Sunday, 14 August 2011

இலங்கையின் மீது போர் தொடுப்போம்; ஆயுதங்களின்றிப் புறப்படுங்கள் BJP

இலங்கை மீது ஆயுதங்கள் இன்றி ஒரு தாக்குதல் தொடுப்போம் என்று இந்திய நாடாளுமன்றம் முன்பாக உறுமி இருக்கிறது பாரதீய ஜனதாக் கட்சி. அதன் முக்கிய தலைவரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்தவருமான யஸ்வந்த் சின்ஹா நேற்று இதனைத் தெரிவித்தார். "இந்தியர்கள் எல்லோரும் உறுதியாக ஈழத் தமிழர்களை ஆதரிக்கின்றோம் என்பதை உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்'' என்றார் அவர்.

மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று நடத்திய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழர் ஆதரவை வெளிப்படுத்தினார் சின்ஹா. சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டால் அதிலும் தான் கலந்துகொள்வார் என்று அவர் தெரிவித்தார்.

வன்னியில் அரசு நடத்திய இறுதிப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான ஆதாரங்களை முன்வைத்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதிப்பதை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்.
பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்ஹா, பீஹார் மாநிலத்தின் பலம் மிக்க கட்சியான லோக் ஜனஷக்திக் கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் கலந்து கொண்டனர். "நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.வாருங்கள் எல்லோருமாகப் படகுகளில் புறப்பட்டுச் சென்று, இலங்�க விவகாரத்தில் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று உலக நாடுகளுக்குச் சொல்வோம். ஆயுதங்கள் இன்றி இலங்கையின் மீது தாக்குதல் ஒன்றை நாம் தொடுப்போம். இந்தியர்கள் உறுதியாக ஈழத் தமிழர் களுக்கு ஆதரவளிக்கிறோம் என்பதை இந்த உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின் றோம்'' என்றார் சின்ஹா.

இலங்கையில் நடந்த இனப்படு கொலைகளுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரைக்கும் இதனை நாம் விடப்போவதில்லை என்றும் சின்ஹா கூறினார். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை காரணமாகவே, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது என்று அவர் கண்டித்தார். சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்துவிடும் என்ற காரணத்தாலேயே கொழும்புக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது என்றும் சின்ஹா குற்றஞ்சாட்டினார்.

செல்வி தமிழ்வாணியை இழிவுபடுத்தும் கோத்தபாய'வின் கூற்றுக்கு அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் கண்டனம் !

2009 யுத்தகாலப் பகுதியில் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினை, நேரில் கண்ட சாட்சியமாக விளங்கும் செல்வி தமிழ்வாணியை இழிவுபடுத்தும் நோக்கிலான, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கூற்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது.சிறிலங்கா படைகளினால் பெண்கள் பாலியல் வன்மத்துக்கு உள்ளாக்கப்பட்டதாயின், தமிழ்வாணி எவ்வாறு எவ்வித பாதிப்புக்களும் இன்றி, இலங்கையை விட்டுச் தப்பிச் சென்றார் எனும் கேள்வியை முன்னிறுத்தி, பாதுகாப்பு செயலர் கோத்தபாய அவர்கள் இந்திய தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

பாதுகாப்பு செயலரின் இக்கருத்து குறித்து, நா.த.அரசாங்கத்தின் சிறுவர்- பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மிலேச்சத்தனமாக, உணர்வெதுவுமற்ற முறையில் சொல்லாடல் செய்வது, சிங்கள பேரினவாத கொடுங்கோல் ஆட்சியினது மிருகத்தனத்தையும், அவர்கள் கையில் தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளையும் தெளிவாகச் சுட்டி நிற்கிறதெனவும் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முழுவிபரம்:

இந்திய தொலைக்காட்சி சேவையான Headline Todayக்கு அளித்த செவ்வியின்போது சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பிரித்தானியத் தமிழ்ப் பெண் செல்வி தமிழ்வாணி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் கூறிய வார்த்தைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் என்ற வகையில் நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் இவ்வகையில் மிலேச்சத்தனமாக உணர்வெதுவுமற்ற முறையில் சொல்லாடல் செய்வது அவர்களது கொடுங்கோல் ஆட்சியினது மிருகத்தனத்தையும் அவர்கள் கையில் தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளையும் தெளிவாகச் சுட்டி நிற்கிறது.

செல்வி தமிழ்வாணி அவர்கள் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எமது தாய் மண்ணில் நிகழ்ந்தேறிய படுகொலைகள் மானிடப் பேரழிவின் மத்தியிலும்கூட தன்னலமற்ற வகையில் அவ்விடத்தில் ஆற்றிய சேவையின் பெறுமதியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் புலம் பெயர் தமிழ்ச் சமூகமும் நன்கறிவோம்.

அவர் Chanel 4 தொலைக்காட்சிக்கு துணிவுடன் முதலில் கொடுத்துதவிய வாக்குமூலம் தான் பின்னர் இறுதிக்கட்டப் போரில் நடந்த உண்மைகளையெல்லாம் வெளிக்கொணர ஊன்றுகோலாக அமைந்தது.

எனவே கௌரவம் மிக்க தமிழ்ப்பெண் ஒருவரைப்பற்றி திரு கோத்தபாய ராஜபக்ச பொறுப்பற்ற வகையில் ஏற்படுத்தியுள்ள அவதூற்று வார்த்தைகளை அனைத்துலகச் சமூகம் உடனடியாகக் கண்டிக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றோம் என அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்

சனல்4 காணொளிக்கான பதில் அறிக்கை 50 நாடுகளுக்கு அனுப்பி வைப்பு

சனல்4  ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை 50 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயர்ஸ்தானிகராலயங்கள், தூதுவராலயங்கள் மற்றும் கொன்சோல் காரியாலயங்கள் உள்ள நாடுகளில் இந்த அறிக்கை அல்லது வீடியோ காட்சிகளை பார்வையிட முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சனல்4  காணொளிக்கான பதில் காணொளி அண்மையில் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் காட்சிப்படுத்தப்பட்டது.
உலகின் ஏனைய நாடுகளிலும் குறித்த காணொளியை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவில் இந்திய தேசிய கொடியை பறக்கவிட சிலர் முயற்சி?

கச்சதீவில் இந்திய தேசியக் கொடியை பறக்க விடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்து மக்கள் அமைப்பு என்ற தமிழக அமைப்பினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சுதந்திர தினத்தில் இவ்வாறு தேசிய கொடியை ஏற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் குழுவினருக்கு படகுகளை வழங்க வேண்டாம் என தமிழக மீனவர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
1976ம் ஆண்டு முதல் இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தததின் அடிப்படையில் கச்சதீவு ஒப்படைக்கப்பட்டது.

“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்கத் தூதரின் கருத்தினால் சர்ச்சை

இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் தமிழர்கள் கறுப்பானவர்கள் அழுக்கானவர்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்கத் தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய அமெரிக்கத் துணைத் தூதுவர் மொறீன் சாவோ, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது கலாசாரம் மற்றும் மொழி பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்ததாக கூறியிருந்தார்.
டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு தொடருந்து மூலம் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும், ஆனால் 72 மணி நேரம் கடந்தும் அந்தத் தொடருந்து பயணத்தை முடிக்கவில்லை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் தனது தோல் தமிழர்களைப் போன்று கறுப்பாகவும் அழுக்காகவும் மாறி விட்டதாக அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்தக் கருத்து பொருத்தமற்றது என்றும் இதற்காக துணைத் தூதுவர் வருந்துவதாகவும் அமெரிக்கத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

திரு.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் செவ்வி (வீடியோ இணைப்பு)





நவம்பர் 5, பேஸ்புக்கின் இறுதித் தினமா?: ஹெக்கிங் குழு அறிவிப்பு (வீடியோ இணைப்பு)

பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென ஜனவரி மாதமளவில் செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.


தற்போது பேஸ்புக் சேவையை 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன் பேஸ்புக் சேவை நிறைவிற்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான அறிவிப்பு அடங்கிய காணொளியானது கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி வெளியாகியிருந்தது.

எனினும் தற்போதே அது தொடர்பில் தகவல்கள் வெளியுலகிற்கு கசிய ஆரம்பித்துள்ளன.

' ஒபரேஷன் பேஸ்புக்' என இத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக் குழு அறிவித்துள்ளது.

இது வெறும் புரளியெனக் கூறியுள்ள இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் இத்தகவலை மறுத்துள்ளன.

இருந்த போதிலும் குறித்த குழுவே கடந்த சில காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட், பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது.

பேஸ்புக் தொடர்பில் கடுமையாக சாடியுள்ள அவ்வமைப்பு ஷூக்கர் பேர்க் எமது விபரங்கள் மற்றும் தகவல்களின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

நமது தகவல்களை பேஸ்புக் அரசாங்கம் மற்றும் உளவு நிறுவங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

பொதுவாக 'Anonymous' குழு ஓர் இணையக் கட்டமைப்பினைத் தாக்குவதற்கு சில தினங்களுக்கு முன்னரே இது தொடர்பிலான அறிவிப்பினை மேற்கொள்ளும்.

இந்நிலையில் தற்போது பல நாட்களுக்கு முன்னரே அக்குழு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது

எவ்வாறாயினும் இச் செய்தியானது பேஸ்புக் பாவனையாளர்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.

இணையதள அரட்டை (வீடியோ இணைப்பு)


இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது.



இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி. பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது. ஏன் என்று குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சட்ட விரோத உடல் உறுப்பு விற்பனைக்கு தடை: கிட்னி திருடினால் 10 ஆண்டு ஜெயில், ரூ.1 கோடி அபராதம்; பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது


 
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை, கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கிட்னி போன்ற உடல் உறுப்புகள் திருட்டு நடைபெற்றது.

கிட்னி பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஏழைகளை பண ஆசை காட்டியும், ஏமாற்றியும் அவர் களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டன.

சம்பந்தப்பட்ட நபரின் விருப்பம் இல்லாமல் இவ்வாறு உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து அதை நோயாளி களுக்கு பொருத்துவது சட்ட விரோதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை தடுக்க ஏற்கனவே சட்டம் உள்ளது.

என்றாலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பாராளுமன்ற நிலைக் குழு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து இருந்தது. அதை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து சட்ட விரோத உடல் உறுப்புகள் விற்பனையை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் நேற்று சட்டம் கொண்டு வரப்பட்டது. சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் இந்த சட்டத்தை தாக்கல் செய்தார். பின்னர் எம்.பி.க்கள் ஆதரவுடன் சட்டம் நிறைவேறியது.

இந்த புதிய சட்டம் கிட்னி திருட்டு போன்ற சட்ட விரோத உடல் உறுப்புகள் விற்பனையில் ஈடுபடுவோ ருக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்க வகை செய்கிறது. மேலும் உடல் உறுப்புகள் தானம் செய்வது, அதை பாதுகாத்து வைத்தல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை முறைப்படுத்தவும் சட்டம் வகை செய்கிறது.

இந்த சட்டம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும், ஏழை களை ஏமாற்றி உடல் உறுப்பு கள் மோசடியில் ஈடுபடு வோரை தண்டிக்கும் என்றும் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் கூறினார்

நாவற்குடாவில் பொலிஸ் நடவடிக்கை குறித்து விரக்தியடைந்த மக்கள் வீதிகளில் ரயர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)


இந்தோனேசியாவின் புது வைத்திய முறை(படங்கள் இணைப்பு)

இந்தோனேசியாவில் வாழும் மக்கள் ஒரு புது முறையான வைத்தியத்தை கண்டு பிடித்து உள்ளனர். அந்த ஊரில் வாழும் மக்கள் அங்குள்ள தண்டவாளங்களில் வந்து படுக்கின்றனர். இது அவர்கள் உடம்பில் உள்ள சில நோய்களை குணமாக்குவதாக சொல்கின்றனர். ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் இதை செய்கின்றனர். இதற்கு நல்லா பயன் இருப்பதாகவும் கூறுகின்றனர்.





இங்குள்ள மக்கள் எலெக்ட்ரிக் ரயில் தண்டவாளங்களில் மின்சக்தி உள்ளதால் அது தங்கள் வியாதிகளை குனமாக்குவதாக சொல்கின்றனர். ஆனால் இவர்கள் இப்படி செய்வது ரயில் லில் வரும் பயணிகளையும் ரயில் ஓட்டுநர்களையும் மிகவும் பயமுறுத்துகிறது.





அதனால் இந்த ஸ்டேஷன் அதிகாரிகள் “பயப்பட வேண்டாம் ” என்ற அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர். பொலிஸ் இவர்களை அகற்ற எவ்ளவோ முயன்றும் முடியாததால் இப்படி செய்ததாக சொல்கிறார்கள்.



Search history and settings - Enable cookies

Search history and settings - Enable cookies