Tuesday, 19 July 2011
இதுவரை பார்க்காத காதல்: சவால் விடும் டி.ஆர்
ஒரு தலை ராகம் வந்து முப்பது வருஷம் ஆகிடுச்சு. இப்போ மறுபடியும் "ஒரு தலை காதல்'. என் படங்கள் எப்போதும் யாருக்கும் மறக்க முடியாத அனுபவம். அதனால்தான் இதையும் அனுபவிச்சு எடுக்குறேன்.என் படங்கள் எல்லாமும் பேசியிருக்கு. அன்பு சொல்லி நெகிழ வெச்சிருக்கு. காதல் சொல்லி கிறங்க வெச்சிருக்கு. பாசம் தந்து பாராட்டு வாங்கியிருக்கு. அதனால் இப்ப மறுபடியும் காதலுக்கு வர்றேன். காதல் சினிமாக்களில் என்னைப் பார்த்த ரசிகன், அப்படியே மீண்டும் என்னை அண்ணாந்து பார்ப்பான். நான்தான் ஹீரோ. இதே தாடிதான். வட இந்திய பொண்ணு ஹீரோயின். பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமே நடிக்குது. இப்போ இருக்குற எல்லா திறமையான இயக்குநர்களுக்கும் டி.ஆர். சவால் விடுறான். நீங்கள் இதுவரை பார்க்காத, யோசிக்காத படம் இது.
இன்ரர் போல் பொலிசாரை தவறாகப் பயன்படுத்தும் இலங்கை.
பாரிய குற்றங்களை இழைத்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிய குற்றவாளிகளை சர்வதேச அளவில் தேடிப் பிடிக்க இன்ரர் போல் என்னும் சர்வதேச பொலிசார் அமைப்பு நிறுவப்பட்டது. ஒரு நாட்டில் தேடப்படும் நபரை அன் நாட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தால், அதனை அன்நாட்டரசு இன்ரர் போல் தேடும் பட்டியலில் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கலாம். ஆனால் இலங்கை, பாக்கிஸ்தான், ரஷ்யா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் தமது அரசியல் எதிரிகளைக் கைதுசெய்ய, இன்ரர் போல் பொலிசாரைப் பயன்படுத்துவதாகவ அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இலங்கை இன்ரர் போல் பொலிசாரை தவறாகப் பயன்படுத்துகிறது என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.இலங்கையானது வெளிநாடுகளில் வசிக்கும் தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவே இன்ரர் போல் பொலிசாரை பயன்படுத்துவதாக தெரிவித்த அவ்வமைப்பு, இணையத்தள உரிமையாளர்களையும் , இலங்கை அரசுக்கு எதிராக எழுதும் எழுத்தாளர்களைக் கூட கைதுசெய்து தரும்படி இலங்கை இன்ரர் போலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க (வாஷிங்டனைத்) தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு மேற்கொண்ட ஆராட்சிகளில் இவ்விடையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசானது பல தமிழர்களுக்கு எதிராகவும் சில சிங்களவர்களுக்கு எதிராகவும் இன்ரர் போலிடம் முறையிட்டு அதற்கான பிடியாணையப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். அமெரிக்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது, ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின் பிரதிகள் இன்ரர் போல் தலைமையகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். இனி வரும் காலங்களில் இலங்கை கைதுசெய்து தரும்படி கூறும் நபர்கள் அதற்கு தகுதியுடையவர்களா என ஆராய்ந்த பின்னரே இன்ரர் போல் பொலிசார் செயல்படவேண்டும் எனக் கோரிக்கைகள் விடுக்கப்படவேண்டும்.
இலங்கைக்கு விழுந்த பேரிடி: ஹிலரி ஈழத் தமிழர் குறித்து நிச்சயம் பேசுவார் !
| அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஒருவர் சென்னை சென்று தங்கி அம்மாநில முதல்வரைச் சந்திக்கவிருப்பது வரலாற்றில் இதுவே முதல்தடவை எனக் கூறப்படுகிறது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளரும் உலகில் பலம்மிக்க பதவியொன்றில் உள்ளவருமான திருமதி கிளிங்கடன் அவர்கள் சென்னை செல்லவுள்ளார். அவர் சென்னையில் தங்கியிருக்கும் நாட்களில், அம்மாநில முதல்வர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து உரையாடவுள்ளார். இருப்பினும் இவரது விஜயம் ஒரு அரசியல் அல்லது உத்தியோகபூர்வ விஜயம் அல்ல எனவும், அவர் பெண்கள் மேம்பாடு மற்றும், வணிகம் சம்பந்தமாகவே சென்னை செல்வதாகவும் அமெரிக்கா கண்டிப்பாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை செல்லும் திருமதி கிளிங்கடன் அவர்கள் இலங்கைத் தமிழர் விடையம் தொடர்பாக செல்வி ஜெயலலிதாவோடு பேசவேண்டும் என பல தரப்பாலும் அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வந்ததோடு, பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. இன்று(18.07.2011) அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள உயரதிகாரி ஒருவர் இந்திய செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றில், ஹிலரி கிளிங்கடன் அவர்கள் நிச்சயமாக இலங்கைத் தமிழர் குறித்துப் பேசுவார் என உறுதிப்படுத்தியுள்ளார். ஹிலரி கிளிங்கடனின் சென்னை விஜயத்தில் அரசியல் எதுவும் இல்லை என்றாலும் நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளது இலங்கை அரசுக்கு விழுந்த பேரிடியாக உள்ளது ! சமீபத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரவேண்டும் எனக் குறிப்பிட்ட கருத்துகளை, இலங்கை வன்மையாகக் கண்டித்ததோடு, தாம் மாநில அரசுகளோடு பேசுவது இல்லை என்றும் தெரிவித்து, மாநில அரசை ஒரு செல்லாக்காசு என வர்ணித்திருந்தது. ஆனால் உலகின் பலம் மிக்க பதவியில் இருக்கும் திருமதி கிளிங்டன் அவர்கள், செல்வி ஜெயலலிதாவோடு பேசவிருப்பது தொடர்பாக இலங்கை அதிருப்தியடைந்துள்ளதாகவும், இருப்பினும் அதனைத் தடுக்கும் வல்லமை இல்லாது இருப்பதாவும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறையும், கரிசனையும் கொண்டுள்ள நிலையில், ஈழத் தமிழர்கள் பற்றி பேசாமல் வருவது, ஒரு நியாயமான செயலாக அமையாது என அமெரிக்க உயரதிகாரி கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. |
கடந்த 21 வருடங்களாக மூடப்பட்டிருந்த காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி (படங்கள் இணைப்பு)
| கடந்த 21 வருடங்களாக மூடப்பட்டிருந்த காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி இன்று திங்கட்கிழமை இ.கி.மி.பெண்கள் பாடசாலையால் சிரமதானம் மூலம் அங்கிருந்த அணைகள் அகற்றப்பட்டு திறந்துவிடப்பட்டது. அவ் வீதியால் மக்கள் பயணிப்பதையும் முன்னாள் உப தவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தியுடன் அதிபர் எஸ்.மணிமாறன் உரையாடிக்கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம் |
புகைப்பட கலைஞரின் அற்புதமான நுட்பங்கள் (படங்கள் இணைப்பு)
நம்முடைய தளத்தில் பல விதமான புகைப்படங்களை பார்த்திருக்கிறோம். இப்போது நாம் பார்க்க போகும் புகைப்படம் மிகவும் வித்தியசமாகவும் அழகாகவும் புகைப்படத்தில் புகைப்படம் தெரிவது போல எடுக்கப்பட்டுள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
சீமானுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன :நடிகை விஜயலட்சுமி (வீடியோ இணைப்பு)
| நடிகை விஜயலட்சுமி, திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் சீமான் என்று பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த புகார் மனு சில வாரங்கள் கழித்து அடங்கிப்போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் சீமானுடன் குடும்பம் நடத்தியதற்காக ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜயலட்சுமி. சீமானுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன. ஆனால் புகார் கொடுத்து ஒன்றரை மாதமாகியும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மதுரையில் சீமான் நிபந்தனை காவலில் ஒருந்த போது அவருடன் 15 நாட்கள் தங்கி இருந்தேன். 2008 ல் இருந்து 3 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டார் சீமான். என்று கூறியுள்ள விஜயலட்சுமி, தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடினார் என்று அதற்கான படத்தை வெளியிட்டுள்ளார். |
ரஜினியின் தேதிக்காக காத்திருக்கும் ஒரு கல்யாணம்!
ரஜினியின் தேதிக்காக ஒரு கல்யாணம் காத்திருக்கிறது. அது ஒரு பெண் ரசிகையின் மகள் திருமணம். ரஜினி தேதி கொடுத்து, அவர் முன்னிலையில்தான் அந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அந்தத் தாயும் மகளும்.
ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்று கேள்விப்பட்டதிலிருந்து அவர் குணமடையவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் பேர் கோவில்களில் பிரார்த்தனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த ஒரு ரசிகை, ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்தால், வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுகிறேன் என்று வேண்டுதல் வைத்தார்.
அந்த பெண்ணின் பெயர் கவுரி (வயது 40). சென்னை சாலிகிராமம், விஜயராகவபுரத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கையில், 'ரஜினிகாந்த் கடவுள்' என்று பச்சை குத்தியுள்ளார்.
இவர், ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்ததையொட்டி, தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமை காலை வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கு தனது நீளமான கூந்தல் முடியை இழந்து, மொட்டை போட்டுக்கொண்டார்.
கவுரியுடன் சேர்ந்து, அவரது மகன் கோபிராஜ் (19), கொடுங்கையூரைச் சேர்ந்த அமுதா (39), மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஹேமராஜ் (10), குடியாத்தத்தை சேர்ந்த ஜம்புலிங்கம் (78) ஆகியோரும் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ரஜினியை கடவுளாகவே பார்க்கிறேன்....
இதுகுறித்து கவுரி கூறுகையில், "நான், சினிமா 'டப்பிங் ஆர்ட்டிஸ்ட்' ஆக பணியாற்றி வருகிறேன். 8 வயதில் இருந்தே நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று ஏழை பெண்களுக்கு புடவை வாங்கிக்கொடுத்து, அன்னதானமும் செய்வேன்.
ரஜினிகாந்தை நான் நேரில் சந்தித்துள்ளேன். அப்போது அவர் ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது என்று சொல்லுவார். ரஜினிகாந்தை நான் கடவுளாகவே பார்க்கிறேன். அப்படிப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் பூரண குணம் அடைந்தால் வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுவதாக வேண்டினேன்.
ரஜினி தேதிக்காக காத்திருக்கும் திருமணம்
ரஜினிகாந்த் குணமடைந்துவிட்டதால், இப்போது மொட்டை போட்டு நேர்த்திகடனை நிறைவேற்றியுள்ளேன். அவர் 100 ஆண்டு காலம் வாழவேண்டும். எனது மகள் லாவண்யாவுக்கும், ராஜசேகருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தலைமையில்தான் எனது மகள் திருமணம் நடைபெற வேண்டும் என்று சபதம் செய்திருக்கிறேன். அவர் தேதி கொடுக்கும்வரை காத்திருப்போம்," என்றார்.

வலிமையாக இருக்க மனைவி ரத்தத்தை குடித்த கணவன்!
மத்திய பிரதேசத்தில் தன் உடல் திடகாத்திரமாக இருப்பதற்காக மனைவியின் ரத்தத்தை குடித்து வந்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள ஷிகார்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அஹிர்வார். விவசாயக் கூலி. அவருக்கும் தீபா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே அவர் தீபாவின் ரத்தத்தை குடித்து வந்துள்ளார். தீபா கர்ப்பமாக இருந்தபோது கூட அவரை விட்டுவைக்கவில்லை. அவ்வாறு ரத்தத்தை குடிப்பதன் மூலம் தான் திடகாத்திரமாக இருக்கலாம் என்று நினைத்து இவ்வாறு செய்து வந்துள்ளார் மகேஷ்.
தன்னுடைய இந்த வினோத பழக்கம் பற்றி வெளியில் சொன்னால் தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தீபாவை மிரட்டுயுள்ளார். அதற்கு பயந்து கடந்த 3 ஆண்டுகளாக தீபா இந்த கொடுமையை அனுபவித்து வந்துள்ளார்.
அன்மையில் தீபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இனியும் இந்த கொடுமையைத் தாங்க முடியாது என்று நினைத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து தீபா கூறியதாவது,
எனது கணவர் மகேஷ் ஒரு ஊசியை எடுத்து என் கையில் இருந்து ரத்தம் எடுப்பார். அதை ஒரு டம்ளரில் ஊத்திக் குடிப்பார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் இந்த கொடுமையைத் தான் செய்துள்ளார். யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டி வைத்தார் என்றார்.
அடிக்கடி தீபாவின் உடலில் இருந்து ரத்தம் எடுத்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் ரத்தம் எடுக்க அனுமதிக்காவிட்டால் அவரை அடித்து உதைத்துள்ளார் மகேஷ்.
இந்த கொடுமையைத் தாங்கமுடியாமல் தீபா தனது மகனைத் தூக்கி்க் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு தனது பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அவர் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீபாவின் தந்தை தனது மகளை அழைத்துக் கொண்டு படேரா காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மகேஷ் வாழும் ஹின்டோரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதற்குள் மகேஷ் தலைமறைவாகிவிட்டார். ஹின்டோரியா போலீசாரும் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.
மகேஷின் இந்த கொடூரச் செயல் குறித்த தகவல் அவரது சொந்த ஊரில் பரவியது. இதையடுத்து அந்த கிராமத்தினர் திரண்டு வந்ததால் ஹின்டோரியா போலீசார் புகாரை ஏற்றுக் கொண்டனர்.

அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியும். தனக்கும், பிரதமர் உள்ளிட்ட அரசுத் துறையினருக்கும் இடையேயான அனைத்து கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சிபிஐ கோர்ட்டில் தானே வாதாட தயாராகியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராசா.
2008ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும். ஏல நடைமுறைகள் முன்கூட்டியே பிரதமருக்குத் தெரிவிக்கபப்ட்டு விட்டது.
இதுதொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே அனைத்து நடைமுறைகளிலும் பிரமதருக்கும் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களுடன் வாதாடவிருக்கிறாராம் ராசா.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைமுறைகள் குறித்து யார் யாருக்கு என்னென்ன தெரியும், யார் யார் எப்படிச் செயல்பட்டனர் என்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களையும் சிபிஐ கோர்ட்டில் முன்வைக்கப் போகிறாராம் ராசா.
இதுபோக தனது வாதத்திற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராசா வைக்கப் போகும் ஆதாரங்கள் மற்றும் வாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு குறிப்பாக பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைத் தரும் என்ற பரபரப்பு டெல்லியில் நிலவுகிறது.

வெள்ளித்திரையில் ஹீரோ; நிஜத்தில் வில்லன்! - ஷாரூக்குக்கு சிவசேனா கண்டனம்
தொடர் குண்டுவெடிப்புக்களால் மும்பை மாநகரம் துயரத்தில் மூழ்கி இருக்கும்போது, ஆடம்பர விருந்து அளித்த நடிகர் ஷாருக்கானுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 13-ந் தேதி தீவிரவாதிகள் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த அதிர்ச்சியை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இந்த நிலையில் நடிகை கேத்ரினா கைப்பின் 27-வது பிறந்தநாளையொட்டியும், அவரது படம் 'ஜிந்தகி மிலேக்கி நா டோபரா' வெளியாகியிருப்பதை முன்னிட்டும், நடிகர் ஷாருக்கான் அவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆடம்பர விருந்து ஒன்று அளித்துள்ளார்.
இந்த விருந்தில் கேத்ரினா கைப்புடன் இந்திப்பட நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், அர்ஜுன் ராம்பால், கரண் ஜோஹர், நடிகை கரிஷ்மா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
விருந்தில் கலந்துகொண்டவர்களுக்காக 'ஜிந்தகி மிலேக்கி நா டோபரா' படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
இந்த விவரமெல்லாம், பர்ஹான் அக்தர் மூலம் தெரிய வந்தது. அவர் இந்த விருந்துக்காக ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்து இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
நிஜ வில்லன் ஷாரூக்
இந்த விருந்து தொடர்பாக சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து 'சாம்னா' பத்திரிகையில் கூறி இருப்பதாவது:
மும்பை குண்டுவெடிப்புகளை தொடர்ந்து பல பிரபலங்கள் தங்கள் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டனர். குரு பூர்ணிமா கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டனர். குண்டுவெடிப்பு நாளில் பிரான்ஸ் நாட்டு அரசு அளித்த விருதைக்கூட நடிகை ஐஸ்வர்யாராய் ஏற்க மறுத்து விட்டார்.
ஆனால் ஷாருக்கானுக்கு அந்த விருந்தினை ரத்து செய்யும் உணர்வு இல்லை. வெள்ளித்திரையில் அவர் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு வில்லன்," என்று குறிப்பிட்டுள்ளது

மதுரை பெயரைக் கெடுக்கும் தமிழ்ப் படங்களால் பின்வாங்கும் ஐடி நிறுவனங்கள்!
மதுரை என்றாலே வன்முறை நிறைந்த நகரம் என்று நினைக்கும் அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் கோவில் நகரம் கொலை நகரமாகக் காட்டப்படுகிறது. இதனால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மதுரைக்கு வர அஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.
மதுரை என்றாலே மல்லிகைப்பூவும், மீனாட்சி அம்மனும் தான் நினைவுக்கு வரும். விருந்தோம்பலில் மிரள வைப்பவர்கள் மதுரைக்காரர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் கேட்காமலேயே உதவிக்கு வருபவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று மதுரையைப் பற்றி நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு மட்டும் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.
நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை வைத்துப் படம் எடுத்து கல்லாக் கட்டி பிழைத்து வரும் தமிழ் சினிமாக்கார்களின் செயலால் இன்று மதுரை நகரம் மிகப் பெரிய அவலத்தையும், பொருளாதார பின்னடவையும் சந்திக்க நேர்ந்துள்ளது என்றால் நம்ப முடியவில்லை இல்லையா. ஆனால் உண்மையை அறிந்தால் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.
முன்பு மதுரையை வைத்து நிறையப் படங்கள் வந்துள்ளன.அந்தப் படங்களில் மதுரை மண்ணின் பாசம், நேசம், உயிர்ப்பு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றையே பிரதானமாக காட்டுவார்கள். குறிப்பாக அந்தக் காலத்து சிவாஜி கணேசன் படங்கள், பின்னர் வந்த எஸ்.எஸ்.ஆர். படங்கள், பிற்காலத்தில் வந்த ராமராஜன் படங்களில் இதை அதிகம் காணலாம்.
ஆனால் தற்போது வெளிவரும் தமிழ் படங்களில் மதுரையில் ஏதோ கொலையை தொழில் போல செய்வதாக காட்டுகிறார்கள். காலையில் எழுந்துதம் பல்லை விளக்கி விட்டு, பத்து பேரைக் கொலை செய்து பின்னர்தான் டீ சாப்பிடுவார்கள் என்பது போலவும், மத்தியானத்திற்கு மண்டையை வெட்டி கறி சமைத்து சாப்பிடுவார்கள் என்பது போலவும், சாயந்திரம் நாலு பேரை சாய்த்து விட்டுத்தான், ராத்திரிக்குத் தூங்கப் போவார்கள் என்பது போலவும் காட்டுகிறார்கள்.
மதுரை என்றாலே ரத்த பூமி என்பது போலவும், அங்கு மனிதர்களே கிடையாது என்பது போலவும், மதுரையி்ல் தினசரி தவறாமல் கொலை செய்வது போலவும் காட்டி மதுரையின் மாண்பை சீர்குலைத்து, சீரழித்து வருகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.
குறிப்பாக சுப்பிரமணிய புரம் படம் வந்த பிறகுதான் மதுரை என்றாலே கொலை நகரம் என்ற அவப்பெயரை மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் திணித்து விட்டனர் தமிழ் சினிமாக்காரர்கள்.
மதுரை சம்பவம், ஆடுகளம் ஆகிய படங்களும் மதுரையில் எடுக்கப்பட்டவை. அனைத்திலும் வன்முறை தான் பிரதானம்.
இது சாதாரண சினிமாதானே என்று விட்டு விட முடியவில்லை. காரணம், மதுரையின் பொருளாதாரத்தையே பாதிப்பதாக அமைந்துள்ளன இந்த சினிமாப் படங்கள் என்ற உண்மை இப்போது தெரிய வந்துள்ளது.
இப்படிப்பட்ட கேடு கெட்ட திரைப்படங்களைப் பார்த்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மதுரையில் கிளை அமைக்க அஞ்சும் அளவுக்கு நிலைமை கை மீறிப் போயுள்ளது.
இந்தியாவின் பெருநகரங்கள் தவிர்த்து 2ம் நிலை நகரங்களில் கிளை அமைக்கலாம் என நினைக்கும் பெரிய பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைசியாகத்தான் மதுரையைப் பற்றி சிந்திக்கிறார்களாம். காரணம், திரைப்படங்களில் காட்டப்படும் பொய்யான மதுரையை நினைத்து அஞ்சுவதால்.
இதில் விந்தை என்னவென்றால் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் 25 சதவீதம் பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள்தான்.
கடந்த ஆண்டு நடந்த பல்துறை வல்லுநர்கள் கூட்டத்தில் தான் இந்த கருத்து வெளியிடப்பட்டது.
மதுரையில் இலந்தைக்குளத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது ஐடி பூங்கா அமைக்கப்பட்டது. அதில் இதுவரை இதுவரை 3 நிறுவனங்கள் மட்டும் தான் தங்கள் கிளைகளை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல வடபழஞ்சியில் அமைக்கப்படுவதாக கூறப்பட்ட ஐடி பூங்கா இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை.
தமிழ் சினிமாக்களில் மதுரையைப் பற்றி அவதூறாக, அசிங்கமாக, கோரமாக சித்தரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் மதுரையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக அரசு இந்த விஷயத்தை சற்று சீரியஸாக கவனித்தால் மட்டுமே மதுரைக்கு மோட்சம் கிடைக்கும் - இந்த தமிழ் சினிமா வியாபாரிகளிடமிருந்து.

'16 வயதினிலே' பாரதிராஜாவுக்கு 70 வயது!
இயக்குநர் பாரதிராஜா தனது 70-வது பிறந்த நாளை குற்றாலத்தில் கொண்டாடினார்.
குற்றாலம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இலஞ்சியுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இவ் விழாவில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,
வாழ்க்கையில் மனிதன் கண்டிப்பாக சேவை செய்ய வேண்டும். வாழும் காலத்தில் தானம் கொடுத்து பழகிவிட்டால் அதை விட சுகமானது வேறொன்றும் இல்லை. அற்புதமான சுகம் தர்ம செயல்கள் செய்யும்போது கிடைக்கும். ஒரு ஊடகத்திற்கு இருக்கும் பொறுப்பை போல் பொது சேவையாற்றும் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் கடமை உள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு நீர்த்தேக்க பிரச்சனை, இனப்படுகொலை, இனஅழிப்பு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பு நிகழ்வுக்கெல்லாம் பொது நல அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.
நாற்கலி கனவுகளில் இருந்து விலகி இருக்கும் சமூக சேவை இயக்குநர்கள் குரல் கொடுக்க தொடங்கினால் நாடெங்கும் அக்குரல் எதிரொலிக்கும். மொழி, இனம் என அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிறோம். தாயை இழப்பதும், மொழியை இழப்பதும் ஒன்று தான். நாட்டில் போலியோவை ஒழி்த்த உங்கள் இயக்கம் லஞ்சம், ஊழலையும் ஒழிக்க பாடுபட வேண்டும்.
நாம் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு ஏன் லஞ்சமாகத் தர வேண்டும். லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்துவதை விட கேவலமானது எதுமில்லை. மடங்களிலும், சாமியார் வீடுகளிலும், கோடி கோடியாய் பணம் கிடைக்கிறது. ஆனால் எந்த துறையாவது விசாரணை நடத்துகிறார்களா, எங்களை போல் உழைப்பவர்களிடம் தான் வருமான வரி சோதனை செய்கிறார்கள்.
ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது சேவை அமைப்புகள் பொது மக்களின் பிரச்சனைகளுக்காகவும், களத்தில் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். மனிதன் இதயத்தை சுத்தமாக்கினால் அவனை அனைத்தும் தேடி வரும். ஒவ்வொருவரும் தன்னை பெற்ற தாயை மதிக்க கற்றுக் கொண்டால் சமுதாயத்தில் மரியாதை தானாகவே உயர்ந்து தலை நிமிர முடியும் என்றார்.
பின்னர் இரவு 9.30 மணி அளவில் ரோட்டரி பிரமுகர்களுடன் கேக் வெட்டி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜ் பேசும்போது, ஒரு அரசால் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த முடியாது. ஆனால் இதுபோன்ற சங்கங்கள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது என்றார்.

நான் ரொம்ப கெட்டவன் - 'மங்காத்தா' அஜீத்!
தற்போது தாம் நடித்து முடித்துள்ள 'மங்காத்தா' படம் குறித்து நடிகர் அஜீத் அளித்த பேட்டி ஒன்றில், "நான் நடித்த முதல் படத்துக்கு எந்த அளவுக்கு உழைத்தேனோ அதே அளவு தான் 'மங்காத்தா'வுக்காகவும் உழைத்து இருக்கிறேன். நீண்ட நாட்கள் கழித்து நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறேன்.
நான் இதுவரை பணியாற்றிய இயக்குனர்களில் வெங்கட்பிரபு சிறப்பு மிக்கவர். படக்குழுவினர் எல்லாரிடமும் அவர் மரியாதையுடன் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்தி வழிநடத்துவதில் திறமை மிக்கவர்.
இப்படத்தில் வெள்ளை முடியுடன் நடித்து இருப்பது, அந்த கதாப்பாத்திரத்துக்கு தேவைப்பட்டது. அவ்வாறு நடிப்பதில் எனக்கு எவ்வித பயமும் கிடையாது. படத்தில் எனது பெயர் வினாயக் மாதவன். அவனுக்கு பணம் தான் எல்லாமே. நீங்கள் படத்தில் ஒரு மோசமான அஜீத்தை தான் பார்க்க இருக்கிறீர்கள்.
வெங்கட்பிரபு என்னிடம் கதையைக் கூறும் போது, 'படத்தில் 5 பேர் இருக்கிறார்கள். 4 பேர் கெட்டவர்கள், ஒருவர் மிகவும் கெட்டவன். அந்த பாத்திரத்தில் தான் நான் நடித்து இருக்கிறேன். எனது கதாப்பாத்திரத்தை போராளி அல்லது எதிரி என எப்படி வேண்டுமானாலும் அழைக்காலம். நீண்ட காலத்துக்குப் பிறகு என் சினிமா வாழ்க்கையில் ரசித்து நடித்த கதாப்பாத்திரம் இது.
என்னால் இயன்ற வரையில் கடின உழைப்பை செலுத்தியிருக்கிறேன். அதனை இயக்குனர் வெங்கட் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார்," என்றார் அஜீத்,
பில்லா -2 படம் குறித்த கேள்விக்கு "நாங்கள் முந்தைய பாகத்தை உருவாக்கி வருகிறோம். இது, உண்மையில் மிக அரிதான விஷயம். பில்லா என்பது இப்போது ஒரு பிராண்ட் ஆகிவிட்டது. எப்படி பில்லா உருவானான் என்பதை அறிய பல பேர் ஆவலாக இருக்கிறார்கள். அதை தான் இந்த படம் மூலம் கூற போகிறோம்," என்று கூறினார்.
"நான் எப்போதுமே ஒரு நடிகராக மட்டுமே இருக்க விரும்புகிறேன். நட்சத்திரம் என்று அழைக்கப்படுவது எல்லாம் ரசிகர்களால் தான். இதன் காரணமாக என் வாழ்க்கை முறையில் எவ்வித மாற்றம் ஏற்பட்டுவிடாது. 50 படங்களுக்கு முன்பு இருந்த அஜீத்தை தான் இப்போதும் பார்க்கிறேன்," என்றார் நடிகர் அஜீத்.
ராங்நம்பர் உருவாக்கிய காதல்: எதிர்ப்பை மீறி திருமணத்தில் முடிந்தது
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் எழில்மாறன். ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக உள்ளார். இவரது நண்பர் ஒருவர் வேலைக்காக ஒரு செல்போன் எண்ணை கொடுத்திருந்தார்.
இந்த எண் மூலம் கடந்த மாதம் தொடர்பு கொண்டபோது அது ராங்காலானது. எதிர்முனையில் பேசிய சிவகங்கை மாவட்டம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி தனலட்சுமிக்கு போய்வுள்ளது. வேணும்ன்னே போனை போட்டு கலாய்க்கறயா என சத்தம் போட அய்யய்யோ உண்மையிலயே ராங்நம்பர் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். .
இதன்மூலம் அவர்களுக்கு இடையே செல்போன் நட்பு தொடர்ந்தது. தினம் தினம் பேசும் அளவுக்கு போய்வுள்ளது இவர்களது நட்பு. கடந்த வியாழக்கிழமை திடீரென போன் செய்த தனலட்சுமி, என் வீட்ல ரொம்ப டார்ச்சர் செய்றாங்க அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். ஸ்ரீபெரும்புதூரில் ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்தால் எனது முடிவை மாற்றிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவருக்கு எழில்மாறன் ஆறுதல் கூறி நீ திருச்சி வா நான் வந்து உன்னை அழைச்சிம் போய் வேலை வாங்கி தர்றன் என்றுள்ளார்.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி வந்த தனலட்சுமியை, எழில்மாறன் முதன்முதல் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்குள் காதல் அரும்பியது. எழில்மாறன், தனலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு தனலட்சுமி ஒப்புக் கொள்ளவே, இருவரும் வேலூர் வந்தனர்.
எழில்மாறன் வீட்டில், பெண்ணின் வீட்டில் சம்மதம் கேட்க தொடர்பு கொண்டபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பயந்த எழில்மாறன் பெற்றோர் அவரிடம், ‘பெண்ணை எங்கிருந்து அழைத்து வந்தாயோ அங்கேயே விட்டுவிடு’ என்று கூறியுள்ளனர்.
ஆனால், தனலட்சுமியை இன்று காலை சேண்பாக்கம் விநாயகர் கோயிலில் எழில்மாறன் திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு கேட்டு வேலூர் மகளிர் காவல்நிலையத்தில் காதல் மனைவி தனலட்சுமியுடன் தஞ்சம் அடைந்தார். அங்கு மகளிர் போலீசார், எழில்மாறன் பெற்றோரை அழைத்து பேசியதை தொடர்ந்து எழில்மாறன் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
பலான பட தியேட்டருக்கு களப்பயணம் சென்ற மாணவர்கள்
சமச்சீர் கல்வி விவகாரத்தால் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பாட புத்தகம் வழங்காததால் போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் செயல்பாடு ஆகியவற்றை தெரிந்து கொள்ள மாணவர்களை ஆசிரியர்கள் களப்பயணம் அழைத்துச் செல்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ‘ராணுவ உளவாளிÕ என்ற விழிப்புணர்வு படம் காட்ட ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
அதற்காக, நேற்று முன்தினம் காலை ஊத்தங்கரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு காலையில் மாணவர்களை, ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு புரஜெக்டர் ரிப்பேரானதால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களை அங்குள்ள மற்றொரு தியேட்டருக்கு அழைத்து சென்றனர். நிர்வாகிகள் சம்மதித்ததை அடுத்து சீருடையுடன் சென்ற மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். ஏனெனில் அந்த தியேட்டர் பலான படம் ஓடும் தியேட்டர். பலான படப்போஸ்டர் நுழைவு வாயிலின் இரு பக்கமும் ஒட்டப்பட்டிருந்தது.
Ôராணுவ உளவாளிÕ என்ற குறும்படத்தை ஒரு மணி நேரம் பார்த்து விட்டு மாணவர்கள் தியேட்டரை விட்டு சாரை, சாரையாக வெளியே வந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பலான படம் ஓடும் தியேட்டரில் மாணவர்களுக்கு குறும்படம் காட்டலாமா? என்று ஆசிரியர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இடுப்பு பருமனான பெண்களை ஆண்களுக்கு அதிகம் பிடிக்குமாம்
தங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். இது தவறு. ஆம், வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக உள்ள பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்கும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க மருத்துவ உளவியல் நிபுணர் லவினியா ராட்ரிகெஸ் இது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டார்.
அதன் விவரம்: பெண்களின் உடல் அமைப்பைப் பொருத்தவரை வளைவாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அதாவது, வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக இருக்க வேண்டுமாம். உதாரணமாக, வயிறு 70 செ.மீ. அளவும், இடுப்பு 100 செ.மீ. அளவும் இருக்கலாம். இந்த அளவில் சற்று ஏற்ற இறக்கம் இருந்தாலும் பரவாயில்லை. கண் பார்வை இல்லாத ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
Ôமேட் மென்Õ என்ற தொலைக்காட்சித் தொடர் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் போல உடல் அமைப்பு இருந்தால் ஆண்களை கவரலாம். கிறிஸ்டினாவில் உடல் அமைப்பு கவர்ச்சியாக இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்.
Subscribe to:
Comments (Atom)