Saturday, 6 August 2011
வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்
வளைபந்து விளையாட்டுக்கான இந்திய அணியின் கேப்டன்; உலகக் கோப்பை போட்டியில், நாட்டுக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தவர்; இன்று தோல் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.வாணியம்பாடி அருகில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பத்மா. இவர்களது மகன் நாராயணசூர்யா, 33. இவருக்கு பள்ளிப் பருவத்தில் இருந்து வளைபந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். கடந்த 1990ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். எட்டாம் வகுப்பு வரை படித்த சூர்யா குடும்ப வறுமை காரணமாக, தனது கல்வியை கடந்த 93ம் ஆண்டில் நிறுத்திவிட்டார்.
கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி கேப்டன் என்ற பொறுப்புடன் விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றார். தற்போதும் இந்திய அணி கேப்டனாக திகழ்கிறார். உலகக்கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றதற்காக, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில், இவருக்கு எந்த அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. வறுமையில் வாடும் சூர்யா, தனது குடும்பத்தை நடத்த, வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் 140 ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்து வருகிறார்.
அவர் கூறியதாவது: குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக நான் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தினக்கூலிக்கு வேலை பார்த்து வருகிறேன். சிறு வயது முதல் வளைபந்து விளையாடுவதில், எனக்கு ஆர்வம் இருந்தது. கடந்த 93ம் ஆண்டு முதல் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளேன். இரண்டு முறை உலகளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளேன். தற்போது, இந்திய அணியின் கேப்டனாகவும் உள்ளேன். இந்த விளையாட்டிற்கு கல்விதுறையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தாலும், கிரிக்கெட், டென்னிஸ் போல மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு நாராயணசூர்யா கூறினார்.
அங்கீகாரம் கிடைக்குமா? : வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் விளையாட, பலரிடம் கையேந்தி ஸ்பான்சர் வாங்கி விளையாட வேண்டிய நிலையில்தான் தற்போதும் இவர் உள்ளார். பல பதக்கங்களை இவர் பெற்றாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மெடல்களும், பதக்கங்களும், சான்றிதழ்களுமே கிடைத்துள்ளன.
நாராயணசூர்யா கூறியதாவது: உலக கோப்பை போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளேன். அதற்கு பத்து லட்சம் ரூபாய் அரசு சார்பில் அளிப்பதாக கூறினர். வளைபந்து சங்கத்தின் மூலம், அதற்காக விண்ணப்பித்துள்ளேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. இந்த வளைபந்து விளையாட்டில் உலகளவில் பெருமை தேடிக்கொடுத்தாலும் இன்றளவில் நான் வறுமையில் வாடி வருகிறேன். எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு எனக்கும், இந்த விளையாட்டிற்கும் உரிய அங்கீகாரம் தரவேண்டும். மேலும், எனக்கு அரசு பணி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு நாராயணசூர்யா கூறுகிறார்.
நாராயணசூர்யாவின் மனைவி ரதிபிரியாவும் வளைபந்து வீராங்கனைதான். அவரும் தேசிய அளவிலான, தெற்காசிய போட்டிகளில் விளையாடி வருகிறார். எனவே, வளை பந்து விளையாட்டு இந்திய அணியின் கவுரவம் காப்பாற்றப்பட வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய்க் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பே சூரிய குடும்பத்தில் நான்காவது கிரகமாக கருதப்படும் செவ்வாய்க் கிரகத்தில், தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர்.இருந்த போதிலும், அது உறைந்து இருப்பதாகவே இதுவரை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், செயற்கைக்கோள் மூலம் மார்ட்டியன் எரிமலை பகுதியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரத்தை தற்போது அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நிலத்துக்கடியில் இருந்த நீரோட்டம் இருப்பதற்கான படிமங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பனிகட்டிகளாக உறைந்து கிடக்கும் படுகைகள், பின்னர் வெப்ப காலத்தில் உருகி தண்ணீராக ஒடுவதையும் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தற்போதுள்ள இந்த படுகைகள் உருகி தண்ணீராக மாறினால், அது செவ்வாய் கிரகம் முழுவதையும் ஆக்கிரமித்து கடல்போன்று இருக்குமென்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இத்தகவல்கள் விஞ்ஞான ஆராயச்சி குறித்த இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ரெட் புல்(Red Bull) குடிப்பவரா நீங்கள்.? எச்சரிக்கை..!
ரெட்புல், க்லவுட்9 போன்ற (ஆற்றல்) எனர்ஜி குளிர் பானங்களில் சேர்க்கப்படும் கெஃபைன் மூலப்பொருள், அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுவதாக, இந்நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் சுற்றுப்புற மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுப்புற சுகாதார மையம் 16 வகையான இதுபோன்ற பானங்களைக் கடைகளில் வாங்கி சோதனை கூடங்களில் வைத்து சோதனை செய்ததில் ஒவ்வொரு பானங்களின் லேபில்களிலும் குறிபிட்டுள்ள…, அதாவது அரசு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் கூடுதலாக கெஃபைன் என்ற மூலப்பொருளைச் சேர்த்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“ஒருவர் பருகும் ரெட்புல் எனர்ஜி பானத்தில், ஒரு கப் காஃபி சாப்பிடுவதற்குச் சமமான அளவிலேயே, கெஃபைன் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது” என்று, ரெட்புல் நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் “இதே வகையில்தான் சுமார் 160 நாடுகளில் உள்ள எங்களின் நிறுவனங்களில் இப்பானம் தயாரிக்கப்படுகிறது” எனவும் ரெட்புல் நிறுவனம் கூறுகிறது. இதன் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், “இது போன்ற பானங்கள் பருகுபவர்கள், அவர்களுடைய மனது உஷார் நிலையில் இருப்பதற்கும், அவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவதற்கும் விளயாட்டுப்போட்டிகளில் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் உதவுகிறது. ஆனால் அதிகமான் காஃபின் பருகுவதால் கடுமையான உடல் நல் பாதிப்பு ஏற்படலாம்” எனவும் கூறுகின்றனர்.
உணவு கலப்பட தடுப்பு சட்டம் 1954 திருத்தம் 37-A (2) ன் படி…, இது போன்ற குளிர் பானங்களில், 145(ppm) அளவுக்கு மேல் கெஃபைன் மூலப்பொருள் சேர்க்கக்கூடாது என, வரைமுறை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை எதிர்த்து ரெட்புல் நிறுவனம், “தாங்கள் தயாரிக்கும் பானத்தில் சுமார் 320(ppm) அளவில் கெஃபைன் சேர்க்க அனுமதிக்க வேண்டும்” எனக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளது. இதிலிருந்து குளிர்பான நிறுவனங்கள் இலாபக்கண்ணோட்டத்தில் மட்டுமே இயங்குன்றன எனவும் அவற்றுக்கு மக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது.
அவரவர் ஆரோக்கியத்தை அவரவர்தான் பேண வேண்டுமென்பது சரிதான். ஆனால், தங்கள் நாட்டு மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் மக்களின் நலனில் அக்கறையுள்ள அரசுகள் அனுமதிக்காமலிருப்பதே சரியான மக்கள் அரசின் தர்மமாகும். இதனைக் கருத்தில்கொண்டு, இத்தகைய எனர்ஜி பான நிறுவனங்களை முழுமையாக கண்காணிப்பு வட்டத்தினுள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்!

சனல் 4 ஆவணக் காணொளிக்கு இணையான வைகோவின் காணொளி !
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களை இனப் படுகொலை செய்த சிங்கள இராஜபக்சே அரசின் கொடூர முகத்தை, இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டு வரும் வகையில், Geneociee of Eelam Tamils : hearts Bleed என்ற ஆங்கிலக் குறுந்தகடை, வைகோ தயாரித்து உள்ளார். ஆகஸ்ட் 3 ஆம் நாள் புதன்கிழமை இரவு 7 மணி அளவில், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களது இல்ல வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், இந்தக் குறுந்தட்டு வெளியிடப்பட்டது. திரைகள் அமைத்து ஒளிபரப்பப்பட்டது. தலைநகர் தில்லியின் நூற்றுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களின் பிரதிநிதிகள் வருகை தந்து இருந்தனர். ஒரு மணி நேரம் முழுமையாக அமர்ந்து இருந்து, ஈழத்தமிழர் படுகொலைக் காணொளி காட்சிகளைப் பார்த்தனர். லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு உள்ள காணொளிக் காட்சிகளும் இதில் இடம் பெற்று உள்ளன.�இந்தக் குறுந்தட்டு, ஈழத்தமிழர்களின் துன்ப வரலாறைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதயத்தைப் பிளக்கின்ற சோகத்தை இந்தக் குறுந்தட்டு வெளிப்படுத்துகின்றது. இதனைத் தொகுத்து, ஆங்கிலத்தில் உரை ஆக்கம் செய்து, குறுந்தட்டு நெடுகிலும் தன்னுடைய குரலில் வைகோ பதிவு செய்து இருக்கின்ற விதம், பார்க்கின்றவர்களின் உள்ளத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது� என அனைவரும் கருத்துத் தெரிவித்தனர். இந்த நிகழ்சியில், அ.கணேசமூர்த்தி எம்.பி., ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் ஆகியோர் பங்கு ஏற்றனர். இன்று, 4.8.2011 வியாழக்கிழமை, வைகோவும், நாடாளுமன்ற உறுப்பினர் கணேமூர்த்தியும், பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்கா, ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌடாலா, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சௌத்ரி ஆகியோரை நேரில் சந்தித்து, இந்தக் குறுந்தட்டை வழங்கினர்.
இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் குறுந்தட்டு வழங்கப்படுகின்றது. டெல்லியில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் இந்தக் குறுந்தட்டு, ஈழத்தமிழர்களைக் காக்க முன்வருமாறு வேண்டுகோள் கடிதத்துடன் அனுப்பப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது. ஈழத்தமிழர் இனக்கொலை இதயத்தில் இரத்தம், ஐ.நா. மூவர் குழு அறிக்கை விளக்கம் என ஏற்கனவே வைகோ தமிழில் வெளியிட்ட குறுந்தட்டுகள், இலட்சக்கணக்கில் தமிழகத்தில் மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டு உள்ளது. அந்தக் குறுந்தகடுகளை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொடுத்தால், உலக நாடுகளில் பரப்புரை செய்திட ஏதுவாக இருக்கும் என்று, புலம் பெயர்ந்த தமிழர்கள் வைகோவிடம் கேட்டுக் கொண்டு வந்தனர். அதன்படி, வைகோ இந்தக் குறுந்தட்டை ஆங்கிலத்தில் தயாரித்து உள்ளார்.
சரியாக ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்தக் குறுந்தட்டு, டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களது இல்லத்திலும், சென்னையில் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்திலும் கிடைக்கும்.
தாயகம் தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
04.08.2011
அமெரிக்க படை அதிகாரிகள் கிளிநொச்சி விஜயம் !
அமெரிக்கப் படை அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளது. கடந்த முதலாம் நாள் கிளிநொச்சி சென்ற அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் தலைமையிலான அமெரிக்கப் படை அதிகாரிகள் குழு, கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவையும் சந்தித்துப் பேசியுள்ளது. அத்துடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் இவர்கள் நேரில் ஆராய்ந்துள்ளனர். லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் கடந்த மாதமே கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் அறையில் அணு உலை அமைத்த வாலிபர்
சுவீடனில் உள்ள ஏஞ்சல் ஹோல்ம் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட் ஹேண்டில் (31). இவருக்கு அணு விஞ்ஞானம் மீது அலாதிபிரியம். எனவே, அது குறித்த பல புத்தங்களை படித்து தனது அறிவை பெருக்கி கொண்டார். அதை தொடர்ந்து வீட்டில் தானே அணுஉலையை அமைத்து அணுசக்தியை உருவாக்க விரும்பினார்.அதற்காக, தனது வீட்டு சமையல் அறையில் அணு உலையை அமைத்தார். அமெரிக்காவில் இருந்து கதிர்வீச்சை வெளிப்படுத்தும் யுரேனியம் போன்றவற்றை வாங்கினார். அதற்காக ரூ.2 1/2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவு செய்தார். அவற்றை தனது சமையல் அறையில் உள்ள சிறிய �ஸ்டவ்� அடுப்பின் மூலம் வறுத்து கதிர்வீச்சை வெளிப்படுத்துவது எப்படி என்பது குறித்து தெரியவில்லை. அது குறித்து, சுவீடன் அணு அறிவியல் கழகத்திடம் கருத்து கேட்டார். அதன் பின்னர்தான் இவர் வீட்டில் அணு உலை அமைத்து இருப்பது தெரிய வந்தது.
அனுமதி இன்றி அணு உலை அமைப்பது சட்டத்தை மீறிய செயலாகும் எனவே, இது குறித்து சுவீடன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ரிச்சர்ட் ஹேன்டிலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
NO PARKING இல் வண்டியை நிறுத்தினால் இதுதான் கதி (காணொளி)

லிதுனியா நாட்டில் வண்டி நிறுத்த அனுமதி இல்லாத இடத்தில், நிறுத்தினால் இதுதான் கதிபோலும்.... சட்டவிரோதமான இடத்தில் வண்டியை நிறுத்தக்கூடாது... என்கின்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த நிகழ்வாம்... அந்த Tanker வண்டியில் இருப்பது அந்த நகரத்தின் மேயராம்......
போர்க் குற்றவாளிகளை வெளியே அனுப்புங்கள்! இந்திய மக்களவையில் அமளி!- ஜூனியர் விகடன்
உடனே, ம.தி.மு.க. உறுப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை வெளியே அனுப்புங்கள் என அதிரும்படி முழக்கமிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி உறுப்பினர் லிங்கம் ஆவேசத்துடன் முழக்கமிட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நடராஜனை அடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் சேர்ந்துகொள்ள... களேபரம்! மீரா குமாரின் முகத்தில் கோபம் கொப்பளித்ததும், இ.கம்யூ. கட்சி மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா, லிங்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றார். லிங்கமோ கட்டுப்படவில்லை. இவற்றை எல்லாம் தி.மு.க-வின் அமைச்சர் நெப்போலியன் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
அந்தக் கட்சியின் மற்ற எம்.பி-க்களோ, நில மோசடிக் கைதுகளைக் கண்டித்து தமிழகத்தில் அறப் போர் செய்துகொண்டு இருந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு காய்ச்சல் என்பதால், அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை!
இதே தூதுக் குழு, மாநிலங்கள் அவைக்குச் சென்றபோது, தி.மு.க. தரப்பில் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கப்சிப். அன்று மாலை, இந்திய-இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாநிலங்கள் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி விருந்து அளித்தார். அங்கு வந்த தி.மு.க-வின் திருச்சி சிவா, தூதுக் குழு வருகையை எதிர்த்துப் பேசிவிட்டு, உடனடியாக வெளியேறினார்.
என்ன நடந்தது என்று சம்பந்தப்பட்ட எம்.பி-க்களிடம் கேட்டோம்.
கணேசமூர்த்தி எம்.பி.:
ராஜபக்ஷவின் அண்ணனான இலங்கை நாடாளுமன்றத் தலைவர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் தூதுக் குழு வந்ததே, உள்ளே போன பிறகுதான் எங்களுக்குத் தெரியும். கேட்டதும் திகைப்படைந்து, உடனே சுதாரித்துக்கொண்டு எங்களின் உணர்வை வெளிப்படுத்தினோம்.
திருச்சி சிவா எம்.பி.:
வந்தவர்களுக்கு நம்முடைய எதிர்ப்பின் அடிப்படைக் காரணத்தை, நேருக்கு நேராக உணர்த்த விரும்பினேன். அதன்படி, அப்பாவித் தமிழ் மக்களைத் திட்டமிட்டுக் கொன்று குவித்த இலங்கை அரசின் தரப்பில் இருந்து வந்திருக்கும் தூதுக் குழுவை வரவேற்க, நாங்கள் விரும்பவில்லை.
60 வருடங்களுக்கு முன், இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும், 35 லட்சம் தமிழர்களும் இருந்தனர். இன்று, சிங்களவர் 1.5 கோடி பேர், தமிழரின் மக்கள் தொகையோ பலமடங்கு குறைந்துவிட்டது. தொடர்ந்து, அங்கு தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவதுதான் மக்கள் தொகை குறைந்து போனதற்குக் காரணம்! என்று அழுத்தம் திருத்தமாக கருத்தைப் பதிவுசெய்துவிட்டு, வெளிநடப்புச் செய்தேன்.
நடராஜன் எம்.பி.:
இலங்கை போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தந்தது. தமிழக சட்டப்பேரவை தீர்மானம் போட்டது. இந்த நிலையில், இந்தக் குழுவை நமது நாடாளுமன்றத்தில் அனுமதிப்பது ஆட்சேபனைக்கு உரியது. மக்களின் உணர்வை வெளிப்படுத்தவே அவையில் எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.
லிங்கம் எம்.பி.:
அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழித்து இனப் படுகொலைக் குற்றத்துக்காக இலங்கை அரசு விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, நோட்டீஸ் கொடுத்து இருக்கிறோம். இந்தச் சூழலில், அந்த தூதுக் குழுவை வரவேற்க முடியுமா, அல்லது அதை அனுமதிக்கத்தான் முடியுமா?
இந்த விவகாரம் தொடர்பாக, ஒத்திவைப்புத் தீர்மானமும், கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொண்டுவர ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் தரப்பில் அனுமதி கேட்டார்கள். மீரா குமாரோ, தமிழக உறுப்பினர்களின் எதிர்ப்புக்காக, இலங்கைக் குழுவிடம் மன்னிப்புக் கேட்டார்.
கூடவே, அ.தி.மு.க-வின் குழுத் தலைவர் தம்பித்துரையை அழைத்து, கண்டித்து இருக்கிறார். அவர்களை வெளியேற்றுங்கள் என யார் சொன்னது? அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்றும் உஷ்ணமாகப் பேசி இருக்கிறார்.
நாங்கள் செய்தது இன நலன் சார்ந்தது என்று தம்பித்துரை பதில் அளித்துள்ளார். அனைத்து உறுப்பினர்களும் ஒரே மாதிரி நடந்துகொண்டது உண்மையில் பாராட்டத்தக்கதுதான்!
தமிழ் எம்.பி. வரலாமா?
இலங்கையின் தூதுக் குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதனும் இடம்பெற்று உள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தாய்த் தமிழக எம்.பி-க்களே கட்சி கடந்து இனப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்தபோது, ஈழத் தமிழர் ஒருவரே குழுவில் இடம்பெறுவது, அப்பட்டமான இனத் துரோகம் என கொந்தளிக்கிறார்கள் தமிழின உணர்வாளர்கள்!
ஜூனியர் விகடன்

புலிகளை ஒழித்துவிட்டோம்! இனித் தீர்வு தேவையில்லை! கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவிப்பு
எம்மிடம் அரசமைப்பு ஒன்று இருக்கிறது. அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அரசால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும். ஏனெனில் வடக்கு கிழக்கில் இப்போது நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் தொலைக்காட்சியே இந்தியாவில் சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. இதனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் மட்டுமன்றி மற்றைய மாநிலங்களிலும் கவனத்தை ஈர்த்தது.
சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப் படத்தை இரு தடவைகள் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து ஹெட்லைன்ஸ் ருடே கோத்தபாயவின் பேட்டியையும் இப்போது ஒளிபரப்பியுள்ளது.
அந்தப் பேட்டியில் தமிழர்களுடனான நல்லிணக்க முயற்சியில், புலம்பெயர் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளலாமே என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே கோத்தபாய, தீர்வு என்று இனியும் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த சில முக்கிய விவரங்கள் வருமாறு:
அனைத்துலக விசாரணை
இறுதிப் போரின் போது நடந்தவைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்று வேண்டும் என்று கேட்பது எமது ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது.
இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சிறந்த நீதித்துறை எம்மிடம் இருக்கிறது. மிகப் பெரிய பயங்கரவாதிகளை நாம் தோற்கடித்திருக்கிறோம். ஆனால் இதனைச் செய்ய முடியாமல் பல நாடுகள் திண்டாடி வருகின்றன. அப்படியிருக்கையில் அனைத்துலக விசாரணையைக் கோருபவர்கள் எம்மை நம்ப வேண்டும்.
ஒரு இறைமையுள்ள நாட்டுக்குள் எப்படி அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுக்க முடியும்? அது நியாயமற்றது. அப்படி விசாரணை கோருபவர்களை சர்வதேச சமூகம் என்று குறிப்பிடுவது தவறான விபரிப்பு. சர்வதேச சமூகத்தில் உள்ள ஒரு சில நாடுகள் இதனைச் செய்யக் கூடும்.
ஆனால் மீதி மொத்த உலகமும் எங்களை ஆதரிக்கிறது. ரஷ்யாவில் ஆரம்பித்து சீனா வரைக்கும், நிச்சயமாக இந்தியாவும் எங்களை ஆதரிக்கிறது, பாகிஸ்தான், அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் என்று அனைத்தும் எங்களை ஆதரிக்கின்றன. இவைதான் சர்வதேச சமூகம். ஒரு சிலர் மட்டும் தங்களை சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்ள முடியாது. அத்தகைய ஒரு அனைத்துலக விசாரணையை இந்தியா தனது நாட்டுக்குள் அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எந்த ஒரு இறைமையுள்ள நாடும் அப்படி அனுமதிக்காது.
போரில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த எண்ணிக்கை மிகச் சிறியது என்று என்னால் சொல்ல முடியும். பெரும் படுகொலை என்று அதனை வகைப்படுத்த முடியாது. என்னுடைய வாதம் எல்லாம், ஏன் எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் ஏன் ஒரு இறைமையுள்ள அரசைச் சந்தேகிக்க வேண்டும் என்பதுதான்.
தமிழகத் தீர்மானம்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது அவரது அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக.
உண்மையில் ஈழத் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருந்தால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் வந்து மீன்பிடிப்பதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அதனால் பாதிக்கப்படுபவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்களே.
அப்படிப்பட்ட விடயங்கள் வரும்போது அவர்கள் மௌனமாகிவிடுவார்கள். அப்போது இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு உண்மையான நிலைவரத்தைப் புரிய வைக்க முயன்றிருக்கிறோம். அதற்காகவே அவருடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மீண்டும் போராட்டம்
அரசியல் தீர்வு தாமதிக்கப்படுவதால் மீண்டும் ஒரு ஆயுத வன்முறை தோன்றக்கூடுமா?
அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. ஏனெனில் இந்தியாவின் போதனையுடன் 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது அது பற்றிப் புலிகளுடன் பேசப்பட்டது. அந்தத் திருத்தச் சட்ட மூலம் வரையப்பட்ட போது இலங்கை அரசுக்கு அதில் எந்தப் பங்கும் இருக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு என்று வந்தபோது நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்கத் தயாராக இருக்கவில்லை.
இப்போதும் அதுதான் எனது பொறுப்பு. நானும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்கப் போவதில்லை. பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு தளர்வையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஏனெனில் அதனை நாம் செய்ய முடியாது. நாங்கள் தொடர்ந்தும் எமது பாதுகாப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்திக் கொண்டே செல்வோம்.
அங்கே சண்டையிடுவதற்கு ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் இல்லை என்ற போதும், புலனாய்வுப் பணிகள் கண்காணிப்பு நடவடிக்கைகள், ஆயுதங்கள் இலங்கைக்குள் எடுத்து வரப்படுவதைத் தடுப்பதற்கான பணிகள், கரையோரப் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் இருப்பதால் பாதுகாப்பை நாம் ஒருபோதும் தளர்த்த மாட்டோம்.
அரசியல் தீர்வு
இரு இனங்களும் இணைந்து வாழ்வதற்கு தற்போது இருக்கும் அரசமைப்பே போதுமானது. அதில் எந்தப் பிரச்சினைகளும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கலந்துரையாடல்கள் மூலம் இதைத்தான் தீர்வாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
அதாவது இப்போது புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாயிற்று. அதனால் இப்போதிருப்பதைவிட மேலான ஒன்றைச் செய்வதற்கான தேவை இருப்பதாக நான் கருதவில்லை. இந்த அரசமைப்பு அதிகாரங்களை அடிமட்டம் வரைக்கும் வழங்குகிறது.
இப்போதுகூட உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி இருக்கிறோம். விரைவில் மாகாண சபைத் தேர்தலையும் ஜனாதிபதி நடத்த இருக்கிறார்.
எனவே அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் நாங்கள் போதியளவுக்கு ஏற்கனவே வழங்கி விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். அதைவிட மேலதிகமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
உதயன் மீதான தாக்குதல்
உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமை ஒரு சின்ன விடயம். இலங்கையில் நாளாந்தம் நடக்கும் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. இது சாதாரணமானது. மற்றைய நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன.
ஆனால் இராணுவச் வாடிக்கு மிக அருகில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதே?
இப்படி இலகுவாகச் சொல்லிவிட முடியும். அப்படியானால் நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கிளிநொச்சியில் ஒரு பொலிஸ்காரர் கொல்லப்பட்டார். அவரது உடல் சோதனைச் சாவடியில் இருந்து 25 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. மக்கள் என்ன நினைத்தார்கள் யாரோ அவரை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று. ஆனால், உண்மை என்னவென்றால் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் ஒன்று அவரை மோதித் தள்ளிவிட்டுப் போய்விட்டது என்பதுதான்.
ஆனால் காயங்களைப் பார்க்கும் போது அவர் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றனவே?
அப்படி நடந்திருக்கலாம். அதுபற்றி நிச்சயம் பொலிஸ் விசாரிக்கும். அதற்காக ஏன் அரசையும் பாதுகாப்புப் படையினரையும் எல்லோரும் கண்டிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் இப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால் அதில் என்னவாவது அர்த்தம் இருந்திருக்கக்கூடும். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் இப்படிப்பட்ட சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடும்.
கேணல் ரமேஷ்
விடுதலைப்புலிகளின் தளபதி கேணல் ரமேஷ் ஒருபோதும் இராணுவத்தின் காவலில் இருக்கவில்லை. அவர் ஒரு பயங்கரவாதி. அது சனல்4 தயாரித்த ஆவணப்படத்தில் காட்டப்படவில்லை. நான் அவரைப் பற்றிப் பேச விருப்பப்படவில்லை. அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.
ஆனாலும் அவர்... எதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அவர் ஒரு கொலைகாரர் மட்டுமே.
ஆனால் உங்களுடைய அரசமைப்புப்படியே நீதியை நாடும் உரிமை அவருக்கு இருந்திருக்கிறதே?
அப்படி அவர் அங்கே இருந்திருந்தால் சரணடைந்த எல்லோருக்கும் வழங்கிய சந்தர்ப்பத்தை அவருக்கும் வழங்கி இருப்போம்.
அவர் இராணுவக் காவலில் இருந்தாரா?
அவர் ஒருபோதும் இராணுவத்தினரின் காவலில் இருக்கவில்லை.

பூமி அழியப் போகின்றதா? (வீடியோ இணைப்பு)
| 1983ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA அதாவது National Aeronautics and Space Administration என்ற அமைப்பு வின்வெளி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக ஒரு வின்கலத்தை வான் வெளியில் அனுப்பியிருந்தது. அந்த விண்கலத்தின் பெயர் ((IRAS) - Infrared Astronomical Satellite. விண்வெளியில் எதையோ தேடிப் பறந்துகொண்டிருந்த இந்த விண்கலம் வித்தியாசமான ஒரு காட்சியை படிம்பிடித்தது. நாசாவின் அந்த விண்கலத்தின் அதி சக்தி வாய்ந்த இன்பிரா ரெட் கமெரா பதிவுசெய்த அந்தக் காட்சியைப் பரிசோதித்த விண்வெளி ஆய்வாளர்களுக்கோ பாரிய அதிர்ச்சி. ஒரு மர்மப் பொருள் சூரியக் குடும்பத்தை நோக்கி மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் விடயம் விண்வெளி ஆய்வாளர்களுக்குத் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து X-planate என்றும், நிபிறு என்றும் அழைக்கப்படுகின்ற இந்த இருண்ட கோள் பற்றிப் பல்வேறு ஆய்வுகள், உண்மைகள், நம்பிக்கைகள், மறுப்புகள் பல தளங்களில் இருந்தும் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. மனித இனத்திற்கும், அதன் எதிர்கால இருப்புக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கருதப்படுகின்ற அந்தக் கோள் பற்றியும், அந்தக் கோளின் வருகையினால் பூமிக்கு ஏற்படக்கூடியதாக ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்ற ஆபத்துக்கள் பற்றியும்தான் இந்த வார உண்மையின் தரிசனம் ஆராய்கின்றது. (பாகம்-1) |
கொசு மனிதர்களை கடித்து ரத்தம் எடுக்கும் காட்சி (வீடியோ இணைப்பு)
கொசு நம்மை கடிப்பதை நாம் உணர்த்திருக்கிறோம். கொசு நம்முடைய உடலில் இருந்து ரத்தத்தை எவ்வளவு வேகமாக அதனுடைய வயிற்றுக்கு கொண்டு செல்கின்ற நேரடிக்காட்சியை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். ![]() |
புலிகளின் தளபதி ரமேசை தடுத்து வைத்திருக்கவில்லை � கோத்தாபய ராஜபக்ச
| விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கேணல் ரமேஸ் சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் இருக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கேணல் ரமேஜ் இரத்தத்தை உறைய வைக்கும் ஒரு கொலைகாரர் என்றும் கிழக்கில் சரணடைந்த 650 காவல்துறையினரின் கொலையுடன் தொடர்புபட்டவர் என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். அவர் தடுப்புக்காவலில் இருக்கவில்லை. அவர் 650 சிறிலங்கா காவல்துறையினரின் கொலைகளுக்கும், பிக்குகளின் கொலைக்கும், அப்பாவி பொதுமக்களினதும் கொலைகளுக்கும் பொறுப்பானவர் என்றும் தீவிரவாதியான அவரைப் பற்றி தான் பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடையச் சென்ற கேணல் ரமேஸ், சண்டையின் போது கொல்லப்பட்டதாக சிறிலங்கா படையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. சரணடைந்த கேணல் ரமேசை சிறிலங்கா படையினர் விசாரணை செய்யும் காணொலிப் பதிவு ஒன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கடந்த எப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. |
விடுதலைப் புலிகளின் தளபதிகளின் மனைவிமாரை களமிறக்கும் கோத்தபாய ராஜபக்ஷ ! (வீடியோ இணைப்பு)
| சனல் 4 தொலைக்காட்சிக்கு பதில் கொடுக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளது இலங்கை அரசு . இதில் புலிகளின் முந் நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வனின் மனைவி, கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மனைவி மற்றும் மொழிபெயர்ப்பாளர் தயா மாஸ்டர் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர் என்ற செய்திகளும் கசிந்துள்ளது. இந் நிகழ்ச்சிக்காக எப்படிப் பேசவேண்டும் , எதனைப் பேச வேண்டும் என்பது குறித்து இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய கொலைக்களங்கள் காணொளியால் இலங்கை பெரும் அவகீர்த்தியைச் சந்திக்க நேர்ந்துள்ளது. அதன் சுற்றுலாத் துறையில் கூட 8% சதவீத வீழ்ச்சி காணப்படுவதாகவும் மேலும் அறியப்படுகிறது. இது இவ்வாறு தொடர்ந்தால் இலங்கை இன்னும் பல பின்னடைவுகளை அடையும் எனவும், எனவே உடனடியாக சனல் 4 தொலைக்காட்சியோடு சமரசம் பேசுமாறு புத்திஜீவிகள் மகிந்தருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே அவர் சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சியோடு சமரசம்பேச முற்பட்டார். ஆனால் சனல் 4 தொலைக்காட்சியோடு நாம் ஏன் சமரசமாகப் போகவேண்டும் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தளபதிகளின் மனைவிமாரை வைத்து அவர்களுக்கு பாடம் புகட்டலாம் என நினைக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ. இதன் ஒரு அங்கமாகவே தளபதிகளின் மனைவிமார் களமிறங்கவுள்ளனராம். சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரண்டைந்தார். அதோபோல தளபதி சூசை அவர்களின் மனைவி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களோடு இராணுவத்திடம் சரணடைந்து தற்போது புலிகளைப் பற்றி அவதூறு பேசி இலங்கை அரசின் அடிவருடியாக மாறியிருக்கும் தயாமாஸ்டரும் அடக்கம். யுத்தகாலத்தில் புலிகள் எவ்வாறு நடந்தார், அவர்கள் எதைச் செய்தார்கள் தாம் ஏன் இராணுவத்திடம் சரண்டைந்தோம் என்று பல விடையங்களை இவர்கள் சொல்லி இருக்கிறார்களாம் . இவர்கள் சொல்லியிருக்கும் விடையங்கள் சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுக்கப்படும் தகுந்த பதிலடியாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சு கருதுகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தே பேசுகிறார்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். அவர்கள் சுயாதீனமாக இயங்கவில்லை என்பதும் சர்வதேசம் அறிந்த உண்மை. இந் நிலையில் இவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் சர்வதேச அளவில் செல்லுபடியற்றவையாகவே கருதப்படும் என்பதில் ஐயமில்லை. |
முன்னாள் போராளிகளைக் கொண்டு ஆபத்தான பகுதிகளை துப்பரவு செய்யும் படையினர்!
இறுதிக் கட்ட யுத்தத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளித்து தொழிற்பயிற்சி மற்றும் தொழில்களை வழங்குவதாகக் கூறி வரும் அரசானது தற்போது இவர்களைக் கொண்டு குளங்களையும் குட்டைகளையும் துப்புரவு செய்யும் பணிகளைச் செய்து வருகிறது.![]() இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்திலுள்ள பள்ளிக்குடாவில் தூர்ந்து போய்க் காணப்பட்ட பெரியகுளத்தைத் துப்புரவு செய்யும் பணியில் முன்னாள் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குளத்தில் வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான பொருட்கள் புதையுண்டு கிடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகப் படையினரையோ அல்லது ஏனையோரையோ துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தாமல் முன்னாள் பேராளிகளே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துப்புரவு செய்யும் பணிகளில் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகள் மட்டுமின்றி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் ஆலோசனைக்கு அமையவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. |
Subscribe to:
Comments (Atom)