Saturday, 20 August 2011

சிம்பு-ஜீவா போட்டியில் யாருக்கு லாபம், யாருக்கு சோகம்?


"சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவதுதான் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். ஆனால், பின்னாலிருந்து குத்தும் வேலையைச் செய்கிறார். அது ஆரோக்கியமான போட்டி அல்ல‘'

சிம்புவை பற்றி நடிகர் ஜீவா இப்படி பேட்டியளித்தபின் சும்மாயிருக்குமா கோடம்பாக்கம். கொந்தளித்துப் போயிருக்கிறது. இந்த சண்டையை எப்படி பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்கள்? சமீபத்தில் இவர்கள் பிரச்சனையில் தலையை கொடுத்த ஒரு தயாரிப்பாளர் சொன்ன பதிலை கேட்டால் புரியும்.

அதை சொல்வதற்கு முன் ஒரு நிஜத்தை சொல்லியாக வேண்டும். சிம்பு சுமார் ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அதில் பாதியை கூட இன்னும் எட்டவில்லை ஜீவா. சிம்புவின் வெற்றியும் ஜீவாவின் வெற்றியும் கிட்டதட்ட இணையாகவே இருக்கிறது. சிம்பு ஒரு விண்ணைதாண்டி வருவாயா கொடுத்தால், ஜீவா ஒரு கோ கொடுத்திருக்கிறார். அப்புறம் எப்படி இந்த சம்பள ஏற்றத் தாழ்வு? வேறொன்றுமில்லை, படத்தின் வியாபாரம்தான் இதை தீர்மானிக்கிறது. ஜீவாவின் பிசினஸ் சுமார் பத்து கோடி. சிம்புவின் பிசினஸ் சுமார் பதினெட்டு கோடி. இதுதான் இவ்விருவரின் சம்பளத்தையும் இப்படி மேடு பள்ளமாக தீர்மானித்து வைத்திருக்கிறது.

சரி தயாரிப்பாளர் சொன்ன விஷயத்துக்கு வருவோம். இன்னும் துவங்கப்படாத படம் ஒன்றில் நடிக்க இருவருக்குமே போட்டி. சிம்புவும், ஜீவாவும் நான்தான் இந்த படத்தில் நடிப்பேன் என்று போட்டி போட, குழப்பமே இல்லாமல் தயாரிப்பாளர் எடுத்த முடிவு ஜீவாவின் பக்கம் சாய்ந்ததுதான்.

என்ன இப்படி பண்ணீட்டீங்க என்று சிம்பு அதிர்ச்சியோடு கேள்வி கேட்டபோது தயாரிப்பாளர் இப்படி சொன்னார். உங்களை விட ஜீவா பல மடங்கு சம்பளம் குறைச்சு வாங்குகிறார். ஆனால் உங்க அளவுக்கு வியாபாரம் இல்லை. இந்த வியாபாரத்துக்கு ஆசைப்பட்டு உங்களை கமிட் பண்ணினா, எப்போ ஷுட்டிங் கேன்சலாகும், எப்போ ஷுட்டிங் வருவீங்க என்பதையெல்லாம் அந்த கடவுளால் கூட தீர்மானிக்க முடியாது. தேலையில்லாத டென்ஷனை தேடிப் போய் வாங்குவதைவிட குறைவா சம்பளம் வாங்குனாலும் சொன்ன நேரத்தில் வர்ற ஜீவாவே மேல். இதனால் லாபம் குறைஞ்சாலும் டென்ஷன் தலைவலி இல்ல பாருங்க என்றாராம்.

பணியாரமா, தோசையா என்பதை மாவின் கெட்டி தன்மைதான் தீர்மானிக்கிறது, இல்லையா சிம்பு?

'தொட்டால் செத்துருவேன்': முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண்

 

என்னைத் தொட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று முதல் இரவில் கணவரை மிரட்டிய புது மணப்பெண் மாயமாகியுள்ளார். அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கணவன் போலீசில் புகார் செய்துள்ளார். 

வெடியரசம்பாளையம் சிவக்குமார்
பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (28). தறி தொழிலாளி. அவர் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த பைரவி (23) என்ற பெண்ணை பெரியவர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார். முதலிரவும் வந்தது. ஆசையுடன் மனைவியை நெருங்கிய சிவக்குமாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், என்னைத் தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பைரவி மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி தாலியைக் கழற்றி வைத்துவிட்டு திடீரென அவர் மாயமாகிவிட்டார்.

மனைவியைத் தேடி அலைந்த சிவக்குமார் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பைரவிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி திருமணம் நடந்தது. முதல் இரவில் நான் பைரவியிடம் பேச்சு கொடுத்த போது அவர் என்னை தொட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

நான் முதலில் இப்படித்தான் இருக்கும் போக, போக சரியாகி விடும் என்று நினைத்து வழக்கம் போல் தினமும் வேலைக்கு சென்று வந்தேன். பைரவியிடம் அன்பாக பழகினேன். ஜூன் மாதம் 30-ம் தேதி வழக்கம் போல் நான் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினேன். அப்போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு பைரவியைக் காணவில்லை. நான் கட்டிய தாலியை கழற்றி வைத்து விட்டு மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

கடந்த 2 மாதமாக அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே, அவரை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியுள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


பார்க்காமலேயே மலர்ந்த காதல்: விபத்தில் காதலன் இறந்ததால் உயிரை மாய்த்த காதலி


கோவையை அடுத்த கவுண்டம்பாளையத்தை சேந்தவர் சண்முகம். இவரது மகள் காயத்ரி(வயது25). கோவையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திருப்பூரை சேர்ந்தவர் விஜய். கடந்த ஒரு வருடமாக இருவரும் செல்போனிலேயே பேசி காதலை வளர்த்து வந்தனர். தினமும் போனில் பேசிக் கொள்வார்கள்.

அப்போது விஜய் தனது வீட்டு முகவரியை காயத்ரியிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக விஜய் தனது ஆசை காதலியிடம் பேசவில்லை. அவருடைய செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த காயத்ரி தனது காதலன் கூறிய முகவரியில் சென்று தேடினார்.

அப்போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. விஜய் விபத்ததில் இறந்து விட்டார் என்பது தான் அந்த தகவல். மனவேதனையில் ஊர் திரும்பிய காயத்ரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அன்னா ஹஸாரே போராட்டம் எந்த பலனையும் தராது! - நமீதா பேட்டி

ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. மாற்றம் மக்களிடமிருந்து வர வேண்டும், என்றார் நடிகை நமீதா.

ஹஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தாவிடம் கருத்து கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், "அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள்.

ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும்.

கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும்.

நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.

இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்," என்றார்.

ஹஸாரேவின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, "இருக்கலாம். அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்தியா பரந்த நாடு. என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது," என்றார் நமீதா.

இந்தப் போராட்டம் தெற்கு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறித்து?

"அது உண்மைதான். காரணம் இங்கே அதைவிட முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் கருதலாம். ஹஸாரே குறைந்தபட்சம் இந்த மாநில மக்களிடம் பிரச்சாரம் கூட செய்யவில்லையே. இதை அவருக்கும் அரசுக்குமான பிரச்சினையாகத்தான் ஹஸாரே பார்க்கிறார். இதில் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது?" என்றார் நமீதா.


புதிய தலைமைச் செயலகத்தில் பிரமாண்ட மருத்துவமனை-மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா

புதிய தலைமைச் செயலக் கட்டிடம் பிரமாண்ட மருததுவமனையாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், "ஏ" பிளாக்கில் மருத்துவமனை, "பி" பிளாக்கில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த உறுப்பினர்கள் அறிவீர்கள்.

இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், முதல்வரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த புதிய மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிகராக அமையும் என்று அவர் தெரிவித்தார். 

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் வீணடிக்கப்படக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரி வந்த நிலையில் அந்த கட்டடத்தை பிரமாண்ட மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்படு்ம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் 4வது அரசு மருத்துவக் கல்லூரி
இங்கு அமையும் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை நகரில் அமையும் 4வது அரசு மருத்துவக் கல்லூரியாக இருக்கும். ஏற்கனவே சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரியை சென்னை பெறவுள்ளது.


வடிவேலு - சிங்கமுத்து ஏமாந்த கதை


சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன்,   நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.


தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியதாகவும்,   அதை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் வடிவேலுக்கு விற்கப்பட்டு இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வடிவேலுவும், சிங்கமுத்துவும் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. போலி தஸ்தாவேஜுகளை காட்டி நிலத்தை அவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.


இது குறித்து போலீஸ் தரப்பில்,

’’வடிவேலு வாங்கிய சர்ச்சைக்குரிய நிலம் டி.கே.ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேருக்கு உரிமையானது. இவர்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி முதலீட்டு கழகத்திடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கினர். அதற்கு பதிலாக இந்த நிலத்தை அடமானம் வைத்தனர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை.



இதையடுத்து நிலத்தை டிக் நிறுவனம் ஏலத்துக்கு கொண்டு வந்தது. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் அதை ஏலத்தில் வாங்கியுள்ளார்.  

இதற்கிடையில் நிலத்தை அடமானம் வைத்தவர்கள் சிங்கமுத்துக்கு நிலத்துக்கான அதிகார பத்திரத்தை எழுதி கொடுத்துள்ளனர்.

2000-ம் ஆண்டில் இதனை எழுதி வாங்கியுள்ளார். பின்னர் 2002-ல் அதனை வடிவேலுக்கு சிங்கமுத்து விற்றுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் இருவரும் ஏமாந்துள்ளனர்.

வடிவேலு, சிங்கமுத்துவை ஏமாற்றிய 5 பேரும் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நிலத்தில் உரிமை இல்லை. பழனியப்பனுக்கு தான் நிலம் சொந்தம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

உங்களது மூளையின் வயதை கண்டறிவதற்கு

உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.
மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை.
எனவே உங்களுக்கு வயதானாலும் உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம். அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது.
இந்த தளம் சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன் அதுவே சொல்லிவிடுகிறது. இது எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம்.
இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. முதலில்,
Recall: இதில் பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும். முதலில் எளிதாக இருந்தாலும் போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன, அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
Recognition: இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான் எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
Anagrams: எழுத்துக்கள் தரப்பட்டு சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.
Pounce: எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான்காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.
Blink: அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும்.
சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப்படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம். ஒருமுறை விளையாடிப் பார்த்தால் நிச்சயம் மூளைத்திறன் உயரும்.
இணையதள முகவரி

ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு)


அந்நாள் நடிகையும், தமிழ் நாடு மாநிலத்தின் இந்நாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்களில் சிலவற்றை காணலாம்.















கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! (படங்கள் இணைப்பு)

உலகில் விசித்திரமான ஹோட்டல்கள் பல அமைக்கப்பட்டு உள்ளன.

மரங்கள், குகைகள், சிறைகள் என்று விசித்திரமான இடங்களில் எல்லாம் பல நாடுகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

இப்போது மிகவும் புதுமையான பிரமாண்ட ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல் ஒன்று ஹட்டாரில் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

இதன் பெயர் Amphibious 1000

இத்தாலி நாட்டின் Giancarlo Zema Design Group நிறுவனம் இப்புதுமையான ஹோட்டலை நிர்மாணிக்கின்றது.

படகுகள், படகு வீடுகள், அரை நீர்மூழ்கி கட்டிடங்கள் என்று அசத்துகின்றனர்.

வதிவிடங்கள், அலுவலகங்கள், நவீன மரீனாக்கள் அமைக்கப்படுகின்றன.

ஹோட்டலின் மத்திய கோபுரத்தில் உணவு விடுதி ஒன்று கட்டப்படுகின்றது.

80 அரை நீர்மூழ்கி கட்டிடங்களில் விருந்தினர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வகை கட்டிடங்களுக்கு ஜெலிஃபிஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கடலுக்கு அடியில் உள்ள காட்சிகளை இரசிக்கக் கூடிய வகையில் அறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் எஞ்சின்களுடன் கூடிய சிறிய ரக அலுமினிய படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தியே ஹோட்டல் வளாகத்துக்குள் பிரவேசிக்க முடியும்.

ஹோட்டல் நிர்மாணத்துக்கான திட்டத்துக்கான மொத்தச் செலவு 500 மில்லியன் டொலர் வரை ஆகுமென கணக்கிடப்பட்டு உள்ளது.