Tuesday, 29 November 2011

பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...


சென்னையில் நடக்கும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) விழாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடிக்கும் புதிய நாடகம் நடக்கிறது. இந்தத் தகவலை கமல்ஹாஸன் நேற்று தெரிவித்தார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, நடிகர் கமல்ஹாசன் தலைமையில், சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது.

இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.

மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.

கே பி இயக்கத்தில் நாடகம்

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

பிரச்சினைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.

மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான் (கமல்ஹாசன்), கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.

தமிழக அரசிடம் நிதி கேட்போம்

சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப் பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது.

கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும். அவர்கள் தருகிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். கேட்பது எங்கள் கடமை,'' என்றார்.

பேட்டியின்போது, இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த லீனா ஜெய்சானி, பி.முராரி ஆகியோர் உடன் இருந்தார்கள். பத்திரிகைத் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்

திமுகவின் கூத்து :கனிமொழிக்கு கொ.ப.செ செயலாளர் பதவி


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்று 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் அடைபட்டு மீண்டுள்ள கனிமொழிக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் பதவி தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி கடந்த மேமாதம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட கனிமொழி 6 மாத காலம் திகார் சிறையில் அடைபட்டிருந்தார். அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை மாலை ஜாமீன் வாழங்கியது. இந்த நிலையில் விரைவில் சென்னை வர உள்ள கனிமொழிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மறுபடியும் ஆற்காட்டார் தியாகியாகிறார்?

நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தற்போது திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரும் அவருக்கு தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

ஆற்காடு வீராசாமி வகித்து வரும் அந்த பதவியை அவர் விட்டுத்தர முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தான் வகித்து வந்த பொருளாளர் பதவியை மு.க ஸ்டாலினுக்காக விட்டுக்கொடுத்தார் ஆற்காடு வீராசாமி என்பது நினைவிருக்கலாம். இப்போது கருணாநிதி மகளுக்காகவும் தனது பதவியை விட்டுத் தருகிறார் ஆற்காட்டார். இதன் மூலம் அவரும் ஒரு தியாகியாகிறார்!

இதைப்போல துணைப் பொதுச்செயலாளர் பதவி வகிக்கும் சற்குணபாண்டியனும் தன் பதவியைக் கனிமொழிக்கு அளிக்குமாறு கூறியதாகத் தெரிகிறது. இந்த இரண்டு பதவிகளில் ஏதாவது ஒன்று கனிமொழிக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

அதேசமயம் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு அளித்து, அவரை தமிழகம் முழுவதும் கனிமொழியைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் செய்யவும் ஒரு பிரிவு கட்சித் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

அனைவரும் சம்மதம்

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த செய்தி அறிந்தவுடன் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் திங்கள்கிழமை மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கருணாநிதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் கனிமொழிக்கு பதவி தரவேண்டியது அவசியம் என கூறப்பட்டது. இதற்கு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்பட அனைவரும் சம்மதித்துவிட்டதாகத் தெரிகிறது.

சந்தடி சாக்கில் பதவி கேட்கும் ஸ்டாலின்

இதற்கிடையில் மு.க.ஸ்டாலினும் தனக்குச் இந்த முறையாவது செயல் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக தலைவர் பதவிக்காக அவர் நீண்ட காலமாக காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு செயல் தலைவர் பதவியைக் கொடுத்து பின்னர் தலைவராக்கலாம் என மூத்த தலைவர்கள் கருதுவதாகத்தெரிகிறது. மேலும் அழகிரியும் ஒருபக்கம் மல்லுக்கட்டி வருவதால் ஸ்டாலினுக்கு அது கூட கிடைக்க முடியாத நிலை நிலவுகிறது.

தற்போது கனிமொழியை ஜாமீ்னில் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டி வந்தார் ஸ்டாலின் என்பதால் இந்த முறை அவருக்குப் பதவியைக் கொடுத்து கட்சித் தலைமை குஷிப்படுத்த முயற்சிக்லாம் என்று தெரிகிறது.

திமுக பொதுக்குழு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் கூடும்போது கனிமொழி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பதவி அளிக்கப்படும் என கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன :சோனியா அகர்வால்


ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, `ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில், நடிகையாக சோனியா அகர்வால் நடித்து இருக்கிறார். ராஜ்கிருஷ்ணா டைரக்டு செய்துள்ளார். புன்னகைப்பூ கீதா தயாரித்து இருக்கிறார்.


படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது,



’’எல்லோருடைய வாழ்க்கையையும் போல் நடிகையின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், ரகசியம் இருக்கும். குறிப்பாக, நடிகையின் வாழ்க்கையில் பல ரகசியங்கள் இருக்கும். வெளியே தெரியாத பக்கங்கள் இருக்கும். அந்த பக்கங்களை இந்த படத்தில் காட்டியிருப்பதாக சொன்னார்கள்.





நடிகையின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் இருக்கும். அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும்’’என்று பேசினார்.

சோனியா அகர்வால் பேசும்போது, ’’நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன்’’ என்றார்.


பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,   ‘’எல்லோருடைய வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன.


நான் நடிகையாக இருப்பதால், என் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

என் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை. `ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தின் கதைக்கும், என் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. ஒரு சதவீதம் கூட, என் சொந்த வாழ்க்கைக்கு சம்பந்தமில்லை.

மீண்டும் மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!


ரஜினி நடிக்கும் புதுப்படத்துக்கு ‘'கோச்சடையான்என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘'கோச்சடையான்இந்தியாவில் தயாராகும், நடிப்பை பதிவிறக்கம் செய்யும் முதல் 3டி படமாகும். ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாரான அவதார்’, ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் உருவான டின் டின்ஆகிய படங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் உருவானவை. சரித்திரப் பின்னணியில் உருவாகும் கோச்சடையான்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சவுந்தர்யா அஸ்வின் இயக்குகிறார். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங், விரைவில் தொடங்குகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி இந்த படத்தில் பாண்டிய நாட்டு மன்னனாக நடிக்கிறார். கிபி.670 முதல் கிபி -710 ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பெயர் 'கோச்சடையான்'. கோ என்றால் அரசன், சடையான் என்றால் சிவன் பக்தர் என்று அர்த்தமாம் ஏற்கனவே தீவிர சிவன் பக்தனான சூப்பர் ஸ்டார், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என தனது முந்தைய படங்களில் சிவனை குறிப்படும் பெயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.

சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் தல!

சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அ‌ஜீத் நடிக்கக்கூடும் என்கிறார்கள். பில்லா 2 ல் கவனம் செலுத்தி வரும் அ‌ஜீத், அடுத்து விஜயா புரோடக்ஷன் நாகரெட்டி சார்பில் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். ஹீரோயினாக அனுஷ்கா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அது போன மாசம்; இது இந்த மாசம்: சீமான் ( ஸ்பெஷல் வீடியோ)






நன்றி - நக்கீரன் 

'எக்ஸ்ட்ரா செக்ஸை' விரும்பும் இந்தியப் பெண்கள்!


இந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேசமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்கள் செக்ஸை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

பழங்காலத்தில் இந்தியப்பெண்கள் நிலம் நோக்கி நடப்பவர்களாகவும், கணவனைத் தவிர பிற ஆடவர்களின் முகம் பார்க்காதவர்களாகவும் இருந்தனர். அடுப்பங்கரையும், வீடுமே அவர்களுக்கு உலகம் என்று இருந்தது. பாலியல் குறித்து பேசுவது கூட பாபம் என்று நினைத்திருந்தனர். ஆனால் இன்றைய இந்திய பெண்களோ தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர்.

எங்கேயும், எப்போதும்

தற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது அவசியமானது என்கிறார்கள். அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கையினை புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும், பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதமும் மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில் தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கம்ப்யூட்டரே கண்கண்ட தெய்வம்!

ஆனால் இங்கிலாந்துப் பெண்கள் இதற்கு தலைகீழாக மாறிவிட்டனர். கணவனுடன் உறவில் ஈடுபடுவதை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதையே விரும்புவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

கம்யூட்டர் விளையாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ருசிகர தகவல் தெரியவந்துள்ளது. தங்கள் துணையுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விட விடிய விடிய கம்ப்யூட்டரில் கேம் விளையாடவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து பெண்கள்.

செக்ஸை அனுபவிப்பதை விட, கம்ப்யூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

நான் ஏன் அப்படி சொன்னேன்... அஞ்சலி விஷயத்தில் ஜெய்

 


'அஞ்சலிக்கும் எனக்கும் காதல் இல்லை. சத்தியமாக நான் ஒரு நடிகையை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்' என்று கூறியிருந்தார் ஜெய். இதில் அடங்கியிருக்கும் மெய் பொருள், மறை பொருள், உட் பொருள், உப பொருள் எல்லாவற்றையும் புரிந்து கொண்ட நடிகைகள் சிலர், உர்ர்ர்ர்ராகிவிட்டார்கள் ஜெய் மீது.

வேட்டை மன்னன் படத்தின் டிஸ்கஷனுக்காக சிம்புவோடு வெளிநாடு போய்விட்டு திரும்பிய ஜெய், இந்த உர்ர்ர் மேட்டரில் கொஞ்சம் அப்செட். (யார் யாரெல்லாம் போன் செய்து கோப முகம் காட்டினார்களோ?)

சட்டுபுட்டென்று அதற்கும் ஒரு மறுப்பு தெரிவித்திருக்கிறார் பிரதர். நான் எது சொன்னாலும் அதை தப்பா புரிஞ்சுக்கறாங்க சிலர். உண்மையில் நான் சொல்ல வந்ததே வேறு. நானும் நடிகன். எப்ப எங்க இருப்பேன்னு தெரியாமல் உள்ளூர் வெளியூர்னு ஷுட்டிங்ல இருப்பேன். என் மனைவியும் நடிகையா இருந்தால், அவங்களும் பிசியான நடிகையாக இருந்தால் சந்தோஷமா இருக்குமா? அந்த அர்த்தத்தில்தான் நான் நடிகையை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்னு சொன்னேன். அவ்வளவு ஏன், வேலைக்கு போகிற பெண்ணை கூட கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். போதுமா? என்கிறார்.

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்...

இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண்டு சிறை


இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய காலம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.

வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணைய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது.  பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இணைய தளம் மூலம் கோரிக்கை விடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க நடிகர், நடிகைகள் பெயரில் போலி இணைய தளங்களும் வலம் வருகின்றன. அதில், மார்பிங் மூலம் ஆபாச படம் இணைக்கப்படுகிறது. தற்போது, இணைய தளங் கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பலரும் போலியான தகவல் களை இணைய தளத்தில் பதிவு செய்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.

இதன் மூலம் ஆபாச படம், காட்சி களை பகிர்ந்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. சிலர் பெயர், ஊர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவைகளில் தங்களது இணைய தள முகவரியில் உண்மைக்கு புறம் பான தகவல்களை பதிவு செய்கின்றனர். அதனை நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் பார்த்து தொடர்பு கொள்கின்றனர். எனவே, இணைய தளம் மூலம் ஏமாறாமல் இளைஞர்களும், பெண் களும் தங்களை காத்துக் கொள்வது நல்லது.

இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் உயர் அதி காரி ஒருவர் கூறுகையில், ‘‘இணைய தளம் மூலம் தகவல் பறிமாறிக்கொள்வது அதிகரித்து விட்டது. இது வளர்ச்சியை காட்டுகிறது. இருப்பினும் சிலர் பொய்யான தகவல்களை பதிவு செய்து பிறரை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இது சட்டப்படி குற்றம். ஆபாச படங்கள், காட்சி களை பறிமாறிக் கொள்வது வெளிநாடுகளில் சட்ட பூர்வமாக அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால், இங்கு இதுபோன்ற செய லில் ஈடுபட்டால் முதல் முறை 5 ஆண்டுகள், தொ டர்ந்து செய்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை தண் டனை உண்டு’’ என்றார்.