Saturday, 4 February 2012

வெளிவந்த சில நாட்களிலேயே ரீ-ரிலீசாகும் தமிழ் படங்கள்...!

 


இப்போதெல்லாம் எந்த ஒரு செய்தியும் மக்களை சென்று அடைய விளம்பரம் ரொம்ப முக்கியம். அந்த வகையில்சினிமாவுக்கு விளம்பரம் என்பது எப்போதும் அவசியமானது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு அந்த தயாரிப்பு நிறுவ‌னமோ, அல்லது அந்த படத்தை வெளியிடும் நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரமே ரொம்ப ஜாஸ்தி. அதிலும் டி.வி., மூலமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் கொண்டு போய் சேர்த்து விடுகின்றனர். படங்கள் நல்லா இல்லையென்றால் விளம்பரம் மூலமாகவே அந்தபடம் ஹிட்டாகிவிடுகிறது. அதேசமயம் சிறிய பட்ஜெட் படங்களில் நல்ல கதைய‌ம்சம் இருந்தும், பத்திரிக்கைகளில் பாராட்டு பெற்றும், ஏதோ சில காரணங்களால் மக்களை சென்று சேர்வதில்லை.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் உள்ளிட்ட படங்கள் பத்திரிக்கைகளில் பாராட்டு பெற்றும், சமூகத்தின் அவலங்களையும், அறியாமையையும் சொல்லும் படமாக இருந்தும், அ‌ந்தபடங்கள் மக்களை போய் சேரவில்லை என்று அந்தபடங்களின் இயக்குநர்கள் ரொம்பவே வருத்தமும், வேதனையும் படுகிறார்கள். இந்நிலையில் இதுபோன்ற படங்கள் இந்தவாரம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதுபற்றி வெங்காயம் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் நம்மிடம் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கி இருந்தேன். படத்தை பார்த்த இயக்குநர்கள் பாக்யராஜ், ரோகினி உள்ளிட்ட பலர் என்னை பாராட்டினார்கள். அவர்களும் இந்த மாதிரியான படங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்னு முயற்சி செய்தனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வெங்காயம் படத்தில்  பல புது முகங்கள் நடித்திருந்தாலும், நிச்சயம் நிறைய பேரை அழ வைத்துள்ளது. மக்கள்கிட்ட நல்ல செய்தியை சொன்ன படம் வெங்காயம் என்பதில் சந்தோஷம். மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், மக்கள் விரும்பி பார்க்க வாய்ப்பு உள்ளது. விரைவில் இப்படத்தை தெலுங்கிலும் எடுக்க எண்ணம் உள்ளது என்று கூறியுள்ளார்.

ராசாவை போட்டுக் கொடுப்பதா?- சிபலுக்கு கருணாநிதி எதிர்ப்பு

 


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சக அறிவுரைகளை ஆ. ராசா நிராகரித்தார் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ள கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

கேள்வி: தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ராசாதான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகளை வழங்கினார், அதிலே பிரதமருக்கோ, அப்போதிருந்த நிதி அமைச்சருக்கோ தொடர்பு இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அப்படி அவர் சொல்லியிருந்தால் அது மறுக்கக் கூடிய ஒன்றாகும். இதே மத்திய அமைச்சர் கபில்சிபல் தொடக்கத்தில் - முன் கூட்டி வருபவர்களுக்கு வழங்குவது என்பது இந்த ஆட்சியிலே அல்ல, கடந்த பா.ஜ.க. ஆட்சியிலே, 2003-ம் ஆண்டிலேயே இது தொடங்கப்பட்டு விட்டது என்று சொல்லியிருக்கிறார். அதை இப்போது அவரே மாற்றிச் சொல்கிறாரா என்று புரியவில்லை. தவறு செய்திருந்தால், பா.ஜ.க.

அமைச்சர்கள் யாராவது அவருடைய இடத்திலே இருந்து செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான் என்றார் கருணாநிதி.

மு.க. ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் மோதல்: தி.மு.க. தலைவர் பதவிக்கு நானே போட்டியிடுவேன்


தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று காலையில் அமைதியாக தொடங்கியது. அப்போது, கருணாநிதி, அன்பழகன், மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, கனிமொழி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சி அமைப்பில் மாற்றங்கள் செய்வது குறித்து இந்த பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. பொதுவான தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன.

காங்கிரசுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதனை பெரும்பாலோர் வரவேற்றனர். காங்கிரசுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று ஒரு உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது. 

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்தில் மு.க. அழகிரி இடையில் எழுந்து சென்று விட்டார். மாலையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

கட்சியில் சட்ட திட்ட மாற்றம் செய்வது அவருக்கு பிடிக்காததால்தான் வரவில்லை என்று சிலர் பேசிக்கொண்டனர்.   மாலையில் நடந்த பொதுக் குழுவில் பேசியவர்களில் சில முக்கிய நிர்வாகிகள் 2ஜி அலைவரிசையில் காங்கிரஸ் அரசு தி.மு.க.வை பலிகடா ஆக்கப்பார்க்கிறது. எனவே காங்கிரசுடன் உறவை முறிக்க வேண்டும் என்றனர்.

குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ள ஆ. ராசாவுக்கு தி.மு.க. ஆதரவு கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.   வீரபாண்டி ஆறுமுகம் பேசும்போது, கட்சி நிர்வாகிகள் பெயரை எல்லாம் குறிப்பிட்டார். ஆனால் மு.க. ஸ்டாலின் பெயரை சொல்லவில்லை. இதற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக சிலர் கோஷமிட்டனர். தொடர்ந்து பேசிய வீரபாண்டி ஆறுமுகம், அவர் பெயரை சொல்ல மறந்து விட்டேன். மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் எனக்கு ஒன்றுதான். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிள்ளைகளான இருவரும் இரண்டு கண்கள். சிலர் தங்களுக்கு சாதகமான முடிவு வரவேண்டும் என்று கருணாநிதியை நிர்பந்தம் செய்கிறார்கள்.

ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அடையாளப்படுத்தக்கூடாது என்றார். இதற்கு தொண்டர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மு.க. ஸ்டாலினை தலைவராக அறிவிக்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் போட்டார்கள்.அவர்கள் மேடையை நோக்கி சென்றதால் பெரும் சல சலப்பு ஏற்பட்டது. 

நடந்த சம்பவத்தை கண்டு கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். மேடையில் இருந்த மு.க. ஸ்டாலின் எதுவும் செய்ய முடியாத நிலையில் பார்த்துக்கொண்டிருந்தார். பொதுக்குழுவில் ஏற்பட்ட குழப்பத்தால் வருத்தம் அடைந்த கருணாநிதி மேடையில் இருந்து செல்ல முயன்றார். அவரை அன்பழகனும், மு.க. ஸ்டாலினும் சமாதானம் செய்து உட்கார வைத்தனர்.

கோஷம் எழுப்பியவர்களை அமைதியாக இருக்கும்படி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.   பின்னர் அன்பழகன், “தி.மு.க. தலைமை பதவியை குறிப்பிட்ட யாருக்கும் கொடுத்து விட முடியாது. என்னை விட வயது குறைந்த கருணாநிதி தி.மு.க. தலைவராக வந்தபோது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. பிறகு நானே அவரை தலைவராக ஏற்றுக்கொண்டேன். அவரைப்போன்ற அறிவுப்பூர்வமானவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. இதுவரை நடந்த பொதுக்குழுவில் இது போன்ற கூட்டத்தை நான் பார்த்தது இல்லை. அனைவரும் அமைதி காக்கவேண்டும்  என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அமைதி ஏற்பட்டது. 

அதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-

அமைதியாக நடந்த பொதுக்குழுவில் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதோ மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் போல காட்ட சிலர் குரல் கொடுத்தனர். வேண்டுமானால் அடுத்த பொதுக்குழுவின்போது நானும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். அப்போது யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று பார்க்கிறேன். இதை அறை கூவலாக விடுக்கிறேன்.

பதவிக்கு யாரும் தானாக வந்து விட முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்டுதான் வர முடியும். காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று பலர் பேசினார்கள். பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணிக்கு முயற்சி நடக்கிறது. நமது கொள்கை சிறுபான்மை மக்களை காப்பது. எனவே, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இதை எதிர்பார்க்க முடியாது.

கனிமொழி, ராசா ஆகியோரைவிட இந்திய இறையாண்மைக்காகவே நான் அதிகம் கவலைப்படுகிறேன். இப்படி சொல்வதால் காங்கிரஸ் கட்சிக்கு வக்கலாத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

தப்புவாரா ப.சிதம்பரம்? முடிவு இன்று!


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிப்பது பற்றி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்குகிறது.

2ஜி ஊழலில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு உண்டு என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ப. சிதம்பரத்தை விசாரிப்பது பற்றி விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்றது. இந்நிலையில் 2ஜி ஊழல் வழக்கு விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

2ஜி வழக்கில் சிதம்பரத்தை சேர்ப்பது பற்றி நீதிபதி ஷைனி அளிக்கப் போகும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு என்ன?

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பல்வேறு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்திருந்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயத்தை தொலைத் தொடர்புத் துறையும் நிதி அமைச்சகமும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும். அப்போது நிதிஅமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.

2ஜி அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக ஆ.ராசாவும் ப.சிதம்பரமும் 3 முறை ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங்கை ஆ.ராசாவும் ப.சிதம்பரமும் இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற ஆ.ராசாவின் நிலைப்பாட்டை ப.சிதம்பரம் தடுத்திருந்தால் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம் என்பது குற்றச்சாட்டு.

2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசாவின் சதிக்கு ப.சிதம்பரம் துணை போனார் என்பது சுப்பிரமணிய சாமியின் புகார்.

ப.சிதம்பரத்தை விசாரிக்கலாம் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்தால் அவர் கட்டாயம் பதவி விலக நேரிடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முற்றுகிறது அதிமுக - தேமுதிக மோதல்! எம்எல்ஏ பதவி - முதல்வர் பதவி பேனர்களால் பரபரப்பு!


தேமுதிக தலைவர் விஜயகாந்த் எம்எல்ஏ பதவிக்கேட்டு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் கெஞ்சுவதைப்போல், திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை (03.02.2012) பேனர் வைக்கப்பட்டிருந்தது. காந்தி சிலை அருகே இந்த பேனர் வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், முதல் அமைச்சர் பதவியை தருமாறு விஜயகாந்த்திடம், ஜெயலலிதா கேட்பது போல தேமுதிகவினர் ஒரு பேனரை வைத்திருந்தனர்.

அதிமுக பேனர் அருகிலேயே, தேமுதிகவினரின் பேனர் இருந்ததால் பதட்டம் உருவானது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.


சிறிது நேரத்தில் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருதரப்புக்கும் கைகைலப்பும் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் இருதரப்பையும் விலக்கினர்.

திண்டிவனம் நகராட்சி கவுன்சிலர் சாரதாம்பாள் மகன் ஐயப்பன், வார்டு செயலாளர் திருவேங்க்டம் தலைமையிலான அதிமுகவினர் முதலில் பேனர் வைத்துள்ளனர்.


இதனை கண்டித்து, தேமுதிக நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் காவல்நிலையத்தில் தேமுதிகவினர் புகார் கொடுத்துள்ளனர். பின்னர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்த தேமுதிமுகவினர், பதிலுக்கு போட்டி பேனர் வைத்துள்ளனர்.


இந்த கைகலப்பில் காயம் அடைந்ததாக, தேமுதிகவைச் சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக தேமுதிகவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விஜயகாந்த் அநாகரிகமாக நடந்துகொண்டதாக 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அடுத்த நாள் தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு நிற சட்டை அணிந்து சென்று தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.


கடந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதற்கு அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் பிரிந்தன. தற்போது இரு கட்சி தலைவர்களும், கூட்டணி வைத்தது வெட்கக்கேடு என்று கூறிக்கொள்கின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கும் சூர்யா புதிய படம்


பல வெற்றி படங்களை தயாரித்த முக்தா சீனிவாசனும், அவரது சகோதரர் வி.ராமசாமியின் மகன் முக்தா கோவிந்தும் இணைந்து முக்தா எண்டர்டைன்மெண் (பி) லிட், என்ற பட நிறுவனத்தை துவங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனம் இனிமேல் வருடத்திற்கு மூன்று பிரமாண்டமான படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக வெற்றிப்பட இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் படத்தை தயாரிக்கிறார்கள். இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில்  நடிகர் சூர்யா நடிக்கிறார். அதோடு இந்நிறுவனத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு புதிய இயக்குனரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் எவ்வளவோ சாதிக்க வேண்டும் என்று புது சிந்தனையுடன் செயல்படுகிறார்கள். அவர்களுடன் இணைவது பெருமையான விஷயம் என்கிறார் தயாரிப்பாளர் முக்தா வி.சீனிவாசன்.

பிறந்தநாள் ஸ்பெஷல் : சிம்பு 27!


தமிழ் சினிமாவிற்கு இளமையின் பரிசு சிம்பு. பிறக்கும்போதே நடிகனாக அடையாளம் காணப்பட்டவர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவின் அதிகம் அறியப்படாத சில பக்கங்கள் இதோ...

* சிம்பு பிறந்தது 1985-ல். குடும்பத்திற்கு முதல் வாரிசு எப்போதும் அம்மா செல்லம். சிம்பு மட்டும் எது கேட்டாலும் கிடைக்கும். மற்ற ஒரு சகோதரி, சகோதரனுக்கும் அம்மா கொடுக்கிற பாக்கெட் மணி ரேஷன் தான்.

* அம்மா வயிற்றில் இருக்கும்போதே வாத்யக் கருவிகளை இசைத்துக் காட்டுவாராம் அப்பா டி.ஆர். இதை பெருமையாக இன்றும் சொல்வார்.

* படித்தது பத்தாவது வரைதான். அதற்குப்பிறகு படிப்பு ஏறவில்லை. உடனே சினிமாவில் தீவிரமாக சேர்ந்துவிட முடிவு செய்து, அப்பாவிடம் சரண்டர் ஆனவர் சிம்பு. ஆரம்பகாலங்கலில் இருந்து அப்பாதான் கால்ஷீட் விவகாரங்கள், சம்பளம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

* விடியற்காலையில் பேப்பர் பார்க்கிற முதல் விஐபி சிம்புதான். அதை அவரே சொல்வார். காரணம் : வெளியே அவுட்டிங் போய்விட்டு காலையில்தான் அவர் வண்டி வீட்டிற்குள் நுழையும்.

* இளம் வயதினிலேயே அதிகாரபூர்வமாக டைரக்ட் செய்து ஹிட் அடித்தது 'வல்லவன்' படத்தில்.  இப்பவும் அடுத்த டைரக்ஷனுக்காக நல்ல ஸ்கிரிப்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சிம்பு.

* ஒரே ஏரியாவில் சூர்யா, கார்த்தி, ஜீவா, சிம்பு என நடிகர்கள் பட்டாளமே வசித்தாலும் சிம்புவுக்கு யாரிடமும் பெரிய பேச்சுவார்த்தைகள் ஏதும் கிடையாது. பெரும்பாலும் தனிமை விரும்பி. ஸ்கூலில் படித்த நண்பர்களோடு மட்டும்தான் வெளியே சுற்றுவார். சினிமா வட்டாரத்தில் அனேகமாக பெரிய அளவில் நண்பர்களே கிடையாது.

* இதுவரை 27 படங்கள் நடித்திருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு பெயரையும் வெற்றியையும் தந்த படங்கள் மன்மதன், வல்லவன்விண்ணைத்தாண்டி வருவாயா, தொட்டி ஜெயா.

* கார்களின் மீது பெரும் மோகம் உண்டு. அடிக்கடி காரை மாற்றிக்கொண்டே இருப்பார். அப்பாவிடம் ஆசைப்பட்டு கேட்டு அவருக்கு வந்த பரிசுதான் ஒரு கோடி கார்... அதில் மிக நெருக்கமான நண்பர்களை மட்டுமே ஏற்றுவார்.

* பிரியாணி என்றால் உயிர். மட்டன் பிரியாணி என்றால் ருசித்து ருசித்து சாப்பிடுவார். எங்கே சுவையான பிரியாணி கிடைத்தாலும் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டு மகிழ்வார்.

* தங்கை இலக்கியா மீது கொள்ளைப் பிரியம். தங்கை படிக்கும் கல்லூரிக்கே அடிக்கடி போய்ப் பார்ப்பார். தங்கை எது கேட்டாலும் வாங்கித்தரும் பாசமலர் அண்ணண். தங்கைக்கு சரியான மாப்பிள்ளை பார்ப்பதில் இப்போது அண்ணன் பிஸி.
சிம்புவின் 'LOVE ANTHEM'

Dim lights Embed
* 'LOVE ANTHEM' படைப்பில் இப்போது முனைப்போடு இருக்கிறார். இசைகோர்ப்பு பணியில் இப்போது பிஸி. ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழ் வரிகளை தமிழுக்கு அறிமுகம் செய்ததில் கொலவெறிக்குமுன்னோடி சிம்பு.

* திடீரென அப்பா பெயரையும், தாத்தா பெயரையும் சேர்த்து சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர் (S.T.R) பெயர் மாற்றிக்கொண்டு விட்டார் சிம்பு. கெஜட் அறிவிப்பு வரைக்கும் போய் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

* சிம்புவிற்கு பிடித்த நடிகைகள் ஜோதிகா, அனுஷ்கா அவர்களோடு ஜோடி போட்டு நடிக்க வேண்டுமென்றால் எப்பவும் ரெடி.

* தீவிர தெய்வபக்தி உடையவர். அனுமார் பக்தர். காலையில் பதினோரு மணிக்கு எழுந்தவுடன் யோகா, தியானம் சின்ன உடற்பயிற்சி என நீண்டு மதிய உணவு சாப்பிடுவார்.

* எப்பவும் அரசியலில் ஆர்வம் கிடையாது. அப்பாவின் அரசியல் விஷயங்களில் தலையிட மாட்டார். ஓட்டுப்போடுவது மட்டும்தான் இப்போது சிம்புவின் வேலை. இருந்தாலும் கலைஞரும், ஜெயலலிதாவும் ஒரு நிகழ்ச்சியில் பாராட்டியதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வார்.

* பத்திரிகையாளர்களுக்கு வெல்லமாய் இனிப்பார் சிம்பு. அவர்களுக்கு தீனி போடுவதில், சுவாரஸ்யமாகப் பேசுவதில் சிம்பு வெளிப்படையாக இருப்பார்.

* காதல் சிலவற்றில் கசந்து, இப்போது அம்மா பார்த்து வைக்கிற பெண்ணே போதும் என்ற பாதுகாப்பு நிலைக்கு வந்துவிட்டார் சிம்பு. இருந்தாலும் காதலித்தால் நல்லாயிருக்குமே என்றும் சிந்திக்கிறவர்.

* முதல் தடவையாக 'போடா போடி' என இன்னொரு படத்தையும் ரெடியாக வைத்திருக்கிறார். ஒரு படம் நடித்து முடித்த பிறகுதான் அடுத்தப்படம் என்பதில் இருந்து சற்றே விலகி செய்கிற படம்தான் இது.

* முன்கோபக்காரர். முணுக்கென்று கோபம் வந்துவிடும். ஆனால் என்ன சொன்னாலும் அம்மா பேச்சுக்கு மட்டும் கட்டுப்படுவார் சிம்பு.

* ஆன்லைனில் ரசிகர்கள் எண்ணிக்கை சிம்புவுக்கு அதிகம். அவரது பேஸ்புக் இணையத்தில் 2,50,000 அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்காக தின நடவடிக்கைக்களை அப்டேட் செய்கிறார் சிம்பு.

* நடிகர்களில் அஜீத்துக்கு பெரிய ரசிகர் சிம்பு. எல்லாப் படங்களிலும் தலஎன்கிற வார்த்தையை நுழைத்துவிடுவார். இப்பவும் எதற்காவாவது ஆலோசனை என்றால் அப்பாவும் அஜீத்தும்தான் அவரது அடைக்கலம்.

* இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் ' வேட்டை மன்னன் ' 40% முடிந்துவிட்டது. போடாபோடிஇசை கோர்ப்பு வேலை நடக்கிறது. 'வட சென்னை' 90களில் நடக்கிற கதை. வெற்றிமாறன் அவரை அமெரிக்காவிலிருந்து வந்ததும் வடிவம் மாற்ற ரெடியாக இருக்கிறார்.

* சினிமா மட்டும்தான் பொழுதுபோக்கு. பார்ட்டி, சினிமா எல்லாவற்றுக்கும் பெரும் படையோடுதான் செல்வார். பார்ட்டிகளில் இவர் ஆடும் கடைசி குத்துடான்ஸ் பிரசித்தமானது.

* கிரிக்கெட்டின் ரசிகர். முன்னாட்களில் மற்ற ஹீரோக்களோடு சேர்ந்து விளையாடியவர், இப்போது ஒதுங்கிவிட்டார். புத்தகம் படிக்க மாட்டார். இவரிடம் இருக்கும் ஹாலிவுட் படங்களின் சேகரிப்பு  பலரை பொறாமை கொள்ளச் செய்யும்.  ஆயிரக் கணக்கில் படங்கள் இருக்கிறது இவரது லைப்ரரியில்.

* திரையுலகில் ஜெய், பிரேம்ஜி, வெங்கட்பிரபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் மட்டும் கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள்!

* தனது அப்பா கூறும் ஜோதிடத்தின் மீது மிகவும் நம்பிக்கை உடையவர் சிம்பு.

* சந்தானத்தை திரையுலகில் பிரபலப்படுத்தியதில் சிம்புவின் பங்கு அதிகம். சிம்பு-சந்தானம் காம்பினேஷன் என்பது விநியோகஸ்தர்களின் 'ரெண்டு லட்டு' தின்னும் ஆசை.