| தீபாவளிக்கு வெளியாகவுள்ள ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 7 ஆம் அறிவு படத்திற்காக ஆயிரம் நடனக்கலைஞர்களுடன் சென்னையின் பிரதான வீதியில் நடனமாடியுள்ளார் நடிகர் சூர்யா. சூர்யாவின் ஆரம்பபாடலுக்காகவே இந்த பிரமாண்ட ஏற்பாடு. மக்களுடன் மக்களாக இணைந்து மக்கள் சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதியான ரங்கநாதன் வீதியில் இப்பாடல் காட்சியினை உயிரோட்டமாக 10 நிமிடங்களில் படமாக்கியுள்ளனர். இப்பாடலுக்கான நடன அமைப்பை நடன இயக்குனர் சோபி மாஸ்டர் அவர்கள் சிறப்பாக அமைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். |
Tuesday, 20 September 2011
ஆயிரம் நடனக் கலைஞர்களுடன் நடனமாடும் சூர்யா (வீடியோ இணைப்பு)
டென்மார்க்கில் தமிழீழ தேசியக் கொடி! (வீடியோ இணைப்பு)
| டென்மாக்கில் Struer நகரில் உள்ள ஒரு திரையரங்கில் பல தேசியங்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. தமிழீழத் தேசியக்கொடியும் அங்கே பறக்கவிடப்படவேண்டும் என நகரத்தில் வாழும் சில தமிழீழப்பற்றாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பொழுது தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. முதலில் அங்கே பறக்க விடப்பட்டிருந்த சிங்கக்கொடி இனம் தெரியாதவர்களினால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி ஜெனிவாவில் போராட்டம் (வீடியோ இணைப்பு)
| சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகம் முன்பாக நேற்று தமிழர்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிட வேண்டும் என்று கோரி சுமார் 1000 வரையிலான தமிழர்கள் ஜெனிவாவில் உள்ள ஐ.நா முன்றலில் போராட்டம் நடத்தியதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்ததாக ஏஎவ்பி தகவல் வெளியிட்டுள்ளது. போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்க லண்டனில் இருந்த சென்றிருந்த கந்தையா ராஜமனோகரன் என்பவர் ஏஎவ்பியிடம் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் சுமார் 5,000 தொடக்கம் 10,000 பேர் பங்கேற்பர் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரமான தமிழர் தாயகத்தையே தாம் எதிர்பார்ப்பதாகவும், இந்த விவகாரத்தை ஐ.நா தனது கையில் எடுத்துக் கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்த வடக்கு சுவிற்சர்லாந்தில் உயர்நிலை பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் ஈழத்தமிழரான நிவேதன் நந்தகுமார், போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், அனைத்துலக சமூகம் எதையும் செய்யவில்லை என்று விசனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களான நாம் விடமாட்டோம், சுதந்திரத்துக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம் என்றும் அவர் கூறியதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது. ![]() ![]() ![]() |
பிரித்தானியாவில் தினம் 50 குழந்தைகள் புலம் பெயர்ந்தோருக்கு பிறக்கின்றனர்!
| பிரித்தானியாவில் பிறக்கும் குழந்தைகளில் ஒரு நாளுக்கு சராசரியாக 50 என்ற அடிப்படையில் புலம்பெயர்ந்து வாழ்வோருக்கு மட்டும் பிறப்பதாக அந்நாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 20,000 குழந்தைகள் இவ்வாறு பிறந்திருப்பதாக மேலும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, பிரித்தானியாவில் பிறக்கும் நான்கு குழந்தைகளில் ஓன்று புலம் பெயர்ந்தவர்களுடையது. இந்த நிலைமை நீடிக்குமானால் இனி வரும் காலங்களில் பிரித்தானியாவை தாயகமாக கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற சேவைகள் வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம். தொழில் காரணமாகவும் உள்நாட்டு பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்தவர்களே இதில் முன்னிலை வகிக்கின்றார்கள். ![]() ![]() |
ஐ.நா தலைமையகத்தில் தொடர் சந்திப்புகளில் சிறிலங்கா இராணுவத் தளபதி
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நியுயோர்க்கில் ஐ.நா அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார். ![]() ஹெய்டிக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், நியுயோர்க்கில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படையுடன் தொடர்புடைய அதிகாரிகள், இராஜதந்திரிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார். ![]() நேற்று அவர், ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கை திணைக்களத்தின் பதில் தலைவரும், அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஐ.நா உதவிச்செயலருமான எட்மன் முலட்டை சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போது சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அமைதிகாக்கும் ஐ.நாவின் நடவடிக்கையில் கூடுதல் பங்களிப்பை வழங்க சிறிலங்கா தயாராக இருப்பதாக லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ![]() அதேவேளை முன்னதாக அமைதிகாக்கும் நடவடிக்கைத் தலைமையகத்தில் களஉதவித் திணைக்களத்தின் அடிநிலைச் செயலர் சுசானா மல்கோராவையும் சிறிலங்கா இராணுவத் தளபதி சந்திதுப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்புகளுக்கு ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவே ஒழுங்குகளைச் செய்துள்ளார். இவர்கள் இருவரும் ஐ.நா பொதுச்சபை அரங்கிற்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்பட்டால், ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினர் பங்கேற்பது சிக்கலாகலாம் என்று கருதப்படுகிறது. இந்தநிலையிலேயே சிறிலங்கா இராணுவத் தளபதி இதுபற்றி ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைத் தலைமையக அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
திருகோணமலையில் பொலிஸ் பதிவு! பயத்தால் திணறும் தமிழ் மக்கள்!!
| இலங்கையில் ஏற்பட்டிருந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாக அரசாங்கத் தரப்பு அறிவித்திருந்தும் மறைமுகமான ஒரு யுத்த சூழ்நிலையைத் தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றது ஆளும் தரப்பு. அந்த வகையில் தமிழர் பிரதேசங்களில் இராணுவப் பதிவு, பொலிஸ் பதிவு, பாஸ் நடைமுறை எனப் பல தரப்பட்ட பதிவுகளால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மேலும் மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதற்காக ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது. அதன் ஒரு கட்டமாக அண்மைக் காலமாக கிறிஸ் பூதம் என்ற மர்ம மனிதன் பீதியைத் தமிழ் மக்கள் மீது திணித்து அதன் மூலம் மகிழ்ச்சிக் கடலில் குளிக்கிறது அரசு. இது இவ்வாறிருக்க தற்போது திருகோணமலை மொறவெள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுப் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் சிறுபான்மையினம் என்ற முத்திரை குத்தி அவர்களின் வாழ்வியலைச் சிதைக்கும் ஒரு நோக்கத்தோடு செயற்பட்டு வந்த அரசாங்கம், மேற்குலகின் ஆதரவைப் பெறும் நோக்கோடு அவசர காலச் சட்டத்தை நீக்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் அவசர காலச் சட்டத்தை நீக்கி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மெருகூட்டியிருக்கும் அரசு, தமிழ் மக்களின் தலைமேல் வைக்கப்பட்ட சிறுகல்லை எடுத்து விட்டுப் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைத்துள்ளதே தவிர எந்தவொரு சட்டமும் நீக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. சொந்த நாட்டு மக்களைச் சோதனையிட்டு, அடையாள அட்டை பார்த்துப் பயணிக்க விடுவதுமட்டுமன்றி வீடு வீடாகச் சென்று பதிவுகளை மேற்கொண்டு வருவது அந்த மக்களை அடியோடு அழிக்கும் ஒரு நயவஞ்சகத் திட்டத்தின் அத்திபாரமாகவே இது அமைகின்றது. இதேவேளை திருகோணமலையில் பொலிஸ் பதிவுகளை மேற்கொண்டு வருவதால் அப் பகுதி மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளதுடன் கிராம சேவையாளர்களின் பணியினை ஏன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். ![]() |
தலைப்புச் செய்தியாக மாறி அதிரவைத்துள்ள கேர்டன் வைசின் புத்தகம்: CAGE
![]() |
| இலங்கைக்கான ஐ.நா வின் பேச்சாளராகக் கடமையாற்றி பின்னர் இலங்கையை விட்டு வெளியேறிய கோர்டன் வைஸ் இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்து வருவது என்பது யாவரும் அறிந்ததே. அதன் பின்னர் அவர் இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அல்ஜசீரா பி.பி.சி மற்றும் சனல் 4 போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு அவர் இலங்கையில் நடைபெற்ற பல விடையங்களை தெரிவித்து ஒரு சாட்சியாகவே மாறியிருந்தார். அவர் தொடர்ந்தும் இலங்கையில் ஈழத் தமிழர் படும் இன்னல் தொடர்பாக குரல்கொடுத்துவந்தார். இலங்கையில் தாம் கண்டதையும் தனது அனுபவத்தையும் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். த கேஜ் என்று அழைக்கப்பட்டும் இப் புத்தகத்துக்கு கனடா மற்றும் அவுஸ்திரேலிய பத்திரிகைகள் முன்னுரிமை கொடுத்து இப் புத்தகம் பற்றி எழுதியுள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான சிட்னி மோனிங்கும், மற்றும் கனடாவில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான நஷனல் போஸ்ட்டும் இப் புத்தகம் தொடர்பாகவும் மற்றும் இலங்கை நிலை தொடர்பாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேற்றின மக்கள் மத்தியில் இலங்கைக்கு இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் இதனால் பாதிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கோர்டன் வைஸ் எழுதியுள்ள புத்தகத்தில் இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் குறித்தும் மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் எழுதப்பட்டிருந்தாலும் இதுவரை வெளிவராத பல தகவல்களும் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சர்வதேச ரீதியாக பல சர்ச்சைகளை இப் புத்தம் கிளப்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைப் புலிகளுடனான போரில் கிராமம் கிராமமாக முன்னேறிய இலங்கைப் படையினர் அங்கே முதலில் என்ன செய்தார்கள் என்பதனையும் அவர்கள் மறைத்த பல விடையங்களை கோர்டன் வைஸ் வெளிப்படையாகவே எழுதியுள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது. |
கிரீஸ் வங்கி முன்பாக தீக்குளித்த நபரால் பரபரப்பு
வட கிரீஸில் அரசாங்கம், வங்கிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 55 வயது நபரொருவர் தனக்குத் தானே பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.![]() தெஸ்ஸாலோனிகி எனும் இடத்திலுள்ள வங்கியொன்றின் கிளைக்கு வெளியே தீக்குளித்த மேற்படி நபரின் உடலில் பரவிய தீயை அங்கிருந்த பொலிஸார் துரிதமாக செயற்பட்டு அணைத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மார்புப் பகுதியில் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அந் நபர் காணப்படுகிறார். நிதிப் பிரச்சினை காரணமாக மேற்படி நபர் ஏற்கனவே இரு வருடங்களுக்கு முன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்ள முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது. |
சூடான விவாதத்தில் சூடானதால் எதிரில் இருந்தவரின் முகத்தில் குத்திய பெரும்புள்ளி(வீடியோ இணைப்பு)
| ரஷ்யாவின் பெரும்புள்ளிகளில் ஒருவரான Alexander Lebedev தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது எதிரில் இருந்தவரின் முகத்தில் சரமாரியாக குத்தி கதிரையில் இருந்து கிழே தள்ளிவிட்டார், பல்லாயிரம் பேர் பார்த்துக்கொண்டிருந்த இந்த நேரடி நிகழ்ச்சியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது , சூடாக இடம்பெற்றுவந்த விவாதத்தில் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் இவர்செய்த செயலுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் நிலவுகிறது, Lebedev உலகின் முக்கிய பணக்காரர்களுள் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக $3.1billion வருமானம் பெறும் இவரின் மதிப்பு இந்த செயலால் நிச்சயம் குறைந்திருக்கும்! |
ஆய்வாளர்களை அதிர வைத்த விசித்திர உயிரினம்! (படங்கள் இணைப்பு)
| அண்மையில் பறக்கும் குட்டி தேவதை எனும் விசித்திரமான உயிரினம் ஒன்று பிடிபட்ட செய்தியினை பிரசுரித்திருந்தோம். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதைவிட விசித்திரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தடவியல் மற்றும் ஆய்வாளர்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்ந்தியுள்ளது இச்சம்பவம். குறித்த இச்சம்பவம் தொடர்பாக ஆங்கில இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி பின்வருமாறு:- இங்கிலாந்தின் நாட்டின் கிராமப்பகுதி ஒன்றில் அண்மையில் மிகவும் விசித்திரமான ஒரு மர்ம உயிரினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்த நிலையில் பிடிக்கப்பட்ட இந்த உயிரனத்தின் தோற்றம் பலரையும் வியப்பில் ஆழ்ந்தியுள்ளது. இதுபற்றி உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்ட தடவியல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மைத்தன்மைகள கண்டறியாது குழப்பத்தில் உறைந்து போயுள்ளார்கள். இந்த விசித்திர உயிரினத்தை முதன் முதலில் பார்த்த கிராமவாசி இது பற்றி குறிப்பிடுகையில்:- இவ்வுருவத்தை முதலில் நான் பார்த்தவுடன் ஒரு சிசுவின் உடல் என நினைத்து உடனடியாக பொலீசாருக்கு எனது செல்போன் மூலம் அழைப்பு விடுத்தேன். பின்னர் அவர்கள் அவ்விடத்திற்கு வரும் முன்னர் நான் அருகில் சென்று பார்த்த போது வியப்படைந்தேன். காரணம் அது உண்மையில் ஒரு சிசுவின் உடல் அல்ல மாறுபட்ட ஒரு தோற்றத்துடன் காணப்பட்டது . இதனால் அதனை என்னவென்று என்னால் அடையாளம் காணமுடியவில்லை.என தெரிவித்தார். குறித்த உருவத்தை ஆய்வுளுக்காக எடுத்து சென்ற தடவியல் நிபுணர்கள் புறஊதா கதிர்வீச்சுப்படம் எடுத்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதுவரை அடையாளம் காணப்பட்ட தகவல்களில் அடிப்படையில் குறித்த உருவம் 10-20 செ.மீ நீளமுடன் மிகச்சிறிய அளவில் காணப்பட்டுள்ளது. மேலும் இதன் எலும்புகள் ஒரு சிசுவின் எலும்புகளை ஒத்ததாகவும் உடல் அமைப்பு மனித உடலமைப்பை ஒத்ததாகவும் காணப்படுகிறது. முழுமையான 2கால்கள் மற்றும் கைகளுடன் தலையில் மெல்லிய திசுவுடன் மஞ்சள் நிறத்தில் முடி காணப்படுகிறது. கைகளில் சாதாரண மனிதர்களுக்கு உளள்ளதைப்போன்று ஐந்து விரல்கள் காணப்படுகிறது. இன்னுமொரு முக்கிய விடயம் என்ன வென்றால் இதன் முதுகுப்பகுதியில் இலைகள் போன்று இறக்கை அமைப்பு காணப்படுகின்றமையும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிறவுண் (டீசழறn)நிறத்தில் காணப்படும் இதன் இறக்கை தூரப்பார்வைக்கு அச்சு அசல் ஒரு இலையாகவே காணப்படுகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த ஆய்வாளர்கள் இது உரு மனித உருவமா? அல்லது பறவையா? அல்லது பூச்சி இனமா? என்பது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இது பற்றி அறிந்து கொள்வது மிகவும் கடினமான விடயமாக உள்ளது எனவும் மனித இனம் எனின் இனப்பெருக்க உறுப்பு நிச்சயம் இருந்திருக்க வேண்டும் ஆனால் இந்த உயிரினத்துக்கு இவ்வாறு இருக்கவில்லைஇ மற்றும் இறந்த நிலையிலும் இது துர்நாற்றம் எதுவும் வீசவில்லை எனவே எமக்கு இது பெரும் வியப்பை தந்திருக்கிறது என குறிப்பிட்டார்கள். ![]() ![]() |
செப்டம்பர் 23 நாசா எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)
![]() |
| முற்றிலுமாக செயலிழந்த நிலையிலுள்ள செயற்கைக்கோளொன்று எதிர்வரும் சில தினங்களில் பூமியில் விழும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டெப்ரிஸ் எனப்படும் குறித்த விண்கலத்தின் நிறை 6-7 டொன்கள் ஆகும். இதனை நாசா விஞ்ஞானிகள் தற்போது உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச் செயற்கைக்கோளானது எதிர்வரும் 23ஆம் திகதியளவில் பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இக்கோளானது பூமியை வந்தடையும் போது 1006 துண்டுகளாக உடையுமெனவும் இவற்றில் 26 துண்டுகள் மட்டுமே பூமியில் விழுமெனவும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு உடையும் துண்டுகளில் அதிகூடிய துண்டொன்றின் நிறை 350 பவுண்ட்கள் எனவும் இவை பூமியில் மனிதரொருவரை மோதுவதற்கான சாத்தியம் 3200 க்கு 1 என அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் மேலதிக தகவல்களை நாசா வரும் நாட்களில் வழங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது எப்பகுதியில் விழுமென நாசா விஞ்ஞானிகளால் கூட உறுதியாகக் கூற முடியாது. அண்டார்டிகாவைத் தவிர பூமியின் எப்பகுதியிலும் இது விழலாம் என்பது குறிப்பிடத்தக்கது இரண்டு சூரியன்களைக் கொண்ட கோள் இதேவேளை இரண்டு சூரியன்களை, ஒரு கோள் சுற்றி வருவதை, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். கெப்ளர்-16பி எனப் பெயரிடப்பட்டுள்ள இக் கோளானது பூமியிலிருந்து 200 ஒளிஆண்டு தொலைவில் அமைந்துள்ளது |
ஜெர்மனியில் மர பொந்துக்குள் 5 ஆண்டுகள் வாழ்ந்த வாலிபர்
![]() |
| ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள சிட்டி ஹாலுக்கு சுமார் 17 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் வருகை தந்தார். அப்போது அவர் இதற்கு முன்பு காட்டில் உள்ள மரப் பொந்துகளில் கடந்த 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கார் விபத்தில் அவரது தாயார் இறந்து விட்டார். எனவே, தந்தை அவரை ஒரு அடர்ந்த காட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் சிறிய கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர். அது சிதிலமடையவே, பின்னர் அவர்கள் அங்குள்ள பெரிய மரப் பொந்துகளில் தங்கி இருந்தனர். இந்த நிலையில், அவரது தந்தை மரணம் அடைந்ததும் எப்படி வாழ்வது என தெரியாமல் அந்த வாலிபர் திகைத்தார். எனவே, காட்டில் இருந்து கால்போன போக்கில் 2 வாரங்களாக நடந்து பெர்லின் நகரை வந்தடைந்தார். பின்னர் போலீசில் தஞ்சம் அடைந்தார். இந்த தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக்கேல் மாஸ் தெரிவித்தார். அந்த வாலிபர் சரளமாக ஆங்கிலம் பேசுவதாகவும், ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகள் மட்டும் பேசுவதாகவும் கூறினார். நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அவர் இதற்கு முன்பு எங்கு வாழ்ந்தோம் என தனக்கு தெரியவில்லை என கூறுகிறார். தந்தை தன்னை ராய் என பெயர் சொல்லி அழைத்ததாகவும் தெரிவிக்கிறார். எனவே, அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என ஜெர்மனி போலீஸ் புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது. |
மீன்களுடன் ஒரு விநோத நடனம் (வீடியோ இணைப்பு)
| தென்கொரியாவில் உள்ள நீர் வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை ஒன்றில் மீன்களுடன் சேர்ந்து நாட்டியம் ஆடினார்கள் சுழியோடிகள். கடந்த மாதங்களில் தென்கொரியாவில் கடுமையான கோடை காலம். மக்களைக் குஷிப்படுத்துகின்றமைக்காக இவ்வித்தியாசமான நடனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரமாண்டமானவையும், வலிமையானவையுமான மீன் தொட்டிக்குள் சுழியோடிகள் புகுந்தனர். இத்தொட்டிக்குள் 15,000 மீன்கள் வரை இருந்தன. இம்மீன்களோடு மீன்களாக இவர்களும் செயல்பட்டனர். மீன்களை போலவே நீந்தினார்கள். மீன்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டார்கள். |
பான் கீ மூனுக்கு எதிராக சிறிலங்கா மீண்டும் போர்க்கொடி
![]() |
| ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அடிப்படையான இராஜதந்திர வழிமுறைகளை பின்பற்றத் தவறி விட்டதாக குற்றம்சாட்டி, கண்டனக் கடிதம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்த விவகாரத்திலேயே மீண்டும் பான் கீ மூனுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் திரும்பியுள்ளது. பான் கீ மூனின் நடவடிக்கையைக் கண்டித்து, காட்டமான- கடுமையான வார்த்தைகளினால் ஆன கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பி வைக்குமாறு நியுயோர்க்கில் உள்ள, ஐ.நாவுக்கான தனது வதிவிடப் பிரதிநிதிக்கு சிறிலங்கா அரசாங்கம் பணித்துள்ளது. பான் கீ மூன் மரபுகளுக்கு மாறாக நடந்து கொண்டுள்ளதை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இந்தக் கடிதம் அமைய வேண்டும் என்றும் பாலித கொஹன்னவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பான் கீ மூன் இந்த அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளது சிறிலங்காவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்துக்குத் தெரியாமலேயே இந்த விவகாரம் இருட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். நிபுணர்குழு அறிக்கையை வெளியிட்ட பின்னர், அடுத்த கட்டம் குறித்து அனைத்துலக சமூகம் முடிவு செய்யட்டும் என்று கூறியிருந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன், அதற்கு மாறாக இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி விமர்சித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நா கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பான் கீ மூன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ள போதும், நிபுணர்குழுவின் அறிக்கை ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட பின்னரே சிறிலங்கா தூதரகத்துக்கு தகவல் சொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி மேலும் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக ஐ.நா முறைப்படி எந்தத் தகவலையும் தரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். |
Subscribe to:
Comments (Atom)
















