Tuesday, 13 September 2011

புலிகளின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட வேண்டும்!- பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா அறிவுரை

புதுடில்லியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை இந்திய உள் விவகார அமைச்சு, பிராந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விடுத்துள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பாபார் கல்சா எனப்படும் தீவிரவாத அமைப்பு ஆகியவை தொடர்பாக அதிகளவில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சு சகல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல் சகல பிராந்திய பொலிஸ் பொறுப்பாளர்களுக்கும் உள்ளக பாதுகாப்புச் செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை உரிய வகையில் பேணும் நோக்கில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் அண்மையில் இடம்பெற்றக் குண்டுத்தாக்குதல் குறித்து இந்திய அரசு புலிகள் மீது சந்தேகம் கொண்டுள்ளது.
இந் நிலையிலேயே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பை அதிகரிப்பதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளது என ரைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதேவேளை புதுடில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பு ஒன்று தாமே பொறுப்பு என உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை!

தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்:
கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
கருணாநிதி ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல், ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.
மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசர அவசரமாக கடந்த 9 ஆம் திகதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?
இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான்.
மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.

பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!


மங்காத்தா படத்தினை தொடர்ந்து அதே கூட்டணியில் மீண்டுமொரு படம் வெளிவரவுள்ளது. மங்காத்தா படம் நல்லதொரு வரவேற்பினையும் அதேவேளை வசூலிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

தற்போது அஜித் பில்லா 2 படப்பிடிப்பில் மிக பிஸியாக உள்ளார். பில்லா 2 படத்தினை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் மல்டி ஸ்டாரர் படம் ஒன்றில் அஜித் நடிக்வுள்ளதாக தகல்கள் கூறுகின்றது. இதில் அஜித்துடன் சிம்பு இணைந்து நடிக்கவுள்ளாராம். படத்தினை ஏ.எம். ரத்தினம் நீண்ட நாட்களின் பின்னர் தாயாரிக்கவுள்ளதாகவும் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தினை தாயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், சிம்பு இணையவுள்ள இப்படத்திற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது

சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்


பொலிவியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர்பிழைத்த நபர் ஒருவர் தான் தனது சிறுநீரைக் குடித்தும் , பூச்சிகளை உண்டுமே மூன்று நாட்கள் உயிர் வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

35 வயதான மைனர் விடல் என்ற அந் நபர் ஒரு விற்பனைப் பிரதிநிதி ஆவார். இவர் பொலிவியன் எயார்லைன் எய்ரோகொன் விமானத்தில் செண்டா குரூஸிலிருந்து டிரினிடார்ட் நோக்கிப் பயணித்துள்ளார்.

இதன்போது விமானத்தில் சுமார் 9 பேர் வரை பயணித்துள்ளனர்.

இவர்கள் பயணித்த விமானம் இரவு நேரத்தில் காடொன்றினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் பயணித்த மற்றைய அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

எனினும் மைனர் விடல் மட்டும் உயிர்பிழைத்துள்ளார்.

கடும் காயங்களுக்குள்ளாகியுள்ள இவர் இவரது சிறுநீரைக் குடித்துள்ளதுடன் பூச்சி இனங்களை உண்டு சுமார் 62 மணித்தியாலங்கள் இவர் காட்டுக்குள் இருந்துள்ளார்.

அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அந்நாட்டு கடற்படையினரே இவரை மீட்டுள்ளனர்.

இவர் சாரணராக இருந்ததாகவும் அதன்போது தான் பெற்ற அனுபவங்களே தன்னை மூன்று நாட்கள் உயிர் வாழ உதவியதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவநீதம்பிள்ளையுடன் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கடும் மோதல்!


ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்றைய கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நடிவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதேவேளை, தீவிரவாதத்துக்கு எதிரான போரின் பின்புலத்தில் மனித உரிமைகளைப் பேணத் தவறிய நாடுகளுக்கு சிறிலங்கா ஒரு உதாரணம் என்று நவநீதம்பிள்ளை தனது உரையில் குற்றம்சாட்டினார்.

பாதுகாப்பு விடயங்களை சிறிலங்கா முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முப்பதாண்டுகளில் சிறிலங்கா தனியே தீவிரவாதத்தினால் மட்டும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச்சட்டத்தை நீக்கினால் மட்டும் போதாது என்றும், பாதுகாப்பு தொடர்பான அனைத்துச் சட்டங்களையும், தடுப்புக்காவலையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை முன்னதாக உரையாற்றிய சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா மீது நீதியற்ற குற்றச்சாட்டுகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதை அனைத்துலக சமூகம் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! (வீடியோ இணைப்பு)


காலத்தின் கோலத்தால் உலகம் சந்திக்கும் விந்தைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. புதியஉலகத்தின் புதுமை விரும்பிகளுக்காக வருகிறது இன்னுமொரு வினோத தகவல்.


குழந்தை பிறந்தால் அதற்கு முதல் மருந்தும் உணவும் தாய்ப்பால்தான் என்று கூறுவார்கள்… ஆனால் கம்போடியாவில் 20 மாதக்குழந்தை நேரடியாக பசுவிடம் இருந்து மடிப்பால் உறிஞ்சிக்குடிக்கும் சம்பவம் அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- கம்போடியாவில் பிறந்தது இந்த 20 மாதங்களே ஆனது ” தா சோபட்” எனும் குழந்தை.

இதனுடைய பெற்றோர்கள் வேலை தேடுவதற்காக தமது கிராமத்தினை விட்டு ஜூலை மாதம் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

செல்லும் போது தனது 20 மாதமான குழந்தையை தங்களது பெற்றொருடன் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதன் பின்னர் குறித்த குழந்தை அங்குள்ள பசுவின் கீழ் தானே சென்று அதன் மடியினை கவ்வி பால் அருந்தியுள்ளது.

பசுவும் தாய்மைக்கு பறைசாற்றும் முகமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படுத்தாமல் குழந்தைக்கு பால் கொடுத்து வருகின்றது.

தமது பேரக்குழந்தையின் செயற்பாட்டை கண்ட ” செய்ம் றீப்” இதை கண்டித்துள்ளார். இருந்தும் குழந்தை தொடர்ச்சியாக அடம்பிடித்து மறுத்துள்ளது.

எனவே குழந்தையை அப்படியே விட்டுள்ளார்கள். எனினும் இதுபற்றி கருத்து தெரிவித்த குழந்தையின் தாத்தா பாட்டி குழந்தை தனது மடிப்பாலை குடிப்பது பற்றி பசு கவலைப்படவில்லை இருந்தாலும் குழந்தையின் ஆரோக்கியத்தை நினைக்கும் போது எங்களுக்கு கவலையாக இருக்கிறது என்றார்கள்.




தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்


முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் 19 தமிழர்களை குண்டு வைத்து கொன்ற தீவிரவாதிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். இது மிகவும் அபாயகரமான கருத்து.

ஒரு மூத்த அரசியல் தலைவர் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவது போன்று அவரது கருத்து அமைந்துள்ளது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நியாயம் இருப்பதாக கருதினால் கருணாநிதியுடன் ஒரே மேடையில் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?

காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யரும் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லி இருக்கிறார். சோனியா தயவால் எம்.பி.யாக இருக்கும் அவர் இந்த கருத்தை சொன்னது அபத்தமானது. அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மணிசங்கர் அய்யர் தமிழகத்துக்குள் நுழைய முடியாது.

காங்கிரசார் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும், இளைஞர் காங்கிரசாரும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும் சொல்கிறார்கள். எனவே உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட மேலிடத்தில் வற்புறுத்துவேன்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது என்று காலை 9 மணிக்கு எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் ஈரோட்டில் இருப்பதால் கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை. நாளை கூட்டம் தொடர்ந்தால் தனித்து போட்டி என்ற கருத்தை கமிட்டியில் எடுத்து கூறுவேன்.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் துயரமானது. இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்கும் என்று நம்புகிறேன். நில அபகரிப்பு வழக்குகளில் 90 சதவீதம் உண்மையான வழக்குகள் என்றே நினைக்கிறேன். ஒன்றிரண்டு வழக்குகளில் தவறு நடந்தால் அதை சரி செய்ய வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி நல்லபடி நடக்கிறது. ஆனால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் மக்களின் ஆதரவு குறைந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார், மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுரேஷ், ராஜேஷ் ராஜப்பா, விஜயபாஸ்கர், துணை மேயர் பாபு, வக்கீல் ராஜேந்திரன், முகமது அர்சத் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புடன் விண்டோஸ் 8 டெப்லட்: மைக்ரோசொப்ட்டுடன் இணையும் செம்சுங்?


தென்கொரிய நிறுவனமான செம்சுங் மற்றும் மைரோசொப்ட் நிறுவனங்கள் இணைந்து புதிய டெப்லட் கணனியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்புதிய கணனியானது மைக்ரோசொப்டின் விண்டோஸ் 8 இனைக் கொண்டியங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது இம்மாதம் 13- 16 வரையான திகதிகளில் நடைபெறவுள்ள (Microsoft's BUILD developers ) மாநாட்டில் அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்சுங் கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினையே தனது டெப்லட் கணனிகளில் உபயோகித்து வந்தது.

இம்முறை விண்டோஸ் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு இதனை செம்சுங் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விண்டோஸ் 8



உலகை ஆக்கிரமித்துள்ள மின்வெளிப் பயங்கரவாதம் - ஏமாறாதீர்கள், எச்சரிக்கை!


 
ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம்.

பூலோகமயமாதலின் விளைவாக நாளுக்குநாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இணையத் தளங்கள், மின்னஞ்சல்கள், சமூக வலையமைப்புகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகிறது.

ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமா ணத்தையும் கண்டுகொண்டிருக்கும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடியாதுள்ளது.

ஆம், பேஸ்புக் (Facebook), மை ஸ்பேஸ் (Myspace), கூகுள் பிளஸ் (Google +), போன்ற சமூக வலையமைப்புகள் பிரபலமடைந்து வருவதுடன் கடவுச்சொல்லை வேட்டையாடும் இணையக் குற்றங்கள் புரிவோரின் களமாகவும் இவை விளங்குகின்றன.

பேஸ்புக் வலையமைப்பானது உலக நாடுகள் பலவற்றில் பிரபல்யமடைந்து வருகிறது. சந்திக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம் என்ற கிராமத்து மொழிவழக்கில் சொல்வார்கள். இப்போது அந்தக்காலம் மாறி 'FB' இற்கு வந்தால் கூட் டத்தோடு குதூகலிக்கலாம் என்றாகிவிட்டது. நம்மில் பலர் அதிகாலையில் கண்விழித்ததும் முதல்வேலையாக பேஸ்புக்கில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதையே வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, பேஸ்புக் போன்ற சமூக வலைய மைப்புகளில் இடம்பெறும் குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. இதனால் பெருந்தொகைப் பணத்தை இழந்தோரும் வாழ்க்கையைத் தொலைத்தோரும் இருக்கிறார்கள்.

அவ்வாறு பலரது வாழ்க்கைக்கு பேராபத்தாக உருவாகியுள்ள மின்வெளிப் பயங்கரவாதம் (Cyber terrorism) இன்று உலகையே ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கையிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) கீழ் இயங்கும் இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழு (CERT) இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் முறைப் பாடுகளுக்கு ஏற்புடைய நடவடிக்கை களையும்மேற்கொண்டு வருகிறது.

இணையத்தளங்களில் மேற்கொள்ளப் படும் குற்றச்செயல்கள் குறித்து முறை யான நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காகவே இக்குழு நியமிக் கப்பட்டுள்ளது. இணையத்தளங்களிலும் சமூக வலைப்பின்னல்களிலும் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்து இந்தக்குழுவின் சிரேஷ்ட பாதுகாப்பு பொறியிய லாளர்களாகக் கடமையாற்றும் கனிஷ்க யாப்பா, ரொஷான் சந்திரகுப்தா ஆகியோர் பல்வேறு தகவல்களை வீரகேசரியுடன் பகிர்ந்துகொண்டனர்.

இலங்கையில் இடம்பெற்ற சில உண்மைச் சம்பவங்கள்

சம்பவம் 01 கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரியும் இளம் பெண் அவர். அலுவலக நேரங்களில் மாத்திரம் பேஸ்புக் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறே நாட்கள் கடந்தன.

ஒருநாள் தோழியரிடமிருந்து தொலைபேசியில் அவருக்கு கிடைத்த அதிர்ச்சிச் செய்தி இதுதான். "நேற்றிரவு முழுவதும் பேஸ்புக் இல் இணைப்பில் இருந்தாயே? எங்களோடு அரட்டை அடித்தாயே? இப்போதெல்லாம் இரட்டை அர்த்த வசனங்களும் பேசுகிறாய் என்ன?'

இதனைக் கேட்டதும் அதிர்ச்சிய டைந்துள்ளார் அந்த இளம் பெண். ஏனென்றால் இரவில் அவர் பேஸ்புக் உபயோகிப்பதற்கான எந்த வசதியும் அவரிடம் இல்லை. இதுகுறித்து செய்த முறைப்பாட்டையடுத்து தேடிப்பிடிக் கப்பட்ட உண்மை இதுதான்.

அவருடைய கணனியில் ஒரு மென்பொருள் நிறுவப்பட்டிருந்தது. அந்தக் கணனியில் அவர் என்ன வேலைகள் செய்கிறாரோ அவை அனைத்தும் அந்த மென்பொருளில் பதிவாகி இரு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அந்தத் தகவல்கள் அனைத்தும் வேறொரு நபரின் மின்னஞ்சலுக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருந்தது. தன்னுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பகிரங்கமானதையிட்டு சினம்கொண்டுள்ளார் அந்தப் பெண். இதுபற்றி முழுமையாக விசாரிக்கும்போது அலுவலகத்தில் உள்ள மற்றுமொரு நபர்தான் இந்தச் செயலைச் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறான விடயங்களை கணனி உளவுபார்த்தல் என்று சொல்வார்கள். இணையங்களில் குவிந்து காணப்படும் Keylogger போன்றவைற்றைக் கொண்டு கணினிகளையும் செயற்பாடுகளையும் உளவுபார்க்க முடியும்.

சம்பவம் 02 உயர்நிலை பதவி வகிக்கும் முக்கியஸ்தர் அவர். லண்டனில் பெருந்தொகைப் பணம் (12.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அவருக்கு அதிர்ஷ்டலாபமாகக் கிடைத்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ் சலினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணம் கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில் பதில் மடல்களையும் அவர் அனுப்பியுள்ளார். "இந்தப் பணத்தை சட்ட ரீதியாக தங்களுடைய கணக்குக்கு மாற்று வதற்குப் பல்வேறு படிமுறைகள் இருக் கின்றன. ஆவணங்கள், சட்டத்தரணி உத்தரவாதம் என விதிமுறைகளுக்கு உட்பட்டிருப்பதை தங்களுக்கு அறியத் தருகிறோம்.

அதன் பிரகாரம் ஆவணப் படுத்தல் உட்பட அனைத்து விடயங் களுக்கும் ஒருதொகை பணம் தேவைப் படுகிறது. அதனை எமது கணக்குக்கு வரவு வைப்பதன் மூலம் ஒருவார காலத்துக்குள் உங்களுக்கான அதிர்ஷ்ட லாபப் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்' என அவருக்கு மின்மடலொன்று கிடைத்துள்ளது.

ஒருவார காலத்துக்குள் பெரிய பணக்காரராகப்போகும் ஆசையில் அவர்கள் கேட்ட பணத்தை (கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபா) தனது வங்கிக் கணக்கி லிருந்து மாற்றம் செய்துள்ளார்.

ஒருவாரத்தின் பின்னரும் பணம் கிடைக் காததை கவனித்த அவருக்கு கொஞ்சம் விளங்கத் தொடங்கியது. ஆம்! அவர் ஏமாற்றப்பட்டுவிட்டார். இவ்வாறான குற்றச்செயல்களை நம்பிக்கை வித்தை மோசடி (Confidence trick - Scam) எனக் கூறுவார்கள். இவ்வகையான குற்றவாளிகள் பல்வேறு வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடு வதுண்டு.

அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

பிரபலமான பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்களின் பெயர்களில் இணையத்தளங்களை உருவாக்கும் நபர்கள் பல்வேறு வகையான பட்டப்படிப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். வெளிநாடுகளில் தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுடன் கல்வி கற்பதற்கு குறிப்பிட்டதொரு தொகையை முற்பணமாகக் கோருவதும் உண்டு. வங்கிகளின் பெயர்களில் பெரும் புள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப் பப்பட்டு வங்கிக் கணக்குக்கான கடவுச்சொற்களை மாற்றியமைக்குமாறு கேட்கப்படும். அவ்வாறு கடவுச்சொற்கள் மாற்றிமைக்கப்படும்விடத்து பணம் பறிபோகும் அபாயம் உண்டு.

மின்னஞ்சல், சமூக வலைப் பின்னல்களில் பெருந்தொகை பணப் பரிமாற்றத்துடன் வர்த்தகம் செய்துவரும் நபர்களின் கணக்குகளை அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தகவல் கோருவதுபோல் அனைத்துத் தகவல் களையும் கேட்டுப் பெற்று அதனை மீளக்கையளிப்பதற்குப் பணம் கோரும் சம்பவங்களும் இருக்கின்றன.

சம்பவம் 03 ஜெர்மனியில் திருமணமான இலங்கை நபர் ஒருவர் பேஸ்புக்கினூடாக இலங்கைப் பெண்ணொருவரை காதலித்துள்ளார். இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் ஆழமாகவும் அந்தரங்க விடயங்களைப் பரிமாறுவதாகவும் அமைந்தது. அந்த நபர் தான் திருமண மானவர் என்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது காதலியிடம் கூறவில்லை.

ஒருநாள் இலங்கைக்கு வந்த அவர் தனது காதலியுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளார். சில வாரங் களுக்குப் பின்னர் மீண்டும் இலங்கை வந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துவிட்டு அவர் ஜெர்மனி பயணமானார்.

இந்நிலையில் அவர் திருமணமானவர் என்பதும் இவ்வாறு சில்மிஷங்களைச் செய்வதை பொழுதுபோக்காக் கொண்டி ருக்கிறார் என்பதையும் நண்பர்களினூடாக அறிந்துகொண்டுள்ளார் அந்தப் பெண். அதன் பிறகு தொடர்புகொள்ளவில்லை.

சில மாதங்களுக்குப் பின்னர் ஜெர்மனி நபர் இலங்கைக்கு வந்துள்ளார். மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு தன்னுடன் உணவு அருந்த வருமாறு அழைத்துள்ளார். உடனடியாக மறுப்புத் தெரிவித்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை தெளிவுபடுத்தி தூற்றியுள்ளார்.

அதற்கு ஜெர்மனி நபர் அளித்த பதில் இதுதான் "நீ என்னோடு அரட்டை அடித் தது, வீடியோ அழைப்பு மேற் கொண்டது, காதல் கதைகள், அந்தரங்க விடயங்களைப் பரிமாறியது என அத்தனை ஆதாரமும் என்னிடம் உண்டு. நீ வராவிட்டால் இவை அத்தனையையும் உனது நிஜப் பெயரோடு இணையத்தளத்தில் தரவேற்றுவேன்'. இவ்வாறு மிரட்டும் நபர்கள் பலர் இருக்கிறார்கள்.

இவர்களை இணையக் குற்றவாளிகள் (Internet criminals) எனச் சொல்கிறோம்.

காதலிப்பதாக ஏமாற்றுதல், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்புகளை பதிவு செய்து தரவேற்றம் செய்வதாக மிரட்டுதல், தனிப்பட்டோரின் படங்களைக் கொண்டு போலி யான கணக்குகளை (பேஸ்புக் போன்ற சமூக வலையமைப் புகளில்) உருவாக்குதல், அந்தரங்கங்களை வெளியிடுவ தாக முன்னாள் கணவன்/ மனைவி/காதலன் /காதலியை மிரட்டுதல், உண்மையான உறவு கள் எனக்கூறி கடவுச்சொற்கள் உட்பட அனைத்தையும் பரிமாற் றிக்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகள் போன்றவையுடன் இவை தொடர்புடைய குற்றச் செயல்களும் இப்போது அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகிறது.

சம்பவம் 04 இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் அதீத ஆர்வம் கொண் டவர். அவர் அதனை உபயோகப் படுத்திக்கொண்டி ருக்கையில் அழகான புகைப்படத்துடன் யுவதியொருவர் தன்னையும் நண்பர் குழாமில் இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு மடல் விடுத்துள்ளார்.

இளம் பெண்ணின் தொடர்பு கிடைத்த மகிழ்ச்சியில் அவரை இணைத்துக் கொ ண்ட சுகத் இணையத்தினூடாக தனது தொடர்பாடலை வளர்த்துக் கொண்டுள்ளார். சில நாட்களின் பின்னர் வீடியோ காட்சியினூடாக முகம்பார்த்துப் பேச வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்ற சுகத் பேசுவதற் காகக் காத்திருந்த வேளை அந்தச் சம்பவம் நடந்தது.

தன்னுடன் வீடியோ காட்சியினூடாகப் பேசவேண்டும் என்றால் இந்தத் தொடுப்பைப் (Link) பயன்படுத்துமாறு கேட்டுள்ளார் அந்தப் பெண். அந்தத் தொடுப்பை சொடுக்கியவுடன் (Click) அதனூடாக வந்த இணையப்பக்கத்தில் அந்த இளைஞரின் மின்னஞ்சல் முகவரியும் கடவுச் சொல்லும் கேட்கப்பட்டுள்ளது.

ஆர்வ வெள்ளம் அறிவுக்கரையைத் தாண்டியதால் அவற்றை இணையப் பக்கத்தில் பதிவு செய்தார் அந்த இளைஞர்.

அதன்பின்னர் யுவதியைக் காணவில்லை. அந்த இளைஞரின் பேஸ்புக் கணக்கி ற்குள்ளும் நுழைய முடியவில்லை.

இரண்டு நாட்களின் பின்னர் சுகத்தின் பேஸ்புக் சுவருக்கு (Wall) வந்த செய்தி இது தான் " உங்கள் கடவுச் சொல் எங்களிடம் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் எங்களால் செய்ய முடி யும். கடவுச்சொல் வேண்டுமானால் ஸ்கைப் (Skype) தொடர்பாடலில் எம் மோடு பேசி பணம் செலுத்துங்கள்"

திட்டமிட்டு மின்னஞ்சல் வழியாக மேற்கொள் ளப்பட்ட கடவுச் சொல்லைத் திருடும் சூழ்ச்சி இது. இவ் வாறான குற்றச் செயல்களை Phishing என்று அழைப்போம். தனிநபர்களையோ அல்லது குழுக்களையோ புண்படுத்தும் நோக்கில் அல்லது அவர்களின் நற்பெ யருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக் கில் செயற்படுதலை மின்வெளித் தொந்தரவு (Cyberstalking) எனக் கூறுவோம்.

இந்தக் குற்றச் செயல்கள் பல்வேறு முறைகளில் கையாளப்படுகின்றன.

மின்வெளிப் பயங்கரவாதம் அல்லது இணையத்தளக் குற்றங்கள் பரந்து பட்டவை. அவற்றில் இலங்கையில் பதிவான முக்கியமான முறைப்பாடுகளில் சிலவற்றையே நாம் இங்கு தந்துள்ளோம். இதுதவிர இன்னும் பல்வேறு குற்றச்செயல்கள் காணப்படுகின்றன.

பூலோகமயமாதலில் பிரதான பங்கினை வகிக்கும் இணையத்தளங்கள், சமூக வலை யமைப்புகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படவேண்டியதே இதனைத் தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் வழியாகும்.

இவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

* தேவையற்ற தொடுப்புகள் (Link), கோப்புகளை சொடுக்கும்(Click) போதும் தரவிரக்கம் செய்யும்போதும் இருமுறை சிந்தித்தல்
* பயனர் கணக்கு, கடவுச் சொற்களை தனிப்பட்ட ரீதியில் பேணுதல்
* தேவையற்ற, தெரியாத நபர்கள் குறித்து கவனமாக இருத்தல் குறிப்பாக சமூக வலைப்பின்னல்களில் போலிப் பெயர்களில் விடுக்கப்படும் அழைப்புகளை தவிர்த்தல்
* போலியான பெயர்களில் காணப்படும் வைரஸ் எதிர்ப்பு (Antivirus) கோப்புகள் தொடர்பில் அறிந்துவைத் திருத்தல்
* நேர்மையானோரை மாத்திரம் இனங்கண்டு தகவல்களை பரிமாறுதல்
* இணைய வங்கியியலை (Online Banking) மேற்கொள்பவராயின் தனிப்பட்ட கணினியை அதற்கென உபயோகித்தல்
* சமூக வலையமைப்புகளைப்போல வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள போலி வலையமைப்புகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருத்தல்
* இணையத்தளங்கள், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி அறிதல்
* வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுகையில் அவதானம்
ஆகிய வழிமுறைகளையும் பாதுகாப் பான நடவடிக்கைகளையும் மேற் கொள்வதன் மூலம் குற்றச்செயல்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

இணைய உலகில் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.

நடைமுறை உலகில் இளம்பராயத்தினர் தெரிந்தோ தெரியாமலோஇணைய உலகிற் குள் வெகு சீக்கிரமாக உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனை வருமே இணையக் குற்றங்கள், விதிமுறை கள் குறித்து அறிந்துவைத்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே.

இந்தியப் பிரதமருக்கு இரகசிய செய்தி - சிறப்புத்தூதுவர் மூலம் அனுப்பினார் மகிந்த


இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரகசிய செய்தி ஒன்றை சிறப்புத் தூதுவர் மூலம் கடந்தவாரம் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபரின் சிறப்பு தூதுவராக புதுடெல்லி சென்ற பதில் வெளிவிவகார அமைச்சர் டியு.குணசேகர கடந்த வெள்ளிக்கிழமை இந்த இரகசிய செய்தியை இந்தியப் பிரதமரிடம் நேரில் கையளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் டியு.குணசேகர வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.

அதேவேளை, இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் இரகசிய செய்தி என்ன என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஆயினும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குமாறு மகிந்த ராஜபக்சவினால் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகள் குறித்த இந்தியா தனது நிலைப்பாடு, ஐ.நாவில் அதுபற்றிய விவாதம் வரும்போதே அறிவிக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே இந்தியாவின் ஆதரவை உறுதிசெய்து கொள்வதற்காக மூத்தஅமைச்சர் டியு.குணசேகரவை சிறிலங்கா அதிபர் புதுடெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வழக்கமாக பசில் ராஜபக்சவை அல்லது ஜி.எல்.பீரிசை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் மகிந்த ராஜபக்ச இம்முறை மூத்த அமைச்சர் டியு.குணசேகரவை தெரிவு செய்திருப்பது குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலையிலான அரசாங்கத்தின் சார்பில் நல்லெண்ணப் பயணம் ஒன்றுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரல்லாத அமைச்சர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.