Thursday, 8 September 2011

தொல்லை தரும் சகோதரர்கள்


இலங்கை அரசியலை இடியப்பச் சிக்கலாக்கி வரும் சகோதரர்களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெரும் தலையிடி உருவாகி உள்ளது.அனைத்துலக அரங்கிலும் தேசிய அளவிலும் இன்று ஜனாதிபதி எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் பல.

இலங்கை அரசியலை இடியப்பச் சிக்கலாக்கி வரும் சகோதரர்களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெரும் தலையிடி உருவாகி உள்ளது.அனைத்துலக அரங்கிலும் தேசிய அளவிலும் இன்று ஜனாதிபதி எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் பல.

* ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை

* போர் குற்ற விசாரணை

* சனல் 4 வீடியோ காட்சிகள்

*ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையால் ஏற்படும் இழப்பு

* கூட்டணியுடனான பேச்சு முறிவு

* அரசியல் தீர்வுக்கான சர்வதேச அழுத்தம்

*தமிழ் நாட்டு அரசின் கடும்போக்கு

என்று, ஜனாதிபதி சந்திக்கும் தலையிடிகள் அனேகம் இவற்றைச் சமாளிக்க எதைச் செய்வோம் எப்படிச் செய்வோம் என்று தத்தளிக்கிறார் ஜனாதிபதி.இந்தப் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றில் ஒரு மூலையில் தவறு ஏற்பட்டாலும் அவை அனைத்துக் கும் நாட்டின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதியே பொறுப்புக் கூறவேண்டியுள்ளது. இதனை உணராது ஜனாதிபதியின் சகோதரர்கள் ஏறுக்கு மாறாக எழுந்தமானமாகக் கருத்துக்களை தெரிவிப்பது வேறு ஜனாதிபதிக்குத் தலையிடியாக உள்ளது.


ஜனாதிபதியின் பிரதி நிதியாக, நாட்டுக்கு ஏற்பட் டுள்ள களங்கத்தை நீக்க மூத்த அரசியல் வாதியான வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சர்வதேச நாடுகளுக்குப் பறந்து திரிகின்றார். அவர் ஏற்றுள்ள பாத்திரத்தை அவர் சிறப்பாகவே செய் கின்றார்.


இன்று எவை எல்லாம் நாட்டின் நலன் கருதி செய்யப்பட்டவை என்று அவர் வாதிடுகின்றாரோ அவை அனைத்தும் அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகங்கள்,மனித உரிமை மீறல்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இருந்தபோது வசைபாடினார் என்பதை அமைச்சர் பீரிஸ் வசதியாக மறந்துவிட்டார் என்பது அரசியல். ஆனால் அவர் பறந்து பறந்து கஷ்டப் பட்டு சிறுகச் சிறுகச் சேர்க்கும் நற்பெயரை கோத்தபாய ராஜபக்ஷ இருந்த இடத்தில் ஒரு சுழல் கதிரையில் சுற்றிய படியே ஒன்றும் இல்லை என்றாக்கி விடு கிறார். "தம்பி உடையான் சண்டைக்கு அஞ்சான்'' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் ராஜபக்ஷவுக்கு இப்போது தம்பி இருப்பதுதான் அச்சத்துக்குக் காரணம் என்றாகிறது.ஆனால் செய்வதற்கு வழி ஒன்றும் இல்லை. ஏனெனில் மொத்த ராஜபக்ஷ குடும்பமும்தான் இன்று நாட்டை ஆள்கிறது. அதில் இருந்து ஓர் "ஆணி'' யைப் பிடுங்கினாலும் ஆபத்துத்தான்.

*அதிஉயர் பதவியான ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ

* நாடாளுமன்றின் சபாநாயகராக சமல்ராஜபக்ஷ

*பலமிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பஸில் ராஜபக்ஷ

*பிரதி அமைச்சராக நிருபமா ராஜபக்ஷ

*பாதுகாப்பு அமைச்சராக கோத்தபாய ராஜபக்ஷ

*நாடாளுமன்ற உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ

இலங்கை அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு குடும்ப அரசியல் பின்புலமும், பதவி வழிப்பாது காப்பும் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் அமைந்த தில்லை. ஆரம்ப கட்டத்தில் குறிப்பாக போர்க்காலங்களில் இந்தச் சகோதரர்கள் ஜனாதிபதி யின் கரங்களைப் பலப்படுத்தவும், அரசியலில் உறு தித் தன்மையை ஏற்படுத்தவும் மிகவும் உறுதுணை யாக இருந்து செயல்பட்டனர்.

ஆனால், அண்மைக்காலங்களில் இந்த ராஜபக்ஷ சகோதரர்கள் வெளியிட்டு வரும் மாறுபட்ட முன் னுக்குப்பின் முரணான கருத்துக்கள் ஜனாதிபதியை மிகவும் தர்மசங்கடங்களுக்குள் தள்ளி விடுகின்றன.

ராஜபக்ஷ சகோதரர்கள் வெளியிட்டு வரும் ஏட் டிக்குப்போட்டியான கருத்துக்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

ஜனாதிபதி: வடக்கில் இடம்பெற்ற உள்ளூ ராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது தெரிவித் ததாவது: நான் உங்கள் சொந்தக்காரன். உங்களு டைய பிரச்சி னைகளுக்கு விரைவில் தீர்வுகாண் பேன். தெற்கில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் எல்லா நன்மை களையும் வடக்கில் வாழும் தமிழ் மக்களும் பெற்று வாழ வழியேற்படுத்துவேன், அர சியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவேன் என்றார்.


கோத்தபாய ராஜபக்ஷ: நாட்டில் இருந்தது பயங்கரவாதம் மட்டுமே. அதனை முற்றுமுழு தாக அழித்து ஒழித்து கட்டிவிட்டோம். இப்போது இங்கே பிரச்சனை ஏதும் இல்லை. தமிழர்களுக்கு என்று விசேடமாக எதையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இலங்கைக்கு என ஒரு அர சமைப்பு உண்டு. இதில் எல்லா அம்சங்களும் சிறப்பாகவே இருக்கின்றன. புதிதாக ஒரு திருத் தமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எவருடனும் பேச வேண்டிய தேவையும் இல்லை. எதற்காக அரசியல் தீர்வு?


பஷில் ராஜபக்ஷ: தமிழ் மக்களின் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கும் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எதையா வது செய்ய வேண்டும் என்பதற்காக தெரிவுக் குழு அமைக்கப்படவில்லை. வழமைபோல் காலம் கடத்துவதற்காகவோ அல்லது இழுத்தடித்து ஏமாற்றுவதற்காகவோ இது இல்லை. தீர்வுத்திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பித்து விட வேண்டும் எனக் காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதே பஷில் ராஜபக்ஷ தான் இனப்பிரச்சினை பிச்சைக்காரன் காலில் உள்ள புண் என்றும் அதனை ஆறவிடாமல் கிண்டிக் கிளறிவிட்டுக் கொண் டிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் என்றும் யாழ்ப்பாணத்துத் தேர்தல் மேடைகளில் புலம்பியவர்.

அமைச்சர் பஸில் ராஜபக்ஷவால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே போன்று ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற வேலணை, நெடுந்தீவு, ஊர் காவற்றுறை ஆகிய மூன்று பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். 19 பிரதேச சபைகளைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோ, உப தலை வர்களோ, உறுப்பினர்களோ அழைக்கப்பட வில்லை. ஜனாதிபதி கூறும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இவை ஒருபோதும் உதவப் போவதில்லை. பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் முழு நாட் டுக்குமே பொதுவானவர். ஆனால் இந்தக் கூட்டத்தில் பேசும்போது டக்ளஸ் தேவானந்தா தாம் வெற்றி பெற்ற மூன்று சபைகளுக்கும் அபிவிருத்தி செய்யும் படி ஜனாதிபதியிடம் கேட்டார் என்றும் அத னாலேயே அந்த மூன்று சபைகளையும் உடன் அபி விருத்தி செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டார் என்றும் தெரிவித்தார்.

இது தேர்தலில் தங்களை ஆதரிக்காத மக்க ளைப் பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகத் தெரி கிறது. ஓர் அரசு இதனை ஒரு போதும் இப்படி வெளிப் படையாகச் செய்யக்கூடாது. ஆனால் பொறுப் பற்றதனமாக அமைச்சர் பஸில் இதனைப் பகிரங் கமாக ஒரு கூட்டத்திலேயே அறிவித் துள்ளார். இந்தச் சம்பவம் நடந்த அதே தினத்தில் ஓகஸ்ட் 25 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப் பின ரும் ஜனாதிபதியின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தமிழ் ஊடகவியலாளர்களைத் தனிப் பட்ட முறையில் அழைத்து ஊடகத்துறையினரு டன் பரஸ்பர நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள ஜனாதிபதி விரும்புகிறார் என்று தெரிவித்தார். தமிழ் ஊடகவியலாளர்கள் எந்த நேரத்திலும் தன் னுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறிய துடன் தனது உதவியாளர்களையும் அழைத்து ஊடக வியலாளர்கள் வரும்போது அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இப்படி தனது சகோதரர்களாலேயே ராஜபக்ஷ கடும் தலையிடிக்கு உள்ளாகி உள்ளார். அவரது விருப் புக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக இவர்கள் நடந்து கொண்டு பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கு கின்றனர். ஜனாதிபதி தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது மட்டும் உறுதி.

மருத்துமனை மீதான தாக்குதல் சவீந்திர சில்வா


சிறிலங்காவின் கொலைக்களங்கள்` ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த "Lies Agreed Upon," என்ற ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில் நேற்று திரையிடப்பட்டுள்ளது.


இதையடுத்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட- வெள்ளைக்கொடி விவகாரத்தில் பாலித கொஹன்னவின் பங்கு என்ன என்று அவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு அவர் நம்பியாரிடம் கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

இதுபற்றி தாம் நம்பியாரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

ஆனால் அல்-ஜெசீராவுக்கு அவர் அளித்துள்ள செவ்வி ஒன்றில், அப்போதைய வெளிவிவகார செயலர் பாலித கொஹன்னவுடன் பேசுமாறு கூறியிருந்தாகவும் இன்னர் சிற்றிபிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் நேற்று பாலித கொஹன்னவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது இராணுவத்தில் தனது பங்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விடுதியில் நம்பியாரைச் சந்தித்துப் பேசியதை ஒப்புக்கொண்ட கொஹன்ன, அந்த உரையாடலை நினைவுபடுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான எறிகணைத் தாக்குதலில் 58வது டிவிசன் தொடர்புபட்டிருந்ததாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு, தனது 58வது டிவிசன் பற்றி அந்த அறிக்கையில் கூறப்படவில்லை என்று முதலில் பதிலளித்திருந்தார் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா.

இதையடுத்து இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் 55வது, 58வது டிவிசன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பந்தியை உரத்து வாசித்துக் காண்பித்தார்.

இதையடுத்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, அந்த அறிக்கை தவறானது என்றும், அது 53வது டிவிசன் என்றும் கூறியதுடன் 55வது டிவிசன் அப்போது வேறாரு இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை என்று இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பிய போது, அது ஐ.நா அறிக்கை அல்ல என்று பாலித கொஹன்ன வாதிட்டுள்ளார்.

மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை


சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளும், வழிபாட்டு இடம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

சிங்களவர்கள் சிலர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த தகவல் மேலும் கூறியுள்ளது.

இந்த மோதலைக் கட்டுப்படுத்த சிறிலங்கா காவல்துறை தவறிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அதிரடிப்படையை அனுப்பி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அரசியல் மற்றும் வர்த்தகப் போட்டியே இதன்பின்னணியில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபரின் செயலர் பதவியையும் பிடித்தார் கோத்தாபய


சிறிலங்கா அதிபரின் பதில் செயலராக கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க வெளிநாடு சென்றுள்ளதாலேயே கோத்தாபய ராஜபக்ச பதில் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வழக்கத்தில் லலித் வீரதுங்க வெளிநாடு செல்கின்ற போது, சிறிலங்கா அதிபரின் பணியக தலைமை அதிகாரி காமினி சேனாரத் பதில் செயலராக கடமையாற்றுவார்.

ஆனால் இம்முறை கோத்தாபய ராஜபக்ச பதில் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். லலித் வீரதுங்க நாடு திரும்பும் வரை அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார்.

சிறிலங்காவின் அடுத்த பிரதமராக கோத்தாபய ராஜபக்சவை முன்னிறுத்த சிறிலங்கா அதிபர் முனைவதையே இது காட்டுவதாக அமைச்சர்கள் பலரும் விசனமடைந்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கவர்ச்சி அழகிகளின் நடனத்தால் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை


 
கவர்ச்சி அழகிகளின் நடனத்தால், சீனாவில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் அதிவேக ரயில், அதிக வசதிகள் கொண்ட சீனாவில் உள்ள ரயில் நிலையங்களில பயணிகள் உற்சாகமடையும் வகையில் அவ்வப்போது கவர்ச்சியான அழகிகளைக்கொண்டு பல நடன நிகழ்சிசகள் இடம்பெற்று வருகின்றன.

சீனாவின் புகழ் பெற்ற ஷாங்காய் மெடரோ ரயில்களில், கடந்த சில நாட்களாக இளம் பெண்களின் கிளுகிளுப்பு நடனத்தை பார்க்க முடிகிறது.

ஷாங்காய் ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறும் இந்த இளம் நடனங்கள் ரயில்களில் உள்ள தாங்கு கம்பங்கள், இருக்கைகள், தரை, சுவர் என்றவாறு நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர். நடனமாடும் நங்கைகள் அவ்வப்போது தங்களது ஆடைகளை களைவதாகவும் இதனால் பயணிகள் பெரும் ஆர்வத்துடன் செயற்படுவதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நடனத்தால், குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகள், நீண்டதூர பயணத்தை பயணிகள் உற்சாகமாக மேற்கொள்கின்றனர்.

இதனால், ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரயில் நிலையங்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

ஐ டியூன்ஸுக்குப் போட்டியாக பேஸ்புக்


அப்பிளின் ஐ டியூன்ஸுக்குப் போட்டியாக பேஸ்புக்கும் ஒன்லைன் இசைச் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை பேஸ்புக் இம்மாதம் 22 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள பேஸ்புக்கின் டெவலப்பர்களுக்கான மாநாட்டில் ( Facebook’s developer conference) அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கென பிரத்தியேகமாக மென்பொருட்கள் எதனையும் உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யத்தேவையில்லை. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்கின் ஊடாக இச் சேவையினுள் நுழையமுடியும்.

இச்சேவையின் ஊடாகப் பாடல்களைக் கட்டணம் செலுத்தியும் சிலவற்றை இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

உலகில் உள்ள பல பிரபல இசைச் சேவைகள் பேஸ்புக்குடன் ஏற்கனவே இணைந்துள்ளன. இதேவேளை சுவீடனின் பிரபல இசைச்சேவையான 'ஸ்பொடிபை' பேஸ்புக்குடன் இச்சேவையை வழங்க கைகோர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 'ஸ்பொடிபை' சேவையானது சுமார் 15 மில்லியன் பாடல்களைக் கொண்டுள்ளதுடன் சுமார் 10 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டது.

எனவே பேஸ்புக்கின் இச்சேவையானது அப்பிளின் ஐ டியூனுக்கு தகுந்த போட்டியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மனைவியின் பாலியல் இச்சையை திருப்திப்படுத்த தவறிய கணவருக்கு அபராதம்


நீதிமன்றங்கள் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளன. மேலும் பல விசித்திரமான தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளன.

அவ்வாறானதோர் தீர்ப்பினைப் பற்றியதே இச் செய்தி.

ஆம், பிரான்ஸைச் சேர்ந்த நபரொருவருக்கு தனது முன்னாள் மனைவியுடன் போதிய அளவு பாலியல் உறவினை வைத்திருக்காத காரணத்தினால் 8,500 பவுண்ஸ் நட்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

51 வயதான ஜீன் லூயிஸ் பி என்ற அந்நபருக்கு தென் பிரான்ஸைச் சேர்ந்த நீதிமன்றமொன்று அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளது.

அந்நபரின் மனைவி 2 வருடங்களுக்கு முன்னர் தன்னோடு போதியளவு உறவு வைத்துக்கொள்ளவில்லையென்ற காரணத்தினை காட்டி விவாகரத்து பெற்றுக்கொண்டார்.

பின்னர் தனது முன்னாள் கணவர் 21 வருடங்கள் தன்னை திருப்பதிப்படுத்தாமையை காரணம் காட்டி இதற்கு 10,000 யூரோக்கள் நட்ட ஈடு வழங்கவேண்டுமெனக்கூறி மீண்டும் வழக்குத்தொடர்ந்தார்.

கணவன் மனைவிக்கெதிரான உறவு என்பது அன்பின் வெளிப்பாடு எனவும் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவது கடமையெனவும் தெரிவித்த நீதிபதி மேற்படி தீர்ப்பையும் வழங்கினார்.

டில்லி மேல் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி, 55க்கும் மேற்பட்டோர் காயம் நேரடி ஒளிபரப்பை பார்வையிடலாம்





டில்லி மேல்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த 55க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான வாயிலான ஐந்தாம் வாயிலில் அதிசக்தி வாய்நத குண்டொன்று பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு இரு தீயணைப்பு வாகனங்களும், பெலிஸாரும் விரைந்துள்ளதுடன் அவ்விடத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புலம்பெயர்ந்து வாழ்வோர் காணி உறுதிகளை புதுப்பிக்க வேண்டும் சிறிலங்கா அரசு அறிவிப்பு


புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்மக்கள் வடபகுதியில் உள்ள தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை மீளப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவின் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார்.

அச்சம் காரணமாகவோ அல்லது பசுமையான வாழ்வு தேடியோ தமது உடைமைகளையும் சொத்துக்களையும் கைவிட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ள தமிழ் மக்கள் வடபகுதியில் அவர்களது காணிகள் அமைந்துள்ள பிரதேச செயலகங்களுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் படிவங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி தமது காணி உறுதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பப் படிவங்கள் தொடர்பாக சிறிலங்காவின் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு விரிவான விசாரணைகளை நடத்தி காணி உரிமையாளர்களிடம் புதிய காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வடபகுதியிலுள்ள அனைத்து மாவட்டங்களின் பிரதேச செயலகங்களிலும் படிப்படியாக காணிகள் தொடர்பான விரிவான விசாரணகள் மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் பி.எம்.பி.உதயகாந்தா தெரிவித்துள்ளார்.

'தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் கீழுள்ள நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ள காணிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். காணிகளுக்கான புதிய உறுதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பிரதேச செயலர் பிரிவுகளில் பெற்றுக் கொள்ள முடியும்' என்றும் உதயகாந்தா மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கரைச்சி பிரதேச செயலர் பிரிவு, வவுனியா மாவட்டத்திலுள்ள நெடுஞ்கேணி பிரதேச செயலர் பிரிவு, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலர் பிரிவு போன்றவற்றிலுள்ள காணிகள் தொடர்பான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உரிமையாளர்கள் தமது காணிக்கான புதிய உறுதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூரணப்படுத்தி அவற்றைக் கையளிக்க முடியும் என்றும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும்- உடனடியாக சிறிலங்காவுக்கு வரமுடியாதவர்கள் இது தொடர்பாக bimsaviya.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் உதயகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

நிர்வாணப் பெண் புலியாக மாறிய அதிசயம் (படங்கள் இணைப்பு)


நிர்வாண உடலில் ஓவியம் வரைவது மேலைத்தேய நாடுகளில் மிகவும் பிரபல்யம், இதுவும் அதுபோன்றதொரு படைப்புத்தான், காட்டு விலங்குகளின் உடல் வடிவம் போல் மனித உடலில் வரையப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு தோற்றமும் மிக நுணுக்கமாக அமைக்கப்படிருகிறது.











வேற்றுக் கிரகப் பண்றியா ? (வீடியோ இணைப்பு)


குவாண்டமாலா நாட்டில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் அதிசயமான பண்றிக் குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதன் தலை வழமைக்கு மாறகவும் மற்றும் பண்றியின் தோற்றம் இல்லாது விசித்திர முகம் கொண்டதாகவும் உள்ளது. இக் கிராமத்தில் சமீபகாலமாக வேற்றுக்கிரக வாசிகள் வந்துசெல்வதாக ஊர்மக்கள் சொல்லுகின்றனர்.


வேற்றுக்கிரக வாசிகள் வந்துசெல்லும் பறக்கும் தட்டைத் தாம் கண்டதாவும் சிலர் தெரிவித்துள்ளனர். கிராமத்தில் உள்ள பண்ணைகளில் இரவுநேரங்களில் வேற்றுக் கிரக மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

இதன் காரணமாகவே இப் பண்றிக் குட்டி இவ்வாறு பிறந்திருக்கிறது என அக் கிராம மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இப் பண்றிக்குட்டி வேற்றுக்கிரக மனிதர்களின் ஆராட்சியால் அல்லது அவர்களின் பறக்கும் தட்டில் இருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தால் இப்படி பிறந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் இப் பண்றிக் குட்டி குவாண்டமாலா நட்டில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.