Thursday, 25 August 2011

உதைபந்தாட்ட ஆரம்ப அணிவகுப்பில் தேசியக்கொடி. (வீடியோ இணைப்பு)


ஈழதமிழரின் தேசியக்கொடி ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை பொறுஷியா டொட்மென்ட் மற்றும் எப்சீ நியூரம்பேர்க் என்ற அணிகளுக்கிடையிலான போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பிலேயே ஈழதமிழரின் தேசியக்கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர் அமைப்பும் பொறுஷியா டொட்மென்ட் ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த கொடியினை அணிவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர்.

என்னை அழித்து விட்டு போகலாம், ஆனால் என் உணர்வுகளை அழிக்க முடியாது!!! ஒரு தமிழீழப் பெண்ணின் கதறல். (வீடியோ இணைப்பு)

சிங்கள இனவெறி அரசின் முள்ளிவாய்க்கால் மரண பொறியில் தனது அனைத்து உறவுகளையும் இழந்து தனது மகனோடு தப்பி தமிழகத்தில் அகதியாகி வாழும் ஒரு தமிழீழப் பெண்ணின் உள்ளக் குமுறலை கண்டு கண்ணீர் சிந்தி அழுதாலும் மறுகணம் தன்மான உணர்வுடன் தாயக விடுதலை தாகத்துடன் தலை நிமிர்ந்து போராடுவோம் .
இக் காணொளியில் பேசும் சகோதரியின் தன்னம்பிக்கையும் , தன்மானத்தையும் துணிவையும் புலத்தில் வாழும் நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு எத்தனை தடைகள் எத்தனை இழப்புக்கள் எமக்கு நேர்ந்தாலும் ,எம் தாயக மக்களுக்கு கரம் கொடுத்து எம் விடுதலைப் பாதையை பலம் ஆக்குவோம்.



கடாபியின் சகாப்தம் முடிந்தது � புரட்சிப்படைகள் அரண்மனையை கைப்பற்றினர்! (வீடியோ இணைப்பு)


பலத்த சண்டையின் பின்னர் இன்று காலை புரட்சிப்போராளிகள் மும்மார் கடாபியின் வளாகத்தினுன் பிரவேசித்தனர் என்றும் அதிபர் கடாபி தந்திரோபயமான முறையில் பின்வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஆறுமாத கால கிளர்ச்சியின் பின்னர் புரட்சிப்போராளிகள் கடாபியின் பாப-அல் அஸிஸியாவின் வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு
வந்தனர் என்றும் பிபிசி தெரிவித்தது

இன்று காலை ஆரம்பமான பாரிய தாக்குதலை தொடர்ந்து வளாகத்தின் வெளிச்சுவர்களை உடைத்துக் கொண்டு புரட்சிப்போராளிகள் நுழையும்போது வானில் நேட்டேவின் ஜெட் விமானங்கள் சுற்றிக்கொண்டிருந்தன


அந்த வளாகத்தினுள் கடாபியோ அல்லது அவரின் உறவினர்களோ இருந்தார்களா என்பது தெரியவில்லை.

வளாகம் புரட்சிவாதிகளிடம் வீழ்;ச்சியடைந்ததை அடுத்து ஓடியோ சாதனம் மூலம் கடாபி தாம் வாபஸ் வாங்கியுள்ளதாகவும் நேட்டோவிற்கு எதிராக வெற்றி நோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.

வளாகத்தினுள் பிரவேசித்த புரட்சிப் போராளிகள் கடாபிக்கு ஆதரவான படைகள் வெளியேறிவிட்டதைக் கண்டனர்.

கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகாரஆட்சி முடீவுக்கு வந்ததை அறிவிக்குமுகமாக புரட்சிவாதிகள் தங்களின் கொடிகளை ஏற்றினர். கடாபியின் ஆட்சியை பிரதிபலிக்கும் சின்னங்கள் மற்றும் அடையாளங்களை அழித்து விடுவதில் புரட்சிவாதிகள் ஈடுபட்டிருந்தனர். தங்கத்திலான கடாபின் தலைச்சின்னம் நொருக்கப்பட்டது.

புரட்சிவாதிகளின் திரிபோலி தளபதி அப்துல் ஹாகிம் பெல்ஹாஜ் ‘ நாம் சண்டையில் வென்று விட்டோம். சண்டை முடிந்து விட்டது’ என்று வளாகத்தினுள் இருந்து அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்

பிரபாகரனின் வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது:


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டை நேற்று இரவோடு இரவாகப் படையினர் இடித்து அழித்து இருந்த இடம் தெரியாது அகற்றி உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


நேற்று இரவு 10.15 மணியளவில் பிரபாகரனின் வீட்டுக்கு இயந்திரங்களுடன் வருகை தந்த படையினர் அதிகாலை ஒரு மணி வரை இடிபாடுகளை அகற்றியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எம்.கே. சிவாஜிலிங்கம், 'பிரபாகரனின் வீடு ஏற்கனவே இராணுவத்தினரால் இடித்து உடைக்கப்பட்டிருந்தது. இதேவேளை தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினர். ஆனால் தற்போது வீட்டின் இடிபாடுகள் இடித்து அழித்து இருந்த இடம் தெரியாது அகற்றப்பட்டுள்ளன.

அந்த வீடு தனிநபர் ஒருவருக்கு சொந்தமானது. எனவே அதனை இடிப்பது சட்டவிரோதமான செயலாகும் எனத் தெரிவித்தார்.

இலங்கை இராணுவம் நடந்துகொள்ளும் விதம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது. (படங்கள் இணைப்பு)


கிறிஸ் மனிதன் என்ற போர்வையில் நேற்று இரவு யாழ் நாவாந்துறைப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய நபர்களை பாதுகாக்க முயன்ற இரானுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையே நடந்த மோதலின் போது இரானுவத்தினரால் 120 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் அனைவரையும் மற்றும் அவர்களது பிள்ளை குட்டிகளையும் சேர்த்து இராணுவ முகாமில் அடைத்துவைத்த இலங்கை இராணுவம் தற்போது அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தவிருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துச்சென்று சாலை ஓரத்தில் இருத்திவிட்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றி ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் இருப்பதாகவும் மனிதன் செய்தியாளர் தெரிவித்தார்.


நேற்றைய தினம் யாழ் நாவாந்துறையில் தமிழ் பெண்கள் தனியாக இருந்த வீடு ஒன்றுக்குள் நுளைந்த சிலர் தூக்கத்தில் இருந்த பெண்களோடு தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் எழுப்பிய கூக்குரலில் ஊர்மக்கள் திரண்டு அவ்வீடு நோக்கிச் சென்றுள்ளனர்.


இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குள் ஓடி மறைந்துள்ளனர். அவர்களை தம்மிடம் ஒப்படைக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இதன்போது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது. இளைஞர்களையும் துப்பாக்கிப் பிடியால் தாக்கியுள்ளனர்.


பொதுமக்களின் வீடுகளுக்குள் நுளைந்த இராணும் அலுமாரிகளை அடித்து நொருக்கியதோடு, வெளியே நின்றிருந்த தமிழர்களின் மோட்டார் சைக்கிள்களையும் எட்டி உதைத்து சேதப்படுத்தியும் உள்ளனர்.

இதற்கு மேல் பிள்ளைகள் மற்றும் கைக்குழந்தைகள் என்று கூடப் பாராமல் அவர்களையும் அவர்களின் தாய்மார்களையும் ரோட்டு ஓரமாக இருத்திவைத்துள்ளனர்.

ஏதோ கொலைக்குற்றம் புரிந்தவர்கள் போல இவர்களை நடத்திவருகின்றனர். தமக்கு பாதுகாப்புத் தேவை என இராணுவத்திடம் கடுமையான தொணியில் இவர்கள் கேட்டுள்ளார்கள்!

அவ்வளவுதான் அதற்கு இலங்கை இராணுவம் நடந்துகொள்ளும் விதம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.

உலக நாடுகள் இதுகுறித்து கவனம்செலுத்தவேண்டும். இப் பொதுமக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

10,000 அடி உயர கேபிள் வயரில் அந்தரத்தில் நிற்கும் அசகாயசூரன் (வீடியோ இணைப்பு)


வெறும் 2 inch தடிப்புடைய கேபிளில் 10 ,000 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று சாதனை படைத்திருக்கிறார் 46 வயதான Nock. அதுவும் 90 நிமிடங்கள். தனது 9 வயது முதல் இதுபோன்ற கேபிளில் நிற்க பழகியதாகவும் குறிப்பிடுகிறார்.


வெளியில் தலை காட்டவே தயங்கும் இத்தகைய உயரத்தில் அந்தரத்தில் நிற்பதென்பது உயிரை காற்றில் பறக்கவிட்டு மீதும் கையிலெடுப்பது போலாகும்...

இதுபோன்ற உயிரைப் பணயம் வைக்கும் முயற்சிகளில் பலர் தமது உயிரை துறந்தது வரலாற்றுச்சுவடுகளில் இன்னும் இருக்கிறது

யுவதிகளை மீண்டும் சிக்கலில் மாட்டி வைத்துள்ள அடையாள அட்டைகள் திணைக்களம் (படங்கள் இணைப்பு)


இரட்டையர்களாகப் பிறந்த இரு யுவதிகளுக்கு ஆள் அடையாள அட்டைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் இரண்டும் ஒரே இலக்கங்களைக் கொண்டனவாக அமைந்துள்ளன.


செப்டம்பர் மாதம் 2010 இல் வழங்கப்பட்டுள்ள இந்த அடையாள அட்டைகளுக்கு உரித்துடையவர்களான பெலிகன்கனமகே மல்கி திசானி சேனநாயக்க மற்றும் பெலிகன்கனமகே திலிக்ஸ் சேனநாயக்க ஆகியேருக்கான இரு அடையாள அட்டைகளிலும் 938121770 V. என்ற ஒரே இலக்கங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இந்த யுவதிகளின் தந்தை அடையாள அட்டைகள் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார். இதனையடுத்து அவர்களுக்கு ஓரே நாளில் புதிதாக இரு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால் அவை இரண்டிலும் மீண்டும் ஒரே இலக்கங்களே காணப்பட்டன.

மேற்குலகை ஒரு ஆட்டங்காணவைத்துள்ளார் கடாபி (வீடியோ இணைப்பு)


கடாபி இன்னும் 24 மணிநேரத்தில் பிடிபடுவார் என்கிறது மேற்குலகம். ஆனால் 2 நாட்கள் முடிந்தும் அவரை பிடிக்க முடியவும் இல்லை. அத்தோடு நேட்டோ படைகளின் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் எதிர்பாராத விதமாக பல இடங்களில் அதிர்ச்சித்தோல்வி அடைந்துள்ளனர். அங்கே நடப்பது தான் என்ன பார்ப்போமா ?


லிபிய நாட்டை 42 வருடங்களாக ஆட்சிசெய்யும் கடாபியை எதிர்த்து பென்காசி என்னும் நகரில் முதல் புரட்சி வெடித்தது. அவர்களை உடனே அங்கிகரித்த மேற்குலகம், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது. பிரான்ஸ் அதற்கும் ஒரு படிமேலே போய் விமானம் மூலம் ஆயுதங்களையும் இறக்கிவிட்டது. அதனை எடுத்து கிளர்ச்சியாளர்கள் கடாபியின் படையினருக்கு எதிராகப் போராடினர். அவர்களில் சிலர் கொல்லப்பட்டபோது அமெரிக்கா பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஐ.நாவில் கூக்குரலிட்டது. உடனே பாதுகாப்புக் கவுன்சிலைக் கூட்டி 1974ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைப் பாவித்து மக்களைப் பாதுகாக்க லிபிய வான் பரப்பில் லிபிய விமானங்கள் பறக்ககூடாது, மீறினாள் நேட்டோ படைகள் தாக்கும் எனவும் அறிவித்தது. இவை அனைத்தும் சுமார் சில வாரங்களில் நடந்தது தான் அதிர்ச்சியான விடையம்.

கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களாக இருந்ததால் அவர்கள் சண்டைப் பயிற்சி அற்றவர்களாகவும் தாம் இருக்கும் பென்காசி நகரை பாதுகாக்கவும் அவர்கள் கற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் முன்னேறிச் சென்று மற்றைய நகரங்களைக் கைப்பற்றவேண்டும் என பிரான்ஸ் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விரும்பியது. நீங்கள் சென்று தாக்குங்கள் லிபிய விமானப்படையோ இல்லை இராணுவமோ உங்களை தாக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றது மேற்குலகம். தரை கடல், மற்றும் வான்பரப்பில் இருந்து நேட்டோ தொடுத்த பல தாக்குதல்கள் லிபியாவின் இராணுவ வலிமையை 50% தத்தால் குறைத்தது.


அதனைத் தொடர்ந்து கிளர்ச்சிப் படைகளில் பல பொதுமக்கள் தம்மை இணைக்க அவர்கள் பென்காசி நகரில் இருந்து முன்னேறி தலைநகர் திரிபோலி நோக்கிச் சென்றனர். இடையில் தோன்றும் அவ்வளவு எதிர்ப்பையும் முறியடிக்க நேட்டோ படையினர் தம்மாலான அவ்வளவு உதவிகளையும் செய்தனர். ஆனால் கிளர்ச்சியாளர்களின் படை அவ்வளவு வேகமாக முன்னேறவில்லை. இதனால் நேட்டோ படைகள் கடும் கோபத்தில் இருந்தனர். நேரடியாகா லிபியாவுக்குள் உலங்கு வானூர்தி மூலம் சென்று பிரெஞ்சுப் படைகள் அவர்களுக்கு வேண்டிய பயிற்சியைக் கொடுத்தனர். அதுவும் பெரிதாகப் பலனளிக்கவில்லை. தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நேட்டோ படைகள் இருந்தவேளை கடாபியின் ஆதரவுப் படையினர் திடீரென பல இடங்களில் இருந்து பின் நகர்ந்தனர்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களைப் பாவித்து கிளர்ச்சியாளர்கள் படுவேகமாக முன்னேறி தலைநகர் திரிபோலிக்குள் நுளைந்தனர். இதனை அடுத்து பி.பி.சி அல்ஜசீரா சி.என்.என் என எல்லா சர்வதேச தொலைக்காட்சிகளும் கடாபி பிடிபடப் போகிறார் என்றும், கிளர்ச்சியாளர்கள் தலைநகரை நெருக்கிவிட்டனர் என்றும் கடாபியின் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர் என்றும் பல செய்திகளை மழைபோலப் பொழிந்து தள்ளியது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், இதில் பல செய்தி லிபிய செய்தியாளர்களால் திட்டமிட்ட வகையில் சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது தான். அதிலும் கடாபியின் 2 மன்களில் முதன்மையானவரை கிளர்ச்சியாளர்கள் கைதுசெய்துள்ளனர் என்று ஒரு செய்தி வந்தது.

இதனை உடனே நம்பி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதான வழக்குத் தொடுனரும் கடாபி மகனைத் தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் எனக் கருத்து வெளியிட்டு மூக்குடை வாங்கிக்கொண்டார். காரணம் இன்று செவ்வாய் கிழமை கடாபியின் மகன் தொலைக்காட்சியில் தோன்றினார். அவர் திரிபோலியில் இராணுவத்துடன் திரிவதும் பெருவாரியான மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் காட்டப்பட்டது. பென்காசி என்னும் நகரில் இருந்து பல மைல் தூரத்தில் உள்ள தலைநகர் திரிபோலிக்கு கிளர்ச்சியாளர்களை முன்னேற விட்டு தற்போது அவர்களுக்கு கிடைக்கும் ஆயுத வளங்களைத் தடுத்து தலைநகர் திரிபோலிக்குள் வைத்து அனைவரையும் முடிக்கும் படு பயங்கரத் திட்டத்தை கடாபி தற்போது நிறைவேற்றி வருகிறார்.

கடாபியின் இத் திட்டத்துக்கு அவரது மகன் உறுதுணையாக இருக்கிறார். இத்தோடு மட்டும் கடாபி நின்றுவிட வில்லை அந் நாட்டில் பல இடங்களில் உள்ள எண்ணெய் கிணறுகளையும், கச்சா எண்ணையைச் கொண்டு செல்லும் பைப் லைன்களையும் குறிவைத்து பாரிய சி- 4 வெடிபொருட்களை அவர் படையினர் பொருத்தியுள்ளனராம். கடாபிக்கு ஏதாவது நடந்தால் அத்தனை கிணறுகளும் எரிந்து நாசமாகிவிடுவதோடு, லிபிய நாடு 50 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அந் நிலைக்கு தள்ளப்படும் எனவும் கடாபி எச்சரித்துள்ளார். இதனை எல்லாம் நேட்டோ நாடுகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது கடாபியின் மாளிகை முற்றுகை என்று எல்லாம் கதைவெளியானபோது, அவருக்கு தனது நாட்டில் தஞ்சம் தரமாட்டோம் என்று தென்னாபிரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். அது கூட இப்போது கமெடியாகிவிட்டது.

பிந்திக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடாபி பலத்தபாதுகாப்போடு இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்தும் தலைநகர் திரிபோலியில் ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலகை ஒரு ஆட்டங்காணவைத்துள்ளார் கடாபி என்பதில் சந்தேகமே இல்லை. அடுத்து என்னசெய்வது என்று நேட்டோ நாடுகள் ரூம் போட்டு யோசிக்கவேண்டி உள்ளது.

அமெரிக்க விமானங்களில் இருந்து அம்பாறையில் பொதிகள் வீச்சு (படங்கள் இணைப்பு)


இருபது நாடுகளின் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கும் பசுபிக் வான் மீட்பு ஒத்திகையின் ஒரு கட்டமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் வான்வழியாகப் விநியோகப் பொதிகளை போடும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் சி-130 இராட்சத விமானங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்துக்கு மேலாக பொதிகளை போடும் பயிற்சிகள மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகைப் பயிற்சியில் சிறிலங்கா, அவுஸ்ரேலியா, மலேசிய விமானப்படைகளின் தலா ஒரு விமானமும், அமெரிக்க விமானப்படையின் மூன்று விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

அதேவேளை நாளை சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானங்களில் இருந்து பரா படையினரை தரையிறக்கும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இரத்மலானைப் பகுதியில் இந்த ஒத்திகை நாளை பிற்பகல் 2 மணிக்கும் 4.30 மணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இரத்மலானை விமான்படைத் தளத்தை மையப்படுத்தி கடந்த திங்களன்று ஆரம்பிக்கப்பட்ட பசுபிக் வான் மீட்பு ஒத்திகையில் சிறிலங்கா விமானப்படையின் 150 அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளினதும் 300 வெளிநாட்டு விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.







நாவாந்துறை இராணுவ முகாமை பொங்குதமிழ் பாணியில் தாக்க முயற்சி


நாவாந்துறை இராணுவ முகாமையும், காவல்துறை நிலைகளையும் தாக்க முயன்ற போதே 102 பேரைத் தாம் கைது செய்ததாக சிறிலங்கா படைகளின் யாழ்ப்பாணத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

படையினரை குவித்து யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், காவல்துறைக்கு உதவியாக அந்தப் பகுதியில் கால்நடை மற்றும் வாகன ரோந்துகளை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, இதனை பொங்கு தமிழ் பாணியிலான தாக்குதல் என்று வர்ணித்துள்ளார்.

நாவாந்துறை இராணுவ முகாமுக்குள் பொல்லுகள், துவிச்சக்கரவண்டி சங்கிலிகள், வாள்களுடன் நுழைந்து படையினரைத் தாக்க முற்பட்ட போதே பொதுமக்களை கைது செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் சிலர் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, நாவாந்துறையில் சிறிலங்காப் படையினரே பொல்லுகள், துவிச்சக்கரவண்டி சங்கிலிகள், போன்றவற்றினால் தம்மைத் தாக்கியதாக, படையினரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹசாரே உண்ணாவிரதம்: நடிகர் ரஜினி ஆதரவு - தமிழ் திரையுலகம் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்


ஊழலை எதிர்த்து அன்னா ஹசாரே நடத்து உண்ணாவிரத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். ஈ-மெயிலில் மூலம் ரஜினி தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது.

உண்ணாவிரதம் போன்ற அமைதி போராட்டம் இந்தியாவில்தான் நடக்கும் என்று அதில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்திய சமுதாயத்தில் இன்று ஊழல் ஒரு கடும் நோய் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரே போன்ற ஒரு மாபெரும் தலைவர் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஜன் லோக்பால் நாடாளுமன்றத்தில் சட்டமாக்க எடுத்துக் கொண்டுள்ள இந்த பணியினை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன்.

இந்த ரத்தமில்லாத ஒரு புரட்சியில் பங்கு கொண்ட எல்லா இந்தியர்களையும் நான் வாழ்த்துகிறேன். அமைதியான இம்மாதிரியான போராட்டம், சத்தியாக்கிரகத்தின் பிறப்பிடமான, இந்தியாவில் மட்டும் தான் நடக்க முடியும். இந்தியன் என சொல்லி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்

அன்னாவுக்குத் தமிழ் திரையுலகம் ஆதரவு: நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக, தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்பட்டது. அண்ணா சாலையிலுள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில், காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

‘காமராஜ்’ படத்தில் காந்தி வேடத்தில் நடித்திருந்த கனகராஜ், காந்தி வேடம் அணிந்து உண்ணாவிரத பந்தலுக்கு வந்திருந்தார். இதனால், பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது நிருபர்களிடம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் நம்நாடு தன்னிறைவு பெறவில்லை. குடிநீர், மின்சார வசதி சரிவர கிடைக்கவில்லை. விவசாயமும் செழிக்கவில்லை. இதற்கு காரணம், ஊழல்தான்.

இன்று நாம் ஊழலை நீக்கினால்தான், வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பும், நல்வாழ்க்கையும் கிடைக்கும். நாடு தழுவிய இந்த அறப்போராட்டம் வெற்றி பெற்றால், வருங்கால இந்தியா ஒளிமயமாக இருக்கும்’’ என்றார்.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க துணை தலைவர் சேரன் கூறுகையில், ‘நாட்டிலுள்ள எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. இதை வேரோடு களைய வேண்டும். அதற்கான அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இங்கு கூடியிருக்கிறோம்’’ என்றார்.

உண்ணாவிரதத்தில் நடிகர்கள் சூர்யா, அர்ஜுன், பார்த்திபன், மன்சூர் அலிகான், ஒய்.ஜி.மகேந்திரன், மனோபாலா, தியாகு, நடிகைகள் ரோகிணி, சோனா, எமி, இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், சசி, ஷக்தி சிதம்பரம், டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர்கள் அன்பாலயா கே.பிரபாகரன், சத்யஜோதி தியாகராஜன், பி.எல்.தேனப்பன், சித்ரா லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை 5 மணியளவில் காந்தி வேடத்தில் இருந்த கனகராஜ், அனைவருக்கும் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். நிகழ்ச்சி நடந்த இடத்தைச் சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக, உண்ணாவிரத மேடையில் அமர்ந்திருந்த தயாரிப்பு நிர்வாகி ஜெயச்சந்திரன் என்பவர், திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். மருத்துவமனையில் ஜெயச்சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாற்றத்தை ஏற்படுத்தும் நடிகர் சூர்யா நம்பிக்கை

நடிகர் சூர்யா கூறுகையில், ‘நாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட, எல்லோரும் விரும்புகிறார்கள். இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது. அன்னா ஹசாரே என்ற தனி மனிதனின் அறப்போராட்டம், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்று, புதியதொரு மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

இதற்கு காரணம், இளைஞர்களிடையேயும், மக்களிடையேயும் ஏற்பட்டுள்ள மாபெரும் விழிப்புணர்வுதான். இந்த எழுச்சி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’ என்றார்.