Friday, 3 February 2012

அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் உலகின் மிகச் சிறிய பெண்!

அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார் உலகின் மிகச் சிறிய பெண்ணான ஜோதி.
இந்த சின்னம் சிறு பெண் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்காக மகராஷ்டிர நவநிர்மான சேனா கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் உலகை ஈர்த்த நட்சத்திரமாக களமிறங்கியுள்ளார்.
தற்போது பதினெட்டு வயதாகும் குறித்த பெண்ணின் உயரம் 2 அடி 6 இஞ்சிகள் மட்டுமே ஆகும்.
இவர் பிரசாரத்துக்கு போகும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகின்றது.
அலை மோதும் கூட்டத்துக்கு மத்தியில் நவநிர்மான சேனா கட்சியின் ஆதரவாளர்களால் மேலே தூக்கப்பட்டு காண்பிக்கப்படுகிறார் ஜோதி.
மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்ப்பது நவநிர்மான சேனா கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜோதி தனது 18 ஆவது அகவையைப் பூர்த்தி செய்த போது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் உலகின் மிகச் சிறிய பெண்ணாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மும்பையில் உலகின் மிகச் சிறிய பெண்ணான ஜோதியின் பிரச்சாரம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தளம் பார்வையிட்டார்கள் என ஆப்கான் யுவதிகள் மூவர் கொலை; (படங்கள் இணைப்பு)

இணையத்தளத்தைப் பார்வையிட்டார்கள் என்ற காரணத்துக்காக தனது மூன்று மகள்மாரையும் கொலை செய்த ஆப்கானிஸ்தான் தந்தையொருவருக்கும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து கனடா, ஒஸ்ட்ரியோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஆடைகளை பயன்படுத்தாமை, ஆண் நண்பர்களுடன் பழகியமை, சமூகத்துடன் ஒன்றிப் பழகியமை மற்றும் இணையத்தள நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டமை உள்ளிட்ட விடயங்களைக் காரணங்காட்டியே மேற்படி மூன்று யுவதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மொஹமட் சப்பியா (வயது 58), அவரது மனைவி டுபா (வயது 42) மற்றும் அவர்களின் மகன் ஹமீட் (வயது 21) ஆகிய மூவருக்குமே கனடா நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்க தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது குறித்த மூன்று யுவதிகளையும் காரோடு நீரில் மூழ்கச் செய்து இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளார்கள் என்று சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியாக்கப்பட்டதை அடுத்தே அவர்களுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் இந்த இரக்கமற்ற செயற்பாடு சமூகத்தின் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


பெண்களின் நிர்வாண உடலில் ஓவியம் தீட்டும் கில்லாடி(வீடியோ இணைப்பு)

பேசும் கலைகளில் ஒன்றாக இந்த ஓவியம் இருந்து வருகின்றது. என்ன தான் உலகம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைத்தாலும் ஒவியத்திற்கான மவுசு இன்னும் குறையவில்லை.
ஒவ்வொருவரும் ஒவ்விதமான தமது ஒவியத் திறமையை காட்டுவார்கள் இங்கும் ஒருத்தர் காட்டும் கலையை பாருங்கள்.
பெண்களில் அரைநிர்வாண உடலில் அவரது துரிகையின் விளையாட்டை பாருங்கள்.
அமெரிக்க ஓவியர் ஒருவர் வீதியின் நடுவில் பெண்கள் மற்றும் ஆண்களில் வெற்று உடல்களில் ஓவியம் தீட்டி அங்குள்ள ரசிகர்களுக்கு விருத்து அளித்துள்ளார்.
அதை நீங்களும் காண காணொளியை பாருங்கள்
வீடியோ 

மும்பையில் இன்று நடந்தது நடிகை ஜெனிலியா திருமணம்

 


தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஜெனிலியாவும், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் 9 வருடங்களாக காதலித்து வந்தனர். ரிதேஷ்தேஷ்முக் மகராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார்.

இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் காதலில் உறுதியாக இருந்ததால் சமீபத்தில் இருவர் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜெனிலியா ரிதேஷ்முக் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. வட இந்திய பாணியில் மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகளும் இரு தினங்களாக நடந்தன.

இன்று காலை மும்பையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக ஆடை அலங்கார நிபுணர்களை வைத்து பிரத்யேக ஆடைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

நர்ஸ் பன்வாரிதேவி எரித்துக் கொலை: சி.பி.ஐ. சேகரித்த மிருக எலும்புகள்: ரசாயன பரிசோதனையில் கண்டுபிடிப்பு


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் நர்ஸ் பன்வாரிதேவி. இவர் கடந்த ஆண்டு தொடக் கத்தில் பணிக்குச் சென்றவர் மாயமானார். அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருந்ததால், விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. மந்திரி ஒருவர் மற்றும் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.   குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் நர்ஸ் பன்வாரிதேவியை மந்திரியின் உத்தரவின் பேரில் கொன்று எரித்து விட்டதாக கூறினர். நர்ஸ் கொன்று எரிக்கப்பட்ட இடத்தையும் அவர்கள் அடையாளம் காட்டினர்.

ஜோத்பூர் அருகே ஜலோடா கிராமத்தில் வாய்க்கால் அருகே பன்வாரி தேவியின் உடலை எரித்திருந்தனர். அந்த இடத்துக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சிதையில் எஞ்சி இருந்த எலும்புகளை சேகரித்துக் கொண்டு திரும்பினர். 

சேகரிக்கப்பட்ட எலும்புகளை தனித்தனி பெட்டிகளில் அடைத்து, ரசாயன பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) அனுப்பி வைக்கப்பட்டது.

பன்வாரிதேவி மாயமான விவகாரத்தில் சஸ்பென்ஸ் நீடித்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் எரித்துக் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இது சி.பி.ஐ.க்கு கிடைத்த வெற்றி என்று மகிழ்ந்தனர்.   அதில் இப்போது சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சி.பி.ஐ. அதிகாரிகளால் சேகரித்து அனுப்பப்பட்ட எலும்புகளை ரசாயன பரிசோதனை செய்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வல்லுனர்கள், அதில் மிருக எலும்புகள் கலந்திருப்பதை கண்டுபிடித்தனர். ரசாயன பரிசதோனைக்கு அனுப்பப்பட்ட எலும்புகளில் இரண்டு பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகளில் மிருக எலும்புகள் இருந்துள்ளன. 

இரண்டு பெட்டிகளில் மட்டுமே மனித எலும்புகள் என்று கண்டறிந்தனர். அந்த எலும்புகள் நர்ஸ் பன்வாரி தேவியின் எலும்புகள்தானா? என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆய்வுக் கூட வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். 

பன்வாரி எரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட எலும்புகளுடன் மிருக எலும்புகளும் கலந்திருப்பதால், அங்கு ஏற்கனவே மிருகம் எரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதே இடத்தில் மனித உடலை வைத்து எரித்திருக்க வேண்டும் அல்லது மனித உடல் எரிக்கப்பட்டதாக யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, மனித உடலுடன் சேர்த்து, ஏதோ ஒரு மிருகத்தை கொன்று அதனுடன் சேர்த்து எரித்திருக்க வேண்டும் என்று, சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

'கோச்சடையான்' : ரஜினியுடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்!

 


கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) லண்டனில் தொடங்குகிறது.

'எந்திரன்' படத்தை அடுத்து ரஜினிகாந்த், 'ராணா' என்ற படத்தில் நடிக்க திட்டமிட்டார். அந்த படத்தின் தொடக்க விழா அன்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றபின், குணம் அடைந்தார்.

'ராணா' படத்தில் அதிக 'ரிஸ்க்'கான சண்டை காட்சிகளும், குதிரையேற்ற காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால், அந்த காட்சிகளில் ரஜினிகாந்த் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

'கோச்சடையான்'

அதைத்தொடர்ந்து `ராணா' படம் தள்ளிப்போடப்பட்டது. அந்த படத்துக்கு பதில், 'கோச்சடையான்' படத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்), லண்டனில் தொடங்குகிறது. முன்னதாக படத்தின் பூஜை முறைப்படி கடந்த வாரம் பெரிய அறிவிப்புகளின்றி நடத்தப்பட்டது.

ஜாக்கி ஷெராஃப்

'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, நாசர், சினேகா, ஷோபனா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வடிவேலும் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

இப்போது, பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்பும் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்கி ஷராப், 'ஆரண்ய காண்டம்' என்ற படத்தின் மூலம் ஏற்கனவே தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர். ரஜினியுடன் இந்திப் படங்களில் நடித்தவர்.

வடிவேலுவின் தாயார் உல் நலம் பாதிப்பு-மதுரைக்கு விரைந்தார்


நடிகர் வடிவேலுவின் தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் வடிவேலு மதுரைக்கு விரைந்துள்ளார்.

நடிகர் வடிவேலுவின் சொந்த ஊர் மதுரை அருகே உள்ள ஐராவதநல்லூர் ஆகும். இங்குதான் அவரது சொந்த வீடு உள்ளது. தந்தை நடராஜ பிள்ளை தனது குடும்பத்துடன் இங்கு வசித்து வந்தார். இந்த வீட்டில் தற்போது வடிவேலுவின் தாயார் தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். வடிவேலு, சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று திடீரென வடிவேலுவின் தாயாருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் கிடைத்ததும் வடிவேலு நேற்றே விமானம் மூலம் மதுரைக்கு விரைந்தார். அங்கு தனது தாயாருக்கு அருகிலேயே இருந்து வருகிறார்.

செக்போஸ்ட்டில் வைத்து சிக்கிய சசிகலா தம்பி திவாகரன்- சிறையில் அடைப்பு


சசிகலாவன் தம்பியான திவாகரனை நீடாமங்கலம் போலீஸார், திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து கைது செய்துள்ளனர். அவர் உடனடியாக நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர், திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் அளித்தார். இது தொடர்பாக ரிஷியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த சில நாட்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் திவாகரன் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் அவரது முன்ஜாமீன் மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் நீடாமங்கலம் போலீஸார் திவாகரனை கைது செய்துள்ளனர். அவரை நீடாமாங்களலம் கோர்ட் மாஜிஸ்திரேட் செல்லப்பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி சிறையில் அடைத்தனர்.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சி அருகே அரியமங்கலம் சோதனைச்சாவடியில், திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் திவாகரன் இருந்தாராம். உடனே அவரைக் கைது செய்தனராம்.

போலீஸார் தன்னை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தபோது போலீஸார் குவிக்கப்பட்டிருந்த செக்போஸ்ட் வழியாக திவாகரன் வந்ததுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.

சசி குடும்பத்தில் 2வது கைது

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 2வது நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ராவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம். அடுத்து யார் கைதாகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

மு.க.ஸ்டாலினின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை காலி செய்யும் அரசாணைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு


கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை அடுத்து, கொளத்தூர் ஜவஹர்நகரில் அவருக்கு எம்.எல்.ஏ. அலுவலகம் ஒதுக்கி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் மேயராக சைதை துரைசாமி வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ. அலுவலகம் ஒதுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இதற்கிடையில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் காலி செய்யும்படி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையையும் எதிர்த்து ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், `234 எம்.எல்.ஏ.க்களுக்கும் தமிழக அரசு அலுவலகம் வழங்கியுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக எனக்கு மட்டும் அலுவலகம் வழங்க மறுத்து அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நோக்கமுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என்று அதில் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் என்.ஜோதி ஆஜரானார். மு.க.ஸ்டாலினுக்கு அலுவலகம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எனவே அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கில் 6-ந் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன் மீது ஷூ வீச்சு: 50 பேர் கைது

 


இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில், ஐ.நா. பொதுச்செயலர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷூ, மற்றும் கற்களை வீசினர்.

ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லைப்பகுதியான காஸாவில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி திட்டத்தை துவக்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், இதில் கலந்து கொள்ள காஸா பகுதிக்கு வருகை தந்தார்.

அப்போது, 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் பான்கீமூனின் கார் வரும் கன்வாய் வழியாக அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் சிலர் அவர் சென்ற கார் மீது ஷூ மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் பான்கீமூ‌னுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்‌லை. இந்த சம்பவம் தொடர்பாக 50 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள், இஸ்ரேல் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆவர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளின் பிரச்சினையில் ஐ.நா.வின் செயல்பாட்டை கண்டித்து இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன் நாடுகளின் பிரச்சினை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் எழுத தெரியாது, ஆங்கிலம் அவ்வளவாக வராது, தெலுங்கு மறந்துவிட்டது- ரஜினிகாந்த் பேச்சு


கனடா நாட்டில் இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இயல் விருதை பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தலைமை தாங்கினார். விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, பேராசிரியர் ஞானசம்பந்தம், எழுத்தாளர் ஏ.பெருமாள், ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான இறையன்பு, விஜயசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார். கனடாவில் தனக்கு வழங்கப்பட்ட இயல் விருதை, ரஜினிகாந்த் வழங்க, அதை எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். 

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

ஒரு எழுத்தாளனுக்கு, என் நண்பருக்கு, ஒரு மொழியை முற்றிலுமாக தெரிந்த ஒரு படைப்பாளிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நான் வந்து கலந்து கொண்டு பாராட்டுவதை நினைக்கும்போது, சந்தோஷம், ஆச்சரியம் அதே நேரம் பயமும் கூட...

எல்லாம் அறிஞர்கள் வந்திருக்கும் இந்த சபையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். நெருக்கடியான நிலை வரும்போது நீ கற்றுக் கொண்ட வித்தை எல்லாம் மறந்து போகும் என்பது பரசுராமன், கர்ணனுக்கு கொடுத்த சாபம். அதுபோல இப்போது வாழ்த்தி பேச வேண்டும் என்ற நேரத்தில் எந்த மொழியிலும் பேச முடியவில்லை.

உடல் நிலை சரியில்லாமல் இருந்து, பின்னர் குணமடைந்த பிறகு எஸ்.ராமகிருஷ்ணனை சந்திக்க நினைத்து அவரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் ரஷ்யா, ராமேஸ்வரம் என்று சுற்றிக் கொண்டே இருந்தார். 7 நாட்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு, இப்போது சென்னையில்தான் இருக்கிறேன் என்றார்.

நாங்கள் இருவரும் காரில் வெகு தூரம் பயணம் செய்தபடி பேசிச் சென்றோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2002-ம் ஆண்டு நடந்த பாபா படம் தொடர்பாக அவரை சந்தித்து பேசினேன். பாபா படத்துக்கு நான்தான் கதாசிரியர். அவரிடம் நான் பேசியபோது நான் காணாத, கேக்காத, அறியாத பல விஷயங்களை கூறினார். அந்த படம் முதல் சந்திரமுகி படம் வரை மறக்க முடியாத காலம்.

துன்பம் வரும்போதுதான் மனிதனுக்கு யோசிக்கும் சக்தியே வருகிறது.   அந்த படத்தில் இருந்த சில காட்சிகளை புத்தகமாக வெளியிட முடிவு செய்து ராமகிருஷ்ணனிடம் பேசினேன். எனக்கு தமிழ் எழுத தெரியாது, ஆங்கிலம் அவ்வளவாக வராது, தெலுங்கு மறந்துவிட்டது. எனவே, இவரிடம் எழுதி கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார்.

10 முதல் 12 நாட்களுக்கு பிறகு என்னிடம் புத்தகத்தை கொண்டு வந்தார். அதை படித்து பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இருந்தாலும், அந்த புத்தகத்தில் உண்மைகள் இருந்ததால், அது பலரை நோகடிக்கும் என்று வெளியிடவில்லை. இப்படி குடும்பத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் படிப்பு, எழுத்து என்று சென்று கொண்டே இருக்கிறார். ஒரு வயது குழந்தைபோல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்கிறார்.
ஏராளமான புத்தங்களை படித்திருக்கிறார். அனுபவங்களுக்காக பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில் நான் படித்த புத்தகத்தில் இருந்த கதை. ஒரு தனி விமானத்தில் விஞ்ஞானிகள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒருவர் மட்டும் பைபிளை படித்துக் கொண்டு இருந்தார். அவரைப் பார்த்து மற்றொரு விஞ்ஞானி, இப்போது உள்ள அறிவியல் உலகத்தில் கடவுள், பைபிள் என்று படித்துக் கொண்டு இருக்கிறீரே? என்று கேட்டு விட்டு, தனது முகவரியை கொடுத்து, இனியாவது கடவுளை தூக்கிப் போட்டு விட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

விமானம் தரை இறங்கியவுடன் மீண்டும் அவரை சந்தித்த விஞ்ஞானி உங்கள் முகவரியை கொடுங்கள் நான் முடிந்தால் வந்து பார்க்கிறேன் என்றார். அவர் தனது விசிட்டிங் கார்டை கொடுத்தார் அதில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று இருந்தது. உடனே அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவரை தனியாக வீட்டில் சந்திக்க நாளையும் பெற்றுக் கொண்டு சென்றார்.

குறிப்பிட்ட நாளில் அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வீட்டுக்கு சென்றார். அங்கு ஏராளமான கண்டுபிடிப்புகள் இருந்தன. அவற்றை பார்த்து நீங்கள்தானே இதை செய்தது என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை நான் ஒரு நாள் வெளியில் சென்றுவிட்டு, மீண்டும் வந்து வீட்டு கததை திறந்தபோது இதெல்லாம் இருந்தது என்றார்.

படைப்பு இருந்தால் கண்டிப்பாக படைப்பாளியும் இருப்பார் என்று விஞ்ஞானி கூறினார். பின்னர் தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்தை ஒப்புக்கொண்டார். இது கதையாக நினைக்க வேண்டாம் விஞ்ஞானி கூறியதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

படைப்பு என்று ஒன்று இருந்தால் அதை படைத்த படைப்பாளியும் கண்டிப்பாக இருப்பார். எனவே கடவுள் இருப்பது உண்மை. கடவுள் இருக்கிறார் என்பதை கூற இந்த கதை ஓட்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.   இதுபோல் தான் சொல்ல வரும் கருத்தை சரியான கதை ஓடுகளத்தில் கூறுபவர் ராமகிருஷ்ணன்.

கவிஞர் கண்ணதாசன் நாத்திகராக இருந்தபோது, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். அப்போது எரிக்க போகும் முன்பு இதை படித்து விட்டு எரிக்கலாம் என்று முடிவு செய்து கம்பராமாயணத்தை படித்தார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்துவிட்டு அதன் முன்பு விழுந்து வணங்கினார்.

நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறினார். எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள்.ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

விழாவில், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

ரஜினி மற்றும் தேமுதிகவை மிஞ்சிய கமல்

 


தானே புயல் நிவாரண நிதிக்கு ரூ 1 கோடியை வழங்கினார் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம். நடிகர் கமல்ஹாஸன் ரூ 15 லட்சத்தை முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதாவிடம்தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் பலர் நிதியுதவி வழங்கினார்கள்.

அவர்கள் விவரம் வருமாறு:

பொள்ளாச்சி மகாலிங்கம் ரூ 1 கோடி

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் - 15 லட்சம் ரூபாய்.

பொள்ளாச்சி என். மகாலிங்கம் சக்தி குழும நிறுவனத்தின் சார்பாக 1 கோடி ரூபாய்.

சென்னைஅமால் கமேஷன் பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி 1 கோடி ரூபாய்.

கமல்ஹாஸன் ரூ 15 லட்சம்

தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன் ரூ.15 லட்சம்.

சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார்சட்டப் பேரவை துணைத் தலைவர் டி.தனபால்அரசு கொறடா பி. மோகன் ஆகியோர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் - 57 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏ. வைத்தியலிங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 26 லட்சத்து 71 ஆயிரத்து 638 ரூபாய்.

வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சமால் தமிழ்நாடு வனத்துறைதமிழ்நாடு வனத்தோட்டக் கழகம்தமிழ்நாடு வன வளர்ப்புக் கழகம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 50 லட்சத்து 63 ஆயிரத்து 482 ரூபாய்.

உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரகம்தமிழ்நாடு கிடங்கு கழகம்மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையரகம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 1 கோடியே 6 லட்சம் ரூபாய்.

இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.எம். பாஷின் 1 கோடி ரூபாய்.

சென்னை சில்க்ஸ் இணை மேலாண்மை இயக்குநர் கே. மாணிக்கம் 50 லட்சம் ரூபாய்.

தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளத்தின் தலைவர் கே.தங்கராஜ் 50 லட்சம் ரூபாய்.

ஜெமினி இன்டஸ்டீரிஸ் மற்றும் இமேஜிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ. ரவிசங்கர் பிரசாத் 50 லட்சம் ரூபாய்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கோபாலகிருஷ்ணன் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் சார்பாக 30 லட்சம் ரூபாய்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே. அய்யப்பன் 25 லட்சம் ரூபாய்.

கும்பகோணம்சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும்முதன்மை செயல் அலுவலருமான டாக்டர் என். காமகோடி 25 லட்சம் ரூபாய்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

வேல் டெக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே.ரங்கராஜன் மகாலஷ்மி 20 லட்சம் ரூபாய்.

சென்னை பிரஸ் கிளப் சார்பாக 10 ஆயிரம் ரூபாய்

முதல்வரிடம்தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வுக்காக 8 கோடியே 50 லட்சத்து 97 ஆயிரத்து 120 ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 64 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரத்து 747 ரூபாயாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பத்து லட்சம் ரூபாய் தான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை போன்று தமிழகத்தின் எதிர்கட்சியான தேமுதிக சார்பில்  15 லட்சம் ரூபாய் தான் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதே !

விஜயகாந்த் விசயத்தில் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கும் பாமக

 


ஒரு எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயல்பட்டதே இல்லை. அவர் குறித்து முதல்வர் ஜெயலலிதா சொன்ன அத்தனை வார்த்தைகளும் மிகச் சரியானவைதான் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கோவை வந்த அவர் அங்கு செய்தயாளர்களிடம் பேசுகையில்,

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் கடந்த 7 மாதமாக சிறப்பான முறையில் செயல்படவில்லை. சட்டசபைக்கு வெளியிலும் எந்த ஒரு மக்கள் நல பிரச்சினையிலும் அவர் ஈடுபடவில்லை.

தேமுதிக கட்சிக்கு என்று ஒரு கொள்கையோ, கோட்பாடோ இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மிகவும் முக்கியமான பதவி. சட்டசபையில் விஜயகாந்த் குறித்து ஜெயலலிதா பேசியது சரிதான்.

தேமுதிகவும் திராவிட கட்சிதான். அந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்.

தமிழக அரசு ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 கோடி கடனில் மூழ்கி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கடனில் இருந்தது. இதற்கு இலவச திட்டங்கள்தான் காரணம். நான் மத்திய சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தேன். இதேபோல் தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தையும் செயல்படுத்தினேன். இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பலன் கிடைத்தது.

மருத்துவ காப்பீடு திட்டம் சரியாக செயல்படவில்லை. அரசு மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சிகிச்சையை மேம்படுத்த வேண்டும்.

அரசு பணிகளில் தனியார் கல்லூரியில் படித்த நர்ஸ்களில் 50 சதவீதமும், அரசு கல்லூரியில் படித்த மாணவிகளில் 50 சதவீதமும் பணியில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் பாதிப்பை, அரசு சரிசெய்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இன்னும் பல வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. புதுச்சேரியில் பயிர் இழப்பீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு ரூ.7 ஆயிரம்தான் வழங்குகிறது. இதிலும் ஏற்றத்தாழ்வு உள்ளது என்றார் அன்புமணி.

அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன்- விஜய்காந்த்

 


மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார்.

சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியபடியே நீண்ட நேரம் அவர் பேசினார்.

விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்...

நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம். அவர்கள்தான் வந்தார்கள், அவர்கள்தான் கூப்பிட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் அவர்கள் ஜெயித்தார்கள். நாங்கள் மட்டுமில்லை, மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் ஜெயித்தார்கள்.

எங்களைப் பார்த்து திராணி இருந்தால் என்று கேட்கிறார்.இவர் கடந்த ஆட்சியின்போது 13 இடைத்தேர்தலில் ஜெயித்தாரா. 5 தொகுதிகளில் நடந்த தேர்தலில் போட்டியிடப் பயந்து ஓடியவர் இவர்.

மதுரைக்கே மல்லிகைப் பூவா என்பார்கள், திருநெல்வேலிக்கே அல்வாவா என்பார்கள். அதுபோல தேமுதிகவுக்கே சவாலா. எங்களைப் பார்த்து சவால் விடாதீர்கள். அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.

தனியாக போட்டியிட தயார். நாளைக்கே நாங்க ராஜினாமா செய்கிறோம், நீங்களும் வாங்க, கவர்னர் ஆட்சியில் தேர்தலை சந்திப்போம். ரெடியா. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும்.

சட்டசபையில் சபாநாயகர் சொன்னதும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆனால் எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததால்தான் நான் எழுந்து நின்றேன். நான் எழுந்து நின்றதை மட்டும் காட்டினார்களே, எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததை ஏன் காட்டவில்லை. அதையும் காட்டியிருக்க வேண்டுமல்லவா, அதுதானே நியாயம்.

நியாயத்தைப் பத்தி இவங்க பேசக் கூடாது. 13 நாளில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தியவர் இவர். இவர் நியாயம் பத்திப் பேசலாமா.

தேமுதிக சரியில்லை என்று இப்போது சொல்கிறாரே, அதை ஏன் கூட்டணி முடிவானபோது சொல்லவில்லை, தேமுதிக தொகுதிகளை அறிவித்தபோது ஏன் செய்யவில்லை.

நாங்கள் இல்லாவிட்டால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். கூட்டணி இல்லாமல் ஒருபோதாவது அதிமுக போட்டியிட்டுள்ளதா. எம்.ஜிஆர். இருந்தபோதும் கூட கூட்டணி இல்லாமல் அதிமுக போட்டியிட்டதில்லை.

ஊர் கூடித்தானே தேர் இழுத்தோம். எல்லாக் கூட்டணியும் கூடித்தானே வெற்றி பெற வைத்தோம். சட்டசபையில் நாங்கள் மக்கள் பிரச்சனைகளைத்தானே பேசப் போனோம். கூட்டணி குறித்து பேசப் போகவில்லை.

என்னைப் பார்த்தால் அறுவறுப்பாக உள்ளது என்கிறார். இவரைப் பார்த்தால் கூடத்தான் அறுவறுப்பாக உள்ளது, அசிங்கமாக இருக்கிறது. நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லையா. அமைதியாக இருக்கவில்லையா.

பேசுவதை சர்வாதிகாரமாக தடுக்கிறார்கள். பேச வாய்ப்புக் கொடுத்தால்தானே தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

தானே புயல் நிலவரம் பற்றிப் பேச விடவில்லை, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேச விடவில்லை.

இன்றைய நிலவரம் என்று போர்டு போடுவார்களே அது போல இன்றைய மந்திரிகள் என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது.

தூர்தர்ஷன் ஒரு சார்பாகவே நடக்கிறது. ஜெயா டிவியில் எடிட் செய்து தருவதை போடாதே, எல்லாவற்றையும் போடு.

நீங்க மட்டும்தான் மக்கள் பத்திப் பேசுவீங்களா, மத்தக் கட்சிக்காரன் பேச மாட்டானா. ஆணவத்தில் இருக்கிறார் ஜெயலலிதா, மமதையில் இருக்கிறார்.

எங்களுக்கு இறங்குமுகம் என்று நீங்கள் சொல்லக் கூடாது. மக்கள் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மட்டும்தான் தொடர்ந்து ஆட்சி புரிந்தவர். நீங்களும், மத்தக் கட்சியும் மாறி மாறித்தான் ஆள முடிந்தது. இப்போதுதானே விஜயகாந்த் வந்துள்ளான், பொறுத்திருந்து பாருங்கள் என்னை.

2005ல் கட்சி ஆரம்பித்து தொடர்ந்து தனியாகத்தானே தேர்தலை சந்தித்தேன். நான் தலை குணிந்தாலும் உங்களைத் தலை குணிய வைக்க மாட்டேன் என்று சேலத்தில் சொல்ல விட்டுத்தான், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்பத்தானே கூட்டு சேர்ந்தேன்.

ரூம் போட்டு எங்களுக்காக காத்திருந்தபோது வெக்கமா இல்லையா?! இன்னும் கூட நிறைய இருக்கு... சொன்னா தாங்க மாட்டாங்க!

இவங்களை பாராட்டிக்கிட்டே இருக்கனும், இதுக்குப் பெயரா ஆட்சி. பாராட்ட மட்டும் டைம் தர்றீங்கள்ள, விமர்சனம் செய்யவும் டைம் தாங்க. புள்ளி விவரம் இருந்தா பேசுங்க என்கிறார்கள். ஊரைக் கொள்ளையடிச்சதுக்கு உங்க கிட்ட புள்ளி விவரம் இருக்கா.

யார் மந்திரி, யார் ஐஏஎஸ், யார் ஐபிஎஸ் என்று இவர்களுக்கேத் தெரியாது. இவங்கதான் தகுதி இல்லாதவர்.

நான் யாருக்கும் பயப்படவில்லை. மக்கள் மனது வைத்தால்தான் யாராக இருந்தாலும். நான்தான் புலி என்றால், ஆட்சிக்கு நாளை நான் வந்தாலும் இப்படிப் பேச முடியும். அப்ப என்ன சொல்வீங்க.

ஜெயலலிதா திருந்தி விட்டார் என நினைத்தேன், இல்லை, பழைய குருடி கதவைத் திருடி கதைதான். ஜெயலலிதா திருந்தவில்லை, ஆணவத்துடன் இருக்கிறார். போன 5 வருடமாக எங்கே போனீர்கள். தேர்தலை சந்திக்கக் கூட திராணி இல்லையே உங்களுக்கு. நான் பயப்படாமல்தான் சந்தித்தேன்.

தொண்டர்கள் என்ன விரும்புகின்றார்களோ அதன்படிதான் நாங்கள் கூட்டு வைப்போம். 5 ஆண்டுகாலம் அரசியலில் இடைத்தேர்தல் நாயகனின் (மு.க.அழகிரி) நிலை என்னவாச்சு? இப்போது அழகிரி எங்கே இருக்கிறார்?. சட்டம் ஒழுங்கு கெட்டு போய் குட்டி சுவராக இருக்கிறது. தேவைப்பட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

ஆவுடையப்பன் சபாநாயகராக இருந்தபோது இவரை (ஜெயலலிதாவை) 1 மணி நேரம் பேச விட்டார்கள். இவர் பேசலாம், நாங்க பேசக் கூடாதா?

எனக்குப் பயமெல்லாம் கிடையாது. மரியாதைக்கு மரியாதை, அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். மிரட்டிப் பணிய வைக்க வைத்தால் அது முடியாது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு ராஜிவ் காந்தி முதல் வாஜ்பாய் வரை அனைவரும் கவலைப்பட்டனர். எங்களுக்குத் தகுதி இல்லை என்கிறார்கள். உங்களுக்குத்தான் தகுதி இல்லை. தகுதியில்லாத உங்களுடன் கூட்டணி வைத்ததை நினைத்து நான்தான் வெட்கப்படுகிறேன்.

கேவலப்பட்ட அரசுக்கு மத்தியில் எங்களை உட்கார வைத்து விட்டார்களே என நாங்கள் இவர்களுடன் கூட்டணி வைத்தமைக்கு வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம்.

நன்றி கெட்டவங்க, எப்படிக் கெஞ்சுனாங்க என்று எனக்குத் தான் தெரியும். பேச நினைத்தால் நான் நிறையப் பேசுவேன். பேசக் கூடாதென்று அமைதியாக இருக்கிறேன்.

கேவலப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கீழ் மக்களை உட்கார வைத்து விட்டார்கள். அந்தமக்களை தூக்கி நிறுத்தத்தான் நான் இனிமேல் போராடப் போகிறேன்.

இப்போது சொல்கிறேன், என்ன திமிராக சொல்கிறான் என்று தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த முறை தேமுதிகதான் ஆட்சியைப் பிடிக்கும். பிடிக்கப் போவதைப் பாருங்கள்.

நாளை முதல் எனது கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குப் போவார்கள். நான் மக்கள் மன்றத்திற்குப் போகப் போகிறேன் என்றார் விஜயகாந்த்.