Monday, 23 January 2012

பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு

 


சென்னையில் நடந்த விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,   ’’நான் தீவிர காங்கிரஸ்காரன். காங்கிரஸுக்காக மேடையில் ஏறி தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். என்  தாயின் நகைகளை விற்று காங்கிரஸுக்காக என் தந்தை பாடுபட்டுள்ளார்.


நேரு போன்ற பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இன்று சோனியா தலைவராக இருக்கிறார். இதனால் காங்கிரஸில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.

அந்த கருத்து வேறுபாடு அப்பா- அம்மா, அண்ணன்-தம்பிக்கு இடையேயான கருத்து வேறுபாட்டைப் போன்றது  நான் கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன்’’ என்றார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில்,

தமிழகத்தில் எந்த இயக்கத்திற்கும் காங்கிரஸ் சளைத்தது அல்ல. பெரியார் பிரச்னையாகட்டும், மீனவர் பிரச்னையாகட்டும், அணுமின் நிலையமாகட்டும். தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் போராடும்.


பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், சுதர்சன நாச்சியப்பன் எம்பியும் பாரதிராஜா போன்றவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

எப்படி நாட்டை ஏமாற்றலாம் நீங்கள்?-பிரதமருக்கு அன்னா கேள்வி!


வலுவான லோக்பால் கோரி நடந்து வந்த போராட்டம் பிசுபிசுத்துப் போய் விட்ட நிலையில் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் வாய் திறந்துள்ளார் அன்னா ஹஸாரே. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எப்படி நாட்டை நீங்கள் ஏமாற்ற முடிந்தது என்று கேட்டுள்ளார் அன்னா.

கடந்த டிசம்பர் மாதம் தான் தொடங்கிய 3 நாள் உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார் ஹஸாரே. அன்று முதல் அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், பிரதமருக்கு அவர் ஒரு கடிதம் எழுதி தனது மெளனத்தைக் கலைத்துள்ளார்.

கடிதத்தில் அவர் கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா விவகாரத்தில் நாட்டை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். அரசு கொண்டு வந்துள்ள மசோதா உண்மையிலேயே வலுவானதுதானா? நாட்டை எப்படி உங்களால் ஏமாற்ற முடிந்தது?

வலுவான லோக்பாலை கொண்டு வாருங்கள். இந்த நாடு என்றென்றும் உங்களை பாராட்டும், நினைவு கூறும்.

நாடாளுமன்றத்தையே இந்த அரசு கட்டுப்படுத்தி வைத்திருப்பது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் ஹஸாரே.

இந்தக் கடிதத்தின் நகலை ராகுல் காந்தி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, உ.பி. முதல்வர் மாயாவதி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார் ஹஸாரே.

விஜய்யின் 'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்?


விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன் ஓடி வருவதாகவும், விஜய் மற்றும் மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும் ரசிப்பதாலும், வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் வசூல் சாதனைகளை இது படைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பன்ச் டயலாக்குகளில் மட்டுமல்லாமல் பாந்தமான நடிப்பாலும் தன்னால் அசத்த முடியும் என்பதை விஜய் நிரூபித்து விட்டார் என்பதுதான் இந்தப் படத்தின் டாப் ஹைலைட்டாக அமைந்துள்ளது.

விஜய் மட்டுமல்லாமல் ஜீவா, ஸ்ரீகாந்தக், சத்யன், சத்யராஜ் என மற்ற கலைஞர்களின் நடிப்புக்கும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

இதுவரை விஜய் நடித்து வெளியான படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்ற பேச்சும் படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்து விட்டது என்கிறார்கள் திரையுலகினர்.

விஜய் பட வசூல் குறித்து இதுவரை படத் தயாரிப்புத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும் பத்து நாட்களில் ரூ. 110 கோடி வசூல் என்ற பேச்சே அந்தப் படத்திற்கு இன்னொரு விளம்பரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்லிகா ஷெராவத்


பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் ஆலிவுட்டில் பிரபலமானதை அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிரந்தரமாக தங்கிவிட்டார். தற்போது 2 இந்தி படங்களில் நடிக்க மும்பை வந்துள்ளார். இரு படங்களிலும் ஹீரோ விவேக் ஒபராய்.

மும்பையில் மல்லிகா ஷெராவத் அளித்த பேட்டி வருமாறு:-

லாஸ்ஏஞ்சல்ஸ்சில் இருந்தாலும் மும்பையில் உள்ள எனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. இங்கு என்னைப்பற்றி நிறைய வதந்திகள் உலா வருகின்றன. நான் இப்போது நடித்து வரும் படங்கள் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேவையில்லாத கற்பனைகளையும் தகர்த்து எறியும். மும்பை பட உலகில் நேர்மையை எதிர்பார்ப்பது கடினம். ஆலிவுட்டில், சொந்தக்காரர்கள் என்பதற்காக தகுதி இல்லாதவர்களுக்கு ஒரு போதும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

ஆலிவுட்டில் உள்ளவர்கள் என்னை அன்புடன் வரவேற்று மரியாதையுடன் நடத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை அனைத்து விஷயங்களும் சுதந்திரமாக நடைபெற வேண்டும். இங்கு பெண்களுக்கு, அதிகளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சுதந்திரமும் அளிக்கப்படுவதில்லை. ஆனால் அமெரிக்காவில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்படுகிறது. ஒரு முறை அதிபர் ஒபாமாவை சந்தித்த போது, அமெரிக்காவில் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கப்படுவதாகவும் சுதந்திர உணர்வு மீது தான் அமெரிக்கா கட்டப்பட்டுள்ளது.

நீங்களும் (இந்தியா) அதைதான் பின் பற்று கிறீர்கள். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார். நான் அமெரிக்காவில் போய் செட்டில் ஆனதால் இங்கு எதையும் இழக்கவில்லை. அவ்வப்போது மும்பை வந்து கொண்டுதான் இருக்கிறேன். சினிமா உலகம் என்னை புறக்கணித்து விட்டது என்று கூறினார்கள். அது என்னை பாதிக்கவில்லை. இதை நினைத்து கவலைப்பட்டதே கிடையாது.

ஆலிவுட், பாலிவுட் என்று நான் பிரித்துப் பார்ப்பதில்லை. நல்ல கதையுடன் யார் வந்து அணுகினாலும் அவர்கள் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன். பாம்புகளை முத்தமிட எனக்கு ரொம்ப பிடிக்கும். பாம்புகளை அதிகம் நேசிக்கிறேன். இப்போது யாராவது காதலைப் பற்றி பேசினாலே, எரிச்சல், எரிச்சலாக வருகிறது.

நான் இப்போது ஒரு பெண் துறவியாகிவிட்டேன். எனவே, காதல் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. இப்போது, எனது கவனம் முழுவதையும், தொழில் மீது மட்டுமே செலுத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்களூரில் ஆர்ப்பாட்டம்!


தண்டுபாளையா என்ற கன்னடப் படத்தில் தனது முழு முதுகையும் துணி இல்லாமல் காட்டி நடித்துள்ள நடிகை பூஜா காந்தியைக் கண்டித்து பெங்ளூரில், திரைப்பட வர்த்தக சபை முன்பு கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பின் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழில் கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ளார். சமீபத்தில் தேவகவுடாவை ரோல் மாடலாக அறிவித்து அவரது மகன் குமாரசாமி தலைமையில் இயங்கி வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அரசியலுக்கு வரும் முன்பு அவர் தண்டுபாளையா என்ற படத்தில் முக்கால் நிர்வாணமாக நடித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சலசலப்பு காரணமாகவே எதிர்ப்புகளிலிருந்து தப்பும் வகையில் அவர் கவுடா கட்சியில் இணைந்தார் என்று பேசப்படுகிறது.

சீனிவாஸ் ராஜ் என்பவர் இயக்கி தயாரித்துள்ள தண்டுபாளையா படம் ஒரு ரவுடிக் கும்பலின் கதையாகும். இதில் முதுகுப் பகுதி உள்ளிட்ட பின்பகுதிகள் முழுவதும் அப்பட்டமாக தெரியும் வகையில், முக்கால் நிர்வாணமாக நடித்துள்ளார் பூஜா காந்தி. இப்படத்தில் தான் நடித்தது குறித்து முன்பு பூஜா காந்தி கூறுகையில்,படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால், அவ்வாறு நடித்து உள்ளேன், முதுகுபுறத்தை மட்டும் நிர்வாணமாக காட்டி உள்ளேன். முன்புறம் சேலையால் மறைக்க முயற்சி செய்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில் பின்பகுதி மட்டுமல்லாமல், முன்பகுதியிலும் கூட எந்த டிரஸ்ஸையும் பூஜாகாந்தி அணிந்திருப்பதாகத் தெரியவில்லை. மாறாக முன்புறமும் கூட அவர் ஒட்டுத் துணியில்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. இது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் திரைப்பட வர்த்தக சபை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

70 வயது முதியவர் கோடீஸ்வரன் ஆனார்: கடனாக வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு


கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாய் அருகே உள்ள கடங்கநல்லூரைச் சேர்ந்தவர் அய்யப்பன். 70 வயது முதியவரான இவர் கடந்த 40 வருடங்களாக சவுண்டு சர்வீஸ் நடத்தி வருகிறார்.

இவருக்கு குட்டி என்ற மனைவியும், பாபு என்ற மகனும், பிந்து, சிந்து ஆகிய மகள்களும் உள்ளனர். வறுமையின் பிடியில் வாழ்க்கை நடத்தி வந்த அய்யப்பனின் மகன் மற்றும் மகள்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மூத்த மகள் பிந்துவுக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஆனால் போதிய பணம் இல்லாததால் மாப்பிள்ளை வீட்டார் பிந்துவை திருமணம் செய்யவில்லை. அய்யப்பனுக்கு சொந்தமான 2 1/2 சென்ட் நிலத்தில் ஒரு ஓலை குடிசை வீட்டிலேயே அனைவரும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட அய்யப்பன் கொச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடையில் இருந்து கேரள மாநில அரசின் சிறப்பு குலுக்கலான ரூ.1 கோடி பரிசு தொகை கொண்ட 5 லாட்டரி சீட்டுகளை கடந்த 2 நாள்களுக்கு முன்பு வாங்கினார். அதற்குரிய பணத்தை அவர் கொடுக்காமல் கடனாகவே வாங்கிச் சென்றார்.

இந்த லாட்டரி குலுக்கல் நேற்று நடந்தது. இதில் அய்யப்பன் வாங்கிய லாட்டரி சீட்டு நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்தது. அவர் வாங்கிய மற்ற 4 லாட்டரி சீட்டுகளுக்கும் ஆறுதல் பரிசான ரூ.10 ஆயிரம் முதல் 40 ஆயிர வரை கிடைத்தது.

இந்த தகவலை லாட்டரி விற்பனையாளர் சுரேஷ் அய்யப்பனிடம் தெரிவிக்க அவருடைய வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லை. பக்கத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்காக மின்அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அவரை கண்டு பிடித்து விஷயத்தை கூறியபோது ஆனந்த அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் தான் கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தாலும், அதற்கு பணம் கொடுக்காததால் அந்த சீட்டுகள் சுரேசுக்கு சொந்தமானது என்றார்.

ஆனால் சுரேஷ் அதை ஏற்கவில்லை. லாட்டரி சீட்டுகள் வைத்திருக்கும் உங்களுக்கே பரிசு தொகை சொந்தமானது என்றார். இதையடுத்து லாட்டரி விற்பனையாளர் சுரேசின் நேர்மையை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை துண்டித்து ஊர்வலம் சென்ற பெண்


மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள அமோகா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம்லால் யாதவ். இவர் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இருவரும் பல வருடங்கள் ஜாலியாக இருந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் குழந்தைகளுடன் அமர்கார் கிராமத்தில் வசித்து வந்தாள். இதற்கிடையே அவளது கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவள் 2 குழந்தைகளுடன் அமோகா கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு திரும்பினாள்.

காதலி மீண்டும் ஊருக்கு வந்ததும் ஷியாம்லால் யாதவ் அவளை சந்தித்து பழைய உறவை புதுப்பித்துக்கொள்ள முயன்றார். அதற்கு அவள் உடன்படவில்லை. திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே என்றாள். ஆனால் யாதவ் அதை பொருட்படுத்தாமல் செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டார். சம்பவத்தன்று ஷியாம்லால் யாதவ் வயல் வெளியில் தனியாக இருந்த காதலியிடம் மீண்டும் செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டார்.

ஆத்திரம் அடைந்த அவள் அரிவாளால் ஷியாம்லால் யாதவ் தலையை வெட்டி துண்டித்தாள். பின்னர் ரத்தம் சொட்டச்சொட்ட துண்டித்த தலையுடன் வயல்வெளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊருக்குள் சென்றாள். தலைமுடியை பிடித்தவாறு தலையுடன் வருவதைப் பார்த்த ஊர் மக்கள் திகைத்துப்போய் நின்றார்கள். அவர்களை பொருட்படுத்தாமல் அவள் ஊர் மத்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றாள்.

தலையுடன் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது பொது மக்கள் அவளை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மத்திய அரசிடம் இருந்து தப்பித்தது இணையத்தளங்கள் ..!

 


இணையதள தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இணையதள தகவல்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்ற கருத்து மீதான விவாதங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அரசு இந்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சமயங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் தகவல்களை வெளியிட்டதாக கூறி கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் மீது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்திருந்த்து. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விரும்பத்தகாத தகவல்களைத் தரும் இணையதள நிறுவனங்கள் சீனாவை போல இங்கும் தடைசெய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

தணிக்கை கிடையாது

இந்த நிலையில் இணைய தளத்தில் வெளியாகும் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரசேகர் கூறியுள்ளார். ஒவ்வொரு நிறுவனமும் அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கினாலே போதுமானது. எனினும், சட்டதிட்டங்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்த சில நடைமுறைகளை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


விஜய்யை அடித்ததால் ரசிகர்கள் கோபமா? -ஸ்ரீகாந்த்


நண்பன்  படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா இணைந்து நடித்துள்ளனர். கிளைமாக்சில் விஜய்யை ஸ்ரீகாந்தும் ஜீவாவும் அடிப்பது போல் காட்சி உள்ளது. இதற்காக இருவர் மீதும் விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:-

விஜய்யை நானும், ஜீவாவும் அடிப்பது கதைக்கு தேவைப்பட்டது. முதலில் அடிக்க தயங்கினேன். ரசிகர்கள் ஏற்பார்களா என்று சந்தேகம் கிளப்பினேன். விஜய் அந்த காட்சிக்கு வரவேற்பு இருக்கும் என்று சொல்லி எங்கள் தயக்கத்தை போக்கி நடிக்க வைத்தார்.

படம் ரிலீசான பிறகு விஜய் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை. ஆத்திரப்படவும் இல்லை. மாறாக போன் செய்து பாராட்டினார்கள். படப்பிடிப்பில் மூவரும் ஜாலியாக இருந்தோம்.

விஜய் வேட்டைக்காரனாகவும் ஜீவா சேட்டைக்காரனாகவும் இருந்தனர். ஜீவாவுக்குள் வடிவேலுவும் சந்தானமும் இருக்கின்றனர். அந்த அளவு தமாஷ் பண்ணுவார். இரு நூறு பேர் மத்தியில் பேன்ட்டை கழற்றி நடிக்க நேர்ந்த போது கஷ்டமாக இருந்தது. மூன்று ஹீரோக்கள் படமாக இருந்தாலும் எல்லோருக்கும் சம வாய்ப்பு இருந்தது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் சீன்களும் அமைந்தன.

சிறந்த நடிப்பை வெளிப்படுத்த நல்ல இயக்குனர் அமைய வேண்டும். நண்பன் படத்தில் ஷங்கர் கிடைத்தார். ஷங்கர் சிறந்த நடிகர். ஒவ்வொரு கேரக்டரையும் நன்றாக செதுக்கினார். அவர் சொல்லி கொடுத்தபடி நடித்தேன்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.


ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா'...!! - மறுபடியும் ஆரம்பித்தார் 'டாக்டர்' விஜய்!


கொஞ்ச நாட்களாக கேட்காமலிருந்து 'ரஜினி படத்துக்கு ஈக்குவலா...' என்ற சுயபுராணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது விஜய் தரப்பு.

எல்லாம், நண்பன் படம் நன்றாகப் போகிறது என்று வரும் செய்திகள் மற்றும் பேச்சுக்களின் விளைவு!

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இதுதான் நல்லாருக்கு என்று பலரும் நண்பன் படத்தைப் பாராட்டி வருகின்றனர். காரணம், நிச்சயமாக விஜய் இல்லை!

இது ஷங்கர் என்ற திறமையான இயக்குநரின் கைவண்ணத்துக்கு கிடைத்த பெருமை. அதுமட்டுமல்ல, இந்தக் கதை அப்படி. இதே படத்தை ஒஸ்தி மாதிரி கூட பண்ணியிருக்க முடியும். ஆனால் இயக்குநரின் ஆளுமை மிக்க இயக்கமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது. விஜய் மட்டுமல்லாமல், சத்யராஜ், சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் என பெரும் நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்தில் பணியாற்றியிருந்தது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த, விஜய் மற்றும் அவரது குழுவினர், நண்பன் படம் ஒரே வாரத்தில் ரஜினியின் எந்திரனை மிஞ்சிவிட்டதாக தங்களுக்கு ரிப்போர்ட்ஸ் வந்துள்ளதாகவும், அதனை ஆதாரப்பூர்வமாக காட்ட முடியும் என்றும் கூறினர் (பத்திரிகையில் செய்தியாக வெளியிடலாமே!).

குறிப்பாக விஜய் பேசுகையில், 'இந்தப் படம் ரஜினியின் எந்திரன் பட வசூலுக்கு ஈக்குவலா வந்துள்ளதாகவும், சில இடங்களில் அதை மிஞ்சியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மண்டைக்குள் ஏற்றிக் கொள்வதா வேண்டாமா என்று கூடத் தெரியவில்லை,' என்றார், ரொம்ப அடக்கமான பிள்ளை போல!

எந்திரன் படம் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. நண்பன் படம் 600 அரங்குகளில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் எந்திரனுக்கு 3000 அரங்குகளில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரையரங்க வெளியீட்டின் மூலம் மட்டுமே எந்திரனுக்கு ரூ 375 கோடி கிடைத்தது. ஆனால் நண்பன் தமிழில் மட்டுமே வெளியாகியுள்ளது.

முதல் மூன்று நாட்களில் எந்திரன் வசூலித்தது ரூ 62 கோடி. முதல் வாரத்தில் அது 117 கோடியாக உயர்ந்தது. முதல் வார முடிவில் நண்பன் வசூலித்ததாகக் கூறப்படுவது ரூ 20 கோடி மட்டும்தான். இந்தப் படம் தினசரி வசூலாக முதல் மூன்று நாட்கள் ரூ 4 கோடி வசூலித்தாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன.

ச்சும்மா லுலுலாயி...

சில தினங்களுக்கு முன், பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய்யின் தந்தையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான எஸ் ஏ சந்திரசேகரன், "நாங்கள் அவ்வப்போது மாபெரும் வசூல், இந்தப் படத்தின் சாதனை முறியடிப்பு என்றெல்லாம் விளம்பரங்கள் தருவோம், பேட்டி கொடுப்போம். அதையெல்லாம் நம்பாதீர்கள். படம் ஓடவேண்டுமே என்பதற்காக நாங்களாகவே செய்யும் தவறான வேலை இது. இதை நம்பி அரசு எங்களை வரி கேட்கிறது," என்றார்.

நண்பன் வசூல் பற்றி 'டாக்டர்' விஜய் சொல்வதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது!!