Monday, 21 November 2011

வியக்கவைக்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள்

தொழல்நுட்ப வளர்ச்சியின் பயனாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களில் நீர்மூழ்கிக்கப்பலும் ஒன்றாகும்.
பெரும்பாலும் இந்த கப்பல் இராணுவ நோகத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. இப்படி பயன்படுத்தப்படும் நீர்மூழ்கிக்கப்பலை மிகவும் அற்புதமாக மாற்றி வடிவமைத்துள்ளனர்.

போலீஸ்க்கு தண்ணி காட்டும் நாய் -கவிழ்ந்து கிடக்கும்கார்

சாரதியின் கட்டு பாட்டை இழந்து கார் ஒன்று தலைகீழாய் பிரண்டு கிடக்கிறது அவ்வழியே வந்த கார் ஒன்றில் நின்ற நாய் குட்டி ஒன்று கார் யன்னலுக்கால பாய்ந்து கடு கதி நெடுஞ்சாலையில் ஓடுவதும்
அதனை பிடிக்க பொலிஸ் காரர்கள் ஒடுவதனையும் பாருங்கள் ..!  பார்த்தல் நீங்களே சிரிப்பீர்கள் ..!

ஒபாமா, அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா இடையிலான நெருக்கமான உறவு: அரசியலுக்கு அப்பாற்பட்டது?

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளைப் பலப்படுத்தலே இதற்கான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையில் இராணுவ ரீதியான பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் இவற்றை விடவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இடையிலான நெருக்கம் தொடர்பில் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

அதாவது ஒபாமாவை விமானநிலையத்தில் வைத்து கிலார்ட் வரவேற்றவிதம் அவர்களிடையே பரிமாறப்பட்ட முத்தம் என்பனவற்றை புகைப்படங்களுடன் ஊடகங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன.

இது மட்டுமன்றி வேறு சில சந்திப்புகளிலும் பெறப்பட்ட பல்வேறு புகைப்படங்களையும் ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன.

இதேவேளை இவர்களுக்கிடையிலான நெருக்கம் தொடர்பில் கிலார்டிடம் ஒருதடவை வினவிய போது தாம் இருவரும் 1961 ஆம்ஆண்டு பிறந்ததாகவும் இதுதான் இந்நெருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி, அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைஸ் மீது ஈர்ப்புக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மின்சார தானியங்கிப் படியில் கபடி ஆடிய வெள்ளைக்காரி

ஒரு வழியுள்ள மின்சார தானியங்கிப் படியில் எதிர்ப்புறமாக ஏறிய வெள்ளைக்காரப் பெண் ஒருவர் தடுமாறும் காட்சியே இது.
தவறாக ஏறியும் தைரியமாக முன்னோக்கி ஏறுகிறார். வழமையான வழியில் வருவோர் இவரைப் பார்த்து சிரிக்கின்றனர்.
ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் பாய்ந்து பாய்ந்து ஏறுகிறார் இந்தப் பெண்.
இந்த வீடியோவை எடுத்தவருக்கு நிச்சயம் சிரித்து சிரித்தே வயிறு நொந்திருக்கும்.
இந்த அதிசய காட்சிகள் அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் முதலில் தவறாக ஏறிவிட்டோம் என்று தெரியாமல் சாதாரணமாகத் தான் நடக்கிறார்.
ஆனால் இன்னும் மேல போகும் போது கடுமையாக முயற்சிக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை Youtube இல் பதிவேற்றப்பட்ட குறித்த வீடியோவை  இலட்சம் பேருக்கு மேல் பார்த்து உள்ளார்கள்.
நம்மூர் மக்களுக்கு தான் இந்த தானியங்கி மின்சாரப் படி தொடர்பான தெளிவான அறிவின்மை காணப்படுகின்றது. ஆனால் வெள்ளைக்காரிக்குமா?

கடற்புலிகளை எதிர்கொண்ட இந்திய கடற்படையினர் – நான்கு ஆண்டுகளின் பின் வெளியான இரகசியம்

கடற்புலிகள் ஆயுதங்களை ஏற்றிவந்த ‘சிறிகிருஸ்ணா‘ என்ற இழுவைப்படகு, மாலைதீவு கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோது, அதனை இடைமறித்த மாலைதீவு கடலோரக் காவல்படைக் கப்பலில் இந்தியக் கடற்படையினரும் இருந்தனர் என்பதை மாலைதீவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.காலியில் கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரியான லெப்.கேணல் மொகமட் இப்ராகிம், 2007ஆண்டு மாலைதீவு கடற்பரப்பில் கரையோரக் காவல்படையினரை எதிர்கொண்ட போது விடுதலைப் புலிகளே ‘சிறிகிருஸ்ணா‘ என்ற இழுவைப் படகிற்குத் தீமூட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார்.

கப்பலின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் இருந்த டீசலை ஊற்றிய பின்னரே கப்பலுக்குத் தீ வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மாலைதீவு கடலோரக் காவல்படையினர் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்ததை அடுத்து, கடற்புலிகளால் கடத்தப்பட்ட அந்த இந்திய இழுவைப் படகில் இருந்த இந்தியர் ஒருவரை கடலில் குதிக்க அனுமதித்தனர். அவரை கடலோரக் காவல்படை கப்பலான ‘ஹுராவி‘ மீட்டது“ என்றும் லெப்.கேணல் மொகமட் இப்ராகிம் கூறியுள்ளார்.

முன்னதாக ‘சிறிகிருஸ்ணா‘ கடும்மோதல் ஒன்றையடுத்தே மூழ்கடிக்கபட்டதாக தகவல் வெளியானது. தற்போது மாலைதீவு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ள தகவல் அதற்கு முற்றிலும் முரண்பாடானதாக உள்ளது.

“இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் ‘சிறிகிருஸ்ணா‘ கடற்புலிகளால் கொண்டு செல்லவோ கைவிட்டுச் செல்லவோ முடியவில்லை.

‘ஹுராவி‘யின் பணியாளர்கள் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அந்த இடத்துக்குச் சென்றடைய ஒன்றரை மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. அதற்குள் ‘சிறிகிருஸ்ணா‘ தப்பிச் சென்றிருக்க முயன்றிருக்கலாம்.

அவர்களை சரணடைய வைப்பதற்கு பல மணிநேரம் பேச்சுக்களை நடத்தினோம். இதன்போது பல இந்திய அதிகாரிகளும் மாலுமிகளும் ‘ஹுராவி‘யில் இருந்தனர்.

2007 மே மாதம் இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சொற்பகாலம் முன்னதாகவே ‘ஹுராவி‘யை இந்தியா வழங்கியிருந்தது.

எனவே மாலைதீவு கடலோரக் காவல்படையினருக்கு அதனைக் கையாளும் பயிற்சியை வழங்க இந்திய அதிகாரிகளும் மாலுமிகளும் அதில் தங்கியிருந்தனர்.

மாலைதீவு கடற்படையினரின் கைகளில் அந்த ஆயுதங்கள் விழுவதைத் தடுப்பதற்காகவே கடற்புலிகள் ‘சிறிகிருஸ்ணா‘வுக்குத் தீவைத்து அழித்தனர்.

ஆனால் அதில் இருந்து தப்பியவரை விசாரிக்க சிறிலங்கா கடற்படைக்கு மாலைதீவு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

அது ஆழ்கடலில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் ஏனைய கப்பல்களை சிறிலங்கா கடற்படை குறிவைப்பதற்கு வசதியானது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய்: அமிதாப்பச்சன் வேதனை


குழந்தையோடு ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்ற தோற்றத்தை தரும் ஒட்ட வைக்கப்பட்ட போலி புகைப்படங்கள் இன்டர்நெட்டில் உலா வருவதாக அமிதாப்பச்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த வாரம் பெண்  குழந்தை பிறந்தது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.  ஐஸ்வர்யாவின் மாமனார் அமிதாப் பச்சன் தனது பேத்தியின் அழகை டிவிட்டர் மூலம் வர்ணித்திருந்தார். ஐஸ்வர்யா சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே இன்டர்நெட்டில் ஐஸ்வர்யா ராய் குழந்தையுடன் இருப்பது போன்ற படங்கள் உலா வருகின்றன. இந்நிலையில் அமிதாப்பச்சன் இதனை மறுத்துள்ளார். ஐஸ்வர்யா ராய் குழந்தையோடு இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாகவும் அவை ஒட்ட வைக்கப்பட்ட போலி புகைப்படங்கள் என்று அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளார்.

இதனிடையே அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தைக்கு பேட்டிபி என செல்லப்பெயர் வைத்துள்ளனர். இந்த பெயரைச் சொல்லியே அவர்கள் குழந்தையை கொஞ்சுவதாக கூறப்படுகிறது. அமிதாப்பச்சன் பிக்பி என்ற அடைமொழியோடு குறிப்பிடப்படுகின்றார். அதற்கேற்ற வகையில் அவரது பேத்திக்கும் பேட்டிபி என செல்லமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நான் அழைத்தால் கலைஞர் வரமாட்டேன் என்று சொல்ல மாட்டார்; கவிஞர் வாலி


நான் அழைத்தால் கருணாநிதி வரமாட்டேன் என்று சொல்ல மாட்டார்; எனக்கும் அவருக்கும் நாற்பத்தைந்து வருட கால நட்பு இருக்கிறது என்று கவிஞர் வாலி கூறியுள்ளார். வசந்த் டி.வியும், சாதக பறவைகள் சங்கரும் இணைந்து வாலி 1000 என்ற தலைப்பில் கவிஞர் வாலி பற்றிய இனிமையான நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட் - வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது. ஏ.வி.எம் சரவணன், எஸ்பி.முத்துராமன், இயக்குனர் மகேந்திரன், எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் தேவா, எஸ்.ஜே.சூர்யா, டைரக்டர் கதிர், எல்.ஆர்.ஈஸ்வரி, குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களை சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடுத்து முடித்துவிட்டார்களாம்.

இது பற்றி கவிஞர் வாலி அளித்துள்ள பேட்டியில், இந்த நிகழ்ச்சிக்கு யாரையும் நான் அழைக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் அழைத்திருக்கிறார்கள். நான் அழைத்தால் கருணாநிதி கூட வருவார், வர மாட்டேன் என்று சொல்ல மாட்டார். எனக்கும் அவருக்கும் நாற்பத்தைந்து கால நட்பு இருக்கிறது. என்றார்.

ஆட்சி மாறியதும் ரங்கநாயகி என்றெல்லாம் கவிதை எழுதுகிறீர்களே, அந்தகால புலவர்கள் மாதிரி அரசவையை உங்களால் இடித்துரைக்க முடியாதா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கவிஞர் வாலி, இலங்கை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை பாராட்டி அந்த கவிதையை எழுதினேன். ஆனால் நான்தான் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பார்வதியம்மாளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் அனுமதி மறுத்ததை கண்டித்தும் கவிதை எழுதினேன். அந்த கவிதையை பாராட்டி நிறைய பேர் பேசினார்கள். வைகோ கூட அதை தன் சங்கொலி பத்திரிகையில் வெளியிடவா என்று அனுமதி கேட்டு வெளியிட்டார். சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி பற்றியும் கவிதை எழுதியிருக்கிறேன். நாட்டில் நடக்கிற அன்றாட பிரச்சனைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் அதை தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியாது, என்று கூறியிருக்கிறார்.

'பெட்ரூம் டூ ஹாஸ்பிட்டல்': பெண் பாடிகார்டுகளை பாடாய்ப்படுத்திய கடாபி

கொலல்ப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி செக்ஸ் விஷயத்தில் மிகவும் பலவீனமானவர் என்றும், தினமும் 4 அல்லது 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு கொண்டதாக அவரது சமையல்காரர் பைசல் தெரிவித்துள்ளார். பல பெண்கள் வேலை முடிந்ததும், நேராக மருத்துவமனைக்குத்தான் போவார்களாம். அந்த அளவுக்கு கடுமையாக நடந்து கொள்வாராம் கடாபி.

42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்ட கடாபியைச் சுற்றி எப்பொழுதும் ஃபுல் மேக்கப்புடன் பெண் பாதுகாவலர்கள் இருந்தனர். அவருக்காக குண்டடி பட்டு இறந்த பாதுகாவலர்களும் உண்டு. இந்நிலையில் கடாபியின் பெண் பாதுகாவலர்கள் பற்றி அவரிடம் 7 ஆண்டுகளாக சமையல்காரராக இருந்த பைசல் கூறியதாவது,

கடாபி ஒரு செக்ஸ் பைத்தியம். அவரால் உறவு வைக்காமல் இருக்க முடியாது. தினமும் 4 முதல் 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு வைத்தார். அது அவருக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

தினசரி அந்த பெண் பாதுகாவலர்கள் அவரது அறைக்கு செல்வார்கள், அவருடன் உடலுறவு வைப்பார்கள், அதன் பிறகு முகம் சிவந்து வெளியே வருவார்கள்.

அவர்கள் அனைவருமே கடாபியுடன் உறவு வைத்துள்ளனர். கடாபியுடன் யார் மிகவும் ஒட்டி, உறவாடுகிறார்களோ அவர்களுக்கு பங்களா, கட்டு கட்டாக பணம் கிடைத்தது. அவர்கள் கடாபியுடன் உறவு வைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடன் நேராக மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். காரணம் அவ்வளவு உள்காயம் ஏற்பட்டிருக்கும் என்றார்.

மேலும் கடாபி ஆண்மையை தக்க வைத்துக் கொள்ள ஏகப்பட்ட மருந்துகளையும் சாப்பிட்டு வந்துள்ளாராம். இதை அதிகமாக சாப்பிடக் கூடாது என்று கடாபியுடன் நெருக்கமாக இருந்த உக்ரைன் நாட்டு நர்ஸ் அவ்வப்போது கடாபிக்கு எடுத்துக் கூறுவாராம், ஆனாலும் அதைக் கண்டு கொள்ளவில்லையாம் கடாபி.

லிபியாவில் புரட்சி வெடித்த பிறகு தலைமறைவாக இருந்த கடாபியை கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி அவரது சொந்த ஊரான சிர்டேவில் வைத்து போராளிகள் கொன்றனர். அவரது உடலை அனைவருக்கும் தெரியும்படி அடக்கம் செய்தால் அந்த இடத்தை யாராவது வணக்க ஸ்தலமாக ஆக்கிவிடுவார்கள் என்பதற்காக ரகசிய இடத்தில் அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் மகளுக்கு நல்ல பெயராச் சொல்லுங்களேன்-அபிஷேக் கோரிக்கை


தனது மகளுக்குச் சூட்ட நல்ல பெயராகப் பரிந்துரைக்குமாறு ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் அபிஷேக் பச்சன்.

மற்ற நடிகர், நடிகையருக்கும், அபிஷேக் பச்சன் குடும்பத்தினருக்கும் இடையே இமயமலை அளவுக்கு வித்தியாசம் உள்ளதை சமீப நாட்களாக தொடர்ந்து செய்திகளைப் படித்து வருவோர் உணர முடியும்.

வழக்கமாக நடிகர், நடிகையருக்கு குழந்தை பிறந்தால் அதை படு ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். என்ன குழந்தை பிறந்தது என்பதை மட்டும் பிரஸ் ரிலீஸ் மூலம் கொடுத்து விட்டு அத்தோடு கப்சிப்பாகி விடுவார்கள். அது நிச்சயம் தனிப்பட்ட விஷயம்தான், மறுப்பதற்கில்லை. இருப்பினும் அபிஷேக் பச்சனும், அமிதாப் பச்சனும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவர்ந்து விட்டனர். இந்தியர்கள் அத்தனை பேரும் தங்களது குடும்பத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்ற உணர்வுடன் அவர்கள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது - ஐஸ்வர்யா ராய் குறித்த செய்திகளை அவர்கள் மாறி மாறி மக்களுக்குத் தந்து கொண்டிருப்பது.

வழக்கமாக மீடியாக்காரர்கள்தான் இப்படி மாய்ந்து மாய்ந்து செய்தி கொடுப்பார்கள். ஆனால் அமிதாப்பும், அபிஷேக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவரது குழந்தை குறித்த செய்தியை தினசரி அப்டேட் செய்து கொண்டுள்ளனர்.

ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை ட்விட்டர் மூலம் இருவரும் மக்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் குழந்தை எப்படி உள்ளது, ஐஸ்வர்யா எப்படி உள்ளார் என்பதையும் தொடர்ந்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் தனது மகளுக்கு நல்ல பெயராக பரிந்துரையுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் அபிஷேக்.

இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது குழந்தைக்கு ஏ என்று ஆரம்பிக்கும் வகையிலான ஒரு நல்ல பெயரை பரிந்துரையுங்கள். உங்களது பரி்ந்துரைகள் அனைத்தும் வரவேற்கப்படும் என்று கூறியுள்ளார் அபிஷேக்.

அவர் மேலும் கூறுகையில், உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் நன்றியுடன் ஏற்கிறோம். இதுவரை 8 லட்சம் வாழ்த்துகள் வந்து விட்டன. மிகப் பெரிய வரவேற்பு இது. தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. அனைவருக்கும் எங்களது நன்றிகள். எனது மகள் மிகவும் அதிர்ஷ்டக்காரி, இத்தனை பேரின் வாழ்த்துகள் அவளுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார் அபிஷேக்.

மறுபக்கம் மாமனார் அமிதாப் பச்சன், தனது பேத்தி வீட்டுக்கு வரும்போது அவளை தடபுடலாக வரவேற்க கேமராக்களுடன் தயாராகி வருகிறாராம்.இதுகுறித்து அவர் ட்விட்டர் எழுதுகையில், அந்தக் குட்டிக் குழந்தையை விட்டுசிறிது நேரம் கூட பிரிந்திருக்க முடியாது. இருந்தாலும் அவள் வீட்டுக்கு வரும்போது வீடியோவில் ஷூட் செய்யவும், கேமராவில் படம் பிடிக்கவும் தயாராக இருக்க வேண்டுமே. அதைநான் தற்போது வீட்டில் செய்து கொண்டிருக்கிறேன். எனது பிறப்பின்போது கூட நான் இத்தனை மகிழ்ச்சியான சூழலில் இருந்திருக்க மாட்டேன் என்று கூறி சந்தோஷப்பட்டுள்ளார்.

ஜெ. சொல்வதை கேளுங்க, மக்களுக்கு 'நாட்டாமை' சரத்குமார் கோரிக்கை!


பேருந்து கட்டணம், பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் உருக்கமான வேண்டுகோளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தனது நிர்வாகத் திறமையால் இந்த விலை உயர்வை விரைவில் சீரமைப்பார் என்று சமக தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக முதல்வர் பால் விலை, பஸ் கட்டண உயர்வையும், மின் கட்டணம் உயர இருப்பதையும் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பில் தமிழக அரசின் நிதி நிலைமையையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் உள்ளது என்று உள்ளபடியே விளக்கியுள்ளார். அந்த உருக்கமான அறிக்கை நம் ஒவ்வொருவர் இதயங்களிலும் வேதனையை அளித்துள்ளது.

ஒவ்வொரு தனிப்பட்ட பொதுமக்களும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டாலும் மக்களுக்காகவே இயக்கப்படும் ஆவின் நிறுவனம், அரசுப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த நடவடிக்கை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் பால் விலை உயர்வால் ஏழை விவசாயிகளுக்கும், மாடு வளர்ப்பவர்களுக்கும் பாலுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது உறுதி.

மேற்படி நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அரசு பால் விலையை உயர்த்தியிருந்தாலும் தனியார் பால் விற்பனை விலையைவிட ஆவின் பால் விலை குறைவாகத் தான் இருக்கிறது. தனியார் பேருந்துகள் தொலைதூரம் செல்ல வசூலிக்கும் கட்டணத்தைவிட உயர்த்தப்பட்ட அரசுப் பேருந்து கட்டணம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருந்தாலும் நம் தமிழக அரசின் நிலையை மனதில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

தமிழக முதல்வரின் சீர்மிகு செயல்பாட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் விரைவில் தீர்ந்துவிடும் என்பது உறுதி. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களின் தேவைகளை விலையில்லா பல நல திட்ட உதவிகளை செய்து அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் தமிழகத்தின் முதல்வர், மேற்கண்ட நிறுவனங்களின் நிதிநிலையை தன்னுடைய நிர்வாக திறமையால் சீர்செய்து, நடுத்தர மக்களின் தேவை உணர்ந்து அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மேற்கண்ட கட்டணங்களை மீண்டும் சீரமைப்பார் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நம்பிக்கை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது; விஜயகாந்த்

ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது. எங்களைச் சீண்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள். பால், பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறினார். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதிக்கியுள்ளது என்பதை மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் பட்டியலிட்டுருப்பதை பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டேன். ஜி.கே. வாசன் கூறியுள்ளதை நானும் கூறினால் விஜயகாந்த் காங்கிரஸ் பக்கம் போகிறான் என்று கதை கட்டிவிடுவார்கள். இதைச் சொல்வதால் நான் காங்கிரஸை ஆதரிப்பவன் என்று அர்த்தம் இல்லை.

ஜி.கே. வாசன் தெரிவித்திருப்பது போல் மத்திய அரசு மாநிலத்திற்காக சிறப்பு நிதி ஒதுக்கும். அதை திறமையாகப் பயன்படுத்த வேண்டியது மாநில அரசின் கையில் உள்ளது.

மாற்றம் வேண்டி அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு அது வெறும் ஏமாற்றத்தைத் தான் அளித்துள்ளது. இதை மக்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்கள் தற்போது கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். விலையை ஏற்றுபவர்கள் அதை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்திருக்க வேண்டியது தானே. திமுக அரசு செய்த தவறுகளையே அதிமுக அரசும் செய்கிறது. அண்மையில் நடந்து முடிந்த அதிமுகவினர் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது ஊருக்கே தெரியும்.

நான் சட்டசபை பக்கம் வரவில்லை என்கிறார்கள். எனக்கு உடல்நலம் பாதி்ககப்பட்டுள்ளதால் தான் செல்லவில்லை. சரி, ஜெயலலிதாவும், கருணாநிதியும் எதிர்கட்சித் தலைவர்களாக இருக்கையில் எத்தனை நாட்கள் சட்டசபைக்கு வந்தார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தெரியும்.

பால், பஸ் கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு அரசு அனுமதி மறுக்கலாம். இவ்வளவு ஏன் மதுரையில் ஒரு பேனர் வைக்க காவல்துறை அனுமதி மறுக்கிறது. பேனர் எல்லாம் வைக்கக் கூடாது என்கிறார் கமிஷனர்.

கடந்த ஆட்சியில் எப்படி காவல்துறை பாராபட்சமாக இருந்ததோ தற்போதும் அப்படியேத் தான் உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ கலெக்டர்கள் மாநாடு நடத்தி கலெக்டர்களுக்கு பரிசு கொடுத்து பாராபட்சத்தை தூண்டி விடுகிறார்கள். மதுரையில் அனைவருக்கும் வேண்டாதவர் என்று பெயரெடுத்த கலெக்டர் சகாயம் தற்போது ஆளுங்கட்சிக்கு சகாயம் செய்து சகாயமாகிவிட்டார்.

கமிஷனர் கண்ணப்பனும் மாறிவிட்டார். பேனர் வைப்பதை தடுப்பதால் எல்லாம் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி புகழை யாராலும் அழிக்க முடியவில்லை. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள் என்றார்.

இதை விட தமிழக காங்கிரஸுக்கு கேவலம் வேண்டுமா?


மறைந்த பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இரும்புப் பெண்மணி என்று உலகத் தலைவர்களால் புகழப்பட்டுவருமான இந்திரா காந்தியின் பிறந்த நாள் கூட சரியாக தெரியாமல் மக்கள் மத்தியில் கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி.

இந்திரா காந்தியின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியினரோ 105வது பிறந்தநாள் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு கேவலப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் இந்திரா காந்தி. அமெரிக்காவுக்கு பெரும் மிரட்டலாக விளங்கியவர். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர். வங்கதேசம் என்ற ஒரு புது நாடு பிறக்க காரணமாக அமைந்தவர். சீனாவைக் கண்டு அஞ்சாமல் செயல்பட்டவர். தனது துணிச்சல் மற்றும் தைரியமான, அதிரடி போக்கால் உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்டவர். அனைவரின் மதிப்பையும் பெற்றவர்.

ஆனால் அப்படிப்பட்ட தலைவரின் பிறந்த நாளைக் கூட சரிவரத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்திற்கு 105வது பிறந்த நாள் என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரை இப்படியா அவமதிப்பது என்று மூத்த காங்கிரஸார் மனம் ஒடிந்து போய் நிற்கின்றனர்.

இந்த லட்சணத்தில் காமராஜ் ஆட்சியை அமைப்போம் என்று வாய் கூசாமல் பேசிக் கொள்கின்றனர் காங்கிரஸார். புதிய தலைவராக ஞானதேசிகன் பதவிக்கு வந்தவுடனேயே நடந்துள்ள இந்த குழப்பம் தமிழக காங்கிரஸாருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது.

பிச்சை எடுத்து தமிழக அரசு கஜானாவுக்கு அனுப்புவோம்: கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு


பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாஜகவினர் பிச்சை ஏந்தும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

கோவை பீலமேட்டில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கடைகள், பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் பிச்சை ஏந்தியபடி தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

பிச்சை ஏந்தும் போராட்டத்தை ஒரு வாரம் தொடர்ந்து நடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை தமிழக அரசின் கஜானாவுக்கு அனுப்ப உள்ளதாக பாஜகவினர் கூறியுள்ளனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் நந்தக்குமார்,

பொதுமக்களிடம் பிச்சை எடுத்து, அந்தப் பணத்தை தமிழக அரசாங்கத்திற்கு அனுப்ப இப்போது நாங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். எனவே ஒரு வார காலத்திற்கு கோவை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் மடிப்பிச்சை ஏந்தி, அந்தப் பணத்தை அரசுக்கு அனுப்ப தயாராகி வருகின்றோம். பேருந்து கட்டண உயர்வால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.

பிரசாந்தின் மம்பட்டியான்!


"பொன்னர் சங்கர்" படத்திற்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் "மம்பட்டியான்" படத்திற்கு மட்டும் 700 பிரிண்ட்டுகள் போட்டுள்ளனர். இது பிரசாந்தின் முந்தைய படங்களை விட அதிகமாகும். பொதுவாக பிரசாந்த் படங்கள் என்றாலே, கண்டிப்பாக ஏதேனும் ஒரு புதிய விஷயம் இருக்கும். அவரின் ஒவ்வொரு படத்திலும் இதை காணலாம். காவேரி, சர்மிளா, மதுபாலா, திவ்யபாரதி, ரம்பா, ரியா சென், ரிங்கி கண்ணா இப்படி ஏகப்பட்ட ஹீரோயின்களை அறிமுகப்படுத்திய பெருமை பிரசாந்துக்கு உண்டு. அதுமட்டுமல்ல நடிகை சிம்ரனுடன் மட்டும் 6படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகராக வலம் வந்த பிரசாந்த் இடையில் பல்வேறு பிரச்சனைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் "பொன்னர் சங்கர்" படம் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி ஆன பிரசாந்த், இப்போது அவரது அப்பா தியாகராஜன் நடிப்பில் 1983ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட்டான "மலையூர் மம்பட்டியான்" படத்தின் ரீ-மேக்கான "மம்பட்டியான்" படத்தில் நடித்து வருகிறார். தியாகராஜனே இயக்கும் இப்படத்தில் பிரசாந்துடன், மீரா ஜாஸ்மின், மும்மைத்கான், பிரகாஷ்ராஜ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். அப்போது இளையராஜா இசையமைத்த அந்தபடத்திற்கு இப்போது சற்று மெருகேற்றி தமன் இ‌சையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகியிருக்கும் இப்படம் டிசம்பர் 13ம் தேதி ரிலீசாகிறது, இம்மாதம் 23ம் தேதி ஆடியோ ரிலீஸ் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் படம்பற்றி தியாகராஜா கூறும்போது, மம்பட்டியான் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். ‌ஆக்ஷ்ன், த்ரிலிங், காமெடி, செண்டிமென்ட், இயற்கை கொஞ்சும் அழகு என மம்பட்டியான் படம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும். மம்பட்டியான் படத்தை லக்ஷ்மி சாந்தி பிலிம்ஸ் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பகுதிகளில் வெளியிட இருக்கிறது. படத்திற்காக மொத்தம் 700 பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளது. இது பிரசாந்தின் முந்தைய படங்களை விட கூடுதலாகும்.

'மடையன்'- சிம்பு


சிம்புவுக்கென்றே டைட்டில்களை ஸ்பெஷலாக ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கிறது. கெட்டவன் என்று ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு ஊர் உலகத்தையை தன் பக்கம் திரும்ப வைத்தவர் சிம்பு. இப்போது அவரிடம் கால்ஷீட் கேட்கும் போதே மடையன் என்ற தலைப்பை சொல்லி அதிர வைத்திருக்கிறார் ஒரு இயக்குனர். இவருக்கும் சிம்புவுக்கும் நட்பு 'இப்ப்ப்ப்ப்ப்ப்படி' (இதை படிக்கும் போது பத்து விரல்களையும் இறுக கோர்த்து வைத்துக் கொண்டால் ஒரு எஃபெக்ட் கிடைக்கும்) என்பதால்தான் இந்த தைரியம் அவருக்கு வந்திருக்கிறது போலும்.

சிம்பு நடித்த சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் கணேஷ். அந்த நட்பின் காரணமாக சிம்பு நடிக்கும் வேறு படங்களில் கூட இவர் சிம்புவுடனேயே ஒட்டிக் கொண்டிருப்பார். எஸ்.டி.ஆரின் ரெகமன்டேஷனால் விண்ணை தாண்டி வருவாயா படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இதே கணேஷை இயக்குனராக்கி முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தயாரித்தார்.

சிம்புவின் நண்பராச்சே, சும்மாயிருக்க முடியுமா? படப்பிடிப்பில் சிம்புவை விடவும் பெரிய அட்டகாசமாம்! இந்தாங்க செட்டில்மென்ட் என்று கணேஷை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தானே படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் எல்ரெட் குமார்.

சரி, பழங்கதை எதற்கு? இந்த கணேஷ் க்ளவுட் நைன் நிறுவனத்திற்கு ஒரு கதை சொன்னாராம். அவர்களுக்கும் பிடித்துவிட்டது. இதற்குதான் மடையன் என்று பெயர் வைத்திருக்கிறாராம் அவர். படத்தில் சிம்புவை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து வருகிறது. கணேஷுக்காக சிம்புவும் கால்ஷீட் கொடுக்க கூடும் என்பதுதான் இப்போதைய நிலவரம்.