Thursday, 28 July 2011
இராணுவ இறுதி மரியாதை செய்ய தெரியாமல் தவித்த ராணுவ வீரர்கள் -காணொளி
புலிகளின் பாணியில் தமிழர்கள் வேட்டு: ஆனால் வோட்டு !

புலிகள் அரசை எப்படி துப்பாக்கி வேட்டுகள் மூலம் தாக்குவார்களோ அதனைப்போல தமிழர்கள் வோட்டு (வாக்களித்து) இலங்கை அரசு மீது தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக நெதர்லாந்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி தெரிவித்துள்ளது. நெதர்லாந்தின் உலக வானொலி இவ்வாறன ஒரு செய்தியை தனது தலைப்பாக இட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் விடுதலைப் புலிகளின் வாசனை தெரிவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு தமது நாட்டில் மனித உரிமை மீறப்படவில்லை, யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லை, தமிழர்கள் சம உரிமையோடு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று கூறிவந்தாலும், நடந்து முடிந்த தேர்தல் அவை அனைத்தையும் கிழித்து எறிந்துள்ளது என அவ்வானொலி தெரிவித்துள்ளது.
புலிகள் துப்பாக்கி வேட்டுகள் கொண்டு தாக்குவார்கள் தமிழர்கள் வோட்டுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என அது குறிப்பிட்டுள்ளது பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புகளையும், இனச் சுத்திகரிப்புகளையும் அது சுட்டிக்காட்டத் தவறவில்லை. சமாதானத்துக்காவும் மக்களை மீட்கவுமே தாம் போர் புரிந்தோம் என இலங்கை அரசு கூறிவந்தது. அது உண்மை என்றால் மீண்ட மக்கள் ஏன் இலங்கை அரசுக்கு வாக்களிக்கவில்லை என்ற கேள்விகளையும் அவ்வானொலி மேலும் எழுப்பியுள்ளது
விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய்யின் நண்பன் படப்பிடிப்பில் ரசிகர்கள் திடீரென்று புகுந்த ரகளை செய்தனர். கேரவனை அடித்து நொறுக்கினர். இந்தியில் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் தயராகிறது.![]() விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்றைய படப்பிடிப்பின்போது 200 பேர் திடீரென அந்தக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர். அவர்கள் விஜய் உள்ளிட்ட நடிகர்களை பார்க்க முண்டியடித்தனர். நிலைமையை உணர்ந்து விஜய், ஜீவா போன்றோர் ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து விட்டுச் சென்றார்கள். ஆனால் கூட்டத்தினர் திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிகர்களின் கைகளை பிடித்து இழுக்க துவங்கினர். இதனால் படப்பிடிப்பை ஷங்கரால் நடத்த இயலவில்லை. ரசிகர்களிடம் கலைந்து செல்லும்படி வேண்டினார். அவர்கள் போகவில்லை. அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைக்க ஆரம்பித்தனர். அவர்களின் இந்த நடவடிக்கையால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள். உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். |
நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகள் (படங்கள் இணைப்பு)
| ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு எல்லை கோடு உள்ளது. அந்த எல்லை கோட்டை கடந்தால் வேறு நாட்டிற்கு சென்று விடுவோம். அப்படி உலகில் உள்ள சில நாடுகளின் எல்லை பகுதிகள் இதோ உங்களுக்காக. LAOS, MYANMAR & THAILAND ![]() GERMANY & CZECH ![]() SPAIN & FRANCE ![]() INDIA & PAKISTAN ![]() PAKISTAN & CHINA ![]() US & CUBA ![]() ITALIA & FRANCE ![]() SOUTH & NORTH KOREA ![]() NEPAL & INDIA ![]() ENGLAND & SCOTLAND ![]() |
இலங்கை போற் குற்ற ஆணை சிப்பாய்களுக்கு வேலையை முடிக்க உத்தரவிடப்பட்டது - சனல்4 (வீடியோ இணைப்பு)
| இராணுவத் தளபது சவேந்திர சில்வா கருத்துத் தெரிவிக்கையில், ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின்படியே மக்களை சுட்டதாக கூறியிருந்தார். ஈழப்போர் இறுதி நாளில் 58வது, 59வது படைகளின் மும்முர படையெடுப்பினாலேயே பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்ததாக கூறுகின்றார். இவ் இறுதிப் போரின் போது காண்போர் எல்லோரையும் சுடுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்க்கும் உரிமை இருந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க கருத்துத் தெரிவிக்கையில், எனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான பெருந்திரளான மக்களை கொல்லவில்லை எனவும், தனது பிள்ளைகளும் இலங்கையின் படுகொலைக் களம் ஆவணத் திரைப்படத்தைப் பார்வையிட்டு, இவ் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இப்படியான கொடுமையா நடந்தது என பயந்து, நாங்களும் ஒரு இலங்கைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தோம் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது என கூறியதாக சந்திரிக்கா தெரிவித்திருந்தார். நன்றி தமிழ்வின் இணையம் |
நடிகர் விஜய், தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார்! - அவரது தந்தை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வி (ஓடியோ இணைப்பு)
| இலங்கையின் போர்க்குற்றவாளியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்�ஷவை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு நடிகர் விஜய் அவர்கள் ஆதரவு வழங்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதனை நாமும் எமது செய்தித்தளத்தில் வெளியிட்டிருந்தோம். அத் தகவலின் உண்மை நிலையினை அறிந்து கொள்வதற்காக பிரபல திரைப்பட இயக்குனரும், இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தையாருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களை லங்காசிறி வானொலி நிறுவனத்தினர் தொடர்பு கொண்டபோது, இளைய தளபதி விஜய் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக யாரும் சந்திக்கவில்லை எனவும், இளைய தளபதி விஜய் அவர்கள் கையெழுத்திட மறுக்கவில்லை எனவும், இது அரசியல் காரணங்களுக்காக ஒரு தரப்பினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட செய்தி எனவும், இளைய தளபதி விஜய் அவர்கள் தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார் எனவும் அவரது தந்தையாரான S.A சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தையார் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவத்தை நீங்கள் இங்கே கேட்கலாம். நன்றி தமிழ்வின் இணையம் |
ஜீவாவிடம் மன்னிப்பு கேட்ட விஜய்... (படங்கள் இணைப்பு)
| ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'நண்பன்'. இதேவேளை, ஜீவா கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளிவரவுள்ள திரைப்படம் 'ரௌத்திரம்'. இந்தப் படத்தின் பாடல் வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. தன்னுடைய ரௌத்திரம் படத்தின் பாடல்களை இயக்குனர் ஷங்கர், விஜய் மற்றும் இலியானா ஆகியோரை வைத்து வெளியிட ஜீவா தீர்மானித்திருந்தார். அதற்கான அழைப்பினையும் அவர்களுக்கு விடுத்திருந்தார். ஜீவாவின் அழைப்பை ஏற்று தாங்கள் வந்து 'ரௌத்திரம்' திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டு வைப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் நண்பன் படத்தின் பட்பிடிப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்தானதால் அவர்களால் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்த ஜீவா, பின்னர் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து பாடல் சீடியினை வெளியிட்டார். பாடல் வெளியீட்டு விழாவுக்கு கடைசிநேரத்தில் வராமல் போனதால் நடிகர் விஜய் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஆகியோர் ஜீவாவிடமும் அவரது தந்தையும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.பி.சௌத்ரியிடமும் மன்னிப்பு கேட்டுள்ளனர். இருப்பினும் இலியானா பற்றி தகவல் ஏதும் இல்லை ![]() ![]() ![]() |
மிருகத்தனமான இந்திய கும்பல் திருடனை அடித்து துன்புறுத்தும் காட்சி.
“வீல்’சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் “பாசமலர்கள்’
பொருளாதாரம், பஸ் வசதி இல்லாத நிலையில் நடக்க முடியாத மகனை பள்ளிக்கு அனுப்ப விரும்பாத பெற்றோரை பணிய வைக்க , பட்டினி கிடந்து சாதித்தார் மாற்றுத்திறனாளி. சக்கரநாற்காலியில் இவரை 2 கி.மீ., தூரத்தில் உள்ள பள்ளிக்கு தள்ளிக் கொண்டு செல்லும் சகோதரர்களின் பாசம், பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்தவர் ஜெபஞான ஜெயராஜ். பனை மர ஓலைகள் வெட்டி கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர். கூலி தொழிலாளி. சாமுவேல்(13), இமானுவேல்(10), கபேரியல்(6) என மூன்று மகன்கள் உள்ளனர். உள்ளுரில் வேலைக்கு பஞ்சம் ஏற்பட்டது. கடந்தாண்டு பிழைப்பு தேடி ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் அருகேயுள்ள குருத்த மான்குண்டு கிராமத்திற்கு இடம்பெயர்ந்தனர். அங்கிருந்து பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கும் சாமுவேலை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என முடிவு செய்தனர். பள்ளிக்கு செல்வேன் என பட்டினி கிடந்து பெற்றோரை பணிய வைத்தான் சாமுவேல்.சாமுவேல் கூறுகையில், “”பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெறுவதும், டாக்டர் ஆவதும், இலவச சேவை செய்வதே லட்சியம்,” என்றார்.பள்ளி வகுப்பு ஆசிரியை முனீஸ்வரி கூறியதாவது:ஆறாம் வகுப்பு தேர்வில் முதல் ரேங்க் பெற்ற சாமுவேல் ஏழாம் வகுப்பிலும் சிறந்த மாணவராக விளங்குகிறார். சத்துணவு வாங்கி வருவதிலிருந்து கழிவறை அழைத்து செல்வது வரை அனைத்து உதவிகளையும் சக மாணவர்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். எப்போதும் சிரித்த முகத்துடன் சாமுவேல் இருப்பது, இவர் மீது, பிற மாணவர்களுக்கு பெரும் பற்றுதலை ஏற்படுத்தி உள்ளது.தந்தை ஜெபஞான ஜெயராஜ் கூறியதாவது: குடிசையில் இரவு 10 மணி வரை சிம்னி விளக்கு வெளிச்சத்தில் குழந்தைகள் படித்து வருவதை பார்க்கும் போது எங்களுக்கு பெருமையாக உள்ளது. வறுமையின் பிடியில் உள்ளோம். நோட்டுகள் கூட வாங்கித்தர பணமில்லாமல் சிரமப்படுகிறோம், என்றார். கல்வி உதவி வழங்க விரும்புவோர் 95854 71209ல் தொடர்பு கொள்ளலாம்.
பாவாடைக்குள்ளே மதுபான போத்தல்களை பதுக்கிய பெண்கள் (காணொளி இணைப்பு )
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையத்துக்கு கடந்த 18 ஆம் திகதி இரு பெண்கள் வந்து இருக்கின்றார்கள். அணிந்து இருந்து முழுப் பாவாடைக்குள்ளே ஒவ்வொருவரும் விலை உயர்ந்த மதுபான போத்தல்களை பதுக்கிக் கொண்டனர். எவரேனும் காண்கின்றார்களா? என்பதை ஒரு பெண் நன்றாக அவதானிப்பார். மற்றப் பெண் முழுப் பாவாடைக்குள் போத்தல்களை பதுக்குவார். இதே உத்தியை கையாண்டு இரு பெண்கள் மதுபான போத்தல்களை கடந்த வருடம் களவாடிச் சென்று இருக்கின்றனர் என நினைவு கூர்ந்தார் மதுபான நிலைய உரிமையாளர்.
திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்
திருடனுக்கு தேள் கொட்டியதுபோல என்றொரு பழமொழி உண்டு. ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு திருடனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. திருடப் போன இடத்தில் ஒரு இளம்பெண் தனனை 3 நாட்கள் செக்ஸ் அடிமையாக வைத்திருந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் ஜாசிஸ்கி. வயது 32. கடந்த வாரத்தில் காசு இல்லாமல் கையை கடிக்கவே மெஷ்சோஸ்க் என்ற இடத்தில் உள்ள ப்யூட்டி பார்லரில் திருட முடிவு செய்தார். உள்ளே நுழைந்து பணப்பெட்டியை தேடினார். அப்போது நடந்த எதிர்பாராத தாக்குதலால் கீழே விழுந்தார்.
அரை மயக்கத்துக்கு போன விக்டர், அதன் பிறகு வேறு மயக்கத்தில் இருந்து மீளாதவராக போலீஸ் நிலையத்தில் இருந்தார். அவரை யாரும் பிடித்துக் கொடுக்காமல், புகார் கொடுக்க தானாகவே போலீஸ் நிலையம் வந்திருந்தார் அவர்.
அங்கு போலீசிடம் அவர் அளித்த புகார் இதுதான்: “பார்லருக்குள் நுழைந்ததும் யாரோ பலமாக தாக்க, கீழே சரிந்தேன். கராத்தே தெரிந்த பார்லரின் உரிமையாளரான இளம்பெண் ஆல்ஜா (28) என்னை அடித்து வீழ்த்தினார். அரை மயக்கத்தில் இருந்த என்னை அழகு நிலையத்தின் பின்னால் உள்ள ஒரு அறையில் கட்டிப் போட்டு நிர்வாணப்படுத்தி `செக்ஸ்’ அடிமையாக நடத்தினார். இரவு முழுவதும் பல மணி நேரம் என்னிடம் `செக்ஸ்’ அனுபவித்தார். இப்படி 3 நாட்கள் வைத்து இருந்த பிறகு என்னை விடுவித்தார்.
உணவாக ‘வயாகரா’ மாத்திரை மட்டுமே அளித்தார். பிறகு, ரிலீஸ் செய்தபோது ‘இதுதான் உனக்கு சரியான பாடம்’ என்று எச்சரித்து அனுப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த புகாரை ஏற்ற போலீசார் ஆல்ஜாவை விசாரித்தனர். “ஆம். திருட வந்தவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தேன். ஓரிரு முறை உறவும் நடந்தது. ரிலீஸ் செய்யும்போது புதிய ஜீன்ஸ், நல்ல உணவு, 1,000 கரன்சி நோட்டுகளும் கொடுத்து அனுப்பினேன்” என்றார்.
என்ன செய்வதென்று தெரியாமல் முதலில் கையை பிசைந்த போலீசார், பிறகு திருட்டு முயற்சி குற்றத்தில் விக்டரையும், பாலியல் அத்துமீறல் புகாரில் ஆல்ஜாவையும் கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தனர்.
எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக குழந்தைகளின் வாய்ச் சண்டை ( வீடியோ இணைப்பு )
எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடியோ காட்சி இன்றைய இணைய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின்றது. இவ்வீடியோ கடந்த வாரம்தான் யூ ரியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.இது வரை குறைந்தது ஐந்து இலட்சம் பேர் வரை இவ்வீடியோவை பார்த்து இருக்கின்றார்.
சிறுவனை திருமணம் செய்ய விரும்புகின்றாரென சிறுமி கூறுகின்றார்.
ஆனால் அச்சிறுமியை திருமணம் செய்ய மாட்டார் என்று அடம் பிடிக்கின்றார் சிறுவன். அச்சிறுமியை திருமணம் செய்ய மாட்டார் என்று சொல்லி அழுகின்றார்.சிறுமியும் விட்டுக் கொடுக்கின்றார் இல்லை.
ரயிலில் அரைநிர்வாண தரிசனம் கொடுத்த யுவதி( வீடியோ இணைப்பு )
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இந்த விசித்திரமான சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது.ரயிலில் அரை நிர்வாணமாக இளம் யுவதி ஒருவர் பயணித்தார்.
இவர் ஜீன்ஸை முற்றாக கழற்றி இருந்தார்.
வேறு உள்ளாடை அணிந்திருக்கவும் இல்லை.
இவர் ஜீன்ஸை கழற்றி வைத்துக் கொண்டு அரைநிர்வாணமாக பயணம் செய்தமைக்கு என்ன காரணம்? என்பது தெரியவில்லை.
சக பெண் பயணி ஒருவர் தலையிட்டமையை அடுத்து ஜீன்ஸை மீண்டும் அணிந்து கொண்டார்.
இளம் யுவதி அரைநிர்வாணமாக பயணித்த காட்சியை கில்லாடி ஒருவர் வீடியோ படம் பிடித்து இருக்கின்றார்.
இணைய உலகில் இவ்வீடியோ காட்சி மிகுந்த பிரபலம் அடைந்து வருகின்றது.
போலி உற்பத்திகளின் தாயகம் சீனா: ‘அப்பிள் ஸ்டோர்ஸ்’ ஐயும் விட்டுவைக்கவில்லை (பட இணைப்பு)
போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான். ஆரம்ப காலத்தில் மற்றைய நிறுவனங்களின் இலத்திரனியல் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியது சீனா.
மென்பொருட்கள் முதல் ஆடைகள் வரை அனைத்தினையும் விட்டு வைக்கவில்லை.
போலி உற்பத்திகளை உருவாக்குவதில் அடுத்த பரிணாமமாக தற்போது சீனாவில் போலி கடைகளும் முளைவிடத் தொடங்கியுள்ளன.
இதற்கு முதன் முதலாக இலக்காகியுள்ளது ‘அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்’.
அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ- பேட் ஆகியவை சீனாவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
சீனாவின் போலி உற்பத்தியாளர்கள் இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் . பல போலி அப்பிள் ஸ்ட்ரோர்ஸ் மற்றும் அனுமதியற்ற விநியோகஸ்தர்கள் அங்கு நிறைந்து வழிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நடைபெற்ற ஆரம்பகட்ட விசாரணைகளில் பல போலி அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.
இத்தகைய போலி ஸ்ட்ரோர்ஸ்கள் சீனாவில் மட்டுமன்றி வெனிசூலா மற்றும் ஸ்பெய்ன் உட்பட பல நாடுகளிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக சீனாவில் அப்பிளின் உத்தியோகபூர்வ ஸ்ட்ரோர்கள் 4 மட்டுமே அமைந்துள்ளன.
இவற்றில் 2 பீஜிங்கிலும் மற்றைய இரண்டும் சங்காயிலுமே அமைந்துள்ளன.
மேலும் சிலர் அப்பிளின் அனுமதி பெற்ற விநியோகஸ்தர்கள் ஆவர்.
போலி உற்பத்திகள் அப்பிளின் வர்த்தக நாமத்திற்கும், தரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக அப்பிள் தற்போது கவலை வெளியிட்டுள்ளது.
கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தத்வரூபமாக நடைபெறும் போலி வியாபாரத்தினை நீங்களும் பாருங்கள்.




Subscribe to:
Comments (Atom)


















