நீங்களே பாருங்கள் இது NDTVயின் kolaveri.....
Saturday, 3 December 2011
Why this kolaveri Remix கனிமொழிக்காக கருணாநிதி பாடும் பாடல்!
நீங்களே பாருங்கள் இது NDTVயின் kolaveri.....
ஐ போன்கள் ஆபத்தானவையா?: திணறும் அப்பிள்
அதன் ஐ பொட், ஐ போன், ஐ பேட் என அனைத்தும் உயர் தொழிநுட்பம் கொண்டவை.
எனினும் இவற்றில் அப்பிளின் ஐ போன்களின் பாதுகாப்பு குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது.
அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் விமானத்திற்குள் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன் வெடித்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரேசில் நாட்டிலும் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றிக் கொண்டமையானது அதன் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்துத் தெரிய வருவதாவது,ரேசிலில் பெண் ஒருவர் தனது ஐ போன் 4 வினை சார்ஜ் செய்ய சார்ஜருடன் இணைத்து விட்டு அதன் அருகில் நித்திரை செய்துள்ளார்.
சற்று நேரத்தில் அவரது ஐபோனில் இருந்து புகை கிளம்பியுள்ளதுடன், சற்று நேரத்தில் வெடித்துள்ளதுஇதன்படி இவ்வாரத்தில் பதிவான 2 ஆவது ஐ போன் தீப்பற்றிக் கொண்ட சம்பவமாக இது பதிவானது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலும் ஐ போன் தீ பிடித்து வெடித்த சம்பவமொன்று குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது.
இதன்போது விமானம் தரையிறங்கும் வேளையில் பயணி ஒருவரின் ஐ போனிலிருந்து புகை வெளியாகியிருந்ததுடன் சற்று நேரத்தில் வெடித்து தீப்பற்றியுள்ளது.
எனினும் விமானப் பணியாள் ஒருவரால் அத் தீ அணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஐ போன் பரிசோதனைகளுக்கென விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ் வெடிப்பினால் யாருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. இதற்கு முன்னரும் பிரான்ஸில் இளைஞன் ஒருவன் தனது காதலியின் ஐ போன் வெடித்தமையினால் அதன் திரையின் சிறிய கிளாஸ் துகள் தனது கண்ணைத் தாக்கியதாக 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவ் வெடிப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.மேலும் இச் சம்பவங்கள் தற்போது அப்பிளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இதேவேளை இம்மாத ஆரம்பத்தில் அப்பிள் தனது 1 ஆம் தலைமுறை ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்களை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.
இவ் ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்கள் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்பிள் உற்பத்தி செய்தவை. இவற்றின் பெட்டரிகளில் குறைபாடு காணப்படுவதாகவும் அவை அதிக வெப்பம் அடைவதாகவும் கூறியே மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அதற்காக மாற்றீடு ஒன்றை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் ஐ போன் வெடிப்புத் தொடர்பில் அப்பிள் பதிலெதுவும் இதுவரை கூறவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம் அப்பிள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றது என்பதனை!




எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்
மாயன் காலண்டர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர்க்கதரிசனம் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படுகிறது. ஆனால் இதைத் அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று விளக்கம் தருகிறார்.
இவர் ஒரு ஜேர்மானியர், அவுஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோபே பல்கலைக்கழகத்தில் மத்திய அமெரிக்க நாகரிகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
படைப்பின் கடவுளான போலோன் யோக்தே போர்க்கடவுளாகவும் இருப்பதால் அவரது வருகையால் உலகம் அழியும், அவரை வரவேற்க அவரது பக்தர்கள் தயாராக வேண்டும் என்பது தான் இந்தக் கல்வெட்டின் வாசகங்கள் தரும் கருத்தாகும் என்றார்.
மேலும் தெரிவிக்கையில், இந்தக் கல்வெட்டில் மாயன் கடவுளின் வருகை தினம் தரப்பட்டுள்ள நிலையில், இதனை 21.12.2012 திகதி என்று உறுதியாக குறிப்பிட இயலாது.
இதை கடவுளைப் பற்றிய தகவலாக அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனிதக்குலத்தின் அழிவு பற்றிய முன்னறிவிப்பாக இக்கல்வெட்டைக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
‘ஒய் திஸ் கொல வெறிடி..’ பாடலுக்கு ரஜினி நடனம் !!
இப்படத்துக்காக தனுஷ் எழுதி பாடிய “ஒய் திஸ் கொல வெறிடி” பாடல் சூப்பர் ஹிட்டாகி விட்டது. இப்பாடலை சிரித்தபடி கேட்டு ரசித்தார் ரஜினிகாந்த்.
பாடலுக்கான சூழல் மற்றும் அதற்கான அர்த்தம் என்ன என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டார். அதை அவர் விளக்கினார். ஏற்கனவே “3” படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினியை நடிக்க கேட்க எண்ணி இருந்தார் ஐஸ்வர்யா.
இந்நிலையில் “ஒய் திஸ் கொல வெறிடி” பாடல் பிரபலமாகிவிட்டதால் அந்த பாடலுக்கு வலு சேர்க்கும் விதமாக ரஜினியை நடனம் ஆட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ரஜினியும் ஓ.கே. சொல்லி இருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நடிப்பது உறுதியானால் படத்தில் 2 முறை இப்பாடலை இடம்பெற செய்ய ஐஸ்வர்யா திட்டமிட்டிருக்கிறார்.
சோலோவாக தனுஷ் பாடுவதுபோல் ஒரு முறையும், ரஜினியுடன் சேர்ந்து மற்றொரு முறை பாடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.
பத்திரிகையில் வெளியிட ஐஸ்வர்யாராய் குழந்தை படத்துக்கு ரூ.5 கோடி பேரம்?
ஒரு வாரத்துக்கு பின் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார். தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
“ஏ”யில் துவங்குவது போன்ற பெயரை தேர்வு செய்கிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் பெயர்கள் “ஏ”யில் துவங்குவதால் அந்த எழுத்தில் துவங்கும் பெயரை தேடுகிறார்கள். ரசிகர்களிடமும் பெயரை தேர்வு செய்து அனுப்பும்படி அபிஷேக்பச்சன் கேட்டுள்ளார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யாராய் குழந்தை படத்தை வெளியிடும் படி இன்டர் நெட்டில் ரசிகர்கள் வற்புறுத்தினர். அமிதாப்பச்சன் மறுத்து விட்டார். தற்போது இரு பத்திரிகைகள் அமிதாப்பச்சனை தொடர்பு கொண்டு குழந்தை படத்தை பிரசுரிக்க கேட்டுள்ளன.
இதற்காக ரூ.5 கோடி தருவதாக பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அமிதாப்பச்சன் பேத்தி படத்தை கொடுக்க மறுத்து விட்டாராம்.
சினிமா நடிகர்களெல்லாம் சேர்ந்து அரசியல் பிரதமரை கடத்தினால் எப்படியிருக்கும் ?? நகைச்சுவை
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், கொஞ்சம் மொக்கையா இருந்தாலும்,எதோ பாக்கிற மாதிரி இருக்கு!
இன்றைய இளைய சமுதாயத்தை பாதிக்கக் கூடிய சில சினிமா காட்சிகள்
எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் :நாளிதழ் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கிய அதிமுக பெண் மேயர்
ஈரோடு மாநகரத்தின் மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர். துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்.
துணை மேயர் தேர்தலின்போதே மேயருக்கும், துணை மேயருக்கும் மோதல் உருவானது. அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயரை ஒதுக்கி வைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த மோதல் சம்பவமாக தொடர்ந்து காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டே இருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், இன்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் என்று அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் டெலிபோன், பேக்ஸ் மிஷனை கீழே தள்ளியுள்ளார்.
இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்த செய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர்.
நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட செய்தி, பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா வீட்டு துக்கம் ரஜினி விசாரிக்காதது ஏன்? :ஒரு பிளாஷ்பேக்
சிங்கம் இரையை விரட்டினால் மட்டுமல்ல, ரெஸ்ட் எடுத்தால் கூட அதையும் ரசிப்பதற்கு ஆயிரம் பேர் கூடுவார்கள். நிலைமை அப்படியிருக்க, சிங்கம் வாக்கிங் போகிற காலம் இது. ஆமாம்... உடல்நிலை சரியான பின்பு திடீர் திடீரென்று முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து அந்த ஏரியாவையே இன்பத்தில் அதிர வைக்கிறார் ரஜினி. எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் யாரும் எதிர்பாராமல் கலந்து கொண்டார் ரஜினி. அதன்பின் எடிட்டர் மோகனின் 70 வது பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையெல்லாம் கவனித்து வரும் திரையுலகம், இன்னும் அவர் இளையராஜா வீட்டுக்கு போகவில்லையே, ஏன் என்று கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணமுற்றாரல்லவா? அந்த துக்கத்தில் பங்கேற்க திரையுலகமே திரண்டு வந்தது. இசைஞானியின் பரம வைரியாக கருதப்பட்ட வைரமுத்து கூட நேரில் வந்திருந்து ஆறுதல் சொன்னார். ஆனால் ரஜினி?
துக்கம் நடைபெற்று இத்தனை நாளாகியும் அவர் வரவில்லையாம். (மனைவி, மகள்கள், மருமகன் ஆகியோர் சென்றார்கள். அது தனி) இதற்கு பின்னணியாக ஒரு பழைய பிளாஷ்பேக்கை அவிழ்த்துவிடுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஒருமுறை மனைவி லதாவையும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றாராம் ரஜினி. இவரை அழைத்துச் சென்றவர் இசைஞானிதானாம். மறுநாள் காலை ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த திட்டம். திடீரென்று அன்றிரவு ரஜினியை அழைத்த இளையராஜா, நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்புங்க என்று கூறிவிட்டாராம் கண்டிப்பு நிறைந்த குரலில். இதை எதிர்பாரத ரஜினி மனவருத்தத்தோடு திரும்பியதாக ஒரு பிளாஷ்பேக்.
அன்றிலிருந்துதான் ரஜினி, ராஜாவை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி, அமிதாப், நீங்க ஓய்வு பெறலாமே! - நிருபர் கேள்வியும் கமலின் அதிரடி பதிலும்
ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு அது. நடிகர் கமல்ஹாசன்தான் இதன் தலைவர் என்பதால், அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், இணையதளங்கள் திரைப்படத்துறைக்கு எந்த அளவு உறுதுணையாக உள்ளன என்பதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
உடனே பதிலளித்த கமல், எல்லா மேடைகளிலும் இணையதளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவரும் என்னிடம் எதற்கு இந்த கேள்வி. நானே விரைவில் இணையதளப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். நான் உங்கள் கட்சி, என்றார்.
அடுத்து ஒரு நிருபர், ரஜினி, நீங்க, பாலிவுட்ல அமிதாப் பச்சன் போன்றவர்கள் எல்லாம் ஓய்வு பெறலாமே, என்றார்.
சற்றும் தயங்காமல் கமல் அளித்த பதில்:
ஏன்...நீங்கள் எதற்காக வருகிறீர்கள்.. வயதாகிவிட்டதே என்று நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே!, என்று பதிலளிக்க அத்தோடு நிருபர் அமைதியாகிவிட்டார்!
' ACTION ' ஆரம்பம் ! : 'தாண்டவம்' விஜய்
விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், சந்தானம், நாசர் மற்றும் பலர் நடிக்க இருக்கும் படம் 'தாண்டவம்'. 'தெய்வத்திருமகள்' படத்தினை தொடர்ந்து இயக்குனர் விஜய் - விக்ரம் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது. யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க முன்வந்துள்ளது.
இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்ப்ந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் ஜகபதி பாபு. விக்ரமிற்கு இணையான வேடத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
நடிகர் சிவாஜி கணேசனை வைத்து பல படங்களை தயாரித்த வி.பி.பிரசாத்தின் மகன் ஜகபதி பாபு. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது தான் தனது 100வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நவம்பர் 30ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. நா.முத்துகுமார் பாடல்கள் , ஜி.வி.பிரகாஷ் இசை, நிரவ்ஷா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என இயக்குனர் விஜய்யின் டீம் மொத்தமும் இப்படத்திலும் இணைகிறது.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்க இருக்கிறார் விஜய்.
கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம் ஆகிய படங்களில் சண்டைக் காட்சிகள் பெரிய அளவில் இல்லை. இந்த 'தாண்டவம்' விஜய் இயக்கத்தில் உருவாகும் முழு நீள ஆக்ஷன் படம்.
பாடலை வரிசைக்கிரமமாக எழுதத் தெரியாத...தனுஷை கிண்டல் செய்யும் கவிஞர்
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ' 3 '. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் இருந்து ' WHY THIS KOLAVERI DI ' பாடல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அந்த பாடலை மட்டும் முதலில் வெளியிட்டார்கள். அப்பாடல் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில் அப்பாடல் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி கூறியிருப்பது " ஒய் திஸ் கொலைவெறி என்னும் பாடல் அதிரி புதிரியான வெற்றி என்பதாக ஊடகங்கள் பிரபலப்படுத்தியதை அடுத்து அந்தப்பாடலைக் கேட்க நேர்ந்தது. அப்பாடல் எனக்கும் பிடித்துப்போயிற்று. தமிழை மட்டுமே கொலைசெய்துவந்த திரைப்பாடலில் முதல்முறையாக ஆங்கிலம் கொலைசெய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் அப்பாடல் என்னை வசீகரித்ததற்கான முதல் காரணம்.
நம்ம ஊர் ஆங்கில அறிவை இதைவிட எள்ளலாக நையாண்டியாகச் சொல்ல முடியாது. தனுஷிற்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள். பாடலை வரிசைக்கிரமமாக எழுதத் தெரியாததால் துண்டு துக்கடாவாக அவர் ஆக்கியிருக்கும் வாக்கியயமைப்பில் ஆங்கிலம் சின்னாப்பின்னப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தை அடியோடு மண்ணைவிட்டு ஒழிக்க தனுஷ் போன்றோர் முயல்வது பாராட்டுக்குரியது. அவர் என்ன பாடுகிறார் என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதால் அந்தப்பாடலை யாரும் முன்மாதிரியாகக் கொள்ள மாட்டார்கள். ஒரு எளிய மனிதனை ஆங்கிலம் பேசுவோர் கேவலமாகப் பார்த்ததுபோக ஆங்கிலம் பேசுவோர் அத்தனைபேரையும் அப்பாடல் முடிந்த அளவு கேவலப்படுத்தியிருப்பது மற்றுமொரு சந்தோசம்.
பாடல் முழுக்க பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டு அழகு படுத்திவிட்டு பொருத்தமில்லாத வரிகளை இட்டு நிரப்பியிருப்பதால் கேளிக்கைக்கு உகந்த பாடலாக 'கொலைவெறி' மாறியிருக்கிறது. தவிர, ஒரு பாடலின் தேவையை வியாபார உத்தியாக மாற்றிய விதத்தில் கொலைவெறி பாடல் தனி கவனம் கொள்ள வைக்கிறது.
யூ டியூபில் இத்தனை லட்சம்பேர் கேட்டதாக பெருமையோடு அறிவித்துக்கொள்ளும் அப்பட நிறுவனம் அத்தனைபேரும் '3' படத்தை பார்க்கத் தூண்டுகிறது. தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் ஒரு இளம் கதாநாயகனுக்கு எதை கொலை செய்தாவது வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி வந்திருக்கிறதே அந்த வெறிக்காகவேணும் இப்பாடலை அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.
2011ஆவது வருடத்து தமிழ் இளைஞன் ஒருவன் ஆங்கிலத்தை எத்தனை சிரமத்தோடு அணுகுகிறான் என்பதே பாடலின் ஊடாக சமூகவியலாளர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டியது.இப்படியான தமிங்லீஷ் பாடல்கள் தமிழைக் காப்பாற்றும். ஆங்கிலத்தை ஏமாற்றும். வாழ்த்தி வரவேற்போம் தனுஷையும் அவருடைய சகாக்களையும். " என்று தெரிவித்துள்ளார்.
'ராஜபாட்டை' தியேட்டர்களில் 'நண்பன்' !
சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் படம் ' ராஜபாட்டை '. திக்ஷா சேத் நாயகியாக நடிக்க, 'சங்கராபரணம்' விஸ்வநாத் விக்ரமிற்கு அப்பாவாக நடித்து இருக்கிறார்.
யுவன்சங்கராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்தினை PVP CINEMAS பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.
முதலில் சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக இருந்து, பின்னர் திருப்பி கொடுத்து விட்டது. இந்நிலையில் இப்படத்தினை வெளியீட்டு உரிமையை தற்போது ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தின விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு வெளியிட இருக்கிறார்கள்.
சுசீந்திரன் மற்றும் விக்ரம் இருவருக்குமே ஆந்திராவில் நல்ல ஒப்பனிங் இருப்பதால் இப்படத்தில் தெலுங்கில் ' VEEDINTHE ' என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
டிசம்பரில் இப்படத்தினை ரிலீஸ் செய்து விட்டு 2012 பொங்கல் சமயத்தில் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்த அனைத்து திரையரங்குகளிலும் தாங்கள் தயாரித்த ' நண்பன் ' படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறதாம் ஜெமினி நிறுவனம்.
தட்டாம்பூச்சி' மூலம் உளவு பார்க்கப் போகும் இந்தியா!
எதிரிகளை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் பறவைகள், தட்டாம்பூச்சிகளின் அளவில் உளவு விமானம் தயாரிக்கப்படவிருப்பதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முதன்மை கட்டுப்பட்டாளர் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவதாணுப்பிள்ளை கூறியதாவது,
வருங்கால மக்களின் வாழ்க்கையில் நானோ டெக்னாலஜி பெரும் பங்கு வகிக்கும். நானோ டெக்னாலஜி மூலம் உணவு பதப்படுத்துதல், எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பான குடிநீர் உள்ளி்ட்ட துறைகளில் மக்கள் பயன் பெற முடியும்.
ஒளியை விட 7 மடங்கு வேகமாக சென்று தாக்கக் கூடிய பிரமாஸ் ஏவுகணையின் வேகத்தை மேலும் அதிகரிக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. உயர்வேதியியல் முறையில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் ஏவப்பட்டால் அவை மனித உடலில் படும் போது அவர்களுக்கு கதிர்வீச்சு ஏற்படும். அந்த கதிர்வீச்சு பாதிப்பை குறைக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குளுக்கோஸ் கொடுக்க வேண்டும்.
இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி. ஆகியவற்றை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட சீருடை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ வீரர்களின் உடல்நிலையை ராணுவ அதிகாரிகள் முகாமில் இருந்தவாறே தெரிந்து கொள்ள முடியும். ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உடனடி சிகிச்சை அளிக்கவும் இந்த சீருடை பயன்படும்.
நானோ டெக்னாலஜியின் மூலம் தட்டாம்பூச்சி, பறவைகளின் அளவில் உளவு விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம் வெளிநாட்டு எதிரிகளின் ஊடுருவல், நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த விமானங்களில் 5 ஆண்டுகளில் தயாரிக்கப்படும் என்றார்.
Subscribe to:
Comments (Atom)
































