Tuesday, 12 July 2011

விஜயகாந்த் மண்டபம் போல் விஜய்யின் திருமண மண்டபம் இடுபடும் சூழல்?

சென்னை போரூர் சிக்னல் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இப்பிரச்சனையை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்கு இடம் தேவைப்படுவதால் அங்குள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்கியது. கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் கடைகளை காலி செய்யவில்லை.


இந்நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. இன்று காலை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிகமான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமண மண்டபம் உள்ளது. மேம்பால பணிகளுக்காக திருமண மண்டபத்தின் முன்பக்கம் இடிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடைகள் இடிக்கப்படுவதால் வியாபாரிகள் திரண்டு வந்தனர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடைகள் இடிக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறார் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனியின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு மணிமகுடம் சேர்ந்துள்ளது.



அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் லிம்கா சாதனையாளர் புத்தகத்தில் இந்தியா சார்பில் டோனியின் பெயர் இடம் பிடிக்க உள்ளது.

20&20 உலககோப்பை(2007ஆம் ஆண்டு), ஒருநாள் உலககோப்பை(2011ஆம் ஆண்டு) ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டன் என்ற பெயரை டோனி பெற்றுள்ளார்.

இந்த சாதனைக்காக அவரது பெயர் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் லிம்கா உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

இந்த தகவலை லிம்கா புத்தக ஆசிரியர் விஜயா கோஷ் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது, டோனி பெயரை நாங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவரும் புத்தகத்தில் சேர்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.

புதன்கிழமை சென்னை வருகிறார் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!

 வரும் புதன்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரசிகர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். 

ரஜினிகாந்த்தின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அங்கேயே ஓய்வு எடுத்து வந்தார்.

தற்போது அவரது உடல்நிலை நூறு சதவீதம் குணமாகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை அழைத்து வர மூத்த மகள் ஐஸ்வர்யா நேற்று சிங்கப்பூர் சென்றார்.

புதன்கிழமை இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்கபடுகின்றது . 

ரஜினி வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள், அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


உயிரை மட்டும் காக்கும் நோக்கோடு சர்வதேசக் கடலில் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவுவோம்

கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் இந்தோநேசிய அரசினால் சிறீலங்காவிற்கு திருப்பியனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும், அவ்வாறு நடைபெற்றால் தாம் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அக்கப்பலில் உள்ள எம் அன்பு உறவுகளில் ஒருவரான திரு.செல்வக்குமார் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களினுடையதே.
அந்த வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள எமது ஊடக அறிக்கையினை உங்கள் ஊடகங்களினூடாக மக்கள் மத்தியில் கொண்டுசென்று உடனடியாக மக்களை செயற்படவைக்க உதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
ஊடகப் பிரிவு
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

குரங்கின் கையில் பூமாலை கொடுத்தால்??... குரங்கின் கையில் எ.கெ 47 கொடுத்தால் எப்படி இருக்கும். (வீடியோ இணைப்பு)



துள்ளிக்குதிக்கும் மீன்கள் (வீடியோ இணைப்பு)

அலுவலக வளாகத்தில் தவறி விழுந்த வேடிக்கை

 
அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நற்காலி தவறி அல்லது நடக்கும் போது கால் தவறி விழுந்தவர்களை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.








முதலையுடன் விளையாடும் மனிதன்

Gilberto Graham என்பவர் 992 பவுண்ட்ஸ் எடையுள்ள முதலையுடன் நட்புடன் விளையாடி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது.

Gilberto தான் இந்த முதலையை காப்பாற்றியுள்ளார். அதனால் Gilberto யுடன் மிகுந்த நட்புடன் பழகி வருகிறது.

அச்சுவேலி- தொண்டைமானாறு வீதி மீண்டும் திறப்பு

அச்சுவேலி- தொண்டைமானாறு வீதி நேற்று பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

போரினால் 1990ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.


பலாலிப் படைத்தளத்தின் கிழக்கு எல்லைக்குள் பல ஆண்டுகளாக சிக்கியிருந்த இந்த வீதியை சிறிலங்காப் படையினர் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த வீதி ஊடாக நேற்று பேருந்துச் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.

ஸ்பெய்ன் நாட்டு அரசாங்கம் மற்றும் ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ள இந்த வீதியை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்துள்ளார்.

ரமேஷ் சந்திரகசேர் என்பவர் வாயில் நீண்ட வாளை நுழைத்து சாகசம்

இந்தியாவிலுள்ள இந்தூர் நகரத்தில் வசிக்கும் ரமேஷ் சந்திர கசேர் என்பவர் ஒரே நேரத்தில் 11 நீண்ட வாளை நுழைத்து அற்புதமான சாகசம் செய்து காட்டியுள்ளார்.

இந்தியத் தொலைக்காட்சி விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் � சொதப்பி விட்டதால் நெருக்கடி (வீடியோ இணைப்பு)

இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துடன் இணைந்து நடத்தப்பட்ட விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல பங்கேற்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இதன் காரணமாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் ஒன்றின் மீது ஒன்று குற்றம்சாட்டியுள்ளதுடன், முறுகலான நிலை ஒன்றும் ஏற்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் என்ற ஆவணப்படத்துடன் இணைந்ததாக நேரடி விவாத நிகழ்வு ஒன்றையும் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.

கடந்த 8ம் நாள் இரவு இடம்பெற்ற இந்த நேரலை விவாதத்தில் சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் பங்கேற்றிருந்தார்.

சென்னையில் இருந்து இந்த நிகழச்சி நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டது.

இந்த விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உரிய வகையில் பதிலளிக்கவில்லை என்றும் நிகழ்ச்சியில் எதிர்த்தரப்பில் எழுப்பப்பட்ட பல வாதங்களுக்கு அவர் பொருத்தமான பதில் கூறாமல் சொதப்பி விட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேவேளை, இந்த நிகழ்ச்சி முழுவதுமே விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவே நடத்தப்பட்டதாகவும்,, நிகழ்ச்சியின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் கொடியும் கூட காண்பிக்கப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இராணுவப் பேச்சாளர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அது பக்கச்சார்பற்றது என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது சிறிலங்கா அரசின் தரப்பில் இழைக்கப்பட்ட மிகப்பெரிய தவறு என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இராணுவப் பேச்சாளரே பதிலளிக்க வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளே அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து முழுமையாக ஆராயாமல், இராணுவப் பேச்சாளரை இதில் பங்கேற்க வைப்பதற்காக சிறிலங்கா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்

நிகழ்ச்சியின் மைய நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், சிறிலங்கா அதிபரின் மூலம் இந்த நிகழ்ச்சியில் இராணுவப் பேச்சாளரை பங்கேற்க வைத்தது வெளிவிவகார அமைச்சு செய்த மிகவும் மோசமான முட்டாள்தனமான காரியம் என்றும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பிரித்தானியாவின் முன்ளாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் அபிசேக் பானு, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார், கேணல் ஹரிகரன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை ராகுல் கன்வால் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் நடந்திருந்தால், அனைத்துலக விசாரணைகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றே கருத்து வெளியிட்டிருந்ததாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
puthinappalakai





















கடலுக்கடியில் வெடித்த எரிமலை (வீடியோ இணைப்பு)

எரிமலை வெடிப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அவ்வாறு வெடிக்கும் போது எரிமலை குழம்பு மற்றும் புகை வெளியோரும். ஆனால் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்தால் எப்படி இருக்கும் என்பதை James Williams படம்பிடித்து காட்டியுள்ளார்.



தஞ்சையில் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் அமைக்க நன்கொடை தாரீர்! காசி ஆனந்தன். நெடுமாறன் ஐயா வேண்டுகோள் (வீடியோ இணைப்பு)

ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது - தஞ்சையில் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் அமைக்க நன்கொடை தாரீர்! காசி ஆனந்தன். நெடுமாறன் ஐயா வேண்டுகோள்




சிங்கள இனவாத அரசினால் 2009 மே 18ல் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகிவிட்டது. சோழ மாமன்னனான இராசஇராசன் தஞ்சையில் எழுப்பிய மாபெரும் கற்கோயிலுக்கு அடுத்தபடியாக, ஈழ விடுதலைக்காக முள்ளிவாய்க்கால் படுகொலையில் பலியானவர்களின் நினைவாகவும், தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னத்தை நிறுவும் முயற்சியில் உலகத் தமிழர் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது.

அற்புதமாக உடலை வளைத்து சாதனை படைத்த பெண் (வீடியோ இணைப்பு)

Iona Luvsandorj என்ற பெண் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உடலை மிக சாதரணமாக வளைத்து காட்டி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

நிர்வாணமாக காட்டும் கம்பியூட்டர்! அவதானம் இவ்வீடியோவைப் பாருங்கள்.

நீங்கள் மானத்தை மறைக்கின்ற வகையில் ஆடை அணிந்து கொண்டு உங்கள் அலுவலகத்துக்கோ அல்லது வேறு அலுவலகங்களுக்கோ செல்லக் கூடும்.

ஆனால் நீங்கள் உள்ளே நுழைகின்றபோது அங்குள்ள கம்பியூட்டர்களில் முழு நிர்வாணமாக தோன்றக் கூடும்.

அவதானம்.

இவ்வீடியோவைப் பாருங்கள்.