Tuesday, 23 August 2011

ராஜீவ் காந்தி படுகொலை புதிய குற்றவாளிகளை அடையாளம் காட்டுகிறார்: சி.பி.ஐ அதிகாரி

 
ராஜீவ் காந்தி படுகொலை புதிய குற்றவாளிகளை அடையாளம் காட்டுகிறார் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ். இவர் அளித்த பேட்டி இங்கே தரப்படுகிறது. இந்தக் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் காங்கிரஸ்காரரே என்கிறார். சுவாரஸ்யமான இந்தப் பேட்டி இங்கே…

தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சங்கே முழங்கு நிகழ்ச்சியில் தொகுப்பு! (வீடியோ இணைப்பு)


இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது! இராஜதந்திரி ஜயந்த தனபால கருத்து

உலகரீதியில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும். அப்போது எமக்கு இந்தியாவின் செல்வாக்கு உதவ முடியாது போகும் நிலை ஏற்படும் என்று இலங்கையின் மூத்த இராஜதந்திரியான ஜயந்த தனபால லக்பிம ஆங்கில வாரப் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவுடனான உறவுகளை இலங்கை பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப் பாட்டுக்குள் இலங்கை உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். என்று ஐ.நா.சபையின் ஆயுதபரிகரண விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவரான அவர் தெரிவித்தார்.
இந்தியாவுடனான உறவுகள் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. இந்தியாவுடனான உறவை புத்திசாலித்தனமான முறையில் இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009 ற்குப் பின்னர் அதாவது போர் முடிவடைந்த பின்னர் அந்தப் புத்திசாலித்தனத்தைக் காணமுடியவில்லை.
வரலாற்று ரீதியாக இந்திய வம்சாவழியினர்தான் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு விவகாரமும் இந்தியாவின் தமிழ்நாட்டிலும் அதன் ஏனைய பகுதிகளிலிலும் நேரடித் தொடர்பு உடையதாகவே இருக்கின்றது.
13 ஆவது திருத்தச்சட்டம், அதற்கு அப்பால், இரண்டாவது சபை என்று கூறியது எல்லாம் போய், இப்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்றெல்லாம் ஜனாதிபதி பேசுகின்றார்.
இந்திரா காந்தியைப் போன்று எம் கையை முறுக்கிய மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காது, அரசியல் தீர்வு காணும் முயற்சியை விரைந்து காணுமாறு இந்தியா சாந்தமாகக் கோருகின்றது. ஆனால் நாம் அந்தச் செய்திக்கு காது கொடுப்பது போன்று தெரியவில்லை.
இந்திய இலங்கை உடன்படிக்கையை 1980 களில் திணித்ததிலும் பார்க்க இந்தியாவின் சர்வதேச வளர்ச்சி இன்று 100 வீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வழிகாட்டலையே எதிர்பார்த்து நிற்கின்றன.
உலகரீதியில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்ல உறவுகளைப் பேண முடியும். முன்னரும் இவ்வாறே நடந்துள்ளோம். இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும். அப்போது எமக்கு இந்தியாவின் செல்வாக்கு உதவ முடியாது போகும் நிலை ஏற்படும் என்றும் ஜயந்த தனபால தெரிவித்தார்.

இன்றைய சீர்கேடுகள், அவற்றுக்கான காரணங்கள் பற்றிய அல்ஜசீரா ஒரு காணொளி (வீடியோ இணைப்பு)


அல்ஜசீரா இலங்கையில் தமிழர்களின் கலை கலாசராம், அவற்றின் இன்றைய சீர்கேடுகள், அவற்றுக்கான காரணங்கள் பற்றிய ஒரு காணொளி ஒன்றை இலங்கையின் விதவைகள் எனும் பெயரில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருந்தது.


அதில், கணவன்மார்களை சிறையில் சென்று பார்க்கும் பெண்கள் தொடர்பாக அவர்களில் ஒருவரிடம் கேட்டறிந்தது அல்ஜசீரா. அதில் அப்பெண் தனது கணவனை சிறையில் பார்க்க செல்லும் போது, “உனது கணவருடன் கதைக்க வேண்டுமென்றால் என்னுடன் ஒரு தடவை உறவு கொள்ளவேண்டும்” என இராணுவ அதிகாரிகள் தன்னை கஸ்டப்படுத்தியதாக கிளி நொச்சியில் வாழும் அப்பெண் கூறியுள்ளார்.

இது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான். நாம் எமது துணைவர்களைத்தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் செல்கின்றோம். அங்கு படையினர் தம்முடன் உறவு வைத்துக்கொண்டால் எமது கணவன்மாரை பார்க்க முடியும் என வற்புறுத்துவர் என கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடான பண்பாடுகள் பற்றி கூறும் அல்ஜசீரா செய்தியாளர் அங்கு நடக்கும் சீர்கேடுகள் தொடர்பாக யாழ் அரச அதிபரை சந்தித்து வினாவுகின்றார்.

அதற்கு யாழ் அரச அதிபர் இமெல்டா, இச் சமூதாயச் சீர்கேடுகளுக்கு படையினர் மட்டும் காரணமல்ல என அவர் கூறிய கருத்தினை அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு தமிழ் மக்களின் கலாசார சீரழிவுகளுக்கு படையினர் காரணமல்ல என தெரிவித்து படையினரைக் காப்பாற்ற முனைந்ததன் மூலம் யாழ் கட்டளைத் தளபதி மீது தாம் கொண்ட அன்பினை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் (வீடியோ இணைப்பு)


கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பழைய பாடல் வரிகள் ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது இந்த காணொளிக்கு.. குறித்த காணொளியை வார்த்தைகளால் விபரிக்க விரும்பவில்லை காரணம் உங்கள் கண்கள் விழிப்படைந்துவிடும்.. வீடியோவை பாருங்கள் நிச்சயம் ஏமாறுவீர்கள்… வியந்து போவீர்கள்..

பாட்டு பாடும் அதிசய ரோபோ(வீடியோ இணைப்பு)


தைவான் தலைநகர் தைபேயில் உள்ளது தேசிய தைவான் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இங்குள்ள எலக்ட்ரானிக் மற்றும் கணணி பிரிவு பேராசிரியர் சியூ லின் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து பாடும் ரோபோ அழகியை உருவாக்கி உள்ளனர்.



பாட்டு ஸ்வரங்கள்(நோட்ஸ்) எழுதிய பேப்பரை இதன் முன்பு காட்டினால் போதும். பாடகி போல சூப்பராக பாட ஆரம்பிக்கிறது. பேப்பரில் எழுதியிருக்கும் நோட்ஸ்களை படிப்பதற்காக இதன் கண்ணில் பிரத்யேக கமெரா பொருத்தப்பட்டுள்ளது.



அதன் உதவியுடன் வரிகளை முதலில் கவனமாக படிக்கிறது. பின்னர் ஒலிக்கான நோட்ஸ்கள் தனியாக சின்தசைசர் கருவிக்கு மாற்றுகிறது. பாடல் வரிகளை சரியாக உச்சரித்து ராகம் போட்டு பாடுகிறது.

சீனாவின் மேண்டரின் மொழியில் எழுதப்பட்ட எந்த பாடலையும் 40 வினாடியில் படித்துவிட்டு இந்த அற்புத ரோபோ பாடிவிடுமாம்.

படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)


யாழ்.நகரில் நேற்றிரவு படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே திடீரென ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதில் இருவர் காயமடைந்தனர். இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன.

அங்கு கூட்டம் கூடிய மக்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டி கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்குப் பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் படையினரைத் தாக்கினர்.






இதனையடுத்துக் கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.

ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டுக்காரர்கள் சுதாகரித்துக் கொண்டதால் தப்பிச் சென்றனர் என்றும் பரவிய தகவல்களையடுத்தே மக்கள் அங்கு திரண்டனர் என்று கூறப்படுகின்றது.

மக்கள் பதற்றத்துடன் திரண்டதையடுத்து உடனடியாக அந்த இடத்துக்குப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கும் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்தனர் என்று செய்தி பரவ ஆரம்பித்ததால் பதற்றம் அதிகரித்துப் படையினர் மீது மக்கள் கற்களை வீச ஆரம்பித்தனர்.

இராணுவத்தினர் வந்த வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்ததும் பொதுமக்களைக் கொட்டன்களால் தாக்க ஆரம்பித்தனர்.

சிதறி ஓடிய மக்களை அவர்கள் விரட்டி விரட்டித் தாக்கினர். யாரோ சிலர் வீட்டுக்குள் நுழைய முயன்றார்கள் என்றும் பிடிக்க முயன்ற போது தப்பிச் சென்றுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டு இங்கு வந்தோம். இராணுவத்தினரும் பொலிஸாரும் வந்தனர்.

பின்னர் அவர்கள் எங்களைத் திடீரெனத் தாக்க ஆரம்பித்தனர் என்று தப்பி ஓடிக் கொண்டிருந்தபோது ஒருவர் தெரிவித்தார். வீதியில் நின்றவர்களையும் பெண்களையும் பொலிஸார் கண்மூடித்தனமாகத் தடிகளாலும் கொட்டன்களாலும் தாக்கினர்.

பொலிஸாரிடமிருந்து தப்ப ஓடி முயற்சித்த பெண் ஒருவர் மதிலுடன் மோதுண்டு காயமடைந்தார். குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலரைப் பொலிஸார் பிடித்து வாகனத்தில் ஏற்றியதைக் காண முடிந்தது.

எங்களைத் துரத்தி வந்த பொலிஸார் ஒவ்வொருவராகப் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். என்னையும் பிடித்து ஏற்றப் பார்த்தனர். அவர்களின் கைகளிலிருந்து பறித்துக் கொண்டு இருட்டுக்குள் ஓடி மறைந்து ஒருவாறு வீடு வந்து சேர்ந்தேன் என்றார் ஒருவர்.