எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண் ஆர்வலர் ஒருவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தனது நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டமையானது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல்கலைக்கழக மாணவியான அலியா மக்டா எம்மாடி என்ற 20 வயதான அப் பெண் கருத்துச் சுதந்திரத்தினை வலியுறுத்தியே இத்துணிச்சலான முடிவை மேற்கொண்டுள்ளார். எல்மாடி தனது வலைப்பூவில் அவரது முழு நிர்வாணப்படத்தினை வெளியிட்டிருந்தார்.
வன்முறை, இனவாதம், பாலியல் கொடுமை, வஞ்சகம் நிறைந்த சமூகத்திற்கெதிரான அலறல் (screams against a society of violence, racism, sexism, sexual harassment and hypocrisy) என்பதே அவரது தொனிப்பொருளாக அமைந்திருந்தது.
இவரது வலைப்பூவினை இதுவரை சுமார் 1.8 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இவரது இந் நடவடிக்கையானது பழமைவாத எகிப்தியர்களின் தேர்தல் முடிவுகளில் அது தாக்கம் செலுத்தலாம் என முற்போக்குவாதக் கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன.
இதற்கான காரணம் அடிப்படைவாத இஸ்லாமியக் கட்சிகள் எகிப்தில் அதிகமாகக் காணப்படுகின்றமையாகும்.
இந்நிலையில் முற்போக்கு கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அவை எகிப்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தினை சீர்குலைக்குமென பழமை வாதக்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாரிய போராட்டங்களுக்கு பின்னர் ஹொஸ்னி முபாரக் பதவி விலகியதையடுத்து எகிப்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
சமூகவலையமைப்புகளிலும் இந் நிர்வாணப் புகைப்படம் வெளியாகியுள்ளதுடன் பலத்த சர்ர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எல்மாடிக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக எகிப்திய நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
حاكموا الموديلز العراة الذين عملوا في كلية الفنون الجميلة حتي أوائل السبعينات و اخفوا كتب الفن و كسروا التماثيل العارية الأثرية, ثم اخلعوا ملابسكم و انظروا إلي أنفسكم في المرآة و احرقوا أجسادكم التي تحتقروها لتتخلصوا من عقدكم الجنسية إلي
الأبد قبل أن توجهوا لي إهاناتكم العنصرية أو تنكروا حريتي في التعبير
الأبد قبل أن توجهوا لي إهاناتكم العنصرية أو تنكروا حريتي في التعبير
Put on trial the artists' models who posed nude for art schools until the early 70s, hide the art books and destroy the nude statues of antiquity, then undress and stand before a mirror and burn your bodies that you despise to forever rid yourselves of your sexual hangups before you direct your humiliation and chauvinism and dare
to try to deny me my freedom of expression
to try to deny me my freedom of expression
















