Wednesday, 17 August 2011

பொம்பளையா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் ..






தெருவுக்கு வந்த சில இந்திய சண்டைகள்- வீடியோ






ஆன்லைன் விளையாட்டுக்காக கற்பை விற்ற 9வயது சிறுமி!(வீடியோ இணைப்பு)

உலகில் நாளுக்கு நாள் புதுமையான பல சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. பெண்கள் தமது உயிரையும் மேலாக கருதிவந்த கற்பு இன்று என்ன விலை என்று கேட்கும் அளவு காலம் மாறிப்போய்விட்டதை யாவரும் அறிந்த விடயம். இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஏராளமான பெண்கள் தமது சொந்த தேவைகளுக்காக கற்பை ஏலம் விடுகின்ற சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. இந்த வரிசையில் தாய்வானில் இடம் பெற்றுள்ளது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கும் செய்தியொன்று.


தாய்வான் நாட்டின் தய்பெய் நகரத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஆன்லைனில் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் ஒரு விளையாட்டுக்காக கடன் மூலம் 35 டாலர்கள் செலுத்த வேண்டி ஏற்பட்டது. விளையாட்டு மீதுள்ள மோகத்தினால் குறித்த சிறுமி தனது கற்பை ஏலம் விட தீர்மானித்தாள். இதற்காக தான் ஒன்பது வயது சிறுமி எனவும் தனக்கு கடன் அட்டை தருபவர்கள் யாரும் என்னை அனுபவிக்கலாம் எனவும் ஆன்லைனில் பகிரங்கமாக விளம்பரப்படுத்தினாள். இந்த அறிவிப்பை கேட்டு 20 இளைஞர்களின் விண்ணப்பங்கள் வந்து குவிந்தது. அதில் 16 வயது இளைஞன் ஒருவனை குறித்த சிறுமி தனது வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள்.

வீட்டுக்கு வந்த இளைஞன் சிறுமியிடம் 35 டாலர் பெறுமதியான கடன் அட்டையை வழங்கிவிட்டு சிறுமியின் இரட்டை சகோதிரிகள் முன்னிலையில் வாய் மூல உறவு வைத்துவிட்டு கிளம்பிவிட்டான். வீட்டுக்கு வந்த இவளது தயார் சிறுமியிடம் முத்தம் இட்டதைப்போன்று ஒரு அட்டை காணப்படவே இது குறித்து விசாரித்துள்ளார். பின்னர் சிறுமி நடந்த உண்மைகளை தன் தாயிடம் கூறவே பொலீசாருக்கு அழைப்பு விடுத்த தயார் தனது சிறுமி உட்பட குறித்த இளைஞனையும் பொலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஏமாற்றம் சிரிப்பு வீடியோக்கள் நீங்களும் பார்த்து வயிறுகுலுங்க சிரிங்க

ஏமாற்றம் சிரிப்பு வீடியோக்கள் நீங்களும் பார்த்து வயிறுகுலுங்க சிரிங்க

பிரமாண்ட அணை கட்டும் சீனா- இந்தியா கவலை

 திபெத்தில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே சுமார் ரூ. 9,000 கோடியில் பிரமாண்ட அணையை கட்டப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

திபெத்தில் உருவாகும் இந்த நதியின் குறுக்கே கட்டப்படும் அணையில் மின்சார தயாரிப்புக்காக மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளது சீனா.

திபெத்தின் குடிநீர், மின்சாரம், பாசனத் தேவைகளுக்காக இந்த அணையைக் கட்டப் போவதாக சீனா அறிவித்துள்ளது. இதன்மூலம் திபெத்தின் 16.2 லட்சம் விவசாயிகளும் பொது மக்களும் பயனடைவர் என்று கூறியுள்ளது.

சீனாவின் இந்த அணைத் திட்டத்தை இந்தியா கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளது. பிரம்மபுத்திரா நதி அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாய்கிறது. இந்த மாநிலங்களின் பெரும்பாலான குடிநீர், பாசனத் தேவைகளை இந்த நதி தான் பூர்த்தி செய்து வருகிறது.

இந் நிலையில் அருணாசலப் பிரதேசத்தையே ஒட்டு மொத்தமாக சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்தியாவிடம் ஆலோசனை ஏதும் நடத்தாமல் பிரம்மபுத்திராவின் குறுக்கே அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளது கவலை தரும் விஷயமாகும்.

திபெத்தில் உருவாகி இந்தியா, வங்கதேசம் வழியே பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கும் இந்த நதியின் நீளம் 2,900 கி.மீ. ஆகும். பிரம்மபுத்திரா என்பதற்கு, பிரம்மனின் மகன் என்று அர்த்தம்.


5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முன்ற ஆட்டோ டிரைவருக்கு அடி

 தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, ஐந்து வயது சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முன்ற ஆட்டோ டிரைவருக்கு அடிஉதை விழுந்தது.

கொடைக்கானலைச் சேர்ந்த மணி (28). திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். மணி வீட்டுக்கு அருகில் வீதியில் 5 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அந்த சிறுமியை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மணி, பாலியல் தொல்லை செய்துள்ளார். இதையடுத்து வெளியே வந்த சிறுமி, அழுது கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், விசாரித்த போது நடந்த உண்மையை அந்த சிறுமி கூறியுள்ளாள்.

இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள், மணியை அடித்து உதைத்தனர். அத்துடன் போலீசாரிடம் மணியை ஒப்படைத்தனர்.

படுகாயம் அடைந்த மணியை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர்


15 பெண்களை கற்பழிப்பு: தொண்டு நிறுவன ஊழியர் மீது பெண் புகார்

 

 கல்லூரி மாணவிகள் உள்பட 15 பெண்களை கற்பழித்து படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என மிரட்டுவதாக தொண்டு நிறுவன அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகி மீது ஒரு பெண் புகார் தெரிவித்துள்ளார்.

வேலூர் அணைக்கட்டு பகுதி அருகே உள்ள ஊனை வாணியம்பாடியை சேர்ந்த செண்பகவள்ளி (30) என்ற பெண் இன்று டி.ஐ.ஜியை சந்தித்து புகார் கொடுக்க வந்தார்.

டிஐஜி அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், நான் பி.காம் படித்துள்ளேன். எங்கள் ஊரில் சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளேன். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு தொண்டு நிறுவனத்தின் வேலூர் கிளை நிர்வாகி என்னை சந்தித்து அவருடைய தொண்டு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், பின்னர் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார்.

இதையடுத்து அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஒருநாள் வேலை விஷயமாக என்று கூறி சென்னைக்கு காரில் அழைத்துச் சென்று அண்ணாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்தார். அப்போது குடிப்பதற்காக குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்ததும் நான் சுய நினைவை இழந்தேன்.

சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது நான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்து கதறி அழுதேன். இதையடுத்து என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்தார்.

இந் நிலையில் தொண்டு நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு என்னுடைய தோழிகளையும் அழைத்து வரச் சொன்னார். இதையடுத்து 2 கல்லூரி மாணவிகள் உள்பட 15 பெண்களை தொண்டு நிறுவன அலுவலருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

அந்தப் பெண்களை அந்த தொண்டு நிறுவன அலுவலரும், அவரது நண்பரான ஒரு பள்ளி நிர்வாகியும் சேர்ந்து அந்த பலமுறை பாலியல் பலத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அதை கேமராவில் பதிவு செய்து வைத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாகவும் மிரட்டி வருகின்றனர்.

இவர்களது செயல்களை அறிந்த நான் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுவிட்டேன். என்னையும் அப்பாவிப் பெண்களையும் பலிகடா ஆக்கிய அவர்களை தண்டிக்க வேண்டும்.

இதற்காக கடந்த 2ம் தேதியே டி.ஐ.ஜி.யிடம் புகார் கொடுக்க வர இருந்தேன். ஆனால், இதை அறிந்த அந்த நிறுவன அலுவலர் 4 பேரை அனுப்பி என்னை மிரட்டினார். முகத்தில் ஆசிட் வீசி, கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர். இதனால் அன்று என்னால் புகார் தர முடியவில்லை.

இனியும் பொறுக்கக் கூடாது என்று இன்று புகார் கொடுக்க வந்துள்ளேன் என்றார் செண்பகவள்ளி

கல்லூரி மாணவியை கடத்திய இன்ஸ்பெக்டருக்கு 4வது முறையும் ஜாமீன் மறுப்பு:

கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரும், அவரது காதலனும் ராமநாதபுரம் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த தீண்டாமை பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், தன்னை டிஎஸ்பி என்று கூறிக் கொண்டு, தனியாக ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அந்தப் பெண் நீண்ட நேரமாக திரும்பி வராததால் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து திருச்சி எல்லையில் உள்ள அனைத்து செக்போஸ்ட் மற்றும் காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் கண்ணன், தனது காரில் மாணவியை புதுக்கோட்டைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை இறக்கி விட்டுள்ளார்.

இந்தக் கடத்தல் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கண்ணன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு இன்ஸ்பெக்டர் கண்ணன் மூன்று முறை மனு செய்தும் அதை திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந் நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 4வது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் கண்ணன். ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி மாலா, அதைத் தள்ளுபடி செய்துவிட்டார்


ஸ்ருதிஹாசனுக்கு கேன்சர்


ஏழாம் அறிவு படம்தான் தமிழ்சினிமாவின் அடுத்த ஜாக்பாட்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. மற்றவர்களை விடவும் இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன்தான். அவர் இதுவரை நடித்த எந்த படமும் வெற்றி பெற்றதில்லை. இத்தனைக்கும் கதைகளை உன்னிப்பாக கேட்டுதான் ஒப்புக் கொள்கிறார். அப்படியிருந்தும் தரையிலிருந்து வேலிக்கு தாவவே இல்லை வெற்றி எனும் ஓணான்.

படத்தின் நீளம் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாக இருப்பதாக ஃபீல் பண்ணிய ஏ.ஆர்.முருகதாஸ் எங்கே கத்திரியை நுழைப்பது என்பதில் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் தகவல். இந்த நேரத்தில்தான் ஸ்ருதிக்கு படத்தில் எந்த மாதிரி கேரக்டர் என்பது குறித்து தகவல் கசிய ஆரம்பித்திருக்கிறது.

இதில் கேன்சர் பேஷன்ட்டாக நடிக்கிறாராம் அவர். தமிழ்சினிமா விதிப்படி கேன்சர் பேஷன்ட்டாக இருந்தால் ரீலுக்கு 100 லொக்குகள் வீதம் இருமிக்கொண்டே இருப்பார் ஹீரோ. அல்லது ரசிகர்களின் முகத்தில் தெறிக்கிற அளவுக்கு ரத்த வாந்தி எடுப்பார். இதையெல்லாம் தவிர்த்து புதுசாக ஏதாவது யோசித்திருப்பார் முருகதாஸ் என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாக நம்பலாம்.

தெய்வத் திருமகள் பார்த்து விக்ரமை காதலிக்க துவங்கிவிட்டேன்! - ஸ்ரேயா

நான் ஜோடியாக நடித்த இரண்டு ஹீரோக்கள் விக்ரம் மற்றும் விஷாலின் படங்கள் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் நடிகை ஸ்ரேயா.

சிவாஜியில் ரஜினியுடன் நடித்த பிறகு, மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஒரு ரவுண்ட் நடித்து முடித்துவிட்டார் ஸ்ரேயா. அவர்களில் விக்ரம் மற்றும் விஷாலும் உண்டு.

விகரமுடன் கந்தசாமியில் நடித்தார். விஷாலுடன் தோரணையில் ஜோடி சேர்ந்தார்.

இப்போது ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரேயா, தமிழில் சமீபத்தில் அவர் பார்த்த படங்கள் குறித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், "சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனேன். பிரமாதமாக நடித்திருந்தார். கந்தசாமி படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் தெய்வத் திருமகள் அவரை இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்விட்டது.

அதில் அவரது கிருஷ்ணா கேரக்டர் அற்புதமாக இருந்தது. அவரை நான் காதலிக்கத் துவங்கி விட்டேன்.

நான் பிரமித்த இன்னொரு ஹீரோ விஷால். அவர் நடித்த அவன் இவன் படம் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். அந்த அளவு அற்புதமாக நடித்திருந்தார்.

என்னுடைய இன்னொரு ஹீரோ ஜீவா நடித்த கோ படமும் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. ஜீவா அசத்தலாக நடித்திருந்தார்", என்றார்.


படம் சூப்பர்.. பிடிங்க 50 சவரன் ! : விஜய்


விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்திற்காக இன்று விஜய் - ஜெனிலியா நடனமாடும் பாடல் ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.

இதுவரை எடுத்துள்ள படத்தை விஜய்க்காக பிரத்யேக காட்சி ஒன்றை திரையிட்டு காட்டி இருக்கிறார்கள். படத்தை முழுவதுமாக பார்த்த விஜய், இயக்குனர் ராஜாவை கட்டிப்பிடித்து தனது பாராட்டை தெரிவித்து இருக்கிறார்.

தான் நடித்த 'கில்லி' படத்தை விட இப்படம் அருமையாக வந்துள்ளதாகவும், 'கில்லி' படத்தை விட 'வேலாயுதம்' தனது திரையுலக வாழ்வில் ஒரு மகுடமாக அமையும் என்று இயக்குனர் ராஜாவை புகழ்ந்து இருக்கிறார்.

தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக படக்குழுவினர் 50 பேருக்கு, ஒவ்வொரு நபருக்கும்  1 சவரனில் செயின் ஒன்றை வாங்கி பரிசளித்து இருக்கிறார்.

ஆகஸ்ட் 28ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற இருக்கிறது. இவ்விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் " இப்போது எல்லாம் பாடல்கள் கடைக்கு வரும் முன்பே, இணையத்தில் பாடல்களை வெளியிட்டு விடுகிறார்கள். கண்டிப்பாக எனது ரசிகர்கள் அனைவரும் ஒரிஜினல் சி.டி.க்களை மட்டுமே வாங்க வேண்டும் " என்று கூறியுள்ளார்

தனுஷுடன் 'மயக்கம் என்ன'?


தனுஷுடன் 'மயக்கம் என்ன' படத்தில் நடித்து வந்தார் ரிச்சா. இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதால் சிம்புவுடன் நடிக்கும் 'ஒஸ்தி' படத்தில் நடிக்க மைசூர் கிளம்பி போய் விட்டார்.

இந்த இரண்டு படங்கள் குறித்தும் தனது டிவிட்டர் இணையத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார் ரிச்சா. அவர் கூறியிருப்பது :

" செல்வராகவன் சார்..  'மயக்கம் என்ன?' படத்தை அனைத்து மொழிகளிலும் ரீமேக செய்வீர்களா.. அதே நாயகியுடன்.?!

இரவு 12 மணிக்கு படப்பிடிப்பு முடிந்தாலும் அடுத்த நாள் காலை 6 மணிக்கு படப்பிடிப்பு இருக்கும். எவ்வளவு நேரம் நான் நடித்தாலும் டயர்ட் ஆனது இல்லை. ஏனென்றால் 'மயக்கம் என்ன' படக்குழுவினர் அவ்வாறு நடந்து கொண்டார்கள்.

முதன் முதலாக இப்படத்திற்காக ஸ்கூட்டி பைக் ஒட்டி இருக்கிறேன். MIRAPAKAAY தெலுங்கு படத்தில் நான் ஒட்டினேன் ஆனால் அது கிராபிக்ஸ். மயக்கம் என்ன படத்திற்காக நிஜத்தில் ஒட்டி இருக்கிறேன்.

தற்போது படப்பிடிப்பு அனைத்து முடிந்து சிம்புவுடன் நடிக்கும் 'ஒஸ்தி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள மைசூரில் இருக்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் தமிழில் முன்னணி நடிகர்களான சிம்பு, தனுஷ் என இருவருடன் நடித்து வருவதால் கடும் சந்தோஷத்தில் இருக்கிறார் ரிச்சா.

தண்ணீர், மின்சார விநியோகம் நிறுத்தம்! முகாம்களைவிட்டு வெளியேறுமாறு இடம்பெயர்ந்த மக்கள் மீது அரசு அழுத்தம்! (படங்கள் இணைப்பு)


வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறுத்தி, தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த முகாம்களில் பன்னிரண்டு வருடங்களாக வசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குடும்பங்களில் ஒரு பகுதியினர், தொண்ணூறுகளில் இடம்பெயர்ந்து, இ;ந்தியாவில் தஞ்சமடைந்திருந்து பின்னர் நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய குடும்பங்கள், கடந்த 1996 ஆம் ஆண்டு, அப்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வன்னிப்பிரதேசத்தில் அரசாங்கம் நடத்திய இராணுவ தாக்குதல்களில் இருந்து விலகியிருப்பதற்காக வவுனியாவில் அரசாங்கம் அமைத்திருந்த இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால், இங்குள்ளவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆயினும், இ;ந்தக் குடும்பங்களுக்குச் சொந்தமாகக் காணிகள் இல்லாத காரணத்தினால் தம்மை வவுனியா மாவட்டத்தில் வேறிடத்தில் காணிகள் வழங்கி குடியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த முகாம்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், அப்போது வன்னிப்பிரதேசத்தில் யுத்த மோதல்கள் இடம்பெற்றமையினால், அங்கு திரும்பிச் செல்ல முடியாதிருந்த காரணத்தினால், வவனியாவில் பல இடங்களில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். இதேபோன்று தங்களையும் வவுனியாவில் குடியேற்ற வேண்டும் என இந்தக் குடும்பங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஆயினும் யுத்தம் முழுமையாக முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதனால், அந்தந்த மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் எனவும், அவ்வாறு திரும்பிச்செல்வதற்குச் சொந்தக் காணிகள் இல்லாதவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் காணிகள் வழங்கி மீள்குடியேற்றம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

ஆயினும் இந்த நடவடிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், தமக்குரிய அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், கழிப்பறை வசதிகளை அரசாங்கம் நிறுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அத்துடன் தமது மீள்குடியேற்றத்திற்குரிய நடவடிக்கைகளை சீரான முறையில் மேற்கொண்டு தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.


இலங்கை கடற்பரப்பில் புதிய நிலத்தட்டு


இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் புதிய நிலத்தட்டொன்று உருவாகி வருகின்றமை சர்வதேச ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இந்திய அவுஸ்திரேலிய நிலத்தட்டு உடைப்பபடுத்ததையடுத்து இந்த புதிய நிலத்தட்டு உருவகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக புவியியல் பிவின் சிரேஷ்ட பேராசிரியர் சி.பி திஸாநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையை மிகவும் அண்மித்த பகுதியில் புதிய நிலத்தட்டின் எல்லைக்கோடு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு. புதிய நிலத்தட்டு தொடர்பான விபரங்களை வரைபடங்களில் உள்ளடக்குவதற்கு புவியியல் நிபுணர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பேராசிரியர் சி.பி திஸாநாயக்க கூறியுள்ளார்.

கிறீஸ் பேய்களின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்ச


கிறீஸ்பேய்களின் பின்னணியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையினரே இருப்பதாகவும், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமையவே இந்தப் பீதியை அவர்கள் கிளப்பி விட்டிருப்பதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.

முன்னதாக ‘வெள்ளை வான்‘ களை கொண்டு பீதியூட்டி வந்த சிறிலங்கா படைப் புலனாய்வாளர்கள் இப்போது கிறீஸ்பேய்களைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களால் கிறீஸ் பேய்கள் என்று பிடிக்கப்பட்டவர்கள் அனைவருமே இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களால் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களில் பலரும் தம்மை சிறிலங்கா படையினர் என்று அடையாளம் காட்டியதும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமங்கள் தோறும் படைமுகாம்களை நிறுவுவதற்காகவே கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு செயற்படுவதாகவும் கூறியுள்ள மங்கள சமரவீர, ஏற்கனவே, இந்தப் பிரச்சினை காரணம் காட்டி கிழக்குப் பகுதிக்கு 5000 சிறிலங்கா படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பெண்களின் உள்ளாடைகளுடன் கைதான மர்மமனிதன்!

பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை


சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும். இங்கு மிகவும் பழைமையான சமய நடைமுறைகளில் ஒன்றுதான தேவதாசி முறைமை. தேவதாசி என்பதற்கு கடவுளின் அடிமை என்று அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர் தெய்வத்த்துக்கு மணப் பெண்ணாக தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது தார்வாட் நகரம். இந்நகரத்தில் Saundatti என்று ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா தெய்வத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் வேறு யாரையும் திருமணம் செய்கின்றமை முடியாது.குடும்பத்துடன் தொடர்பு வைத்து இருக்க முடியாது.

ஆலய குருக்கள், கிராமத் தலைவர்கள் , நகரத்திலும் ஊரிலும் பணம், பிரதாபம் ஆகியன உள்ள பெரிய மனிதர்கள் போன்றோருக்கு இச்சிறுமிகள் சேவையாற்றுதல் வேண்டும். பாலியல் திருப்தியை கொடுக்க வேண்டும். இது தெய்வத்துக்கு செய்கின்ற திருத்தொண்டாகவே கொள்ளப்படுகின்றது. இத்தேவதாசிகள் ஆலயமே கதி என்று வழ்நாள் முழுவதும் இருக்க வேண்டியமைதான். தப்பிச் செல்ல முடியாது.

தப்பிச் செல்ல முயல்கின்றவர்களை சமுதாயம் மன்னிக்காது, ஏற்றுக் கொள்ளாது. தேவதாசி முறைமை பெண்கள் மீதான சுரண்டலுடன் சம்பந்தப்பட்டது. பொருளாதா மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய சிறுமிகள் விபச்சாரத்தில் கடவுளின் பெயரால் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். இச்சிறுமிகள் தலித் என்று சொல்லப்படுகின்ற தீண்டத் தகாத சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தேவதாசி முறைமை பகிரங்க விபச்சாரம் ஆகும்.

அறியாமை மற்றும் வறுமையில் வாடுகின்ற பெற்றோர் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் பிள்ளைகளை கடவுளுக்கு தாரை வார்க்கின்றார்கள். தேவதாசிகள் கன்னித் தன்மையை வயதான ஒருவருக்கு அர்ப்பணிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தேவதாசியாக செயல்படுகின்றமை மூலம் பெண்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற பணம் பெற்றோரைச் சென்றடைகின்றது. ஒரு விதத்தில் கூட்டிக் கொடுப்பவர்களாக பெற்றோர் செயல்படுகின்றனர்.

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறிக்கையின்படி தேவதாசி முறைமை பணம் சம்பாதிக்கின்றமைக்கான பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளில் ஒன்றாக அண்மைய காலங்களில் நவீனத்துவம் அடைந்து உள்ளது. தேவதாசிப் பெண்கள் நகரங்கள், தூர இடங்கள் ஆகியவற்றுக்கு சென்று விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள். இங்கு 45.9 சதவீதமான தேவதாசிப் பெண்கள் விபச்சாரிகள் ஆவர். தேவதாசிகள் பிச்சை எடுக்கின்றமையையும் காண முடிகின்றது.

தென்னிந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேவதாசி முறைமையை காண முடிகின்றது. 1934 ஆம் ஆண்டு தேவதாசிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தேவதாசி முறைமையை தடை செய்கின்றது. இச்சட்டத்துக்கு 1980 களில் மீண்டும் உயிர் ஊட்டப்பட்டது.

ஆனால் இச்சட்டம் ஒவ்வொரு நாளுமே மீறப்படுகின்றது. தேவதாசியாக சிறுமியை ஆக்குகின்றமைக்கு துணை புரிபவர்கள் அல்லது தேவதாசியாக சிறுமியை ஆக்குகின்ற சடங்குக்கு செல்பவர்கள் இரு வருட சிறைத் தண்டனையுடன் அதிக பட்சம் இந்திய ரூபாய் 2000 அபராதமாக விதிக்கப்படுகின்றமைக்கு உரித்து உடையவர்கள். சிறுமியை தேவதாசி ஆக்குகின்றனர் என்று குற்றவாளிகளாக காணப்படுகின்ற பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அதிக பட்சம் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.