Saturday, 3 September 2011

ஈழத்துக்கு எம்.ஜி.ஆர். எப்படி உதவினாரோ, அந்த அளவுக்கு முதல்வர் அம்மாவும் உதவுறாங்க! அம்மா இன்னொரு எம்.ஜி.ஆர். தான்!

வடுக்களையும் வருத்தங்களையும் மட்டுமே சுமந்தவர்களின் முகங்களில் சட்டென வசந்தக் காற்று வீசினால் எப்படி இருக்கும்? சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தபோது அப்படித்தான் இருந்தது.
 நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணா இருவரும் எட்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை என அறிவித்ததும், நீதிமன்ற வளாகமே ஆரவாரித்தது. சீனியர் வழக்கறிஞர்கள் சிலர், ''இது நீதிமன்றம் என்பதை மறந்துவிட வேண்டாம்!'' எனக் கோபம் காட்ட, நீதிபதிகளே 'இது மக்களின் உணர்வு’ எனக் கை காட்டி அந்த ஆரவாரத்தை ரசித்தார்கள்.
வெற்றி முழக்கம், இனிப்புப் பகிர்வு, நன்றி அறிவிப்புகள் எனத் தமிழகம் முழுக்க ஆனந்தக் கொண்டாட்டம்.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு, மரண வாசலில் திக்திக் இதயத்தோடு நிற்கும் பேரறிவாளன்,முருகன், சாந்தன் மூவருக்கும் மறுஜென்ம நிறைவைக் கொடுத்திருக்கிறது. சிறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி, இந்த இடைக்காலத் தீர்ப்பு அறிவிப்பை முதலில் பேரறிவாளனிடம் சொல்லி இருக்கிறார். 'நிச்சயம் தடை கிடைச்சிடும்னு நம்பிக்கை இருந்துச்சு. உடனே, இதை முருகன், சாந்தன்கிட்டயும் சொல்லுங்க சார்!’ எனத் துள்ளி இருக்கிறார் அறிவு.
9-ம் தேதி தூக்கு என நாள் குறிக்கப்பட்டதுமே, மூன்று பேரும் உயர் பாதுகாப்புத் தொகுதியில் தனித் தனியாக அடைக்கப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். திடீரென 'ஏ கிளாஸ்’ உணவு மூவருக்கும் வழங்கப்பட்டது. மெடிக்கல் செக்கப், ஒயிட் அண்ட் ஒயிட் உடை எனத் தூக்குத் தண்டனையை நினைவுபடுத்தும் அனைத்து வேலைகளும் நடந்தபடியே இருந்தன.
''நீங்கள் இறந்த பிறகு, உங்கள் உடலை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?'' என்கிற கேள்வியும் சிறைத் துறை வழக்கப்படி கேட்கப்பட்டது.
பேரறிவாளன் தனது தாய் அற்புதத்தம்மாளிடம் உடலை ஒப்படைக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.
முருகனும் சாந்தனும் 'எங்களுக்காக எல்லாவிதப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் சீமான் அண்ணனிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார்கள்.
போர்க் குற்றத்தைக் கண்டித்து சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் நிச்சயம் நம் விஷயத்தில் தலையிட்டு, நல்ல தீர்வைக் கொடுப்பார்!'' என தூக்குத் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பேரறிவாளன் சொல்லி வந்தாராம்.
இடைக்காலத் தடையோடு சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையைக் குறைக்க வலியுறுத்தும் தீர்மானமும் இயற்றப்பட, ''ஈழத்துக்கு எம்.ஜி.ஆர். எப்படி உதவினாரோ, அந்த அளவுக்கு முதல்வர் அம்மாவும் உதவுறாங்க. இன்னொரு எம்.ஜி.ஆர்-னா அது அம்மாதான்!'' எனக் கொண்டாடி இருக்கிறார் முருகன். சட்ட மன்றத் தீர்மானம், இடைக்காலத் தடை குறித்து சொல்லப்பட்ட பிறகுதான், சாந்தனின் முகத்தில் கொஞ்சம் புன்னகை.
நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் வாதாடி முடித்த பிறகு வைகோ எழுந்தார். ''மூன்று பேரையும் தனிமைச் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்!'' எனச் சொல்ல, அதற்கும் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். ம.தி.மு.க. சட்டப் பிரிவுச் செயலாளர் தேவதாஸ் மூலமாக, வழக்கறிஞர்கள் காலின் கான்சிவேல்ஸ், சபரீசன் ஆகியோரை வேலூர் சிறைக்கு அனுப்பிவைத்தார் வைகோ.
திருவள்ளூர் மாவட்டச் செயலாளரான செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் மொகித் சவுத்ரி, பாரி, மலர் ஆகியோரை சிறைக்கு அழைத்துப் போனார். பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் சந்தித்த வழக்கறிஞர்கள், ''தூக்குத் தண்டனைக்கு எதிரான விஷயமாகத்தான் இந்த வழக்கைக் கையில் எடுத்தோம். ஆனால், நீதிமன்றத்திலும் சாலைகளிலும் திரண்டு இருந்த மக்களின் ஏகோபித்த உணர்வைப் பார்த்து சிலிர்த்துப்போனோம்.
இந்த மூவருடைய தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு மாநிலமே கைகோத்து நிற்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வழக்கில் ஆஜரானதற்காகப் பெருமிதப்படுகிறோம்!'' எனச் சொல்ல, மூவருக்கும் கண் கலங்கிவிட்டது.
சிறைக்குள் மூவருடைய மனநிலையும் எப்படி இருந்தது என்பது குறித்து அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.
தூக்கு நாள் நெருங்கியதை நினைத்து, அவர்கள் பயப்படவில்லை. ஆனாலும், தூக்குத் தண்டனைக்கான சம்பிரதாயங்களை நாங்கள் நடத்தியபோது, பதற்றமானார்கள். இதேபோன்ற சம்பிரதாயங்கள் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோதே ஒரு முறை நடத்தப்பட்டது.
இதற்கிடையில் செங்கொடி தீக்குளித்து இறந்த செய்தி கேட்டு மூவரும் உடைந்துபோனார்கள். அந்தக் குடும்பத்துக்கு நாங்க என்ன செய்யப்போறோம் எனக் கலங்கிய பேரறிவாளனைத் தேற்றவே முடியவில்லை.
முருகனும் சாந்தனும், எங்களுக்காக இனியும் யாரும் சாக வேண்டாம். சீக்கிரமே எங்க கதையை முடிச்சிடுங்க சார்... எங்களுக்காக தீக்குளிச்ச தங்கச்சியோட முகத்தைக்கூட பார்க்க முடியாமப்போச்சே எனப் புலம்பினார்கள்.
இடைக்காலத் தீர்ப்பு, சட்டமன்றத் தீர்மானம் என இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தும், செங்கொடி மரணத்தால் அந்த மூவரும் பெரிதாக மகிழவில்லை. பேரறிவாளனும் முருகனும் 'நன்றி தாயே’ என உரக்கக் குரல் எழுப்பினார்கள்.
மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். திங்கட்கிழமை தங்களை சந்திக்க வரும் சீமான் மூலமாக கடிதத்தை முதல்வர் கையில் சேர்க்கப்போகிறார்கள். நன்றிகளால் அந்தக் கடிதம் நிரம்பி இருக்கிறது!  என்றார்கள் சிறைத் துறை அதிகாரிகள் சிலர்.
மூவரையும் சந்தித்துவிட்டுத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலர், ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்கள் 20 வருடங்களாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். தனிமைச் சிறையின் கொடுமையை முன்னுதாரணமாகக் காட்டியே குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன.
எட்டு வார காலத் தடைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வலியுறுத்துவோம். அதேபோல், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் ரொபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 20 வருடங்களாக உள்ளே இருக்கிறார்கள். அப்படி என்றால், ஆயுள் தண்டனையின் கால அளவு எத்தனை வருடங்கள்? அடுத்த கட்ட சட்டப் போராட்டங்களில் இத்தகைய வாதங்களையும் எடுத்துவைப்போம்! என்கிறார்கள்.
இதற்கிடையில் இன்னும் சில உணர்வாளர்களோ, ''செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில், சிறைகளில் இருந்து யார் யாரை எல்லாம் விடுவிக்கலாம் என்கிற ஆய்வு நடக்கிறது.
ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களின் பெயர்களும் பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றன.
போர்க் குற்றத்தை எதிர்த்தும், தூக்குத் தண்டனையைக் குறைக்கச் சொல்லியும் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதா, ஆயுள் தண்டனையைக் கடந்தும் சிறையில் வாடுபவர்களை மீட்டால், அது காலத்துக்கும் மறவாத சாதனையாக இருக்கும்! என்கிறார்கள் நம்பிக்கையோடு.
ஆச்சரிய மாற்றங்கள் தொடரும் என நம்புவோம்!

சு சாமிக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி (வீடியோ இணைப்பு)

அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக பிரித்தானிய அதிகாரிகளிடம் மனு


லண்டனில் வசிக்கும் அடேல் பாலசிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவொன்றை பிரித்தானிய அதிகாரிகளிடம் கையளிக்க அங்குள்ள சிங்கள அமைப்புகள் சில நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறார் போராளிகள் தற்கொலை செய்வதற்கு நேரடிக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை அவர் மீது சுமத்துவதற்கு இந்த சிங்கள அமைப்புகள் மூலம் சிறிலங்கா அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்படும் சில தமிழர்களும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் சிறிலங்கா அரசசார்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறார் போராளி ஒருவருக்கு அடேல் பாலசிங்கம் கழுத்தில் சயனைட் வில்லையை அணிவித்து விடும் காணொலி ஒன்றை இதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தவுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டின் சிறார்களின் தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என்று அடேல் பாலசிங்கம் மீது குற்றம் சுமத்த சிறிலங்கா அரசும் சிங்கள அமைப்புகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்த போது சுமார் 1000 சிறார் போராளிகள் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த 1000 சிறார்களினதும் தற்கொலைக்கு அடேல் பாலசிங்கமே காரணம் என்று அவர் மீது குற்றம் சுமத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் ஆவணப்படம் ஐ.நாவில் � ஏட்டிக்குப் போட்டியான பரப்புரை (வீடியோ இணைப்பு)




சனல்-4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா அரசாங்கம் தயாரித்துள்ள ஆவணப்படமும் ஐ.நா வளாகத்தில் காண்பிக்கப்படவுள்ளது.

'Lies Agreed Upon' என்ற பெயரில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தை ஐ.நா வளாகத்தில் Dag Hammarskjold மண்டபத்தில் எதிர்வரும் செப்ரெம்பர் 6ம் நாள் பிற்பகல் 2 மணியளவில் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு ஐ.நா வை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிபிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில் உள்ள தேவாலய நிலையத்தில் திரையிடப்பட்டிருந்தது.

அதற்குப் போட்டியாகவே சிறிலங்கா அரசும் இந்த ஆவணப்படத்தை முதல் அவென்யூவில் திரையிடவுள்ளது.

இதன்மூலம் ஐ.நா வளாகத்தை சிறிலங்கா அரசு பரப்புரைக் களமாக மாற்ற முனைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மகிந்த தனது அதிகாரத்தை விட்டுக் கொடுக்க விரும்பமாட்டார் - பிரித்தானிய ஊடகம்


 
இப்புதிய விதிமுறைகளானது 'தேவைக்கேற்ற விதமாக' சிறிலங்கா அதிபரால் அல்லது அவரின் உடன்புறப்புக்களில் மிகக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளரால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதும் வேதனைக்குரியதே.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் The Economist ஊடகத்தின் இணையத்தளத்தில் வெளியாகிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

ஓகஸ்ட் 25ம் நாளன்று அனைத்து சிறிலங்கா நாடாளுமன்ற அமைச்சர்களையும் நாடாளுமன்றில் ஒன்றுகூடுமாறு அறிவித்ததற்கான காரணத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களிடம் கூறவில்லை.

சிறிலங்காவில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படவுள்ளது என அறிவிப்பதற்காகவே மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையைக் கூட்டவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சிறிலங்கா அதிபர் ஒரு தொகுதி ஆவணப் பத்திரங்களைச் சுமந்து கொண்டு நாடாளுமன்றிற்குள் நுழைந்தபோது அதிபருக்கு நெருக்கமான அமைச்சர்களுக்குக் கூட என்ன நடக்கப் போகின்றது அல்லது அந்தப் பத்திரங்களில் என்ன இருக்கின்றது என்பது தொடர்பாகத் தெரிந்திருக்கவில்லை.

சிறிலங்காவானது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கடந்த முப்பது ஆண்டுகாலங்களுக்கும் மேலாக இருந்துவந்துள்ளது. மிக அண்மையில் அதாவது ஓகஸ்ட் 2005ல் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த தமிழரான லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சிறிலங்காவில் உள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களிற்கு சுதந்திரமான தனிநாடு வேண்டிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கு எதிராக அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மே 2009ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருந்தது.

இவ்வவசரகாலச் சட்டத்தின் கீழ் சிறிலங்கா இராணுவத்தினருக்குப் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதாவது மக்களை விசாரித்தல், சந்தேகத்திற்கிடமானவர்கள் என்ற போர்வையில் மக்களைத் தேடுதல், கைதுசெய்தல், தடுத்துவைத்தல் போன்ற பலதரப்பட்ட அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. பொதுப் பேரணிகள், கூட்டங்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகாரமும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இவ்வவசரகாலச் சட்டத்தின் கீழிருந்த சில சரத்துக்கள் நீக்கப்பட்டும், சில திருத்தம் செய்யப்பட்டன.

செப்ரெம்பர் 12ம் நாளிலிருந்து ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது சிறிலங்கா அரசாங்கம் தனக்கான ஆதரவுச் சக்திகளைச் சம்பாதிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதாலேயே இந்த வேளையில் அதாவது இறுதி நேரத்தில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கப் போவதில்லை எனவும் இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் சிறிலங்கா அதிபர் அறிவித்திருந்தார்.

ஆனால் எப்போது இது நீக்கப்படும் என்பது தொடர்பான சரியான திகதியை அதிபர் அறிவிக்கவில்லை. இந்நிலையில், அரசாங்க அதிகாரிகள் இது தொடர்பாக பல்வேறு திகதிகளை அறிவித்திருந்தனர்.

2006ல் ஆரம்பமான மகிந்தவின் ஆட்சிக் காலத்தின் போது ஏற்பட்ட சில குழப்பகரமான சம்பவங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

என்ன நடக்கப் போகின்றது என்பதை 'மிகச் சிலரே' நன்கறிந்துள்ளனர் என அரசாங்கம் மீது வெறுப்புக் கொண்டுள்ள சில அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 'மிகச் சிலர்' என்பதற்குள் அதிபரின் இளவயது மகன் மற்றும் மூத்த அரசியல்வாதிகளான அதிபரின் மூன்று சகோதரர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.

அவசரகாலச் சட்டத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது நடைமுறைப்படுத்தப்படுமா என்பது தொடர்பாகவும் தெளிவின்மை உள்ளது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதும் நிச்சயமற்றதாகவே உள்ளது.

அத்துடன் சிறிலங்கா இராணுவத்தினரோ அல்லது காவற்துறையினரோ கேட்கும் போது சாதாரண மக்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எந்தவேளையிலும் தமது அடையாள அட்டைகளை தம்முடன் வைத்திருக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் தெளிவின்றிக் காணப்படுகின்றது.

எதெவ்வாறிருப்பினும், சிறிலங்கா அரசாங்கமானது தன்னால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என ஆர்வலர்கள், அரசாங்கம் மீது அழுத்தங் கொடுத்து வருகின்றனர். ஆனால் இது ஒருபோதும் செயற்படுத்தப்படவில்லை.

புலிகள் மீதான தடை மற்றும் தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்கள் தொடர்பான புதிய விதிமுறைகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறப்பாகச் சேர்க்கப்படவுள்ளன என சிறிலங்காவின் சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்புதிய விதிமுறைகளானது 'தேவைக்கேற்ற விதமாக' சிறிலங்கா அதிபரால் அல்லது அவரின் உடன்புறப்புக்களில் மிகக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளரால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதும் வேதனைக்குரியதே.

ராஜபக்ச தனது அதிகாரத்தை விட்டுக் கொடுக்க விரும்பமாட்டார் எனக் கருதப்படுகின்றது.

"பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது தற்போது தொடர்ந்தும் அமுலில் இருப்பதால் அவசரகாலச் சட்ட நீக்கம் என்பது ஒன்று நீக்கப்பட்டு பிறிதொன்றிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையே காட்டுகின்றது. அதாவது இது முன்பள்ளியில் கற்கின்ற Tweedledee � Tweedledum என்கின்ற பாடல் கூறும் கருத்திற்கு ஒப்பானதாகும். இந்நிலையில் சிறிலங்கா அதிபர் முன்கதவு வழியான சில அதிகாரங்களை நீக்கி அதனைப் பின்கதவின் மூலம் சரிப்படுத்திவிடுவார் என்பது கவலைக்குரிய விடயமாகும். மகிந்தவும் அவரது அரசாங்கமும் தம்மைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சிறிதளவாக ஏதோ செய்துள்ளனர் என்பதே உண்மையாகும்" என சட்ட ஆர்வலரான கிசாலி பின்ரோ � ஜெயவர்த்தனா தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை உணவுக்கு கூட ஏங்கி நிற்கும் எமது நாட்டில் போத்தில் கணக்காக பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு? (வீடியோ இணைப்பு)




ஒரு சிலரின் உதாசீன நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த இனமும் துர்ப்பெயருக்கு ஆளாகும் நிலை, இதற்கு சிறந்த உதாரணம் இந்த செய்தி.

சமீபத்தில் உலகெங்கும் வெளியாகி பட்டைகிளப்பி கொண்டிருக்கும் மங்காத்தா படத்திற்கு மட்டக்களப்பிலும் மவுசு குறையவில்லை, வந்தோமா படத்தை பார்த்தோமா என்றில்லாமல் சில கொரில்லாக்களின் செயற்பாடுகள் பலரையும் ஒருகணம் நிமிரவைத்தது.

தம் தலைவர் படங்களுக்கு பாலபிஷேகம் செய்வது ஊர் உலகத்தில் நடக்கும் சாதாரண விடயம் குறிப்பாக தமிழ்நாட்டில், அதே வழக்கம் இங்கேயும் பரவத்தொடங்கியிருக்கிறது. எவ்வளவோ பேர் ஒருவேளை உணவுக்கு கூட ஏங்கி நிற்கும் எமது நாட்டில் போத்தல் கணக்காக பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு முட்டாள்தனம்.

இது அஜித் படத்திற்கு மட்டுமல்ல ரஜினி , விஜய் போன்றவர்களுக்கும் அடிக்கடி நடக்கும். இதன் மூலம் நடிகர்களை குறைகூற முடியாது. அவர்கள் யாரும் தங்களுக்கு பாலூத்துமாறு பரிந்துரைப்பதில்லை.

இதுபோன்ற செயற்பாடுகள் படத்திற்கு வசூலை அள்ள உதவும். அதுவும் எங்கோ இருக்கும் நடிகருக்கும் சில பல புள்ளிகளுக்கும் , எமக்கென்ன பயன் ?

கலைஞர்களை வாழ்த்துவது சிறப்பு அதுவும் அளவோடு இருந்தால் அதனிலும் சிறப்பு.

இவர்களை எந்த நேரத்தில் தாய் தந்தையர் பெற்றார்களோ தெரியவில்லை ?













செங்குத்தாக மலையேறுபவர்கள் தூங்குவது எப்படி? (படங்கள் இணைப்பு)


மலையேறுபவர்கள் பற்றி நீங்கள் ரொம்பவே அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய செங்குத்தான மலைகளில் ஏறுபவர்கள் அதன் உச்சியை தொடுவதற்கு பல நாட்கள் கூடி ஆவதுண்டு.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் ஓய்வெடுக்க அல்லது தூங்குவதற்கு என்ன செய்வார்கள் என நீங்கள் சிந்தித்துப்பார்த்ததுண்டா? நாம் தந்திருக்கும் படங்களை பாருங்கள் அப்போது புரியும் செங்குத்தான மலைகளில் நாட்கணக்காக ஏறுபவர்கள் எங்கே எப்படி தூங்குவார்கள் என்று.












வேற்றுக்கிரவாசியால் கற்பழிக்கப்பட்ட பெண்! (வீடியோ இணைப்பு)


அண்மைக் காலங்களாக ஏலியன்கள் பற்றிய சர்ச்சை அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. ஏலியன்கள் பற்றி இறுதியாக பிரேசில் நாட்டில் பறக்கும் தட்டில் வந்திறங்கி சில ஏலியன்கள் பனிப்பகுதிக்குள் கால்பதித்து நடந்து சென்றதாக காணொளியுடன் வெளியாகி செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் இன்னுமொரு பீதியைக் கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது.


இத்தாலியைச் சேர்ந்தே Gennargentu, Sardinia பகுதியைச் சேர்ந்த 40வயதான Giovanna Podda எனும் யுவதி தன்னை வேற்றுக்கிரவாசி கற்பழித்து விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது :


குறித்த பெண் தன்னை பொஸ்பரஸ் தீக்காயங்களுடனான வேற்றுக்கிரகவாசி ஒருவர் கடத்தி சென்று கற்பழத்து விட்டதாக இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மீண்டுமொரு சர்ச்சை வீடியோ - நடிகை பூஜா


சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை பிள்ளை போல் இன்று அனைவரது கரங்களிலும் அதி நவீன செல் போன்கள். செல்போனில் வீடியோ கேமரா வசதி வந்த பின்னர் சைபர் குற்ற நடவடிக்கைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காரணம் இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் சேலை அணிந்து செல்லும் குடும்ப பெண்களையும் ரகசியமாக படம் பிடித்து கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக மாற்றி இண்டர்நெட்டில் பரவ விடுகின்றனர். செல்போன் பயன்படுத்தும் சில குறும்பு கார மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இண்டர் நெட்டில் இருந்து அத்தகைய காட்சிகளை செல்போனில் டவுன் லோடு செய்து கொள்கின்றனர்.

தாங்கள் பார்த்து மகிழ்வது மட்டுமல்லாமல் தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நடிகை திரிஷா குளியல் காட்சி, ரசிகர்கள் கூட்டத்தில் கசங்கும் ஜோதிகா, உடை மாற்றும் குஷ்பு, ஆடை நழுவும் கிரண், மசாஜ் சென்டரில் திரிஷா, முத்தமிடும் நமீதா என தமிழ் திரையுலக நடிகைகளின் பட காட்சியை கிராபிக்ஸ் மூலம் இண்டர் நெட்டில் ஆபாசமாக உலவ விட்டனர்.

அதனை செல்போன் மூலம் பரவ விட்ட குறும்பு காரர்கள் தற்போது நடிகை பூஜா. மாதவன் ஜோடியாக "ஜே.ஜே" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக மானவர் நடிகை பூஜா. தொடர்ந்து இவர் அட்டகாசம், தம்பி, பொறி உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பூஜா தற்போது கொழும்புவில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகை பூஜாவின் ஆபாச படம் "பிசினஸ்மேன் வித் பூஜா" என்ற பெயரில் செல்போனில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பூஜாவின் ஆபாச காட்சி சென்னை, புதுவை, கோவை, திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே செல்போன் மூலம் வேகமாக பரவி வருகிறது.

இது பற்றி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. ஆபாச காட்சியில் இடம் பெற்றுள்ளது நடிகை பூஜாவா, அல்லது அவரை போன்ற உருவ அமைப்பு கொண்ட வேறு ஆபாச நடிகையா என போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் நடிகை பூஜாவின் ஆபாச காட்சியில் கிராபிக்ஸ் ஏதும் இடம் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்து வருகிறார்கள்.

சோனியாகாந்திக்கு முருகன் மகள் உருக்கமான கடிதம்

 
என் தந்தையை மன்னித்து விடுங்கள். எனது தாய்க்கு காட்டிய கருணையை எனது தந்தைக்கும் காட்டி, என்னை எனது தந்தையுடன் வாழ அனுமதியுங்கள் என்று முருகன், நளினியின் மகள் அரித்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

தூக்குக் கயிற்றின் முன்பு முருகன் உள்ளிட்ட மூவர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர்களைக் காப்பாற்ற பல்வேறு வகையான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ராவும் தனது தந்தையைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போது 20 வயதாகும் அரித்ரா, லண்டனில் வசித்து வருகிறார். இவர் பிறந்தது வேலூர் சிறையில். அன்று முதல் இன்று வரை பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அரித்ரா.

நேற்று அவர் தனது தந்தையைக் காப்பாற்ற நடந்து வரும் போராட்டங்களில் தானும் பங்கேற்க விரும்புவதாக தமிழ்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கண்ணீருடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒரு பெண்ணாக, உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் மகள், மகன் தங்களது தந்தையை இழந்து வாடும் பிரிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

தந்தை, தாய் இல்லாமல் வாழும் எந்தக் குழந்தையும் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

இன்று அதே நிலையில்தான் நான் உள்ளேன். பெற்றோர் இருந்தும் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாத அவல நிலையில் உள்ளேன். உங்களது மகள் தந்தையை இழந்து வாடுவதைப் போல நானும் தந்தையை இழந்து வாடப் போகிறேன் என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

எனது தாயாருக்கு கருணை காட்டி, மனம் இரங்கி, மன்னித்து ஆயுள் தண்டனையாக மாற்றி எனக்கு அருள் புரிந்தீர்கள். இன்று அதேபோல எனது தந்தைக்கும் மனம் இரங்கி, அவரை மன்னித்து எனக்காக அவரது உயிரைக் காப்பாற்றுங்கள். எனது அப்பாவுடன் நான் சேர்ந்து வாழ அனுமதி கொடுங்கள். எனது தந்தையை மன்னியுங்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார் அரித்ரா.

மட்டக்களப்பு செங்கலடியில் அஜித்துக்கு பாலாபிஷேகம்... (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பு - செங்கலடி செல்லம் திரையரங்கில் மங்காத்தா திரைப்படம் திரையிடப்பட்டது. குறித்த திரைப்படத்தை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் திரையரங்கை சூழ்ந்த நிலையில் கதாநாயகள் அஜித்குமாரின் கட்அவுட்க்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாலாபிஷேகம் செய்வதையும் திரையரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் ஒரு தொகுதியையும் படங்களில் காணலாம்.

இவர்களை எந்த நேரத்தில் தாய் தந்தையர் பெற்றார்களோ தெரியவில்லை ?













மன்னார் ஆக்காட்டிவெளி கிராமத்தில் கடை உரிமையாளர் வெட்டிப்படுகொலை! (படங்கள் இணைப்பு)


மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டான்குளம் வீதி ஆக்காட்டிவெளி கிராமத்தில் நேற்று புதன் கிழமை இரவு 9.30 மணியளவில் கடை உரிமையாளர் ஒருவர் தனது கடைக்குள்ளேயே வைத்து இனம் தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் ஆக்காட்டிவெளி கிராமத்தில் வசித்து வரும் குடும்பஸ்தரான கனகரத்தினம் மகேந்திரன் (வயது-42) என விடத்தல் தீவு பொலிஸார் தெரியவித்துள்ளனர்.

ஆண்டான்குளம் வீதி ஆக்காட்டி வெளி கிராமத்தில் வசித்து வரும் குடும்பஸ்தரான கனகரத்தினம் மகேந்திரன் என்பவர் நேற்று இரவு 9 மணியளவில் தனது கடையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று இரவு உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் இரவு 9.30 மணியளவில் தனது கடையில் படுப்பதற்காக சென்றார்.பின் இன்று காலை அவர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை 5.30 மணியாகியும் வீடு வராததன் காரணத்தினால் குறித்த அவரது தாயார் அவரை பார்ப்பதற்காக கடைக்குச்சென்றிருந்த போது கடைக்குள்ளேயே கனகரத்தினம் மகேந்திரன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கத்தி சத்தம் போட அயலில் உள்ளவர்கள் அவ்விடத்தில் குவிந்தனர்.

இதனைத்தொடர்ந்து விடத்தல் தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விடத்தல் தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.

பின் மன்னார் பதில் நீதவான் எம்.எம்.சபூர்தின் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டார்.

இதன் போது கொலையாளி கடைக்கு பின்புறமாக வந்து தகரத்தினை கிளித்துக்கொண்டு உள்ளே நுழைந்து சென்று கொலை செய்துள்ளமை விசாரணைகளின் போதும் தடையங்களின் போதும் தெரிய வந்தது.

கனகரத்தினம் மகேந்திரன் வீட்டில் இருந்து மீண்டும் கடைக்குள்ளேயே சென்ற போது குறித்த நபர் கடைக்குள்ளேயே பதுங்கியிருந்து அவரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கண்மூடித்தனமாக கூறிய ஆயுதங்களால் வெட்டியுள்ளார்.

பின் கடைக்குள் இருந்த மிளகாய்த்தூளை கொலை நடைபெற்ற இடத்தில் கொட்டி விட்டு பின்புறமாக தப்பிச்சென்றுள்ளார்.

இதன் போது கொலையாளி தப்பிச்சென்ற இரத்த தடையங்கள் மற்றும் கொலையாளி அணிந்திருந்ததாக கூறப்படும் செருப்பு என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டது. பின் காலை 10.30 மணியளவில் வவுனியாவில் இருந்து தடையம் கண்டறியும் நிபுனர் குழுவும் வருகை தந்து தடையங்களை பெற்றுக்கொண்டனர்.

பின் பதில் நீதவான் எம்.எம்.சபூர்தினின் உத்தரவிற்கமைவாக சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.மேற்படி சம்பவ இடத்திற்கு வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் குறித்த கிராம மக்கள் மேற்படி சம்பவம் தொடர்பில் தாம் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இராணுவத்தின் காவலரன் ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வர்த்தகரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை உறவினர்களை பார்க்க யாழ்ப்பாணம் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறுட்டு கண்களால் படமெடுக்கும் காமரா! (வீடியோ இணைப்பு)




இது மூளையுடனோ அவரது பார்வையுடனோ தொடர்புபடுத்தப்படவில்லை. புதிய வீடியோ விளையாட்டுத் தயாரிப்பாளர்களான Deus Ex எனும் நிறுவனத்தினருடன் இணைந்து செயற்பட்டு இப்புதிய கமெராக் கண்ணைப் பொருத்தியுள்ளார்.

2027 இல் உலகில் இவ்வாறான இயந்திரக் கண்களுடன் பலர் வீதிகளில் திரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருவியில் ஒரு கமெரா, கம்பியற்ற மாற்றி, மின்கலம் என்பன உள்ளடங்கின்றன. இவை றொப்பின் கட்கழிக்குள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு 9மி.மீ. மட்டுமே தேவைப்பட்டது.

சிறுவயதில் ஒரு விளையாட்டின்போது தனது கண்ணை இழந்த றொப் 5 வருடங்களுக்கு முன்னர் கண்ணினையும் அகற்றியிருந்தார் இவரது கண்ணில் பொருத்தப்பட்டுள்ள கமெராவிலிருந்து காட்சிகள் ஒரு கையடக்கமான திரைக்கு மாற்றப்படுகின்றன. 3.2மி.மீ. சதுர அடியும் 328�250 பிக்செல் கொண்டதுமான சிறியதொரு கமெரா கலிபோர்ணியாவின் OmniVision நிறுவனத்தினரால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.