Wednesday, 14 December 2011

ஜீன்ஸ், டீ சர்ட்டால் தமனாவுக்கு வந்த சிக்கல்


நடிகை தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. கடைசியாக வேங்கை என்ற படத்தில் நடித்தார். தற்போது 5 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன. ராம்சரண் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. அவர்கள் கோவில் நிர்வாகத்தினரை கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்து விட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார்.

ராம்சரண் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரை பார்க்க ஒவ்வொரு வரும் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ராம்சரண் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, எனது திருமணம் ஜனவரியில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. திருமண வரவேற்பை திருப்பதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மம்பட்டியான் படத்துக்கு தடை விதிக்க கூடாது; தியாகராஜன் கோர்ட்டில் மனு


சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லப்பன் நடிகர் பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை அய்யா துரை என்கிற மம்பட்டியான் வாழ்க்கையை தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் மம்பட்டியான்என்ற பெயரில் சினிமா படம் தயாரித்துள்ளார். இந்த படம் தயாரிப்பது குறித்து மம்பட்டியானின் வாரிசான என்னிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. படத்தை தயாரிக்க உரிமையும் கொடுக்கவில்லை.

ஏற்கனவே மலையூர் மம்பட்டியான் என்ற பெயரில் வெளியான படத்தினால் எனது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இடையே பகை உணர்வு இருந்து வருகிறது. ஆகவே எனது கருத்தை கேட்காமல் படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு மம்பட்டியான் படத்தின் தயாரிப்பளார் நடிகர் தியாகராஜன் சார்பில் அவரது வக்கீல் ஆனந்தன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-  மலையூர் மம்பட்டியான் படம் 1983-ம் ஆண்டு வெளியானது. அப்போது இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர் சிவானந்தத்திடம் இருந்து 2008-ல் காப்பிரைட்பெற்று மம்பட்டியான் என்ற பெயரில் படம் தயாரித்துள்ளேன். ஆகவே மனுதாரர் எனது படத்திற்கு எதிராக வழக்கு தொடர உரிமை கிடையாது. 2009-ம் ஆண்டு முதல் இப்படம் பற்றி விளம்பரம் செய்து வருகிறேன்.

அப்போதெல்லாம் மனுதாரர் படத்திற்கு எதிராக வழக்கு தொடரவில்லை. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது விளம்பர நோக்கம் கொண்டது. மலையூர் மம்பட்டியான் படம் வெளியாகி 25 ஆண்டுகளாகி விட்டது.   இப்போது தயாரிக்கும் மம்பட்டியான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்நோக்கம் கொண்டது.

ஏற்கனவே இந்த படத்தின் பெட்டிகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு விட்டது. வருகிற 16-ந்தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு தடை விதித்தால் வெளிநாட்டில் விற்கப்பட்ட படத்தின் பிரதி திருட்டு சி.டி.யாக இந்தியாவிற்குள் நுழைந்து விடும். இதன்மூலம் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்படுவேன். எனவே நல்லப்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி வினோபா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

மீண்டும் சீமானின் கோபம்! விஜய்க்கு பதில் கார்த்தி !!


டைரக்டர் சீமான் கோபம் என்ற பெயரில் புதிய படத்தை எடுக்க அதிரடியாக களமிறங்கவுள்ளார். நாம் தமிழர் கட்சிப் பணிகள், அரசியல் பணிகள் என நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தாலும், அதிரடியான கதையுடன் ஒரு படத்தை இயக்கும் பணிகளிலும் அவ்வப்போது தீவிரம் காட்டி வருகிறார். இடையில் விஜய்யை வைத்து அவர் இயக்குவதாக இருந்த படம் ட்ராப் ஆகி விட்டதால், முன்பே யோசித்து வைத்திருந்த கோபம் என்ற தலைப்பிலேயே புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். தம்பி படத்தைப்போல பல மடங்கு வேகமும் அழுத்தமான காட்சிகளும் கொண்ட ஸ்கிரிப்ட் இது. இந்தப் படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார் சீமான்.

மீசையில்லாத போலீஸ்? ; சிம்புவை வம்புக்கு இழுக்கும் ஜீவா

 


மிஷ்கினின் பல நாள் கனவுதானாம் இந்த முகமூடி. எதையும் 'மூடி' மறைக்காமல் பேசும் மிஷ்கின், துவக்க நாளான அன்றும் அப்படியேதான் ஆரம்பித்தார் தனது உரையை. இதுவரைக்கும் நான் பார்த்த ஹீரோக்களிலேயே இப்படி ஒரு டெடிக்கேஷனான ஹீரோவை பார்த்ததே இல்லை. ஜீவாவிடம் இந்த கதையை சொல்லணும்னு நினைச்சேன். என் ஆபிஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமான்னு கேட்டேன். அவ்வளவுதான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் ஆபிசில் இருந்தார் ஜீவா.

மிஷ்கின் 'இடம் சுட்டி பொருள் விளக்கிய' இந்த இடத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகள், ஆரம்பத்திலிருந்து இந்த முகமூடி பிரசவத்தை கவனித்தவர்களுக்கு மட்டும் சட்டென்று புரிந்திருக்கும். (புரியாதவர்களுக்கு சில டேக்ஸ். கமல், அஜீத், எக்ஸட்ரா...) போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.

முகமூடி பற்றி நிறைய பேசினார் மிஷ்கின். நான் சின்ன வயசிலே நிறைய காமிக்ஸ் படிச்சிருக்கேன். அந்த கதைகளை படமாக்கணும்னு அப்பவே எனக்கு கனவு இருந்திச்சு. தமிழில் வெளிவரப்போகும் முதல் பிரமாண்ட சூப்பர்மேன் கதையா இந்த முகமூடி இருக்கும். இந்த படத்தை இந்த ஒரு பகுதியோட முடிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை. முகமூடி பார்ட் ஒன், டூ, த்ரின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கும்னு நம்புறேன்.

இந்த படத்தில் ஜீவா கமிட் ஆனவுடன் குங்பூ கத்துக்கணும் என்றேன். எனக்கு ஏற்கனவே தெரியும். ரெண்டு வருஷம் அந்த சண்டையை நான் கத்து வச்சிருக்கேன் என்றார். என்னுடைய வேலை இன்னும் சுலபமாச்சு. ஜீவா 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிச்சு மே மாதம் திரைக்கு கொண்டு வந்துடலாம் என்றார்.

பின்னாலேயே பேச வந்த ஜீவா, 90 நாட்கள் என்ன, 120 நாட்கள் தருகிறேன் என்றார் மிஷ்கினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை போல. வழக்கமாக இருபெரும் நடிகர்கள் முட்டிக் கொள்ளும்போது இடம் கிடைத்தால் போதும். ஒரு வீச்சருவாவை செருகி பார்ப்பார்கள். இந்த முறையும் அதை மின்னல் வேகத்தில் செய்தார் ஜீவா.

மிஷ்கின் சார் அஞ்சாதே படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைதான் அழைச்சார். சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது? அதுக்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்பதால் அப்படத்தில் நடிக்கல என்றார்.

ஜீவாவின் 'ஒஸ்தி'யான பேச்சு புரியுதா பிரதர்ஸ்...?

பி(பெ)ண் குறிப்பு - இப்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெட்டே மிஸ் யுனிவர்சல் போட்டியில் மோதி முன்னேறி இறுதி வரைக்கும் வந்தவராக்கும்...!

அனுஷ்கா... ஆந்திரா... அவிழாத மர்ம முடிச்சு!


நடிகை தமன்னா எப்படி தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஆந்திராவுக்கு ஓடினாரோ... அதேபோல நடிகை அனுஷ்கா ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஓடி வந்திருக்கிறார். தமன்னா விவகாரத்தில் மர்ம முடிச்சு பெரிதாக இல்லை; ஆனால் அனுஷ்கா விவகாரத்தில் அவிழாத மர்ம முடிச்சு இருப்பதாக ஆந்திர திரையுலகம் கூறுகிறது. 2012 முழுக்க நான் தமிழில் மட்டுமே நடிக்கணும். ஆந்திரா வேணாம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று தனது மேனேஜரிடம் கூறியிருந்தாராம் அனுஷ்கா. அதன்படி பல்வேறு தமிழ் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

அனுஷ்கா தமிழுக்கு ஓடி வந்த விவகாரத்திற்கு பின்னால் இருக்கிற காரணத்தையும், சமீபத்தில் அவர் வீட்டில் நடந்த இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கும் முடிச்சு போடுகிறார்கள் விவரமறிந்தவர்கள். மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலின்படிதான் இந்த ரெய்டு நடந்ததாம். அவர் ஆந்திராக்காரர் என்பதால்தான் பொண்ணு தமிழ்நாட்டு எல்லையிலேயே தஞ்சம் புகுந்திருக்கிறார் என்கிறார்கள் அவர்கள். சிக்கல் என்னவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் ஓராண்டு கொண்டாட்டம்தான்.

இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைக்க வேண்டும்


வாக்கெடுப்பு நடத்தி இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் ஜே.எம்.ஆருண், என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமரை சந்தித்த இருவரும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் கேரளாவில் உள்ள இடுக்கி, தேவி குளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும். இதற்காக அங்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும் என்றும், அந்த அணை வலுவாகவே இருப்பதால் புதிய அணை கட்ட தேவை இல்லை என்றும் எடுத்துக் கூறினர்.

பின்னர் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோரையும் சந்தித்து அணைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க இரு மாநில அரசுகளையும் மத்திய அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

அதே போல ஏ.கே.அந்தோணியை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்தாகூர் உள்ளிட்ட சில தமிழக எம்பிக்களும் சந்தித்துப் பேச்சு நடத்தினர். சந்திப்புக்குப் பின் மாணிக்தாகூர் கூறுகையில், இந்தப் பிரச்சனையில் ஏ.கே.அந்தோணி தலையிட்டு பதற்றத்தை தணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தோம்.

எங்கள் கருத்துகளை ஏற்றுக் கொண்ட ஏ.கே.அந்தோணி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை இரு மாநிலங்களும் காக்க வேண்டும் என்று அந்தோணி தெரிவித்தார் என்றார்.

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்!


தமிழ் திரையுலகமே சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரஜினிக்கு இன்று வயது 62. தமிழக மக்களை மயக்கியதில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், ஸ்டைலில் சூப்பர் மேன் என சொல்லி கொண்டே போகலாம்.

அவரை பற்றிய சில தகவல் துளிகள் :

* 'எவன் ஒருவனும் ஒன்றை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது' விவேகானந்தரின் இந்தப் பொன்மொழிதான் ரஜினி வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது!

* உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு அடுத்ததாக இப்போதும் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது நம்ம சூப்பர் ஸ்டார்தான்!

* தமிழ்ப் படங்கள் ரஷ்ய மொழியில் டப் ஆகின்றன. முதல் படம் 'சந்திரமுகி'!

* ரஜினி முன்பு தன் கையில் அணிந்திருந்த காப்பு, இப்போது நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் திருமாறன் என்பவரிடம் இருக்கிறது!

* 25 தடவைகளுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்கு, தன் கையெழுத்துப் போட்ட சர்ட்டிஃபிகேட் தருவது ரஜினியின் வழக்கம்!

* 'செக்ஸ் என்பது பரமசுகம், ஆனந்தம். வெறுத்து ஒதுக்குற அளவுக்கு இது விஷம் இல்லை. சோஷியல் சர்வீஸ் பண்றவங்களுக்கு இது இடைஞ்சல், அவ்வளவுதான். பெண் இல்லாமல் தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலைமை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு. எதிர்காலத்தில் எப்படி மாறுமோ?' -1981ம் வருடம் 'சாவி'க்கு ரஜினி கொடுத்த பேட்டியின் சில வரிகள் இவை.

* இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

* மாப்பிள்ளையான பிறகு, தனுஷின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் பரிசளிப்பது ரஜினியின் வழக்கம்!

* திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!

* 'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி!

* ஆன்மிகம் தவிர, உலகத் தலைவர்களின் வரலாறு தொடர்பான புத்தகங்களில் ரஜினிக்கு எக்கச்சக்க ஆர்வம்!

* கறுப்பு நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி, பிறகு வெள்ளைக்கு மாறினார். இப்போது ஓய்வு நேரங்களில் காவி, கறுப்பு, நீலம் என கலர் வேட்டிகள் அணிகிறார்!

* ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone, whereas my problem is stomach'

* ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

* 'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

* ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!

* ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்!

* ரஜினிக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு!

* ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏ.வி.எம். தயாரிப்பு!

* பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது ரஜினியின் சென்டிமென்ட். அவர் வரத் தாமதமானால், 'இன்னும் வரலையா?' என்று போன் செய்துவிடுவார்!

* இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!

* ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!

* ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!

* பழமொழிகள், குட்டிக் கதைகள், பொன்மொழிகள் இவற்றுக்காகவே தனியாகப் பல நூறு புத்தகங்களை வாங்கிவைத்திருக்கிறார். அவற்றை மேடையில் பேசும்போது பயன்படுத்துவார்!

* அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!

* தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!

* யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

* 'தலைவா, உங்க பிறந்த நாளன்று உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்' என்று ரசிகர் ஒருவர் சொன்னதற்கு, ''பிறந்த நாளன்று 'நான் ஏன் பிறந்தேன்?' என்று சிந்திக்க எனக்கு அவகாசம் தேவை. அன்றைய நாளில் என் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட என்னைத் தனியாக விட்டுவிடுவார்கள். அன்னிக்கு வேண்டாமே ப்ளீஸ்!'' என்று பிறந்த நாள் பற்றிய வித்தியாசமான கோணம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி!

* ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம் கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

* ரஜினி ஷூ போடுவதை விரும்புவது இல்லை. ஷூட்டிங்கின்போதுகூட அவசியப்பட்டால் மட்டுமே ஷூ அணிவார். மற்றபடி எப்போதும் செருப்பு அணிவதுதான் தலைவரின் சாய்ஸ்!

* தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெகுகாலம் முன்பே ஒரு பெருந்தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட்டார். அந்த வட்டிப் பணத்தில்தான் அந்தக் குடும்பங்களுக்கான விழாச் செலவுகள் நடைபெறும்!

* ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!

* எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!

* டான் - பில்லா, தீவார் - தீ, மர்த் - மாவீரன், திரிசூல் - மிஸ்டர் பாரத், குத்தார் - படிக்காதவன் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் 10 தமிழ் ரீ-மேக் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்!

* பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!

* கேளம்பாக்க வீட்டுக்கு ரஜினியைப் பார்க்க யார் சென்றாலும், அவர் அங்கு இருந்தாலும், இல்லை என்றாலும் முதலில் இளநீர் வந்துவிடும்!

* முன்பு எல்லாம் நெருங்கிய நபர்கள் இறந்துபோனால் அவர்களின் துக்கத்துக்குப் போக மாட்டார். நடிகர் ஜெய்சங்கரின் மரணத்துக்குக்கூடப் போகவில்லை. 'அவர்களின் சிரித்த முகம்தான் எனக்கு நினைவில் இருக்க வேண்டும்' என்பதுதான் காரணம். பிற்பாடு இந்த நிலையை மாற்றிக்கொண்டார்!

* ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

* 'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

* சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!

* எனது ரோல் மாடல் அமிதாப் மட்டுமே என்பார் ரஜினி

முல்லைப் பெரியாறு: நான் சொன்னது தான் நடந்திருக்கு- வைகோ


முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கால் போராட்டம் வெடிக்கும் என்று தான் கடந்த 10 ஆண்டுகளாக சொன்னது தான் நடந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கேரள அரசு கையாளும் விதத்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று நான் கடந்த 10 ஆண்டுகளாக கூறி வந்தது தான் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தற்போது தன்னெழுச்சியான பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாட்டை வரவேற்கிறேன். அதிலும் குறிப்பாக அணை பிரச்சனையில் இரு மாநிலங்களுக்கிடையே மத்திய அரசு ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது. வரும் 21ம் தேதிதமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை மதிமுக சார்பில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்றார்.

கடந்த 2008ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதிமுக சார்பில் நடந்த கருத்தரங்கில் வைகோ இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'பைரவி' முதல் 'கோச்சடையன்' வரை...

 'சார் இவரோட பேர் கலைஞானம். இவர்தான் என்னை முழுசா நம்பி முதன்முதலா 'பைரவி' படத்துல ஹீரோ சான்ஸ் கொடுத்தார்...' இப்படித்தான் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் வி.வி.ஐ.பி-க்களிடம் கலைஞானத்தை அறிமுகபடுத்துவார், சூப்பர் ஸ்டார் ரஜினி.  இரண்டு நபரைக் கண்டால் மட்டும் சட்டென்று எழுந்து நிற்பார். வாசல்வரை வந்து வழியனுப்புவது ரஜினியின் வழக்கம். ஒருவர் கே.பாலசந்தர்... இன்னொருவர் கலைஞானம். 

குடும்ப விஷ்யங்கள் முதல் 'கோச்சடையான்' படம்வரை அனைத்தையும் கலைஞானத்துடன் கலந்து ஆலோசிப்பார், ரஜினி. 'பைரவி'முதல் 'கோச்சடையான்'வரை ரஜினிபற்றி நமக்கு தெரியாத இன்னொரு பக்கத்தை நம்முடன் பகர்கிறார், கலைஞானம்.

'பைரவி' முதல் 'கோச்சடையன்' வரை...
-ரஜினியின் கலை பயணம் குறித்து கதாசிரியர், இயக்குனர் கலைஞானம்

தேவர், சிவாஜி, ரஜினி...

'முதன்முதலா 'பைரவி' படத்தை தயாரிச்சேன், அதுக்கு படத்துக்கு பைனான்ஸ் உதவி செஞ்சவர், தேவர். ஒருநாள் 'ஏண்டா நீ தயாரிக்குற படத்துக்கு ஹீரோ யாருடா..?' என்று தேவர் கேட்டார்.

'ரஜினிகாந்த்...' என்றேன்.

' வில்லனா நடிக்கிற ஆளை ஹீரோவா போடுறியே. தப்பான முடிவா தெரியுது...'
' ரஜினியை 'ஆறு புஷ்பங்கள்' படத்துல பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்.. நீங்க வேணா பாருங்க, அவர் நிச்சயமா பெரிய நடிகரா ஜெயிப்பார்'னு அவர்கிட்டே சொன்னடோட நிற்கலை.. என்னோட முடிவுல இருந்தும் நான் மாறலை. 1978 ஜனவரி மாசம்  'பைரவி' படத்துக்கு பூஜை போட்டேன். தேவர் தலைமை தாங்க, சிவாஜி குத்துவிளக்கு ஏற்றினார். ஒருவழியா 'பைரவி' படம் ரிலீஸாச்சு.

ரஜினியும்... பாம்பும்...

முதல்நாள் மேட்னி ஷோ ராஜகுமாரி தியேட்டர்ல 'பைரவி'யை நானும் தேவரும் பார்த்தோம். வெள்ளித்திரையில ரஜினி காட்டுன விதவிதமான ஸ்டைலுக்கு, ஜனங்ககிட்டே இருந்து பயங்கர கைத்தட்டல். முக்கியமா ரஜினியும், பாம்பும் சேர்ந்து நடிக்கிற சீனுக்கு ஏகோபித்த வரவேற்பு.

அதன்பின், ரஜினியும் பாம்பும் சேர்ந்து நடிச்சா சென்டிமென்ட்டா படம் சக்ஸஸ். அப்புறமா வெளிவந்த 'தம்பிக்கு எந்த ஊரு' 'அண்ணாமலை' 'படையப்பா' இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கு.

'பைரவி' படத்தை பார்த்த தேவர் ஆச்சர்யத்துல அசந்து போனார். 'கலைஞானம்... நான் ரஜினி நடிப்பை பத்தி தப்பா எடை போட்டுட்டேன்... உடனே ரஜினிய கிளம்பி வீட்டுக்கு வரச்சொல்...' என்றார். அடுத்த சில நிமிஷத்தில்  ரஜினி, தேவர் வீட்டில் ஆஜர்.

எவ்வளவோ வற்புறுத்தியும் சோபாவில் உட்காராமல் தேவர் முன்பு நின்று கொண்டே இருந்தார், ரஜினி! 'கலைஞானம் 'பைரவி' படத்துக்கு ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தே..?' என்னைப் பார்த்து தேவர் கேட்டார். 'ஐம்பதாயிரம் ரூபாய்...' என்றேன்.

தேவர் தனது உதவியாளரை அழைத்து காதில் கிசுகிசுத்தார். அடுத்த சில நோடிகளில் சூட்கேஸில் கட்டுக்கட்டாய் கரன்சியை நிரப்பி தூக்க முடியாமல் எடுத்து வந்தார், உதவி. ' அடுத்து நான் தயாரிக்க போற ரெண்டு படத்துலயும் நீதான் ஹீரோ... இந்தாப்பா ரஜினி, அதுக்கான சம்பளம் இது! பத்தலைன்னா இன்னும் வாங்கிக்கோ... சொந்தமா வீடு இருக்கா? நான் வேணா வாங்கி தரட்டுமா...' தேவர் சொல்லச் சொல்ல திகைச்சு போயிட்டார், ரஜினி. அந்தக் காலத்துல நிறைய ஹீரோக்களுக்கு தேவர் வீடு வாங்கி கொடுத்து இருப்பது தனிக்கதை.

ரஜினியின் கோபம்...

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 'தாய்மீது சத்தியம்' 'அன்னை ஒர் ஆலயம்' படங்கள் வெளிவந்துச்சு. தேவரின் செல்லமான ஹீரோவாயிட்டார், ரஜினி. அந்த நேரத்துல தேவர் பிலிம்ஸ்ல கமல் நடிக்கிற 'தாயில்லா குழந்தை' படம் தயாராச்சு. 'என்னை ஏன் நடிக்க கூப்பிடல...' என்று ரஜினி தேவர்கிட்டே செல்லமா கோபிச்சுக்கிட்ட்டார். அதன்பிறகு தானே வலியபோய் உரிமையா கேட்டு கமலோட 'தாயில்லாமல் நானில்லை' படத்துல கெஸ்ட் ரோல்ல நடிச்சார், ரஜினி. அந்தளவுக்கு தேவர் பிலிம்ஸோட நெருக்கமா இருந்தார். அதன்பின் ரஜினி உச்சத்துல ஒளிர்கிற சூப்பர் ஸ்டார் ஆயிட்டார்.

மனோரமாவை திட்டாதீங்க...

அன்று முதல் இன்று வரை ரஜினி நடித்த நிறைய திரைப்படங்களின், கதை, திரைக்கதை, டிஸ்கஷனில் கலந்து வந்திருக்கேன். ஒரு தடவை நடிகை மனோரமா ரஜினியை பத்தி தாறுமாறா திட்டி மேடையில பேசினாங்க. அதைக்கேட்டு எனக்கு கோபம் வந்துடுச்சு.  மனோரமாவைத் திட்டி டிவி மீடியாவுல பேட்டிக் கொடுக்க தயாரானேன்.

அப்போ பி.வாசுவோட வீட்டுல, அவர் படத்தோட விவாதத்துல இருந்தேன். அதனால மீடியாவை வாசு வீட்டுக்கு வரச்சொன்னேன். இந்த விஷயம் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஷூட்டிங்குல இருந்து ரஜினிக்கு தெரிஞ்சு போச்சு. உடனே வாசு வீட்டுக்கு போன் போட்டார் ரஜினி.  வாசு போனை என்னிடம் தந்தார். 'மனோரமா மேடம் எவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட். அவங்க என்னை எப்படி வேணா திட்டி பேசட்டும்.. அதுக்கு அவங்களுக்கு ரைட்ஸ் இருக்கு. கலைஞானம் சார், தயவுசெய்து நீங்க எனக்காக ஆச்சியை எதிர்த்து மீடியாவுல எதுவுமே பேசாதீங்க ப்ளீஸ்...'னு மன்றாடினார். அதுதான் ரஜினி.

ரஜினி வார்த்தை...

ரஜினியை அடிக்கடி நேரில் சந்தித்து பேசுவேன். பொதுவா தன்னைச் சந்தித்து பேசுகிறவர்களிடம், ரஜினி 'அப்புறம்..?' என்று ஆரம்பித்தால் கிளம்புங்கனு அர்த்தம். பலமுறை பார்த்து இருக்கிறேன். அதனால் நான் பார்த்து பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர் என்னைப் பார்த்து 'அப்புறம்...? கேட்கும் முன்பே நான் அவரைப் பார்த்து 'அப்புறம்...' போட்டுவிட்டு கிளம்பி வந்துவிடுவேன்.

வி.ஐ.பி வேலி...

ஒருநாள் ஏவி.எம்ல 'வீரா' படப்பிடிப்புல ரஜினிய சந்திச்சேன். அப்போ தனிமையில இருந்தார். என்னை பார்த்ததும் சேர்ல இருந்து எழுந்து நின்று உதவியாளர் ஜெயராமை ஒரு பார்வை பார்த்தார். அடுத்த நிமிஷமே கையில் சேர் எடுத்து வந்தார். நான் உட்கார்ந்தவுடன் தன்னுடைய நெற்றில் பொட்டில் ஆட்காட்டி விரலை வைத்து என்னையே பார்த்தார். 'கலைஞானம் சார்... என்னைச்சுற்றி இப்போ வி.ஐ.பி தயாரிப்பளருங்க வேலி போட்டு இருக்காங்க... அதைத்தாண்டி வெளியில என்னால வரமுடியலை... அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரியான நேரத்துல உங்களை கூப்பிடுவேன்...' என்று ஃப்ராமிஸ் செய்தார்.

காலம் வேகமா போயிக்கிட்டே இருந்துச்சு. அப்பல்லாம் பெரியவர் வி.கே.ராமசாமி ரஜினிய பாக்குறப்போ 'ஏம்ப்பா ரஜினி எனக்கு ஒரேஒரு படம் நடிச்சுக் கொடுப்பா... என்னாட எல்லா கடனையும் அடைச்சுட்டு நான்  நிம்மதியா கண்ண மூடுவேன்...' என்று அடிக்கடி சொல்வார்.

திடீர்னு ஒருநாள் ரஜினி வீட்டுல  இருந்து போன். 'சார் உடனே கிளம்பி வீட்டுக்கு வர்றீங்களா..?' ரஜினி கூப்பிட்டார். வீட்டுக்குள் போனதும் அங்கே பக்கவாதத்தால் பாதிச்ச  வி.கே.ராமசாமி... ஆக்ஸிடென்ல கையுடைஞ்ச பண்டரிபாய்... 'காளி' பட தீ விபத்தால ஏகப்பட்ட பணத்தை இழந்த தயாரிப்பாளர் ஹேம்நாக்... 'எஜமான்'ல புரொடக்ஷன் மேனேஜரா வேலை பார்த்த நாகராஜராவ்... 'அபூர்வ ராகங்கள்' தயாரிப்பாளர் இறந்துட்டார், அதனால அவரோட வாரிசுகள்... இவங்க எல்லாம் ஒண்ணா இருந்தாங்க.

எம்.ஜி.ஆர் பாடிகார்ட்...

முக்கியமான ஒருத்தரை சொல்லியே ஆகணும் அவர்தான் எம்.ஜி.ஆரோட பாடிகார்டா இருந்த, பத்மநாபன். சரியான எம்.ஜி.ஆர் வெறியர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் காலத்தில் எப்போதும் அவர் கூடவே இருப்பார். சி.எம் ஆனபிறகு பத்மநாபனை சத்யா ஸ்டுடியோ மேனேஜராக்கிவிட்டு போனார்.

எம்.ஜி.ஆர். அமெரிக்க சிகிச்சைக்கு அப்புறம் 1987-ல தன்னோட கடைசி காலத்துல பத்மனாபனை தன்னோட ராமவரம் தோட்டத்துக்கு  வரச்சொன்னார், எம்.ஜி.ஆர். பத்மாவோட குடும்ப நிலைமைய புரிஞ்சு, 'உனக்கு 30-லட்சம் ரூம்ல மூட்டைக்கட்டி வச்சிருக்கேன் போய் எடுத்துக்கோ...'னு சொன்னார், எம்ஜி.ஆர். 'தலைவரே நீங்க உயிரோட இருந்தா அதுவே போதும்'னு எம்.ஜி.ஆர் காலை பிடிச்சு கரகரனு கதறி அழுதார். எம்.ஜி.ஆர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், வற்புறுத்தியும்  கடைசிவரை பணத்தை வாங்க மறுத்துட்டார், பத்மநாபன்.

ஆறு பெண் குழந்தைகளை பெத்து வச்சுக்கிட்டு கஷ்ட ஜீவனம் நடித்திக்கிட்டு இருந்த பத்மநாபன், திடீர்னு ஒருநாள் இறந்துட்டார். அப்பாவை இழந்த அவரோட குடும்பம் நிலைகுலைஞ்சு போயிடுச்சு.

உதவிய ஊர்காவலன்...

'ராணுவவீரன்' 'ஊர்க்காவலன்' ஷூட்டிங் நடந்தப்போ ரஜினிகூடவே இருந்து ஹெல்ப் பண்ணினார், பத்மநாபன். அதனால ரஜினி மனசுல பத்மநாபன் இடம்பிடிச்சார்.

பத்மநாபன் மறைவுக்கு அப்புறம், அவரோட குடும்பம் கஷ்டப்படுற நிலைமையை கேள்விப்பட்டு அவரோட ஆறுபெண்களை போயஸ்கார்டன் வீட்டுக்கு வரவழைச்சு இருந்தார், ரஜினி. என்னை தனியே அழைத்தார் ' கலைஞானம் சார், இங்கே இருக்குற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா தயாரிப்பாளராக்கி நான் நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. ஆனா இப்போ இருக்குற நிலையில சாத்தியமில்லே. அதனால நான் நடிக்கப்போற 'அருணாச்சலம்' படத்துல கிடைக்குற லாபத்துல இவங்க எல்லாருக்கும் ஒரு தொகைய பங்கு தர நினைக்கறேன். அதனால  உங்களோட இவங்களையும் தயாரிப்பாளரா ஒண்ணா சேர்த்துக்குங்க...' என்று சொன்னார்.

ட்ரங்க் பெட்டியில் பணம்...

நானே பார்த்து பார்த்து ஸ்டோரி, டயலாக் எழுதுற வசனகர்த்தா. அப்படிப்பட்ட நான் அவரது அர்த்தம் பொதிந்த வார்த்தை கூர்மையை பார்த்து  நெகிழ்ந்து போனேன் 'அருணாச்சலம்படம் ஏப்ரல் மாசம் ரிலீஸ்னு அறிவிப்பு வந்துச்சு. அதுக்கு ரெண்டுநாள் முன்னாடி எங்க எல்லாரையும் முன்னாடி கூப்பிட்ட மாதிரியே ஒரே நேரத்துல போயஸ் கார்டன் வீட்டுக்கு கார் எடுத்துட்டு வரச்சொன்னார்.

வீட்டுக்குள் இருந்த அறையில வரிசையா ட்ரங்க் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார். பெட்டிமேல் ஒவ்வொருத்தர் பெயரையும் பளிச்னு எழுதியிருந்தார். வி.கே.ராமசாமி, பண்டரிபாய், என்னை இப்படி எல்லோரையும் ஒவ்வொருத்தரா  அழைச்சார் ' நான் உங்ககிட்ட குறிப்பிட்டுச் சொன்ன தொகையவிட டபுள் மடங்கு பணம் இதுல இருக்கு... ஹேப்பியா...'னு அவரோட பாணியில கேட்டார், ரஜினி.

நாங்க எல்லாரும் கண்கலங்கி ரஜினியோட பெரிய மனசைப் பார்த்து ஆடிப்போயிட்டோம்.

ரஜினி டிக் பண்ணிய லிஸ்ட்...

இந்த வருஷம் கடந்த மார்ச் மாசம் ஆரம்பத்துல இருந்தே அவருக்கு உடம்பு சரியில்லை. 'எப்பவும் சுறுசுறுப்பா ஃபாஸ்ட்டா இருக்கிறவர் திடீர்னு டல்லா இருக்காரே...'ன்னு ஃபீல் பண்ணியிருக்கார், லதா. 'மனசுக்குள்ளே ஏதோ கவலைய சுமந்துக்கிட்டு இருக்கார். மனம்விட்டு பேசக்கூடிய பழைய சினிமா ஆட்களை ஒண்ணா வீட்டுக்கு அழைச்சா கலகலன்னு குழந்தையா மாறி சிரிச்சுடுவார்னு நினைச்சிருக்காங்க.

ரஜினிக்கு நெருக்கமான பிடிச்சவங்க லிஸ்ட்டை பார்த்து... பார்த்து லதா தயார் செய்து இருக்காங்க. அந்த பட்டியல ஒருநாள் ரஜினிகிட்டே காட்டி இருக்காங்க. அந்த லிஸ்ட்ல  ரஜினி டிக் பண்ணின ஆட்களை மட்டும் செலக்ட் செய்து இருக்காங்க.

போன் செய்த லதா...

மார்ச் மாசம் 18 அன்னிக்கு திடீர்னு லதாகிட்டே இருந்து போன் வந்துச்சு 'அப்பா.. அவர் உங்களை சந்திக்கணும்னு ஆசைப்படுறார். அதனால நாளைக்கு மறக்காம  வீட்டுக்கு வாங்க'னு சொன்னார். நானும் மறுநாள் மறக்காம போயஸ் கார்டன் போனேன்.

ரஜினி மனசுக்கு பிடிச்ச... அவரோட நெருங்கி பழகின பழைய ஆட்களான பஞ்சு அருணாச்சலம், டி.எம்.சௌந்தர்ராஜன், வாலி, மகேந்திரன் எல்லாம் குழுமி இருந்தாங்க. எல்லாரிடமும் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி பச்சைக்குழந்தை மாதிரி சிரிச்சுக்கிட்டே இருந்தார், ரஜினி.

ஐஸ்வர்யா, சௌந்தர்யாகிட்டே எங்க எல்லாரையும் ஒவ்வொருத்தரா அறிமுகம் செஞ்சாங்க, லதா. மதியம்  தடபுடலா நடந்த விருந்துல எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டோம்.  ஒவ்வொருத்தர் இலையையும் பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து பதார்த்தத்தை பரிமாறுனாங்க, லதா.

'ராணா' பூஜை...

கடந்த மே மாசம் 5-ம்தேதி ராத்திரி திடீர்னு ரஜினிகிட்டே இருந்து போன், ' சார் நான் ரஜினி பேசுறேன்... எப்படி இருக்கீங்க. நாளைக்கு காலைல 'ராணா' படத்தோட பூஜை. நிறைய பேருக்கு சொல்லலை. கொஞ்சம் ஆளுங்களுக்கு மாத்திரம் சொல்லி இருக்கேன். அதுல நீங்க ஒருத்தர். அதனால மறக்காம வந்துடுங்க'னு சொன்னார்.

மறுநாள் 'ராணா' பூஜை நடந்த ஏ.வி.எம் ஸ்டுடியோ போனேன். வழக்கமா ரஜினிகிட்ட எப்பவும் ஒரு துறுதுறு துள்ளல் இயற்கையா இருக்கும். அது 'ராணா' பூஜையில மிஸ்ஸிங். ரொம்ப டயர்டா இருந்தார். முகத்துல எந்தவித எக்ஸ்பிரஷனும் காட்டாம போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

ரஜினிக்கு என்னாச்சு..?

திடீரென்று பூஜையில் இருந்த யாரிடமும் எதுவும் சொல்லாமல், கொள்ளாமல்  தன்னோட மேக்கப் ரூமுக்கு ஒடிப்போயிட்டார்.

ரஜினிக்கு என்னாச்சு? என்று யோசித்தபடி நானும் அவர் பின்னாடியே போனேன். அறையில் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். பாத்ரூம் போயிட்டு வெளியில வந்தவர், ரொம்ப டயர்டா இருந்தார். நான் ஒடிப்போய் குசலம் விசாரிச்சேன் 'ஒண்ணுமில்லே சரியாயிடும்'னு சிரிச்சார். அவர் மனசை மாற்றும் விதமா, நான் கையில் கொண்டு போயிருந்த மலர் கிரீடத்தை தலையில் பொருத்தினேன். 'இதெல்லாம் எதுக்கு வேணாமே'னு தயங்கினார். பின்னர் சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதன்பிறகு நடந்தது நாட்டுக்கே தெரியும். நான் 'பைரவி'யில் பார்த்த ரஜினியை மறுபடியும் 'கோச்சடையன்' படத்துல பார்க்க ஆசையா காத்திருக்கேன்.

கலங்கிய ரஜினி...

ரஜினி ஒரு அபூர்வமான பிறவி. தன்னோட எதிரிக்குகூட எந்த துன்பமும் வரக்கூடது, அவங்க நல்லாயிருக்கனும்னு பிரார்த்தனை செய்கிற பெரிய மனசுக்காரர்.  ஒருதடவை காவிரி பிரச்னை தமிழ்நாட்டுல தலைவிரிச்சு ஆடுச்சு. அந்த சமயத்துல ரஜினியபத்தி ஆளாளுக்கு விமர்சனம் செஞ்சாங்க. அப்போ ' தமிழ்நாட்டுல இருக்குறவங்க என்னை கன்னடன்னு கோபமா திட்டுறீங்க... கர்நாடகம் போனா என்னை மராட்டியன்னு மோசமா ஏசுறாங்க... மகராஷ்ட்ரா போனா நீ ஒரு சவுத் இந்தியன்னு சபிக்குறாங்க... நான் எங்கேதான் போவேன்' என்று கதிகலங்கி கண்கலங்கி ரஜினி பேசுனது காட்சி அப்படியே என் கண்ணுல நிக்குது.'' என்று கலங்கினார், கலைஞானம்.