Sunday, 3 July 2011

கார்த்தி - ரஞ்சனி திருமணம்: வெகுசிறப்பாக நடந்தேறியது(வீடியோ இணைப்பு)


கார்த்தி, ரஞ்சனி திருமணம்:




Celebrities at Actor Karthi Ranjani Marriage
Celebrities at Actor Karthi Marriage

Celebrities at Karthi Sivakumar and Ranjani Marriage





















இந்திய ஊடகங்களிலும் சனல் 4 இன் 'இலங்கையின் கொலைக்களம்'

 


 
2009- ல் வடக்குப் பகுதி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்ததாக இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான காணொளி ஆதாரங்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் சனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. உலகெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த ஆவணப்படம் தற்போது இந்திய ஆங்கில ஊடகமான ஹெட்லைன்ஸ் டுடே விலும் இம்மாதம் 7,8,9 தேதிகளில் ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது அத்தொலைக்காட்சி.
டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நெருக்கடிகளையும் மீறி தொலைக்காட்சியில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்னும் நிலையில், இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகும் நிலையில் ஏனைய ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கும் இலங்கையில் தமிழர் படுகொலை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியாக வேண்டிய நெருக்கடி ஒன்று உருவாகும் என்று தெரிகிறது.

இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது தமிழின விரோத செயல் : சீமான் கண்டிப்பு

 
இந்தியாவில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இலங்கை இராணுவத்தின் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் இராணுவ பயிற்சிக்கழகங்களில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும்.
இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. டெல்லியில் நேற்று இலங்கை இராணுவத்தின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்க தலைமையிலான குழுவுடன் இந்திய இராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதல் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங். தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதென இந்திய இராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப்போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
தமிழர்களை இனப்படு கொலை செய்த இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்க உலகநாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில்,
அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய இராணுவம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும். என கூறப்பட்டுள்ளது.

கோடைகால சங்கிராந்தி கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)


பூமியிலிருந்து பார்க்கும் போது வெளிப்படையாக தெரியும் சூரியன் ஆண்டுக்கு இரண்டு முறை தெரியும். அப்படி தெரியும் நாளில் சூரியன் வடக்கு அல்லது தெற்கு நோக்கி நகரும் நாள் தான் சங்கிராந்தி நாளாகும்.

சூரியன் வடக்கு அல்லது தெற்கு நோக்கி நகரும் போது நீண்ட நேரம் பகலும், குறுகிய நேரம் இரவு உள்ள நாளாக இருக்கும் அந்த நாள் தான் கோடைகால சங்கிராந்தி நாளாக கொண்டாடப்படுகிறது. சூரியன் வடக்கு நோக்கி நகரும்போது அங்குள்ள மக்கள் ஜீன் மாதத்திலும், தெற்கு நோக்கி நகரும் போது அங்குள்ள மக்கள் டிசம்பர் மாதத்திலும் இந்த கோடைகால சங்கிராந்தி நாளை கொண்டாடுகிறார்கள்

 

நுரையாக பொங்கிய கடல் (வீடியோ இணைப்பு)


சிட்னியில் உள்ள கடற்கரை ஒன்று திடீரென்று கடல் முழுக்க நுரையாக பொங்கி வழிந்தது. அந்த நுரை கடல் முழுக்க மற்றும் கடற்கரையை சுற்றியுள்ள பகுதி முழுக்க பரவியது.

கடல் இப்படி நுரையாக பொங்குவதற்கு கடலில் உள்ள உப்புக்கள், இரசாயனங்கள், இறந்த தாவரங்கள், மீன்கள் போன்ற கடலில் கலந்துள்ள அசுத்தங்கள் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.







ஜெல்லி மீன்கள் புகுந்ததால் பிரிட்டனில் 2 அணு மின் உலைகள் அவசரமாக மூடப்பட்டன.

அணு உலையை குளிர்விக்கும் பகுதியில் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் பிரிட்டன் அணு மின்நிலையத்தில் இரண்டு அணு உலைகள் அவசரமாக மூடப்பட்டன.
இந்த இரண்டு அணு மின் உலைகளும் டோர்னஸ் மின் நிலையத்தில் அமைந்திருப்பவை ஆகும். அணு மின் நிலையத்திற்கு வரும் கடல் தண்ணீர் சுத்திகரிப்பு பகுதியில் அதிக அளவு ஜெல்லி மீன்கள் மற்றும் இன்னும் சில கடல்பொருட்கள் இருந்ததால் அணு மின் உலைகள் உடனடியாக மூடப்பட்டன.
மீன்கள் அணு உலைப் பகுதியில் வந்ததால் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அணு உலை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். கிழக்கு லோதியன் டன்பர் பகுதியில் இடிஎப் எனர்ஜி இந்த அணு மின் நிலையத்தை இயக்கி வருகிறது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணு மின் உலை தற்காலிமாக மூடப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜெல்லி மீன்கள் புகுந்ததால் கதிர் வீச்சு அபாயம் இல்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
ஜெல்லி மீன்கள் தண்ணீர் செல்லும் பாதையை அடைத்ததால் பிரச்சினை வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது. கடந்த மார்ச் மதம் 11ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு எற்பட்டது.
அந்த இயற்கை பேரிடருக்கு பின்னர் அணு கதிர் வீச்சு விடயத்தில் உலக நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம்... இனி சன் டிவிக்கு ஆப்பு...



 


அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவதின் முதல்கட்டமாக கேபிள் டிவி நிறுவனத்தை தன் கட்டுப்பாடில் இயங்கும் உள்துறைக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அரசு கேபிள் டிவி பக்காவாக செயல்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

அரசு கேபிள் டிவியை இன்னும் 3 மாத காலத்தி்ற்குள் செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முனைப்பாக உள்ளார். இதன் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இருந்த கேபிள் டிவி நிறுவனத்தை தன் வசமுள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.

கேபிள் டிவி நாட்டுடமையாக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கேபிள் டிவியை நாட்டுடமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த அதிமுக ஆட்சியிலேயே கேபிள் டிவியை நாட்டுடமையாக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது.

எனவே, இம்முறை கேபிள் டிவியை நாட்டுடமையாக்குவதில் முனைப்பாக உள்ளார்.

கடந்த 22-ம் தேதி அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கேபிள் ஆபரேட்டர்களை சந்தித்தார். அப்போது இன்னும் 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதியளித்தார். அதற்கு கேபிள் ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர்.

கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளித்த வாக்குறுதிபடி அரசு கேபிள் டிவியை 3 மாதத்திற்குள் துவங்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் முதல்கட்டமாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.

இவ்வாறு செய்ததன்மூலம் அரசு கேபி்ள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனது நேரடிப் பார்வையில் இருக்கும். மேலும், அரசு கேபிள் டிவியைத் துவங்குகையில் ஏற்படும் இடையூறுகளை உள்துறையின் கீழ் உள்ள காவல் துறை மூலம் நீக்கி விடலாம் என்று அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்கு தலைமைச் செயலாளர் தலைமை வகித்தார்.

கடந்த திமுக ஆட்சியில் தான் அரசு கேபிள் டிவி கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். மேலும் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இந்த அறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டது.

இவ்வளவு செலவு செய்து அமைத்த கட்டுப்பாட்டு அறைகள் தற்போது இயங்காமல் உள்ளன. இவற்றை இயக்க குறைந்த பட்சம் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ. 100 கோடி வீதம் ரூ. 400 கோடி செலவாகும். இது குறித்து அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

           முதல்வர் அளித்த வாக்குறுதிபடி 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தின் மூலம் இனி கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களையும் மக்கள் மிகக்குறைந்த விலையில் கண்டு களிக்கலாம் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

இனி எந்த ஒரு தனிப்பட்ட கேபிள் டிவிக்கள் அதிக லாபம் சம்பாதிக்க முடியாமல் முட்டுக்கட்டை இடப்படும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை...

சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்! செந்தூர்பாண்டியன் புதிய அமைச்சர் ! அம்மா அதிரடி ஆரம்பம்


 



சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்! செந்தூர்பாண்டியன் புதிய அமைச்சர் ! அம்மா அதிரடி ஆரம்பம்

சென்னை : தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய அமைச்சராக கடையநல்லூர் எம்.எல்.. செந்தூர்ப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அமைச்சரவையில் 2வது முறையாக இன்று முதல்வர் ஜெயலலிதா மாற்றம் செய்தார்.சட்ட அமைச்சராக இருந்து வந்த இசக்கி சுப்பையா திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரி மகள் சமீபத்தில் தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்தினரால் மிரட்டல் இருப்பதாகவும் இசக்கி சுப்பையாவின் சகோதரி மகள் புகார் கூறியிருந்தார். இருப்பினும் பின்னர் இரு குடும்பத்தினரும் சமாதானமடைந்து திருமண வரவேற்பை நடத்தினர். இந்த நிலையில்தான் இசக்கி சுப்பையா திடீரென பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.செந்தூர்ப்பாண்டியன் புதிய அமைச்சர்
அமைச்சரவையில் புதிதாக கடையநல்லூர் எம்.எல். செந்தூர்ப்பாண்டியன் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு கதர்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை அமைந்தபோதே அமைச்சராவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டவர் செந்தூர்ப்பாண்டியன். ஆனால் அப்போது கிடைக்காத பதவி இப்போது அவருக்குக் கிடைத்துள்ளது.அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
இதுதவிர சில அமைச்சர்களின் இலாகாக்களையும் மாற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா
இசக்கி சுப்பையா இதுவரை வைத்திருந்த சட்டத்துறை, செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் செந்தமிழனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இலாகா புத்தி சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.புத்தி சந்திரன் வைத்திருந்த சுற்றுலாத்துறை கோகுல இந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கோகுல இந்திரா வைத்திருந்த வணிகவரித்துறை அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதுவரை கதர்த்துறை அமைச்சராக இருந்து வந்த பி.வி.ரமணா, இனி கைத்தறித்துறை அமைச்சராக செயல்படுவார்.நாளை பதவியேற்பு
புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தூர்ப்பாண்டியன் நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.செந்தூர்ப்பாண்டியனின் 30 வருட கால அரசியல் பணி:
செங்கோட்டையை சேர்ந்த கடையநல்லூர் எம்எல்ஏ செந்தூர் பாண்டியன் கடந்த 35 ஆண்டுகளாக அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி நகர துணை செயலாளர், நகர செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாவட்ட செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளில் திறம்பட செயல்பட்டவர்.கடந்த 7 ஆண்டுகளாக நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் இவர் கடந்த சடடமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் சட்டமன்ற பொது குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் செந்தூர்பாண்டியன் நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக தமிழக முதல்வரும், கழக பொது செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பு நெல்லை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்பு வகித்து கட்சி தலைமையிலும், தொண்டர்களிடமும் நம்பிக்கை பெற்று திறம்பட பணியாற்றி வரும் செந்தூர்பாண்டியன் கடந்த பார்லிமெண்ட் தேர்தலிலும் தென்காசி தொகுதியில் எம்பி லிங்கம் வெற்றி பெற காரணமாக இருந்து ஜெயலலிதாவின் பாராட்டுதலை பெற்றவர். இவருக்கு சண்முகதுரைச்சி என்ற மனைவியும், ஐயப்பராஜ் (சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராக உள்ளார்), கிருஷ்ணமுரளி என்ற இரண்டு மகன்களும், பிரியதர்ஷினி (டாக்டர்) என்ற மகளும் உள்ளனர்.செந்தூர்பாண்டியனுக்கு கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர்கள் கிட்டு ராஜா, தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துபாண்டி, செல்லப்பன், சங்கரபாண்டியன், தொகுதி துணை செயலாளர் நடராஜன், முருகன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் மூர்த்தி, மாநில விவசாய அணி இணை செயலாளர் ஆணை குட்டி பாண்டியன், நகர ஜெ பேரவை செயலாளர்கள் வக்கீல் வெங்கடேசன், மைதீன், நகர துணை செயலாளர் ராஜா, லிங்கம் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

டிஸ்கி! அம்மா ஆட்சி அமைச்சு இரண்டு மாசம் கூட முடியல இதுக்குள்ள இரண்டு தடவை அதிரடியா அமைச்சரவை மாற்றம் இலாகா மாற்றம் இது ஒண்ணும் அம்மாவுக்கும் புதுசு இல்ல அவங்க கட்சிக்காரங்களுக்கும் புதுசு இல்ல ஆனா ஒரு அமைச்சர் இலாகாவை புரிஞ்சுக்கறதுக்குள்ள அடுத்த இலாகாவுக்கு மாத்தினா எப்படி மேடம்? ம்ம்! தமிழ்நாடு விளங்கினாப்பலதான்!