![]() |
| சுயம்வரம் நிகழச்சி என்றாலே கலகலப்புக்கும், ஆரவாரமான பேச்சுகளுக்கும் பஞ்சமிருக்காது. சுயம்வரம் நடக்கும் இடம் முழுவதும் சத்தங்களின் சங்கமமாக இருக்கும். ஆனால் முற்றிலும் மாறுபட்டு எந்தவிதமான சத்தமும் இல்லாமல் ஒரு நவீன சுயம்வரம் இன்று சென்னை லிட்டில் பிளவர் பள்ளியில் நடந்தது. அரங்கத்தில் கூடியிருந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் சைகைகளால் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர். பார்வையாளர்களாக வந்தவர்களும் பத்திரிகையாளர்களும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள். என்பதை புரிய முடியாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். காது கேட்காத, வாய்பேச முடியாதவர்களுக்கான சுயம் வரத்தில்தான் இந்த காட்சிகள் அரங்கேறியது. சுமார் 100 ஆண்களும், பெண்களும் தங்களுக்கு ஏற்ற ஜோடியை தேர்வு செய்வதற்காக குழுமி இருந்தனர். மேடையில் நின்ற அறிவிப்பாளர் சைகை மூலமே பெயர், வயது, கல்வித் தகுதி, உள்ளிட்டவற்றை கூறியதும் மண மாலை சூட காத்திருந்த மணமகன்களும், மண மகள்களும் மேடையில் ஏறி தங்களுக்கு விருப்பமான ஜோடி எப்படி இருக்க வேண்டும் என்பதை சைகை மூலமே தெரிவித்தார்கள். இதில் பல ஆண், மற்றும் பெண்களின் பெற்றோர்கள் எந்த குறையும் இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர் காலம் அமைந்து விடாதா? என்ற ஆதங்கத்தில் காத்திருந்தனர். இன்று மதியம் வரை மணமகன் மணமகள் அறிமுகம் நடந்தது. மாலையில் இருவரையும் தனித்தனியாக அமர வைத்து அவர்களை பேசிக் கொள்ள வைக்கிறார்கள். பின்னர் பொருத்தமான ஜோடிகளை பெற்றோர்கள் தேர்வு செய்வார்கள். இவ்வாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வி.ஆர். வெங்கடேசன் கூறினார். ஜோடி தேடி வந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த 24 வயது சுகாசினி கூறியதாவது:- நான் பி.காம். படித்து உள்ளேன். தனியார் நிறு வனத்தில் வேலை பார்க்கிறேன். என்னை போல் படித்தவராக என்னை புரிந்து கொள்பவராக எனது கணவர் இருக்க வேண்டும். எனது அம்மாவை பிரிந்து என் தந்தை தனியாக வசிக்கிறார். ஆனாலும் என்னிடம் அவர் இன்றும் அளவு கடந்த பாசம் வைத் துள்ளார். எனவே எனக்கு வரக் கூடியவர் எனது குடும்ப நிலையை குறையாக நினைக்காமல் என்னுடன் கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அயனாவரத்தைச் சேர்ந்த 28 வயது நிர்மல் ஜோதி என்ற பெண் கூறும்போது, �என்னை போல் குறை உடையவர்களே எனக்கு கணவராக வர வேண்டும். எந்த குறையும் இல்லாமல் என்னை கவனித்து கொள் பவராக இருக்க வேண்டும் என்றார். நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் கூறியதாவது:- நான் ஐ.டி.ஐ. படித்துள்ளேன். சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை பார்க்கிறேன். எந்த குறையும் இல்லாத எனது உறவினர் பெண்களை மணமுடிக்க வற்புறுத்தினார்கள். 25 சவரன் நகையும் போடுவதாக கூறினார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கு மனைவியாக வருபவள் என்னை போல் காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாங்கள் இருவரும் மனம் ஒத்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ முடியும். இந்த சுயம்வரத்தில் அப்படி ஒரு பெண் கிடைப்பாள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். |
Thursday, 22 September 2011
காது கேட்காத, வாய் பேச முடியாதவர் சைகை மூலம் வரன்களை தேடினர்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment