![]() |
| நடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் வற்புறுத்தப் படுகிறது. ஆனால் எஸ்.பி.பி. சரண் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில் சோனா மேல் குற்றச்சாட்டுக்கள் கூறியுள்ளதால் சமரசத்தில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார். சினிமாவில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு பணக்கஷ்டத்தில் உள்ளார். கடனும் இருக்கிறது. என் குடும்ப பின்னணியை மனதில் வைத்து என்னை கவர்ச்சியால் மயக்கி பணம் பறித்து கடன் பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டார். அவரை நான் எச்சரித்ததால் என் மேல் பொய் புகார் அளித் துள்ளார். என்றெல்லாம் ஜாமீன் மனுவில் சரண் குறிப்பிட்டு உள்ளார். இதனால் சோனா ஆத்திர மாகியுள்ளார். பகிரங்க மன்னிப்பு கேட்காமல் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என்றார். இது குறித்து சோனா கூறியதாவது:- மது விருந்தில் பலர் முன்னிலையில் எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்த எல்லோருக்குமே அது தெரியும். அவர்கள் சாட்சிகள் என்பதால் நடந்த உண்மைகளை வெளியிட வேண்டும். சரணுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தால் அவர்கள் மீது வழக்கு தொடருவேன். எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்காமல் எந்த சமரசத்துக்கும் நான் சம்மதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். சோனா தனது புகாரில் சரண் தகாத முறையில் நடந்ததை தனது டிரைவர் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் சரண் தரப்பில் சோனா டிரைவரின் சாட்சியம் செல்லாது என்று கூறப்படுகிறது. விருந்தில் பங்கேற் வர்கள் சரணுக்கு ஆதரவாக சாட்சியம் அளிப்பார்கள் என்று தெரிகிறது. இது குறித்து சோனா கூறும்போது, சாட்சியங்கள் தவிர என்னிடம் மேலும் பல ஆதாரங்கள் உள்ளன என்றார். |
Thursday, 22 September 2011
பகிரங்க மன்னிப்பு கேட்டால சரண் மீதான வழக்கை வாபஸ் பெறத் தயார் -நடிகை சோனா
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment