Wednesday, 8 February 2012

சட்டசபையில் ஆபாச படம் பாரதீய ஜனதாவினரின் சாயம் வெளுத்துவிட்டது: கபில்சிபல் தாக்கு


கர்நாடக சட்டசபையில் செல்போனில் மந்திரிகள் ஆபாச படம் பார்த்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பாரதீய ஜனதா ஆளும் மாநிலம் என்பதால் இதை அந்த கட்சிக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டது. ஏற்கனவே ஊழல் புகாரில் எடியூரப்பாவை பதவி நீக்ககோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. தற்போது ஆபாசபட விவகாரத்தில் மந்திரிகளை நீக்க வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியது. இதனால் 3 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.

இதுபற்றி மத்திய மந்திரி கபில்சிபல் கூறியதாவது:-

பாரதீய ஜனதா கட்சியினர் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரிந்துவிட்டது. அவர்களது சாயம் வெளுத்துவிட்டது. அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லாவிதமான கேளிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். எப்போதாவது அரசியல் நிகழ்வுகள்தான் கேளிக்கையாக இருக்கும். இப்போது அவர்களது அரசியல் மற்றவர்களுக்கு கேளிக்கையாகிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் புகார் கூறப்பட்ட மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 3 பேரும் ராஜினாமா செய்து விட்டனர். அவர்கள் மீதான புகார் உண்மை என்றால் அது கவலைப்பட வேண்டியது ஒன்று என்றார். இந்நிலையில் புகார் கூறப்பட்ட ஆரம்பக்கட்ட நிலையிலேயே நாங்கள் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் என்று பாரதீய ஜனதா தலைவர் தனஞ்செய்குமார் கூறினார்.

ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது: சாமி


சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை நிறுத்த முடியாது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.

இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கதிர்காமம் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் ரத்தினபுரியில் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை.

வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு இடம் தராமல் விடுதலைப் புலிகளை அழித்தார் ராஜபக்சே. புலிகள் ஒழிக்கப்பட்டது, தமிழர்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு இந்தியா உதவி செய்யாமல் பின்வாங்கியதால் தான் இலங்கையை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இதற்கு கருணாநிதி தான் காரணம்.

ஹாம்பன்டோடா துறைமுகத்தை மேம்படுத்த முதலில் இந்திய உதவியைத் தான் இலங்கை நாடியது. ஆனால், இந்தியா அதில் ஆர்வம் காட்டாததால் சீனாவிடம் அந்தப் பணியை ஒப்படைத்தது இலங்கை.

கச்சத் தீவை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது. கருணாநிதியும் இந்திரா காந்தியும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படிதான் கச்சத் தீவு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது கருணாநிதி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேவை நிறுத்த முடியாது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. புலிகளை ஒழித்ததற்காக ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது.

ராஜிவ் காந்தியை புலிகள் கொன்றதுதான் அவர்கள் செய்த மாபெரும் தவறு. அது அவர்களின் முட்டாள்தனம். கூலிக்காக செய்தார்களா அல்லது வேறு தேவைக்காக செய்தார்களா என்பது தெரியாது.

ராஜிவ் காந்தி இலங்கை பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால் பிரச்சனை சுமூகமாக தீர்ந்திருக்கும்.

விடுதலைப் புலிகள் போதை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்திலும் ஈடுபட்டனர். அதை எவரும் மறுக்க முடியாது.

இலங்கையில் தென் பகுதி சிங்கள மக்களின் தன்மானத்திற்கு இடையூறு விளைவிக்காத வகையில் வட கிழக்குப் பகுதி தமிழ் மக்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தீவிரவாதம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தால் வட கிழக்கிலுள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இலங்கை அரசை நம்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். வெளிநாடுகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இலங்கைக்கு இந்தியா கூடுதல் நெருக்கடி கொடுத்தால் இலங்கைக்கு உதவி செய்ய இன்னும் பல நாடுகள் உள்ளன.

வடகிழக்கு மக்களை விட இலங்கை வாழ் இந்திய மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் மிகவும் கீழ்மட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். இது குறித்து இந்தியா கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். இந்தியாவின் இலங்கை கொள்கை வட-கிழக்கு பகுதிகளையே சார்ந்துள்ளது. இதை விடுத்து அந் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சித் திட்டங்களிலும் இந்தியா ஈடுபாடு காட்ட வேண்டும்.

இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சனைகளை முன் வைத்து டெல்லியில் மாநாடு ஒன்று நடத்தவுள்ளேன் என்றார் சாமி.

ஐஐஎம் மாணவர்களுக்கு 'கொலவெறி' லெக்சர் கொடுத்த தனுஷ்!


நடிகர் தனுஷ் தான் பாடிய 'கொலவெறி' பாடலின் வெற்றி குறித்து ஐஐஎம் அகமதாபாத் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.

3 படத்தில் தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி' பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது. இதனால் அவரது புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் கூட தனது வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு தனுஷை அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கொலவெறி பாடலின் புகழ் குறித்து அவர் இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் ஸ்கூலான ஐஐஎம் அகமதாபாத்தில் உரை நிகழ்த்தினார்.

அங்கு திரைப்படத் துறை குறித்த படிப்பு படிக்கும் 150 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனுஷிடம் கேள்விகள் கேட்டனர்.

பின்னர் அவர் டுவிட்டரில், ''ஐஐஎம் அகமதாபாத் மிகவும் அழகாக உள்ளது. அங்குள்ளவர்களும் சரி, இடமும் சரி. மாணவர்கள் நல்ல கேள்விகளைக் கேட்டனர். அருமையான அனுபவம்'' என்று கூறியிருக்கிறார்.

உரை நிகழ்த்தும் முன்பு அவர் டுவிட்டரில் கூறுகையில், ''ஐஐஎம் அகமதாபாத்தில் நாளை உரை நிகழ்த்த தயாராகிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேச வராது. ஆனால் அதையெல்லாம் யார் கண்டார். நான் இந்தியன், ஆங்கிலேயன் அல்ல. ஹி...ஹி...ஹி.. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

12-மணி நேர மின்வெட்டு ஜெயலலிதாவின் திட்டமிட்ட நாடகம்

 


தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டை தீர்க்க வேண்டிய நிலையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாஏதோ வேறு மாநிலப் பிரச்சினை போல இதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக ஒரு மணி அல்லது இரண்டு மணி நேர மின்வெட்டு என்பதே தாங்க முடியாத எதிர் விளைவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடியது. அதுவும் மாணவர்களின் பரீட்சை நேரத்தில்8 மணி நேர மின்வெட்டு என்பது எந்த அளவு மோசமாக மக்களை பாதிக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலை.

குறுசிறுநடுத்தரத் தொழில்கள் மற்றும் விவசாயப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.

நியாயமாக இந்தப் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் அல்லவா பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்?

'மோடியிடம் வாங்குகிறோம்ஆந்திராவில் வாங்கப் போகிறோம்... மகாராஷ்ட்ராவுடன் பேசுகிறோம்என்றெல்லாம் ஆட்சிக்கு வந்த முதல் மாதம் மட்டும் அறிக்கை விட்ட ஜெயலலிதாபின்னர் அப்படி யு டர்ன் அடித்து அமைதியாகிவிட்டார்.

மின் வெட்டு பற்றி குறைந்தபட்சம் பேசக் கூட அவர் தயாராக இல்லை.

இன்னொரு பக்கம் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலை. இந்தப் போராட்டத்துக்கு மக்களிடம் பெருகும் ஆதரவுதான் மத்திய மாநில அரசுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு இது பெரிய இக்கட்டு. போராட்டத்தை ஆதரிக்கவும் முடியாது... மக்களே நடத்தும் அந்தப் போராட்டத்தை நசுக்கவும் வழியில்லை.

அணு உலைக்கு ஆதரவாககல்பாக்கம் விஷயத்தை ஒரு நாளைக்கு இருபது முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந் நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிதான் இந்த மின்வெட்டு என்று நடுநிலையாளர்கள் பலரும் உறுதியாக நம்புகிறார்கள்.
 இப்படியே தொடர்ந்து மின்வெட்டு நேரத்தை அதிகரித்து கொண்டு போவதின் மூலம் மக்களுக்கு கூடங்குளம் போராட்டக்காரர்களின் மீது தவிர்க்கமுடியாத ஒரு கோபத்தை கொண்டுவர முடியும் என்பது மத்திய மாநில அரசுகளின் எண்ணமாக இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட துவங்கினால் மின் தட்டுபாடு இருக்காதே என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் உருவாக்குவதும். அதன் மூலம் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்பாளர்களை செயலிழக்க செய்வதுமே இவர்களின் திட்டமாக இருக்கும் என்று நம்பபடுகிறது. 
'இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசுகள் இரண்டுமே கைகோர்த்துச் செயல்படுகின்றன. கரண்ட் இல்ல... நாங்க என்ன பண்ணட்டும் என்று சொல்ல ஒரு மாநில நிர்வாகம் எதற்குஉண்மையான அக்கறை இருந்தால்மின்சாரம் தரத் தயாராக உள்ள குஜராத் முதல்வர் மோடியிடம் 900 மெகாவாட்டை வாங்கியிருக்கலாமே... ஆனால் ஜெயலலிதா அதை வசதியாக மறந்துவிட்டார். மின்வெட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல்கொஞ்சம் கொஞ்சமாக மின்வெட்டு நேரத்தை அதிகரித்துக் கொண்டே போவதுதான் திட்டம். கரண்ட் இல்லாத இந்த நேரத்துல கூடங்குளம் கரண்ட் கிடைச்சா நல்லதுதானே... அதை ஏன் தடுக்கணும்என்று சொல்ல வைப்பதுதான் நோக்கம் என்கிறார்கள் நடப்பதை உற்று கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள்.

கூடங்குளம் விஷயத்தில் தேசத்துக்கும் மக்களுக்கும் சாதகமான ஒரு தீர்வு எட்டப்படுவது மிக முக்கியம். அதே நேரத்தில்தமிழக மின்வெட்டை சமாளிக்க அவசர கால நடவடிக்கைகளும் மிக மிக அவசியம்.

சிம்புவும் பிரபுதேவாவும் பணத்துக்காக நயன்தாராவை காதலித்து ஏமாற்றி விட்டனர் :நயன்தாரா குடும்பத்தினர் கண்டனம்


நயன்தாராவும் பிரபுதேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். பிரபு தேவா திருமணத்துக்கு சம்மதிக்காததால் பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத்துக்காகவே நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்துவாகவும் மதம் மாறினார்.ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரபுதேவா திருமணத்துக்கு தயாராக இல்லை என்பது அவருக்கு தாமதமாகவே தெரிந்தது.

இதையடுத்து அவரை உதறிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். நாகார்ஜுனா ஜோடியாக தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அஜீத்துடனும் தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் நயன்தாரா குடும்பத்தினர் பிரபு தேவா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.நயன்தாராவின் ஊரான கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் அவரது சித்தி, சித்தப்பா மற்றும் உறவினர்கள் கூறியதாவது:-

பிரபுதேவா எங்கள் குடும்பத்து பெண் நயன்தாராவை ஏமாற்றி விட்டார். அவள் நாங்கள் தூக்கி வளர்த்த பெண். இப்படி அவள் நிலைமை ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.நயன்தாராவுக்கு பிடிவாத குணம் ஜாஸ்தி என்கின்றனர்.அது தவறு.அவள் வெகுளியானவள்.முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள்.இப்போது பிரபு தேவாவிடம் ஏமாந்து இருக்கிறாள்.

சிம்பு வல்லவன் படம் எடுத்த போது பண நெருக்கடி ஏற்பட்டது அப்போது அவருக்கு நயன்தாரா உதவினார்.ஆனாலும் சிம்பு ஏமாற்றி விட்டார். அவரை பிரிந்து பிரபுதேவாவிடம் வந்ததும் இனியாவது சந்தோஷமாக இருப்பாள் என்று எதிர்பார்த்தோம். இங்கும் அவள் நிலைமை பரிதாபமாகி உள்ளது. பிரபுதேவாவை நயன்தாரா ரொம்ப நம்பினாள்.

ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்வதற்கு பணம் தந்தது யார் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் பறி போனது. அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனி மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்து இருக்கும்.

எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர். இப்போது எதுவும் இல்லை என்று தெரிந்ததும் கழற்றி விட்டு விட்டார்கள். நயன்தாரா சினிமாவை விட்டு வந்தால் எங்கள் குடும்பத்திலேயே நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை விரட்டியடித்த பொதுமக்கள்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிக்கர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் அணுமின்நிலையத்திற்கு எதிராக தமிழக மக்களின் ஆதரவு கேட்டு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் புதிய பஸ்நிலையம் முன்பு 4 பேர் அனுமதியின்றி பிரசாரம் செய்தனர். அவர்கள் அணுமின் பாதிப்பை விளக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகித்தும், அணுமின் நிலையத்தை மூடக்கோரியும் கோஷம் எழுப்பினர். அப்போது அங்குநின்ற பொதுமக்கள் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு உள்ளது.

அணுமின் நிலையத்தை இயக்கினால்தான் மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியும். எனவே நீங்கள் இங்கு பிரசாரம் செய்யக்கூடாது, இங்கிருந்து செல்லுங்கள் என்றனர்.   இதனால் அணுமின் எதிர்ப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதமானது அவர்களுக்குள் மோதலாக உருவானது.

இதையடுத்து பொதுமக்கள் 4 பேரையும் அங்கிருந்து விரட்டியடித்து ஊருக்கே வெளியே போய் விட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்டபெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அணுமின் எதிர்ப்பாளர்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் காயல்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,! கோச்சடையான் தான் எனக்கு போட்டி : பவர் ஸ்டார்


தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒருவர் எப்படியாவது பிரபலமாகி விடுவர். அந்த வகையில் எடுப்பான பல்லும், துடிப்பான முகமும், தடிப்பான உருவமும், கருப்பு கண்ணாடியில், வெள்ளை உடையில் அவர்  தலையை கோதி  விடும் ஸ்டைலும், கமல் முதல் கவர்னர் சந்திப்பு வரை, பவர் ஸ்டார் என்ற பட்டதோடு உலா வரும் டாக்டர்.சீனிவாசனின் சிறப்பு பேட்டி உங்களுக்காக. இதோ அவரே பேசுகிறார் கேளுங்கள்...

மதுரையில் சிம்மக்கல்லில் 10 வருடங்களாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்த என்னை நோயாளியாக வந்த ஒருவர், நீங்கள் சினிமாவில் நடித்தால் சூப்பரா இருக்கும் என்று உசுபேத்தி விட நானும் கிளம்பி கோடம்பாக்கம் வந்தேன். வந்த சில நாட்களிலேயே லத்திகா என்ற கதையை ரெடி பண்ணி, நானே இயக்கி நடித்தேன். படமும் சூப்பரா 225 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அடுத்து கொஞ்ச இடைவெளியில் ஆனந்த தொல்லை படம் வெளியாக உள்ளது. இந்தபடத்தில் வில்லனாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியா வாணி விஸ்வநாத் நடிக்கிறாங்க.

என்னை பொறுத்த வரை ஏனோ தானோ என்று படம் பண்ண விருப்பம் இல்லை. நல்ல கதை தான் ரொம்ப முக்கியம். இந்த படத்தை அடுத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் சங்கவி தான் என் ஜோடி. படத்தை நானே இயக்கி நடிக்கிறேன். இதற்கு அடுத்து படைத்தலைவன். இந்தபடம் ஒரு போலீஸ் ஸ்டோரி. மாரி மைந்தன் இப்படத்தை இயகுகிறார். கே.எஸ்.ரவிக்குமார் சார் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதை விட ரொம்ப முக்கியம் சங்கவி மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைத்தால் மன்மத ராசா பாட்டு மாதிரி, என்னாலையும் ஆட முடியும். இதற்காக இப்போ பரதம் உள்ளிட்ட நடனம் எல்லாம் கத்துக்குகிட இருக்கேன்.

சினிமா மட்டும் இல்ல, சொந்தமா பிசினஸ் இருக்கு, கிளினிக்கு இருக்கு, அதை தவிர எனக்கு கல்லூரி மாணவர்கள் ரசிகர்கள் அதிகம். அவங்க கல்சூரல் விழாக்களுக்கு நான் கலந்துகிட சொல்லி வர்புறுத்துராங்க. நானும் போய் ‌ஜாலியா இருந்துட்டு வரேன். தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள படங்கள் பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க விரும்புகிறேன். எனக்கு பெண் ரசிகர்கள் ரொம்ப இருக்காங்க. பவர் ஸ்டார் படத்தில் நல்ல கதை இருக்கும் என்று நிறைய பேர் படம் பார்க்க வர்றாங்க. அப்ப நீங்க தான் அடுத்த எம்.ஜி.ஆரா என்று கேட்காதீங்க. நான் அப்படி சொல்ல வரவில்லை. அவருக்கு அடுத்து நான் தான் வருவேன். இன்னும் ரசிகைகள் மனதில் இடம் பிடிப்பேன். அப்படின்னா உங்களுக்கு அரசியல் ஆசை இருக்குமோன்னு தோணும், சொன்ன நம்பமாட்டீங்க, எனக்கு ரசிகர் மன்றம் வைக்க கேட்டு ரசிகர்கள் ‌தொல்லை பண்றாங்க. ஆனால் நான் தான் இப்போதைக்கு மன்றம் எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். என்னால் முடிஞ்ச வரைக்கும் நல்லது பண்ணிகிட்டு இருக்கேன்.

இந்த சினிமாவிற்குள் நான் வந்தது ரொம்ப பெரிய விஷயம். பொது இடங்களில் என்னை பார்த்தால் உடனே பவர் ஸ்டார்ன்னு எல்லோரும் ஓடி வராங்க. லத்திகா படத்தில் நடிச்ச காட்சியை சொல்லி நடிச்சு காட்ட சொல்றாங்க. அந்தளவிற்கு மக்கள்கிட்ட நான் ரீச் ஆகியிருக்கேன். எனக்கு கூட ஒரு சமயம் பாரதிராஜா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று தோணுச்சு, அப்புறம்தான் அவர்கிட்ட போய் வாய்ப்பு கேட்டு நிக்குறது பதிலா நாமலே படம் டைரக்ட் செய்யலாம் என்று முடிவு பண்ணி, படம் இயக்க தொடங்கினேன். இப்பகூட தினமும் பத்து கதைகள் கேட்கிறேன், ஆனால் எனக்கு செட் ஆனா மட்டும் தான் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.

இப்போதைக்கு என் படங்கள் எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. பவர்ஸ்டாரின் படத்துக்கு ஒரே போட்டி படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் தான். சென்னையில் மட்டும் எனக்கு 5லட்சம் ரசிகர்கள் இருக்காங்க. இதுமாதிரி பல ஊர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. என்னுடைய பலமே என் ரசிகர்கள் தான். தொடர்ந்து நல்ல கதையம்சம், நல்ல கருத்துள்ள படங்களை பண்ணுவேன் என்று சொல்லி முடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், சமீபத்தில் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும், கவர்னருடனும் எடுத்து கொண்ட போட்டோவையும் என்னால் மறக்க முடியாது என்று சொல்லி முடித்தார்.

ஆக தமிழ் சினிமாவில் இனி பவர் ஸ்டாரின் படங்கள் எல்லாம் லத்திகா மாதிரி 200, 300 நாட்கள் ஓட வாய்பிருக்கு என்று சொல்லி வைப்போம்.

12-மணி நேர மின்வெட்டு...வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!


தலைநகர் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது.

கோவைஈரோடுகாஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும்ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.

ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகுமின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிரஅதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது.

சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டு என்று சொன்னாலும்அறிவிக்கப்படாமல் கூடுதலாக அரை மணி அல்லது 1 மணிநேரத்துக்கு மின் வெட்டு நிலவுகிறது. எப்போது கேட்டாலும் பராமரிப்பு என காரணம் கூறுகிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.

8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை...

கிராமப் புறங்களின் நிலைமைதான் சொல்லத் தரமற்றுப் போயுள்ளது. சில பகுதிகளில் 6 மணி நேரம்சில மாவடங்களில் 8 மணி நேரம்வேலூர் போன்ற வட மாவட்டங்களில் சில நாட்களில் 12 மணி நேரம் கூட மின்வெட்டு நிலவுகிறது.

பொங்கல் பண்டிகை சமயத்தில் வேலூர்கிருஷ்ணகிரிதர்மபுரி மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது.

முன்பெல்லாம் என்னதான் மின் தட்டுப்பாடு இருந்தாலும்மழைக்காலத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது. கடந்த திமுக ஆட்சி முழுவதுமேமழைக் காலங்களில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டோ, 'மழையாவது வெயிலாவது... கட் பண்ணு கரண்டைஎன்கிற ரீதியில் நிலைமை உள்ளது. மழை வெளுத்தெடுத்த அக்டோபர்நவம்பர் மாதங்களில் கூட சென்னையில் 2 மணி நேரமும்பிற பகுதிகளில் 6 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது.

குறிப்பாக மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்கும் இந்தத் தருணத்தில் மின்சாரம் அடியோடு இல்லாமல்மக்கள் லாந்தர்கள்மெழுகுவர்த்திகள்சிம்னி விளக்குகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையேஇன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டை சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகரம்கிராமம் என்ற பேதமின்றி இந்த 8 மணி நேர மின்வெட்டு இருக்கும்.

மின்வெட்டு நேரங்கள்:

காலை6 முதல்9 மணி வரை3 மணி நேரமும்பகல்12 முதல்மாலை3 மணி வரை3 மணி நேரமும்மாலை6 முதல்இரவு7 மணி வரை மற்றும் 8 முதல்9 வரைதலா 1 மணி நேரம் எனமொத்தம்8 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.

சில பகுதிகளில் காலை9 மணி முதல்12மாலை3 முதல் 6இரவு7 முதல்8 மற்றும் 9 முதல்10 என8 மணி நேரம்.
 (அரசு அறிவித்துள இந்த மின்வெட்டு நேரங்கள் மக்களை ஏமாற்றவே! எங்கள் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு நிலவுகிறது. எப்போது மின்சாரம் போகும் எப்போது வரும் என்றே தெரியாத நிலை உள்ளது. இதனால் சாதாரண மக்களின் அன்றாட பணிகள் கூட முடங்கி போய் உள்ளது. இரவு நேரங்களில் கூட தூக்கத்தை கலைக்கும் 'பேய்' கனவு போன்று மின்வெட்டு உள்ளது.)
சென்னையில் மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக மின்வெட்டு நீடிக்கும் எனத் தெரிகிறது.

தொழில்துறை முடங்கும் நிலை

இந்த மின் வெட்டு காரணமாக தொழில்துறை அடியோடு முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கோவையில் 40000 தொழிற்சாலைகளில் 80 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்திருவண்ணாமலைதிருவள்ளூர் மாவட்டங்களில் சிறு தொழில்கள்விசைத் தறிகள் இயக்கம் முடங்கியுள்ளது. ஈரோட்டிலும் நிலைமை மோசமாகியுள்ளது.

அதேநேரம் பெரும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி மின்சாரத்தை தனி வழியில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது!

திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டுள்ள 4 புதிய மின் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர 2013 அல்லது 2014 ஆகலாம். அந்தத் திட்டங்கள் வந்தால் மட்டுமே தமிழக மக்களின் இருட்டுக்கு ஓரளவு விடிவு பிறக்கும். அதுவரை?

ஷாருக்குடன் நெருக்கம்: பிரியங்காவை ஒதுக்கும் பாலிவுட்?

 


ஷாருக்கானுடன் 'ஓவர்' நெருக்கமாக இருப்பதால் இயக்குனர் கரண் ஜோஹார் தனது படத்தில் பிரியங்காவைப் போடுவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

நடிகை பிரியங்கா சோப்ராவும் ஷாஹித் கபூரும் அவ்வப்போது சேர்வதும் பிரிவதுமாக இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் மீண்டும் பிரிந்தபோது பிரியங்கா ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக உள்ள ஷாருக்கானைப் பிடித்துக் கொண்டார். ஷாருக் பிரியங்காவுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்றும் கூறப்படுகின்றது.

வீட்டில் மனைவி கௌரி கேட்டால் ஷூட்டிங் போனேன், அங்கே போனேன், இங்கே போனேன் என்று டபாய்க்கிறாராம். இதனால் கௌரி பிரியங்கா மீது காட்டமாக உள்ளார். இந்நிலையில் ஷாருக்குடன் ஒட்டி உறவாடும் பிரியங்காவை பாலிவுட் நடிகர்களின் மனைவிமார்கள் ஒதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளனர். ஹிரித்திக் ரோஷனின் மனைவி ஏற்கனவே பிரியங்காவை விட்டு விலகி விட்டார். அதேபோல மேலும் பலரும் விலகி வருகின்றனர். அவர்கள் கௌரிக்கு ஆதரவு தெரிவித்து அவ்வாறு செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

ரித்திக் ரோஷன் மனைவி எப்படி பிரியங்காவை ஒதுக்கியுள்ளாரோ அதே போன்று கௌரிக்கும், ஷாருக்கானுக்கும் நல்ல நண்பரான இயக்குனர் கரண் ஜோஹாரும் சோப்ராவை தனது படங்களில் நடிக்க வைப்பதில்லை என்று தீர்மானித்துள்ளாராம்.

இதற்கிடையே கரண் ஜோஹாரின் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக பிரியங்கா விளம்பரப்படுத்தி வருகிறார் என்று ஒரு முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதை கரண் மறுத்துள்ளார்.

கௌரி கோபித்தால் எனக்கென்ன என்று இருந்த பிரியங்கா, பாலிவுட்டே ஒட்டுமொத்தமாக கோபித்துக் கொள்ளும் என்பதை எதிர்பார்க்கவில்லை போலும்...!

சல்மான்கானுடன் எனக்கு திருமணமா? நடிகை அசின்


ஜெனிலியா-ரிதேஷ் திருமணத்தை தொடர்ந்து அசினுக்கும் சல்மான்கானுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக இந்தி டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.

அசினும் சல்மான்கானும் லண்டன் டிரீம்ஸ், ரெடி படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு இருவரும் தயாராகிறார்கள் என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை அசின் பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நான் கேரளாவைச் சேர்ந்த பெண். சம்பிரதாய பழக்க வழக்கங்களை கடை பிடிக்கும் குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். எனது திருமணம் நான் பிறந்த ஊரான கேரளாவில் தான் நடக்கும். என் குடும்ப சம்பிரதாயப்படியே அது நடக்கும். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அதில், சல்மான்கானும் ஒருவர்.

அவருக்கும் எனக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. சல்மான்கான் என்னை விட வயதில் பெரியவர். அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் என்னை விட அழகான பெண்கள் நிறைய பேர் கியூவில் வந்து நிற்பார்கள்.

சல்மான்கானுக்கும் எனக்கும் நீங்கள் கற்பனை செய்கிற மாதிரி எந்த உறவும் கிடையாது. 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் எனது திருமணத்தை பற்றி யோசிப்பேன். எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்த அறிக்கை மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அசின் கூறியுள்ளார்.

முப்பொழுதும் உன் கற்பனைகள் 'U'! சான்றிதழ்


அதர்வா, அமலாபால் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'முப்பொழுது உன் கற்பனைகள்'. தயாரிப்பாளர் குமார் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். R.S.INFOTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

பிப்ரவரி 17ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.  சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

இப்படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் "தயாரிப்பாளரா இப்படத்தினை இயக்கி இருக்கிறார்.. அப்படி தெரியவில்லை.. மிக நன்றாக இருக்கிறது " என்று எல்ரெட் குமாரை பாராட்டி இருக்கிறார்கள்.

'பாணா காத்தாடி' படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா இப்படத்தினை தான் நம்பி இருக்கிறார். மைனா, 'தெய்வத்திருமகள்', 'வேட்டை' படங்களின் மூலம் தனக்கு கிடைத்த பெயரை விட 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படம் தனக்கு பெரும் பெயர் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அமலாபால்.

மகனுக்கு நயன்தாரா.... அப்பாவுக்கு தாரா!


ஜீவனாம்சம் கேட்டு டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு எதிராக டான்ஸ் மாஸ்டர் தாரா தாக்கல் செய்த முறையீடு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று தாராவுக்கு சமரச மையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா காதல் விவகாரம் சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விவகாரம் குடும்பநல நீதிமன்றம் வரைக்கும் வந்தது. இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. பைனலாக 'செட்டில்' ஆகவில்லை.

இந்த நிலையில் நடிகர் பிரபுதேவாவின் தந்தையான டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், திருமணத்துக்கு முன்பு செய்த லீலைகள் வெளிவந்துள்ளன. தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கி, பின்னர் திருமணமும் செய்து கொண்ட சுந்தரம், பின்னர் ஏமாற்றிவிட்டுப் போய் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக டான்ஸ் மாஸ்டர் தாரா முறையிட்டிருந்தார்.

2 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடத்தப்படும், சமரச தீர்வு மையத்தில் தாரா இந்தப் புகாரைக் கொடுத்தார். அது சில தினங்களுக்கு முன்புதான் மீடியா வெளிச்சத்துக்கு வந்தது.

தன்னையும் தனது மகனையும் கடந்த பல ஆண்டுகளாக சுந்தரம் பராமரித்து வந்தார் என்றும் தற்போது குடும்பத்தை நடத்துவதற்கு நிதியுதவி செய்வதில்லை என்றும் புகார் மனுவில் தாரா கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து குடும்பத்தை பராமரிப்பதற்காக ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளார்.

இந்த மனு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி சுந்தரத்துக்கு பலமுறை சமரச தீர்வு மையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நோட்டீஸ் அடிப்படையில் அவர் ஆஜராகவில்லை.

அதைத் தொடர்ந்து தாராவுக்கு சமரச தீர்வு மையம் ஆலோசனை வழங்கியது. இந்த புகார் மனுவை வழக்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று தாராவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கைவசம் எக்கச்சக்க ஆதாரங்கள் இருப்பதால் விரைவில் வழக்கு தொடரப் போகிறாராம் தாரா.

கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?


ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் உலக நாயகன் கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார் அல்லவா. அதில் நடிக்குமாறு கமல் ஜாக்கியை அணுகியுள்ளார். அவர் ஒப்புக் கொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு என்ன மாதிரி கதாபாத்திரம் என்ற தகவலையும் கமல் கசிய விடவில்லை.

தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் வந்தார் என்பது நினைவிருக்கலாம். அந்த விழாவில் அவர் கமல் ஹாசனின் நடிப்பை மனதாரப் பாராட்டினார்.

ஊழலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

ஸ்டாலின்... அழகிரி... வைகோ?- திமுகவுக்கு அடுத்த தலைமை யார்?


கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள்ளது.

காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி!

கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.

திமுகவிலிருந்து பிரிந்து போய், தனிக்கட்சி நடத்தி வரும் வைகோவை 8 சதவீதம் பேர் திமுக தலைமைக்கு தகுதியானவர் என்று கருத்து கூறியுள்ளார்களாம்!

இந்த சர்வேயில் இன்னும் இருவர் உண்டு. தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி!

தயாநிதிக்கு 5 சதவீத ஆதரவும், கனிமொழிக்க 3 சதவீத ஆதரவும் உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது கனிமொழி ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. காரணம், கனிமொழியின் 'திகார் தியாகத்துக்கு' கட்சியில் பெரிய பதவியை பரிசாகத் தர வேண்டும் என்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் வெளிப்படையாகக் கூறிவந்தார். கருணாநிதியும் அதுகுறித்து யோசிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த சர்வேயை வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் கருணாநிதிக்குப் பின் திமுகவின் அடுத்த தலைவர் முக ஸ்டாலின்தான் என்பது உறுதியாகிறது என இந்த சர்வே முடிவு கூறுகிறது.

2007ல் இதே கேள்வியை வைத்து தினகரன் நடத்திய சர்வே மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் நினைவிருக்கலாம்!