Monday, 11 July 2011

விஜய் - சீமான் : பகலவன் படத்திற்காக எழுச்சிமிகு பாடல்கள்


நடிகர் விஜய் நடிக்க, கலைப்புலி தாணு தயாரிக்க, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இயக்கத்தில் உருவாகிறது ‘’பகலவன்’’.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்குகிறது.  வேட்டைக்காரன், வேலாயுதம் என   விஜய்யின் இரண்டு படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கவிஞர் அறிவுமதி இப்படத்திற்காக எழுச்சி மிகு பாடல்களை எழுதுகிறார்.  சீமான் ஒரு பாடலை  பாடுகிறார்.  இப்படத்திற்காக விஜய் இரண்டு பாடல்களை பாடுகிறார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதேஇப்படத்திற்கான திரைக்கதையை எழுதிவிட்டார் சீமான்.  எனினும் திரைக்கதையில் தற்போது சிலதிருத்தங்களை செய்து வருகிறார்.
இப்படத்தின் அறிமுக விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் கலைப்புலி தாணு.   பாடல்கள் வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

சிகிச்சைகள் முடிந்தன... சென்னை திரும்புகிறார் ரஜினி!


 ரஜினி எப்போது வருவார் என்ற கேள்வியே ஓராயிரம் செய்திகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த கேள்வியைச் சுற்றிச் சுற்றியே கடந்த 30 நாட்களாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

இப்போது இந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ரஜினி எந்த நேரத்திலும் சென்னை திரும்பும் அளவுக்கு 100 சதவீதம் பழைய உடல்நிலை மற்றும் தெம்பைப் பெற்றுவிட்டார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுநாள்வரை ரஜினியை வீட்டுக்கே போய் பார்த்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளித்துவந்த மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் ரஜினி எப்போது வேண்டுமானாலும் நாடு திரும்பலாம் என்று கூறிவிட்டனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினியைப் பார்க்கப் போகும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ராணா படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அவரது ஆலோசனையைப் பெற்றுவிட்டு சென்னை திரும்புகிறார். அதைத் தொடர்ந்து சென்னை வரும் ரஜினி, ரசிகர்களைச் சந்தித்த பிறகு, படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வார் என்று தெரிகிறது.

போயஸ் கார்டன் வீட்டில் புதுப்பிப்பு பணிகள் மும்முரம்

ரஜினி வருவதற்கு முன் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வாஸ்துப்படி சில மாறுதல்களைச் செய்யும் வேலை மும்முரமாக நடக்கிறது. குறிப்பாக ரஜினியின் படுக்கை அறை, தியான அறை போன்றவற்றில் சில மாறுதல்கள் செய்யப்படுவதாக ரஜினி இல்ல நிர்வாகிகள் தெரிவித்தனர்.


பாடகி சித்ரா ரெக்கார்டிங் தியேட்டரில் கதறினார்

சின்னக் குயில் என திரை இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கேஎஸ் சித்ரா மீண்டும் பாட ஆரம்பித்துள்ளார்.

இசைமேதைகள் எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு கொண்டுவரப்பட்டவர் சித்ரா. மலையாளப் பாடகி என்றாலும், தமிழை அத்தனை அழகாகப் பாடி ரசிகர்களை வசியம் செய்தார்.

இதுவரை 15000 பாடல்களைப் பாடி, ஆறு தேசிய விருதுகள் உள்ள பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவர், சமீபத்தில் பெரும் சோகத்தைச் சந்தித்தார். அவரது ஒரே மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சியை சித்ராவால் தாங்க முடியவில்லை. பாடுவதையே நிறுத்திவிட்டிருந்தார்.

இப்போது, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடத் தொடங்கியுள்ளார். மலையாளத்தில் வெளியாகும் 'இஷம்+ஸ்நேகம்= அம்மா' என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்தப் பாடல் ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தைச் சொல்லும் பாடல்.

சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் இந்தப் பாடலைப் பாடும்போது ரெக்கார்டிங் தியேட்டரில் கதறி அழுதுவிட்டாராம் சித்ரா.


<----more---->