Sunday, 24 July 2011

தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது; கோவையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு


 


தி.மு.. செயற்குழு கூட்டம் கோவையில் அறிஞர் அண்ணா வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தை தி.மு.. தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எப்படிப்பட்ட முக்கியமான நேரத்திலே நாம் இங்கே கூடியிருக்கின்றோம் என்பதை நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு மாநிலத்தில் பெரிய பொதுத்தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் தி.மு.. மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இருந்து,

நேர்மாறான விளைவுகளின் காரணமாக இன்று நாம், ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியாகவாவது இருக்கக் கூடிய நிலைமையையும் பெறாமல், எதிர்க்கட்சிக் குழுக்களிலே ஒன்றாக இடம்பெற்றிருக்கின்ற நிலையில், நாம் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கின்றோம்.

 இது யாரால் வந்த நிலை என்று சிந்திப்பதைவிட நமக்கு நாமே தேடிக் கொண்ட முடிவு இது என்று சொன்னால், அது கேள்விக்கு இடமில்லாத ஒரு உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள். நான் உணர்ந்த காரணத்தால்தான் இதைச் சொல்லுகின்றேன். ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளத்தைத் தொட்டுப் பார்த்து, நெஞ்சைத் தடவிப் பார்த்து, தெரிந்து கொண்டிருக்கின்ற அந்த உண்மையை நான் மீண்டும் மீண்டும் இங்கே கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.

ஏனென்றால், இன்றைக்குக் கழகம் புண்பட்டிருக்கின்றது. கழகம் புண்பட்டிருக்கிறது என்றால், நான் புண்பட்டிருக்கின்றேன். பொதுச்செயலாளர் பேராசிரியர் புண்பட்டிருக்கின்றார். கழகத்தினுடைய தளபதிகள் புண்பட்டிருக்கின்றார்கள். கழகத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய முன்னணி வீரர்கள் எல்லாம் புண்பட்டிருக்கின்றார்கள் என்பது அதற்கு பொருள்.

ஆகவே, இந்தப் புண்ணை ஆற்றிக் கொள்ள, மீண்டும் தி.மு..வுடைய ஆற்றல் பெருகி, தி.மு.. அகிலம் பரவ இருவண்ணக் கொடியை ஏற்றுகின்ற அந்தக் காலம் நிச்சயமாக வரும், வரவேண்டும் என்பதற்காகத்தான் நாம் மீண்டும் இன்றைக்கு பூஜ்யத்திலே இருந்து ஆரம்பிக்கின்றோம். இருபது பேரோ, இருபத்திரண்டு பேரோ சட்டசபையிலே இருப்பதாலோ, நாடாளுமன்றத்தில் சிலபேர் கழகத்தின் சார்பில் இடம் பெற்றிருப்பதாலோ நாம் பெரிய அளவிலே மகத்தான மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொள்ள முடியாது.

இந்த இயக்கத்தை நடத்துவது, நடத்திக் கொண்டிருப்பது, நடத்தியதெல்லாமே, திராவிட சமுதாயத்திற்கு, திராவிட இனத்திற்கு ஏற்றமும் வெற்றியும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இன்றைக்கு ஒரு கட்சியினுடைய வெற்றி தோல்விகளால் ஒரு கொள்கை நிர்ணயிக்கப்படுகின்றது என்று யாரும் சொல்லமுடியாது. இப்போது வெற்றி பெற்றிருக்கின்ற .தி.மு.. கட்சியின் வெற்றியில் கொள்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால், ஆமாம், அந்தக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, நமக்குக் கிடைத்திருக்கின்ற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, லட்சியத்திற்கு, எதிர்காலத்திற்கு, நம்முடைய சந்ததியினருக்கு, நம்முடைய வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கக்கூடிய தோல்வி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.   அதனால்தான், இன்றைக்கு நீட்டி முழங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிட்டோம் என்றெல்லாம் சிலர் நம்மைப் பார்த்து கேலி செய்து கொண்டிருக்கிறார்கள்.

 ஆனால், நான் சொல்லுகின்றேன். இதை தோல்வி என்று கருதக்கூடாது. நாம் சந்திக்காத தோல்விகள் இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரையில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, ஒரே ஒரு இடத்திலேதான் நாம் வெற்றிபெற முடிந்தது. சென்னை துறைமுகம் தொகுதியிலே நான் ஒருவன்தான் வெற்றிபெற்று, அதையும் ராஜினாமா செய்துவிட்டு, அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம், தனித்து எந்தவிதமான உதவியும் துணையுமின்றி நிற்க நேர்ந்தது. 

அந்தக்காலத்திலேயேகூட, அந்த ஒரு தொகுதியிலே இருந்து தொடர்ந்து பல தொகுதிகளைப் பெற்று, ஆட்சியை அமைத்தோம் என்றால் மீண்டும் அந்தக் காலம் வராமலேயே போகாது. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற காரணத்தால், நம்முடைய கொள்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள், லட்சியங்கள், குறிக்கோள்கள் இவை எல்லாம் நிறைவேறுவதற்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அந்த வெற்றி ஏதோ பத்து இடம், பதினைந்து இடம் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருக்கிறோம் என்ற அந்த வெற்றியல்ல. அப்படிப்பட்ட வெற்றிக்காக நாம் பாடுபடவில்லை. நாம், எம்.பிக்கள் - எம்.எல்..,க்கள் வரவேண்டுமென்று எண்ணுகிற அதேநேரத்தில், அந்த எண்ணிக்கையின் காரணமாக நம்முடைய கொள்கை வளர வேண்டும், கொள்கை வலுத்திட வேண்டும், லட்சியம் ஈடேற வேண்டும் என்பதை சேர்த்துத்தான் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம்.   இன்று நான், இங்கே எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம் பார்க்கின்றேன்.

அவர்களைப் பார்த்து, எப்போது வந்தீர்கள் என்று கேட்பதற்குக்கூட என்னுடைய மனம் அவ்வளவு துணிவைப் பெறவில்லை. அந்தளவிற்கு தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் வா என்று அழைக்கப்படுவர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தார் - அண்ணாவின் தம்பிகள் இங்கே அமர்ந்திருக்கின்ற காட்சியை நான் காணுகின்றேன். அதற்காக நாம், நிலைகுலைந்து போய்விடவில்லை.

இந்த நிலையிலும்கூட, நம்முடைய செயற்குழுக் கூட்டத்திற்கு, இந்த மண்டபம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு, இங்கே வந்திருக்கின்றீர்கள் என்றால், தி.மு..வை யாரும், எந்த நேரத்திலும் அழித்துவிட முடியாது. "எவரும் அழிக்க முடியாது''   திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எஃகுக் கோட்டை. அது ஊதி, ஊதி அலைக்கழிக்கப்படுகின்ற துரும்பல்ல.

இது தூண். இந்தத் தூணை ஆட்டவோ, அசைக்கவோ யாராலும் முடியாது என்பதை, இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக, பெரியாருடைய காலத்திலிருந்து, அறிஞர் அண்ணாவினுடைய காலத்திலிருந்து, இன்றைக்கு நம்முடைய காலம் வரை, எவ்வளவு அக்கிரமங்களை - போட்டிகளை நாம் சந்தித்து, இந்த தியாக உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை நிரூபித்து, நாம் நம்முடைய கொடி நிழலில், கொள்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

நான் கேட்கின்றேன். நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி, தி.மு..வுக்கு புதிய நெருக்கடி அல்ல. இன்றைக்கு வீரபாண்டி ஆறுமுகம் தேடப்படுகிறார் என்பது மாத்திரமல்ல. நானே தேடப்பட்டவன்தான். நம்முடைய கழகத்தின் முன்னணி வீரர்களெல்லாம் தேடப் பட்டவர்கள்தான். .தி.மு.. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த திங்களிலேயே என்னை என்ன பாடுபடுத்தி, சிறையிலே அடைத்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

   எமர்ஜென்சியைவிட கொடுமையா இந்தியாவிலே வரப்போகிறது. தமிழ்நாட்டிலே வரப்போகிறது. எமர்ஜென்சியையே ஊதியவர்கள் நாம். இன்றைக்கு யாருக்கும் பயப்படமாட்டோம். அத்தகைய துணிச்சல் உள்ள சிங்கங்களாக, வீரர்களாக, வேங்கைகளாக இருக்கின்றோம். தி.மு..வின் தீரர்கள் - செயற்குழு உறுப்பினர்களாக இன்றைக்கு கூடியிருக்கின்றீர்கள். செயற்குழுவில் என்னென்ன திட்டங்களைத் தீட்ட வேண்டும். மேலும், கழக வளர்ச்சிக்கு என்னென்ன காரியங்களை ஆற்ற வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாளையதினம் பொதுக்குழுவிலே விரிவாக நாம் பேச இருக்கின்றோம்.

அதற்கான தீர்மானங்கள் என்னென்ன, இருபத்தைந்து, முப்பது தீர்மானங்களுக்கு மேல், நாளைய தினம் (இன்று) நிறைவேற்றப்பட இருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் எப்படி அமையவேண்டும் என்பதற்கான அடித்தளத்தை இன்றைக்கு நீங்கள் அமைத்துத் தரவேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். அதற்குத்தான் இந்த செயற்குழு.   இந்தச் செயற்குழுவிலே இன்றைக்கு போடப்படுகின்ற அடித்தளம், நாளைய பொதுக்குழுவின் தீர்மானங்களாக வெளிவரும்.

"இனி பொறுப்பதில்லை'' என்ற பாரதியினுடைய வாசகத்தை மனதிலே பதிய வைத்துக் கொண்டு, பொறுப்பதில்லை என்று சொல்வதிலிருந்து, அந்த நிலையை அடைய, வென்றிட, வாகை சூடிட, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் நிர்ணயிக்கின்ற குழுவாகத்தான் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற பொதுக்குழு அமையவிருக்கின்றது. அதற்கேற்ப இந்தச் செயற்குழுவிலே உங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, என்னுடைய முன்னுரையை நிறைவு செய்கின்றேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

ஒரு நாள் டிஐஜி - 48 நாள் கலெக்டர்


நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்தவர் ஜெயராமன்.  அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு  அவர் மாற்றப்பட்டு நடராஜன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.


தற்போது அவர் பணியாற்றிய 48 நாட்களுக்கு பின்பு திடீரென மாற்றப்பட்டு புதிய கலெக்டராக செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.


அதே போன்று நெல்லை சரக போலீஸ் டிஐஜியாக இருந்தவர் சண்முகராஜேஸ்வரன்.   அவரும் சென்னைக்கு மாற்றப்பட்டு ராமசுப்பிரமணியம் என்பவர் டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.




ராமசுப்பிரமணி வெளிநாட்டு பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பி வந்தவர் கடந்த 18ம் தேதி அன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

திடீரென்று அன்றே மாலையே அவர் மாற்றப்பட்டு திருச்சி ஆயுதப்படை முகாமுக்கு மாற்றப்பட்டார்.  தற்போது வரை அந்த பணி காலியாகவே உள்ளது.


அதிகாரிகள் இது போன்று திடீர் தீடீரென்று பந்தாடப்படுவதால் பொறுப்பேற்கும் அதிகாரிகளும் தங்களின் பதவி எத்தனை நாள் என்கிற மன பதட்டத்திலேயே இருக்கிறார்கள்.


இது மக்கள் வளர்ச்சி பணி திட்டம் முடங்குவதற்கு அடிகோலும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

திமுக செயற்குழு கூட்டம்... முக்கிய முடிவுகள் குறித்து தீவிர விவாதம்!!

 திமுகவின் அதி முக்கிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவை சிங்காநல்லூரில் உள்ள அண்ணா வளாகத்தில் தொடங்கியது.

இந்தக் கூட்டத்துக்கு வருவாரோ மாட்டாரோ என்று பலரும் சந்தேகம் கிளப்பிய மத்திய அமைச்சர் முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார்.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், முன்னாள் துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான முக ஸ்டாலின், 2 ஜி அலைவரிசை விவகாரத்தில் சிக்கி பதவியிழந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பேராசிரியர் அன்பழகன் உள்பட அனைத்து தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருணாநிதி - முக அழகிரி பேச்சு

முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து ரயில் மூலம் கோவை வந்துவிட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஓட்டலில் தங்கியிருந்தார். அவரை முக அழகிரி தனது ஆதரவாளர்கள் மூர்த்தி, மூக்கையா ஆகியோருடன் போய் சந்தித்தார்.

பிற்பகல் வரை கட்சி விவகாரம் குறித்து அவர்கள் கடுமையாக விவாதித்ததாகத் தெரிகிறது.

ஆனால் மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்கியபோது, அனைவரும் அரங்குக்கு வந்துவிட்டனர். ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படுமா, அழகிரிக்கு வேறு புதிய கட்சிப் பதவி தரப்படுமா போன்ற கேள்விகளுக்கு இந்த கூட்டத்தில் விடை கிடைத்துவிடும்.

காங்கிரஸ் கூட்டணி, அமைச்சரவையில் பங்கேற்பு குறித்து விவாதம்

மத்திய அரசில் அங்கம் வகிப்பதில் எழுந்துள்ள நெருடல்களைத் தொடர்ந்து, மத்திய அரசில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து திமுக செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இருப்பினும், மத்திய அரசில், அமைச்சரவையில் தொடரும் பட்சத்தில், மத்திய அரசில் இருந்து விலகிய 2 அமைச்சர்களுக்குப் பதிலாக, வேறு 2 பேரை அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்யலாமா என்பது குறித்தும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது குறித்தும் கடும் விவாதம் எழுந்தது. இதுகுறித்த இறுதி முடிவு கட்சித் தலைவர் கருணாநிதி வசம் விடப்பட்டது.

மேலும் தமிழக அரசின் வாட் வரி உயர்வு குறித்தும், சமச்சீர் கல்வி விவகாரத்தில் திமுக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வழக்கறிஞர் அணி 
செயற்குழு கூடும் முன் அதே அரங்கில் கூடிய திமுக சட்டத்துறை பிரிவின் கூட்டத்தில், அதிமுக அரசு திமுகவின் அனைத்துப் பொறுப்பில் உள்ளவர்கள் மீதும் பழிவாங்கும் நோக்கோடு வழக்குகளைப் பதிவு செய்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இவ்வாறு பொய்வழக்குகள் போடும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமை ஆணையம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் முறையீடு செய்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

ரஜினிக்காக காத்திருக்கும் ஏ ஆர் ரஹ்மான்!

பொதுவாக இன்றைக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை வேண்டும் என்றால் படத்தை முடித்துவிட்டு பல மாதங்கள் வரை கூட காத்திருக்கும் நிலைதான் உள்ளது.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி விஷயத்தில் நிலைமை தலைகீழ். ரஹ்மான் பாட்டு தயாராக உள்ளது. அதை ஓகே செய்ய ரஜினியின் வருகைக்காக காத்திறார்கள்.

ராணா படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். இதுவரை நான்கு பாடல்களை தயார் செய்துவிட்டாராம் ரஹ்மான். ரஜினி வந்து கேட்டுவிட்டு ஓகே செய்தால் வைரமுத்து தன் வேலையை ஆரம்பித்துவிடுவார்.

ரஜினி இப்போது ஓய்விலிருப்பதால், இன்னும் சில தினங்களில் ட்யூன்களை கேட்டு திருத்தங்களைச் சொல்லிவிடுவார் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

பொதுவாக ரஹ்மான் வேறு எந்த நடிகருக்காகவும் இந்த மாதிரி காத்திருப்பதில்லை. ஆனால் ரஜினி விஷயத்தில் அவர் விரும்பி காத்திருக்கிறார். இதுகுறித்து ரஹ்மான் இப்படிக் கூறுகிறார்:

"ரஜினி சாருடன் பணியாற்றுவது மிகவும் சந்தோஷமான அனுபவம். அவருக்காக காத்திருக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து அவர் என்னைப் பார்க்கிறார். பல சிக்கலான தருணங்களில் அவரது வார்த்தைகள் உந்துதலாக இருக்கின்றன. அவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய. அவர் திரும்ப பழைய உற்சாகத்துடன் வந்து பட வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அவருக்காக காத்திருக்கிறேன். ராணாவுக்கு நான்கு பாடல்கள் ரெடி. ரஜினி சார் கேட்டுவிட்டு திருத்தங்கள் சொல்ல வேண்டும். அவ்வளவுதான்," என்றார்.

பொதுவாக அதிகம் பேசாத ரஹ்மான் இந்த அளவு உணர்ச்சிவசப்பட்டு பேசுவது இதுவே முதல்முறை.

சமீபத்தில் கூட, லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஹ்மான், அங்கு ரஜினியின் ரோபோ பாடலை இசைத்தபோது, ரஜினியின் படம் அரங்கிலிருந்த பெரிய திரைகளில் ஒளிரச் செய்தார். ரஜினி படத்தை பார்த்ததும் அந்த அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனராம். இதனை தனது தளத்தில் 'ரோபோ ரஜினி'க்கு கிடைத்த வரவேற்பு என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார் ரஹ்மான்.


இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுக்க திட்டமிடும் பாகிஸ்தான்: அமெரிக்க தளபதி

நமாலுக்கு மெல்லாமா பந்தைப் போடவேனும்: மிரட்டிய ஆமி !



நேற்று முந்தினம் நமால் ராஜபக்ஷ கிளிநொச்சியில் உள்ள பாரதிபுரத்தில் தமிழ் இளைஞர்களோடு கிரிகெட் விளையாடியுள்ளார். இதற்காக சில தமிழ் இளைஞர்களை இராணுவம் மைதானத்துக்கு அழைத்துவந்துள்ளது. நமால் வருவதற்கு முன்னதாகவே அவர்களைக் கொண்டுவந்த இராணுவம் பந்து வீச இருந்த இரு தமிழ் இளைஞர்களை தனியாகக் கூட்டிச் சென்று வேகமாக பந்தை வீசக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். நமலுக்கு பந்து வீசும்போது மெல்லப் போடவேனும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளனர். இதற்கு மேலும் நாம் எழுதவேண்டுமா ?

ஆமி சொன்னது போல பெடியள் பந்தை சும்மா வீசிவிட, நமால் சிக்ஸர் அடித்தாராம். அதனைப் பார்த்து அங்கே நின்றிருந்த காவலாளிகள் மற்றும் இராணுவத்தினர் கைதட்டி ஆரவாரப் படுத்தினராம். இது உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குச் சேகரிக்கின்றமைக்கான ஒரு உத்தி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இறுதியில் மண் கவ்வியது யார் என்று இப்ப தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் புரிஞ்சிருக்கும். ஏன் என்றால் தேர்தல் முடிவுகள் வந்திடிச்சில்ல !


ரஷ்யாவின் ஆபத்தான சண்டை சாகசம் (வீடியோ இணைப்பு)

பொதுவாக சண்டை பயிற்சி என்றாலே ஆபத்தானது தான். ரஷ்யாவில் உள்ள Parkour என்ற சண்டை மிகவும் வினோதமாக உள்ளது. உயரமான கட்டிடம் மற்றும் பாலத்தில் விளிம்பில் செய்து காட்டிய சண்டை சாகசம் இதோ உங்களுக்காக.



புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களின் சிதைவுகளை அகற்ற 2180 கோடி ரூபா செலவு


காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஏழு கப்பல்களின் சிதைவுகள் உள்ள போதும் அவற்றில் ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றவே உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்ற இந்தியா 2180 கோடி ரூபாவை செலவிடவுள்ளது.

ஆனால் ஏழு கப்பல்களின் சிதைவுகள் அங்கு காணப்படுவதாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இவற்றில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கிய சீ டான்சர் என்ற கப்பல் உள்ளடக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

காங்கேசன்துறைத் துறைமுகத்தின் நுழைவாயிற் பகுதியில் காணப்படும் இந்தக் கப்பலின் சிதைவுகளில் எம்வி மாகோ என்ற சரக்குக் கப்பல் முன்னர் ஒருமுறை சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

துறைமுகப் பகுதியில் சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா, ஒரு இழுவைப்படகு போன்றவற்றின் சிதைவுகளும் துறைமுகத்துக்கு மிகநெருக்கமான பகுதியல் காணப்படுவதாகவும் சிறிலங்கா படை வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஆனால் ஆறுகப்பல்களின் சிதைவுகளை அகற்றவே இந்தியாவுடன் சிறிலங்கா உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரச பயங்கரவாதத்​தின் கொடுரமான கரங்களில் (வீடியோ இணைப்பு)


சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

 

'நேருக்கு நேரி'ல் அறிமுகமானாலும், சூர்யாவுக்கு திரையுலகில் ஒரு நிரந்த இடம் கிடைக்க அடையாளம் கொடுத்தது 'நந்தா' தான்.

'நந்தா' படத்திற்குப் பிறகு ஒவ்வொரு படத்தையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் சூர்யா. ' கொடுத்த ரோலை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர் ' என்று இயக்குனர்களிடம் பேர் வாங்கி இருக்கும் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.

இன்று பிறந்தநாள் கொண்டாட இருக்கும் சூர்யாவைப் பற்றிய சில தகவல் துளிகள் :

 * பார்ட்டி, டிஸ்கோதெ, டிரிங்ஸ், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லாதவர் சூர்யா. சூட்டிங் முடிந்தால் அப்பா, அம்மா, மனைவி என செட்டில் ஆவதையே விரும்புவார். கேட்டால், 'அப்பாவும் இப்படித்தானே இருந்தார்!' என்பார்.

 * முருக பக்தர் சூர்யா. எழுந்தவுடன் குளித்துவிடுவார். நெற்றியில் கொஞ்ச நேரமேனும் திருநீறு துலங்கும். திருவண்ணாமலைக்குச் சென்று, செருப்பு போடாமல் கிரிவலம் வந்திருக்கிறார்! தொழில் மீது இருக்கும் அளவுக்கு கடவுளிடமும் பக்தி உண்டு!

 * காலையில் ஹெல்த் டிரிங்ஸ், கொஞ்சம் உலர்ந்த பழங்கள். மதியம் மூன்று சிக்கன் பீஸ், சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள். மாலை ஜுஸ், இரவு சப்பாத்தி. இதுதான் அவருடைய மெனு. ஸ்வீட்டுக்கு எப்பவும் தடா!

 * துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்த காரணத்தால், சூட்டிங்கில் அவருக்கான ஆடைகளை அவரே கட்டிங் செய்து டிசைன் செய்கிறார்!

 * அவரது புதுப் படம் வெளியாகும்போதெல்லாம், அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஸ்க்ரீன் செய்து அபிப்பிராயம் கேட்பார்!

 * சூர்யாவின் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஷங்கர். ஆனாலும், இவர்கள் இருவரின் படத்திலும் நடித்தது இல்லை சூர்யா!

* தங்கை பிருந்தா மீது சூர்யாவுக்கு அலாதி பாசம். வாரத்துக்கு ஒரு முறையேனும் பிருந்தாவை அவர் பார்த்துவிட வேண்டும். நாட்கள் கடந்தால் இவரே தன் குழந்தை தியாவைத் தூக்கிக் கொண்டு தங்கையைப் பார்க்க ஓடிவிடுவார்!

* உலக சினிமாக்களில் இரானியப் படங்கள்தான் சூர்யா சாய்ஸ். சூட்டிங் கேன்சல் ஆனால் அந்தப் படங்கள்தான் சூர்யாவின் ஹோம் தியேட்டரில் கதை பேசும்!

 * வீட்டிலேயே ஜிம் இருக்கிறது. ஹிந்தி 'கஜினி'யில் அமீருக்கு உடற்பயிற்சியாளராக இருந்த அல்காஸ்தான் இப்போ சூர்யாவுக்கும் கைடு!

 * தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது, கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜானின்போது வாழ்த்து அனுப்புவது சூர்யா பழக்கம். 'சினிமா ஸ்டார் ஆயிட்டோம்னு நண்பர்களை மறக்க முடியாதுல்ல!' என்பார்!

 * சினிமாவில் கமல்தான் சூர்யாவின் குரு. 'தேவர் மகன்' படம் வந்த சமயம் கமல் போலவே ஃபங்க் தலைமுடி வைத்துக் கொண்டு திரிந்தவர் சூர்யா!

 * சூர்யா கௌரவ நடிகராக நடித்த ஒரே படம் 'ஜூன் ஆர்'. ஜோவின் அன்புக்காக அது. ரஜினிக்காக ஒரே ஒரு காட்சியில் நடித்த படம் 'குசேலன்'. கமலுக்காக ஒரே ஒரு பாடலில் நடித்த படம் மன்மதன் அம்பு. பாலாவுக்காக ஒரே ஒரு காட்சியில் நடித்த படம் அவன் இவன்.

 * எல்லோரையும் 'ஜி' என்றுதான் அழைப்பார் சூர்யா. வயதில் மூத்தவர்களை 'அண்ணே' என்பார். மிகவும் நெருக்கமானவர்களைத்தான் பெயர் சொல்லி அழைப்பார்!

 * எம்.ஜி.ஆருக்குப் பிறகு அம்மா சென்ட்டிமென்ட்டில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அம்மா வார்த்தைக்கு மறு பேச்சு பேசாமல் நடந்துகொள்வார்!

 * தேசியக் கட்சி நடத்திய சர்வேயில் முதல் இடத்தில் வந்தவர் சூர்யா தானாம். ஆனால், அவர்கள் விடுத்த அழைப்புக்கு, 'ஆளை விடுங்க சாமி' என்று கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி இருக்கிறார்!

 * சூர்யா சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களில் நண்பர்கள், உறவினர்கள் தவிர கட்டாயமாக அழைப்பு அனுப்பப்படும் இரண்டு நண்பர்கள் விஜய், அஜீத்!.

 * வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என இவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் கொடி கட்டிப் பறந்தன. இவர் நடித்த சிங்கம் படம் இந்தி ரீமேக் இன்று ( 22 ஜூலை )வெளியாகி இருக்கிறது.

 * தற்போது நடித்து வரும் 'ஏழாம் அறிவு 'படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அடுத்தது  'அயன்' கூட்டணி. மீண்டும் கே.வி.ஆனந்துடன் 'மாற்றான்' படத்தில் இணைய இருக்கிறார். 

 இன்னும் ஒரு நாட்கள் கூட படப்பிடிப்பு தொடங்காத அப்படத்தை விநியோகஸ்தார்கள் இப்போதே 63 கோடி ரூபாய்க்கு விலை பேசி வருகிறார்கள்.