Saturday, 23 July 2011

தமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்து!

தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசிய மலர், மற்றும் தமிழீழ தேசம் என்பன பொறிக்கப்பட்ட பேரூந்து ஒன்று லண்டன் நகர வீதிகளில் நேற்று முதல் உலா வருகிறது.
பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பிறி பகுதியூடாக சென்றுகொண்டிருந்த அந்த அதிசய பேரூந்து எமது கண்ணில் படவே அதை பின் தொடர்ந்து சென்று அந்த வாகன ஓட்டுனருடன் உரையாடினோம்.
அப்போது எந்த இளைஞ்ஞனுள் உறைந்து கிடந்த உணர்வுகளின் வெளிப்பாடே இந்த பேரூந்தும், அதனூடான தமிழீழ அடையாளங்களை வேற்றினத்தவர் மத்தியில் வெளிக்கொணரும் முயற்சியும் என்பது தெரிந்தது.
அந்த பேரூந்தின் நாற்புறமும் பிரித்தானியக் கொடியும், அதனோடு பிரித்தானியப் போர்வீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் "பொப்பி" மலரும் பொறிக்கப்பட்டிருந்தது.
அதே போல் அதற்கு அருகில் தமிழீழமும் அடுத்து தமிழீழத் தேசியக் கொடியும், தமிழீழ விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் கார்த்திகை மலரும் பொறிக்கப்பட்டிருந்தது.
இதன் கீழே "நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிது, தமிழ் பெரிது, தமிழ் மானம் பெரிதென்று வாழ்" எனும் வாசகமும் எழுதப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
இவற்றிற்கும் மேலாக "சிறீலங்காவின் கொலைக்களம்" எனும் ஆவணத்திரைப்படத்தை வெளியிட்டு சர்வதேசங்களின் கவனத்தை ஈர்த்து சிறீலங்காவில் இடம்பெறும் தமிழினப் படுகொலையை வெளிக்கொணர்ந்த "சனல் 4" ஊடகத்திற்கு நன்றி தெரிவித்தும் ஆங்கிலத்தில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததாவது வேற்றின மக்களையும் கவர்ந்தது.
அந்த வாகனத்தில் நாமும் சிறுது தூரம் பயனித்து வீதிகளில் செல்லும் மக்களின் பார்வை எவ்வாறு உள்ளதென்பதை அவதானித்த போது தமிழர் மட்டுமன்றி வேற்றினத்தவரும் வியந்து பார்த்ததோடு தமது கைகளை உயர்த்தி தமது ஆதரவையும், ஊக்கத்தையும் அளித்ததை கண்டோம்.
பேரூந்தின் உரிமையாளரும், மேற்படி விடையங்களை வெளிக்கொண்டுவந்தவருமான அந்த இளைஞன் கூறுகையில்;

கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில் புதிய தலைவர் தேவையில்லை: அழகிரி

 திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்பாகத் தான் உள்ளார். அதனால் புதிய தலைவர் தேவையில்லை என்று தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

நாளையும், நாளை மறுநாளும் கோவையில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சி பொருளாளரான முக ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்துகொள்ள மாட்டார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இதனால் திமுக கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்னும் தகவலை அழகிரி மறுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்பாக கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் தற்போதைக்கு கட்சித் தலைமையை மாற்றத் தேவையில்லை. இக்கட்டான சூழ்நிலையிலும் கட்சியை வழி நடத்தும் ஆற்றல் அவருக்கு உள்ளது.

கோவையில் நடக்கும் திமுக கூட்டங்களில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தகவல் பரவியுள்ளது. அது உண்மையில்லை. நாங்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல கருத்துகளை எடுத்துரைக்கவுள்ளோம்.

ஆனால், பொதுக்குழுவி்ல் ஆலோசனை செய்யப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து இன்னும் தென்மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கவில்லை.

தமிழக போலீசார் வேண்டுமென்றே திமுகவினர் மீது பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர். அவ்வாறு செய்யும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது தவறான தகவல்களை பதிவு செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம்.

அதிமுகவினர் மீதும் தான் நில அபகரிப்பு புகார்கள் கொடுக்கபப்ட்டுள்ளன. ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென் மண்டல திமுக நிர்வாகிகளை மட்டும் குறிவைத்து செயல்படுகின்றனர்.

அன்மையில் திமுக நிர்வாகிகள் சிலரது வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால் அந்த சோதனையில் எதுவும் கிடைக்காததால் வீடுகளில் இருந்த பாஸ்புக் மற்றும் செக்புக்குகளை எடு்த்துச் சென்றுள்ளனர்.

திமுக நிர்வாகிகளின் வீட்டுகளுக்குள் போலீசார் அத்துமீறி நுழைந்துள்ளனர். இது சட்ட விரோத செயலாகும். ஒரு திமுக நிர்வாகியின் வீட்டுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

போலீசாரின் இந்த அச்சுறுத்தல்களைக் கண்டு திமுகவினர் பயந்துவிட மாட்டார்கள். போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்த்து திமுக தலைவர் போராட்டம் அறிவித்துள்ளார். அதில் பங்கேற்று நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்றார்.


கோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்டர்கள் போராட்டம்

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் உடல் நலம் மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் தற்போது கோமாவுக்குப் போய் விட்டார். அவரது உயிரைக் காக்க டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் கோமாவுக்குப் போய் விட்டதாக அவரது மகனும், நடிகருமான அம்சவிர்தன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. இருப்பினும் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு திடீரென நுரையீரல் பிரச்சினை வந்து அது செயலிழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது அவர் கோமா நிலைக்குப் போய் விட்டார். டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர் என்றார்.

71 வயதாகும் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், இரு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர். அனைவரும் அருகில் இருந்து கவனித்தபடி உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் ஸ்டைல் நடிப்பை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஹீரோ. காதலிக்க நேரமில்லை படத்திலேயே அந்தக் காலத்து இளைய தலைமுறையைக் கவர்ந்தவர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர். ஊமை விழிகள் படத்தில் வில்லனாக கலக்கிய அவர், அருணாச்சல் படத்தில் ரஜினிக்கு தந்தையாகவும், பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனுக்கு தந்தையாகவும் நடித்திருந்தார்.

கடைசியாக அவர் கண்டேன் காதலைப் படத்தில் அவர் நடித்திருந்தார்.


குழந்தைப்பேறு அளிக்கும் கல்யாண முருங்கை

 

தோட்டங்களில் அலங்கார மலராக வளர்க்கப்படும் கல்யாணமுருங்கை ஏராளமான மருத்துவகுணம் கொண்டுள்ளது. இந்தியாவின் இலையுதிர் காடுகளிலும், அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் எரித்ரினைன், எரிசோவைன், எரிசோடைன், எரிசோனைன், எரிசோப்பின்,ஸ்டாக்கியாடின், எரிபிடின், ஃபெருலிக் அமிலம், கஃபியிக் அமிலம், அல்பினா, ஐசோப்ளவோன், டோகோசில் ஆல்கஹால் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படும்.

இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூகருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

வீக்கம் குறையும்
இலைகள் பேதி மருந்து சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும், பால் உற்பத்திக்கு நல்லது. மாதவிடாய் போக்கை அதிகப்படுத்தும். தண்ணீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும் பற்றாகப் பயன்படும். இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லியை 10 நாள் சாப்பிட வலி தீரும். இதன் இலைச்சாறு 15 மி.லி., ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும். இலைச் சாறு 50 மி.லி., தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

மலடு நீங்கும்
இதன் இலைச்சாற்றை தினமும் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

கிருமிகள் வெளியேறும்
இலைச் சாறுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி, சிரங்கு தீரும். 60 மி.லி. இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலையில் அருந்தினால் பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மில்லியுடன் பூண்டுச்சாறு 30 மில்லி சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.

இலைச்சாறு 10 மில்லியுடன் வெந்நீர் 10 மில்லி கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.1 தேக்கரண்டி மோரில் இலைச்சாற்றினை கலந்து குடிக்க நீர்தாரை அலர்ஜி, நீர் எரிச்சல் தீரும். இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

கண்நோய்க்கு மருந்தாகும் மரப்பட்டை
கல்யாண முருங்கையின் பட்டை மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டவை. பட்டை துவர்ப்புள்ளது. ஜுரத்தைப் போக்கும், பூச்சிகளை அகற்றும், பாம்புகடிக்கு மருந்தாகும். ஈரல் கோளாறுகளுக்கு, கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.

வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மில்லி பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மில்லி வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.


ஆஸ்பத்திரிக்கு வந்த இலியானா-அலறிப் போன ரசிகர்கள்!

நடிகை இலியானாவை சென்னை திருவல்லிக்கேணி்யில் உள்ள கோஷா மருத்துவமனையில் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறிப் போய்விட்டனர்.

தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் நடிகை இலியானா. கேடி படம் மூலம் தமிழிலும், தெலுங்கிலும் அறிமுகமான இவரை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றால் கோடி வேண்டும். சில சமயம் கோடி கொடுத்தாலும் முடியாது.

தற்போது இலியானா ஷங்கர் இயக்கி வரும் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கோஷா மகப்பேறு மருத்துவமனைக்கு இலியானா அடிக்கடி வந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போய் விட்டனர். இது மகப்பேறு மருத்துவமனையாச்சே, இங்கே எதுக்கு இலியானா உலாவி வருகிறார். அவருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறிப்போய்விட்டனர்.

அதில் சிலர் மருத்துவமனை ஊழியர்களை அணுகி இலியானா உடம்பிற்கு என்ன, அவர் ஏன் அடிக்கடி இங்கு வருகிறார் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இலியானா உடம்புக்கெல்லாம் ஒன்றுமில்லை, அவர் நண்பன் பட ஷூட்டிங்கிற்காக இங்கு வருகிறார் என்றனர்.

ஷூட்டிங்கா, வேற என்னமோன்னு பதறிப் போயிட்டோம் போங்க என்று நிம்மதிப் பெருமூச்சூடன் அவர்கள் கலைந்தார்களாம்.

பாசக்கார பயபுள்ளைகப்பா..!

குடி, பெண்கள் சகவாசம், ஊதாரித்தனம், பாலியல் ரீதியாக தொந்தரவு: கணவரைக் கொன்ற பெண் வாக்குமூலம்


குடிப்பழக்கம், பெண்கள் சகவாசம், ஊதாரித்தனமாக செலவு செய்தது, பாலியல்ரீதியாக தொந்தரவு செய்தது உள்ளிட்ட காரணங்களால் கணவரைக் கொன்றதாக சென்னை வடபழனியில் வசித்துவரும் உமாமகேஸ்வரி என்பவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை வடபழனி வ.உ.சி. 1 வது குறுக்குத் தெருவில் குட்வில் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கீழ்தளத்தில் வசித்து வந்தவர் பிரசன்னா (வயது 42). இவர் சென்னை அண்ணாசாலையில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார்.

இவரது மனைவி உமாமகேஸ்வரி (38). இவர்களுக்கு ஐஸ்வர்யா (16) என்ற மகளும், ஆகாஷ் (11) என்ற மகனும் உள்ளனர். இன்று அதிகாலை பிரசன்னா வீட்டு வாசலுக்கு வெளியே மாடிப்படியின் கீழே உள்ள மின்இணைப்பு பெட்டியின் அருகில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அவரது 2 கைகள் மற்றும் காதுகளில் மின் வயர்கள் சுற்றப்பட்டிருந்தது.



இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வடபழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிரசன்னாவின் மனைவி உமாவிடம் விசாரித்தார்கள். அவர் போலீசாரிடம் கூறுகையில், இரவில் சத்தம்கேட்டது. உடனே வெளியே ஓடிவந்து பார்த்தேன். அப்போது எனது கணவர் பிணமாக கிடந்தார். கையில் மின்சார வயரை பிடித்தபடி காணப்பட்டார் என்று தெரிவித்தார்.

பின்னர் அவரது மகள் ஐஸ்வர்யா, மகன் ஆகாஷ் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு பிரசன்னா பிணத்தை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் பிரசன்னாவின் மனைவி உமா கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். எனது கணவரை நான்தான் கொலை செய்தேன் என்று கூறி போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து உமாவை போலீசார் கைது செய்தனர்.



உமாமகேஸ்வரி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்: 
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரும் பல்வேறு தொழில்களை செய்துவந்தார். சுகுணா சிக்கன் கடையும் நடத்தி வந்தார். அண்ணா சாலையில் உடற்பயிற்சி கூடமும் வைத்திருந்தார். அவரது வருமானத்தை வைத்து நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்கினோம்.




ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு தவறான நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தும் தொழிலையும் அவர் செய்யத் தொடங்கினார். அவரது தந்தை சினிமாவில் பணிபுரிந்தவர். இதை வைத்து சினிமா உலகிலும் எனது கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. துணை நடிகைகள் சிலரும் அவருக்கு பழக்கமானார்கள்.




நீங்கள் செய்யும் தொழிலை மட்டும் சரியாக செய்யுங்கள். தவறான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று நான் அவரிடம் கூறினேன். ஆனால் நான் சொல்வது எதையும் அவர் கேட்கவில்லை. பெண்களுடன் வைத்திருந்த உறவையும் அவர் துண்டிக்கவில்லை.

வாங்கிய சொத்துக்களை எல்லாம் விற்று செலவு செய்ய ஆரம்பித்தார். ரூ.5 கோடி மதிப்பில் எங்களுக்கு நிலம் இருந்தது. அதை எல்லாம் விற்றுவிட்டார். மேலும் எனது மகள் ஐஸ்வர்யாவுக்காக வாங்கி வைத்திருந்த தங்க நகைகளையும் விற்றுவிட்டார். தற்போது நாங்கள் வசித்து வரும் வடபழனி வீட்டையும் விற்கப்போவதாக கூறினார்.





நமக்கு இருப்பது இந்த ஒரு வீடுதான். இதையும் விற்றுவிட்டால் எங்கு போய் வசிப்பது நமது பிள்ளைகளும் பெரியவர்கள் ஆகிவிட்டார்களே என்று கூறினேன். நான் சொல்வது எதையும் அவர் கேட்கவே இல்லை. நேற்றும் நான் சொன்னதை கேட்காமல் வீட்டை விற்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இதனால் எங்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

மேலும் அடிக்கடி பாலியல்ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்தார். எனவே எனது கணவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினேன்.


இதுதொடர்பாக எனது குடும்ப நண்பரான தாம்பரத்தை சேர்ந்த சம்பத்தை தொடர்பு கொண்டு பேசினேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நான் படும் அவஸ்தைகளை அவரிடம் சொல்லி அழுதேன். ஒன்றும் பிரச்சினை இல்லை பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.


கடந்த ஒரு வாரமாக கொலைக்கான சதித் திட்டத்தை தீட்டினோம். நாங்கள் திட்டமிட்டபடி நேற்று இரவு சம்பத், அவரது நண்பர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு எனது வீட்டுக்கு வந்தார். நானும், குழந்தைகளும் ஒரு அறையில் படுத்திருந்தோம். எனது கணவர் வேறொரு அறையில் படுத்திருந்தார்.


சம்பத் வந்ததும் நான் கதவை திறந்துவிட்டேன். 3 பேரும் சேர்ந்து எனது கணவரை அடித்து கொன்றனர். பின்னர் எனது கணவரின் உடலை வெளியில் தூக்கி வந்து மின்சாரம் தாக்கி இறந்தது போல நம்ப வைத்து நாடகமாடினோம்.

இதற்காக மின்சார வயரை உருவி பிரசன்னாவின் உடலில் சுற்றினோம். இவ்வாறு உமாமகேஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சம்பத் மற்றும் இருவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காலையில் ‘பிளேடு பக்கிரி’.. மாலையில் முதலாளி!


கோவை டவுன் பஸ்களில் பிக்பாக்கெட் அடித்து வந்த டிப்டாப்கும்பல் கைது செய்யப்பட்டது. பிக்பாக்கெட் பணத்தில் அவர்கள் செருப்புக் கடை நடத்தி வந்ததும் அம்பலமானது. கோவை உக்கடம் - வடகோவை பகுதிகளில் டவுன் பஸ்களிலும் பஸ் ஸ்டாப்களிலும் பயணிகளிடம் பணம், நகை, செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக புகார் எழுந்தது. காலை நேரத்தில் கூட்டமாக இருக்கும் நேரத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிக்பாக்கெட் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஸ்டாப்கள் மற்றும் டவுன் பஸ்களை மப்டி போலீசார் கடந்த சில நாட்களாக தீவிரமாக கண்காணித்தனர்.

ஒரு சில நபர்கள் டிப்டாப் டிரெஸ்சில் பஸ் ஸ்டாப்களில் நிற்பதும் கூட்டமாக வரும் பஸ்களில் மட்டுமே அவர்கள் ஏறுவதும் தெரியவந்தது. நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் சிவானந்தா காலனி கலாம் (45), போத்தனூர் நிஜாம் (40), ஆரூண் (41), பல்லடம் கணேசன் (40) என்று தெரியவந்தது. பஸ்களில் பிக்பாக்கெட் அடித்து வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். கலாம்தான் அந்த கும்பலின் தலைவன் என்றும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த பகீர் வாக்குமூலம்:

பிக்பாக்கெட்டை ஒரு தொழில் போலவே ஆரம்பித்தேன். ஒருவராக பிக்பாக்கெட் அடிப்பதைவிட பலரை வேலைக்கு வைத்தால் இன்னும் நிறைய சம்பாதிக்கலாம் என்பதால் திருப்பூரில் கூலிக்கு ஆள் பிடித்தேன். தினமும் ரூ.500 சம்பளம். அதிகம் வேலை பார்த்தால் பேட்டா, தங்கும் இடம் இலவசம் என்று ஆசை வார்த்தைகள் கூறி பலரை வேலைக்குசேர்த்தேன். கோவையில் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து அவர்களை தங்க வைத்தேன். சொன்னபடி, நாளுக்கு ரூ.500 கூலி கொடுத்தேன். அதிகம் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கு பேட்டா கொடுப்பேன்.

காலையில் பஸ்கள், ஸ்டாப்கள் கூட்டமாக இருக்கும். அதிலும், ஒப்பணக்கார வீதி பிரகாசம் ஸ்டாப்பில் இருந்து வடகோவை சிந்தாமணி வரை செல்லும் பஸ்கள் நிரம்பி வழியும். காலையில் தொழிலை ஆரம்பிப்போம். கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து முண்டியடித்து பஸ்சில் ஏறுவோம். பெண்களிடம் நகை, ஆண்களிடம் மணிபர்ஸ், பணம், செல்போன் என எது கிடைத்தாலும் அபேஸ் செய்வோம். வலுவாக ஏதாவது ஒன்று சிக்கிவிட்டால், அடுத்த ஸ்டாப்பில் இறங்கி மீண்டும் பஸ் பிடித்து ஒப்பணக்கார வீதிக்கு வருவோம்.

செயின், நெக்லஸ், பணம், செல்போன் என வருமானம் கொட்டியது. இந்த பணத்தை வைத்து வேறு தொழில் தொடங்க முடிவு செய்தோம். ஒப்பணக்கார வீதி, சாய்பாபா காலனியில் செருப்பு கடை ஆரம்பித்தோம். பகல் நேரத்தில் பிக்பாக்கெட் தொழிலை முடித்த பிறகு, மாலை நேரத்தில் செருப்பு கடையை கவனித்து வந்தோம். அந்த பிசினசும் நன்கு ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் பிக்பாக்கெட் திருடர்கள் என்பது செருப்பு கடை கஸ்டமர்கள் உள்பட யாருக்கும் தெரியாது. இப்போது சிக்கிவிட்டோம். இவ்வாறு கலாம் கூறினார். கலாம் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

அரசு கேபிள் டி.வி.க்கு தனியார் சேனல் நிகழ்ச்சிகளை இலவசமாக வழங்க கெடு


அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவராக கேபிள் தொழிலில் அனுபவம் உள்ள கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

அரசு கேபிள் டி.வி. திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களையும் அழைத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கேபிள் டி.வி. செயல்பாடுகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அடுத்த முயற்சியாக கட்டண சேனல்களுக்கு தமிழக அரசு இறுதிக்கெடு விதித்துள்ளது.



மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த இறுதி கெடு விடுவிக்கப் பட்டது.   இந்த ஆலோசனை கூட்டத்துக்கு கேபிள் ஆபரேட்டர்களுக்கும் தனியார் டி.வி. சேனல்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ராஜ் டி.வி., இ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ டி.வி. உள்ளிட்ட பெரும்பாலான தனியார் டி.வி. சேனல்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் கே.ராதாகிருஷ்ணன்,

’’தமிழகத்தில் ஒரே ஒரு டி.வி. சேனல் பிடியில் கேபிள் டி.வி. தொழில் இருந்து வருகிறது. சர்வாதிகார நிலையை தடுக்கவே, அரசு கேபிள் டி.வி. கொண்டு வரப்பட்டுள்ளது.

சில சேனல்கள் சென்னையில் இலவச சேனலாகவும் பிற மாவட்டங்களில் கட்டண சேனல்களாகவும் உள்ளன.வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையை தவிர்த்து மாநிலம் முழுவதும் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட வேண்டும். அரசு கேபிள் டி.வி.க்கு அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவையை வழங்க வேண்டும். நுகர்வோரிடம் இருந்து சந்தா எதுவும் வசூலிக்க கூடாது. அனைத்து சேனல்களுக்கும் இதுவே இறுதி கெடுவாகும்’’ என்று தெரிவித்தார்.

சிறுவனுக்கு கோயில் : திருவண்ணாமலை அதிசயம்

 


திருவண்ணாமலையை அடுத்த சத்திரம் மோட்டூர் கிராமத்தைசேர்ந்தவர் செல்வராஜ் மகன் 16வயதான பாரதிராஜா.   இவர் 10 வது வரை படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்த இந்த சிறுவன் மீது அடிக்கடி அருள் வருவதாக கூறி வந்துள்ளார்கள்.




இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு வீட்டுக்கு அருகே உள்ள வேப்பமரத்திற்கு பூஜை செய்ய சிறுவன் சென்றுள்ளான்.

அப்போது மரத்து மேலிருந்து ஒரு பாம்பு தன் மீது விழுந்ததாகவும்,  அது ஓடவில்லை என்றூம் தன் மீதே நிலை கொண்டுவிட்டதாக சிறுவனும் பெற்றோரும் கூறினர்.


இதனால் 10 கிராம மக்கள் பாரதிராஜாவையும்,  பாம்பையும் காண கூடிவிட்டனர்.  500, 1000 என பணம் தந்து ஆசி பெற மக்கள் முண்டியடித்தனர்.


சிறுவன் அனைவருக்கும் ஆசி கூறினான்.   நாளை இந்த சிறுவன் அருள் வாக்கு கூறுகிறான்
.

3 மணி நேரம் கழித்து பாம்பு ஓடிவிட்டது.   இதையடுத்து சிறுவனுக்கு கோயில் எழுப்பப்படுகிறது.

சரத்குமார்- பாலா சந்திப்பு அதிரடி வேகத்தில் அடுத்த படம்

பாலா இயக்குகிற படங்கள் எல்லாம் அப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபமா, இல்லையா என்ற கேள்விகளுக்குள் நுழைந்தால், அது பெரிய சர்ச்சையாகிவிடும். ஆனால் அவரது படங்கள் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்கள். எனவேதான் பாலா படத்தில் நடித்தால் போதும். அதுதான் டுட்டோரியல், காலேஜ், யுனிவர்சிடி என்றெல்லாம் மதி மயங்குகிறார்கள் முன்னணி நடிகர்கள் கூட.

ரொம்ப சீக்கிரம் பாலா படத்தில் நடிப்பேன் என்று கூறிவருகிறார் சீயான் விக்ரம். திரும்பவும் பாலாவுடன் ஒரு படத்தில் நடிக்க பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார் விஷால். ஆர்யாவோ, அண்ணன் என்னைக்கு அழைக்கிறாரோ அன்னைக்கு தண்ணி பார்ட்டிய்யா எல்லாருக்கும் என்று மெய் சிலிர்க்கிறார். இவர்களையெல்லாம் எதிர்பார்க்க வைத்தவிட்டு பாலா என்ன செய்து கொண்டிருக்கிறார்? விசாரித்தால் நமக்கே மெய்சிலிர்த்துப் போகிறது.

அடிப்படையில் ரொம்ப ஸ்லோவான பாலா, படு சுறுசுறுப்பாக தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க போகிறாராம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரும் நடிகர் சரத்குமாரும் சந்தித்திருக்கிறார்கள். பெரிய கெட் அப் எதுவும் தேவையில்லை. நீங்க அப்படியே வந்தால் போதும். ரெண்டு நாள் தாடி மட்டும் முகத்தில் தெரிஞ்சா போதும் என்றும் கூறியிருக்கிறாராம். இப்படத்தில் மேலும் இரு இளைஞர்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இருக்கிறதாம் பாலாவுக்கு.

ஆலமரத்த புடிச்சு தொங்கு, காள மாட்டு வால புடிச்சு இழுன்னு என்னென்ன பயிற்சிகள் இருக்கிறதோ இளைஞர்களுக்கு. அய்யோ பாவம்...

நம்மீதாவின் படுக்கை அறைக் காட்சியா ? இல்லவே இல்லை என்கிறார் !


சினிமாவுக்கு வந்து நடிக்கக் கூடாத படங்கள் சிலவற்றில் நடித்துவிட்டேன். அந்தத் தவறை இப்போது உணர்கிறேன் என்கிறார் நமீதா. ஏன் தெரியுமா ? சமீபத்தில் நமீதா குறித்து வெளியான புகைப்படத்தால் பெரும் கிசு கிசு தோண்றியுள்ளது ! நயந்தாரா சிம்பு கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகியதுபோல், தற்போது இந்தப் புகைப்படத்தால் தெலுங்கு தேசத்தில் பெரும் புரளி கிளம்பியுள்ளது. கவர்ச்சியில் புது எல்லைகளைத் தொட்டவர், வேறு எந்த நடிகைக்கும் இல்லாத அளவு புகழைப் பெற்றவர் நமீதாதான். அவருக்காகவே ஒரு டிவி ஷோ ஆரம்பி்க்கப்பட்டு, 6 மாதங்களில் அது மெகா ஹிட்டானதும் நமீதாவால்தான் என்பதனை எவரும் மறுக்கமுடியாது. தமிழில் இப்போதைக்கு வாய்ப்புகளைத் தவிர்த்து வரும் நமீதா, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த இரு மொழிகளிலும் தன்னை மையப்படுத்திய கதைகள் கிடைப்பதால் முன்னுரிமை அளிக்கிறாராம். ஹைதராபாதில் சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்தார் நமீதா. அப்போது அவர் கூறுகையில், "நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. அப்பா அம்மாவுக்கு நான் நடிக்க வந்தது பிடிக்கவில்லை என்றார்.

முதன் முறையாக "சொந்தம்" என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 17. மேக்கப் ரூமில் இருந்து அரை குறை ஆடையுடன் வெளியே வந்த என்னைப் பார்த்துவிட்ட அப்பா சங்கடத்தோடு தலையிலடித்துக் கொண்ட காட்சி இன்னும் என் மனதில் அப்படியே நிற்கிறது. சினிமாகாரர்களை கேவலமாக பார்க்கும் நிலைமைதான் எங்கும் உள்ளது. அதற்கு சினிமாக்காரர்களும் ஒரு காரணம்தான். மறுக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார். என்னை ஒரு ஊறுகாய்போல தமிழ் படங்களில் கவர்ச்சிக்கு மட்டும் நடிக்கும்படி, கேட்கிறார்கள் என அவர் வேதனைப்பட்டார்.

நோர்வேயின் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு (வீடியோ இணைப்பு)

நாமல் ராஜபக்சவின் ஆடியாட்கள் கடத்திச்சென்று அச்சுறுத்தி நாமல் ராஜபக்சவோடு நிற்கவைத்து படமெடுத்து வாக்குமுலம் (படங்கள் இணைப்பு)


உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெற குறுகிய மணித்தியாலங்கள் உள்ள நிலையில் பா.உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் அதிகாரமளிக்கப்பட்ட முகவருமாகிய சி.சிறீதரனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகளும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் த.தே.கூட்டமைப்பின கிளி. மவட்ட பணிமனையான அறிவக்த்தில் சந்தித்து கருத்து அறிந்துள்ளனர்.இங்கு கருத்து தெரிவித்த சிறீதரன் இந்தத்தேர்தலில் அரசாங்க கட்சியான ஜ.ம.சு.கூட்மைப்பின் நடவடிக்கைகள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஓங்கிக்காணப்படுகின்றன.இராணுவம் நேரடியாக இறங்கி அரச கட்சிக்hக பிரச்hரத்திலும் எதிரணி வேட்பாளர்களை அச்சுறுத்தும் மற்றும் கடத்தும் நடவடிக்கைகளிலும் பணத்தை கத்தைகத்தையாக தேர்தல் களத்தில் இறக்கி மக்களின் வாக்குச்சீட்டுக்களை பறித்து அரசாங்க கட்சிக்கு போடும் திட்டத்திலும் ஈடுபடுவது நேரடியாக அவதானிக்கப் பட்டு மக்களால் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.


இராமநாதபுரம் சம்புக்குளம் கல்மடுநகர் மாயவனூர் விநாயகபுரம் போன்ற இடங்களில் இராணுவத்தினர் வாக்குச்சீட்டுக்களை பணத்துக்கு வாங்கமக்களை அச்சுறுத்தியுள்ளனர்.இதே வேளை எமது வேட்பாளரான கோணாவிலை சேர்ந்த சின்னையா சுப்பையா என்பவரை நாமல் ராஜபக்சவின் ஆடியாட்கள் கடத்திச்சென்று அச்சுறுத்தி நாமல் ராஜபக்சவோடு நிற்கவைத்து படமெடுத்து வாக்குமுலம் கொடுக்கவைத்து கொழும்பு அரசபத்திரிகையில் ஒரு பொய்யான பிரசுரத்து தமிழ்மக்களின் வேட்பாளர்ளுக்கும் கட்சிக்கும் அசிங்கங்களை ஏற்படுத்தும் தேர்தல் ஜனநாயக நடைமுறைகளை மீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதே வேளை 20ம் நாள் நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தேர்தல் விதிமுறையின்படி நிறுத்தப்பட வேண்டி இருக்க ஜ.ம.சு.கூட்டமைப்பு ஈ.பி.டி.பி அதன்பின்பும் அடுத்தடுத்த நாட்களும் துண்டுப்பிரங்களை ஓட்டியதுடன் ஒலிபெருக்கி முலம் பிரச்சாரத்தை மேற்கொண்டது.இது பற்றி பொலிசார் தேர்தல் முறைப்பாட்டு மையங்கள் போன்றவற்றில் முறையிட்ட போதும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஏனெனில் அரசாங்கக்கட்சி தொடர்ந்தும் தேர்தல் விதிமுறைகளை மீறிக்கொண்டே இருக்கின்றன. இதன்காரணமாக மக்கள் ஜனநாயக விரும்பிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். பணம் இராணுவம் சர்வாதிகாரம் என்பவற்றை பயன்படுத்தி ஆரசாங்கம் இத்தேர்தலில் தாம் வெல்ல வேண்டுமென்பதற்காக முற்றுமுழுதாக தேர்தல் நடைமுறைகளை மீறியுள்ளதால் இங்கு ஒரு நீதியான தேர்தல் நடைபெறும் என்பது சுந்தேகமே எனத்தெரிவித்தார்.

கறுப்பு யூலை தினத்தில் அடக்குமுறையாளர் முகத்தில் கரிபூசுவோம்! தயாராகுங்கள்..! அன்பான புலம் பெயர் உறவுகளுக்கு வல்வெட்டித்துறை மண்ணில் இருந்து அவசர வேண்டுகோள்! (ஓடியோ இணைப்பு)



வடக்குக் கிழக்கில் நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இன்று பேசப்படுகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொணடிருக்கின்றது.பல இலட்சக் கணக்கான தமிழ் உறவுகளை வயது, பால் வேறுபாடின்றிக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்து, எமது வாழ்விடங்களை நாசம் செய்து பல இலட்சம் மக்களை ஏதிலிகளாக்கி புலம் பெயரச்செய்தும், பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கியும், பலரை மானபங்கப்படுத்தியும் எமது மண்ணிலே வெறியாட்டம் நடத்தி, ஈழத் தமிழரின் துயரத்தில் சிங்கள தேசமெங்கும் வெற்றி விழாக் கொண்டாடியவர்கள் இப்பொழுது யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் முகாமிட்டு வாக்குகளைக கபளீகரம் செய்வதற்குக் காத்திருக்கின்றனர்.

சிங்கள தேசத்திற்கும், தமிழீழ தேசத்திற்கும் இடையிலான மாபெரும் போராகவே இது நோக்கப்படுகின்றது. கொழும்பில் நாட்டை நிர்வகித்து சமமாக நல்லாட்சி செய்யவேண்டியவர்கள், சிங்களப்படைகளுடனும், பல்லாயிரம் சிங்களவர்களுடனும் எமது மண்ணில் வந்து முகாமிட்டு எமது மக்களை இன்னுமொரு போருக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வெட்கம் கெட்டவிடயம், அற்ப சலுகைகளுக்காக எமது மக்களின் தன்மானத்தை விலை பேசுவதற்காக ஜனாதிபதி தொடக்கம், அமைச்சர்கள், சிற்றமைச்சர்கள், ஆளுனர் என படையெடுத்து வந்திருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவதற்காக உறுதியுடன் எமது மக்கள் இருக்கின்றார்கள். வாழ்வா சாவா என்ற நிலையில் சிங்கள தேசத்தின் முற்றுகையை முறியடிப்பதற்கு எமது மக்கள் தயாராகிவிட்டார்கள்.

நேற்று, இன்று, நாளை என எமது மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றி வாக்குகளைப் பறிப்பதற்காக வந்திருக்கும் கொலைகார அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவதற்காக எமது உறவுகள் களத்தில் இறங்கியுள்ள நிலையில் எமது புலம் பெயர் உறவுகள் ஈழத்தில் உள்ள உறவுகளின் வெற்றிக்குப் பலம் சேர்க்கவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உலகத் தமிழர்களின் வெற்றி. அந்த வெற்றி எமது தேசத்தினதும் மக்களினதும் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். இதற்கு உலகத் தமிழ் உறவுகள் தாயகத்தில் வாழ்கின்ற தமது உறவுகளுக்குத் தகவல்களை உடனடியாக அனுப்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு அனைவரும் சென்று நேரத்துடன் வாக்களிக்கச் செல்ல உற்சாகப்படுத்தவேண்டும்.

ஒரு நூறு மீன்பிடி வலைகளையும், துவிச்சக்கர வண்டிகளையும், நீர் இறைக்கும் இயந்திரங்களையும் கொடுத்து பல லட்சம் மக்களை ஏமாற்றி சர்வதேசத்திற்குத் தமது போர்க்குற்றங்களை மறைத்து தமிழ் மக்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து விட்டனர் என்று காட்டுவதற்கான கபட நாடகத்தை முறியடித்து, தமிழ் தேசிய உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை உலகுக்குக் காட்டவும்,

தாயகத்தை மீட்டெடுத்து சுதந்திரமான நாட்டில் தன்மானத்துடன் வாழ இந்தத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கும், ஆற்றலுள்ள தலைமைத்துவத்தையும் தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களையும், ஒரே கொள்கையுடன் செயற்படும் ஆற்றல் மிக்கவர்களையும் தெரிவு செய்யும் வகையில் அவர்களது விருப்பு இலக்கத்திற்கும் வாக்களித்து நூறு வீதமான வாக்குகளும் தமிழ் தேசியத்தை நோக்கியே அளிக்கப்படவேண்டும்.

எனது அன்பான உறவுகளே விரைந்த செயற்பட்டு குறுந் தகவல்கள் மூலமாகவோ, தொலைபேசி தொடர்பாடல் மூலமோ, மின்னஞ்கல் மூலமோ வீட்டுச் சின்னத்திறகு வாக்களிக்கத் தூணடுங்கள்.

யூலை 24 ம் திகதி வடக்குக் கிழக்கின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது என்ற அந்தச் செய்தி சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவேண்டும்.

அனபுடன்
உங்கள்
வல்வை.ந.அனந்தராஜ்
வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்பாளர்.

இதயத் தீவில் ஓர் இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17,000 டொலர்


அவுஸ்திரேலியாவில் பாலி தீவுப் பாணியிலமைக்கப்பட்ட தனது தீவை ஓர் இரவிற்கு 17,000 டொலர்களுக்கு வாடகைக்கு விடத் தொடங்கியுள்ளார் சேர் றிச்சாட் பிரான்சன். ஆனால் இதிலுள்ள விசேடம் என்னவெனில் இங்கு வரும் விருந்தினர்கள் அதிகளவு சத்தமிடாமல் இருக்கவேண்டுமென எச்சரிக்கப்படுகின்றனர்.


மேக்ஸ்பேஸ் தீவு எனப்படும் சிறிய, இதய வடிவான தீவில் 500,000லீ. குளமும் 15 பேருக்கான குளியல் தொட்டிகளும் வெளிப்புறத் திரையரங்கு ஒன்றும் 22 பேருக்கான அறைகளும் உள்ளன.

இதன் எல்லாக் கட்டடங்களும் மரம் மற்றும் வைக்கோலாலான குடிசைகளும் பாலி மற்றும் ஜாவாத் தீவுகளின் பாணியில் கட்டப்பட்டுள்ளன. இத்தீவிற்குச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படுகின்றது.

8 பேருக்கு ஓர் இரவில் 7,990 டொலர்களும் விடுமுறைக் காலங்களில் 22 பேருக்கு 16,990 டொலர்களும் அறவிடப்படுகின்றன. ஆனால் இந்தப் பெரும் பணக்காரரின் இன்னொரு தீவான, பிரிட்டி வேர்ஜின் தீவுகளிலுள்ள நெக்கர் தீவைவிட இது செலவு குறைந்ததே. அதற்கு ஓர் இரவிற்கு 50,000 அறவிடப்படுகின்றது என்றால் பாருங்களேன்.

இருப்பினும், குயின்ஸ்லாந்தின் சன்லைன் கோஸ்ற்றிலுள்ள பிரபல்யமான விடுமுறைத்தள நகரான நூசாவின் ஆற்றில் அமைந்துள்ள இத்தீவிற்கு வருவார்களென எதிர்பார்க்கப்படும் விருந்தாளிகளுக்கும் அமைதியாக இருக்குமாறே வேண்டுகோள் விடப்படுகின்றது.

அங்கு விருந்தினரைப் பராமரிக்கும் பணியாளர்கள், விருந்தினர் வந்தடைந்ததும் முதலில் விருந்துகளின் போது எவ்வாறு செயற்படுவது என்பது பற்றியும் சத்தம் ஏற்படுத்தப்படுவது பற்றியும் தமது அறிவுறுத்தல்களைப் பட்டியலிடுவர். இந்தச் சுற்றுலாத் தள இணையத்தில் இதுபற்றி விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு 25 ஏக்கர் சேற்றுநிலமாக இருந்த பிக் தீவு என்றழைக்கப்பட்ட இத்தீவை சேர் றிச்சாட் 2007 இல் 3 மில்லியனிற்கு வாங்கினார். அவரும் வேர்ஜின் அவுஸ்திரேலியாவின் இன்னொரு கண்டுபிடிப்பாளரான பிறெற் கோட்ஃபிறேயும் சேர்ந்து இத்தீவைத் தமது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அலுவலகப் பணியாளர்களுடனும் விடுமுறைகளையும் விருந்துகளையும் கொண்டாடப் பயன்படுத்திவந்தனர்.

மேக்பீசிற்கு நானும் பிறெற்றும் போகாமல் விட்டபோது தான் அதனை மற்றவர்கள் அனுபவிப் பதற்கானதொரு சிறப்பான தளமாக அமைக்கலாமெனத் தீர்மான மெடுத்தோம் என றிச்சாட் கூறினார்.

அவுஸ்திரேலியாவிலேயே தனக்குப் பிடித்த இடமாக நூசாவைக் கூறும் சேர் றிச்சாட் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் அங்கு போய்வருவதாகக் கூறினார்.

நான் எவ்வளவிற்கு நூசாவைக் காதலிக்கிறேனென எல்லாருக்கும் தெரியும்…. இப்போது உலகின் இந்த அழகான பகுதியைக் கண்டுகழிக்க வருமாறு அனைவரையும் அழைக்கின்றேன். வேர்ஜின் குறூப் ஆனது அவுஸ்திரேலியாவில் பலமானதொரு நிலையைக் கொண்டுள்ளது.

வேஜின் அக்ரிவ் (Virgin Active) சுகாதார அமைப்புகளின் புதிய தொகுதி ஒன்றிற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வாரம் மட்டும் செலவழித்ததென்பதன் மூலம் இதன் நிலையை அறிந்துகொள்ளலாம்.

எதன் மூலமும் நாம் சிறந்தவற்றையே செய்ய முயற்சிக்கின்றோம். இப்போது எங்களிடம் 300 சுகாதார அமைப்புகள் உலகெங்கும் செயற்பட்டு வருகின்றன. இது எங்களுக்கு மிகவும் வெற்றிகரமான வியாபாரமாக உள்ளது.

அத்துடன் வேஜின் வர்த்தகக் குறியும் அவுஸ்திரேலியாவில் மிகவும் பலமுள்ளதாக உள்ளதுடன் சுகாதார அமைப்புக்களும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்ற மடைந்துள்ளன என்றார் சேர் றிச்சாட்.

முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். வாழ்த்துத் தெரிவிக்க வந்த காரியவாசகத்திடம் ராஜபக்ஷேக்கு கடிதம் அனுப்பிய ஜெயலலிதா


.
ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு தகவல் ஒன்றை வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவுக்கான ஸ்ரீலங்கா தூதர் பிரசாத் கரியவாசத்திடமே இத் தகவலைக் கூறியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா தூதர் நேற்றயதினம் (வியாழக்கிழமை) சென்னைக்கு வந்து தமிழக முதல்வரைச அவசரமாக சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.


ஸ்ரீலங்காவிலுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் தமது சொந்த இடங்களில் மறுவாழ்வு பெறுவதை உங்கள் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே முதல்வர் ஜெயலலிதாவின் தகவல்.

முதல்வரின் இந்தத் தகவலை ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாகக் கூறிச் சென்றிருக்கிறார், ஸ்ரீலங்கா தூதர் பிரசாத் கரியவாசம்.

அத்துடன், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 2 மாதங்களில் 3 முறை தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் முதல்வர்.

ஸ்ரீலங்கா தூதர், தமிழக முதல்வருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, அவரைச் சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள், "எதற்காக இந்த திடீர் சந்திப்பு" என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த தூதர் கரியவாசம், "முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றதற்காக, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்துள்ளேன். முதல்வருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு, ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ஷே என்னைப் பணித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றது, மே மாதம் நடுப்பகுதியில்! தூதர் காரியவாசம் வாழ்த்துத் தெரிவிக்க வந்திருப்பது, ஜூலை மாதம் 21ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா ? (வீடியோ இணைப்பு)


மீனவர்கள் கையில் சிக்கிய மிகப்பெரிய திமிங்கலம் (படங்கள் இணைப்பு)

மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு கிடைத்த நல்ல வேட்டை தான் இந்த மிகப்பெரிய திமிங்கலம். மிகவும் லாவகமாக பிடித்த மீனவர்கள்.











நொடிப்பொழுதில் உயிர் தப்பியவர்கள்(வீடியோ இணைப்பு)


கரணம் தப்பினால் மரணம் என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. இந்த பழமொழியை தலைகீழாக மாற்றிப்போடும் வகையில் நொடிப்பொழுதில் விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர். உயிரை கொல்லும் சாலைவிபத்திலிருந்து நொடிப்பொழுதில் மிகவும் அதிஸ்டவசமாக தங்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர் என்றே இவர்களை கூறலாம்.



முதலையை வேட்டையாடிய சிங்கங்கள் (வீடியோ இணைப்பு)

 
பல விலங்குகள் ஒன்றுடன் ஒன்று நட்புடன் பழகி வருவதை பார்த்திருக்கிறோம். இருப்பினும் தனியாக சிக்கிய முதலையை 3 சிங்கங்கள் இணைந்து வேட்டையாடிய நேரடி காட்சியை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.













நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பார் என்று இந்தியாவில் பங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் சுவாமி நித்தியானந்தா நடத்திக் காட்டிய வித்தை (வீடியோ இணைப்பு)








கடந்த 15 ஆம் திகதி படுதோல்வி அடைந்தது. வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

மக்களை ஏமாற்றுகின்றார் நித்தியானந்தா என்று ஊடகவியலாளர் ஒருவர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலம் ஆகி இருந்தது.

நித்தியானந்தா கர்நாடக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்து இருக்கிறார். ரஞ்சிதா அது வரை காலமும் தலை மறைவாகி இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்தியானந்தா அண்மையில் சென்னை வந்து ரஞ்சிதாவுடன் ஊடகவியலாளர் மாநாடு நடத்தினார். செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

இவரது ஆசிரமத்தில் கடந்த 15 ஆம் திகதி குரு பூர்ணிமா பூஜை நடந்தது. வெகு விமரிசையாக கொண்டாடினார் நித்தியானந்தா. ரஞ்சிதா உட்பட ஏராளமான பக்தர்கள், வெளிநாட்டு சீடர்கள் அவரை சுற்றி அமர்ந்து இருந்தனர். ஒரு வித்தை புரியப் போகின்றார் என்று அப்போது நித்தியானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறார் என்றார்.

அந்தரத்தில் மிதக்கின்றமை சிறிய விடயம், வெற்றுக் காசோலை கொடுத்து ஏழையை பணக்காரனாக்குகின்றமை போன்றதுதான் அது, குண்டலினியில் ஈடுபட்டு இச்சக்தியை பக்தர்கள் அடைகின்றமைக்குள் வயதாகி விடும். அதனால் பக்தர்களின் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டப் போகின்றார் என்றார். சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.

இதை அடுத்து ரஞ்சிதா உட்பட பக்தர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்தியானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத்தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்தார். எல்லோரையும் குதிக்க சொன்னார்.

குதித்து கொண்டே இருக்கின்றபோது ஒரு கட்டத்தில் சர்ரென மேலே எழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார். இதை அடுத்து எல்லோரும் சப்பாணி கொட்டி உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம் குதித்தனர். இக்காட்சி ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது.

எங்கே அந்தரத்தில் பறந்து போய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ? என்கிற அச்சத்தில் சிலர் தலைக் கவசம் அணிந்து இருந்தனர். சன்னி வந்தது போல எல்லோரும் குதித்தமைதான் மிச்சம். யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் நித்யானந்தா. ரஞ்சிதாவை பார்த்து, ம்...நீயும் குதி...ம் என்பது போல சைகை காட்டினார்.

அடுத்த நிமிடம் டிசைனர் சேலையை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்தபடியே சர்வாங்கமும் அதிர குதி குதியெனக் குதித்தார் ரஞ்சிதா. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவருக்கும் மேலே மிதக்கின்ற ஆசை வந்தது. மிதக்க வைக்க சொல்லி நித்தியானந்தாவிடம் கேட்டார். நித்தியானந்தா சளைக்கவில்லை.

ஊடகவியலாளரையும் குதிக்க சொன்னார். தலைக் கவசம் மாட்டிக்கொண்டு ஊடகவியலாளரும் உட்கார்ந்த படியே துள்ளி குதித்தார். ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை. தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார்.

கடைசி வரை யாரும் மேலே மிதக்கவில்லை என்பதால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. வேடம் மீண்டும் கலைந்து விட்டதை மறைக்க அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார் நித்தியானந்தா. ஆனால் சும்மா குதித்து ஆத்திரப்பட்ட ஊடகவியலாளரோ நித்தியானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார்.

மக்களை முட்டாளாக்கும் விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டப் போகின்றார்? என்று கோபமாக கேட்டார். வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை உள்நாட்டு சீடர்கள் சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர்.