| மாஸ்கோவிலுள்ள Domodedovo என்ற சர்வதேச விமானநிலையத்தில் தற்கொலை பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பின் நேரடி காட்சியை நாம் காணலாம். இந்த குண்டு வெடிப்பில் 36 பேர் உயிரிலந்தனர் மற்றும் 180 பேர் படுகாயம் அடைந்தனர். |
Wednesday, 6 July 2011
விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் (வீடியோ இணைப்பு)
கவுண்டமணியின் தாயாரைச் சந்தித்த விஜய்! (படங்கள் இணைப்பு)
வேலாயுதம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு கோவை அருகே பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் புற கிராமங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் வல்ல கவுண்டபுரம் என்ற ஊருக்குப் போயிருக்கிறார்கள் விஜய்யும் படப்பிடிப்புக் குழுவினரும். இந்த கிராமத்தில் படப்பிடிப்புக்காக பெரிய கிணறு வெட்டியிருக்கிறார்கள்.![]() கிராமத்து மக்களுடன் ரொம்பவே ஒன்றிப் போன விஜய்க்கு இந்த கிராமம்தான் காமெடி கிங் கவுண்டமணியின் சொந்த ஊர் என்பது தெரிய வந்திருக்கிறது. உடனே கவுண்டரின் வீடு எங்கே உள்ளது என விசாரித்து தேடிப் போயிருக்கிறார்கள். அங்கே கவுண்டமணியின் பூர்வீக வீடு உள்ளது. ![]() இந்த வீட்டில்தான் கவுண்டமணியின் தாயார் இப்போதும் வசித்து வருகிறார். வீடு தேடி வந்த விஜய் மற்றும் படக்குழுவினரை அன்புடன் வரவேற்ற கவுண்டமணியின் தாயார், அவர்களை உபசரித்ததோடு, அந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி அளித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கிராமத்து மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், அனைவருக்கும் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் படப்பிடிப்புக்காக வெட்டிய கிணற்றையும் கிராமத்து மக்களுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இப்போது அது 'வேலாயுதம் கிணறா'க பிரபலமாகிவிட்டது |
சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் வைத்து கடத்திச் சென்ற பெண் (படங்கள் இணைப்பு)
மெக்சிகோவில் உள்ள செதுமாய் சிறையில் ரமிரெஸ் ஜெரினா இருந்தார். சட்டவிரோத பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்ததாக அவர் 2007ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.![]() தனது வாழ்க்கைத் துணைவரை சிறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என 19 வயது பெண் மரியா முயன்றார். அவர் பெரிய கறுப்பு நிற சூட்கேசை மெக்சிகோ சிறைக்குள் கொண்டு சென்றார். பின்னர் அவர் வரும் போது ஒரு விதமான பதட்ட நிலையுடன் காணப்பட்டார். ![]() அவர் தடுமாற்றத்துடன் இருப்பதை பார்த்த சிறை பாதுகாப்பு நிர்வாகத்தினர் உஷார் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அந்த சூட்கேஸை சோதனை செய்தனர். அதை திறந்த போது சிறைக்கைதி ரமிரெஸ் இருப்பது தெரியவந்தது. சிறைக்காவலர்கள் அதிர்ச்சி அடைந்து கைதியை கடத்த முயன்ற பெண் மரியாவை கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. சூட்கேசில் கைதி தப்ப முயன்றதை தொடர்ந்து மெக்சிகோ சிறைகளில் உஷார் நிலை கடைபிடிக்கப்படுகிறது. |
மனிதனை விழுங்கிய அனக்கோன்டா பாம்பு (வீடியோ இணைப்பு)
அனக்கோன்டா பாம்பு மிகவும் பெரிய பாம்பு என்பதும் அது ஒரு மனித விழுங்கி என்பதும் நாம் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். அப்படி மனிதனை விழுங்கிய அனக்கோன்டாவைத்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். ![]() ![]() ![]() |
ஆசிய பகுதியில் நடக்கும் வினோதமான மதச்சடங்கு (படங்கள் இணைப்பு)
மக்கள் கடவுளுக்காக விரதம் இருந்து பல சடங்குகள் நடத்தி வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆசியாவில் முற்களை கட்டி வைத்து அதன் மீது உருண்டு இரத்தம் சிந்தி நடத்தும் சடங்கு மிகவும் வினோதமாக தான் இருக்கிறது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Subscribe to:
Comments (Atom)













