Monday, 18 July 2011

தோல்வியில் முடிந்த நித்யானந்தாவின் அந்தரத்தில் மிதக்கும் நிகழ்ச்சி! (வீடியோ)



ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை 'குண்டலினி சக்தி'யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது.

பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.


ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார்.


இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார்.


குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பி யெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார்.


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.










ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்கா சென்று இருக்கும் தலாய்லாமாவை வெள்ளை மாளிகைக்கு வரும்படி ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்து இருந்தார். அவரை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருந்தார்.

இதை அறிந்ததும், தலாய்லாமாவை சந்தித்து பேசும் திட்டத்தை ரத்து செய்யும்படி சீனா கேட்டுக்கொண்டது. மீறி சந்தித்தால் அது இருநாடுகளின் நட்புறவை பாதிக்கும் என்றும் சீனா எச்சரித்து உள்ளது.




சீனா அருகில் உள்ள திபெத் தனி நாடாக இருந்தது. அதை சீனா 1959-ம் ஆண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதை தொடர்ந்து திபெத்தின் புத்தமதத் தலைவரும், தேசிய தலைவருமான தலாய்லாமா தன் ஆதரவாளர்களுடன் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததால் தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூண்டது.

தலாய்லாமாவை தன் எதிரியாகவும் விடுதலை போராட்ட வீரராகவும் சீனா பார்க்கிறது. அவரை வெளிநாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.



தலாய்லாமா இப்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் அந்த நாட்டுக்கு சென்றதுமே அவரை அரசாங்க உயர் மட்ட அதிகாரிகள் சந்திக்க கூடாது என்று சீனா எச்சரித்தது. இந்த நிலையில் ஜனாதிபதி ஒபாமா அவரை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார். அவரை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருக்கிறார்.


இதை அறிந்ததும் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சீன வெளிநாட்டு அமைச்சரக அதிகாரி ஹோங் லி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில்,



’’தலாய்லாமாவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சந்தித்து பேசுவதை சீனா எதிர்க்கிறது. வெள்ளை மாளிகைக்கு வருமாறு விடுத்த அழைப்பை அமெரிக்கா திரும்பப்பெற வேண்டும். அவரை சந்திப்பதை கைவிட வேண்டும்.


தலாய்லாமாவை வெளிநாட்டு அதிகாரிகள் எந்த நோக்கத்துக்காகவும் சந்திப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் எச்சரிக்கையையும் மீறி அவரை சந்தித்தால் அது இருநாடுகளின் உறவை பாதிக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.

ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறங்கல்லை போடலாமா?-வைகோ கேள்வி

a
 வரிசையாக வரிகளை உயர்த்தி, ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறங்கல்லை தூக்கி போடலாமா என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திசையன்விளை அருகே இட்டமொழியில் மதிமுக சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது:

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மதுகடையில் வரிசையில் நின்று மது வாங்குகிறார்கள். திருமணமா, தூக்க நிகழ்ச்சியா மது பிரதானம் ஆகிறது. 15 நாட்களில் 3 கொலைகள் மதுவினால் ஏற்பட்டுள்ளது.

உலகத்திற்கு மனிதபிமானம் சொல்லி கொடுத்த தமிழ்நாடு எங்கே செல்கிறது, காமராஜர் காலத்திலோ, அண்ணா காலத்திலோ மதுவினால் வருமானம் வரவில்லையே. தற்போது ஒரு தலைமுறை அழிந்து விடும் நிலை உள்ளது. வருமானத்தை பெருக்க விற்பனை வரி, வாட் வரி, துணிகளுக்கு வரி என்று ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறாங்கல்லை தூக்கி போடுகின்றனர். இதனை நாங்கள் தட்டி கேட்போம். 

முல்லை பெரியார் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, மீனவர் பிரச்சனை உள்பட மக்கள் பிரச்சனைக்காக நாங்கள் குரல் எழுப்புகிறோம். தமிழக அரசு உவரியில் உடனே தூண்டில் அமைத்து கொடுக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி திட்டத்தி்ல் சரியான கொள்கையை இந்த அரசு பின்பற்ற வில்லை. 15 நாட்கள் பள்ளி கூடம் திறக்கப்படவில்லை. இன்னும் எந்த பாடம் நடத்துவது என தெரியவில்லை. இந்த போக்கு தவறானது. கண்டனத்துக்குரியது. 

சுப்ரீம் கோர்ட் ஆணையை மதிக்காமல் பெரியார் அணையை உடைப்போம் என கேரள அரசு சொல்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இதனால் புற்றுநோய் ஏற்படுகிறது. விவசாயம், மீன்பிடி தொழில் பாதிக்கிறது. உயர்நீதிமன்றம் இதனை மூட உத்தரவி்ட்டுள்ளது என்றார் அவர்.


கசாப்பை சாப்பாடு போட்டு பாதுகாப்பது ஏன்?-மக்கள் கொதிப்பு!

தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று வாய் கிழியப் பேசும் மத்திய அரசு, 3 நாட்கள் மும்பையில் கொலை வெறியாட்டம் நடத்திய கசாப்பை இன்னும் தூக்கிலிடாமல், சாப்பாடு போட்டு, மக்கள் வரிப்பணத்தை கோடி கோடியாக செலவிட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது மகா அநியாயமான செயல் என்று மும்பை மக்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.

மும்பையில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களால் மகாராஷ்டிர மக்களும், மும்பை மக்களும் கடும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர். தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வரும் அதே வேளையில் அதைத் தடுக்க அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபடாதது அவர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு முதல் மும்பையில் 7 முறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதத் தாக்குதல்கள் சகஜம் என்று கூறப்படும் காபூல் மற்றும் கராச்சியில் கூட இத்தனைப் பேர் இறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தீவிரவாதிகள் கையில் சிக்கி மும்பை சின்னாபின்னமாகி வருகிறது.

இந்த நிலையில் 2008ம் ஆண்டு பத்து பேருடன் உள்ளே புகுந்து 3 நாட்கள் வெறியாட்டம் போட்ட தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்டவனான கசாப்பை அரசு படு பாதுகாப்போடு வைத்து சாப்பாட்டு போட்டு, மக்கள் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாக செலவிட்டு வருவது மும்பை மக்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்தி அவனை தூக்கில் போடாமல் ஏன் அரசு இப்படி மக்கள் பணத்தை செலவு செய்து, கசாப்பை பாதுகாத்து வருகிறது என்று அவர்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் பிருத்வி ராஜ் சவான் கூறுகையில், மக்களுடைய கோபம், ஆதங்கம், கேள்வி உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. நிச்சயம் கசாப் தண்டனையை அனுபவித்தாக வேண்டும். ஆனால் நமது சட்ட நடைமுறைகள் மெதுவாகத்தான் உள்ளது. அவசரப்பட முடியாதநிலை உள்ளது என்றார்.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துள்சி கூறுகையில், சட்டம் சரியாகத்தான் உள்ளது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தொழில்நுட்பம் மாறியாக வேண்டும். அடிப்படைக்கட்டமைப்பு மாறியாக வேண்டும். கம்ப்யூட்டர்மயமாக்கல் விரைவுபடுத்தப்பட வேண்டும். 21வது நூற்றாண்டில் நாம் மாட்டுவண்டி தொழில்நுட்பத்தை வைத்து செயல்பட முடியாது என்றார்.

ஆனால் எதிர்க்கட்சிகளோ சட்டத்தை கடுமையாக சாடுகின்றன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையி்ல், 

உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் இந்த சட்டம் பலவீனமாக்கப்பட்டுள்ளது. அதாவது தீவிரவாதிகள் இங்கு வந்து தாராளமாக தாக்கலாம் என்று அரசே அழைப்பு விடுப்பது போல சட்டம் எளிதாக உள்ளது என்றார்.


சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர் : டி.ராஜேந்தர்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தேர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான


சிம்பு நடித்த வானம் படம்  ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது.




அந்த விளம்பர போஸ்டரில்,    ’’அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.’’ என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது.

இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான்.

இது குறித்து  டி.ராஜேந்தர்,   ‘’ சிம்புவின் வானம் படத்தை 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை ரெடி பண்ணியது நான் தான். இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே.


சினிமா வாழ்க்கையில் சிம்புவும், எம்.ஜி.ஆர்., போன்ற நிலைமையை அடைய வேண்டும். அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம். அதற்காக சிம்புவை நான் தயார் பண்ணி வருகிறேன். அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான்.


மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர்., எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன். எம்.ஜி.ஆர்., மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லாம் தகுதியும் இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான்’’ என்று கூறியுள்ளார்.


அதிசய மனிதர்கள் (வீடியோ இணைப்பு)







திருமணத்திற்கு சம்மதம் வாங்குவதற்காக செய்த வேடிக்கை (வீடியோ இணைப்பு)

காதலிக்கும் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்த வாலிபர். வேடிக்கையாக செய்த விடயம்.



கருணா குழு இரண்டாகப் பிளந்து கோஷ்டிமோதல் !

 
மட்டக்களப்பில் கருணாகுழுவுக்குள் கடும் மோதல் உருவாகி உள்ளதாகவும், அதன் உச்சக்கட்டமாக நேற்று முன்னர் கருணாவுடன் இணைந்து செயற்பட்ட யூலியன் என்பவரை கருணா தலைமையில் சென்ற குழு கடுமையாக தாக்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு கரடியனாற்றில் கல்வாடி வைத்திருக்கும் ( கற்களை உடைத்து தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்வது) யூலியன் என்பவரை பிரதியமைச்சராக இருக்கும் கருணாவும் அவருடன் சென்ற வீரா, மற்றும் ரவி என்பவர்கள் கடுமையாக தாக்கியதாகவும், இதனையடுத்து யூலியன் என்பவர் கரடியனாறு காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்த போது அங்கும் சென்ற கருணா குழு அவர்களை சரமாரியாகத் தாக்கியதாகவும் மனிதன் இணையம் அறிகிறது.

இதேவேளை கிரான் சந்தியில் கடைவைத்திருக்கும் செல்வா என்பவரையும் கருணா நேற்றுமுன்தினம் கடுமையாக தாக்கியுள்ளார்.

குறிப்பிட்ட நபர் கருணாவுக்கு நெருங்கிய ஆள் ஒருவரிடம் கருணா தமிழ் மக்களுக்கு விடுதலைவேண்டும் எனச் செயப்பட்டு, இப்போது அரசுடன் சேர்ந்து இயங்குகிறாரே எனக் குறைப்பட்டுள்ளார். அதனை அந் நபர் கருணாவுக்குச் சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருணாவின் அண்மைக்கால செயற்பாடுகளும், மகிந்த அரசுக்கு துதிபாடித்திருவதும் அவரின் சொந்த ஊரான கிரானிலேயே கடும் எதிர்ப்பும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கவிடையமாகும்.

இனிமேல் தன்னைப்பற்றி கிரானில் யாரும் பேசக்கூடாது என கருணா எச்சரித்து சென்றதாகவும் கிரான் மக்கள் தெரிவிக்கின்றனர் என மனிதன் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

ஆட்சி ஆசையில் மோகம்! வரலாற்று புகழ்மிக்க சங்கிலியனை துகிலுரிக்கும் யோகேஸ்வரி அம்மா காதில் பூச் சொருகி நியாயம் கூறுகிறார்! (படங்கள் இணைப்பு)

யாழ். நல்லூர் முத்திரைச்சந்தியில் காலம் காலமாக இருந்த தமிழ் மன்னன் சங்கிலியன் சிலையை இடித்து தள்ளிய யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளிவந்ததால் நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு பாதகமாக அமையலாம் என கருதி இன்று ஊடகவியலாளர்களை அழைத்து விளக்கம் அளித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களின் கமராக்களுக்கு முன்னால் நின்று சங்கிலியன் சிலையை தாம் புதிதாக அமைப்பதாக தெரிவித்துள்ளார். அமைக்கப்படும் சங்கிலியன் சிலை முன்னர் இருந்தது போல வாளை ஒங்கியவாறு வீரத்துடன் இருக்கும் தோற்றத்துடன் அமைக்கப்படுமா என யாழ்ப்பாண செய்தியாளர் ஒருவர் கேட்ட போது வாள் கதையை விடுங்க சங்கிலியன் சிலை இருந்த இடத்தில் சிலை அமைக்கப்படும் என சொன்னார் யாழ் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி.

யுத்த நினைவு சின்னங்களையும், தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளங்களையும் அழித்து விடுமாறு மகிந்த ராசபக்ச அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் பேசிய வடமாகாண ஆளுநர் சந்திரசிறி யுத்த நினைவு சின்னங்கள் அனைத்தையும் அழித்து விடப்போவதாக தெரிவித்திருந்தார். இதன் ஒரு அங்கமாகவே கற்சிலைமடு பண்டாரவன்னியன் சிலை அதைத் தொடர்ந்து சங்கிலியன் சிலையும் அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு உடந்தையாக யோகேஸ்வரி போன்றோர் உள்ளனர்.

யாழ். மாநாகரசபை பகுதியில் சிங்கள வியாபாரிகளின் ஆதிகம் அதிகரித்து வருகிறது.

புனித பிரதேசமாக இருக்கும் நல்லூர் கோவிலுக்கு அருகில் உல்லாச பயணிகளுக்கான விடுதி அமைக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

சிங்கள குடியேற்றங்களுக்கு யாழ்.நகரில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் யாழ்ப்பாணம் சிங்களமயமாகிறது.

தமிழர்களது வரலாற்றை மாற்றிறயமைத்து வரலாற்று சின்னங்களை படிப்படியாக அழிப்பதில் மஹிந்த அரசு அண்மையில் மும்முரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் கற்றிவைமடுவிலிருந்த பண்டாரவன்னியனது நினைவுச்சின்னம் சிதைத்து இல்லாமல் செய்யப்பட்டதும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும். இதற்கு வேறு யாரும் காரணமல்ல. யாழ்நகரில் உள்ள தமிழ் மக்களே காரணம். சிங்கள கட்சி ஒன்றை யாழ்.மாநகரசபையில் ஆட்சி பீடம் ஏற்றினால் இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.