Tuesday, 9 August 2011

கற்பழிக்க முயன்றவரின் 'அதை' அறுத்து வந்த பெண்!

 

 பங்காளதேஷில் கற்பழிக்க முயன்றவனின் மர்மஉறுப்பை அறுத்து, கையில் எடுத்து, போலீசாரிடம் புகார் அளித்த பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டது.

பங்காளதேஷ் நாட்டின், டாக்காவில் உள்ள ஜஹலாகத்தி என்ற புறநகர் பகுதியை சேர்ந்த 40 வயதுள்ள பெண், அவரது வீட்டில் இரவில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை 40 வயது உள்ள ஒருவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.

அப்போது, வீரமாக செயல்பட்ட அப்பெண் கையில் கிடைத்த கத்தியை கொண்டு, கற்பழிக்க வந்த நபரின் மர்மஉறுப்பை அறுத்துவிட்டார். இதில் வலிதாங்க முடியாத அந்த நபர் ஒடிவி்ட்டார். தான் அறுத்த உறுப்பை பிளாட்டிக் பையில் சுற்றிய அந்த பெண், ஜஹலாகத்தி போலீஸ் நிலையத்திற்கு சென்று, உறுப்பை காட்டி புகார் அளித்தார்.

மர்மஉறுப்பு அறுக்க நபர் 5 குழந்தைகளுக்கு தகப்பன், அறுத்த பெண் 3 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. கற்பழிக்க முயன்ற நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டார். குற்றவாளியின் காயம் குணமடைந்து, அவன் உடல்நலம் தேறிய உடன் கைது செய்யப்படுவான், என போலீசார் தெரிவித்தனர்.


உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான் : கே.என்.நேரு பேச்சு

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


கலைவாணன் கைதை கண்டித்து திருவாரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.   திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.


அவர்,  ’’அதிமுக அரசு போடப்படுகின்ற வழக்குகளில் முதன் முதலில் ஆரம்பித்தது திருச்சியில்தான்.

நீதிமன்றங்களில் தீர்ப்பு உங்களுக்கு எதிராகவும்எங்களுக்கு சாதகமாகவும் வரும் காலம் வரும்.




சினிமாவில்,  ’’உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான்’’ என்று சொல்லுவான்.   அது மாதிரி நீங்கள் உண்மை நிரூபிக்கப்படாமல் யார் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்தி வழக்கு போடுகிறார்கள்.

அதனால்தான்இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதுதான் வேலையா? என்று மக்கள் கேட்கிறார்கள்.


திமுக அரசை நசுக்க பார்க்கிறீர்கள்.    எவ்வளவுக்கு எவ்வளவு எங்களை நசுக்குகிறீர்களோஅவ்வளவுக்கு அவ்வளவு பந்து போல எழுந்திருப்பான் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன்’’ என்று பேசினார்.

எம்.ஜி.ஆர். சமாதி முன்பு ஆச்சரியத்தில் பொதுமக்கள்!

 


மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்தில் வெளிர் பச்சை நிறத்துடன் கூடிய, 4777 என்ற அம்பாசிடர் காரில் சிகப்பு விளக்கு எரிந்தபடி வலம்வருவார். அந்த காரின் நிறமும், எண்ணும் அவரது ரசிகர்களுக்கும், கட்சியினருக்கும் தெரியும்.

அதே நிறம், அதே எண் கொண்ட கார் ஒன்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி முன்பு 06.08.2011 அன்று மாலை நின்று கொண்டிருந்தது. மெரினா கடற்கரையில் வந்தவர்கள், இந்த காரை பார்த்தவுடன், ஆச்சரியத்துடன் வந்து பார்த்தனர்.


அங்கு நின்ற எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சிலர்,  தலைவர் கார்தான் மீண்டும் வந்து விட்டதோ?' என்று காரை தொட்டு கும்பிட்டனர். பலர் அந்த கார் முன்னால் நின்றுகொண்டு செல்போன் கேமராவால் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


அந்த நேரத்தில் கார் உரிமையாளரான வாசன் என்பவர், எம்.ஜி.ஆர். சமாதிக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கு வந்தார். பின்னர், காருக்கு தீபாராதனை காட்டி வழிபட்டார். அதனைத் தொடர்ந்து, காரை புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுடன் நின்று, தானும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


பின்னர், வாசன் கூறியதாவது: நான் எம்.ஜி.ஆர். மீது கொண்ட தீவிர அன்பால், எனது பெயரை எம்.ஜி.ஆர். வாசன் என்று மாற்றிக்கொண்டேன். நான் தற்போது, தென்சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவராக உள்ளேன்.


எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார், தியாகராய நகரில் உள்ள, அவரது நினைவிடத்தில் உள்ளது. இந்த காரைப்பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அதே கம்பெனியின் காரை புதிதாக வாங்கினேன்.


எம்.ஜி.ஆர். காரின் நிறத்தை போன்றே இந்த காருக்கும் வர்ணம் பூசினேன். மேலும், காரின் எண், சிகப்பு விளக்கு, அ.தி.மு.க. கொடி உள்ளிட்ட அம்சங்களை, அந்த காரில் இருப்பதை போன்றே வடிவமைத்தேன். பொதுமக்களே என்னிடம், இது எம்.ஜி.ஆர். பயன்படுத்திய காரா? என்று கேட்கிறார்கள். இதற்காகவே கூடுதலாக ரூ.80 ஆயிரம் செலவு செய்தேன். இனி எம்.ஜி.ஆர். நினைவுடன் இதே காரில் வலம்வருவேன் என்றார்.

கவுதமுக்கு விஜய் கால்ஷீட் பின்னணியில் நடந்தது என்ன?

 


சொல்ல சொல்ல பழி, தோண்ட தோண்ட குழி என்கிற அடாவடி மொழியை அற்புதமாக பின்பற்றுகிற ஒரே இடம் கோடம்பாக்கம்தான். அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் நாம் இப்போது சொல்லப் போகிற தகவல்.

விஜய்யும் கவுதம் மேனனும் இணைந்து உருவாக்கவிருக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை கவுதம் மேனனே தயாரிக்கிறார். இதில் பேரதிர்ச்சி அடைந்திருக்கிறாராம் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். விஜய் நடித்த குஷி, கில்லி, ஆகிய படங்களை தயாரித்தவர் இவர்தான். திடீரென்று ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பட தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர், கலெக்ஷன் ஹீரோ விஜய்யின் கால்ஷீட் கிடைத்தால் தனது பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்திருந்தார். இதற்காக எஸ்.ஏ.சந்திரசேகரையும், விஜய்யையும் தொடர்ந்து சந்தித்தபடி இருந்தார்.

சரி, யாரையாவது கதை சொல்ல அனுப்புங்க. பிடிச்சிருந்தா கால்ஷீட் என்றாராம் விஜய். அதற்கப்புறம்தான் கவுதம் மேனனை விஜய்யிடம் அழைத்துச் சென்றார் ஏ.எம். ரத்னம். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்தாலும், மீண்டும் அதை புதுப்பித்தவர் ரத்னம்தான். அப்புறம் ஒருநாள் கவுதமுக்கு விருந்தும் அளித்தார் விஜய். இந்த இடைபட்ட காலத்தில் ஏ.எம்.ரத்னத்தை மறந்தே போனார் கவுதம்மேனன்.

இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கட்டும் என்று விஜய் சொல்ல, நானே தயாரிக்கிறேன் என்று கவுதம் கேட்க, என்ன மாயம் நடந்ததோ, வெற்றி கவுதமுக்குதான்! நம்பி பேச விட்டேன். இப்படி நட்டாத்துல தள்ளிட்டாரே என்று புலம்பி வருகிறாராம் ஏ.எம்.ரத்னம்.

ஜெயலலிதாவுடன், விஜயகாந்த் சந்திப்பு- ஆலோசனை

 

 மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களைத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் இன்று நடந்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்பது மரபாகும். எனவே இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் நடந்தது. அதில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமாரும் பங்கேற்றார்.


பேருந்து ஜன்னல் வழி தாவி ஏறும் பெண் -தமிழகத்தின் பரிதாப நிலை ..! (படங்கள் இணைப்பு)


இந்திய தமிழக அரச பேருந்துகளில் உட்கார இடம் பிடிபதற்கு  ஜன்னல் வழியே தாவி ஏறும் பெண் .தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் பேருந்தில் ஏறிவிட்டால் போதும் என்ற நிலையில் இந்த ஜன்னல் வழி புகும் நிலை ஏற்பட்டுள்ளது .

பயணிகள் நிலை கருதி போக்குவரத்துக்களை மேலும் அதிகரித்தால் இந்த நிலை ஏற்படாது என மக்கள் தெரிவித்துள்ளனர்





கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா?

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இருந்தது போல் கிருஷ்ணகிரி அருகேயுள்ள பழமை மிக்க கற்கோவில்களில் தங்க புதையல் இருப்பதாக ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் உள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொல் பொருள் துறையினர் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.

தங்க புதையல் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பூட்டி கிடந்த அறைகளை கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடந்த மாதம் திறந்து பார்த்தனர். அப்போது அறைகள் முழுவதும் குவியல், குவியலாக தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான கோவில்களிலும் அரசர் காலத்தில் புதைக்கப்பட்ட நகைகள், தங்க புதையல்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

இதை நிரூபிக்கும் விதமாக கிருஷ்ணகிரி அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, தற்போது மலை உச்சியில் மண்ணில் பாதி புதைந்து மீதி வெளியே தெரியும் அளவிற்கு உள்ள கற்கோவில்களில் தங்க நகைககள் புதைந்து கிடப்பதாக ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த குறிப்புகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குந்தாணி மலை கிருஷ்ணகிரி அருகேயுள்ள நெடுசாலை, தேவர்குந்தாணி, வேப்பனப்பள்ளி, பேரிகை போன்ற பகுதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குந்தாணி ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த பகுதியாகும். தேவர்குந்தாணியை தலைநகராக கொண்டு குந்தாணி மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். மேலும் கர்நாடகா மன்னர் ஒய்சால வம்சத்தை சேர்ந்த ராமநாத அரசரின் ஆளுகை கோலார் முதல் திருச்சி ஸ்ரீரங்கம் வரை இருந்தது. அவர்களும் குந்தாணியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர்.

இத்தனை வரலாற்று சிறப்புமிக்க தலைநகராக இருந்த குந்தாணியில் உள்ள மலைகளில் அப்போது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கற்கோவில்கள் தற்போது அழியும் நிலையில் மண்ணில் புதைந்துள்ளன. குந்தாணியை சுற்றி உள்ள 6 மலைகளில் மன்னர்கள் 6 விதமான கோவில்களை கட்டினார்கள்.

மலை உச்சியில் அமைக்கப்பட்ட அந்த கோவில்கள் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. குந்தாணி மலைகளில் சென்றாயசாமி, அனுமான், நந்திகேஸ்வரா, குநந்தாணியம்மா, வீரேஸ்வரா, குந்தீஸ்வரா ஆகிய 6 சாமிகளுக்கும் கோவில்கள் மிக பிரமாண்டமாக எழுப்பப்பட்டது. இந்த கோவில்கள் தற்போதும் மலை உச்சியில் காணப்படுகின்றன. ஆனால் கோவிலில் பெரும் பகுதி மண்ணில் புதைந்தும், மீதிப்பகுதி மட்டும் வெளியில் தெரிந்த வண்ணமும் உள்ளது.

குளத்தில் தங்க புதையல்?

குந்தாணி மலைப்பகுதியின் வடக்கு திசையில் `பைரேகவுனி செருவி' என்ற குளமும், `நீர்தெப்ப ஜுனை' என்ற குளமும் உள்ளது. `நீர்தெப்ப ஜுனை' என்ற குளத்தில் கோவில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஆங்கிலேயர்கள் தங்களது குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் கோவிலின் நகைகள் குளத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆங்கிலேயர் குறிப்பேட்டு தகவல் குறித்து அறிந்த தொல்பொருள் ஆய்வுத் துறையினர் மற்றும் அருங்காட்சியகத் துறை அதிகாரிகள் அந்த குறிப்புகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் சென்னையில் இருந்து தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வெட்டு தகவல்கள்

இதேபோல் குந்தீஸ்வரா கோவில் சுவற்றில் மிகப்பழமையான கல்வெட்டு குறிப்புகளும் ஏராளமாக உள்ளன. கல்வெட்டு குறிப்பிலும் தங்க புதையல் குறித்து எழுதப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கருதுகிறார்கள். எனவே கல்வெட்டுகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்

காரை ஒரு சுழட்டு சுழட்டி நிறுத்திய ஜேர்மானியர்! புதிய உலக சாதனை படைப்பு (வீடியோ இணைப்பு)



கார் நிறுத்துமிடம் ஒன்றில் ஒருவர் காரை நிறுத்தும் அசாத்தியமான காட்சி ஒன்றையே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.

Ronny Wechselberger என்ற ஜெர்மனியரே பிரேக்கைப் பயன்படுத்தி காரை ஒரு சுழற்றுச் சுழட்டி சரியான இடத்தில் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு நடுவே நிறுத்தியுள்ளார்

கரணம் தப்பினால் மரணம்... புதிதாக ஒரு சாதனை...! (வீடியோ இணைப்பு)



சீனாவைச்சேர்ந்த Saimaiti Aishan எனப்படும் 27 வயது நபர் , சுமார் 100 அடி உயரத்தில் நிற்கும் ஒரு பரசூட்டில் இருந்து மற்றொரு பரசூட்டுக்கு கம்பி மூலம் இடம் மாறுவதே இச்சாதனை...,

ஆயிரக்கணக்கானோர் சூழ நிற்க நடந்த இந்தச் சாதனை பலரையும் கவர்ந்தது! கம்பி வழியே நடந்துவரும் வழியில் ஒரு தடவை தடம் மாறியதால் கீழே விழும் நிலைக்கு வந்தார் பின் பழையநிலைக்கு வந்து சாதனையை நிறைவேற்றினார்.