Saturday, 9 July 2011

தொடர்ந்து தோல்வி படங்கள் தரும் தனுசுக்கு ரூ.8.5 கோடி சம்பளமா?


தொடர்ச்சியாக நான்கு தோல்விப் படங்களில் நடித்த நடிகர் தனுஷ் சம்பளத்தை குறைக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தனுஷ் சம்பளம் இப்போது ரூ. 8.5 கோடியாக உயர்ந்துவிட்டதாகவும், இது நியாயமல்ல என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தனுஷ் நடித்த மாப்பிள்ளை, சீடன், ஆடுகளம், உத்தம புத்திரன் ஆகிய நான்கு படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளன. குறிப்பிட்ட சேனல் மூலம் பிரமாண்டமாக காட்டப்பட்ட இப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தின. எனவே தனுஷ் சம்பளத்தை குறைக்க வேண்டும்.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி ராமேஸ்வரத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் தனுஷ் உள்ளிட்ட சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்கள் பற்றி பேச உள்ளோம். சம்பளத்தை குறைக்க வேண்டும் எனவும் வற்புறுத்த உள்ளோம். தயாரிப்பு செலவுகள் குறைத்தால்தான் சினிமா தொழிலில் இருக்கும் அத்தனை பேரும் லாபம் சம்பாதிக்க முடியும்.

தோல்விப் படங்கள் கொடுத்த தனுஷ் போன்றவர்கள் ரூ. 8 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டால் எப்படி லாபம் ஈட்ட முடியும். இதற்கு பொதுக் குழுவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்," என்றார். 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் கூறும்போது, நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைத்தால்தான் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் லாபம் அடைய முடியும். சில நடிகர்களின் படங்கள் டி.வி. சேனல்கள் மூலம் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டன.

இதன் மூலம் அந்த நடிகர்கள் தங்களை பெரிய நடிகர்களாக கருதி சம்பளத்தை உயர்த்திக் கொண்டனர். அனால் நிஜத்தில் அது போன்ற படங்கள் ஓடவில்லை. விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து கொடுத்தது போல செயற்கையாகத்தான் ஓட்டப்பட்டன. அந்த படங்களால் நஷ்டங்கள் தான் ஏற்பட்டன," என்றார் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்.


கள்ளத்தொடர்பு கொலை: கைதாகும் பிரபல நடிகை நிலா!

 

நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், தமிழ்-தெலுங்கு நடிகையுமான மீரா சோப்ரா என்கிற நிலாவைக் கைது செய்ய ஹரியானா போலீஸார் டெல்லி விரைந்துள்ளனர். 

நடிகை நிலாவுடன் இருந்த கள்ளத்தொடர்பால் தனது தங்கை ருச்சியை அவரது கணவர் கொலை செய்து விட்டார் என்று ஹரியானா மாநிலம் குர்காவ்னைச் சேர்ந்த ருச்சியின் சகோதரி ஷெபாலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நிலாவைக் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த குர்காவ்ன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருச்சியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ருச்சியின் கணவர் சுமித் தான் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி கூறுகையில், சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது. 

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ருச்சிக்கும், சுமித்துக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சுமித்தும், அவரது குடும்பத்தாரும் ருச்சியைக் கொடுமைப்படுத்தி வந்தனர். இவ்வாறு சித்ரவதை செய்து கொண்டே இருந்தால் ருச்சி விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார் என்பது அவர்கள் எண்ணம்.

அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்றார். 

இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வரதட்சணைக் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித்தை இபிகோ பிரிவு 304 பி மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் கைது செய்துள்ளோம். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். 

ருச்சி இறப்பதற்கு முன்பு அவருடன் வாக்குவாதம் செய்ததாக ஒப்புக் கொண்டாலும், அவரைத் தான் கொல்லவில்லை என்கிறார் சுமித். மேலும் அவர் கூறுகையில், வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எனக்கும், எனது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு தான் இருந்து வந்தது. கடந்த வாரம் எங்கள் புரோக்கரேஜ் ஹவுஸ் பெருத்த நஷ்டம் அடைந்தது. அந்த நஷ்டத்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.

சமீபத்தில்தான் தனக்கு ஒருவர் ஆபாச இமெயில்களை அனுப்பி வருவதாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார் நிலா என்பது நினைவிருக்கலாம். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களி்ல நடித்து வந்த நிலா, பின்னர் வாய்ப்பு குறைந்ததால் டெல்லி போய் செட்டிலாகி விட்டார். தமிழில் இவர் எஸ்.ஜே.சூர்யா மூலம் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


அஞ்சலி-அஸ்மிதா படுக்கையறைக் காட்சிகளுக்கு சென்சார் பாராட்டு!!!

களஞ்சியம் இயக்கியுள்ள புதிய படமான கருங்காலியில் ஹீரோயின்கள் அஞ்சலி, அஸ்மிதாவின் படுக்கையறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், காட்சிகளை வெட்டாமல், ஏ சான்று கொடுத்து பாராட்டும் தெரிவித்ததாக இயக்குநர் களஞ்சியம் கூறினார்.

பூந்தோட்டம், பூமணி, கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு ஆகிய படங்களை இயக்கிய களஞ்சியம், நடித்து இயக்கியுள்ள புதிய படம் 'கருங்காலி.' இந்த படத்தில் அஞ்சலி, சுனிதா வர்மா, புதுமுகங்கள் சீனு, அஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இளம் தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லக் காரணம் செக்ஸில் திருப்தியற்ற நிலைதான் என்ற 'கதையை' அடிப்படையாகக் கொண்டது. 

படத்தில், அஞ்சலி-சீனு நடித்த ஒரு படுக்கை அறை காட்சியும், அஸ்மிதா-களஞ்சியம் சம்பந்தப்பட்ட இன்னொரு படுக்கை அறை காட்சியும் இடம் பெற்றுள்ளனவாம்.

படம் முடிவடைந்த நிலையில், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், காட்சிகளில் கை வைக்காமல் வசனங்களை மட்டும் 4 இடங்களில் சைலன்ட் ஆக்கிவிட்டு, 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். 

இதுகுறித்து இயக்குநர் களஞ்சியம் கூறுகையில், "கருங்காலி படம், 'செக்ஸ்'சை அடிப்படையாக கொண்ட கதைதான். 

இன்றைய இளைஞர்களில் 65 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது. படத்தின் கதைப்படி, ஒரு இளம் தம்பதிக்கு திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், பிரச்சினை ஆரம்பிக்கிறது. மூன்றாம் மனிதன் அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறான்.

படத்தில் வரும் இரண்டு படுக்கை அறை காட்சிகளையும் நாகரீகமாக, கவித்துவமாக படமாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், "இந்த காலகட்டத்துக்கு பொருத்தமான படம்'' என்று பாராட்டினார்கள்.

படத்தில், தாம்பத்ய உறவு முடிந்ததும் அஸ்மிதா படுக்கையில் இருந்து 'பிரா' அணிவது போல் ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சியைக் கூட தணிக்கை குழுவினர் நீக்கவில்லை.

நடிக்க மறுத்த நாயகிகள்

இந்த படத்தில், கதைக்கு திருப்பமான ஒரு பெண் கதாபாத்திரம் வருகிறது. அதில் நடித்து தரும்படி சினேகா, மீராஜாஸ்மின், பூமிகா, பத்மப்ரியா ஆகியோரிடம் கேட்டேன். நான்கு பேருமே மறுத்து விட்டார்கள். அவர்கள் நடிக்க மறுத்த பாத்திரத்தில், சுனிதா வர்மா நடித்து இருக்கிறார். உழைப்புதான் வெற்றிக்கு வழி என்பதைப் புரிய வைக்கும் படம் இது," என்றார்.

கருணாநிதி வீட்டுக்குள் புறவாசல் வழியாக சென்ற தயாநிதி மாறன்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. அதேபோல திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வந்தபோதும் அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதி வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே சென்றார்.

2ஜி ஊழலில் சிக்கிய தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று அவர் சென்னை திரும்பினார். நேற்று இரவு அவர் சென்னை வந்து சேர்ந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள், டிவி கேமராமேன்கள் உள்ளிட்டோர் குழுமியிருந்தனர்.

ஆனால் அந்த வழியாக தயாநிதி மாறன் வரவில்லை. மாறாக விமானம் ஏற வருவோர் நுழையும் பகுதி வழியாக வெளியேறினார். இதைப் பார்த்த செய்தியாளர்கள் அங்கு ஓடினர். ஆனால் தயாநிதி மாறனுடன் திரளாக வந்திருந்த தனியார் பாதுகாப்புப் படையினர், செய்தியாளர்களையும், கேமராமேன்களையும் பிடித்துத் தள்ளி விட்டு தயாநிதி மாறனை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இதனால் செய்தியாளர்கள் கடும் கோபமடைந்தனர். அந்த இடத்தில் இருந்த விமான நிலைய காவல் நிலைய இன்ஸ்பெக்டரை அணுகி, விமான நிலையத்திற்குள் எப்படி தனியார் பாதுகாவலர்களை அனுமதிக்கலாம் என்று முறையிட்டனர். ஆனால் அவராலோ பதில் சொல்ல முடியவில்லை.

இந்த நிலையில், இரவு எட்டரை மணியளவில் கோபாலபுரம் வந்தார் தயாநிதி மாறன். அங்கும் செய்தியாளர்கள் பெருமளவில் கூடியிருந்தனர். இதைப் பார்த்த தயாநிதி மாறன், முன் வாசல் வழியாக செல்லாமல் புற வாசல் வழியாக கருணாநிதி வீட்டுக்குள் நுழைந்தார். அதேபோல கிளம்பும்போதும் அதே போலவே சென்றார்.

மொத்தத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்தார் தயாநிதி மாறன்.

செப். 15ம் தேதி 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள்,1600 பேருக்கு ஆடுகள்- ஜெயலலிதா


அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல் கட்டமாக 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகளும், 1600 பயனாளிகளுக்கு இலவச ஆடுகளும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில்இடம் பெற்றுள்ள திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. பெண்களுக்கு இலவசத் தங்கம், மாணவ மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை அவர் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் அடுத்தபடியாக இலவச கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் திட்டம் தொடங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எனது தலைமையிலான அரசு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்குண்டான திட்டங்களைத் தீட்டி மக்கள் வாழ்வு வளம் பெறவும், அவர்கள் நலன் பேணிப் பாதுகாக்கப்படவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, நான் முதல்வராக பதவியேற்று கொண்ட அன்றே மக்கள் பயன் பெறத்தக்க திட்டங்களில் கையெழுத்திட்டேன்.

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் அரசால் வழங்கப்படும் சலுகைகளை மட்டும் சார்ந்து இல்லாமல், வாழ்வில் வளம் பெற அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்பதும், அதற்கான பொருளாதார வளர்ச்சியை அவர்கள் பெற வேண்டும் என்பதும் எனது அரசின் குறிக்கோளாகும்.

அதே போன்று, மனிதவளம் மேம்படவும் நடவடிக்கைகள் எடுத்தால் தான் அனைவரும் பயன்பெறத் தக்க வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதும் எனது திடமான எண்ணமாகும். இந்த அடிப்படையிலே தான், பல சலுகைகளை வழங்கும் அதே நேரத்தில், மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் துவங்கிட ஆணையிட்டுள்ளேன்.

குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் பல திட்டங்களை எனது அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கேற்ப, 60,000 கறவை மாடுகளை இலவசமாக வழங்க நான் முடிவெடுத்துள்ளேன். அதன் முதல் கட்டமாக, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் 1,600 குடும்பங்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.

கலப்பின ஜெர்சி பசுக்கள்:

இந்தத் திட்டத்தின் கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுசங்கங்கள் எதுவும் இல்லாத கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு இந்தப் பசுக்கள் வழங்கப்படும். இந்த கிராமங்களில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான பயனாளிகள் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர். பயனாளிகளில் 30 சதவீதம் பேர் ஆதி திராவிட சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர்.

பசுக்களை இலவசமாக பெறும் பயனாளிகள் முழு திருப்தியடைவதை உறுதி செய்யும் பொருட்டு, பயனாளிகளே அரசு அலுவலர்களுடன் நேரடியாக அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள கால்நடை சந்தைகளிலிருந்து பசுக்களை வாங்குவதற்கு வழிவகை செய்யப்படும். அவ்வாறு வாங்கப்படும் பசுக்களை காப்பீடு செய்வதற்கும், பசுக்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதற்கும் அரசே நிதியுதவி செய்யும். மேலும், பசுக்களை பயனாளிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் அடையாளச் சின்னம் இடவும் அரசு உதவி செய்யும்.

இது மட்டுமல்லாமல், இனி வரும் ஆண்டுகளில் மாநில கால்நடைப் பண்ணைகளில் இருந்தும் இந்த கலப்பின பசுக்களைப் பெறும் வகையில் மாநில கால்நடைப் பண்ணைகளை வலுப்படுத்தவும் அரசு நிதியுதவி செய்யும்.

குடும்பத்திற்கு 4 ஆடுகள்:

அதே போல், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உடனடி நடவடிக்கையாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம்.

இந்த அடிப்படையில், வரும் 5 ஆண்டுகளில், ஊரகப் பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், குடும்பத்திற்கு 4 ஆடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும்.

கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படும், நிலமற்ற ஏழை எளிய மக்களே இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பர். இலவச பசுமாடு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள்.

பயனாளிகளே ஆடுகளை வாங்கலாம்:

பயனாளிகளே அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆடுகளை அருகில் உள்ள சந்தைகளிலிருந்து, ஆடுகள் வாங்க அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வயதுள்ள ஆடுகளுக்கான விலை, ஆடுகளை பயனாளிகள் இருப்பிடங்களுக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும். இந்தத் திட்டத்திலும் முதற் கட்டமாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் 1,600 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் செயல்படுத்தப்படும் இந்த இரண்டு உன்னதத் திட்டங்களும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த இரண்டு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் கால்நடைகளுக்கு குறைவின்றி பசுந்தீவனம் கிடைக்கும் வகையில், மாநிலத்தில் கால்நடைத் தீவனப் பயிர் பெருக்கத் திட்டம் ஒன்றை வகுக்குமாறும் நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share குழந்தையான பராக் ஒபாமாவை தத்துக் கொடுக்க அவரது தந்தை திட்டமிட்டிருந்தார்

குழந்தையான பராக் ஒபாமாவை தத்துக் கொடுக்க அவரது தந்தை திட்டமிட்டிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தந்தை அவரை தத்துக் கொடுக்க இருந்தமை புதிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

தனது மனைவியான ஆன் இன்ஹாம் 5மாத கர்ப்பமாக இருந்த போது ஒபாமாவின் தந்தை பிறக்கப்போகும் குழந்தையை தத்துக் கொடுக்கப் போவதாக குடிவரவு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பல பெண்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பராக் ஒபாமாவின் தந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருக்கலாம் என சந்தேகம் கொண்ட குடிவரவு அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1960 களில் கறுப்பினத்தவரான ஒபாமாவின் தந்தையை மணந்த 18 வயது யுவதியான ஆன் கூன்ஹாம் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை கைவிட வேண்டும் என கடும் நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகின்றது.

அச்சமயம் அவர்கள் வாழ்ந்த ஹவாயில் கலப்பின திருமணங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந் போதும் அமெரிக்காவின் ஏனைய 22 மாநிலங்களில் அத்தகைய திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டமை காரணமாக கலப்பின திருமணம் மூலம் பிறக்கும் குழந்தை ஒபாமாவை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.