா இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் வரலெட்சுமி சரத்குமார். இப்படம் இசையை மையமாக வைத்து வெளிவர இருக்கும் காமெடி படமாம்.



தனுஷ் : 3
2011ல் WHY THIS KOLAVERI என்ற பாடலின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தனுஷ் நடித்து இருக்கும் படம். இப்படத்தின் பாடல்களால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடி இருக்கிறது. ரஜினி மகள் இயக்கம், கமல் மகள் ஜோடி, ரஜினியின் மருமகன் நாயகன் என ஒரு சேர இணைந்து வெளிவரும் படம்.







வசந்த பாலன் : அரவான்
'அங்காடி தெரு' படத்தினை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'அரவான்'. ஆதி, பசுபதி, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.

2011ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வென்ற 'காவல் கோட்டம்' நாவலில் வரும் ஒரு சிறு பகுதியை, திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லரே படத்திற்கு எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஆர்யா & மாதவன் : வேட்டை

லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் இணைந்து இருக்கும் படம் 'வேட்டை'. ரன் படத்தினை தொடர்ந்து மாதவனுடன் இணைந்து இருக்கிறார் லிங்குசாமி.

லிங்குசாமி இயக்கம், ஆர்யா, மாதவன் இணைந்திருக்கும் படம், சமீரா ரெட்டி, அமலா பால் என இரண்டு நாயகிகள், இப்படி கலகல, பளபள கூட்டணியில் வருவதால் 'வேட்டை'க்கு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஜனவரி 14ம் தேதி வெளிவர இருக்கிறது வேட்டை.

கெளதம் மேனன் : நீதானே என் பொன்வசந்தம்

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை தொடர்ந்து இப்படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது இதுவரை தெரியாமலேயே இருந்து வருகிறது. காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி இப்படத்தை  வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.