Wednesday, 9 November 2011

ஆல்கஹால் இல்லாத விஸ்கி தயாரிப்பு

போதையை ஏற்படுத்துகின்ற ஆல்கஹால் இல்லாத விஸ்கியை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட்டிஷ் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது.
சாதாரணமாக பியரில் 4 முதல் 6% ஆல்கஹால் மட்டுமே உள்ளது. வைன் 9-16%, வோட்கா 40%, பிராந்தி 35-60%, ரம் 37-80% என்று சரக்குக்கு சரக்கு ஆல்கஹால் சதவீதம் வேறுபடுகிறது.
‘ஆர்கே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விஸ்கி டிசம்பர் 1-ம் திகதி முதல் அறிமுகமாக உள்ளது.
மதுவை விட்டுவிடும் ஐடியாவில் இருப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இது ஏற்றது என்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் அதிகமாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் விலை ரூ.780, ரின் ரூ.310 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தானாக டிரைவ் செய்து பார்க்கிங்கில் நிற்கும் கார்

பார்க்கிங் பகுதியில் எந்த இடம் காலியாக இருக்கிறது என தெரிந்து கொண்டு, தானே ஓடிச் சென்று நின்று கொள்ளும் காரை ஜப்பானின் நிசான் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
கார் தயாரிப்பில் 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கம்பெனி. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்கள் தயாரிப்பில் தற்போது அதிக அக்கறை செலுத்தி வருகிறது.
சிறிதும் புகையை கக்காத மின்சார இன்ஜின்களை கார்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் 8-வது எலக்ட்ரிக் இன்ஜின் காரை தயாரித்துள்ளது.
பிவோ-3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 42-வது டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உலகின் முன்னணி நகரங்களில் பல இடங்களில் தானியங்கி பார்க்கிங் வளாகங்கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை.
பிவோ-3 காரில் ஜிபிஎஸ் வசதி உள்ளது. நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் இதை இயக்க முடியும். தானியங்கி பார்க்கிங் வளாகத்துக்கு வந்த பிறகு, நாம் காரில் இருந்து இறங்கிவிடலாம்.
தனது ஜிபிஎஸ் வசதியை பயன்படுத்தி எந்த இடம் காலியாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் கார் தானாக அந்த இடத்துக்கு சென்று நிற்கும்.
எந்த இடத்தில் நிற்கிறது என நமக்கு மெசேஜ் வரும். வேலை முடித்து திரும்பும் போதும், நம் இருப்பிடம் தேடி கார் வந்துவிடும். மிகவும் குறுகலான இடத்தில் யூ டர்ன் போடுவதற்கு ஏற்ப இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

பாம்பிடம் இருந்து தன் நண்பனை காப்பாற்றிய பல்லி

நட்பு என்பது புனிதமானது, ஆழமானது. இது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் அல்ல. ஐந்து அறிவு கொண்ட விலங்கினங்களுக்கும் உண்டு என்பதை இந்த பல்லி நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
எதிர்பாராத விதமாக பாம்பிடம் மாட்டிக் கொண்டு அதனிடமிருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது பல்லி.
தனது நண்பனை பலவிதமான தாக்குதல்களுக்கு பின் உயிருடன் மீட்கிறது மற்றொரு பல்லி.

2250 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய புற்றுநோய்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

எகிப்தில் 2,250 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தற்பொழுது தெரியவந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட மம்மி உடலை சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் இது தெரியவந்துள்ளது. எகிப்து மம்மிகள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
எகிப்தில் பதப்படுத்தி புதைக்கப்பட்ட மம்மி உடல் ஒன்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் உள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எம்1 என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மம்மி பற்றி தெரிந்துகொள்வதற்காக டிஜிட்டல் எக்ஸ்ரே, மல்ட்டி டிடெக்டர் கம்ப்யூட்டரைஸ்டு டோமோகிராபி, சிடி ஸ்கேன் உள்பட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது: எகிப்தில் கி.மு. 305 முதல் கி.மு. 30 வரை தாலமி மன்னர்களின் ஆட்சிக் காலம். அவர்கள் 275 ஆண்டு காலம் எகிப்தை ஆண்டு வந்தனர்.
அந்த காலகட்டத்தில் வசித்த ஒருவரது மம்மிதான் இது. இவர் அனேகமாக கி.மு. 285 முதல் கி.மு. 230 வரையில் வாழ்ந்திருக்ககூடும். அவரது இடுப்பு, தண்டுவட பகுதிகளில் புற்றுநோய் கட்டிகள் இருந்திருக்கிறது.
சுரப்பிகளில் ஏற்பட்ட புற்றுநோய் பிறகு இடுப்பு, விலா பகுதி, தண்டுவடம் மட்டுமின்றி, கை, கால்களின் மேல் பகுதி என ஏறக்குறைய எல்லா எலும்புகளிலும் பரவியிருக்கிறது. புற்றுநோயால் மிக கொடூரமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் நோயின் தீவிரம் தாங்க முடியாமல் இறந்திருக்கிறார்.
சாகும்போது அவருக்கு வயது 51 முதல் 60 வரை இருந்திருக்கும். 2,700 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க சிதியா மன்னரின் எலும்புக்கூடு ரஷ்யாவின் தெற்கு சைபீரியா பகுதியில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டது.
அந்த மன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது 2007ம் ஆண்டு நடந்த சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. எகிப்து நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தற்போது தெரியவந்திருக்கிறது.

தற்காப்புக்காக காதலரை கொன்றேன்: இலங்கைப் பணிப்பெண்

தற்காப்பு நடவடிக்கையாக தனது காதலரை கொலை செய்ததாக சிங்கப்பூரில் நடைபெறும் கொலை வழக்கு விசாரணையொன்றில் மனநல மருத்துவரிடம் இலங்கைப் பணிப்பெண்ணான புவனேஸ்வரி தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.
33 வயதான புவனேஸ்வரி சிங்கப்பூரில் திட்ட மேற்பார்வையாளராக பணியாற்றிய இந்திய பிரஜையான முருகையன் செல்வம் என்பவரை கொலை செய்ததாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
தன்னையும் தனது எஜமானரின் இரு பிள்ளைகளையும் கொல்லப்போவதாக தனது காதலர் அச்சுறுத்தியதால் தற்காப்பு நடவடிக்கையாக அவரை கொன்றதாக மனநல மருத்துவரிடம் புவனேஸ்வரி கூறியுள்ளார். தன்னை பாலியல் ரீதியிலும் பொருளாதார ரீதியாகவும் அவர் சுரண்டியதாகவும் புவனேஸ்வரி கூறியுள்ளார்.
இப்பணிப்பெண்ணுடன் வேறு இரு இந்திய பிரஜைகளும் பாலியல் உறவுகொண்டிருந்ததாக நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவர் செல்லிட தொலைபேசிக்கான சிம் அட்டையை அப்பெண்ணுக்கு வாங்கிக்கொடுத்துள்ளார். தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து தனது காதலர் தன்னை ஏமாற்றியமை குறித்தும் அப்பெண் மேற்படி நபர்களிடம் கூறியுள்ளார்.

நடிகர் பிரசன்னாவை மணக்கிறார் சினேகா

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை மணக்க உள்ளார். பிரசன்னா தனது உதவியாளர் மூலம் இதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார்.
பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் சினேகா முதன்முறையாக இணைந்து நடித்தார். அப்போதுமுதல் இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளிவந்தன
தாங்கள் காதலிப்பது உண்மைதான் என இப்போது இருவரும் ஏற்றுக் கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்துகொள்ள உள்ளோம். திருமண நிச்சயதார்த்த தேதி இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. திருமணம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பிரசன்னா தெரிவித்தார்.

“எங்களின் படத்தை தடைசெய்வதற்கு அவர்கள் யார்?“ - சிறிலங்காவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போர்க்கொடி

சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய – சிறிலங்காவில் தமிழ்த் திரைப்படங்களை படமாக்குவதில்லை என்று அறிவித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தெளிவான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.இயக்குனரும் தயாரிப்பாளருமான சசிக்குமார் தனது ‘போராளி‘ திரைப்படத்தை சிறிலங்காவில் திரையிடப் போவதில்லை என்ற உறுதியான முடிவை அறிவித்துள்ளது, சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான நிலைமையை தோற்றுவித்துள்ளது.

தமிழர்கள் பற்றிப் பேசப்படும் வசனங்களை சிறிலங்கா அரசு தமிழ்ப்படங்களில் இருந்து தடைசெய்து வருகிறது.

சிறிலங்கா தமிழர்கள் பற்றிப் பேசப்படும் வசனங்களை சிறிலங்கா அரசின் தணிக்கைக்குழு ‘கசாப்புக்கடைகாரன்‘ போன்று வெட்டியெறிந்து விடுகிறது.

தீபாவளி வெளியீடான சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சிறிலங்கா தமிழர்கள் பற்றிப் பேசப்படும் பல வசனங்கள் வெட்டப்பட்டுள்ளன.

“ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்திப் பெற்றது வெற்றியல்ல. துரோகம்.“ என்ற இந்தத் திரைப்படத்தின் வசனமும் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏழாம்அறிவு திரைப்படத்தின் காட்சிகளை கண்டபடி சிறிலங்கா அரசு வெட்டியுள்ளதைக் கண்டித்துள்ள இயக்குனர் சசிகுமார் தனது ‘போராளி‘ திரைப்படத்தை சிறிலங்காவில் திரையிடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

‘பசங்க‘ திரைப்படத்தின் தயாரிப்பாளரான அவர், எங்களின் படத்தை தடைசெய்வதற்கு அவர்கள் யார்? நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எனது ‘போராளி‘ படத்தை அங்கு திரையிடமாட்டேன்.

சிறிலங்கா மீதான நடவடிக்கைக்கு நானே முன்னிலை வகிக்கிறேன். சிறிலங்காவில் திரையிடுவதற்கான உரிமையை யாருக்கும் விற்கப் போவதில்லை.

இதனால் எனது வருமானத்தில் ஒரு பகுதி பாதிக்கப்படும். ஆனாலும் வருமானத்துக்காக தன்மானத்தை இழக்க முடியாது.

இதே நிலைப்பாட்டை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்“ என்று கூறியுள்ளார்.

சசிக்குமாரின் முடிவை வரவேற்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன், “நான் சசிக்குமாருடன் முற்றுமுழுதாக உடன்படுகிறேன். நான் முடிவெடுக்கும் நிலையில் இருந்தால், எனது படங்கள் சிறிலங்காவுக்கு இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்“ என்று தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்ராலின் “அயல்நாட்டில் ஏழாம் அறிவு திரைப்படத்தை வெளியிட குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை எதிர்கொண்டோம்.

படத்தைத் திரையிட அனுமதிப்பதற்கு முன்னர் அவர்கள் பல வசனங்களை நீக்கச் சொன்னார்கள். சில இடங்களில் வசனங்களை மௌனமாக்குமாறு கேட்டனர்.

இந்த உணர்வுபூர்வமான பிரச்சினையில் சிறிலங்காவில் எனது படங்களை திரையிடுவது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசனை பெறவுள்ளேன்.“ என்று கூறியுள்ளார்.

“ஒரு ஆண்டில் சுமார் 100 தமிழ்ப்படங்கள் சிறிலங்காவில் திரையிடப்படுகின்றன. ஒவ்வாரு படத்தின் மூலமும் சிறிலங்காவில் இருந்து 10 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கிறது.

சிறிலங்காவில் படங்களை திரையிடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்படுமானால், சுமார் 10 கோடி ரூபா இழப்பு ஏற்படும். இது ஒரு பெரிய தொகை“ என்கிறார் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர்.

அதேவேளை இது குறித்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்திலேயே தீர்மானிக்கபடும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு.
வழிமூலம் - டெக்கன் குரோனிக்கல்

திருச்சி அருகே வீட்டில் நீரூற்றுடன் “திடீர்” பள்ளம்! நில நடுக்க அச்சத்தில் பிரதேச மக்கள்!!

திருச்சி அருகே, வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், நிலநடுக்கம் வருமோ என்ற அச்சத்தில், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திருச்சி அருகே, திண்டுக்கல் மெயின் ரோட்டில், நவலூர் குட்டப்பட்டு கிராமம் உள்ளது.
அங்குள்ள செபஸ்டின் என்ற விவசாயி, தன் மனைவி மரியபுஷ்பம் மற்றும் மூன்று குழந்தைகளுடன், ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீடு, செபஸ்டினின் முன்னோரால், 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
நேற்று காலை, வீட்டினுள் அவர் நடந்து சென்றபோது, நடுவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, எட்டடி ஆழத்துக்கும், மூன்று மீட்டர் சுற்றளவுக்கும், பெரிய பள்ளம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட பள்ளத்திலிருந்து, "குபு...குபு...' என, நீரூற்று பெருகியது. இதைக் கண்டு, செபஸ்டின் திகைத்தார்.
செபஸ்டினின் மாமாவும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான அருளானந்தம்,69, கூறியதாவது: எனக்கு, 12 வயது இருக்கும்போது, இந்த வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில், 12 அடி ஆழத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
அப்படியே அதை விட்டு விட்டு, நான்கைந்து ஆண்டுகள் கழித்து மூடிவிட்டோம். இவ்வாறு, அருளானந்தம் கூறினார். செபஸ்டின் வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், நிலநடுக்கம் ஏதும் வருமோ என, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து, கலெக்டரிடமோ, புவியியல் துறையிடமோ, புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.

7 வயது மகளை விட உயரத்தில் குறைந்த விசித்திரமான தாய்

இந்த படத்தை பார்ப்பவர்கள் இவர்களை சகோதரிகள் என்றே நினைக்கின்றனர். ஆனால் உண்மையிலே இந்த படத்தில் 26 வயதான தாயும் அவரின் 7 வயதான மகளுமே நிற்கின்றனர்.
இடது பக்கம் தாயார் Rebecca Jones, வலது பக்கம் Maisy மகள் ஆவார்.
வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஒருவித நோய் இவரின் உடம்பிலுள்ள தசைகளை குறைத்து கொண்டே வருகிறதாம்.
இந்த வைட்டமின் குறைபாடு அதிகரிக்கையில், அதுவே இவருக்கு இறுதிக்காலமாக அமையலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இவர் 19 வயது முதல் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டதாகவும், இதுதான் நாளடைவில் இந்த உடல் தோற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் Rebecca Jones குறிப்பிட்டார்.

வெட்டிய கால் மீண்டும் முளைத்த அதிசயம்

யானைக்கால் நோய் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் தான் Mandy Sellars. இவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்நோயின் காரணமாக இவரது கால்கள் வீக்கமடைந்து யானையை போன்று காட்சியளித்தது.
இதனால் சத்திர சிகிச்சை மூலம் அவரது ஒரு காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அகற்றப்பட்ட ஒரு காலின் எடை சுமார் 32 கிலோவாக இருந்திருக்கிறது.
அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் 22 மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் இவரது கால் முளைக்க தொடங்கியுள்ளது.
இதுபற்றி இவர் கருத்து தெரிவிக்கையில், நான் ஊனமாக இருப்பேன் என்று எண்ணவில்லை. எனது கால் மீண்டும் முளைக்கும் என நம்பிக்கை இருந்தது என பெருமையாக சொல்கிறார்.
மேலும் தற்போது முளைத்த கால் சுமார் 19 கிலோ எடையுடனும் 1 மீற்றர் சுற்றளவினையும் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இஸ்ரேல் விரைவில் 'முடிந்துவிடும்' : ஈரானிய ஜனாதிபதி

ஈரான் மீதான தாக்குதல் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஜ்மடிநெஜாத், இஸ்ரேல் விரைவில் வீழ்ச்சியடைந்து முடிந்துபோய்விடும் எனவும் கூறியுள்ளார்.
எகிப்திய பத்திரிகையான அல் அக்பருக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஜனாதிபதி கூறியதன் பின்னர் ஈரானிய ஜனாதிபதி அஹ்மடிநெஜாத்தின் மேற்படி பேட்டி வெளியாகியுள்ளது.
"ஈரானின் ஆற்றல் அதிகரித்து வருகிறது. அதனால்தான் அது உலகில் போட்டியிட முடிகின்றது. இப்போது இஸ்ரேலும் மேற்குலகும் குறிப்பாக அமெரிக்கா, ஈரானின் ஆற்றல்கள், பாத்திரங்கள் குறித்து அச்சமடைந்துள்ளன. அதனால் அவர்கள் ஈரானின் பாத்திரத்தை நிறுத்துவற்கான இராணுவ நடவடிக்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
தன்மீதான எந்த நடவடிக்கையையும் ஈரான் அனுமதிக்கப்போவதில்லை என இந்த கொடூரமானவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்." என அவர் கூறினார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அமைதியான நடவடிக்கைகளுக்காகவே எனக் கூறிய அவர், ஸியோனிஸ அமைப்பை (இஸ்ரேல்) பாதுகாக்க அமெரிக்கா முயற்சிகிறது. ஆனால் அதைச் செய்ய அதனால் (அமெரிக்காவினால்) முடியாது என்றார்.
"இந்த அமைப்பு (இஸ்ரேல்) உடலால் நிராகரிக்கப்பட்ட சிறுநீரகத்தை மாற்றுவதற்கு ஒப்பிடலாம். ஆம். அது வீழ்ச்சியடையும் விரைவில் முடிந்துவிடும்" என ஈரானிய ஜனாதிபதி அஹ்மடிநெஜாத் கூறினார்.

இந்திய பெருங்கடலில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

உலகில் உள்ள கடல்களின் ஆழ்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவை குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதற்காக ஆழ்கடலில் அதி நவீன கருவிகள் மற்றும் கேமிராக்கள் மூலம் ஆராய்ச்சிகள் நடத்துகின்றனர்.
தற்போது முதன் முறையாக இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதிகளில் அத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த நிபுணர்கள் குழு ஆழ்கடலில் மூழ்கினர். அங்கு பல புதிய உயிரினங்களை கண்டுபிடித்தனர்.
 இதற்கு முன்பு கடந்த 2009-ம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஆய்வு மேற்கொண்ட போது7 ஆயிரம் மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
 அவற்றை பரிசோதனை செய்தபோது இன்னும் பல அரிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் இருப்பது தெரிய வந்தது. எனவே,
ழ்கடலில் தற்போது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய ஆதாரங்களுடன் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ இரண்டாவது பாகத்தை தயாரிக்கிறது சனல்- 4

புதிய சாட்சியங்களுடன் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் ஒளிபரப்பவுள்ளதாக சனல்-4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் பிரித்தானியாவின் ஊடக ஒழுங்குமுறையை மீறவில்லை என்று அறிவிக்கப்பட்ட அடுத்த வாரமே, அதன் இரண்டாவது பாகத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற கொடூரங்களை விபரிக்கும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ என்ற ஆவணப்படத்தை சனல்-4 தொலைக்காட்சி கடந்த ஜுன் மாதம் ஒளிபரப்பியிருந்தது.

கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட காணொலிப் படம் இதன் பிரதான போர்க்குற்ற சாட்சியமாக இணைக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை விபரிக்கும் இந்த ஆவணப்படம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்திருந்தது.

இந்த ஆவணப்படம் நியுயோர்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகங்களிலும், இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, டென்மார்க், நோர்வே உள்ளிட்ட பல நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டனை வழங்கப்படாத போர்க்குற்றங்கள்‘ (தலைப்பு இன்னமும் முடிவாகவில்லை) என்ற பெயரில் இரண்டாவது ஆவணப்படத்தை அடுத்த ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பதாக சனல்-4 தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இதற்கென இயக்குனர் கல்லும் மக்ரே ஒளிப்படங்கள், காணொலிப் பதிவுகள்,நேரில் கண்ட சாட்சிகள், ஆவணங்கள் போன்ற புதிய சாட்சியங்களை சேகரித்துள்ளதாக இதன் தயாரிப்பாளர் ஜொன் சினோ தெரிவித்துள்ளார்.

“போர்க்குற்றங்களுக்கு அதிகாரபூர்வமாக உடந்தையாக இருந்தவர்கள் பற்றிய மேலதிக சாட்சியங்களை இது வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் எதைக் கண்டறிந்தோம் என்பதை தொடர்ந்து உலகிற்கு வெளிப்படுத்துவோம். முதலாவது ஆவணப்படத்தைப் போலவே இந்தப் படக்காட்சிகளும் அதிர்ச்சிகளைக் கொடுப்பதாகவும் விழிப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று நம்புகிறோம்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, இந்த ஆவணப்படத்தைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ள சனல்-4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்புவிவகார தலைவர் டொரத்தி பைன்,

“சிறிலங்காவின் கொலைக்களங்கள் மூலம் கொடூரங்கள் வெளிப்படுத்தப்பட்டது உலகெங்கம் கவலையை தோற்றுவித்ததுடன் மேலதிக விசாரணைகளுக்கும் அழைப்புகள் விடப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே உண்மையைக் கண்டறிந்து தொடர்ந்து வெளிப்படுத்த முடிவு செய்துள்ளோம்“ என்று கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் பாட்ஷா பாகம் 2!

தமிழ் சினிமாவில் பாகம் 2 மோகம் தற்போது மிக அதிகளவில் அதிகரித்துவருகிறது. அண்மைக்காலமாக ஏற்கனவே தமிழில் வெற்றிபெற்ற படங்களின் பாகம் 2 இனை எடுக்கும் முயற்சிகள் பல பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு படம் இம்முறை சிக்கியிருப்பது பட்டிதொட்டியெங்கும் சக்கைபோடு போட்ட ரஜினியின் பாட்ஷா திரைப்படம்.
பாட்ஷா பாகம் 2 இல் ரஜினியை நடிக்க வைக்க ஒரு நிறுவனம் தயாரானபோதும் அது கைகூடவில்லையாம். ராணா படத்திற்காக ரஜினி ஆயத்தமாகிவிட்டதால் தற்போதைக்கு ரஜினியை வைத்து தயாரிப்பது சாத்தியமாகாது என்பதே காரணமாம்.
எனவே ரஜினிக்கு பதில் அதனை நடிக்கக்கூடிய நடிகராக அவர்களது ஒரே தெரிவு அஜித்தானாம். ஏனெனில் ஏற்கனவே ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் வெற்றி பெற்றதுடன் அதன் பாகம் 2 இலும் நடிக்கும் 'தல'யே இதற்கு சரியான தெரிவாக இருக்கும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறதாம்.
உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை எதுவும் நம்புவதிற்கில்லை. எனவே அறிவிப்பு வரும் வரை இதுவும் கானல் நீரே.

கூகுள் + இன் மற்றுமொரு புதுவசதி .

கூகுளின் சமூக வலையமைப்பான கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.இந்நிலையில் வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புக்கள் தங்களுக்கென கூகுள் + இல் ஒரு பக்கத்தினை உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசமாகவே இவ்வசதியினை வழங்குவதாகவும், இதற்கான பக்கத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தப் போவதில்லையெனவும் கூகுள் அறிவித்துள்ளது.

இதே போன்ற வசதியினை பேஸ்புக் ஏற்கனவே வழங்கி வருகின்றது.

கூகுள் + அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு சமூக வலையமைப்பு. தற்போது இதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 40 மில்லியனாகும்.

எனினும் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட பலமடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

கூடிய விரைவில் இது பேஸ்புக்கிற்கு பலத்த சவாலளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பயணிகளுடன் கடலில் வீழ்ந்த விமானம்

விமான விபத்துகளையும் அதன் கோர காட்சி படங்களையும் பார்பவர்கள் விமானத்தில் பயணிக்கவே விரும்ப மாட்டார்கள். கடலில் வீழ்ந்து நொருங்கிய விமானமும் அதில் பயணித்த மக்களின் நிலையையும் இதில் காணலாம்.

அமெரிக்க ஒரிகன் மாநிலத்தில் 'ஐ பேட்' மூலம் வாக்குப்பதிவு: புதிய புரட்சி

அமெரிக்க ஒரிகன் மாநிலத்தில் நடைபெற்ற விசேட தேர்தலொன்றின் போது அங்குள்ள அங்கவீனமடைந்த பிரதேசவாசிகள் அப்பிளின் 'ஐ பேட்' டெப்லட் கணனியின் மூலம் வாக்களிக்கின்றனர்ஐ பேட்' கணனிகளை முதன் முதலாக வாக்களிப்பதற்கு உபயோகப்படுத்திய அமெரிக்க மாநிலம் என்ற பெருமையையும் ஒரிகனுக்கு இதன் மூலம் கிடைக்கின்றது.

அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையிலிருந்து இராஜினாமா செய்த டேவிட்வூவின் என்பவருக்கு பதிலாக புதிய வேட்பாளர் ஒருவரை நியமனம் செய்வதற்கு இந்தத் தேர்தல் நடத்தப்படுகின்றது

இதன்படி தேர்தல் அதிகாரிகள் அவர்களின் இடத்திற்கே சென்று வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.

பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் இம்முறை மூலம் நன்மைபெறவுள்ளனர்.

இம்முறையானது எதிர்காலத்தில் தேர்தல்களில் புதிய புரட்சியை ஏற்படுத்துமென தொழிநுட்ப வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

70 ஆண்டுகளுக்கு முன்பு முழ்கிய கப்பலில் 240 தொன் வெள்ளி

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் முழ்கிய இங்கிலாந்து கப்பலில் 240 தொன் வெள்ளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1940 ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது.
இந்த கப்பலில் 240 தொன் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன.
கப்பல் 1941, பிப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை காரணமாகவும் மற்றும் எரிபொருள் இல்லாமையினாலும் தத்தளித்து கொண்டிருந்தது.

இது 2 ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம். இதனை நடுக்கடலில் வைத்து ஜேர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது.
இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85பேர் கொல்லப்பட்டனர். தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதில் 155 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரியவந்துள்ளது.

சிறிலங்காப் படைகளின் சித்திரவதைகள் - ஐ.நா குழுக் கூட்டத்தில் இன்று மீளாய்வு

சித்திரவதைகள் தொடர்பாக சிறிலங்கா நம்பகமான விசாரணைகள் எதையும் நடத்தவில்லை என்றும் இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்த மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை கோரியுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை இதுதொடர்பாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளது.

சிறிலங்கா படைகளுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜொலன்டா போஸ்டர் தெரிவித்துள்ளார்.

“சட்டத்தில் மட்டும் வைத்திருந்தால் போதாது. அதை நீங்கள் நடைமுறைப்படுத்தாது போனால், அர்த்தமில்லை. சித்திரவதைகளுக்கு எதிரான சட்டத்தை சிறிலங்கா கொண்டுள்ள போதும், அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சித்திரவதைகள் தொடர்பாக கடந்த 14 ஆண்டுகளில் 3 வழக்குகளையே சிறப்பு காவல்துறை அலகு முன்னெடுத்துள்ளது.

2008ம் ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவல் ஒன்றில், அதற்கு முந்திய நான்கு ஆண்டுகளில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக 90 பேருக்கு எதிராக 42 குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறியிருந்தது.

மேலதிகமாக 31 சித்திரவதை வழக்குகள் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் யாருமே நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

சிறிலங்கா காவல்துறையினராலும் சிறைக்காவலர்களாலும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர் சிறிலங்கா இராணுவத்தினராலும், இராணுவம், கடற்படை ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் துணை ஆயுதக் குழுக்களினாலும் தொடர்ச்சியாக சித்திரவதைகள் செய்யப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர்.

பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ள போதும், அவை குறித்த விசாரணைகளும் மோசமான நிலையிலேயே இருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.

கட்டாயமாக காணாமற்போகும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களில் சித்திரவதைகள் செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன.

விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதைகளின் சாட்சிகளாக உள்ளனர்.

சிறிலங்காவில் குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி, காலவரையறையின்றி, பலரும் வருடக்கணக்கில் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறை, சிறைக்காவலர்கள், மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக எந்த நீதி விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா விவகாரம் குறித்து மீளாய்வு செய்யும் அதேவேளை, சித்திரவதைகளில் தொடர்புபட்ட படையினரை சிறிலங்கா அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.

இதனிடையே இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக மன்னிப்புசபை, ஆசிய மனிதஉரிமைகள் ஆணையம், சித்திரவதைகளில் இருந்து விடுதலை, சிறுவர்களுக்கான எல்லாத் தண்டனைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலக முயற்சி, அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு, அனைத்துலக குறைபாடுகளுக்கான கூட்டமைப்பு, சட்டவாளர் உரிமைகள் கண்காணிப்பகம்-கனடா, லண்டனை தளமாக கொண்ட றீட்றெஸ், றீட்றெஸ் ஆசிய சட்ட வளங்கள் நிலையம் மற்றும் ஏசிஏரி பிரான்ஸ், சிறிலங்கா அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு, தமிழ் தகவல் நிலையம், சித்திரவதைகளுக்கு எதரான சுவிஸ் அமைப்பான ட்ரயல் ஆகிய 12 அமைப்புகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் ஆராயப்படவுள்ளன.

சார்க் மாநாட்டிலும் மகிந்தவுக்கு நெருக்கடி - மாலைதீவு விரைகிறார் பிளேக்

மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில், தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.
அட்டு நகரில் எதிர்வரும் 10ம், 11ம் நாட்களில் 17வது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையேற்கவுள்ளார்.

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக றொபேட் ஓ பிளேக் இன்று மாலைதீவு பயணமாவதாகவும், இவர் எதிர்வரும் 13ம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கும் அமெரிக்க குழுவில் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்ரெனிசும் இடம்பெறவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதனை விரைவில் பகிரங்கப்படுத்துவது, அறிக்கையின் பரிந்துரைகளின் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து அவர், சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சிறைகளில் தமிழ் இளைஞர்கள் மீது சித்தரவதை! சனல் 4 வின் அடுத்த தாக்குதல்!!

போர் முடிவடைந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதற்கான ஆதாரக் காணொளியையும் அது வெளியிட்டுள்ளது.
போர் முடிவடைந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதற்கான ஆதாரக் காணொளியையும் அது வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கைச் சிறையில் இருந்து தப்பி பின்னர் பிரித்தானியா வந்து அகதிகள் அந்தஸ்த்து கோரிய இருவரது காணொளிகளை அது தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் இளைஞர்களைக் கட்டிவைத்து வயராலும் மற்றும் கம்புகளாலும் முதுகில் பலமாக அடித்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர்.
அதுமட்டும் அல்லாது கழுத்தில் கம்பியைப் போட்டு சுருக்கிட்டு பின்னர் தண்ணீர் தொட்டி ஒன்றில் தன் தலையை மூழ்க்கவிட்டதாகவும் அப்போது தான் மூச்சுத் திணறி கிட்டத்தட்ட தான் இறக்கும் நிலைக்குச் சென்றதாகவும் ஒரு தமிழ் இளைஞர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு தமிழ் இளைஞர் தெரிவிக்கையில் தன்னைக் கட்டி வைத்து அடித்ததாகவும் பல நாட்களாக தான் சிறையில் வாடிய நிலையில் தாகத்துக்கு தண்ணீர் கேட்டவேளை சிறு நீரை இராணுவத்தினர் தந்து குடிக்கச் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
இதனை விட தான் போரில் அகப்பட்டு இறந்திருக்கலாமே எனத் தான் எண்ணியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையானது ஐ.நாவின் உறுப்பு நாடாக இருக்கின்ற போதும் அது ஐ.நா சாசனங்களை மீறி பாரிய சித்திரவதைகளை மனித குலத்துக்கு எதிராகச் செய்துவருகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
போர் குற்றம் மற்றும் இன அழிப்பு என்பன ஒரு புறம் இருக்க தற்போது தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்யும் மேலதிக குற்றச்செயல்களில் இலங்கை ஈடுபட்டும் வருகிறது என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதுவரை பிரித்தானியாவில் உள்ள சுமார் 35 தமிழ் இளைஞர்களை சனல் 4 தொலைக்காட்சி தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில் பலர் ஒரே வகையான சித்திரவதை தமக்கு இழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். சித்திரவதைக்கு எதிரான மனித உரிமை அமைப்புகள் சில ஐ.நா விடம் இது குறித்து முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
இதன் அடிப்படையில் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா வின் அதிகாரிகள் இது குறித்து ஆராய உள்ளனர். இதனால் இலங்கை மேலும் சிக்கலுக்குள் தள்ளப்படும் அபாயம் தோன்றியுள்ளது.
போர்குற்றச்சாட்டு இன அழிப்பு என்று இலங்கை மீது இரு முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரவதை என்னும் ஒரு களமும் புதிதாகத் திறக்கப்பட்டு இலங்கை அரசு மீது மும்முனைத் தாக்குதல் நடைபெற ஆரம்பமாகியுள்ளது.

மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்! மணப் பெண்னை பாம்பு கடித்ததால் சம்பவம்!!

பாம்பு கடித்ததால் சிகிச்சை பெற்றுவந்த மணப்பெண்ணை மருத்துவமனையிலேயே மணமகன் திருமணம் செய்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். கூலித் தொழிலாளி.
இவரது மகள் சவுடேஸ்வரி(19). இவருக்கும், கரூர் அருகேயுள்ள புன்னம்சத்திரத்தை சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் பிரகாஷ்(23) என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
நேற்று முன்தினம் இரவு சவுடேஸ்வரியை தாராபுரத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்ல ஆயத்தமானார்கள்.
சவுடேஸ்வரியை திடீரென வீட்டுக்குள் திடீரென வந்த ஒரு பாம்பு கடித்துவிட்டது. அவரை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் சவுடேஸ்வரி அபாய கட்டத்தை தாண்டினார்.
இதற்கிடையே திருமண விழாவில் பங்கேற்பதற்காக தாராபுரம் பெரிய காளியம்மன் கோயிலில் உறவினர்கள் குவிந்தனர். இந்நிலையில், நேற்று காலை 6.15 முதல் 7.15 மணி வரை முகூர்த்தநேரம் என்பதால், மருத்துவமனைக்கே சென்று திருமணத்தை நடத்த உறவினர்கள் முடிவெடுத்தனர்.
உறவினர்கள் புடைசூழ மணமகன் பிரகாஷ் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சவுடேஸ்வரி கழுத்தில் அவர் தாலி கட்டினார்

செவ்வாய் கிரகத்தில் சுடுநீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தின் கீழ் பகுதியில் சுடுநீர் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து விஞ்ஞானிகள் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றனர்.
விஞ்ஞானிகளின் கருத்துப்படி 100 மில்லியனை விட அதிகமான காலத்தில் செவ்வாய் கிரகத்தின் அடிப்பகுதியில் நிலத்தில் வெப்பம் இருக்கின்றதாக கூறுகின்றனர்.
இக்கிரகத்தின் மேல் பகுதியை விட அதிகமானளவு நீர் கீழ்பகுதியில் ஓழிந்திருக்க வேண்டும். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தால் இந்த வெப்ப நீர் உள்ள இடத்திற்கு அண்மையில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வெப்ப நீருக்கு இடைப்பட்ட பகுதியில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் இருக்கிறது எனவும் இக்கிரகத்தின் உயிரினங்கள் வாழ்ந்தால் அவற்றின் ஆயுட்காலம் குறுகியதாக இருக்கும்.
இக்கிரகத்தின் மேற்பரப்பில் கண்டறியப்பட்ட இந்த சூழ்நிலை சிறு பகுதிகளில் தான் காணக்கூடியவாறு இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
இக்கிரகமானது வெப்பமான மற்றும் ஈரப்பதமான பிரேதசமாக இருக்கும் எனவும் மனிதனுடைய பிரயாணத்திற்கு சிறிய மோட்டார் காரும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நீங்களும் பரதனாட்டியத்தில் ஆர்வமுள்ளவரா இதையும் சற்றுப்பாருங்களேன்.

நீங்களும் பரதனாட்டியத்தில் ஆர்வமுள்ளவரா  இதையும் சற்றுப்பாருங்களேன் உங்கள் மனம் எப்படியிருக்கிறது என்று முடிவெடுங்கள்

5 செய்தி இணைய தளங்களுக்கு இலங்கை தடை

நாட்டு நலனுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 5 செய்தி சேனல்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு ஊடக நிறுவங்கள் விமர்சித்துள்ளன.
 அமெரிக்க தூதரகம், இதனை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது.
 இலங்கை சட்டப்படி, எந்த செய்தி நிறுவங்களையும் தடை செய்ய வழியில்லை என்றாலும், அவற்றின் மீது அவதூறு வழக்குதொடுக்கலாம்.
 இருந்தபோதும், இலங்கை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் கனேகல, இந்தத் தடையை அறிவித்துள்ளார்.

அந்த 5 செய்தி இணையதளங்கள்:

www.lankaenews.com, srilankamirror.com, srilankaguardian.com, paparacigossip9.com and www.lankawaynews.com

இளவரசர் வில்லியம் மனைவி கர்ப்பம்?

இளவரசர் வில்லியம் மனைவி கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இங்கிலாந்து இளைவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் மகன் இளவரசர் வில்லியம்.
இவருக்கும், கேத் மிடில்டனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் கர்ப்பம் அடைந்து இருப்பதாக வதந்தி பரவியுள்ளது.

29 வயதாகும் இளவரசி கேத் மிடில்டன் சமீபத்தில் சுவீடன் தலைநகர் கோபன் கேகனுக்கு சென்றிருந்தார்..
அங்கு நடந்த நிகழ்ச்சியில் சுமார் 2 மணி நேரம் கலந்து கொண்டார். அப்போது அவர் 15 தடவைக்கும் மேலாக தனது வயிற்றை கைகளால் தாங்கி பிடித்தபடியே இருந்தார்.
 எனவே, அவர் தாய்மை அடைந்திருப்பதாக (கர்ப்பிணி ஆகி இருப்பதாக) இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு ஒரு முறை கேத் மிடில்டன் வாந்தி எடுத்தார். அப்போது அவர் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறப்பட்டது.
 அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இவர் நிலக்கடலை சாப்பிட்டதாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் நிலக்கடலை சாப்பிடக் கூடாது என அவருக்கு இங்கிலாந்து தாய்மார்கள் அறிவுரை கூறி இருந்தனர்.

தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம் - (படம் முழுமையாக இணைப்பு)

முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்.” என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர். “போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக” கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.
அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது.
முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்களை மறைப்பது யார் என்பது, இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு புரியும்.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11

பிரபாகரன் மீது ஆணையாக வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன்: பதவியேற்பு விழாவில் பரபரப்பு

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ,
அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்தியம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.

பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்றுள்ளார். யார் இவர் என்று பார்ப்போம்.
பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராகவும், பழனி நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருப்பவர் சோலை கேசவன். இவருக்கு வயது 55. தீவிர அ.தி.மு.க கட்சிக்காரரான இவர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார்.

கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் பழனி நகராட்சி 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2006 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு தோற்றுப்போனார். இந்த முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.
உங்களுக்கு  எப்படி பிரபாகரன் மீது இவ்வளவு பற்றுதல் என்று சோலை கேசவனிடம் கேட்டோம்..?

1980-86 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார்.
பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் என்னுடைய வாழ்நாளிலேயே வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.
ஆனால், சோனியா என்ற ஒருவரால் என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கணவும், விருப்பமும் நாசமாய் போனது.
எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும்,
எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள்.

இன்றில்லை... நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... பிரபாகரன் அதை செய்து முடிப்பார்.
அவரது விடுதலை வேட்கை பலம் மிகுந்தது. அந்த விடுதலை வேட்கையை நானும் நம்புகிறேன்,
அதனால் தான் நான் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக பதவி ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.

உங்களைப்போலவே உலகத்தமிழர்கள் பலரும் நம்புகிறார்கள்.

சிறுவனை வைத்துத் திருட்டுத் தொழில் செய்யும் பொலிஸார்!

இந்தியாவின் பல்வேறுபட்ட தமிழ்ப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் சிறுவன் மூலம் திருட வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர் இந்தியப் பொலிஸார்.
இதில் வேடிக்கை என்னவெனில், வாகனம் இறுதியில் உரிமையாளரிடமே போய்ச் சேருகின்றது என்பதுதான்.
அதாவது இச் சிறுவன் மூலம் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டு, உரிமையாளரிடம் தாம் உங்கள் மோட்டார் சைக்கிளை மீட்டு விட்டோம் என்று கூறி அவரிடம் அதனை ஒப்படைத்து விட்டு 5 ஆயிரம் ரூபாய் பணம் வாகன உரிமையாளரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர்.
அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்திலிருந்து திருட்டுப்பணிக்காக நியமிக்கப்பட்ட சிறுவனுக்கு 500 ரூபாயைக் கொடுத்து விடுகின்றனர். மிகுதி 4 ஆயிரத்து 500 ரூபாயைத் தாங்கள் சுருட்டிக் கொள்கின்றனர்.
இதுவும் நல்ல பிழைப்புத்தான்...!

வேலாயுதம் படம் பார்ப்பதை தற்காலிகமாக நிறுத்தினார் ரஜினி

நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்பவர்களுக்கு மத்தியில் நிம்மதியே உன் விலை என்ன என்றுதான் கேட்க முடியும் போலிருக்கிறது. சராசரி மனிதர்களை கூட விட்டுவைக்காத இந்த பிரச்சனைகள் சமுதாயத்தில் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போடும்?பின்வரும் விஷயத்தை கேட்டால் புரிந்து கொள்வீர்கள். 7 ஆம் அறிவு பார்த்த சில தினங்களில் வேலாயுதம் படத்தையும் பார்க்க பிரியப்பட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இத்தனைக்கும் 7 ஆம் அறிவு பார்க்க வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தவர் சூர்யாவின் மனைவி ஜோதிகாதான். ஆனால் வேலாயுதத்தை ரஜினியே விரும்பி பார்க்க ஆசைப்பட்டாராம்.

உடனே ஒரு தேதியையும் முடிவு செய்து ப்ரீவியூ தியேட்டரையும் தயாராக வைத்திருந்தார்கள். இந்த நேரத்தில் கன்னடர்களில் சிலர் கூட்டமாக சேர்ந்து வேலாயுதம் தியேட்டர்களில் கலாட்டா செய்தனர். கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பின் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போனார்கள் வேலாயுதம் படத்தின் விநியோகஸ்தர்கள்.

இந்த நேரத்தில் வேலாயுதம் படத்தை பார்க்கப் போனால், அதுவும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் என்பதை புரிந்து கொண்டு, சட்டென்று படம் பார்க்க வருகிற நிகழ்ச்சியை கேன்சல் செய்தாராம் சூப்பர் ஸ்டார். குற்றம் செய்ய துடிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் ஏன் துணை போவானேன் என்று கூட நினைத்திருக்கலாம் அல்லவா

மாடுகள் போல் மகனை மேய்க்கும் தந்தை

பல்லி சொல்லும் பலனை பஞ்சாங்கத்தில் பார்க்க தெரிந்த என் தந்தைக்கு நான் பள்ளி செல்லும் பலன் மட்டும் தெரியாமல் போனதெப்படி?
எனவே பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றவர்களின் கைகளில் உள்ளது. அவர்களை உலகத்தின் நல்ல ஒரு இடத்தில் அமர வைப்பதும் அவர்களின் கடமைகளில் ஒன்றே.
பெற்று விட்டுப் பொதி சுமக்க விடுவது என்பது பெற்றவர்களுக்கும் பிள்ளைக்கும் ஆரோக்கியமானதாக அமையாது. எனவே பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நீங்கள் வாழ்வதும், பிள்ளைகள் வளர்வதும் சிறந்த இடத்துக்கு இட்டுச் செல்லும்.