Sunday, 31 July 2011

உலகின் மிகப் பெரிய குகையான ஹாங் சொன் டொங்கின் மிரட்டலான உட்பக்கம் (பட இணைப்பு)

 
‘ஹாங் சொன் டொங்’ என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும்.
இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது.
வியட்நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகையானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்குகையின் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிரட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக்கான காரணம் அதனுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர்ந்தே இது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்தது.

இதன் நீளம் 2.5 மைல்கள் உயரம் 800 அடி என்பதுடன் அகலம் 300 அடியெனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இக்குகையின் உள்ளேயே காடு அமைந்திருப்பது இதன் விசாலத்திற்கு ஓர் உதாரணம்.
மேலும் சுமார் 150 குகைகள் இப் பிரதான குகையோடு இணைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இக் குகையானது 2 முதல் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு

   
காரைக்கால் திருநள்ளாரில், கொம்யூன் ஊராட்சியின் தங்கும் விடுதி, கட்டணக் கழிப்பறை, கடை ஆகியவற்றின் ஏலத்தில் பிச்சைக்காரர்கள் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.காரைக்கால் திருநள்ளாரில், பிரசத்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்@தாறும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் தேவஸ்தானம், கொம்யூன் ஊராட்சி ஆகியவை கழிப்பறை, தங்கும் விடுதிகளைக் கட்டியுள்ளது.
இவை ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம்.‌கோவில் குளத்தின் அருகே உள்ள கொம்யூன் ஊராட்சியின் கழிவறை மற்றும் தங்கும் விடுதி, வணிக வளாகத்தில் உள்ள 13வது எண் கடை ஆகியவற்றிற்கு நேற்று கொம்யூன் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடந்தது. காலை 11.30 மணியில் இருந்து ஏலம் எடுக்க ஒவ்வொருவராக அலுவலகத்திற்கு வந்து முன்வைப்புத் தொகையைக் கட்டினர். திடீரென, மூன்று பிச்சைக்காரர்கள், ஏலம் விடும் அறைக்கு வந்தனர்.இவர்கள், திருநள்ளார் பகுதியில் சுற்றித்திரியும் சங்கரன்பந்தல், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் கணேசன், சண்முகம் மற்றும் மாணிக்கம்.
கையில் தட்டுடன் வந்த அவர்கள், அதில் ஏலத்தின் முன்தொகையாக ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து, கொம்யூன் அதிகாரிகளிடம் வழங்கி தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். பின், ஏலம் நடந்த இடத்தில் முன்வரிசையில் அமர்ந்து ஏலத்தை கவனித்தனர். ஏலம் துவங்கியதும், அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். அப்போது பிச்சைக்காரர் மாணிக்கம், 50 ஆயிரம் வரை ஏலம் கேட்டார்.
அங்கிருந்த ஆணையர் சுபாஷ், ஏலத்தொகை கட்ட உங்களிடம் பணம் உள்ளதாக என கேட்டார். அதற்கு, எங்களிடம் கோடி ரூபாய் பணம் உள்ளது என்று தெரிவித்தனர். ஏலம் எடுத்துவிட்டு நீங்கள் கிளம்பி விடுவீர்கள், எனவே பணம் வைத்திருப்பதற்கான வங்கி ஆவணம், இருப்பிட ஆவணம் எதையாவது ஒன்றை காட்டுங்கள் என்று ஆணையர் சுபாஷ் கேட்டார். அதன்பின், பிச்சைக்காரர்கள் அமைதியாக அமர்ந்துவிட்டனர். பின், தொடர்ந்து ஏலம் விடப்பட்டது. ஏலம் 1.26 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.ஏலத்தில் பிச்சைக்காரர்களும் கலந்து கொண்டது, திருநள்ளார் கொம்யூனில் பரபரப்பாக பேசப்பட்டது.

பேயை போத்தலில் அடைக்கும் சிங்கள சூனியக்காரர் (காணொளி )

  
நம்பினால் நம்புங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சூனியக்கார வைத்தியர்கள் பேய்களைப் போத்தல்களில் அடைக்கின்றார்கள். பேய்கள் ஆருக்காவது கெடுதல்கள் செய்கின்றபோது பிடித்து அடைக்கின்றனர். ஷெகான் என்கிற சிறுவன் கண்களால் பேய்கள், தெய்வங்கள் போன்றவற்றை தெளிவாக காண்கின்றார் என்று கூறி உள்ளார்.


இது மாத்திரமின்றி ஆவி தனக்கு மிகவும் அருகில் ஆவி வருவதாகவும் அது ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாகவே காணப்படுகிறதாவும் குறிப்பிட்டுள்ளார். இதனை மக்களுக்கு நம்ப வைப்பதற்காக அவர் காணும் பேய்களை பிடித்துக்காட்டும் படி கூறிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் வேண்டுகோளுக்கு இணக்க குறித்த இளைஞன் தனது மாமாவுடன் சேர்ந்து ஆவிகளை பிடித்து போத்தலில் அடைக்கும் காட்சிகளை நீங்களும் காணலாம். மேலும் இது பற்றி ஏராளமான விடயங்களை இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது அவர் தெரிவித்துள்ளார். போத்தல்களில் அடைக்கப்பட்ட பேய்களை நீங்கள் வீடியோக்களில் காணலாம்.

கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்ததால் கணவனைக் கொலை செய்த மனைவி: பரபரப்பு வாக்குமூலம்

 
கள்ளக்காதலனை 2ம் திருமணம் செய்ய இடையூறாக இருந்ததால் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வேலு. சென்ட்ரிங் கான்டிராக்டர். இவரது மனைவி செல்வி(35). இவருக்கு இதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கரிகாலன்(30) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது.

கடந்த 27ம் தேதி வீட்டில் வேலு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தன்னை கட்டிப் போட்டு கணவரை கொன்றுவிட்டு ரூ.5 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றதாக செல்வி போலீசாரிடம் தெரிவித்தார்.
விசாரணையில் கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் உதவியுடன் செல்வியே கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
உசிலம்பட்டி டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார் கொலையாளிகளை தேடினர். விசாரணையில் செல்வி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக கரிகாலனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். அவரை 2ம் திருமணம் செய்ய இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன் வேலு மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றோம்.
அவர் தப்பினார். இதையடுத்து கரிகாலன் மூலம் கூலிப்படையினருக்கு ரூ.3 லட்சம் கொடுத்து கணவரை கொல்ல முடிவு செய்தோம்.
இதற்காக அவர்களுக்கு ரூ.1.6 லட்சம் கொடுத்தோம். கரிகாலன், நண்பர் சரவணன், நாகராஜ், ஜெயக்கொடி, மாலுச்சாமி(19), சதீஷ்(19) ஆகியோர் வைத்து சதித்திட்டம் தீட்டினர். கடந்த 26ம் தேதி நள்ளிரவில் கரிகாலன் வீட்டுக்கு வந்தார்.
முதலில் வேலுவை மூச்சுத் திணறடித்துக் கொலை செய்ய முயன்றனர். கணவர் போராட தொடங்கியதால் நான் கால்களை பிடித்துக் கொள்ள, வேலுவின் கழுத்தை அவர்கள் அறுத்ததுடன், மார்பு, வயிறு பகுதிகளிலும் சரமாரியாக குத்தியதில் அவர் இறந்தார். இவ்வாறு வாக்குமூலம் அளித்தார் என்றனர்.
இவ்வழக்கில் செல்வி, கரிகாலன், அன்னம்பார்பட்டி சரவணன்(29), நாவார்பட்டி சசிக்குமார், கருக்கட்டான்பட்டி நாகராஜ், மாலுச்சாமி மற்றும் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பண்ணைப்பட்டி ஜெயக்கொடியை தேடிவருகின்றனர். கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டனர்.

பிளேபோய் தந்த ரூபா. 7.5 கோடி வாய்ப்பை மறுத்த தீபிகா

 
பொலிவூட் திரையுலக நட்சத்திரங்களுக்கு அடிக்கடி பெரிய தொகைக்கு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு வரும் எதற்கு தெரியுமா அரைநிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் போஸ் கொடுப்பதற்கே அது.
ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சொப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்தது அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை இந்த வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனேவுக்கு அடித்தது.

உலகப் புகழ்பெற்ற பிளேபோய் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், பிளேபோய் செப்டம்பர் மாத இதழுக்கு அரை நிர்வாணமாக… அதாவது மேலாடை இல்லாமல் போஸ் தர வேண்டும் என்று கேட்டார்களாம்.

ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் தீபிகா. பிளேபாய்க்கு விளம்பர படங்கள் எடுத்துத் தரும் அந்த சர்வதேச நிறுவனம் எவ்வளவோ முயன்றும் இந்த வாய்ப்பை ஒப்புக் கொள்ளவே இல்லையாம் தீபிகா.

பிளேபாய் வாய்ப்புக்காக ஹொலிவூட், பொலிவூட் நடிகைகள் தவம் கிடக்கையில், தீபிகா உறுதியாக மறுப்புத் தெரிவித்திருப்பது அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது சக பொலிவூட் நடிகைகளை.

காரைக்குடியில் கல்விப் பிச்சை!

‘பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்கிறது மூதுரை. காரைக்குடி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளி செல்வராஜ் பிச்சை எடுத்து 13 ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைத்துக்கொண்டு இருக் கிறார்.

”எனக்குச் சொந்த ஊரு உசிலம்பட்டிங்க. அஞ்சு வயசு இருக்கிறப்ப, திண்ணையில் இருந்து கீழே விழுந்து காய்ச்சலில் படுத்துட்டேன். அப்போ என் கால் முடமாகிப்போச்சு. இருந்தாலும் தன்னம்பிக்கையோட, 1966-ல் பி.ஏ. பொருளாதாரம் முடிச்சேன். படிச்சு முடிச்சதும் மின் வாரியத்துலயும் லைப்ரரியிலயும் வேலை கிடைச்சது.
ஆனா, அதுக்கு லஞ்சமா 2000 ரூபாய் கேட்டாங்க. குறுக்கு வழியில் வேலையில் சேர எனக்குப் பிடிக்கலை. அதுக்காக, சும்மா இருக்கவும் பிடிக்கலை. சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட ஆரம்பிச்சேன். அப்படியே சைக்கிள் மெக்கானிக் வேலைகளைக் கத்துக்கிட்டு, மதுரை, சென்னை, புதுச்சேரி, எர்ணாகுளம், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம்னு ஊரு ஊராப் போனேன். எங்கேயும் எனக்கு வேலை நீடிக்கலை. நான் படிச்ச படிப்பு எனக்கு வேலை கொடுக்கலை.
இருந்தாலும் அந்தப் படிப்பு வீணாப் போயிடக் கூடாதுனு நெனச்சேன். எங்கே போனாலும், தங்கி இருக்கும் இடத்தில் நாலைஞ்சு பிள்ளை களுக்கு இலவசமா டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அங்கே இங்கே சுத்திட்டு, கடைசியா காரைக்குடிக்கு வந்து சேர்ந்தேன். ‘நான் ஒண்டியாளு.. எந்த வேலை கொடுத்தாலும் பாக்குறேன்’னு சொல்லி பல இடங்கள்ல வேலை கேட்டேன். செட்டியார் ஒருத்தரு சைக்கிள் கடையில் 50 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குக் கூப்பிட்டாரு. 50 ரூபாயைவெச்சு என்ன பண்றது? அதனால, கௌரவம் பாக்காம பஸ் ஸ்டாண்டுல கையேந்த ஆரம்பிச்சுட்டேன். தன்மானத்தை விட்டு பிச்சை எடுக்குறது எனக்கும் பிடிக்கலைதான். ஆனா, என்ன பண்றது… வயிறு இருக்கு.
என்னை நம்பி 13 புள்ளைங்க வேற இருக்கு. யாராச்சும் வேலை கொடுத்தா, இப்பவே இந்தப் பொழப்பை விடுறதுக்கு நான் தயாரா இருக் கேன்!” அழுத்தமாகச் சொன்ன செல்வராஜ், ”காலையில் 7 மணியில் இருந்து 11 மணி வரை பஸ் ஸ்டாண்டுல பிச்சை எடுப்பேன். அப்புறம் மதியச் சாப்பாட்டை பார்சல் வாங்கிட்டு வீட்டுக்குப் போவேன். குளிச்சு சாப்பிட்டுட்டு, மறுபடியும் பஸ் ஸ்டாண்டுக்குப் போவேன். 5 மணி வரைக்கும் பொழப்பைப் பாத்துட்டு வீட்டுக்குக் கௌம்பிடுவேன். 5.30 மணிக்கு எல்லாம் என்கிட்ட டியூஷன் படிக்கிற குழந்தைகள் வீட்டுக்கு வந்துடுவாங்க. 8 மணி வரைக்கும் அவங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். பிளாஸ்டிக் சாமான்கள் விக்கிறவங்க, பினாயில் விக்கிறவங்க பிள்ளை களுக்குத்தான் நான் டியூஷன் எடுக்குறேன்.

எனக்கு வர்ற வருமானத்துல, நோட்டுப் புத்தகங்கள், ஜியோமென்ட்ரி பாக்ஸ் வாங்கிக் கொடுப்பேன். போன வருஷம் அதுக்காக 2000-ம் ரூபாய் வரைக்கும் செலவாச்சு. இந்த வருஷம் 1500 ரூபாய் செலவாச்சு. நான் வாங்கித் தர்றதைப் பாக்கும்போது, அந்தப் புள்ளைங்க முகத்தில் நிறைஞ்ச சிரிப்பு வரும். அதுக்காகவே என்ன வேணாலும் பண்ணலாம் சார்!” கும்பிட்டு விட்டு தரையில் காலை இழுத்தபடி நகர்ந்து செல்கிறார் செல்வராஜ்!

வீடியோ கேம் விளையாட சொந்தப் பிள்ளைகளை விற்ற தம்பதி

சீனாவைச் சேர்ந்த இளம் தம்பதி ஒன்று வீடியோ கேம் விளையாடுகின்றமைக்காக சொந்தக் குழந்தைகளை விற்பனை செய்து உள்ளது. லி லின், லி யு ஆன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் 2007 ஆம் ஆண்டு முதன் முதல் நெட் கபே ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.
நெட் கபேயில் வீடியோ கேம் விளையாடுகின்றமைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கின்றமைக்காக மூன்று குழந்தைகளையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விற்று இருக்கின்றார்கள். மூன்றாவது குழந்தையை விற்பனை செய்து கொண்டபோது லி லினின் தாய் கண்டுபிடித்து விட்டார்.

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இரகசிய கமெராக்கள்: மாணவிகள் அதிர்ச்சி

அமெரிக்காவில் மாணவிகள் இருவர், தாம் தங்கியிருந்த வீட்டின் அறைகளில் இரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அவதானித்து அதிர்ச்சியுற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
புளோரிடா மாகாணத்திலுள்ள தொடர்மாடிக் கட்டிடமொன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல்கேரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கோடைக் காலத்தை கழிப்பதற்காக வந்த வான்யா அமோக்கோவரீவா (வயது 22) ரலிஸ்டா தாம்போவா (வயது 23) ஆகிய இரு பெண்களும் குறித்த தொடர் மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தங்கியுள்ளனர்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டின் குளியலறை உட்பட ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக குறித்த பெண்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் கமெராக்கள் மூலம் யாரோ அவதானித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இக்கருவிகள் புகை எச்சரிக்கைக்கான கருவிகளாக இருக்கும் என்றே இம்மாணவிகள் ஆரம்பத்தில் கருதியிருந்தனர். ஆனால் அவை கமெராக்கள் என்பதை அறிந்து அவர்கள் மிக அதிர்ச்சியடைந்துள்ளனர்.
'இது உண்மையில் பயங்கரமானது. இவ்வாறான சம்பவம் எனக்கும் எனது நண்பிக்கும் நடக்குமொன்று கொஞ்சமேனும் எதிர்பார்க்கவில்லை.
'நாங்கள் ஒரு கோடைப் பருவத்தை அமெரிக்காவில் கழிக்கவும் இங்கு வேலை செய்யவுமே வந்தோம்' என தாம்பஸோவோ தெரிவித்துள்ளார்.
இக்கமெராக்களை யார் பொருத்தினார்கள் என்பதை கண்டறிவதற்கு புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.