Saturday, 5 November 2011

இன்று நவம்பர் 5, பேஸ்புக்கை ஹெக் செய்வதாக சவால் விடுக்கப்பட்ட தினம்: முடியுமா அவர்களால்?

இன்று நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பேஸ்புக் சமூக வலையமைப்பினை ஹெக்கிங் செய்து நிறுத்துவதாக சவால் விடுத்திருந்தது 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு.இது தொடர்பான செய்தியை அக்குழு வெளியிட்ட காணொளியுடன் நாம் உங்களுக்கு வழங்கியிருந்தோம்.

எனினும் இன்றும் அதாவது இச்செய்தி எழுதப்படும் வரை பேஸ்புக் வலையமைப்பு சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

' ஒபரேஷன் பேஸ்புக்' என அத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக்குழு அறிவித்திருந்தது.

இச்செய்தியை நாம் எளிதில் புறக்கணித்து விடாத காரணம் அக்குழுவின் சில நடவடிக்கைகளாகும்.

கடந்த சில காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட், பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது.

ஆனாலும் அக்குழுவால் பேஸ்புக்கினை வீழ்த்த முடியாமல் போனதா? அல்லது அத்திட்டத்தினைக் கைவிட்டுவிட்டதா?

இது தொடர்பில் அக்குழு தகவல் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

எனினும் இன்றைய தினம் முடிவதற்கு இன்னும் பல மணித்தியாலங்கள் உள்ளன.

எனவே பொறுத்திருந்து பார்ப்போம்!

வெறும் 90 செக்கன்களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா: புதிய புத்தகத்தினால் பரபரப்பு

அல் கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் வெறும் 90 வினாடிகளுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற பரப்பான தகவலை அமெரிக்க சீல் படையின் முன்னாள் அதிகாரியொருவர் வெளியிட்டுள்ளார்சக் பாரர் என்ற அமெரிக்க நேவி சீல் படையின் முன்னாள் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியவரே இப்புத்தகத்தினை எழுதியுள்ளார்.

அவர் தற்போது வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பாரர் இத்தாக்குதலில் நேரடியாக பங்குபற்றாதபோதிலும் அதில் பங்குபற்றிய வீரர்கள் பலரின் அனுபவங்களையும், பாகிஸ்தானின் அபோடாபாத்தில் நிகழ்ந்தவற்றைக் கேட்டறிந்தும் அவர் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சுமார் 45 நிமிட நேர போராட்டத்திற்கு பின்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் இப்புத்தகத்தின் படி சுமார் 90 செக்கன்களில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாரர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நேர துப்பாக்கிச் சண்டை நடைபெறவில்லையெனவும் மொத்தமாக நான்கு சுற்றுக்கள் மாத்திரமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதெனவும், ஹெலிகொப்டரில் வந்த படையினர் ஒசாமா தங்கியிருந்த வீட்டு மேல் மாடியில் வந்திறங்கியே அதனுள் நுழைந்ததாகவும் அப்புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பின்லேடனின் மனைவி அமால் துப்பாக்கிக் குண்டு தாக்கி படுகாயமடைந்தார். தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டார். மேலும் அல்கொய்தாவின் துணைத் தலைவராக இருந்த ஜவாஹிரி மூலம் கூரியர் அனுப்பி வந்ததை வைத்து பின்லாடனின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தனது புத்தகத்தி்ல் கூறியுள்ளார்.

ஒசாமா கொல்லப்பட்டபோது அவரின் இளையமனைவி 'அமால்' உம் உடன் இருந்ததாகவும் அவர் ''அது ஒசாமா அல்ல, வேண்டாம், வேண்டாம் "என அரபு மொழியில் கூக்குரலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத் தாக்குதலில் பங்குபற்றிய சீல் படையினர் வேர்ஜினியாவில் உள்ள இரகசிய படைமுகாமொன்றிலேயே பயிற்சி பெற்றதாகவும், அரம்பத்தில் இந்நடவடிக்கைக்கு 'கூஸ்ட் ஹொக்ஸ்' எனப்படும் ராடார்களின் கண்களுக்கு மண்ணைத்தூவிச் செல்லக்கூடிய அதிநவீன ஹெலிகொப்டர்களையே பயன்படுத்த எண்ணியிருந்த போதிலும் பின்னர் வேறு ஹெலிகொப்டர்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் பாரக் குறிப்பிட்டுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்புத்தகம் எதிர்வரும் 8 ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலருடன் தொடர்பு வைத்திருந்தால் மனைவி கொலை!

பலருடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பொட்டலமாக கட்டி கிணற்றில் வீசினேன் என்று கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம், பெரிய காலனி கிழக்கு தெருவில் பொதுக்கிணறு உள்ளது. இதில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது.
புகாரின்படி பரங்கிமலை துணை கமிஷனர் அஸ்வின் கோட்னீஸ், உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் அனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கிணற்றில் மிதந்த 4 பிளாஸ்டிக் பொட்டலங்களை எடுத்து அவிழ்த்தனர். அதில், இளம் பெண்ணின் 2 கால்கள், 2 கைகள், மார்பு, இடுப்பு பகுதி தனித்தனியாக அழுகிய நிலையில் இருந்தது. தலை இல்லை.

விசாரணையில், அதேபகுதி பஜனை கோயில் தெருவை சேர்ந்த சேதுராமன் என்பவர் அந்த கிணற்றில் கடந்த 2 நாட்கள் முன்பு பிளீச்சிங் பவுடர், பினாயில் தெளித்ததும், அதன்பிறகு அவர் தலைமறைவானதும் தெரிய வந்தது.
இதையடுத்து அசோக் நகரில் பதுங்கியிருந்த சேதுராமனை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மனைவியை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.
போலீசில் சேதுராமன் அளித்துள்ள வாக்குமூலம்:
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொழில் செய்து வந்த ஜெயாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அவளை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன.
எனினும் பலருடன் அவள் கள்ள தொடர்பு வைத்திருந்தாள். பல முறை கண்டித்தும் திருந்தவில்லை. கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வியாபார விஷயமாக வெளியே சென்றேன்.
மதியம் திரும்பியபோது வீட்டில் இருந்து ஒரு வாலிபர் வெளியே ஓடினார். உள்ளே சென்றபோது ஆடையின்றி ஜெயா அலங்கோலமாக படுத்திருந்தாள்.
ஆத்திரமடைந்த நான், உலக்கையால் ஜெயாவின் தலையில் அடித்தேன். அதில் அவள் இறந்து விட்டாள். பின்னர் உடலை வெட்டி பிளாஸ்டிக் பொட்டலத்தில் கட்டினேன்.
மாலையில் வீடு திரும்பிய குழந்தைகளிடம், அம்மா ஊருக்கு சென்றுவிட்டாள். அவளை தேடவேண்டாம் என்றேன். அதன்பிறகு நள்ளிரவு பொட்டலத்தை எடுத்துக்கொண்டு கிணற்றில் வீசினேன். துர்நாற்றம் விசியதால் பிளீச்சிக் பவுடர் வாங்கி தூவினேன்.
இவ்வாறு சேதுராமன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலையை கிணற்றில் வீசியதாக அவர் தெரிவித்ததை தொடர்ந்து கிணற்றில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

1 லட்சம் ஆமைகளை பழிகொடுக்கும் விசித்திர திருவிழா

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் அண்மையில் இடம்பெற்ற தீபாவளி பண்டிகையன்று காளி பூசை நடைபெற்றது.
வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும் இந்த திருவிழாவில் நடைபெறும் கொடுமையான சம்பவம்தான் இந்த ஆமை வேட்டைகள்.
பூசை என்ற பெயரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆமைகள் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக வேட்டையாடுகின்றன.
உலகில் அருகி வரும் இனங்களில் ஆமையும் ஒன்று என கருதப்பட்டாலும் டாக்கா நகர மக்களின் இந்த செயற்பாடு பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்கால பறக்கும் கார்! வெற்றிகரமான வெள்ளோட்டம்

இது ஒரு புதிய வகை வான் வழிப் போக்குவரத்துச் சாதனம். ஹெலிகொப்ரர் போல தான் இருக்கும் ஆனால் ஹெலிகொப்ரர் அல்ல.
பைலட் இல்லாமலே இந்த Electric multi copter பறக்கக் கூடியது.
Thomas Senkel என்ற பொறியியலாளரால் உருவாக்கப்பட்ட குறித்த electric multi copter விமானியுடன் 1 நிமிடம் 30 செக்கன்கள் வானில் அழகாக பறந்தது.
இது உலகின் முதலாவது பறக்கும் காராக விளங்குகிறது.
விளையாட்டுக் கார்கள் இயக்கப் பயன்படும் joystick போன்றவற்றால் கூட இதனை இயக்க முடியும்.
இது பற்றரி மூலம் மின்சாரத்தினால் தான் இயங்கும் என்பது கூடுதல் தகவல்.
சாதாரண ஹெலிகொப்டர்களில் பறப்பதை விட இதில் பறப்பது மிகவும் எளிமையானது. இயந்திரத்தின் எடை 80 கிலோ கிராம் மட்டுமே.
இதில் 16 சுழலும் இயந்திரங்கள் காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பறக்கும் காராக பயன்படுத்தப்பட உள்ளது.

யாழ்ப்பாண ஊருக்குள்ளே..

திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான "மலரே மௌனமா" எனும் திரைப்படதிலமைய்ந்த ஒரு பாடல்.

இரண்டு மனைவிகளை ஏற்றிச் செல்லும் விசேட மோட்டார் சைக்கிள்!

இரண்டு பொண்டாட்டி உள்ளவர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தான் இது...
இந்தியாவின் தமிழ்நாட்டில் இரண்டு பொண்டாட்டி உள்ளவர்களுக்காக உள்ளூர் வாசி ஒருவரால் தான் இந்த கண்டு பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
வேறு ஒன்றும் பெரிதாக இல்லை...
மோட்டார் சைக்கிளின் பின்புறம் உள்ள சீட்டில் கொஞ்சம் தடிமனான மரப்பலகை ஒன்று வைத்து கட்டப்பட்டுள்ளது. கண்டுபிடிப்பு அவ்வளவு தான்..
என்ன, வடிவேலுவின் கண்டுபிடிப்பான மூட்டைப் பூச்சியைக் கொல்லும் மிஷின் ஞாபகத்துக்கு வருகிறதா?
விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு மனைவிகளை ஏற்றிச் செல்லும் காட்சி தான் இது.

குழந்தையை பாதாளத்தில் தள்ளிவிட்ட தாய் - CCTV கமரா மூலம் கதை அம்பலம்

தாய்ப்பாசத்திற்கு இணையானது இதுவரையில் அறியப்படவில்லை. ஆனால் உலகில் நடக்கும் சில விஷயங்கள் தாய் என்ற சொல்லுக்கே அவமானம் தேடித்தருபவையாக உள்ளன.
அந்த வகையில் மூன்று மாத குழந்தை தனது தாயாலும் பாட்டியாலும் கொல்லப்பட்ட கொடூரம் நடந்தேறியுள்ளது.
56 வயதான இந்த கிழவியும் அவள் மகளும் இணைந்து மகளின் குழந்தையை தள்ளு வண்டில் ஒன்றில் வைத்து வீதியின் கீழாக செல்லும் பள்ளமான பகுதியொன்றில் வைத்து தள்ளிவிட்டனர்.
குழந்தை தவறுதலாக விழுந்ததாக இருக்கட்டும் என்பது இவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். இந்த சம்பவத்தின் போது அருகில் யாரும் இருக்கவில்லை.
ஆனால் அருகில் இருந்த கட்டிடமொன்றின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராவில் இது பதியப்பட்டிருந்தது. அவர்கள் கமராவை பார்த்தபோது அதிர்ச்சியடைந்து பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதை ஆதாரமாக வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்

ஊனமுற்ற மகளை சித்திரவதை செய்யும் தந்தை Youtube வீடியோவால் வெளிவந்த உண்மைகள் !!

தனது தந்தை இடுப்பு பட்டியால் அடிக்கும் காட்சிகளை youtube தளத்தில் வெளியிட்டதால், ஒரு சட்டத்துறை குடும்பத்தினது பலநாட்கள் வீட்டுக்குள் மறைத்திருந்த உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.16 வயதான Hillary Adams எனும் அங்கவீனமுற்ற பெண் William Adams என்ற சட்டத்துறையில் உயர்பதவி வகிக்கும் நீதிபதி ஒருவரின் மகள்.

மகளை சித்திரவதைப்படுத்துவதை வழமையாகக்கொண்டிருந்த William தனது இடுப்பு பட்டியை கழற்றி 20 தரத்திற்கு மேலாக அடித்திருக்கிறார்.

இதை மிகவும் கவனமாக கமராவில் பதிவு செய்து youtube இல் தரவேற்றியுள்ளார். இதை பல பேர் கண்டு கொதித்தெழுந்துள்ளனர்.

உடனடியாக பொலிசாருக்கு தகவலனுப்பப்பட்டு அந்த நீதிபதி கைது செய்யப்பட்டார். இந்த பெண்ணின் தாயார் இவர்களோடு இருப்பதில்லை.

கணவனுடனான மனஸ்தாபம் காரணமாக மகளை பிரிந்து தனியாக வாழ்கிறார். இந்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தார்.

ஒரு குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய தந்தையே இவ்வாறு மிருகம் போல நடந்தது பலருக்கும் மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.

உலகிலேயே மிகப்பெரிய தாஜ்மஹால் உணவு

சிற்பக் கலைஞர் ஒருவர் உலகின் மிகப்பெரிய சமையல் தாஜ்மஹால் கட்டிடம் ஒன்றை உணவில் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
பம்பாய் உருளைக்கிழங்கு, பிரியாணி அரிசி மற்றும் poppadoms இருந்து இவற்றைத் தயாரித்துள்ளார்.

இது 3 X 10 X 5 அடி உடைய தாஜ்மஹால் உணவைத் தயாரிப்பதற்கு 5 நாட்கள் தேவைப்பட்டது.
இந்தியாவிலுள்ள ஸ்பைஸ் பிரின்ஸ் எனும் சமையல் நிறுவனமே இந்த தாஜ்மஹால் சிற்ப உணவைத் தயாரித்துள்ளது.