Monday, 25 July 2011

இலங்கையின் கொலைக்களம் காணொளி குறித்து விசாரித்தபோது கண்கலங்கிய சந்திரிகா


கொழும்பில் நேற்று நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணரின் நினைவுப் பேருரையில் சொற்பொழிவாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிக்கட்டத்தின் போது  கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றினார்.
இனங்களுக்கிடைலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிப் பகுதியில் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அதாவது இந்தக் காணொளியை பிரித்தானிய தொலைக்காட்சியொன்றில் பார்வையிட்ட 28 வயதான தனது மகன் தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக விம்மியழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இதே கருத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கண் கலங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார். மேலும் தனது பிள்ளைகள்  பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் நலன் குறித்து சிந்திப்பது தொடர்பில் தான் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்நிகழ்வில் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது

நித்தியானந்தாவின் புதிய காம லீலை பிரஸ்! - Comedy Show (வீடியோ இணைப்பு)



சீனாவில் அதிவேக புல்லட் ரயில்கள் மோதல்: 35 பேர் பலி(வீடியோ இணைப்பு)



மணிக்கு 250 கி.மீ வேகத்தில் இந்த ரயில்கள் சென்று வந்தன. இதுவரை எந்த விபத்தையும் சந்திக்காத புல்லட் ரயில்கள் நேற்று இரவு முதல் முறையாக பெரிய விபத்தை சந்தித்தது.

சீனாவின் ஹாங்ஸ்ஷோ மாநிலத்தின் ஜீஜியாசிங் நகரில் இருந்து பியூஜியன் பகுதியில் உள்ள பஸ்ஹோ நகருக்கு நேற்று மாலை ஒரு புல்லட் ரயில் புறப்பட்டது. வென்சோ நகருக்கு வந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதனால் மின்சாதனத்தில் பழுது ஏற்பட்டு ரயில் நின்றது.

சிறிது நேரத்தில் பீஜிங் நகரில் இருந்து பஸ்ஹோ நகருக்கு சென்ற ரயில் அதே வழித்தடத்தில் வேகமாக வந்தது. பழுதாகி நின்றிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் நின்று கொண்டிருந்த ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகளும், மோதிய ரயிலின் முதல் நான்கு பெட்டிகளும் தடம் புரண்டு, பாலத்திலிருந்து கீழே விழுந்து தொங்கியது.

இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண் உட்பட 35 பேர் பலியாயினர். 191 பேர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு குழுவினர் ஆயிரம் பேர் உடனடியாக அனுப்பப்பட்டனர்.





காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உள்ளூர் ரத்த வங்கி விடுத்த வேண்டுகோளை ஏற்று விபத்து நடந்த இடத்துக்கு அருகே வசிக்கும் மக்கள் 500 பேர் ரத்தம் கொடுத்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சீன ரயில்வே அமைச்சர் செங் காங்சூ உத்தரவிட்டுள்ளாளர். மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ளும்படி சீன அதிபர் ஹூ ஜின்டா, பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உத்தரவிட்டனர்.