Tuesday, 27 September 2011

சிறீலங்கா போர்குற்ற விடயத்தில் ஐ.நாவின் செயற்திறமையின்மைக்கு கனடா கடும் கண்டனம்


ஐ.நா சபையின் இருப்பும் செயற்திறனும் அது தனது உருவாக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை சொல்லில் மட்டுமன்றி செயலிலும் காட்டத்தவறின் இழிநிலைக்கு சென்றுவிடும் என கடும் தொனியில் கருத்துத் தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர் Nஐhன் பெயட் அவர்கள் அவ்வாறான செயற்திறமையின்மைக்கான உதாரணங்களில் ஒன்றாக சிறு ஒழுங்குவிதியை காரணம் காட்டி தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை ஏற்று சிறீலங்காவில் புரியப்பட்ட நம்பிக்கைக்குரிய முறைப்பாடுகளைக் கொண்ட போர் குற்ற அறிக்கை குறிந்து மேலதிக நடவடிக்கை எடுப்பதை ஐ.நா தவிர்த்தது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.


தற்போது நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் 66வது ஐ.நா கூட்டத்தொடரில் கனடிய அரசின் சார்பில் செப்டம்பர் 26ஆம் நாள் திங்கட்கிழமை மாலை பொதுச்சபையில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் ஐ.நா கூட்டத் தொடாரில் சிறீலங்கா குறித்து பொதுச்சபையில் கருத்துத் தெரிவித்த ஒரே நாடு கனடா என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை செயற்படுத்துவதில் காட்டிவரும் முன்னுக்கு பின் முரணான செயற்பாடுகளால் தாழ்வு நிலைக்குச் செல்வதை கனடா தொடர்ந்தும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர் அதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாபிரிக்க இனவெறி அரசை கொமென்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்வதற்கு கனடா தெரிவித்த எதிர்ப்பை சுட்டிக் காட்டியுள்ளார்.

கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் சிறீலங்காவின் நிலைமைகளில் பாரிய மாற்றம் ஏற்படவில்லையாயின் தான் அங்கு 2013இல் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மகாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை எனப் பகிரங்கமாக அண்மையில் அறிவித்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது. ஓக்டோபர் மாதத்தில் 2011இற்கான கொமன்வெல்த் நாடுகளின் மகாநாடு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் இங்கு சிறீலங்கா விடயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதிற்கான முன்னறிவித்தலாகவே கனடிய வெளிவிவகார அமைச்சரின் ஐ.நா உரை கொள்ளப்படுகின்றது.

ஐ.நா சபையின் பெரிய எதிரிகள் அதன் செயற்பாடுகளை வெளிப்படையாக குறை கூறுபவர்கள் அல்ல மாறாக அமைதியாக அதன் கொள்கைகளை உதாசீனம் செய்பவர்கள் இன்னும் மோசமானவர்கள் ஒன்றுமே செய்யாமல் ஐ.நா கீழ்நிலைக்கு செல்வதை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் நாங்கள் அவ்வாறு அமைதியாக இருக்கமுடியாது என மேலும் தெரிவித்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர் Nஐhன் பெயட் அவர்கள்.

நாடுகளின் தனித்துவத்தை கனடா மதித்தாலும் சிறுபான்மையினருகான மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றபோது முகத்தை திருப்பிக் கொண்டு மறுபக்கம் பார்க்க மாட்டோம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் அடக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பது எம் அனைவரின் பொதுக்கடமை எனவும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக கனடிய வெளிவிவகார கொள்கையில் சிறீலங்கா குறித்து தொடர்ச்சியாக வெளிப்பட்டுவரும் பல்வேறு மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கனடிய வெளிவிவகார அமைச்சரின் ஐ.நா உரையும் பலரால் கொள்ளப்படுகின்றது.

இந்தியாவில் அதிசயம் : உயிருள்ள பாலங்கள் (படங்கள் இணைப்பு)





இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சோரா என்கிற ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக்கின்றனர்.

இப்பாலங்கள் மிகவும் பலமானவை. ஆனால் பாலங்கள் முழுமை பெறுகின்றமைக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை பொதுவாக எடுக்கின்றது. பல நூற்றாண்டு காலத்துக்கும் நீடிக்கக் கூடியவை.










ஜெனிவாவில் கலக்கத்துடன் நாட்களை எண்ணும் சிறிலங்கா பிரதிநிதிகள்


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடர் முடிவுக்கு வர இன்னமும் நான்கு நாட்களே உள்ள நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டால் அதைத் தடுப்பது பற்றிய கவலையுடன் சிறிலங்கா பிரதிநிதிகள் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானங்களை முன்வைப்பதற்கான காலக்கெடு கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்த போதும், சிறிலங்கா பிரதிநிதிகள் கலக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் அதற்கு முதல் நாளான திங்கட்கிழமையே கொழும்பு திரும்பியிருந்தார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை கொண்டுவர கனேடிய பிரதிநிதிகள் குழு ஜெனிவாவில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

அது தொடர்பாக இந்தக் கூட்டத்தொடரில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிகழ்ச்சி நிரலில் சேர்க்க கனேடிய பிரதிநிதிகள் முயற்சித்தனர்.

இதுபற்றிக் கலந்துரையாட கனேடிய பிரதிநிதிகள், ஜெனிவாவில் இருந்த ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த எதிர்பாராத நகர்வை அடுத்து, ஜெனிவாவில் இருந்த சிறிலங்கா அமைச்சரவையின் மூத்த சட்ட ஆலோசகர் மொகான் பீரிசை அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அமைச்சர் மகிந்த சமரசிங்க கேட்டுக் கொண்டார்.

அவரும் அந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றி, சிறிலங்கா விவகாரம் குறித்து முன்கூட்டியே தீர்மானம் எடுக்கக் கூடாது என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை பொறுத்திருக்குமாறும் கேட்டுள்ளார்.

தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் வியாழக்கிழமை என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அத்தகைய தீர்மானம் ஏதும் சமர்ப்பிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தாம் கருதியதாக சிறிலங்கா குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் கூறியுள்ளார்.

ஆனாலும் கடைசி நேரத்திலும் அதிர்ச்சியை சந்திக்கலாம் என்று கருதியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது ஜெனிவாவில் உள்ள மகிந்த சமரசிங்க தொடர்ச்சியாக வெளிவிவகார அமைச்சர் பீரிசுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.

நியுயோர்க்கிலுள்ள மகிந்த ராஜபக்சவுக்கும் இது தொடர்பான உடனுக்குடன் தகவல்களை தெரியப்படுத்தி வருகின்றனர்.

சிறிலங்காவுக்கான பரப்புரையில் மகிந்த சமரசிங்க, ஜீ.எல்.பீரிசும் இணைந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாதப்பிரதிவாதங்கள், குறுக்கு விசாரணைகள், குற்றச்சாட்டுகள் நிறைந்த பான் கீ மூன் - மகிந்த சந்திப்பு


ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பு வாதப்பிரதிவாதங்கள், குறுக்குவிசாரணைகள், குற்றச்சாட்டுகள் நிறைந்த சந்திப்பாகவே நடந்திருப்பதாக நியுயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அவசரகாலச்சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர், அவசரகாலச்சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டதாகவும், ஆனால் விடுதலைப் புலிகள் தலையெடுப்பதைத் தடுக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் பதிலளித்துள்ளார்.

போர் முடிவுக்குள் வந்த பின்னரும் வடக்கில் சிறிலங்காப் படையினரை அதிகளவில் நிலை கொள்ள வைத்திருப்பது ஏன் என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்கா அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமே சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் புறம்பாக அபிவிருத்தி செயற்பாடுகளில் படையினரை ஈடுபடுத்தியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச பதிலளித்துள்ளார்.

வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாலேயே, சிறிலங்காப் படையினரை அந்தப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச காரணம் கூறியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுக்கிறது.

அதேவேளை, கடந்த ஆண்டு பான் கீ மூனைச் சந்தித்த போது, வெளியிடப்பட்ட அறிக்கையில் தருஸ்மன் தலைமையிலான நிபுணர்குழு தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் மீள்குடியமர்வு நடவடிக்கை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மேறகொள்ளப்படும் முயற்சிகள், தமிழ்க்கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் தொடர்பாகவும் பான் கீ மூனிடம் சிறிலங்கா அதிபர் எடுத்த்து கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கு தெரியாமல் நிபுணர்குழு அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாகவும் மகிந்த ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலரிடம் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐ.நாவின் வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் ஐ.நா பொறிமுறை மீதான நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் தொடர்பாடல் குறைபாடுகள் இருந்ததை பான் கீ மூன் ஒப்புக்கொண்டதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு இறுக்கமானதாகவும் � வாதப்பிரதிவாதங்கள் கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்தே சிறிலங்கா அதிபர் தன்னுடன் ஆறு பேரை அழைத்துச் சென்றுள்ளதாக கருதப்படுகிறது.

அதேவேளை ஐ.நா பொதுச்செயலரும் அதற்குத் தயாராக தனது ஆலோசகர்கள், அதிகாரிகளுடன் சந்திப்பில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்கா அதிபருடன் ஜி.எல்.பீரிஸ், பாலித கொஹன்ன, ஜாலிய விக்கிரமசூரிய. லலித் வீரதுங்க, காமினி சேனாரத், சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாதது முக்கியமானது என்றும் நியுயோரக் தகவல் ஒன்று கூறுகிறது.

ஐ.நா பொதுச்செயலருடன் அவரது அரசியல் விவகாரச் செயலர் லைன் பாஸ்கோவும், பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் கலந்து கொண்டதாகவே பந்துல ஜயசேகரவின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நவி பிள்ளையின் மனிதஉரிமைகள் ஆணைய நியுயோர்க் பிரதிநிதி ஐவன் சிமோனோவிக், பாலியல் வன்முறைகள், மற்றும் மோதல் குறித்த சிறப்பு ஆலோசகர் மாகொற் வோல்ஸ்ரோம் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்ட போதும் அதுபற்றிய தகவலை இந்தச் செய்திக்குறிப்பில் மறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இருந்து ஓடமாட்டாராம் மகிந்த


சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அவர் தனது அமெரிக்கப் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.


மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியுயோர்க் நீதிமன்றத்தில் கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து சிறிலங்கா அதிபர் தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு கொழும்பு திரும்புவார் என்று விடுதலைப் புலிகளும், தமிழீழம் அமைக்கும் திட்டத்தை கொண்டிருப்போரும் நம்பியதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

எனினும் சிறிலங்கா அதிபர் தனது அமெரிக்க நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்காமல், அங்கேயே தங்கியுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கண்டு ஓடிவிட போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தரின் வாயால் வெளிவந்த ரகசியம் அம்பலம்! (வீடியோ இணைப்பு)


ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சனிக்கிழமை இரவு சந்தித்த பின்னர் மின்தூக்கி அருகே காத்திருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹண தெரிவித்த தகவல்களை இன்னர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான ஒளிநாடாவையும் பதிவு செய்து தமது இணையத்தளத்திலும் அதனை இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டிருக்கின்றது.

"நாங்கள் அவருக்கு அனுப்பியிருந்த ஒளிநாடாவை அவர் ஏற்கனவே பார்த்துள்ளார்" என்று பான் கீ மூன் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜுபக்ஷவிடம் பாலித கோஹண தெரிவித்திருக்கின்றார்.

"இலங்கையின் கொலைக் களங்கள்" என்ற பிரித்தானிய சனல் -04 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்துக்குப் பதிலளிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட "ஏற்றக்கொள்ளப்பட்ட பொய்கள்" (Lies Agreed To) என்ற ஆவணப்படத்தையே இதன் மூலம் அவர் குறிப்பிடுகின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது எனவும் இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிடுகின்றது.

'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஒளிநாடாவானது ஐ.நா. மற்றும் பான் கீ மூனின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றது.

அத்துடன் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரைச் சம்பந்தப்படுத்தியதாகவும் காணப்படுகின்றது. ஆனால், 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஒளிநாடாவை பான் கீ மூன் இதுவரையில் பார்க்கவில்லை என அவரது பேச்சாளர் மார்ட்டின் சேர்க்கி கூறியிருக்கின்றார்.

இந்த ஆவணப்படத்தின் இறுவட்டு பல மாத காலத்தின் முன்னரே அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

பார்ப்பவர்களை வாய்பிளக்க வைத்த பறக்கும் மனிதன்


 
ஒரு wingsuit பைலட் மலைப்பகுதியிலிருந்து ஒரு குறுகிய பிளவு மூலம் அதிக உயரம் சென்று சாதனை படைத்திருக்கிறார்.


ஹெலி ஒன்றில் 6000 அடி உயரத்திலிருந்து தன்னை தயார் படுத்திக்கொண்டார் Jeb Corliss , 75mph வேகத்தில் வீசும் காற்றுக்கு குறுக்காக சீனாவின் ஹுனன் பகுதியில் Tianmen mountain எனப்படும் மலைத்தொடரிலே இந்த சாகசத்தை நிகழ்த்தினார்.

கால்கள் மற்றும் உடல் இடையே மெல்லிய சவ்வு போன்ற அமைப்பே இவரை காற்றில் நிலையாக வைக்க உதவுகிறது.

உயரம் அதிகமாகும் போது ஏற்படும் புவியீர்ப்பு மாற்றத்தை தனக்கு சாதகமாக பயன்படித்தியே இவரின் பறப்பு அமைந்தது.

தனது தலைக்கவசத்தில் இருந்த வீடியோ கமரா மூலம் மிகவும் துல்லியமாக படங்களும் எடுக்கப்பட்டது.

மலையின் நடுவே இயற்கையாக அமைந்த குகை போன்றதொரு பகுதியினூடாக மிக வேகமாக நுழைந்து மறுபகுதியினூடாக வெளிவந்தார்.

இந்த சாகச நிகழ்வை கண்டுகளிக்க மலையடிவாரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளை வேட்டையாடிய புலனாய்வு அதிகாரியே பலி


அம்பாறை மகாஓயா சிறப்பு அதிரடிப்படை முகாமில், அதே முகாமில் பணியாற்றும் பிரதம ஆய்வாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட உதவிக் காவல்துறை அத்தியட்சகர் சிசிரகுமார முத்தெட்டுவேகம கிழக்கில் புலிகளுக்கு எதிலான போரில் தீவிரமாகப் பங்கெடுத்தவர் என்று தெரியவந்துள்ளது.

உதவிக் காவல்துறை அத்தியட்சகர் சிசிரகுமார சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவில் முன்னர் பணியாற்றியவர்.

கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை, தனது உயரதிகாரியை சுட்டுக்கொன்ற பிரதம காவல்துறை ஆய்வாளர் டி.எ. ஜயதிலக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.

படுகாயமடைந்த அவர், மகாஓயா மருத்துவமனையில் இருந்து ஆபத்தான நிலையில் உலங்குவானூர்தி மூலம் கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நடுவழியில் மரணமாகியுள்ளார்

அபிஷேக்-ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தைகள் .மருத்துவர்கள் உறுதி


பிரபல பாலிவுட் நட்சத்தித்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் � ஐஸ்வர்யா ராய் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்க, இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இத்தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கப் போகிறது என்று மருத்துவர்கள் தரப்பு உறுதியளித்திருப்பதாக மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அபிஷேக் பச்சன் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில், “அபிசேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் அமிதாப்பச்சன் மற்றும் ஜெயா பச்சன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அமிதாப்பின் பேரக்குழந்தைகளை எதிர்பார்த்து அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளனர்” என்றார்.

நாடுகளின் இணையவேகம்: சுவாரஸ்ய தகவல்


 
பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது.

சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும்.

பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன.

ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர் ஆசிய நாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அது தென் கொரியாவாகும்.

அமெரிக்காவிற்கு கிடைத்திருப்பது 26 ஆவது இடமாகும். அமெரிக்காவில் வேகம் வெறும் 616 kpbs.

இவ்வாய்வின்படி 2 ஆம் இடத்தினை ருமேனியாவும் 3 ஆம் இடத்தினை பல்கேரியாவும் பிடித்துள்ளன.

முதல் 15 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகளே அதிகம் இடம்பிடித்துள்ளன.

ஆய்வின் முடிவுகளுடன் கூடிய வரைபடம்.

via chartsbin.com

இலங்கையின் வேகம் 89 kbps. எமது நாட்டின் வேகத்தினை விட நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, நைகர், சம்பியா ஆகிய நாடுகளின் வேகம் அதிகம்.

தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த கனடா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு முதல் 15 இடங்களுக்குள் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமரச பேச்சுவார்த்தையை ரகசியமாய் படம்பிடித்த சோனா!


பாடகர் எஸ்பிபி சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சோனா பொலிசில் முறைப்பாடு ஒன்றை கொடுத்திருந்திருந்தார். இப் பிரச்சினையில் சோனாவை சமரசம் செய்ய வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையை வீடியோவில் பதிவு செய்து பொலிசில் கொடுத்துள்ளார்.

மங்காத்தா படத்தின் வெற்றிக்காக தி.நகரில் உள்ள நடிகர் வைபவின் வீட்டில் மது விருந்து நடைபெற்றது. இதில் நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ், பின்னணி பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் போது, எஸ்.பி.பி. சரண், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் நடிகை சோனா பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பாண்டிபஜார் பொலிசில் புகார் அளித்த அவர், 2 முறை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திலும் முறையிட்டார். எஸ்.பி.பி. சரண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கான வீடியோ ஆதாரத்தையும் கமிஷனர் திரிபாதியிடம் சோனா ஒப்படைத்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் நடிகை சோனா, பாண்டி பஜார் பொலிஸ் நிலையத்துக்கு திடீரென சென்றார். எஸ்.பி.பி. சரணுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை இன்ஸ்பெக்டர் அழகுவிடம் அவர் ஒப்படைத்தார். வீடியோ ஆதாரம் தொடர்பாக சுமார் 30 நிமிடத்துக்குமேல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எங்கு வைத்து அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரத்தை சோனா பொலிசாரிடம் விளக்கி கூறினார்.

சோனா கொடுத்த வீடியோ ஆதாரத்தை பொலிசார் போட்டு பார்த்தனர். அதில் சோனாவுடன் சமாதான பேச்சு வார்த்தை நடப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

இந்த வீடியோ ஆதாரத்தால்இயக்குநர் வெங்கட் பிரபு சோனாவிடம், சரணை மன்னித்து சமாதானமாக போகும்படி கூறுவது போன்ற காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சு வார்த்தை நடைபெற்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் கெமராவை பொருத்தி இந்த காட்சிகளை சோனா பதிவு செய்துள்ளார். இதனை அவர் பொலிசிலும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து எஸ்.பி.பி. சரண், வெங்கட் பிரபு ஆகியோரிடமும் விசாரிக்க பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

மஹிந்தவுக்கு எதிராக கர்ணல் ரமேஷ் மனைவி வழக்கு (உருத்திரகுமாரன் செவ்வி)


விடுதலைப்புலிகளின் கர்ணல் ரமேஷ் இலங்கையில் நடந்து முடிந்த போரின் போது விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த கர்ணல் ரமேஷ், போரின் இறுதிக் கட்டங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி, வத்சலா தேவி, அமெரிக்காவின் நியூயார்க் நகர சிவில் நீதிமன்றம் ஒன்றில் இழப்பீடு தரக்கோரி இரண்டு வழக்குகளை தொடுத்திருக்கிறார்.

ரமேஷ் மனைவி வழக்கு : உருத்திரகுமாரன் செவ்வி

இதில் ஒரு வழக்கில் இலங்கையின் இராணுவ உயர் அதிகாரி , மேஜர் ஜெனரல் ஷவீந்தர சில்வாவையும், மற்றொரு வழக்கில் , இலங்கை முப்படைகளின் தளபதி என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பிரதிவாதிகளாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


மஹிந்த, ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்கு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே என்கிறார் உருத்ரகுமாரன்.

கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
போரின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியில் வரவேண்டும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த வழக்கை தாக்கல் செய்ததாகக் கூறுகிறார், வத்சலா தேவி சார்பில் இந்த வழக்கை தாக்கல் செய்த விஸ்வநாதன் உருத்ரகுமாரன்.

மக்களுக்கான நீதி கிடைக்கக்கூடிய அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான வாய்ப்பு இலங்கையில் இல்லாத காரணத்தினாலேயே இந்த வழக்கை தாம் அமெரிக்காவில் தாக்கல் செய்ததாகவும் உருத்ரகுமாரன் கூறுகிறார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அழைப்பாணையை பிறப்பித்துள்ளதாகவும், ஆனாலும் இதுவரை அந்த அழைப்பாணையை பிரதிவாதிகளிடம் கையளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

தவளை பானம் (Frog Juice) குடிக்கும் குடிமக்கள்!! (வீடியோ இணைப்பு)


தவளை ஜூஸ் குடிக்கும் இவர்களை பாருங்கள். ஒரு கண்ணாடி பெட்டிக்குள் உயிருடன் தவளைகள் இருக்கின்றன அதில் உங்களுக்கு பிடித்த தவளையை நீங்கள் கை காட்டினால் போதும்.


அதை கடைக்காரர் பிடித்து உங்கள் கண் முன்னாலேயே கொலை செய்து உடனே ஜூஸ் செய்து உங்களுக்கு தருவார்கள்.

இதை குடிப்பவர்கள் இது தங்களுக்கு மிகவும் உற்ச்சாகம் தருவதாக கூறுகின்றனர். இதை நீங்களும் பாருங்கள்.


பல கூறுகளாக பிளவுபடும் அபாயத்தில் Yahoo


Yahoo நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Carol Bartz பதவி விலக்கப்பட்டதையடுத்து, அந்நிறுவனம் பல கூறுகளாக பிளவுபடும் அபாயமுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

Yahoo வை நடத்திச் செல்வதற்கு புதிய தலைவர் ஒருவரை தேடுவதற்குப்பதிலாக அதன் பங்குதாரர்கள் தமது பங்குகளை விற்பனை செய்வதற்கு கேள்விதாரர்களை தேடி வருகின்றனர்.

Yahoo வின் பங்குகளை கொள்வனவு செய்ய Microsoft, News Corp., Disney ஆகிய நிறுவனங்களும், விளம்பர நிறுவனமான Glam Media வும் முன்வந்துள்ளன.

மேலும் AOL மற்றும் yahoo ஒன்றிணைவு குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Yahoo தமது நிறுவனத்தை விற்பதற்குப்பதிலாக அதனையும் அதன் சொத்துக்களையும் பராமரிப்பது தொடர்பாக நல்ல திட்டங்களுடன் கூடிய தலைமைத்துவத்தை பெறுவதில் கவனம் செலுத்தலாம்.

வெடிக்கும் நிலையில் மேலும் இரு ஆயுதக்கிடங்குகள் (படங்கள் இணைப்பு)


வீரவில சிறிலங்கா படைமுகாமில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்து முகாமுக்குள் பற்றிக் கொண்ட தீ நள்ளிரவுக்குப் பின்னரும் எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




மறைந்த பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவுக்கு சொந்தமான சனசும விடுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிலேயே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து சிறிய ஆயுதக்கிடங்கிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

படையினர் தங்கியிருந்த பகுதியில் இருந்து சற்றுத் தொலைவிலேயே, ஆயுதக்கிடங்கு அமைந்திருந்ததால் பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து வீரவில படைமுகாமில் இருந்த படையினரும் முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த பொதுமக்களும் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த ஆயுதக்கிடங்கிற்குப் பொறுப்பான அதிகாரி மேலும் இரு படையினருடன் அங்கு சென்றபோதே வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், கூடச் சென்ற இரு படையினரும் காயங்களுடன் திரும்பியுள்ளதாகவும் தங்காலை காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆயுதக்கிடங்கிற்குப் பொறுப்பான அதிகாரி பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பற்றியெரியும் படைமுகாமுக்குள் படையினர் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பது பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், தீயினால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பமும், கரும்புகையும் முகாமுமைச் சூழ்ந்துள்ளதாலும், தொடர்ந்து வெடிப்புகள் இடம்பெறுவதாலும் முகாமை நெருங்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெடிப்பு நிகழ்ந்த முகாம் பிரதேசம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அருகில் உள்ள படை முகாம்கள், காவல் நிலையங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பெருமளவு படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெடித்துச் சிதறிய ஆயுதக்கிடங்கிற்கு சற்றுத் தொலையில் உள்ள ஏனைய இரு ஆயுதக்கிடங்குகளையும் பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிகள் வீரவிலவுக்கு வான்வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிந்திய செய்தி

வீரவில படைமுகாமில் நேற்று் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டார் பிளேக், கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னார் கோத்தாபய - விக்கிலீக்ஸ்


வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கூறியபோது, காலநிலை சரியில்லாததால் இரண்டு நாட்களாக ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லையே என்று ஏளனமாகப் பதிலளித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.


கொழும்பில் இருந்து அப்பேதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் இதுபற்றி வொசிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களம் மற்றும் தூதரகங்களுக்கு 2009 மார்ச் 12ம் நாள் அனுப்பி வைத்துள்ள தகவல் குறிப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவ்ல வெளியிட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், இதில் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து 2009 மார்ச் 12ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்வுபு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் இருந்தாலும் கூட பீரங்கித் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் கோத்தாபய ராஜபக்சவிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு கோத்தாபய ராஜபக்ச, சீரற்ற காலநிலையால் இரண்டு நாட்களாக ஜெட் விமானங்கள் பறக்கவில்லையே என்று தொடர்புல்லாமல், ஏளனமாகப் பதிலளித்ததுடன் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தான் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று உள்ளூர் தளபதிகளுக்கு உத்தரவிடுமாறும் கூறிவிட்டு பிளேக் திரும்பியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.