Thursday, 29 December 2011

தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



தானே புயல் கரையை கடக்கும் போது பலவீனம் ஆவதற்கான அறிகுறிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் புயல் தாக்கும் போது பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கடல் கொந்தளிப்பு அதிகமாகும் என்பதால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழுந்து சீறி வரும் என்பதால் மீன்பிடி படகுகளை பாதுகாத்துக் கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூறை காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் பட்சத்தில் எங்கும் வெள்ளக்காடாகி விடும். தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையை மிரட்டி வரும் தானே புயல் காரணமாக விழுப்புரம்கடலூர்நாகைதஞ்சைஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

அதே போல் புதுச்சேரிகாரைக்கால் பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
 

ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிகர்கள்!



ரஜினியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்.

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் இருந்தவர்களுக்கு இலவசமாக தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்து ஆதரவு தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். இது அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேள்வி எழுப்பினர் நிருபர்கள். அவரிடம், 'அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே... ரஜினியை ஆதரிக்கும் நீங்கள் இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

அதற்கு நேரடியாக பதிலளிக்காத ஈவிகேஎஸ் இளங்கோவன்மறைமுகமாக தாக்கும் விதத்தில், "கறுப்புப் பணத்தில் கட்டிய மண்டபத்தில்தான் (ராகவேந்திரா மண்டபம்) ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் நடக்கிறது. அப்படியும்கூட 10 பேர்தான் அங்கே வந்திருக்கிறார்கள். மண்டபத்தைக் கொடுத்தவருக்கு இது புரிந்தால் சரி"என்று கிண்டலடித்திருந்தார்.

இளங்கோவனின் இந்த பதிலைக் கண்டித்து வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்ட மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இறுதியில்அவரது உருவர் படங்களை எரித்தனர் ரசிகர்கள்.

தலைவர் நல்ல விஷயம் என நம்பி இந்த மண்டபத்தைக் கொடுத்தார். அவருக்கு வேறு உள்நோக்கமில்லை. ஊழல் ஒழிய வேண்டும் என்பது மட்டும்தான் தலைவர் ரஜினியின் இலக்கு. ஹஸாரே என்றல்லயார் இந்த நல்ல காரியத்தில் இறங்கினாலும் அவர் ஆதரவு கிடைக்கும். அந்த கண்ணோட்டத்தில் பார்க்காமல்ரஜினி அவர்கள் கஷ்டப்பட்டு நேர்மையாக சம்பாதித்து கட்டிய ஒரு மண்டபத்தைப் பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் கேவலமாகப் பேசியதை ரசிகர்களான எங்களால் பொறுக்க முடியவில்லை.

இந்தியத் திரையுலகிலேயே நேர்மையாக அரசுக்கு வரி செலுத்துபவர்களில் முதலில் இருப்பவர் எங்கள் தலைவர் என்பதை இளங்கோவன் போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்,” என்றார்இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சோளிங்கர் என் ரவி.

இப்படி தான் நடக்க போகிறது...இதற்காக தான் இளங்கோவன் அப்படி பேசினார் என்பதை எமது நேற்றைய பதிவில் சொல்லி இருந்தோம்.

தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?

 


வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் கடந்த 25-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. மறுநாள் (26-ந்தேதி) அது வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது. அப்போது அது சென்னையில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் அந்த காற்றழுத்தம் மிகத் தீவிரமாக வலுவடைந்து புயலாக மாறியது.

இதையடுத்து அந்த புயலுக்கு "தானே'' என்று இந்திய வானிலை ஆய்வுக் கழகம் பெயர் சூட்டியது. இந்த பருவ மழை சீசனில் உருவான இரண்டாவது புயல் இதுவாகும். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த தானே புயல் நேற்று மதியம் 500 கி.மீ. தொலைவுக்கு நெருங்கி வந்தது.

அந்த புயல் நகரும் திசையை கணித்த வானிலை ஆய்வாளர்கள், அது தமிழ்நாட்டின் கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என்று அறிவித்தனர். சென்னையை குறி வைத்து தானே புயல் நகர்ந்து வந்ததால், தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்தது.

வழக்கமாக வங்கக்கடலில் உருவாகும் புயல் முதலில் மேற்கு நோக்கி தமிழ்நாட்டை குறிவைத்தே வரும். பிறகு பெரும்பாலும் ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தை துவம்சம் செய்து விடும். தானே புயலின் நகர்தலும் அப்படித்தான் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் தானே புயலின் நகரும் திசையில் நேற்று இரவு முதல் மாற்றம் ஏற்பட்டது. 400 கி.மீ. தொலைவில் அது வந்த போது ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணி நிலவரப்படி தானே புயல் சென்னையில் இருந்து தென்கிழக்கில் சுமார் 300 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தற்போது அந்த புயல் முழுக்க - முழுக்க தமிழகத்தை நோக்கி திரும்பி உள்ளது. அந்த புயல் மெல்ல, மெல்ல நகர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை தமிழ்நாட்டை தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று காலை 7.30 மணிக்கு வானிலை மையம் அறிவித்துள்ள சிறப்பு தகவல் வருமாறு:-

தானே புயல் தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. அது இன்றிரவுக்குள் தமிழக கடற்கரையை மிகவும் நெருங்கி வந்து விடும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை தானே புயல் சென்னைக்கும் - நாகப்பட்டினத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும். அப்போது 105 கி.மீ. வேகத்தில் மிக, மிக பயங்கரமான சூறாவளிக் காற்று வீசும்.

தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த, மிக பலத்த மழை பெய்யும், குளிர்காற்று தாங்க முடியாதபடி இருக்கும். கடலில் சீற்றமும், கொந்தளிப்பும் காணப்படும். எனவே கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மீனவர்கள் கடலோரத்தில் மீன் பிடிப்பதை கூட தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தானே புயல் கரையை கடக்கும் போது பலவீனம் ஆவதற்கான அறிகுறிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் புயல் தாக்கும் போது பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கடல் கொந்தளிப்பு அதிகமாகும் என்பதால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழுந்து சீறி வரும் என்பதால் மீன்பிடி படகுகளை பாதுகாத்துக் கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூறை காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் பட்சத்தில் எங்கும் வெள்ளக்காடாகி விடும். தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தானே புயல் தமிழக கடற்கரையை நெருங்க, நெருங்க சூறைக்காற்று வேகம் அதிகரிக்கும். இன்றிரவு சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். கூரை வீடுகள், மின் கம்பங்கள், மரங்கள், பாதிக்கப்படலாம். இதை கருத்தில் கொண்டு மக்கள் இன்றிரவு மிக, மிக உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 120 கி.மீ. வரை கூட இருக்கலாம். மழை 200 மி.மீ. அளவு வரை பெய்யலாம் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.       

காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!


காதலனுடன் புத்தாண்டு கொண்டாட  கோலிவுட் ஹீரோயின்கள் திட்டமிட்டுள்ளனர். 2012ம் ஆண்டின் முதல் நாளை ஜாலியாக கொண்டாட கோலிவுட் நட்சத்திரங்கள் வெவ்வேறு திட்டங்கள் போட்டுள்ளனர். நடிகை த்ரிஷா தோழிகளுடன் சிட்னி பறக்கிறார். அவரது காதலரும் தனியே சென்று, பிறகு சிட்னியில் புத்தாண்டு அன்று த்ரிஷாவுடன் பார்ட்டியில் பங்கேற்க உள்ளாராம். ரீமா சென் தனது காதலன் சிவ்கிரண் சிங்குடன் கோவாவில் முகாமிடுகிறார்.

காதலனுடன் ஜாலியாக புத்தாண்டு கொண்டாடுகிறார். நடிகை லட்சுமிராய் லண்டனில் நடக்கும் கலைவிழாவில் கலந்துகொள்கிறார். அங்கேயே தனது ரகசிய காதலனுடன் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளாராம். ஜெனிலியா, தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மும்பையில் பார்ட்டி வைத்து பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க முடிவு செய்துள்ளார். இந்த காதல் ஜோடிகளுக்கு இடையே சில கோலிவுட் நட்சத்திரங்கள் தனியாகவும் சிலர் தங்கள் மனைவியுடனும் புத்தாண்டு கொண்டாட பிளான் போட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஷூட்டிங்கிற்கு செல்லும் சிம்பு, அங்கேயே புத்தாண்டை கழிக்க உள்ளார். இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் இரண்டாம் உலகம்Õ பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் வரும் 31ம் தேதி அவரது மனைவி கீதாஞ்சலி ஐதராபாத் செல்கிறார். மும்பையில் நடக்கும் துப்பாக்கிÕ பட ஷூட்டிங்கில் நடித்து வரும் விஜய் புத்தாண்டையொட்டி சென்னை திரும்புகிறார்.

மனைவி சங்கீதா, குழந்தைகளுடன் வீட்டிலேயே புத்தாண்டு கொண்டாடுகிறார். அஜீத், தனது மனைவி ஷாலினி, குழந்தையுடன் ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்கு பறந்துவிட்டார். குஷ்பு தனது கணவர் சுந்தர்.சி., குழந்தைகளுடன் கோலாலம்பூர் செல்கிறார். ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகா, தங்கை அக்ஷராவுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடுகிறார். அதே போல் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் கோவா செல்கிறார்.

என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!!

 



என்னை வயதானவள் என்று சொல்லாதீர்கள்; என்னை விட வயதானவர்கள் எல்லாம் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். த்ரிஷா தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். அங்கு ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடிக்க கூடுதலாக ரூ.25 லட்சம் சம்பளம் கேட்டதாக வதந்தி பரவி உள்ளது. த்ரிஷாவுக்கு வயதாகி விட்டது. இளம் நடிகர்கள் அவரை ஒதுக்குகிறார்கள் என்றும் செய்தி பரவி உள்ளது.

இவற்றுக்கு பதில் அளித்து த்ரிஷா ஐதராபாத்தில் அளித்துள்ள பேட்டியில், எனக்கு வயதாகி விட்டது என்கின்றனர். 29 வயதுதான் ஆகிறது. இதெல்லாம் பெரிய வயதா? ஐஸ்வர்யாராய் நாற்பது வயதில் கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீதேவி வயதான பிறகும் திறமையாக நடிக்கிறார். இவர்களுடன் என்னை ஒப்பிடுவது சரியல்ல என்றாலும், எனது நடிப்புக்கு வயது பிரச்னை அல்ல. தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் நடித்த வர்ஷம் படத்தில் எப்படி இருந்தேனோ அதே மாதிரி தோற்றத்தில் தற்போது வெங்கடேஷ் ஜோடியாக பாடிகார்ட் படத்தில் நடித்து வருகிறேன். இளம் நாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளேன்.

ஒரு படத்தில் பிகினி உடையில் நடிக்க என்னை கேட்டதாகவும் அதற்கு சம்பளத்துக்கு மேல் கூடுதலாக ரூ.25 லட்சம் கேட்டதாகவும் வதந்திகள் பரவி உள்ளன. அப்படி யாரிடமும் கேட்கவில்லை. பிகினி உடையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மலையாளம், தமிழ் மொழிகளில் பாடிகார்ட் படம் வந்துள்ளது. அவற்றில் அசின், நயன்தாரா நடிப்பை பார்த்து அவர்கள் பாணியில் தெலுங்கு பாடிகார்ட் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்வதில் உண்மை இல்லை. நான் யாருடைய பாணியையும் பின்பற்ற மாட்டேன். ரீமேக் படங்களாக இருந்தாலும் எனக்கென்று தனி பாணி அமைத்து நடிக்கிறேன். இந்திப்படங்களில் நடிக்க எனக்கு ஆர்வம் கிடையாது. தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறேன். எனக்கு பிடித்தது சென்னைதான். இதை விட்டு இந்திக்கு போக விருப்பம் இல்லை, என்று கூறியுள்ளார்.

96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீடியோ)

பாடல்நடனம்நடிப்புஇயக்கம் என திரைத்துறையில் பல தளங்களில் இயக்கும் சிம்புஅடுத்தது உலக அமைதிக்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அன்புக்கான பாடலாகஉலகத்தின் Love Anthemஆக அது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அப்பாடலின் முன்னோட்டம் சில நொடிகள் வெளியான போதே சிம்பு ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.  பல்வேறு தரப்பு ரசிகர்களும் சிம்புவின் ஃபேஸ்புக் இணையத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

" 96 மொழிகளையும் பல கோடி மக்களையும் இணைக்கதடைகளை உடைத்துஅனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு " என்று சிம்பு சொல்லி இருந்தார்.  சிம்பு எழுதி பாடிய பாடலின் வீடியோ பதிவை நேற்று காலை சோனி நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

96 மொழிகளில் காதல்என்று பொருள்படும் வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறாராம் சிம்பு.

இளைஞர்கள் மத்தியில் தற்போது அந்த பாடல் பிரபலமாகி வருகிறது. DASHURI என்று துவங்குகிறது அந்த பாடல். அப்பாடல் இடையில் வரும் ALL WE NEED IS.... PYAAR PREMA KADHAL... என்ற வரிகளை தான்  இளைஞர்கள் முணுமுணுக்க துவங்கி இருக்கிறார்கள்.

அப்பாடலின் வீடியோ பதிவு இதோ:




"ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் காட்டும் நன்றிக்கடன்!



"ஏழாம்அறிவு" படத்தின் கதையையும் போதிதருமரையும் தங்கர்பச்சானின் உதவியாளர் கோபியிடமிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் திருட உதவியாக இருந்த ஜெகனுடன் சைலன்டாக இருந்த தன் உதவியாளர் சரவணனுக்கு தனது பாக்ஸ்டார் ஸ்டூடியோஸ் படநிறுவனத்தில் முதன் முதலாக "எங்கேயும் எப்போதும்" பட வாய்ப்பு கொடுத்து செமதுட்டு கல்லா கட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்பொழுது, அடுத்தப்பட வாய்ப்புக்காக காத்திருக்கும் சரவணனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க இருக்கிறாராம் முருகதாஸ்!

நன்றிக்கடன்?!

பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்...!


வி பி புரொடக்சன்ஸ் சார்பாக விஸ்வாஸ் யு லாட் & புருஷோத்தம் தயாரிக்கும் படம் 'பாகன்'.  இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் 'அவன் இவன்' ஜனனி ஐயர் நடித்து வருகின்றனர். முகமத் அஸ்லாம் இயக்குகிறார்.

அதிரிபுதிரி காமெடி தான் படத்தின் ஹைலைட்டாம்.  'காஞ்சனா'வில் பட்டையை கிளப்பிய கோவை சரளா ஸ்ரீகாந்துக்கு அம்மாவாகவும், 'வெண்ணிலா கபடிக்குழு' சூரியும், 'அங்காடித்தெரு' பாண்டியும் நண்பர்களாக நடித்துள்ளனர். 

சூரிக்கும் பாண்டிக்கும் இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல்.  இருவரும் 'பாகன்' படத்தில் ஒரு குத்துப் பாடலை பாடியுள்ளனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் 

"அவ ஏஞ்சலினா
அவ லவ்வரு நா
ஆக்சுவலா பம்பருதான்

நா மன்னருதான்
வின்னருதான்
சூப்பரான கூட்டணிதான்
கன்னி ராசி வந்த வேளைதான்
சம்பா சம்பா ராஜசிம்பா"

என்ற பாடலை பாடி, பாடகர்களாகியிருக்கின்றனர் சூரியும், பாண்டியும். 

படத்தில் ஸ்ரீகாந்த் காதலை ஜனனி ஐயர் ஏற்றுக்கொள்ளும்போது இந்த பாடல் இடம்பெறுகிறது. கொடைக்கானலில் பிரம்மாண்டமாக  செட் போட்டு இப்பாடலை படமாக்கி வருகின்றனர்.

ஒபாமா வாயில் விரலைவிட்டு ஆட்டிய குழந்தை


கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்க அதிபர் ஒபாமா சிரித்தபோது 8 மாத குழந்தை ஒன்று அவர் வாயில் விரலைவிட்டு ஆட்டியது குழந்தையின் தாய்க்கு வெட்கமாகிவிட்டது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஹவாய் தீவில் நடந்த கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது அஙகு கூடியிருந்த பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதே போன்று கேப்டன் கிரெக் வாக்னர் என்பவர் தனது மனைவி மெரிடித் வாக்னர் மற்றும் 8 மாத குழந்தை கூப்பருடன் ஒபாமாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்து நின்றார்.

அனைவரும் கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது கூப்பர் தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒபாமாவின் வாயில் தனது விரலைவிட்டு ஆட்டினான். அதைப் பார்த்த கூப்பரின் தாய்க்கு அவமானமாகப் போய்விட்டது. உடனே தனது குழந்தையின் கையைப் பிடித்து இழுத்தார். ஆனால் ஒபாமா குழந்தையைப் பார்த்து புன்னகைத்தார்.

ஒரு வேளை அவன் என் பெரிய மூக்கைப் பார்த்து அதைப் பிடிக்க வந்திருப்பான் என்று அவர் தெரிவித்தார். இத்தனை நடந்தது தெரியாமல் குழந்தையின் தந்தை சின்சியராக போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் விஜய்!


துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.

பொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர் விஜய்.

'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.

இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.

மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.


நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!


இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு இரண்டே படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கு முன் நாளை மறுநாள் (டிசம்பர் 30-ம் தேதி) 13 படங்கள் வெளியாகின்றன.

இந்த 13 படங்களும் அரசு மான்யத்தை எதிர்பார்த்து, வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
அந்த 13 படங்கள்:

1. மதுவும் மைதிலியும்

2. பாவி

3. கருத்த கண்ணன் ரேக்ளா ரேஸ்

4. பதினெட்டான்குடி

5. வினாயகா

6. மகான் கணக்கு

7. வழிவிடு கண்ணே வழிவிடு

8. அபாயம்

9. வேட்டையாடு

10. மகாராஜா

இந்த பத்து படங்களும், நேரடி தமிழ் படங்கள்.

இவை தவிர, 'வேட்டை நாயகன்,' 'ஸ்பீட்-2,' 'புயல் வீரன்' ஆகிய மூன்று மொழி மாற்று படங்களும் 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகின்றன.

ஆனால், பொங்கலுக்கு இரண்டே இரண்டு படங்கள் மட்டும் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள்:

நண்பன்

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்துள்ள படம். இந்தியில் வெளியான '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் இது. பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இடம்பெற்றுள்ளது.

வேட்டை

ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால் ஆகியோர் நடித்த படம் இது. லிங்குசாமி இயக்கியுள்ளார். அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்துள்ளார்.

தமிழகத்தில் மிகப் பெரிய விடுமுறை சீஸன் பொங்கல்தான். கிட்டத்தட்ட ஒரு வார காலம் விடுமுறை. தினசரி 5 காட்சிகள் வரை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கு பற்றாக்குறை மற்றும் போட்டிகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக பொங்கலுக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

பொங்கலுக்கு வெளிவருவதாக சொல்லப்பட்ட தனுசின் நடிப்பில் அவரது மனைவியும் சுப்பர் ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா இயக்கத்தில் உலகநாயகன் கமலின் மகள் கதாநாயகியாக நடிக்கும் 'கொலைவெறி ...' பாடல் புகழ் ௩ படம் என்ன காரணத்தாலோ பொங்கல் தினத்தில் வெளிவருவதாக இல்லை. ஒரு வேளை விஜய் , சங்கர் கூட்டணியோடு மோதி விசபரிட்சையில் ஈடுப்பட விரும்பவில்லை போலும் ...!


கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டது ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்:ஈவிகேஎஸ் கிண்டல்


கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட ராகவேந்திரா மண்டபத்தில், ஊழலை ஒழிக்க ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருக்கிறார்கள், என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 127வது ஆண்டு தொடக்க விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்பட பல நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கோஷங்களை முழங்கினார்கள்.

பின்னர் நிருபர்களைச் சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவரிடம், 'அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே... ரஜினியை ஆதரிக்கும் நீங்கள் இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த இளங்கோவன், "ஹஸாரேவுடன் இயங்குபவர்கள் யார்... பெரும்பாலும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், ஒழுங்காக கணக்கு காட்டாதவர்கள்.

கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில்தான் (ராகவேந்திரா மண்டபம்) அவருக்கு ஆதரவாக போராட்டமே நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று பாருங்கள்... சென்னையில் 100 பேரைக் கூட திரட்ட முடியாத ஒரு போராட்டம். இன்று வேடிக்கை பார்க்க வந்தவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் 10 பேர்தான் தேறியிருப்பார்கள்.

மக்கள் தெளிவானவர்கள். அவர்களை எப்பேர்ப்பட்டவர்களாலும் ஏமாற்றவே முடியாது. மண்டபம் கொடுத்தவர்களுக்கும் இது புரிந்திருக்கும்.

ஹசாரேவை இந்த வருட தொடக்கத்தில் ஊடகங்கள் பெரிதாக உருவகப்படுத்தின. அவரது நிஜ உருவம் இப்போது தெரிந்து விட்டது.

ஹசாரே இப்போது காற்று போன பலூன் அவர் புஸ்வாணம் ஆகி விட்டார் என்பதுதான் புத்தாண்டின் இனிப்பான செய்தி. காங்கிரஸ் 50 ஆண்டுகள் விடுதலைக்காக போராடிய மாபெரும் மக்கள் இயக்கம். 60 ஆண்டுகளுக்கு மேல் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் கட்சி இது. ஏழை மக்களின் பாதுகாவலன் காங்கிரஸ் மட்டுமே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கடைசி நம்பிக்கை காங்கிரஸ்தான். இதை திரித்துக் கூறி பொய்யைப் பரப்பிய பிஜேபி, ஆர்எஸ்எஸ், அவர்களின் முகமூடி ஹஸாரேயின் சாயம் இன்று ஒரே நாளில் வெளுத்துவிட்டது," என்றார்.

இவரது இந்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் இருந்து வேகமாக மறைந்து (அழிந்து) கொண்டிருக்கும் காங்கிரஷை மக்கள் மனதில் நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்று மக்களுக்கு காட்டுவதற்கான முயற்சியாகவே எண்ண தோன்றுகிறது...

இப்படி சும்மா இருக்கும் ரஜினியை வம்புக்கு இழுத்தால் அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாவதன் மூலம் சிறிது நாட்கள் தமிழக மக்கள் மத்தியில் பரப்பரப்பாக பேசப்படலாம் என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கார்

சூர்யாவிடம் 3-ஆம் இடத்தை படிகொடுத்த விஜய்


சென்னை ஃபாக்ஸ் ஆபீஸின் வசூல் சக்கரவர்த்திகள் என்றால் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்ற நிலைதான் இருந்து வந்தது. ஆனால் இந்த நிலையை 7-ஆம் அறிவு புரட்டிப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள் சென்னை ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்! கடந்த ஐந்தாண்டுகளில்  சென்னையில் தசாவதாரம், எந்திரன் ஆகிய  இரண்டு படங்கள் மட்டுமே ஒன்பது கோடியை‌த் தாண்டி வசூல் செய்திருந்த நிலையை மாற்றிக்காட்டி விட்டதாம் 7-ஆம் அறிவு. முதல் நான்கு வார முடிவில் சென்னையில் மட்டும் 10.5 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இதன்மூலம் சென்னையில் ரஜினி, கமல், விஜய் என்றிருந்த ராஜாங்கம், தற்போது ரஜினி, கமல், சூர்யா என்று மாறி, விஜய் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

சரி, மங்காத்தா சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சே என்றால், முதல் நான்கு வார முடிவில் மங்காத்தா சென்னையில் வசூல் செய்தது வெறும் 3.8 கோடி மட்டும்தானாம். ஆனால், அஜீத் பட ரெக்கார்டுகளில் இதுதான் அதிகம் என்கிறார்கள். அதுவே விஜயின் வேலாயுதம் முதல் நான்கு வார முடிவில் சென்னையில் 4.1 கோடியை மட்டுமே ஈட்டியதாக சொல்கிறார்கள். மொத்தத்தில் சூர்யா தற்போது நடித்துவரும் மாற்றான் படத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட உரிமையை இப்போதே 7 கோடிக்கு துணிச்சலாக விலை பேசி வருகிறார்களாம்!